எங்கள் வீட்டில் வளர்ந்த சில செல்லங்கள். என்னுடன் ஒட்டியே இருந்த காரணத்தால் மோதியின் படம் இங்கு போடமுடியவில்லை. மோதி போல எங்களுடன் - என்னுடன் பழகிய செல்லம் வேறில்லை. அவனைப் பிரிந்தபோதும் அவன் தோழன் சாத்தியைப் பிரிந்தபோதும் ரொம்ப மனம் கஷ்டப்பட்டுப் போனேன். அப்புறம் வீட்டில் செல்லங்கள் வளர்ப்பதைக் குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு செல்லம் வந்து விடும். கீழே போஸ் கொடுப்பவள் பிரௌனி. என்னுடைய 'நாய் மனம்' கதை உருவாகக் காரணமானவள்.
சென்ற வாரம் அதிரா தளத்தில் வெளியாகியிருந்த ஒரு பதிவில் இந்த செல்லம் போன்றே ஒரு படம் வெளியாகி இருந்தது. இந்தச் செல்லம் எங்கள் வீட்டில் குறைந்த நாட்களே இருந்தான். அப்புறம் வீட்டுக்கு வந்த ஒரு சுட்டி ஆசைப்பட்டுத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்!
சிறியவளாய் இருந்தபோது பிரௌனி இந்தக் கதவின் இடுக்கு வழியாக உள்ளே வந்து விடுவாள். வளர்ந்த பிறகு அந்தச் சாதனை அவளுக்குக் கைகூடவில்லை! அதனால் ஏக்கப்பார்வை!
இவன் ஒரு முரடன். மோதி எங்கள் வீட்டில் வளர்ந்தபோது என்னால் கண்டெடுக்கப்பட்டு வீட்டுக்குள் வந்தவன். இவனை வீட்டுக்குள் சேர்த்த கையோடு நான் மதுரையிலிருந்து சென்னைக்கு பணி மாற்றலாகி வந்துவிட்டேன். மோதி என்னும் பெயருக்கு ரைமிங்காக சாத்தி என்று என் அம்மாவால் பெயர் சூட்டப்பட்டான். ரொம்ப முரடன். கேரட் விரும்பிச் சாப்பிடுவான். அவனை இயற்கை அழைப்புக்கு வெளியே அழைத்துச் செல்லக் கூட அவன் அனுமதித்தால்தான் உண்டு. ஆனால் அதே சமயம் வீட்டுக்குள் கக்கா சூச்சூ எல்லாம் போகவும் மாட்டான். நல்ல பையன். பின்னர் ஒருநாள் என் மடியிலேயே கடைசி மூச்சை விட்டான். துரை செல்வராஜூ ஸாரிடம் இவனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். புகைப்படம் எடுத்தால் இவனுக்குப் பிடிக்காது. முறைப்பைப் பாருங்கள்.
எங்கள் பிரௌனி சிறுவயதில் மிக அழகாக இருப்பாளாக்கும்!
ஒரு ஆர்வமான கணத்தில் சாத்தி...
கீதா ரெங்கன் தன்னுடைய செல்லத்தை 'கண்ணழகி' என்று அழைப்பார். எனக்கு பிரௌனி நினைவுதான் வரும். அவள் கண்களை பாருங்கள்!
செய்தி நிறுவனங்கள் எதை வைத்து செய்தி போடுகின்றனர்? தினமணியும், தமிழ் ஹிந்துவும் வாங்குகிறேன். ஒரே நாளில் இரண்டு செய்தித்தாள்களிலும் வெளியான ஒரே விஷயம் பற்றிய செய்தி..
கிருஷ்ணஜெயந்திக்காக இப்போது இணைத்திருக்கிறேன்... சிறப்பு ஞாயிறு வீடியோ...!!
வாழ்க...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... இனிய காலை வணக்கம்.
நீக்குசெல்லங்களின் சிறப்பிதழா!...
பதிலளிநீக்குகிட்டத்தட்ட! ஒருவகையில் நீங்கள் அதற்கு ஒரு காரணம்!
நீக்குநானா!...
நீக்குஆச்சர்யம்.. எப்படி!..
புரிந்திருக்குமே....
நீக்குஆன வடிவத்தில் பலவிதம் - ஆயினும்
பதிலளிநீக்குஅன்பு காட்டுவதில் அவை ஒரே விதம்..
அடடே.... சாம்பலீஷை மட்டும் ஏற்கெனவே போட்டாச்சு என்று போடவில்லை! மேலும் அவர் வேறு வீட்டு செல்லம்!!!
