திங்கள், 10 செப்டம்பர், 2018

"திங்க"க்கிழமை 180910: அரிசிப்பூரி - காமாட்சி அம்மா ரெஸிப்பி


அரிசிப்பூரி.  


வெகு சுலபமான அரிசிப்பூரி. கீதாரெங்கனின் அரிசி வடைக்கான பின்னூட்டத்தில் நான்  அரிசிப்பூரி தெரியுமா உங்களுக்கு என்று கேட்டிருந்தேன். அவர், மஹாராஷ்டிரியன் டிஷ்தானே... தெரியும் என்றார். 

ஒரு வேளை இது இவ்விட டிஷ்ஷாகக் கூட இருக்கலாமோ என்னவோ?

எனக்கு மும்பையில் யாரும் தெரிந்த சினேகிதர்கள் கிடையாது. உறவுகாரர்கள் வீட்டிற்கு  எப்பொழுதாவது போய் வருவதுடன் ஸரி.  இருக்கும் இடமோ சிறிய வயதுக்காரர்கள்.

அதனால் எதுவும் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இது எங்கள் ஊரில் ஸுமங்கலிப் பிரார்த்தனையின் போது செய்வார்கள்.  அவ்வளவு சமையல்களுடன் இந்தப் பூரியும் ருசிக்கும். கூட்டு,கறி,பச்சடி என்ற சட்ட சோபிதமான சமையலுடன் இதையும் கட்டாயம் செய்வார்கள். 

இப்போதும் வழக்கம் இருக்கிறது. காமாட்சிம்மா எதையாவது எழுதட்டும் என்று எனக்கு சற்று ஊக்கம் கொடுக்க ஸ்ரீராம் இதை முடிந்தால் எழுதுங்களேன் என்றார்.

சிறிய அளவு ஸாமான்களுடன் இதைச் செய்ய வந்துள்ளேன்.

அந்த நாட்களில் பொம்மைக் கல்யாணம் என்று பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு தின்பண்டங்கள் சிறிய அளவில் செய்து கொடுப்பார்கள். 

அந்த ஞாபகம் வந்தது. இவ்வளவு சிறிய அளவு ஸாமான்களில் மாதிரிக்குதானே?  இந்த மாவை, வரட்டு அரிசிமாவு என்று சொல்வார்கள். கல் ஏந்திரத்தில் அரிசியை அரைத்துச் செய்வார்கள். அரிசியின் இனிப்பு மாராமல் நன்றாகஇருக்கும்..

வேண்டிய ஸாமான்கள். ----

அரிசி மாவு ஒரு சிறிய டம்ளர்.
டம்ளர் படத்தில் எங்காவது இருக்கும். இப்போ மெஷினில் அரைத்த மாவுதான். ஆனால் நல்ல
அரிசியாக இருக்கட்டும்.
மெல்லியதாகத் துருவின தேங்காய்த் துருவல்---இரண்டு அல்லது மூன்று டேபில்ஸ்பூன்
அரைடீஸ்பூன் –சீரகம்
நெய்---ஒரு டீஸ்பூன்
ருசிக்கு –உப்பு
பூரியைப் பொரிக்க எண்ணெய்---வேண்டிய அளவு.

செய்முறை----

அடிகனமான பாத்திரத்தில் மாவை அளந்த டம்ளரினால் ஒண்ணேகால்ப்பங்கு
தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேங்காயையும்,ருசிக்கு சிறிதளவு உப்பும் சேர்க்கவும். மற்ற கூட்டு கறிவகைகளுடன் சாப்பிடுவதால் உப்பு குறைத்துப் போட்டு தேங்காய் மணத்துடன் இருக்கும். மார்க்கெட்டிங் ஸரியாகப் பண்ணுகிறேன் இல்லையா?

