வியாழன், 28 ஜனவரி, 2010

எங்கள் பற்றி எம்ஜியார்!


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே,
தன்னாலே வெளிவரும் தயங்காதே,
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
இது சமீபத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரால் பாடப் பெற்றப் பாட்டு.


இது தன்னைக் குறித்துத்தான் பாடினார் - எம்ஜியார்  என்று 'நெஞ்சுக்கு நீதி' எழுதியவர் சொன்னார். அப்புறம் அது அண்ணா அவர்கள் குறித்துத்தான் பாடினார் எம்ஜியார்  என்று பாடியவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.


இன்று ஜெயா டி வி இல், எம்ஜியார் - 'அம்மா' பற்றி ' ராமன் தேடிய சீதை' படத்தில் பாடிய பாட்டாக, "திருவளர் செல்வியோ? நான் தேடிய தலைவியோ?" என்ற பாட்டு, 'கோட்' செய்யப்பட்டது.


இதை எல்லாம் பார்க்கும் பொழுது, கேட்கும் பொழுது, புரட்சித் தலைவர் அவர்கள் 'எங்கள்' பற்றிப் பாடியவை - எங்கள் கவனத்திற்கு குரோம்பேட்டைக் குறும்பனால் கொண்டுவரப்பட்டது.  நாங்க அதைப் பார்த்து மெய் சிலிர்த்தோம். அட 'எங்கள்' பற்றி, எம்ஜியார் அந்தக் காலத்திலேயே பாடி விட்டாரே!
" ஒரு தாய் மக்கள் நாம் என்போம்; ஒன்றே 'எங்கள்' குலம் என்போம்!"
" ஒன்று 'எங்கள்' ஜாதியே, ஒன்று 'எங்கள்' நீதியே !
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!"
இதே பாட்டில், 'ஆதிமனிதன்' பற்றி கூட வந்திருக்கு!
ஹி ஹி !!    

31 கருத்துகள்:

  1. எம்ஜியார் பற்றிய பதிவுக்கு நன்றிகள் பல .....

    பதிலளிநீக்கு
  2. அப்படி பார்த்தால் என்னை பற்றியும் பாடி இருக்கிறார். "உதய" சூரியனின் பார்வையிலே என்று. இது எப்படி இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. அட இப்படியெல்லாம் கூடப் பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா என்ன!

    சிவாஜி கூட எங்க ஊரு ராசா அவர் தங்கமான ராசான்னு எங்களைப் பத்தித் தான் பாடினார்னு கூட சொல்வீங்க போல இருக்கே!
    குரோம்பேட்டைக் குசும்பன் நல்லாத்தான் கெளப்பினாறையா பீதியை!

    பதிலளிநீக்கு
  4. :)). இருக்கிற போட்டி போறாதாக்கும்.

    பதிலளிநீக்கு
  5. //இதே பாட்டில், 'ஆதிமனிதன்' பற்றி கூட வந்திருக்கு!..//

    அட இத பார்ரா! ஊம்...அவர் பேர சொல்லி இன்னும் எவ்வளவு பேர் எவ்வளவு காலத்துக்கு ஓட்ட போறாங்களோ?

    இதுல எனக்கு வருத்தம் என்னானா பாட்ட எழுதினவங்கள யாரும் கண்டுக்க மாட்டேங்கராங்கனுதான்.

    பதிலளிநீக்கு
  6. // மகா said...
    எம்ஜியார் பற்றிய பதிவுக்கு நன்றிகள் பல .....//
    நன்றி மகா - உங்க 'உள்மனசு' சொல்வதை அப்படியே எங்களுக்குச் சொன்னதற்காக!

    பதிலளிநீக்கு
  7. // தமிழ் உதயம் said...
    அப்படி பார்த்தால் என்னை பற்றியும் பாடி இருக்கிறார். "உதய" சூரியனின் பார்வையிலே என்று. இது எப்படி இருக்கு.//
    நல்லா இருக்கு தமிழ் உதயம் - ஆனா படத்துல அதை 'புதிய சூரியனின் பார்வையிலே ' என்று மாற்றிவிட்டார்கள் - தெரியுமா?