நீக்குஒரே செய்தியை பல ரூபங்களில் தருவதால் அவற்றை இணையத்தில் கூட வாசிப்பதில்லை...
பதிலளிநீக்குஆமாம்.. அவரவர் விருப்பத்துக்குத் தருகிறார்கள்!
நீக்குசரி... அப்புறம் வருகிறேன்..
பதிலளிநீக்குஅப்புறம் வந்து புரிந்ததா என்று சொல்லுங்கள்!!!
நீக்குபுரிந்தது...
நீக்குஅப்பொழுதே புரிந்து விட்டது...
இன்னுமா தினசரி வாங்கிட்டு இருக்கீங்க? எதுவுமே நம்பகமான செய்திகளைத் தருவதில்லை. எங்க வீட்டிலும் ஒரு ப்ரௌனி உண்டு. ஆனால் ஆண்! அவனும் நாங்க அம்பத்தூர் வீடு கட்டும்போது க்யூரிங் செய்யப் போனால் கூடவே வருவான். இத்தனைக்கும் முன்னங்கால் ஒன்றில் போலியோ அட்டாக் ஆகி விட்டது. நாங்க பத்து நாட்கள் இல்லாதப்போ வீட்டில் இருந்தவங்க எதையோ கொடுத்ததில் அப்படி ஆயிடுச்சுனு மருத்துவர் சொன்னார். :( ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பான். நாங்க கிணற்றில் தண்ணீர் இறைச்சு வாளிகளில் ரொப்பும்போது பார்த்துக் கொண்டே இருப்பான். பின்னர் குழந்தைகளுடன் ஓடி எங்கெல்லாம் தண்ணீர் ஊற்றணுமோ அங்கெல்லாம் முன்னாடியே போய் நிற்பான். அந்த அம்பத்தூர் வீடு கிரகப்ரவேசம் ஆகி ஒரு மாதத்தில் திடீர்னு மர்ம மரணம். அதுக்கப்புறமா எதுவுமே வளர்க்கக் கூடாதுனு தெருவில் உள்ளவற்றை எல்லாம் மறைமுகமாக வளர்த்தோம். பின்னர் கிட்டத்தட்டப் பத்து பதினைந்து வருஷங்களுக்குப் பின்னர் மோதி! அதுக்கப்புறமா ஒண்ணு வந்தது. ஆனால் அது என் கிட்டே காட்டின பாசத்தைப் பார்த்துட்டு அவர் அதையும் கூட்டிப் போகச் சொல்லிட்டார். ஏனெனில் மோதியின் பிரிவே எங்களை ரொம்பத் தாக்கி விட்டது. குறிப்பாய் என்னை! அதன் பின்னர் அதுவா வரதுங்கதான். நாங்களா எதையும் வளர்க்கலை.
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா.. தினசரி வாங்காமல் இருப்பது ஏதோ சம்பிரதாயத்தை மீறுவது போல இருப்பதால் வாங்குகிறேன். அதுமட்டுமல்லாமல் எங்கள் பேப்பர்காரர் நான் பேப்பரைக் குறைத்தாலும், புத்தகங்களைக் குறைத்தாலும் "வேண்டாம் ஸார்... வாங்குங்க ஸார்..." என்று அன்புக்கெஞ்சல் விடுக்கிறார்!
நீக்குஉங்கள் செல்லங்கள் பற்றியும் நீங்கள் சொல்லிக் கேட்டிரு... படித்திருக்கிறேன்!
நீக்குமருத்துவரோட வண்டிச் சத்தத்தை வைச்சு அவர் வரதை மோதி கண்டு பிடிச்சுடுவான். ஓடிப் போய் ஒளிஞ்சுப்பான். பிடிக்க முடியாது. ஆகவே அவர் தொலைபேசியில் தகவல் சொன்னதுமே கட்டிப் போட்டு வைப்போம். ஒரே அமர்க்களப்படுத்துவான். ஊசியெல்லாம் போடறதுக்கும் மாத்திரை, மருந்துகள் கொடுப்பதற்கும் படுத்தல்! எங்க பொண்ணு கல்யாணம் ஆகிப் போகும்வரை அவள் தான் இதை எல்லாம் செய்வாள்.