கொதிக்கும் தண்ணீரில் மாவைத் தூவிக் கிளறவும். தீயை மட்டுப் படுத்தவும். மாவு சேர்ந்து வேகும். தீயை அணைத்து விட்டு மூடி வைக்கவும். பாத்திரத்தின் சூட்டிலேயே மாவு பக்குவமாக வெந்து விடும்.

சற்று ஆறியவுடன் கிளறின மாவைச் சேர்த்துப் பிசைந்து,சீரகமும்,நெய்யும் சேர்த்து, வேறுபாத்திரத்தில் வைத்து மூடவும். இதற்கான படம் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

மாவைத்திரட்டி ஒரே அளவிலான உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். சுமார் எட்டு அல்லது பத்து உருண்டைகள் வரலாம்.

கெட்டியான ஒரு பாலிதீன் ஷீட்டின் மேல், எண்ணெயைக் கையில் தொட்டுக்கொண்டு உருண்டைகளைப், பூரிகளாகக் கையினால் தட்டி, ,ஷேப் கொடுக்கவும்.

பூரி பொரித்தெடுப்பதுபோல, எண்ணெயைக் காயவைத்து,பூரியை லேசாக அழுத்தம் கொடுத்துப் பொரித்தெடுக்கவும்.

உப்பிக்கொண்டு கரகரப்பாகவும்,உள்ளே மிருதுவாகவும் பூரி வரும். இது மாதிரிக்காகச் செய்ததால்,கூட ஒரு வெங்காயச்சட்னி செய்தேன். கருப்பு டால், வேர்க்கடலை சட்னியும் கூட வைத்து ருசிபார்க்கக் கொடுத்துள்ளேன். ருசி பாருங்கள். சுடச்சுடதான் ருசி. ஆறினால் ருசியாக இருக்காது. இதே மாவை, உடன் காரம் சேர்த்து அரிசி ரொட்டி மாதிரியும் வாணலியில் மெல்லியதாகத் தட்டி எடுக்கலாம். வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்தும் அக்கி
ரொட்டி செய்யலாம்.


வெங்காய சட்னிக்கு ஒரு வெங்காயம்,தக்காளிபாதி, புளி சிறிது, இஞ்சி ,மிளகாய் யாவையையும் எண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைக்கச் சொன்னால், உதவி, பூண்டும் போட்டிருக்கான் . 

அதையும் விடாது போட்டிருக்கேன்.  இந்தத் துவையல் ஸம்பந்தம்
இல்லாமல் வருகிறது.அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். இது சட்னிக்கான வதக்கல்.64 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் (தில்லில உங்களைப் பார்த்துட்டு வணக்கம் வைச்சுட்டு இங்கயும்) துரை அண்ணா, அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், நட்புகள் அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா.. ஹா... ஹா... ஹா... டெல்லியில் - அதுவும் பழைய டெல்லியில் - பார்த்து விட்டு உடனடியா சென்னையில்... அற்புதம்!

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம் அதை ஏன் கேக்கறீங்க....அந்தக் கூட்ட நெரிசல்ல வெளிய வந்து ஃப்ளைட் பிடிக்கறதுக்குள்ள ஸ்பாஆஆஆஆஆஆ...மூச்சு வாங்கிருச்சு...ஹா ஹா

   ஸ்ரீராம் நீங்க சொல்லிருந்தது போல கமென்ட் தேடி கரெக்டா அதுக்கு பதில் கொடுக்கறது கொஞ்சம் கஷ்டமா இருக்குதான்...

   சரி இனி அப்பாலதான்....மதியம் தான்...

   கீதா

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாங்க மெதுவா அக்கா.. சாப்பிடலாம் அப்புறம்!

   நீக்கு
  2. இஃக்கும் இஃக்கும் (நன்றி கீதாக்கா உங்க இஃகி யிலிருந்து இப்படி ஹிஹிஹிஹி) இருக்கும்னு நினைக்கறீங்க??!!! காமாட்சிமா வேற செம மார்க்கெட்டிங்க்...சரி எடுத்து வைச்சுடறோம் வாங்க...

