சனி, 24 அக்டோபர், 2009

என் 'உள்பெட்டி'யிலிருந்து......2


வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை இழக்கும் போது கண்களில் கண்ணீரைத் தேக்கினால் அது அடுத்து உங்கள் முன்னால் வரும் வாய்ப்பை மறைத்து விடும்.

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல ; தூங்க விடாமல் அடிப்பது.


தீவிரவாதியை மன்னிப்பது கடவுளாக இருக்கட்டும். கடவுளுடனான அவர்கள் சந்திப்பை தீர்மானிப்பது நாமாக இருப்போம்.


   உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைகள் தடுக்கி யாரும் விழுவதில்லை. சிறு கற்கள் இடறிதான் விழுகிறோம்.


    நயாகரா நீர்வீழ்ச்சியின் குறுக்கே இறுக்கமாகக் கட்டப் பட்ட கயிறில் நடப்பது திறமையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம்.


    எதிரிகளை வெறுக்காதீர்கள். சிலர் உங்களுக்கு அனுபவங்களைக் கொடுக்கிறார்கள். சிலர் பிரச்னைகளை சமாளிக்க கற்றுத் தருகிறார்கள்.


  வாழ்க்கையின் மிக ஆழமான உணர்வுகள் மௌனத்தில் வெளிப் படுகின்றன. உங்களின் மிக்க அனுக்கமான நபரே அந்த மௌனத்தின் ஆழமான அர்த்தத்தை உணர்வார்கள்.


    வாழ்க்கையில் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கு கோபமோ மனவருத்தமோ, பெருமையோ படாதீர்கள். சதுரங்க ஆட்டத்தில் வெட்டுப் பட்ட வீரனும் அரசனும் ஒரே பெட்டிக்குள்தான் போகிறார்கள்.


    எல்லா சரியான விஷயங்களும் எப்போதும் சாத்தியமாவதில்லை. சாத்தியமாகும் எல்லா விஷயங்களும் சரியானவையும் அல்ல.


  வாழ்க்கையின் கடின தருணங்களில் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காதீர்கள். ஏனென்றால் உங்களைத் தெரிந்தவர்களுக்கு அது அவசியமில்லை. உங்களைப் பிடிக்காதவர்கள் அதை நம்பப் போவதில்லை.

9 கருத்துகள்:

  1. ஒவ்வொவொரு வரியும் ரொம்ப கலக்கல் மக்களே! சும்மா பின்றீங்க போங்க....வாழ்க்கைக்கு தேவையான வரிகள்.
    நான் உங்களின் இது போன்ற வாசகப் பதிவுகளுக்கு நிரந்தர ரசிகன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீ ஏதாவது மனவளக்கலை செல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. உங்கள் சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மலைகள் தடுக்கி யாரும் விழுவதில்லை. சிறு கற்கள் இடறிதான் விழுகிறோம்.//

    அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  4. மிக சுவாரசியமான பதிவு. என் பாராட்டுதல்களைத தெரிவித்துக் கொள்கிறேன் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எதைப் பார்த்தாலும் நிதானம் தவறிப்போவது வழக்கம்தான். சம நோக்கு கொண்டு வாழ்க்கையின் பிரச்னைகளை அணுகினால் சீரிய தீர்வுகள் நிச்சயம் கிடைக்கும் என்றுதான் தோன்றுகிறது! நில் கவனி, தீர்வு செய் என்பது தான் அடிநாதம்.

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பான பதிவு. இது போல நிறைய எதிர்பார்க்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  6. ரோஸ்விக்.... இந்த மாதிரி எழுதினா மட்டும்தான் பின்னூட்டம் இடுவீங்களா....பின்னூட்டம்லாம் பதிவர்களுக்கு Tonic மாதிரிங்க...அடிக்கடி வாங்க...

    வசந்த், அடிக்கடி வாங்க...நாங்க எங்கும் போகலை....!

    நன்றி வெண்ணிற இரவுகள்...

    பொதுவாகப் பாராட்டியுள்ள பெயர் சொல்லாத அன்பு அனானிக்கும் நன்றி....

    நன்றி ஜவர்லால்...உங்கள் ஆதரவுடன்....

    பதிலளிநீக்கு
  7. //வாழ்க்கையின் கடின தருணங்களில் யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்காதீர்கள். ஏனென்றால் உங்களைத் தெரிந்தவர்களுக்கு அது அவசியமில்லை. உங்களைப் பிடிக்காதவர்கள் அதை நம்பப் போவதில்லை.//
    அருமை! மனதில் என்றும் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய வரிகள்.

    பதிலளிநீக்கு
  8. You can add this also:

    Nammai veruppavargal ethirigal alla.

    Naam veruppavargale ethirigal agi viduvar.

    பதிலளிநீக்கு
  9. Motivational Post. Especially Theeviraveedigal line..Vera eduvum solla therila.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!