வியாழன், 29 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 013

பாடம் பதின்மூன்று: 
குருவின் சிஷ்யன் ஒருவன் கேட்டான்.
'குருவே - எனக்கும் ஞானம் வேண்டும். கடற்கரைக்குத் திரும்பிச் செல்லவா?'
குரு: 'சென்று?'
சிஷ்: கூழாங்கல் தேடுவேன்!
குரு : (சந்திரமுகி ரஜினி பாணியில்) நான் கேட்டேனா?
சிஷ்: அவரைக் கேட்டீர்களே!
குரு: அதை நான் வாங்கிக் கொண்டேனா?
சிஷ் : இல்லை - அப்படியானால் குருவே -- நல்ல கூழாங்கல் ஒன்று எடுத்து கடலில் வீசிவிட்டு - உட்கார்ந்து யோசிக்கிறேன்.
குரு : இதை எல்லாம் செய்ததால்தான் அவருக்கு ஞானம் வந்தது என்று நினைக்கிறாயா?
சிஷ்: வேறு எதனால் வந்தது - சொல்லுங்க குருவே!
குரு - எல்லா சிஷ்யர்களையும் பார்த்துக் கேட்டார். ' உங்க எல்லோருக்கும் தெரியணுமா?'
சிஷ்யர்கள் : ஆமாம்.
குரு: அப்படியானால் - வாழ்க்கையில் முன்னேற - சென்ற பாடத்தில் - மீனாக்ஷி அவர்கள் பதிந்துள்ள பின்னூட்டத்தைப் படியுங்கள். உங்களுக்கு ஞானம் வரவேண்டும் என்று இருந்தால் - அது ஒரு கூழாங்கல்லிலிருந்து கூட வந்துவிடும்.' இப்பொழுது' அவசியமில்லை என்று இருந்தால் - என் பின்னாலேயே - சிஷ்யர்களாகத் திரிந்து கொண்டிருப்பீர்கள். .. ஞானம் வரும் வரை.
(தொடரும்)

3 கருத்துகள்:

  1. தூங்கி எழுந்து முதல் வேலையா நான் எழுதின பின்னூட்டத்துக்கு என்ன பதில் வந்திருக்கும்னு ஆவலோட பாத்தா, நீங்க இந்த பதிவுலேயே அழகா எனக்கும் பதில் எழுதி என் மனச நெகிழ வெச்சுடீங்க. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புரிஞ்சதால ரொம்ப ஷார்ட்டா முடிச்சிட்டீங்க ஹேமா...

    உங்கள் நெகிழ்ச்சி எங்களையும் நெகிழ வைக்குது மீனாக்ஷி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!