   கீதா

   நீக்கு
 3. காலை வணக்கம். ஆஹா காமாட்சி அம்மாவின் ரெசிப்பியா.... இதோ படிக்கிறேன். இன்னிக்கு காப்பி சீக்கிரமே ஆத்திட்டாங்க போல கீதாம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... வெங்கட்.. அக்கா காஃபி ஆத்தாமலே வந்துட்டாங்களாம்.. அதுதான் அப்புறம் வரேன்னு போயிருக்காங்க!

   நீக்கு
  2. ஹிஹிஹிஹி, காஃபி இன்னிக்கு லேட்டாத்தான் ஆத்தினேன். சோதனைக்கு வந்தாங்க! அதான் போனேன். :) அப்புறமாக் காஃபியும் ஆத்தியாச்சு! கஞ்சி முன்னாடியே போட்டாச்சு!

   நீக்கு
  3. // சோதனைக்கு வந்தாங்க! //

   ரிசல்ட் என்ன?

   நீக்கு
  4. இன்னும் இருக்கே அடுத்த சோதனை! :) இம்முறை வெல்லச்சீடை மகிமை தெரியலாம். :) அதோடு வியாழனன்று கல்யாணச் சாப்பாடு, ஐஸ்க்ரீம்! :) இஃகி, இஃகி! பண்ணினது என்னமோ மொத்தமா 20,25 வெல்லச் சீடைகள், விநியோகம் போக மிச்சம் தான்! ஆனாலும் அது புத்தியைக் காட்டும். :)

   நீக்கு
 4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் உ.வ.சங்கத்தினர் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உ.வ.சங்கத்தினர்//

   சட்டென யூகிக்க முடியவில்லை? என்னவாக இருக்கும்? உற்சாக வட்டம்? உள்வட்டம்?

   நீக்கு
  2. ஸ்ரீராம் துரை அண்ணா மு விட்டுட்டார்னு நினைக்கிறேன்....முதலில் உள்ளே வரும் சங்கத்தினர்!!??அப்படித்தானே அண்ணா? ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. // உ.வ.சங்கத்தினர்...//

   உறக்கம் வராத சங்கத்தினர்!...

   ஆ... ஹாஹா..

   நீக்கு
  4. துரை செல்வராஜு சார்... அப்ப நாங்கள்லாம் 9 மணி வரை தூங்கறதுனால இங்க காலைல வரதுல்லைனு சொல்றீங்களா? 3:50க்கு இப்போல்லாம் எழுந்தால் யோகா கிளாஸ், நடை, பிறகு குளியல், சுதர்ஷன் கிரியா என்று 9 வரை ரொம்ப பிசி... அப்புறம்தான் சாப்பாடு...ஹா..ஹா..ஹா..

   நீக்கு
 5. ஆ! நெட் ஸ்லோவா இ ருந்துச்சு தில்லில ....இங்க பதிவு வெளியானதும் போட்டாலும் அதுக்குள்ள கீதாக்கா துரை அண்ணா வந்துட்டாங்க அரிசி பூரி சாப்பிட!!! சரி சரி எல்லாரும் வட்டமா உக்காருங்க சாப்பிடலாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சரி சரி எல்லாரும் வட்டமா உக்காருங்க சாப்பிடலாம்...//

   ஓகே... ஏன் சதுரமா உட்காரக்கூடாதா? ஹிஹிஹி....

   நீக்கு
  2. உக்காரலாமே!!! ஹா ஹா ஹா ஹா ஹா....அது என்னவோ தெரியலை ஸ்ரீராம்...பாட்டி எங்களை எல்லாம் வட்டமா தன்னைச் சுத்தி உக்கார வைச்சு கைல போடுவாங்களா....அந்த நினைவு..

   கீதா

   நீக்கு
 6. அரிசிப் பூரி.... ஆஹா பார்க்க நல்லாவே இருக்கும்மா....

  முடிந்தால் செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆகா....

