செவ்வாய், 13 அக்டோபர், 2009

மே ரி மி அக்டோபர் பதினான்கு முதல் இருபது வரை - எங்கள் ஜோதிடம்

எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு - அக்டோபர் பதினான்கு முதல் ...


மேஷம் : நம்பவே முடியலே இல்லே? - ஆனாலும் உண்மைங்கோ! தலைவா / தலைவி - உங்களை முறையே தலைவி / தலைவர் முற்றுகையிடப் போறாங்கோ! கண்களால் கைது செய்யப் போறாங்கோ! உங்க கற்பூர புத்தி மற்றும் எளிதில் எடை போடும் கண்கள் உங்களுக்கு உறுதுணையாய் அமையும். வக்கீல்களும், விளையாட்டு வீரர்களும் பெரும் செல்வம் சேர்த்துக் கொள்வீர்கள். குழந்தைகள் இருக்கிறார்களா - அவர்களுடன் அதிக நேரம் செலவழியுங்க. வேற்று பாஷை பேசும் ஒருவருக்கு இடர் களைந்து ஆறுதல் அளிப்பீர்கள். எதிரிகளால் கூட நன்மை ஏற்படப் போகுதுன்னா பாத்துக்குங்களேன்!

ரிஷபம் : நீங்க நடந்துகொள்ளும் விதம் - உங்க குடும்பத்திலே உள்ள பெருசுகளை பேருவகை அடைய வைக்கும். சட்ட சிக்கல் ஒன்று இந்த வாரம் சரியாகப் போயிடும். முற்றிலும் பரிச்சயமில்லாத மனிதர் ஒருவரால் மன அமைதி இழக்க நேரிடலாம் - எச்சரிக்கையாக இருங்க. மனசிலே அன்பு இருக்கு - ஆனா வார்த்தையிலே மட்டும் அது வரமாட்டேங்குதே உங்களுக்கு - அது ஏன்? கடன் கேட்டிங்கன்னா கொடுக்கறத்துக்கு - நண்பர்கள் தயாரா இருப்பாங்க - அதுக்காக அதிகமா வாங்கி வம்புல மாட்டிக்காதீங்க! 'எனக்கொரு மகன் பிறப்பான் - அவன் என்னைப் போலவே இருப்பான் " எங்கியோ பாட்டுச் சத்தம் கேட்குதே - நீங்கதானா !! பாடுங்க, பாடுங்க, பாட்டையும் கேளுங்க!!

மிதுனம் : மேலதிகாரிங்களைப் பார்த்து, புன்னகைத்து, 'குட் மார்னிங்'' சொல்லுங்க - நிச்சயம் நன்மையுண்டு. பதவி உயர்வும் வரும். பிரதிபலனை எதிர்பாராமல் உதவும் உங்கள் குணம் எல்லோராலும் பாராட்டப்படும். நீண்ட காலமா அலட்சியமா போட்டு வெச்சிருந்த நீண்ட காலத் திட்டங்களை சோம்பல் பாக்காம சுறுசுறுப்பா கவனியுங்க. அட! நீங்க ரொம்ப நாளா மறந்துபோயிருந்த ஒரு நண்பர் உங்களுக்கு சரியான சமயத்தில் உதவப்போகிறார். அரசியல்ல இருக்கறவங்களுக்கு - சமூக அந்தஸ்து உயரப் போகின்றது. உங்க பாட்டு : 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்......'

கடகம் : சொல்வதையும், செய்வதையும் - சிறப்பு கவனத்தோடு சொல்லுங்க, செய்யுங்க - கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - பயணங்களால் பலன் ஏற்படும். கண்ணையும், காதையும் கூர்மையாக வைத்துக்கொண்டு மற்றவர்கள் கூறுவதை திறந்த மனதோடு முதலில் கேளுங்க - அப்புறமா அவங்களுக்கு அறிவுரை கூறுங்க. இரும்பு வியாபாரிகளும், மரக்கடைக்காரர்களும் இரண்டு கைகளாலும் நிறைய பணம் அள்ளூவீங்க. ஏழைகளுக்கும் கொஞ்சம் கொடுங்க - அவங்க சந்தோசப்பட்டா - உங்க செல்வம் இன்னும் பெருகும். உங்க பாட்டு : ' உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது'

