திங்கள், 19 அக்டோபர், 2009

விஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...

ஆமை மூன்று வருடங்கள் வரை தூங்கும்.
அலார்ம் இல்லை போல இருக்கு!
எறும்புகள் தூங்குவதே இல்லை.
இது சரியான போட்டி!
போலார்க் கரடிகள் இடது கைப் பழக்கம் கொண்டவை.
அதற்காக இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் எல்லாம் போலார்க் கரடி அல்ல!
வண்ணத்துப் பூச்சிகள் கால்களால்தான் சுவையை உணர்கின்றன.
வர்ணபேதம் இங்கு இல்லை போலேருக்கு..
நாய்வகைகளில் German shepherd நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றன.
மற்ற நாய்கள் குரைப்பதோட சரியா?
கொசுவால்தான் அதிகபட்ச மரணங்கள் உலகில் நிகழ்கின்றன.
சின்ன Size... பெரிய Result...!
பாம்பிற்கு அதன் விஷம் அதை ஒன்றும் செய்யாது!
அப்போ தன் வினை தன்னை சுடாதா?
பூனைகள் நூறு வகையாகவும் நாய்கள் பத்துவகையாகவும் கத்தும் தன்மை கொண்டவை.
மனிதர்கள் எத்தனை வகையாக ...?
உடலமைப்பு வகையால் பன்றியால் ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
என்ன நஷ்டம்?
யானைகளால் குதிக்க முடியாது.
அப்போ யானையால் கிரிக்கெட் விளையாட முடியாது!
ஹைட்ரா என்ற நீர் உயிரி சாவதில்லை. அதன் செல்களை அது அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறது.
மனிதன் இப்போது கண்டுபிடித்துள்ள 'நானோ டெக்னாலாஜி'
Shrimp எனப்படும் உயிரினத்துக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
ரெண்டும் ஒண்ணா இருக்கறதால 'மனசுக்கு தெரியுது, புத்திக்கு தெரியலையே...; என்று வசனம் பேச முடியாது!
எலி மிக, மிக மிக, மிக மிக மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினம்.
சீக்கிரமே தனி நாடு கோரிக்கை எழலாம்..
உலகின் மிகப் பொதுவான பெயர் முஹம்மத்.
பொதுவான ஆசை..?
ஆல்பர்ட் ஈன்ஸ்டீன்க்கு கார் ஓட்டத் தெரியாது.
வீணாகப் பொழுதை ஓட்டவும்தான்...
குதிரை வீரன் சிலை தத்துவமும் : குதிரையின் முன் இரண்டு காலும் அந்தரத்தில் இருந்தால் அவன் போர்க்களத்தில் இறந்தான் எனவும், ஒருகால் நிலத்திலும், ஒருகால் அந்தரதிலும் இருந்தால் போரினால் ஏற்பட்ட காயத்தால் இறந்தான் எனவும், இரண்டு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் சாதாரணமாக ஏதோ நோயுற்று இறந்தான் எனவும் கொள்ள வேண்டும்.
குதிரை உட்கார்ந்திருந்தால்...?
மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!
---------------- --------- ------------- -------- (பின்னூட்டத்தில் பூர்த்தி செய்வீர்களா?)

10 கருத்துகள்:

  1. நீங்க போட்ட அந்த கடைசி செய்திக்கு பின் ஊட்டம் போட்டு - என்னோட பின்னாடிய - சிவப்பு வர்ணம் பண்ணிக்கனுமா நான். ஆனாலும் ரொம்பக் குறும்புய்யா உங்களுக்கு.
    :: God save my back::

    பதிலளிநீக்கு
  2. தத்துவங்களை கடிச்சுத் துப்பியே வாயை சுத்தமாக வைத்திருந்தார் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. ஒருவேளை பல்லை 'உடைத்துதான் பழக்கமோ? (மற்றவர்கள் பல்லை)

    பதிலளிநீக்கு
  4. நேற்று நான் வானொலியில் கேட்டுக்கொண்ட விஷயங்கள்.

    1) கேசவாரிப்பறவை - முன்னொரு
    காலத்தில் வாழ்ந்ததாம்.இப்பறவை மிருகங்கள் மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களையும் தன் கூரிய நகத்தினாலேயே பிறாண்டியே கொல்லுமாம்.

    2)மனிதர்களின் கைரேகை ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருப்பதுபோல மனிதர்களில் நாக்கிலும் ரேகைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டே இருக்குமாம்.

    3)உலகில் எல்லா உயிரினங்களிலும் ஆந்தையால் மட்டுமே எல்லாத் திசைகளிலும் தன் கழுத்தைத் திருப்பிப்பார்க்கிற மாதிரி கழுத்து எலும்பின் அமைப்பு இருக்காம்.

    4)உயினங்களில் முதளைக்குத்தானாம் கூடிய கூரிய பற்கள் இருக்காம்.(எண்ணிக்கை சொன்னார்கள்.
    மறந்துபோச்சு)

    பதிலளிநீக்கு
  5. அவர் வருஷத்துக்கு ஒரு தரம் டாக்டரிடம் போய் துப்பரவு செய்து கொள்வாராம்.

    இப்பிடி பதிவை நெருக்கமாய்ப் போட்டால் என்ன செய்ய !

    பதிலளிநீக்கு
  6. ம்..

    //தத்துவங்களை கடிச்சுத் துப்பியே வாயை சுத்தமாக வைத்திருந்தார் போல இருக்கு.//

    ஹ ஹ ஹா...

    :)))

    பதிலளிநீக்கு
  7. மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!

    பல் செட் ?????

    பதிலளிநீக்கு
  8. //மா சே துங் தன் வாழ் நாளில் பல்லே தேய்ததில்லை!//
    டூத் பேஸ்ட் செலவு ரொம்பவே மிச்சம்தான் போங்க!

    பதிலளிநீக்கு
  9. ஓ...ஒருவேளை பல் இல்லையாக்கும்.

    பதிலளிநீக்கு
  10. பாதுகாப்பான அனானியார் அடித்தார் சிக்ஸர் அடுத்ததில். அதை ரசித்தார் வசந்த் பின்னே...என்ன வசந்த் வெறும் சிரிப்பு மட்டும்தானா...?
    நல்லதாய் நாலு விஷயம் கூட சொன்னார் ஹேமா,பிறகு இரு முறை வந்து பல் பற்றி இரு சந்தேகம் கிளப்பினார்.
    பின்னோக்கி பல்செட் என்று சந்தேகப் பட்டாலும், மீனாட்சி சிக்கனத்தைப் பார்த்தார் அதில்...
    அவ்வளவுதானா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!