புதன், 14 அக்டோபர், 2009

மாலி புனிதப் பயணம் திருச்சி அண்ட் சுற்றுப்புறம்


நான்,என் மனைவி, மனைவியின் தங்கை, அவர் கணவர் ஆகிய நால்வரும் Four Wheeler இல சென்ற வாரம் திருச்சி பயணம் சென்றிருந்தோம்.

என் மனைவி, திருச்சியில் படிக்கும் பொழுது வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் திருவானைக்கோவிலுக்கு நடந்து சென்று அகிலாண்டேஸ்வரியை தரிசனம் செய்து பள்ளியறை பால் பிரசாதம் பெற்று வருவேன். அதுபோல மறுபடியும் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறியதால் அதேபோல் வெள்ளிக்கிழமையன்று திருவானைக்கோவிலில் அகிலாண்டேஸ்வரியை தரிசித்து பள்ளியறை பால் பிரசாதம் பெற்று பருகி மகிழ்ந்தோம்.

அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை.பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தரிசனம். கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் Special permission பெற்று நன்றாக தரிசனம் செய்தோம்.
மூன்று நாட்கள் தங்கி திருச்சியை சுற்றியுள்ள 30 கோவில்களை தரிசனம் செய்தோம். First timevisit சிருவாசேரி மதுரகாளி, திருப்பட்டூர், Thirupainjili, திருவாசி, ஒயகொண்டான்மலை, கரூர் பசுபதி நாதர்கோவில்,Thaanthonrimalaiperumaal போனஸ்- முக்கொம்பு காவேரிகுளியல். காவேரியில் தண்ணீர் நிரம்ப ஓடுகிறது. கல்லணை நிரம்பி 16 கண்மாய்களும்திறந்து தண்ணீர் பாய்ந்து செல்லும்காட்சி கண்ணுக்கு விருந்து.
In addition to Trichy, இந்த தடவை கரூர் சென்றிருந்தோம்.
திருச்சியில் இருந்து கருர்வரை முக்கால்வாசி தூரம் தண்ணீர் நிரம்பிய அகண்ட காவேரியை ரசித்துக்கொண்டு கார்பயணம் சுகமாக இருந்தது,
The highlight of our tour is கருரின் அருகில் இருக்கும் நெரூரில் உள்ள "சதாசிவ ப்ரேம்மேந்திரரின் ஜீவா சமாதி" சதாசிவ ப்ரேம்மேந்திரரின் சரித்திரம் கேட்டால்மிகவும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ப்ரேம்மேந்திரர் தான் உயிருடன் சமாதி அடைவதற்கு Mysore மகாராஜா, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மகாராஜாக்கள் வந்து குகை அமைத்து உதவினார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அவர் சமாதி மீது அவர் கூறியபடி 9 வது நாளில் வில்வமரம் தோன்றியதாம்.அந்த வில்வமரத்தின் அடியில் தான் தற்பொழுது பூஜை நடக்கிறது. நாங்கள் காலையில் சென்றபொழுது பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜை முடிந்தவுடன் எல்லோருக்கும் quality கேசரி, பொங்கல்,சட்னி சாம்பார் என்று வேண்டும் அளவு பிரசாதம் வழங்கப்பட்டது
பிரசாதம் உண்டபின் எங்களுக்கு தெரிந்த ப்ரேம்மேந்திரரின் சில பாடல்களை ( மானச சஞ்சரரே, சர்வம் ப்ரேம்மமயம்,ஸ்மரவாரம வாரம், பஜரேகோபாலம், பிபரே ராமரஸம், ப்ருகி முகுந்தேதி ராசனே ) மனது நெகிழ பாடி ப்ரேம்மேந்திரரின் அருளுடன் சென்னை வந்து அடைந்தோம்,

அன்புடன்
மாலி.


3 கருத்துகள்:

 1. எங்க ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள். திருச்சி -> கரூர் பயணம் அருமையாக இருக்கும் இந்த மாதங்களில்.

  பதிலளிநீக்கு
 2. வழக்கம் போல் பொறாமையுடன் படித்து ரசித்தேன். சில பேருக்கு மச்சம் ஐயா வேறு என்ன சொல்ல!

  பதிலளிநீக்கு
 3. Mali ackowledge --------
  என் article ஐ அகிலாண்டேஸ்வரி படத்துடன் வெளி இட்ட கௌதமனுக்கும் பெயர் தெரியாத திருச்சிக்காரருக்கும் பொறுமையுடன் படித்த போராமைக்காரருக்கும் நன்றி.

  மச்சக்காரன் மாலி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!