பதிலளிநீக்குசுகுமார் வண்டிச் சத்தமும் சரி, என் வருகையும் சரி... எங்கள் மோதியும் கண்டுபிடித்து விடும். காது கேட்காத என் அம்மாவுக்கு மோதியின் துள்ளலும், பரபரப்பும் யா வருகிறார்கள் என்று செய்தி சொல்லிவிடும்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கோமதி அக்கா.
நீக்கு.
நீக்குநீங்கள் பகிர்ந்த பாடலை இப்போது தான் பார்த்தேன்.
அந்த பாட்டு இப்போது கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
வீட்டில் இந்த வருடம் முறுக்கு, சீடை எல்லாம் இல்லாமல் தயிர், பால், வெண்ணெய், அவல் வைத்து வணங்கி விட்டு தளத்திற்கு வந்தால் அதே பாடல். காலை ஒடு விழாவிற்கு போய் விட்டு மாலை நாலுமணிக்கு தான் வந்தோம் வீட்டுக்கு.
நானும் நேற்று முகநூலில் செல்லத்தை படம் எடுத்து போட்டேன். மழை நீரில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்த செல்லம்.
பதிலளிநீக்குவளர்ப்பு செல்லங்களை பிரிவது மிக கொடுமை.
பக்கத்து வீட்டில் வளர்த்த செல்லத்தை பிரிந்ததே எனக்கு வெகு நாட்கள் வருத்திக் கொண்டு இருந்தது.
வெள்ளிக் கிழமை குலவிளக்கு பாடலை சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பகிர்ந்த காரணமா?
என்னிடமும் நிறைய செல்லங்கள் படம் இருக்கு. (சாலையோரம் எடுத்த படங்கள்.)
அன்பு காட்டுவதில் அதற்கு இணை யாரும் இல்லை என்று இருக்கும் செல்லங்கள் இவை.
செய்திகள் எவ்வளவு வித்தியாசம்!
அன்பு காட்டும் செல்லங்கள் நம்முடன் இருக்கும் வரை மகிழ்ச்சிதான்.
நீக்குஎங்கள் மீனா ஒன்பது வயது வரை இருந்து சென்று விட்டாள்.
மனம் நொந்து போனொம்.
இங்கிருக்கும் செல்லங்கள் அத்தனையும் அழகு. கண் நிறைந்து போனது.
எப்பொழுதும் நன்றாக இருக்கட்டும்.
நீங்கள் சொல்லும் செல்லம் குருவிதானே? பார்த்தேன். இல்லாவிட்டால் நாலுகால் செல்லம் என்றால் மறுபடி முகநூலில் தேடவேண்டும்...
நீக்குஆமாம் கோமதி அக்கா.. வளர்ப்பு செல்லங்களைப் பிரிவது அவ்வளவு சுலபமில்லை. மனதை வருத்தும் செயல் என்றாலும் மீண்டும் வளர்க்காத தோன்றுவது நம் பலவீனம்!
நீக்குவாங்க வல்லிம்மா... உங்கள் செல்லம் பற்றி நான் படித்த நினைவில்லை. கீதாக்கா செல்லங்கள் பற்றி படித்திருக்கிறேன்.
நீக்குகிருஷ்ண ஜெயந்திக்காக எங்கள் சார்பில் ஒரு சிறப்பு ஞாயிறு வீடியோ இப்போது இணைத்துள்ளேன்!!!
பதிலளிநீக்குமுகநூலில் செல்லம் படம் போட்டு இருக்கிறேன் நேற்று.
நீக்குபைரவரின் வாகனம் தான். குருவி இல்லை.
எங்கள் வீட்டிலும் செல்லப் பிராணி ஜுலி உண்டு
பதிலளிநீக்குசெல்லப்பிராணிகள் நம் மனஇறுக்கத்தைக் குறைக்கின்றன. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபைரவர் படங்கள் ஸூப்பர்
நன்றி கில்லர்ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசெல்லங்கள் பதிவா? எல்லா செல்லங்கள் படங்களும் மிக அழகாக இருக்கின்றன. உங்கள் செல்லத்தின் பெயரும் மோதியா? தங்கள் பிரௌனியின் கண் அழகாகத்தான் உள்ளது. அவளும் ஒரு கண்ணழகிதான். வளர்த்து நம்முடன் பழகிய பின் நம்மிடம் அன்பு காட்டும் எந்த உயிரையும் பிரிவதென்றால் மிகவும் கஸ்டந்தான். ஆனால் எதுவுமே தவிர்க்க முடியாதது.