  அம்மாவின் கைவண்ணமும்
  அம்மாவின் சுவை வண்ணமும்
  அருமை... அருமை...

  எளிமையும் இனிமையுமாய் அரிசிப் பூரி...

  பதிலளிநீக்கு
 8. மார்க்கெட்டிங் ஸரியாகப் பண்ணுகிறேன் இல்லையா?//

  மிக மிக அழகாக மார்க்கெட்டிங்க் செய்யறீங்க காமாட்சீ அம்மா...ஆனா உங்க ரெசிப்பிக்கு எல்லாம் எதற்கு மார்க்கெட்டிங்க்!! அப்படியே அள்ளிடுமே!! அம்மா...!!

  என் பாட்டியின் (அப்பா) நினைவு வந்தது. அவர் செய்வார் அரிசிப் பூரி அவரிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். இதையே எண்ணெய் வேண்டாதவர்கள் ரொட்டியாகவும் செய்யலாம்..கேரளத்தில் பத்ரி, கர்நாடகாவில் அக்கி ரொட்டி, அப்புறம் பையாபு ரொட்டி உbbu ரொட்டி என்று சொல்லப்படும் இது...ரொட்டி என்றால் ஆறினால் சாப்பிடுவது கடினம். கர்நாடகா கூர்க் அக்கி ரொட்டி நன்றாக இருக்கும்...கொஞ்சம் ஸாஃப்டாகவும் வரும்.

  காமாட்சி அம்மா மிக்க நன்றி நல்லதொரு பூரி சைட் டிஷ்...என் பாட்டியின் நினைவுகள் என்று...செம கலக்கல். சுவை அபாரம் அம்மா..சுவைத்தாச்சு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... நான் பஹ்ரைன்ல கேரளக் கடைகளில் பத்ரி பாக்கெட்வாங்கினேன். எப்படி சாப்பிடுவது என்று தெரியலை. சப்பாத்தி மாதிரி இருக்கும்னுதான் நினைத்தேன்.

   நீக்கு
 9. பார்க்கவே அழகான அரிசி பூரி. ஒரு நாள் செய்து சாப்பிட்டுவிட்டுச் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
 10. மார்க்கெட்டிங் அபாரம் அம்மா, தொடர்ந்து உங்களிடம் இருந்து இன்னும் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் காலை வணக்கம். என் மாமியார் இதை நிமிஷமாகச் செய்துவிடுவார். சில நாள் தேங்காய் உண்டு. சில நாள் கிடையாது. அவர் மும்பை வாசம் செய்ததால் தெரியும் என்று நினைக்கிறேன்.
   அன்பு காமாட்சிமா, மனறுவிசான சமையல் உங்களது. மிக அருமை. இதில் காய்கரறிகள் சேர்த்து,
   கையால் தட்டி,தோசைக்கல்லில் போட்டு எடுப்பார்கள். மிக மிக நன்றி மா.

   நீக்கு
 11. அரிசிப் பூரி நல்லாவே இருக்கு...! நன்றி காமாட்சி அம்மா...

  பதிலளிநீக்கு
 12. அரிசிப் பூரி பார்க்கவே ரொம்ப அழகா வந்திருக்கு. கூடவே தொட்டுக்கொள்ள சட்டினி வகைகள்.... அருமை.. எப்படித்தான் செய்து எழுதி அனுப்பினீர்களோ. அதுக்கே பாராட்டுகள்.

  அடுத்து ஒரு இனிப்பு வகையும் செய்து அனுப்பினுங்க.

  பதிலளிநீக்கு
 13. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரிசி பூரி இதுவரை செய்ததில்லை. கூடிய விரைவில் செய்ய வேண்டும் என ஆவல் வருகிறது. நன்றி அம்மா.

