சனி, 3 அக்டோபர், 2009

எழுத நினைக்கிறேன்..

1) எழுத இடம் கிடைத்தால் எழுதுகிறோம் அல்லது இடம் ஏற்படுத்திக் கொண்டு எழுதுகிறோம்.... என்று படுத்துகிறோம்!
2) பேசி அலுத்து விட்டதால் எழுதுகிறோம் என்று சொன்னாலும், அ) பேசுவதை யாரும் கேட்பதில்லை, ஆ) பேச ஆரம்பித்த உடன் இதோ வந்துவிட்டேன் என்று நழுவி விடுவார்கள், இ) எழுதியதைப் படிக்கிறார்களா இல்லையா என்று தெரியாது... நாம் சொல்ல நினைத்ததை எழுத்தாக வாந்தி எடுத்து விடுகிறோம்.
3) நாம் எழுதி இருப்பது போல யாரும் ஏன் எழுதுவதில்லை என்று சிந்திக்கிறோம்.
4) நாம் எழுதி உள்ளதை எல்லோருமே படிக்கிறார்கள் என்று உண்மையாக நம்புகிறோம்.
5) பேசும்போது முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும்.முக மாறுதல் தெரியும்...கவனம் தடைப் படும்.
6) எழுதுவதில் இந்த சிரமங்கள் இல்லை.
7) எழுத்து நம் மன அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஒரு வடிகால்.
8) அடுத்தவர்கள் எழுத்து நன்றாக இருந்தால் கூட நம்மை விட நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் நம்மைப் போலவே நன்றாக எழுதுவதாக நினைக்கத் தொடங்குகிறோம்..
9) வீட்டில் உள்ள பேப்பர், டைரி, கம்ப்யூட்டர் நோட் பேட் என்று தலைப்புகளாகவும், 'ஹின்ட்'டுகளாகவும் நிரப்புகிறோம்..
10) கடைசியாக மனதின் ஓரத்தில் அடுத்த முறையாவது நல்ல விஷயமாக எழுதி விட வேண்டும் என்று நினைக்கிறோம்.
11) வழியில் எதைப் பார்த்தாலும் இதைப் பற்றி எழுதினால் என்ன என்று சிந்திக்கத் தொடங்கி ஆரம்ப வரிக்கு அல்லாடுகிறோம்...
12) எண்ணங்களின் வேகத்துக்கு எழுத்துக்கள் ஒத்துழைப்பதில்லை. பாதி எழுதும்போதே பாதை மாறி விடுகிறது.
13) எழுத்து என்பது நம் பல முகங்களில் ஒன்று அல்லது நம் பல பிறவிகளில் ஒன்று...
14) எப்படி ஒரே மாதிரி சிந்திப்பதில்லையோ அதே போல ஒரே மாதிரி எழுதுவதும் இல்லை.
15) ஏன் எழுதுகிறோம் என்று சிந்திப்பதே இல்லை!
16) எழுதியதைப் படித்து விட்டு தேடி வந்து உதைக்க நாளாகும். அதற்குள் தப்பித்து விடலாம். அல்லது பின்னூட்டத்தில் திட்டு நிதானமாக வாங்கிக் கொள்ளலாம்.

4 கருத்துகள்:

 1. // எழுதியதைப் படித்து விட்டு தேடி வந்து உதைக்க நாளாகும். அதற்குள் தப்பித்து விடலாம். அல்லது பின்னூட்டத்தில் திட்டு நிதானமாக வாங்கிக் கொள்ளலாம்.//

  ஹி ஹி ஹி..

  :))))

  பதிலளிநீக்கு
 2. ஏதோ தாபத்தைத் தீர்க்க எழுதிக் கொள்கிறோம் என்று எண்ணுவது எனக்கு சரியாகப் படவில்லை. பெரும்பாலும் கண்டது, கேட்டது, படித்தது இவற்றில் ரசித்ததை பகிர்ந்து கொள்ளும் மன நிலையில் தான் நான் எழுதுவதாக எண்ணுகிறேன். உண்மை எப்படியோ? அதனால் தான் அனாமதேயமாக மறைந்திருந்து இதை சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. தலைவரே - சொறி பிடித்தவன் கையும், பேனா பிடித்தவன் கையும், விசைப் பலகை தொட்ட விரல்களும் சும்மா இருக்காது. இது ஒரு வலைமொழி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!