வியாழன், 29 அக்டோபர், 2009

உள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2

திலிப் வெங்க்சர்கார் 

பொதுவாக மும்பையிலிருந்து விளையாடும் ஆட்டக் காரர்கள் எல்லோருமே கவர்ச்சியான தோற்றம் கொண்டவர்கள்! வெங்க்சர்க்கார் விதிவிலக்கல்ல. இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்று மேட்ச்களில் சதமடித்த அழகான ஆட்டத்துக்கு சொந்தக்காரர். லார்ட்சில் தொடர்ந்த மூன்றாவது சதத்தை அடித்ததும் இரண்டு கையையும் உயர்த்திஅவர் உணர்ச்சி வசப் பட்டதுதான் அவர் அதிகமாக உணர்ச்சியைக் காட்டியது என்று தோன்றுகிறது!

 ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்த வெங்க்சர்கார் அவர் ஆடிய கால கட்டங்களின் மிக Stylish Batsman ஆக அறியப் பட்டவர். Colonel என்ற பட்டப் பெயர் அவருக்கு உண்டு.

75 - 76 களில் நியூசிலாந்துடன் நடந்த மேட்சில் அறிமுகமானவர் அந்த மேட்சில் சோபிக்காவிட்டாலும், 79 இல் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் கடைசி நாளில் வெற்றி பெற 390 தேவை என்ற நிலையில் வெற்றியின் மிக அருகில் ஆட்டத்தைக் கொண்டு வந்தவர். 146 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இப்போதைய ICC  தர வரிசைப் பட்டியல் போல அப்போது வந்த ரேங்கிங்கில் முதல் பேட்ஸ்மேனாக இருந்தவர். வெஸ்ட் இண்டீஸ் அதிவேகப் புயல்கள் மார்ஷல், ஹோல்டிங், ராபர்ட்ஸ் போன்றோர் உலகைக் கலக்கிய பொது அஞ்சாமல் அவர்களை அழகாய் சமாளித்து ஆறு சதங்கள் பெற்றவர்.

உலகக்கோப்பை வென்ற அணியில் அவரும் இருந்தார். 86 இல் லண்டன் லார்ட்சில் நடந்த டெஸ்ட் மேட்சுகளில் மூன்று அடுத்தடுத்த சதங்கள் அடித்து இந்தியா அந்த சீரிசை வெல்லக் காரணமாக இருந்தவர். இந்தியாவில் அப்போதைய Highest Average க்கு சொந்தக்காரர். 

கபிலுக்குப் பிறகு கேப்டன் ஆகவும் இருந்தார். ஒரு வெஸ்ட் இண்டீஸ் பயணப் படுதோல்விக்குப் பின் தலைமை வழக்கம்போலே அவரிடமிருந்து பறிக்கப் பட்டது!

இந்தப் பதிவு வரும் சமயம் இங்கிலாந்தின் பிரபல நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணச் செய்தி வந்துள்ளது. மனம் கவர்ந்த நடுவர். அவர் குடும்பத்தார்க்கு 'எங்கள்' அனுதாபங்கள்.

 

8 கருத்துகள்:

 1. திலிப் வெங்க்சர்கார் தகவலுக்கு நன்றி... பழைய வீரரைப்பறிய பதிவுக்கு வாழ்த்து.

  இங்கிலாந்தின் பிரபல நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணச் செய்தி வந்துள்ளது. மனம் கவர்ந்த நடுவர். அவர் குடும்பத்தார்க்கு 'எங்கள்' அனுதாபங்கள்// என் அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அண்ணன் முதல் முப்பது ரன் எடுக்கற வரைக்கும் இவரோட ஆட்டத்தைப் பார்த்தால் பார்க்கிறவருக்கும் கிரிக்கெட் ஆட/பார்க்க வேண்டும் என்ற ஆசை சுத்தமாகப் போய்விடும்.
  அவ்வளவு அழுக்கு.

  லார்ட்ஸ் மைதானத்தில் "மூணு அடித்தார்" என்பதைத்தவிர இந்த ஆளுக்கு சொல்லிகற மாதிரி credential ஒன்றும் இல்லை.

  அண்ணன் அடிச்ச 17 நூறுல 13 நம்ம ஊர்களில் அடிக்கப்பட்டது. மிச்ச நாலும் இங்கிலாந்துல. இது போறும் அண்ணன் கதைய விளக்க.

  இனிமேலாவது "நல்ல cricketers" பற்றி மட்டும் எழுதவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. // இனிமேலாவது "நல்ல cricketers" பற்றி மட்டும் எழுதவும். //
  அனானி - பந்தைக்கூட - அதிகம் அடிக்காமல் - புன்னகையோடு ஆடிய வெங்க்சர்க்கார் - ஒரு 'நல்ல' கிரிக்கட்டர்தனே! நாம எல்லாரும் எவ்வளவு அடிச்சாலும் - வாங்கிக்கராரு - ஆனா திருப்பி அடிச்சது இல்ல - அவரு எவ்வளவு நல்லவரு!!

  பதிலளிநீக்கு
 4. வெங்க்சர்கார் ஒரு நல்ல ஆட்டக்காரர் மட்டுமல்ல. ஒரு அழகன்! விஜில் சோப் விளம்பரம் "மெஹந்காஹெ?" ஞாபகம் இருக்கிறதா?

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 5. இவர் ஆட வந்தாலே உடனே அவுட் ஆக மாட்டார், கண்டிப்பா ஒரு முப்பது ரன்னாவது எடுப்பார் அப்படின்னு ஒரு நம்பிக்கை எப்பவுமே இருந்துது. இவரோட batting ஒரு தனி அழகுதான். ரசிச்சு பாப்போம்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி கருணாகரசு...

  அன்பு அனானி, அந்தக் காலத்தில் அவ்வளவுதாங்க ஸ்பீட். அதனாலதான் ஸ்ரீகாந்த் அதிரடி ஆட்டக் காரரா மதிக்கப் பட்டார். இப்போ இருக்கற விளையாட்டோட அதை கம்பேர் பண்ண முடியாதுங்க...Consistency முக்கியம் இல்லையா...

  பதிலளிநீக்கு
 7. மெஹங்காஹை விளம்பரம் மறந்தே போச்சு ஜவர்லால்...ஞாபகப் படுத்தினீங்க...

  பதிலளிநீக்கு
 8. ஒரே ஒரு மேட்சில் புயலாட்டம் அடிச்சதைத் தவிர என்ன சாதித்திருக்கிறார் என்கிறீர்கள்? ஓ, பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலா, சரி, சரி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!