   கருத்துரை பாக்ஸ் வரவில்லை எனக்கு. ஆகையால் கில்லர்ஜி சகோ கீழே பதிவிட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 14. படங்களுடன் அரிசி பூரி செய்முறைக்கு நன்றி.
  அரிசி ரொட்டி செய்து இருக்கிறேன். கன்னட அக்கா சொல்லி கொடுத்தது.
  பூரி செய்தது இல்லை. செய்து பார்க்கிறேன் காமாட்சி அம்மா.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரி

  இன்று தங்களின் சமையலாக அரிசி பூரி செய்முறைகளுடன் படங்களுமாக மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. அதற்கேற்ற சட்னியும் வெகு ருசி. அருமையாக செய்து காண்பித்து உள்ளீர்கள். இந்த மாதிரி செய்து சாப்பிட்டதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி. நானும் இதுபோல் ஒருநாள் செய்து பார்க்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 16. இதுவரை ருசி பார்க்காதது பூரி எண்ணை அதிகம்குடிக்குமோ

  பதிலளிநீக்கு
 17. அரிசிப்பூரிக்கு ஆதரவு கொடுத்த,கொடுக்க இருக்கிற யாவருக்கும், ஆசியும் அன்பும். அரிசிப்பூரி தெரியுமா என்று கேள்வி கேட்டுவிட்டு, விடை எழுதாமலிருந்தால் தப்பு. ஸ்ரீராம் அவர்களுக்கு படித்துவிட்டு தகுதி இருந்தால் மட்டுமே போடச் சொல்லியும் எழுதினேன். படங்களெல்லாம் எனக்கு மனது திருப்தி இல்லை. காமா,சோமாதான். அரிசி,தேங்காய்,எல்லாம் வீட்டிலேயே இருக்கும் ஸாமான்களாதலாலும்,பிறகு பசி எடுக்கக் கூடாது,இதுவும் சாப்பிட்டால் வயிறு திம் என்று பசியெடுக்காதிருக்கும் என்ற நோக்கத்தில் இதைச் செய்தார்களோ என்னவோ? எண்ணெய் குடிக்காது. அப்புறம் சாப்பிடறேன் என்ற கேட்டகிரிக்கு லாயக்கில்லை. கர்நாடகா அக்கிரொட்டி நானும் செய்வதுண்டு. மாவை வேக வைப்பதில்லை. ஒரே ஒரு சட்னி மட்டும் அரைத்து விட்டு மற்ற உபயம் வீட்டு சமையல். என்னால் ஒவ்வொருவருக்கும் ஸரியாகப் பதில் எழுத முடியவில்லை. மனது உணர்ச்சி வசப்பட்டு விடுகிறது. அதனால் என் பதிலாக ஒவ்வொருவரும் இதையே ஏற்றுக் கொள்ள வேண்டும். மிக்க நன்றி ஸ்ரீராமிற்கும்,எங்கள் ப்ளாக் நட்பு வட்டத்திற்கும்.அன்பும்,ஆசிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி அம்மா... எனக்கு கமெர்ஷியலாக சேவை (இடியாப்பம்) செய்பவர் சொல்லிக்கொடுத்தது. தண்ணீரை நன்றாக கொதிக்கவைக்கணும். தேவையான உப்பு சேர்த்துக்கணும். அதுல அரிசி மாவையும் போட்டு கொதிக்கவைக்கணும் (தேங்காய் போன்றவை கிடையாது). ரொம்ப கொதித்து வெந்ததும், காற்றுப்புகாமல் மூடியைப் போட்டு அடுப்பை அணைத்து வைக்கணும். இந்த மாவை, சேவை பிழியும் மிஷினில் போட்டால் (அல்லது கையால் பிழிந்தால்) அருமையாக சேவை வரும் என்று செய்துகாண்பித்தார். (நாம பொதுவா இலுப்புச் சட்டில மாவைக் கிளறி, பிறகு உருண்டை பிடித்து, இட்லித் தட்டில் வேகவைத்து அப்புறம் பிழிவோம்).

   உங்கள் அரிசிப்பூரியைப் படித்தபோது இது ஞாபகத்தில் வந்தது.

