திங்கள், 5 அக்டோபர், 2009

ஐ சி சி

ஒண்ணும் சொல்லிக்கறாப்புல இல்ல. இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் இல்லை பாகிஸ்தானும் இல்லை என்றால் - சுவாரஸ்யமே போய் விடுகிறது - மக்கள் அப்பப்போ என்ன ஸ்கோர் என்று தெரிந்துகொண்டு - எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
வெடிகள் வாங்கி வைத்தவர்கள் கூட - தீபாவளிக்கே அதை விட்டுக்கலாம் என்று ஓரங்கட்டி வைத்துவிடுவார்கள். நியூசீலாந்து 'பூவா தலையா'வில்  கெலித்து, பாட்டிங்கில் திணறிக் கொண்டிருக்கிறது. 
மஞ்சளாடை மனிதர்கள் கோப்பை வென்றுவிட சாத்தியங்கள் அதிகம். அஜய் ஜடேஜா நியூ ஜீ - இறுதிக்கு வரும் என்று கணித்தேன் என்று மார் தட்டிக் கொண்டார் - இன்று காலை நூற்று அறுபத்தெட்டில் (அதாங்க இருபத்து நாலு இன்டு ஏழு!) - ஆனா அவங்க கோப்பை வெல்வார்களா என்று சொன்னாரா இல்லையா என்று தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு "எங்கள்" வாழ்த்துக்கள்.

1 கருத்து:

  1. கரிக்கட்டி எடுத்து கன்னம் மறைக்கப் பூசி
    கிரிக்கெட்டுக் கோமாளிகளை கழுதைமேல் ஏற்று
    சரிக்கட்டி சம்பாத்தியம் சகட்டுமேனிக்குப் பெற்று
    தறி கேட்டு அலைகின்றார் தடுப்பார்தான் இல்லையே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!