புதன், 28 அக்டோபர், 2009

கனவா இல்லை நினைவா?

தினமலர் வாரமலர் - அக்டோபர் இருபத்தைந்து இதழில் எஸ் எஸ் ஆர - கட்டுரை - (சந்திப்பு கே ஜி ஜவஹர்) - ஒரு பகுதி :
தேவர், 1963ல் மறைந்தார்; நான் (எஸ் எஸ் ஆர) கதறி அழுதேன். மதுரை திருநகரில் மூக்கையா தேவர் மயக்கமுற்று சாய்ந்தார். அண்ணா துரையும், எம்.ஜி.ஆரும் பத்திரிகையாளர் தென்னரசுவின் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். என் காரிலேயே பசும்பொன் விரைந்தோம். போகும் வழியில் ஆண்களும், பெண்களும் அழுதுகொண்டே போய்க் கொண்டிருந்தனர்.
அந்த காலத்து கிராமத்துப் பெண்கள் ரவிக்கை அணியமாட்டார்கள். ஒரு பெண், "ஐயோ, தேவர் பெருமான் இறந்துட்டாரு... தாங்க முடியலையே...' என்று தலைவிரி கோலமாக காரின் எதிரே ஓடி வந்தாள். தன், மாராப்பு கூட நழுவிய நிலையை மறந்து,கதறியபடி அவள் ஓடி வர, உடனே அண்ணா துரை, தன் மேல் துண்டை என்னிடம் கொடுத்து, "போய் அவளுக்கு இந்தத் துண்டை கட்டு...' என்று பணிக்க, நான் ஓடிப்போய் அவளுக்கு துண்டை கட்டிவிட்டேன். அப்போதும் கூட அவள் சுய நினைவு வராதவளாய் கதறியபடியே ஓடினாள்.
"இதுதான் ஒரு தலைவனுக்கு தமிழ்ப் பெண் காட்டும் உணர்வு. கென்னடி இறந்து போனபோது விக்டோரியா ராணி விமானத்தில் வந்தார்களாம். அவர்களுக்கு இதைப்போல் ஒரு உணர்வு இருந்திருக்குமா?' என்று கேட்டார் அண்ணா துரை.

அய்யா பெரியோர்களே - 
தேவர் அய்யா அவர்கள் காலமானது அக்டோபர் முப்பது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சுடப்பட்டு இறந்தது நவம்பர் இருபத்து மூன்று. இரண்டுமே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று. அப்படி இருக்கையில் அண்ணாதுரை அவர்களுக்கு தீர்க்க தரிசனமா - அல்லது எஸ் எஸ் ஆர அண்ணாதுரை அவர்கள் பேசாததை எல்லாம் பேசியதாகக் கனவு கண்டாரா ? அட்லீஸ்ட் தினமலர் / பேட்டி காண்பவர் - யாராவது கொஞ்சம் கிராஸ் செக் செய்திருக்கக் கூடாதா?

8 கருத்துகள்:

  1. உளறல்கள் என்று தெரிந்தே சொல்பவரும், அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கும் ஊடகங்களும் இருக்கும் போது வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. எம் ஜி ஆர - முதலமைச்சர் பதவியில் இருந்தபோது, 'எரி சாராய ஊழல்' என்ற ஒன்று விஸ்வரூபம் எடுத்தது. அந்தச் சமயத்தில், இந்த இன்னொரு மூன்றெழுத்து நடிகரின் பெயர் - அதோடு சம்பந்தப் படுத்தப் பட்டு, கிசு கிசுக்கப் பட்டது. அப்பொழுது இவர் அடித்த சிக்சர் " நான் எம் ஜி ஆரிடம் - அண்ணே - இந்த எரி சாராயம், எரி சாராயம் - என்று சொல்கிறார்களே, அப்படி என்றால் என்ன என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே எனக்கு எரி சாராயம் பற்றி ஆதியோடு அந்தமாக - எல்லாம் விளக்கிக் கூறினார். எனக்கு அதற்கு முன்பாக எரிசாராயம் பற்றி ஒன்றுமே தெரியாது. "

    பதிலளிநீக்கு
  3. இன்றைய ஊடகங்கள் சிலவற்றின் ஊடக சுதந்திரம் இதுதான்.

    பதிலளிநீக்கு
  4. வாழும் அரசியல்வாதிகள் கனவில் மறைந்த தலைவர்கள் வந்து 'சேதி' சொல்லும் கூத்து போலதான் இதுவும்...இல்லை கிருஷ்ணமூர்த்தி சார்?

    பதிலளிநீக்கு
  5. கனவோ கதையோ...நம்பறத்துக்கு ஆள் இருந்தா எது வேணும்னாலும் சொல்வாங்க ரவி...

    படித்தவன் சார், அப்போ இந்த மாதிரி கதை சொல்றது இவருக்கு வழக்கம்னு சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  6. ஹலோ சந்ரு, என்ன ரொம்ப நாளாக் காணோம்?

    பதிலளிநீக்கு
  7. கேக்கறதுக்கு ஆளில்லைனா கழுதையும் கச்சேரி பண்ணுமாம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!