    பதிலளிநீக்கு
  8. செல்போன் வாரம் மறந்திட்டீங்களா? இந்த பதிவை செல்போனோட லிங்க் பண்ணியிருக்கலாமே..
    எப்படியா? கேள்விலாம் கேக்கக்கூடாது.. the following line could have been added to the article.

    {அந்த பாடல்களின் 'ரிங் டோன்' உங்கள் ("எங்கள்") செல்போனில் இருக்கிறது..} (இப்படித்தான்)

    பதிலளிநீக்கு
  9. கிருஷ் சார் - ஆக்சுவலா - 'எங்க ஊரு ராஜா' படத்துல, அந்தப் பாடலை மற்றவர்கள் பாடுவது போலத்தான் வரும். அதில் ஒருவர் மற்ற சிவாஜி, இன்னொருவர் புரட்சித் தலைவி! எனவே எங்களைப் பற்றி சிவாஜியும், புரட்சித் தலைவியும் கூடப் பாடி, ஆடி இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு சுட்டிக் காட்டியதற்கு நன்றி.!! ;-)

    பதிலளிநீக்கு
  10. நல்ல ஐடியாங்க.. நான் கூட புதுசா ஒரு ப்ளாக் open பண்ண போறேன். MGR தான் நிறைய பாட்டு பாடி இருக்காரே.. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  11. தல போட்டோ ஸூப்பர்.:)
    --

    பலானது பாட்டு என்ன பத்தியா..:))

    பதிலளிநீக்கு
  12. "பலானது" ஓடத்தின் மேலே !
    'பலா' நீங்க ஓடத்தின் மேலே இருந்தால்தான் . அது உங்கள் பாட்டு.

    பதிலளிநீக்கு
  13. 'எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு'
    பாரதி தாசன் அவர்கள் கூட உங்களை தமிழோட சேர்த்து சிறபித்திருக்கிறார், பாருங்க!

    பதிலளிநீக்கு
  14. மீனாக்ஷி அட ! எங்கியோ கொண்டுபோயட்டீங்க - எங்களை! நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே கூட ..."எங்கள்"-க்கு தானா?? :-)))

    அடடா இது தெரியாமப் போச்சே...

    பதிலளிநீக்கு
  16. ரோஸ்விக் - ஆமாம் - அட! எவ்வளவு பேருங்க - எங்கள் பற்றி பாடியிருக்காங்க பாருங்க!

    பதிலளிநீக்கு
  17. புலிகேசி பத்தி எதாவது பாடிருக்காரான்னு பாத்து சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  18. 'புலியை பார் நடையிலே, புயலை பார் செயலிலே.......'
    இதுவும் எம்.ஜீ.ஆர் பாட்டுதாங்க!

    பதிலளிநீக்கு
  19. M.G.R அவர்களைப் பற்றிப் பேசுகையில் "எங்கள்" M.G.R
    என்றுதானே பேச வருகிறது.எனவே எங்கள் என்பது அவருக்கே சொந்தம்.

    பதிலளிநீக்கு
  20. போதும் உங்க (எங்கள்) பிறந்தாத்து பெருமை !!

    பதிலளிநீக்கு
  21. புலவன் புலிகேசி கேட்டதற்கு, மீனாக்ஷி அவர்கள் பதில் சொல்லி எங்கள் வேலையை சுலபமாக்கிவிட்டார்கள். இருவருக்கும் எங்கள் நன்றி.
    திவ்யாஹரி அவர்கள் சொல்லியிருக்கும் பிளாக் - தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை. சுட்டி கொடுத்தால் பார்க்கிறோம். ஹேமா - நல்லா சொன்னீங்க!