   நீக்கு
 18. ஒரு வித்தியாசமான காரப்பூரி, பார்க்கவே தெரியுது நன்றாக இருக்கும் என.. மிக சுவையான குறிப்பு காமாட்சி அம்மா.

  பதிலளிநீக்கு
 19. நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா உங்கள் கணக்கு தப்பு:).. நான் சுயநலம் என நேற்று சொன்னது, என்பக்கம் போஸ்ட் போடப்போவது அல்ல:).. அப்படி எனில் தாமதமாக்கிடுவேன் எல்லோ:)) இது வேஏஏஏஏஏஏஏற:)) விடிஞ்சால் தெரிஞ்சிடப்போகுது:)).

  அதுசரி கணக்கில வீக்காக இருக்கிறீங்க:)).. நான் செய்தது 7 மாவிளக்காக்கும்:)) எட்டு அல்ல கர்ர்ர்ர்:)).. இரட்டை எண்ணில் சுவாமிக்குப் படைக்கக்கூடாதாம் அம்மம்மா சொல்லியிருக்கிறா:) ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் :) நீங்க ஒரு மாவீரன் இதுக்கெல்லாம் பயப்படலாமா :)

   நீக்கு
  2. என்னது நெல்லைத்தமிழன் மா.... வீரரோ?:) விடுங்கோ என்னை விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்:)..

   நீக்கு
  3. /////நெல்லைத் தமிழன்10 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:01
   ஐயோ... நீங்கள் எழுதிய கதையா////

   ஸ்ஸ்ஸ்ஸ் எமன் அங்கிளின் வைவ் ஐ எல்லாம் கூப்பிடப்புடாதாம்ம்ம்;)

   நீக்கு
  4. அதிராவுக்கு வணக்கம்

   நலமா? தங்கள் வரவை நேற்றே பார்த்தேன். நேற்றிலிருந்து நீங்கள் அனைவரும் ஒரே கலக்கல்தான். நானும் உள் நுழைந்து கலக்க நினைத்தேன். ஆனால் என இயலாமையில் இயலவில்லை. விடிந்ததும் தங்கள் தத்துவ எழுத்துக்களில் மிளிரும் கதையை எதிர்பார்க்கிறேன். ஆவலுடன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

   நீக்கு
 20. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

  பதிலளிநீக்கு
 21. வாவ் !! நன்றி காமாட்சி அம்மா .இது வரைக்கும் அரிசியில் பாத்திரி செய்ய ஆரம்பிச்சி இடியாப்பமா முடிச்சி வைப்பேன் :)
  இந்த பூரி வித்தியாசமா இருக்கு .எனக்கும் சூட்டபிள் ..நிச்சயம் செய்து பார்க்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியே எனக்கும் ரெண்டு பூரி அனுப்பி வைக்கவும்:)

   நீக்கு
  2. உங்களுக்கில்லாததா மியாவ் :) அப்டியே எண்ணெய் சட்டிலருந்து எடுத்து குடுப்பேன் :)

   நீக்கு

  3. haahaaa :) படிக்கிறவங்க எல்லாருக்கும் எவ்ளோ பாசம் அஞ்சுவுக்கு அதிரா மேலேன்னுதான் நினைச்சிப்பாங்க :) ஆனா
   இப்போ situation song கேளுங்க எல்லாரும் :)


   https://www.youtube.com/watch?v=W2jKY-htNwk

   நீக்கு
 22. பதிவை படித்ததுமே இதை சாப்பிட்டு பார்க்கும் ஆசை வந்துவிட்டது. இல்லதரசியிடம் இப்போதே ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்.

  -மஹேஷ்

  பதிலளிநீக்கு
 23. இதை நானும் அவ்வப்போது செய்வதுண்டு அம்மா! என் மகனும் பேரனும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டுக்கொள்ள நிச்சயம் சிவப்பான தக்காளி சட்னி தான்!!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!