ஞாயிறு, 18 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற - இதுவரை

'எங்கள்' ரசிகப் பெருமக்களே!
ஒவ்வொரு வாரமும் - ஆறு அல்லது ஐந்து பதிவுகள், ஞாயிற்றுக் கிழமையில் - அந்த பதிவுகளின் மீள் பார்வை; சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அந்த சந்தேகங்களைப் போக்குதல்.
பாராட்டியவர்களுக்கும் (maximum india, senthil, நிகழ்காலத்தில்) - வோட்டுப் போட்டு - இந்தப் பதிவுகளை - Tamilish இன் முதன்மைப் பக்கங்களுக்கு முன்னேற்றியவர்களுக்கும், எங்கள் நன்றி.
ஒரே வரியில் வலையாபதி சொன்னவைகளை - இங்கே பட்டியலிடுகிறோம்:
ஒன்று : காலை ஆறு மணிக்கு படுக்கை விட்டு எழுந்திருங்கள். ஏற்கெனவே எழுந்திருச்சாச்சா - வெரி குட். 
இரண்டு : ஐந்து வார்த்தைகள் ' எனக்கு இன்று எல்லாமே நன்றாக நடக்கும்'  இதைக் குறைந்த பட்சம் ஐந்து தடவைகள் கூறுங்கள். இயன்றால் ஜதியோடும் ஸ்ருதியோடும் பாடுங்க - சொந்த இசை அமைப்பு? இன்னும் சூப்பர்.
மூன்று : FOOD நான்கெழுத்து - அளவு மூன்றெழுத்து - சுவை - இரண்டெழுத்து. !
நான்கு : நடங்க - நல்லது; சவாரி - ஊஹூம (நீங்க காங்கிரசா இருந்தா கூட!)
ஐந்து : நீர் , யார் -- நீர் குடியுங்க - யார் யாருக்கு - சிறப்பு தினம் - பிறந்தநாள் - மணநாள் - பட்டியல் போட்டுக் கொள்ளுங்க மனசுல.
ஆறு : வாழ்த்துப் பெறுங்கள், வாழ்த்துங்கள்.
சந்தேகங்களில் - முக்கியமானது - கெவின் மாதியுஸ் அவர்கள் எழுப்பிய ஒரு சந்தேகம் - வா மு(பகுதி ஒன்று) பின்னோட்டத்தில் - மாலையில் சூரிய அஸ்தமன நேரம் - அலாரம் வைத்துத் தூங்கிவிடலாமா? - இது நகைச் சுவைக்காக எழுப்பப் பட்ட கேள்வியாக இருந்த போதும் - இதைக் குறித்துச் சிந்தனை செய்தபோது - இரண்டு விஷயங்கள் தோன்றியது. உறக்கத்திலிருந்து விழிக்க - அலாரம் தேவை - அலாரம் அடித்தவுடன் டபக் என்று எழுந்துவிடலாம் - ஆனா அலாரம் அடித்தவுடன் டபக் என்று - தூங்கமுடியுமா ? ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. ஆணுக்கு ஆறு - பெண்ணுக்கு ஏழு - முட்டாளுக்கு எட்டு -- அதாவது தூக்க நேரம் - மணிக் கணக்கில் - எனவே - நீங்க தூங்கப் போகுமுன் கணக்கு பண்ணி - அலாரம் வெச்சிக்குங்க - ! (நான் ஏழரை மணி நேரம் தூங்குவேன்:-) இரண்டாவது பாய்ண்ட்: உறங்கப் போவதற்கு அலாரம் வெச்சி உறங்கப் போயிட்டீங்கன்னா - விழித்துக் கொள்ள யாரு அலாரம் வெப்பாங்க? 
முதல் பாடத்தைவிட இரண்டாவது பாடம் சுலபமானதுன்னு ஹேமா சொல்லியிருக்காங்க. நன்றி. இதுவரை சொல்லப்பட்ட ஆறு பாடங்களுமே - இது இருந்தால்தான் அடுத்தது என்று ஒன்றுமே கிடையாது. எது எல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ அதை எல்லாம் - கடைபிடியுங்க. There are no hard and fast rules in these. 
தொடர்ந்து படியுங்க, சிந்தியுங்க - கடை பிடிங்க - இரண்டாயிரத்துப் பத்து - ஜனவரி ஒன்று அன்று நீங்க இப்போ இருப்பதைவிட முன்னேறிய மனிதர் -- அதுக்கு நான் கியாரண்டீ!
(தொடரும்) 

4 கருத்துகள்:

 1. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் ஆலோசனைகள்.

  http://thisaikaati.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. FOOD நான்கெழுத்து..
  'சாப்பாடு'ம் நாலு எழுத்து தான். இருக்கட்டும், இந்த எழுத்துக்கணக்கை வச்சு என்ன சொல்லறீங்க?

  பதிலளிநீக்கு
 3. சின்னச் சின்ன விஷயங்களானாலும் தேவையான சிந்தனைகள்.
  கடைப்பிடிக்க ஆசை இருந்தாலும் நேரமும் காலமும் ஒத்து வரவும் வேணும்.அதுதான் பிரச்சனை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!