    பதிலளிநீக்கு
  22. சாய்ராம் கோபாலன் - என்ன பிறந்தாத்துப் பெருமையா? - ஹூம் நாங்க உண்மையைச் சொன்னா உங்களுக்கு அது பெருமை பீற்றிக்கொள்கிறோம் என்று தோணுதா? - உங்களை எல்லாம் எங்கள் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக்கொண்டு - நாங்க என்ன சுகம் கண்டோம் - ஒரு வோட்டு உண்டா - பாராட்டு உண்டா -- கண்களில் கண்ணீர் - மூக்கைச் சிந்தி - அதைத் தடவுவதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்! (பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்தால்தான் - பாதியாவது சமாதானம் ஆவோம் !!)

    பதிலளிநீக்கு
  23. //(பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்தால்தான் - பாதியாவது சமாதானம் ஆவோம் !!)//


    இன்று ராத்திரி / நாளை காலை அமெரிக்கா செல்வதால் - இப்போ தான் அண்ணா நகர் நல்லி சில்க்ஸ் போயிட்டு வரேன். கொஞ்சம் முன்னாடி சொல்லி இருக்க கூடாது காசு ஷோபனா ! (புடவை கேட்பதால் நீங்கள் தான் இதை எழுதி இருப்பீர்கள் என்று ஒரு ஊகம்.

    நல்லி சில்க் போனதால் மனைவிக்கு பட்டு புடவை வாங்கி இருப்பேன் இன்று நினைக்கவேண்டாம். குளியல் துண்டு மட்டும் வாங்கி வந்த மகா நல்லவன்.

    பதிலளிநீக்கு
  24. சாய்ராம் - ஹி ஹி - காசு வுக்கும் சரி, அவங்க அம்மாவுக்கும் சரி - புடவை என்கிற ஒரு ஆடை இருப்பதே தெரியாது. ஒன்னு சுரிதார், இன்னொன்னு எப்பவுமே பாண்ட் சட்டை. பாண்ட் சட்டை - போடுகின்றவர் - கராத்தே ப்ளாக் பெல்ட் வேறு!

    பதிலளிநீக்கு
  25. இந்தப் படத்தைப் பார்த்ததும் எத்தனை பேர் எப்படி ஏமாந்திருக்கிறோம் என்று புரிகிறது. எம்ஜிஆர் inaugural பதவியேற்பைப் பார்க்க மெரீனா போனது நினைவுக்கு வருகிறது. கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். எங்கள் தலைவர் என்றால் கோபிப்பீர்களோ? படத்தில் இருப்பது சென்னை மவுன்ட் ரோடா?

    பதிலளிநீக்கு
  26. அப்பாதுரை சார், ஆமாம் - நானும் மவுண்ட் ரோடு / அண்ணா சாலை - சர்ச் பார்க் கான்வென்ட் அருகே என்றுதான் நினைக்கிறேன். சரியான விவரம் தெரிந்தவர்கள் இங்கே பதியவும்.

    பதிலளிநீக்கு
  27. எம் ஜி ஆர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டது, மவுன்ட் ரோடு அண்ணா சிலை அருகில் பந்தல் அமைத்துத் தான். எனவே அப்போது எடுத்த படமாகவும் இருக்கலாம். அதிக கூட்டம் கூடிய சில சந்தர்ப்பங்களில் மற்றும் சில அண்ணா / எம் ஜி ஆர் இறுதி ஊர்வலங்கள்.

    பதிலளிநீக்கு
  28. நல்ல பகிர்வு நண்பரே .
    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  29. எல்லா இடத்திலும் வந்து உட்கார்ந்து கமெண்ட் அடித்துவிட்டு, ' மீண்டும் வருவான் பனித்துளி' என்ற வசனம் !! அய்யா நீங்க பனித்துளியா அல்லது பட்டாம்பூச்சியா?

    பதிலளிநீக்கு
  30. ஹாஹாஹா! உங்களைப் பற்றிப் பாடினவங்களை எல்லாம் நினைச்சுப் பார்க்கவே புல்லரிக்குது! எம்ஜிஆர், ஜிவாஜி? ஆஹா, ஆஹா!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!