தமிழ்த் தாய் என்கிறோம். தெலுங்கில் மா தெலுகு தல்லி என்கிறார்கள். கனாடர்களும் கன்னட தல்லி என்கிறார்கள். ஆக மொழியை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு உணர்ச்சி வசப் படுகிறோம். தகவல் பரிமாற்றத்தில் உதவும் இந்த மொழியை யோசிக்கும் போது இந்தியாவில் தமிழ், மலையாளம் தெலுகு, கன்னடம், அப்புறம் ஹிந்தி என்று நினைக்கத் தோன்றும். அதாவது வட இந்திய பாஷை முழுதும் ஹிந்தி போலத் தோன்றும்
நண்பர் விக்கியை கேட்டபோது இந்தியாவில் இந்தோ யுரோபியன், இந்தோ ஆர்யன், திராவிட, என்றெல்லாம் பிரித்து ஆக மொத்தம் 1991 கணக்கெடுப்பின்படி 1576 தாய்மொழிகள் இந்தியாவில் உள்ளதாக நீளப் பட்டியல் வந்தது! 2001 கணக்கெடுப்பின்படி 29 மொழிகள் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் மொழியாகவும், 60 மொழிகள் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் பேசும் மொழியாகவும், 10,000 மக்களுக்கு மேல் பேசும் மொழிகள் 122 எனவும் கணக்கிடப் பட்டுள்ளது.
தேவநாகரி எழுத்துருவில் ஹிந்தி இந்தியாவின் அங்கீகரிக்கப் பட்ட ஆட்சி மொழி. ஆனாலும் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக துணை நிற்கிறது.
மிகுந்த பழமை மொழியாக தமிழ் அறியப் பட்டு 2004 இல் செம்மொழியாக அறிவிக்கப் பட்டது. பிறகு 2005 இல் சமஸ்க்ருதமும் 2008 இல் கன்னடமும் தெலுங்கும் செம்மொழியாக அறிவிக்கப் பட்டன. இன்னும் சில நாட்களில் திரைப்பட விருது போல எல்லா மொழிகளுக்கும் இது வழங்கப் பட்டு விடும் என்று நம்பலாம்.
எல்லாவற்றையும் பட்டியலிட இடமும், படிக்கப் பொறுமையும் இருக்காது என்பதால் இந்தியாவின் சில முக்கிய மொழிகள் பற்றி...
அஸ்ஸாமிஸ், அவாதி, பாக்ரி, பெங்காலி, பில்லி, போஜ்புரி, சத்திஸ்கரி, டெக்கான், டோக்ரி-காங்க்ரி, கார்வாலி, குஜராத்தி, ஹர்யான்வி,ஹிந்தி, ஹோ, கநௌஜி, கன்னட, கான்தேசி, காஷ்மிரி,கான்தேசி, கொங்கனி (2), குமாணி, கருக்ஸ், லாமணி, மகாஹி, மைதிலி, மலையாளம், மாளவி, மராத்தி, மார்வாரி, மெயதெய், முண்டாரி, நேபாளி, நிமாடி, ஒரியா, புன்ஜாபி, சாத்ரி, சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுகு, துளு, உருது, ...
அப்பாடி... இன்னும் எவ்வளவோ மொழிகள் இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மில்லியன் மக்களாவது பேசும் மொழிகள் இவை.
73 மில்லியன் மக்களுக்கு மேல் பேசப் படுகிறது தமிழ் மொழி. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாலிருந்தே தமிழ் மொழி இருப்பதாக அறியப் படுகிறது. தமிழ்நாடு, புதுவை, மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், மலேசியா, பிஜி, இலங்கை போன்ற இடங்களில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் உள்ளது.
உலகத் தமிழ் மாநாடு உலகத் தமிழ் செம்மொழி மாநாடாகி ஜூன் ஜூலை என்று அல்லாடி இப்போது ஜனவரியில் நடக்கப் போகிறதாம்.உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஒப்புதல் தராததால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு உலக செம்மொழி மாநாடாகி விட்டது.
பதிலளிநீக்குதமிழ் நாட்டிற்கு வெளியில் இருப்போரின் நன்மைக்காக,) உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஒப்புதல் தர மறுத்தது ஏன் என சுருக்கமாக தெரிவியுங்கள்.
நன்றி.
உலகத் தமிழ் ஆராய்ச்சி சங்கம் - க - பிரகடனம் செய்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு ஒப்புதல் தராதது ஏன்? - என் வலை தேடலில் சிக்கிய மீன்கள்.
பதிலளிநீக்குThe Fifth International Conference was originally scheduled for January 1980 and was postponed since the then ruling AIADMK party-led government in the Tamil Nadu state was dissolved by Indira Gandhi. It was re-scheduled to be held in June 1980, but had to be postponed again, as the Tamil Nadu State election intervened. AIADMK party led by charismatic MGR, returned to power, and eventually staged the twice-postponed Fifth International Conference successfully in Madurai in January 1981. Like the Second (1968) Conference which turned out to be Anna’s coronation, the Fifth (1981) Conference turned out to be MGR’s coronation. But this was not to the liking of M.Karunanidhi, the DMK party leader and MGR’s then leading political opponent. To show his spite against MGR, the Madurai Conference was “boycotted” by Karunanidhi and his DMK party.
Attending this Madurai Conference as one of the Sri Lankan delegates, I heard a mouthful from some of the AIADMK party supporters, who only had contempt for Karunanidhi’s pique. While enjoying the festivities produced by the AIADMK party-sponsored Conference, the MGR fans ridiculed Karunanidhi for his oxymoronic “boycott”. Their logic was simple. If Karunanidhi was really sincere about his passion for Tamil literature and heritage and if he was indeed a Tamilian, why he couldn’t bother to travel from Madras to Madurai and take part in the celebration of Tamil culture, when so many foreigners have traveled all the way from distant corners of the world?
பத்திரிகைகளில் தெரிந்து கொண்ட விவரப் படி, உலகத் தமிழாராய்ச்சி சங்கத் தலைவர் 'நொபுரு கரஷிமா' ஆட்சேபித்ததால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடாக இருந்திருக்க வேண்டியது செம்மொழி மாநாடானது.
பதிலளிநீக்குமாநாடு நடத்த தேதி பெறவே மேற்சொன்ன சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் ஒப்புதல் பெறப் படவேண்டும். ஆனால் உலகத் தமிழ் மாநாடு நடத்த குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் வேண்டும் என்றும், எனவே இதற்கு ஜப்பானில் உள்ள மேற்படி சங்கத் தலைவர் நொபுரு கரஷிமா மறுத்து விட்டதால் இந்த முடிவு எனத் தெரிகிறது. அவர் யோசனை 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் நடத்தலாம் என்ற அவர் முடிவிற்கு தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நேரம் என்ற காரணம் தடையாக இருந்ததால் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு 'உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என்றானதாக அறிகிறேன்.
ஜனவரி என்ன டிசம்பரில் நடத்தினாலும் “ஆய்வுக்கட்டுரைகள்” “ஆராய்ச்சிக்கட்டுரைகள்” “பிட்டுக்கட்டுரைகள்” அனைத்தும் கூகுளில் கைநனைத்து, வெட்டி ஒட்டி, ஒரே நாளில் தயாரிப்பது என்ன அருஞ்செயலா? “ஆயத்தக் கட்டுரைகள்” இப்பொழுதே நமது “ஆயத்த முனைவர்களி”ன் சரக்குப் பண்டகசாலையில் “ரெடி”.
பதிலளிநீக்குஅ. நாமதேயன்