சிம்மம் : முன்னெச்சரிக்கையான ஆள் நீங்க. அதனால எந்த வம்புலேயும் மாட்டிக்காம சந்தோஷமா இருப்பீங்க. இந்த வாரம் முழுவதும் தைரியமா, தன்னம்பிக்கையோட, 'அம்மா கும்மா செம ஸ்டிராங்கா' இருப்பீங்க. கெட்டிமேளச் சத்தம் சிலருக்கு ஒலிக்கும். நடைப் பயிற்சி, நடனப் பயிற்சி என்றெல்லாம் - நல்ல ஆரோக்கியம் தரும் வழிவகைகளில் மனம் செல்லும். ஆயிரக்கணக்கில் (கி மீ) பயணம் செல்வீர்கள். மருத்துவர்களுக்கு பொற்காலம். குடும்ப உறவுகள் முன்னேற்றமடையும். பொருளாதார அபிவிருத்தியும் தென்படுகிறது.

கன்னி: மறப்போம், மன்னிப்போம் - இதை இந்த வாரம் கடைபிடியுங்க. சந்தோசமும் சௌக்கியமும் உங்களை வந்தடையும். வார்த்தைகளால் கலக்கமடையாதீங்க. புகழ், செல்வம் ஓங்குகின்ற வாரம். உங்களின் இனிய சுபாவத்தால் - உடன் பணிபுரிபவர்களால் பாராட்டப்பெறுவீர்கள். உங்களின் நேர்மையான நடத்தை சுற்றிலும் உள்ளவர்களைக் கவரும். தொழில் முனைவோர் முன்னேற்றம் அடைவார்கள். தேர்தல்ல நின்னீங்கன்னா - எதுத்து நிக்கறவங்களுக்கு டிபாசிட் காலி ஆயிடுங்கோ! ஆனா என்ன - எதுத்து நிக்கறவரும் கன்னி ராசியான்னு பாத்துக்குங்க ... !

துலாம் : பதவி உயர்வு, வருமான அதிகரிப்பு எல்லாம் வருதுங்கோ! நம்பிக்கையோட இருக்கறது தப்பு இல்லே - ஆனா - அதீத நம்பிக்கைகளை சற்றுத் தள்ளி வையுங்க - அளவோட இருக்கறது எப்பவுமே நல்லது பாருங்க! இந்த வாரம் தனுசு ராசிக்காரங்க உதவுவாங்க. சொத்து சேரும். உங்க புகழைப் பார்த்து எதிரிங்க, கடைக்குப் போய் ஜெலுசில் வாங்கிச் சாப்பிடுவாங்க. தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிறர் பாராட்டும்படியான திறமைகள் வெளிச்சத்திற்கு வரும். விவசாயிகள் அதிகம் பயன் அடைவர்.

விருட்சிகம் : பாட்டு கேளுங்க, சினிமா பாருங்க - குஷாலா இருங்க - யாரு உங்கள கேக்கறதுங்கறேன்! ஆனா - உடம்பப் பாத்துக்குங்க - சாப்பிடும் பொருள் ஒன்றால் சுகவீனம் ஏற்படலாம் - ஆரோக்கியமானத, அளவோட சாப்பிடுங்க. குழந்தைகளால் மேன்மை - அதனால தலை நிமிர்ந்து வெற்றி நடை போடுவீங்க. பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் சுமுகமான முறையில் சரியாகும் - உங்க முயற்சியால. அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்துச் சிரிக்கிறாள். அதை அப்படியே அனுபவியுங்க.

தனுசு : அப்பா அம்மாவால நன்மைகள் நடக்கும். மாணவர்கள் நல்ல மார்க் வாங்குவாங்க. செல்வாக்கு அதிகரிக்கும். செயல் திறன் கூடும். புது வாகனம் - புக் பண்ணியது - வாசலில் வந்து ஹார்ன் அடிக்கும் - சந்தோசமா சவாரி போங்க. உங்க யோசனைகளுக்கு ஜிகினா ஒட்டி ஜிகு ஜிகுன்னு ப்ரெசெண்ட் பண்ணுங்க - நல்லா வியாபாரம் ஆகும். கொல்லன் தெருவிலே ஊசி விற்றீர்கள் என்றால் கூட - அதிக விலை கொடுத்து வாங்கிப்பாங்க. 'நினைத்தாலே இனிக்கும்' - ரசமலாய் கச முச கூட ஏதோ ஒன்று ஏற்படலாம் . உங்க பாடு ஜாலிதான்! ஏற்றுமதி யாவாரம் செய்பவங்க நிறைய லாபம் சம்பாதிப்பாங்க.

