புதன், 7 அக்டோபர், 2009

'உள்பெட்டி'யிலிருந்து.....

காரணத்தோடு கண்ணீர் வந்தால் அமைதியை Miss செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தால் 'யாரையோ' Miss செய்கிறீர்கள். கண்ணீர் அமைதியான மொழி.
உங்களை சிரிக்க செய்பவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களை அழ செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணில் கண்ணீர் வரும்போது புன்னகைக்க வைப்பவர்களை நேசியுங்கள்.
சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதைவிட, நரகத்தில் தலைவனாக இருங்கள். உங்கள் பிறப்பு சாதாரணம் ஆக இருந்தாலும் உங்கள் இறப்பு வரலாறாக இருக்கட்டும்.
எதற்கும் கவலைப் படாதீர்கள். ஆனால் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
வாழ இரு வழிகள் : உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.
உணர்வுகள் இதயத்திலிருந்து வந்தாலும் ஆழமான உணர்வுகள் கண்ணீராக வெளிப் படுகின்றன. அவை தகுதி உள்ளவர்களுக்காக மட்டுமே வெளிப் படட்டும்.
யாரும் கடந்த காலத்துக்கு சென்று தவறான ஆரம்பத்தை மாற்ற முடியாது. ஆனால் எல்லோராலும் இப்போது தொடங்கி ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முடியும்.
சில சமயங்களில் நமக்கு இப்போது யாரும் வேண்டாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் பல சமயம் நமக்கு தேவை இருக்கும்போது நமக்கு யாரும் இல்லாமல் போகலாம்.
வாழ்க்கை உங்களை எடுத்து செல்லும் வழியில் போவதை விட நீங்கள் நினைக்கும் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் வாழப் பிறந்தவர்கள். பிறந்ததால் வாழ வேண்டுமே என்று எண்ணாதீர்கள்.
மனிதர்களை நேசிக்கவும் பொருட்களை உபயோகிக்கவும் வேண்டிய இந்த உலகத்தில் நாம் பொருட்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம்.

14 கருத்துகள்:

 1. //காரணத்தோடு கண்ணீர் வந்தால் அமைதியை Miss செய்கிறீர்கள். காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தால் 'யாரையோ' Miss செய்கிறீர்கள். //

  முதல் வரிகளிலே சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 2. //உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.//
  மாற்ற முடியாததை ஏற்றுக்கொண்டு வாழற பழக்கம்தான் மாற்றமே இல்லாம இன்னிவரைக்கும் தொடர்துண்டு இருக்கு. ஏற்க முடியாததை மாற்றிக்கொள்வது, அது சின்ன விஷயமே ஆனாலும் அவ்வளவு சுலபம் இல்லை.

  //உணர்வுகள் இதயத்திலிருந்து வந்தாலும் ஆழமான உணர்வுகள் கண்ணீராக வெளிப் படுகின்றன. அவை தகுதி உள்ளவர்களுக்காக மட்டுமே வெளிப் படட்டும்.//
  Beautiful!

  பதிலளிநீக்கு
 3. ஆஹா ! இதயம் தொட்ட வரிகள் - நன்றாக உள்ளன. நன்றி.
  :: பல மொழியன் ::

  பதிலளிநீக்கு
 4. ஏற்க முடியாததை மாற்ற முயன்று தோற்ற பின் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் - அவ்வளவுதானே

  பதிலளிநீக்கு
 5. //யாரும் கடந்த காலத்துக்கு சென்று தவறான ஆரம்பத்தை மாற்ற முடியாது. ஆனால் எல்லோராலும் இப்போது தொடங்கி ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த முடியும்//

  இதைத் தானே PERT என்று சொல்வர்! அவ்வப்பொழுது நாம் எங்கிருக்கிறோம் என்று ஒத்துப் பார்க்கப் பழகினால் போதும் - நம் இலக்கை அடைந்து விடலாம்.

