செவ்வாய், 6 அக்டோபர், 2009

மே ரி மி !! எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு ...

2009  அக்டோபர்  ஏழு முதல் பதின்மூன்று வரையிலும் !
மேஷம் : செய்வன திருந்த செய்யுங்கள் - இந்த வாரம் உங்களுடையது.  வியாபார வெற்றி, சந்தோஷம் , வருமான உயர்வு எல்லாமே உங்களுடையது..  உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சந்தோஷம் மொண்டு வருகிறார்கள். அதுல குளியுங்க.


ரிஷபம் : பிடிவாத குணத்தை கைவிட்டு - நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கொஞ்சம் இரக்கம் காட்டி - மன்னிப்பு கேளுங்கள். துணைவர் / துணைவி உங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவார்கள். மகிழ்விடங்கள் செல்வீர்கள்...


மிதுனம் : சிலருக்கு தொழில் மாற்றம்; பலருக்கு தேர்வில் வெற்றி. உடல் உபாதை அறிகுறி ஏதேனும் தென்பட்டால் - மருத்துவ மனை செல்லுங்கள். அட்வைஸ் பெறுங்கள் - அதன்படி நடங்க - அசட்டையாக இருக்காதீங்க. புதிய நட்புக்கள் உருவாகப்போகின்றன.


கடகம் :  குழந்தைகளால் குதூகலம், கொண்டாட்டம். உங்களின் நிர்வாகத்திறனும், அறிவுரை வழங்கும் திறனும் ஓங்கி நிற்கும். சந்தோஷமா இருங்க - மற்றவர்களையும் சந்தோசப்படுத்துங்க! 


சிம்மம் : வீட்டு விவகாரங்கள், வேதனைகள் அகலும். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இந்த வாரம் உங்க கற்பனை ஊற்றும், யோசனைகளும் - உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அதிசயித்து, (அவரவர்களின்) மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்யும். புது காரு, புது வீடு - புது (ஹாங்... அது கிடையாது ) -- ஜமாயுங்க. 


கன்னி :  ஒங்க கிட்ட உதவி பெறுவார்கள் பலர் - ஆனா அவுங்களுக்கு தமிழிலேயே பிடிக்காத வார்த்தை 'நன்றி' அதனால அதை உங்களிடம் சொல்ல மாட்டாங்க. அதனால என்ன? உங்களிடம் உள்ள தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் - மற்றவர்களின் நன்றியை எதிர்பாராதது.


துலாம் : ரொம்ப நாளா புத்தகம் எழுதனும்னு நெனச்சிருந்தீங்கன்னா - ஆரம்பியுங்க எழுத - இப்போ. பொதுப பணிகளில் வெற்றி உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது - கதவைத் தட்டும்போது - திறங்க. வெள்ளிக் கிழமை தொடங்கும் பணியில் வெற்றி நிச்சயம். 


விருட்சிகம் : எதையும் திட்டமிட்டு நடத்தும் நீங்க - இந்த வாரம் - ஆடை ஆபரண சேர்க்கை என்று தூள் கிளப்பப் போறீங்க. அப்படியே - ரொம்ப நாளா செய்யனும்னு நெனச்சி பிரிட்ஜுல வெச்சிருந்த ப்ராஜக்ட் எதுவாக இருந்தாலும் (அது குலாப் ஜாமூன் செய்யும் ப்ராஜக்டா இருந்தாலும்) உடனே எடுத்துச் செய்யுங்க. செயம் உங்க பக்கந்தேன்!


தனுசு : நல்ல காலம் பொறக்குது - புது திட்டங்கள் பலன் அளிக்கப் போகுது; குழந்தைங்கள வெளியில - உல்லாசப் பயணம் கூட்டிப்போங்க. காசு விஷயத்துல எச்சரிக்கையா இருங்க. 


மகரம் : கூட இருக்கறவங்க பேச்சைக் கேளுங்க, பயன் பெறுங்க. மகளிர் அணித் தலைவி / மக்கள் அணித்தலைவர் உங்களைப் பார்த்துச் சிரிப்பாங்க - கல்யாணம் ஆகாத கண்ணனுக்கும், கன்னிக்கும் - கல்யாண மாலை விழப்போகுது. 


கும்பம் : சின்ன விஷயங்களுக்கு மனசை அலட்டிக்காம - கற்பனை திறனை வளர்த்துக் கொண்டு சந்தோஷமா இருங்க. ஆடம்பரப் பொருட்கள் ஆசையாய் வந்து சேரும். அலுவலகத்தில் ஒரு முக்கியமான பொறுப்பு வரும் - அதை சவாலாக ஏற்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள் - உங்கள் புகழ் உயரும். 


மீனம் : வீட்டை விட்டு வெகு தூரத்தில் உள்ளோருக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரப் போகிறது. உடன் பணி புரிபவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைத்து அவர்களின் நன்மதிப்பைப் பெறப் போகிறீர்கள். 

7 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. //
  கும்பம் : சின்ன விஷயங்களுக்கு மனசை அலட்டிக்காம - கற்பனை திறனை வளர்த்துக் கொண்டு சந்தோஷமா இருங்க. ஆடம்பரப் பொருட்கள் ஆசையாய் வந்து சேரும். அலுவலகத்தில் ஒரு முக்கியமான பொறுப்பு வரும் - அதை சவாலாக ஏற்று வெற்றிகரமாக செய்து முடியுங்கள் - உங்கள் புகழ் உயரும். //

  சரிங்க

  பதிலளிநீக்கு
 3. // தனுசு : நல்ல காலம் பொறக்குது - புது திட்டங்கள் பலன் அளிக்கப் போகுது; //

  Very true! Thank you. Me Ri Mi !

  பதிலளிநீக்கு
 4. ஐயா - சோசியத்த வெச்சிக்கினு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலைதானே?

  பதிலளிநீக்கு
 5. அனானி - சந்தேகப் படாதீங்க - நிச்சயமாக காமெடி இல்லை - தமிழகத்தின் தலை சிறந்த ஜோதிடர் ஒருவர்தான் இந்தப் பலன்களைக் கூறியுள்ளார்.

  பதிலளிநீக்கு
 6. எப்படிங்க எங்க குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் சரியாக வருகிற மாதிரி எழுதறீங்க?
  ம(க்)கு மீ(னா)

  பதிலளிநீக்கு
 7. கையில் குடுகுடுப்பை கலர் கலரா மேலுடுப்பு
  பையில் சில்லறை பாங்காக தோளில் பை
  மையில் சரிபார்த்து மக்களுக்குச் சொல் திறன்
  வெயில் குறைந்தாலும் விவேகம் அதிகமய்யா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!