படிக்கும் செய்திகள் முரண்பாடாக இருக்கின்றதே... பிரச்சனை நல்லபடியாக சுமூகமாக வேண்டும். எப்படியோ காய்கறிகள் விலையேற்றத்திற்கு இது ஒரு வழி.
அடேடே..கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவு இணைப்பா? நான் பதிவை பார்த்து கருத்து தட்டச்சு செய்யும் போது அது என் மேல் கோபித்துக் கொண்டு ஓடி விட்டது. (வழக்கம் போல் வாடிக்கையாகியிருக்கும் கைப்பேசியில் இந்த மாதிரி அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.) அதற்குள் சில வேலைகள் அழைக்கவே வந்து பார்க்கும் போது. எம். எஸ் விஸ்வநாதனின் இனிக்கும் குரலில் கிருஷ்ணாவதாரம். படங்கள், பாட்டு அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க சகோதரி கமலா... பிரௌனி கண்ணழகிதான். மோதி புத்திசாலியாய் இருந்தான். கிருஷ்ண ஜெயந்தி சிறப்பிணைப்புப்பாடலை ரசித்தமைக்கும் நன்றி.
நீக்குசெல்லங்களோடு எனக்கு ஏதும் உறவு இல்லை ...ஆனால் நீங்கள், கீதா க்கா , அதிரா, அஞ்சு பேசுவதை கேட்டு கேட்டு இப்பொழுது எனது பார்வையில் வித்தியாசம் ...
பதிலளிநீக்குமாமியார் வீட்டில் ஒரு பூனை வரும் ..அம்மா அம்மா ன்னு தான் சொல்ற மாதரி இருக்கும் கரெக்டா பால் குடிச்சுட்டு ஓடிடுவார்..அத்தை சொல்லுவாங்க இதான் என் புள்ளை இப்போ ன்னு
இந்த வருடத்தில் நிறைய செல்லங்கள் படம் எடுத்துவிட்டேன் விரைவில் பதிவிடுகிறேன்..
வாங்க சகோதரி அனுபிரேம்... செல்லங்கள் படம் எடுத்து வைச்சிருக்கீங்களா... பதியுங்கள் ரசிப்போம்.
நீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி. உங்களுக்கும் ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்னிக்கு செல்லங்கள் ஸ்பெஷல் போல. அழகா இருக்கு படங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி - தலைநகரில் நாளை தான். அலுவலகங்களுக்கு விடுமுறையும் கூட...
வாங்க வெங்கட்... தமிழகத்தில் விடுப்பு வாய்ப்பு பறிபோனது. இன்றே நிறைவுற்றது ஸ்ரீஜெயந்தி.
நீக்குசெல்லங்களின் கண்கள் எப்போதுமே அழகு தாம்! அவற்றில் பிரதிபலிப்பது அன்பு மட்டும் தானே!!
பதிலளிநீக்குசெல்லங்களின் கண்கள் எப்போதுமே அழகு தாம்! அவற்றில் பிரதிபலிப்பது அன்பு மட்டும் தானே!!
பதிலளிநீக்குஅன்பின் பிரதிபலிப்பில் அழகு... ஆஹா... உண்மைதான் மிகிமா.... நன்றி.
நீக்குஇப்போது தான் காணொளியைக் கண்டேன்..
பதிலளிநீக்குகவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய பாடல்...
காலத்தை வென்று நிற்கின்றது..
ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. ஹரி ஓம்..
ஓம்.. அரி ஓம்..
ஓம்.. அறிவோம்!..
வாங்க துரை ஸார்... மீள்வருகை புரிந்து காணொளியை ரசித்தமைக்கு நன்றி. அருமையான பாடல்.
நீக்குநெகிழ்ச்சி...
பதிலளிநீக்குகண்களின் ஒருவித ஏக்கம் தெரிகிறது...
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...
நன்றி தனபாலன். ஸ்ரீஜெயந்தி வாழ்த்துகள்.
நீக்குஎப்போதுமே செல்லங்களின் பதிவுகளில் ஒரு வாஞ்சை கலந்திருக்கும். ப்ரௌனியின் படங்கள் அழகு.
பதிலளிநீக்குநன்றி நண்பர் முத்துசாமி.
நீக்குசெல்லங்களும் அவை குறித்த நினைவுகளுமாய் நெகிழ்வான பகிர்வு. நாய் மனம் கதை மறக்க முடியாதது.
பதிலளிநீக்குகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குநாய் குட்டிகள் அழகு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.
நீக்குவீடியோவை இப்போத் தான் பார்த்தேன்.
பதிலளிநீக்கு