வியாழன், 15 அக்டோபர், 2009

வினையாகும் விளையாட்டு

நேற்று செய்திகளிலும் இன்று செய்தித் தாளிலும் BCCI ஸ்ரீசாந்துக்கு விடுத்துள்ள எச்சரிக்கை வந்திருந்தது. கொடுக்கப் பட வேண்டிய எச்சரிக்கைதான்...எனக்கும் தோன்றும் இவர்கள் எல்லாம் மைதானத்தில் ஆடுகிறார்களா அல்லது போர்க்களத்தில் சண்டை இடுகிறார்களா என்று!
நம்மூர் ஸ்ரீசாந்த் ஹர்பஜன் ஆகியோர் விக்கெட் எடுத்த உடன் செய்யும் சேஷ்டைகள் அருவெருப்பையும் வெறுப்பையும் உண்டுபண்ணும். வரகுணபாண்டியன் சொல்வதுபோல (!) 'ஆட்டக் காரர்'களிடையே ஆக்ரோஷம் தேவைதான்...ஆனால் அமைதி மிக அவசியம் அல்லவா? ஏதோ செயற்கரிய செயல் செய்து விட்டது போல கையை மண்ணில் குத்தி, குதித்து, ஆட்டமிழந்த ஆட்டக்காரரை நோக்கி வெறுப்பான பார்வையால் மண்டையை ஆட்டி ஆட்டி இவர்கள் செய்யும் செயல்கள் ஆட்டம் பார்க்கும் சுவாரஸ்யத்தையே கெடுத்து விடுகின்றன.
மற்ற நாட்டு பௌலர்களும் பந்து வீசி விட்டு பக்கத்தில் வந்து முறைத்து விட்டுப் போவதுண்டு... முன்னால் ஆஸ்திரேலிய பௌலர் 'ப்ருஸ் ரீட்' என்று ஒருவர் மூச்சுக்குள் திட்டிக் கொண்டே பந்து வீசுவார். ஆட்டத்தை விளையாட்டாகப் பார்க்காமல் ஆத்திரக் களமாக மாற்றும் இவர்களை எல்லாம் என்னென்பது? நாகரீகமாக, விளையாட்டு உணர்வுடன், நட்புடன் விளையாட என்றுதான் பழகுவார்களோ? இதற்கு நம் பத்திரிகைகளையும் சொல்ல வேண்டும். ஆக்ரோஷமாகப் பந்து வீசினார் என்று இதை எல்லாம் கொண்டாடுவதால் வரும் வினை இது.

அந்தக் காலத்தில் ரவி சாஸ்திரி, கபில் தேவ், மதன்லால் போன்றோர் பந்து வீசிவிட்டு விக்கெட் விழுந்தவுடன் சிறிய சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் காட்டுவார்கள். பார்க்க கௌரவமாக இருக்கும். இப்போது? வெறுப்பை சம்பாதிக்காமல் அடுத்தவர்களுடைய நட்பை சம்பாதிப்பது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் வகுப்புதான் எடுக்க வேண்டும்...
சமீபத்தில் டென்னிசில் வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவர் நடுவரைப் பார்த்து கொலை மிரட்டலே விடுத்தார். பிற்பாடு மன்னிப்பு கேட்டார் என்றாலும் அவர்கள் நாகரீகம் அங்கு தொலைந்தது தொலைந்ததுதானே..ஆனால் அந்த மன்னிப்பெல்லாம் கூட இவர்கள் கேட்க மாட்டார்கள். கோடி கோடியாகப் பணம் கொட்டும்போது பணிவு எப்படி வரும்? தவறு செய்யலாம். தப்புதான் செய்யக் கூடாது.. ஏனென்றால்,
தவறு என்பது தவறி செய்வது...தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவன் வருந்தி ஆகணும். தப்பு செய்பவன் திருந்தி ஆகணும்

3 கருத்துகள்:

 1. கண்டு பிடிக்க முடியாத ஊக்க மாத்திரைகளை உட்கொண்டு அம்பயருக்கு முடிந்தால் லஞ்சம் கொடுத்து, எதிரணியில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி மோசமாக
  விளையாட வைத்து .. இப்படியெல்லாம் நடக்கும் இந்த கிரிக்கெட்டை விளையாட்டு என்று சொல்வதே சரியில்லை என்று தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்கள் வந்து சென்னைக்கும் டில்லிக்கும் ஆடுவது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்த கோடீஸ்வரக் கேடிகள் எப்படி ஆடினால் என்ன எக்கேடு கேட்டால் என்ன என்று நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்று யோசிக்க வேண்டும். தேச பக்தி என்றால் இந்தியா என்று பெயர் போட்டுக் கொண்டு யார் வேண்டும் என்றாலும் ஆடுவதும் அதற்கு நாம் உற்சாக கோஷம் போடுவதும் தானா? டில்லியும் சென்னையும் ஆடினால் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தேச பக்தியா? கில் கிறிஸ்ட் வெற்றி பெற்றால் கொண்டாட்டம் பதான் தோற்றால் சந்தோசம் என்று இந்த அணி சேரும் மனப் பான்மை வேடிக்கையாக இல்லையா? கிரிக்கெட்டுக்கு கொடுக்கப் படும் அநியாயமான முக்கியத்துவம் கண்டிக்கவேண்டியது அல்ல. ஆனால் ஆராய வேண்டியது.

  பதிலளிநீக்கு
 2. Ellaam sari. But there is no point in excluding Dravid out of the series. Instead, Dhoni deserved only to be a Captain alone might have been excluded. Adan God/Srikanth gave punishment to Sreeshant illa. He was not included in the series illa.

  பதிலளிநீக்கு
 3. பணம் அதிக அளவில் விளையாடுவதால் வீரர்கள் அவ்வளவு வெறி காட்டுகிறார்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!