புதன், 14 அக்டோபர், 2009

வலையாபதி வரம் கேட்கிறார்!

காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று கேட்டார் மகாகவி.
வலையாபதியாகிய நான் கேட்பதெல்லாம் :
கணினி ஒன்று வேண்டும் - அதனுடன்
அன்லிமிடட் பிராட் பாண்ட் இணைப்பு ஒன்று வேண்டும் -
உடன்பாடுள்ள, சண்டை சச்சரவு இல்லாத வலைத் தளங்கள் வேண்டும் -
பயனுள்ள பதிவுகளை இடுவோரும் வேண்டும்
பயனுள்ள பதிவுகளைப் படித்துப் பாராட்டுவோரும் வேண்டும்.
டும் டும் டும் டும் டும்  ........! 

4 கருத்துகள்:

 1. நான் என்பாட்டுக்கு எதையோ கிறுக்கிட்டு இருந்தேன்.
  ம்ம்ம்ம்....!
  நான் ஒண்ணும் பண்ணல.

  பதிலளிநீக்கு
 2. கரண்டு போகாது இருக்க வேண்டும்
  முரண்டு செய்யாத கணினி வேண்டும்
  கால்கள் வராதிருக்க வேண்டும்
  கைகள் சோராதிருக்க வேண்டும்
  எனக்கென்று ஏய்ப்ப தற்கே காத்திருக்கும்
  கனெக்டிவிடி கண்ணியமாய் இருக்க வேண்டும்
  மென்பொருள்கள் கையாளத் தெரியவேண்டும்
  வன்முறையாய் வைரஸ் வரக் கூடாது
  மெயிலில் குப்பைகள் குறைய வேண்டும்
  ஒயிலாகப் படங்கள் ஓடி வரவேண்டும்
  மவுசும் கீபோர்டும் மோடமும் யு.பி.எஸ்ஸும்
  ரவுசு பண்ணாத அதிர்ஷ்டம் தக்க வேண்டும்.
  இன்ன பிற பிரார்த்தனைகள் செய்த பின்னே
  என்ன இடர் வந்திடுமோ அறிகிலேனே.

  oru puroggraammarin pirarththanai.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!