மகரம் : கலைஞர்களுக்கு பொன்னான வாரம். உங்க இரக்க சிந்தையும், தத்துவார்த்தமான போக்கும் - உங்க சிஸ்யப் புள்ளைங்களை ஊரெல்லாம் உங்க புகழ் பாடி போஸ்டர் ஒட்ட வைக்கும். உங்க வாரிசு ஒன்று உங்கள ரொம்பப் பெருமை கொள்ள வைக்கப்போகுது! ஓட ஓட உள்ள உறவு அத்தையோட ஒன்று விட்ட பேரனோட மச்சினன் - அல்லது ஆச்சானுக்குப் பீச்சான் - மதனிக்கு நேர் உடன் பிறந்தான் இப்படி ஏதாவது ஒருவரால் லாபம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களுக்கு உங்க நிலைமையை, கருத்தை, புரியும்படியாக, விளக்கிச் சொல்லுங்க - இல்லாவிட்டி ஏதாவது பிரச்னை ஏற்படலாம்.

கும்பம் : புதிய வர்த்தக யோஜனை ஏதேனும் இருந்திச்சுன்னா உடனே செயல்படுத்துங்க. சீரும் சிறப்புமா செழித்தோங்கும். கல்யாண காலம் - சிலருக்கு கூடி வரும். வாழ்க்கையில் எந்த கடின நேரத்தையும் சமாளித்துவிடும் சர்வ வல்லமை பொருந்தியவரு நீங்க. தலைவலி ஜலதோசம் போல சில்லரைத் தொந்தரவுங்க தோன்றி அகலும் - கவலைப் படாதீங்க. முதிய வயது பெற்றோர் இருந்தால் - அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்க, அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்க. மன நிறைவானப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம் : எதிரிங்க எல்லாரையும் புறமுதுகிட்டு ஓட வெப்பீங்க. சிலருக்கு முட்கள் நிறைந்த பாதையில் பயணம் போக வேண்டியதிருக்கலாம் - உறுதியான, முள் தைக்க முடியாத செருப்பு அணிந்துசெல்வது நல்லது. ஒவ்வொரு அடியையும் - நிதானமாக ஆனா உறுதியாக எடுத்து வையுங்க. மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - எனவே அஞ்சற்க. உங்க கலகலப்பான சுபாவத்தால பக்கத்துல இருப்பவங்க எல்லோரும் பரவசப்படுவாங்க. அரசியல்ல வாத்தியாருங்களுக்கும், வாத்தியாருங்கள்ள அரசியல் செய்வோருக்கும் உசிதமான காலம் இது. நில உடைமைக் குறிப்பேடு இருக்குதா? தூசி தட்டி எடுத்து வெச்சிக்குங்க - லாபகரமான வரவுகளுக்கு உபயோகப்படும். சொத்தைப் பல்லு இருந்தா அதை அகற்றிடுங்க - இல்லாவிட்டி வீட்டுல இருக்கற / செய்யற ஸ்வீட்டுங்கள - நீங்க சாப்பிடாம - மத்தவங்களுக்குக் கொடுத்து, பல் வலி வராம பாத்துக்குங்க!

6 கருத்துகள்:

 1. அச்சோ...ஓடிப்போயிடறேன்.எனக்கும் இதுக்கும் அலர்ஜி.

  பதிலளிநீக்கு
 2. Thank you EB - this is for your last week astro -- one point happened just exactly as you mentioned.
  Kumba raasi.

  பதிலளிநீக்கு
 3. வலையுலகில் ஜோசியம் மிக மிகக் குறைவு. நீங்கள் தொடர்ந்து ஜாலியாக டிரை பண்ணுங்கள்.

  பதிலளிநீக்கு
 4. இதில் நம்பிக்கை கிடையாதா ஹேமா? ஒரு வகையில் சரிதான்...

  எழுதினது நடந்தால் மட்டும் தான் நம்புவீர்களா அனானி?

  நன்றி செல்வகுமார். தொடர்ந்து கமென்ட்'டுங்கள்...!!

  பதிலளிநீக்கு
 5. Hema, are you allergic to astrology are what appears to be a proposal in the title?

  Please be assured that it is only the initials of the first three zodiacal signs.

  பதிலளிநீக்கு
 6. கள்ளக்காதல், வெண்கபடம், சடுதியில் பணச்சேர்க்கை, ... இதுக்கெல்லாம் என்ன வழின்னு ஒரு சோசியம் எழுதிப் போடுங்க.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!