  பதிலளிநீக்கு
 6. //மனிதர்களை நேசிக்கவும் பொருட்களை உபயோகிக்கவும் வேண்டிய இந்த உலகத்தில் நாம் பொருட்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம்//

  மனிதர்களை உபயோகமும் படுத்துவோம் உதாசீனமும் படுத்துவோம்!

  பதிலளிநீக்கு
 7. // மனிதர்களை உபயோகமும் படுத்துவோம் உதாசீனமும் படுத்துவோம்! //
  மொத்தத்தில் 'படுத்துவது' என்று முடிவு கட்டிவிட்டோம் என்றால் ....!

  பதிலளிநீக்கு
 8. // உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்க முடியாததை மாற்றி விடுங்கள்.//
  'கடவுளே - என்னால் மாற்றக் கூடியவைகளை - மாற்றுவதற்கான மனோ தைரியத்தையும், ஆற்றலையும் எனக்கு அளியுங்கள்; அதே நேரத்தில் மாற்ற இயலாதவைகளை, அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் எனக்கு அளியுங்கள்! ' இதுதான் அந்த வாசகங்களின் near equivalent மொழிபெயர்ப்பு.

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் எல்லாமே சிந்திக்க வைத்த வரிகள். ரொம்ப நன்றாக இருக்கிறது.

  நன்றி..நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் அருமையான வரிகள் நண்பரே! பகிர்விற்கு நன்றிகள்....

  http://thisaikaati.blogspot.com/

  பதிலளிநீக்கு
 11. இந்தப் பதிவின் பின்னோட்டங்களில் - நம்முடைய புதிய வாசகர்கள் பலர் பின்னூட்டங்கள் வழங்கி இருப்பது 'எங்களு'க்கு பெரு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறது. வாழ்க வசந்த், மீனாக்ஷி, தாமஸ் ரூபன், ரோஸ் விக் (ரோஸ் - அது என்ன திசைகாட்டி ஓல்ட் - & திசைகாட்டி - வாஸ்துபடி - மாற்றம் ஏதும் செய்தீர்களா?)

  பதிலளிநீக்கு
 12. கண்ணீருக்கு அளவுக்கு மீறின மதிப்பு தரப்படுவது உண்மை. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று கருதப் படுகிறது. ஆர்வலர் புண் கண்ணீர் பூசல் தரும் என்று அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லாததை வியந்து சொல்வதும் உண்டு.

  முற்றிலும் மாறாக பெர்நார்ட் ஷா ஒரு நாடகத்தில் பேசுகிறார்:

  அம்மா மகளுடன் தீவிர விவாதம் செய்கிறாள். கண்ணீர் விடுகிறாள். மகள் அதையும் மீறி பெட்டி படுக்கையுடன் வெளியேற முடிவு செய்கிறாள்.

  அம்மா: என் கண்ணீரைப் பார். அதையும் மீறியா இப்படிச் செய்கிறாய்?
  மகள்: கண்ணீர் என்ன கண்ணீர்? அதற்கு முதலீடு ஏதும் தேவை இல்லை. அது உலகிலேயே மிகவும் மலிவானது.

  தொலைக் காட்சி சீரியல், சினிமா, கிரிக்கெட் வெற்றி என்று பலத்துக்கும் மக்கள் ஆனந்தக் கண்ணீர் அல்லது சோகக் கண்ணீர் உகுப்பதைப் பார்க்கும்போது ஷாவின் வாதத்தில் ஒரு உண்மை இருப்பதாகவே படுகிறது.

  பதிலளிநீக்கு
 13. நரகத்தில் தலைவனாக என்ன, நரகத்தை உண்டாக்கி நம்மை தண்டிக்கும் தலைவராக ஒருவரா இருவரா, நூற்றுவரைப் பார்த்து மனம் வெதும்புகிறோமே.

  பதிலளிநீக்கு
 14. பொருள்களை நேசித்து மனிதர்களை உபயோகப் படுத்துகிறோம் என்பது மிகச் சரியான உண்மை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!