வியாழன், 13 செப்டம்பர், 2018

பாலாஜியும், சிவாஜியும் பின்னே திப்பு சுல்தானும்                   Image result for vinayagar images  Image result for vinayagar images  Image result for vinayagar images


                        Image result for vinayagar images  Image result for vinayagar imagesண்ர்ள் னைருக்கும் விநார் துர்த்தி வாழ்த்துள்.   கொழுக்ட்டை திவாழ்த்துள்!!
நன்றி  :  படங்கள் இணையம்.

===================================================================================================================


மனக்கண் பூனை 


அலுவலகத்தில் இருந்த சமயம் பெரியவனிடமிருந்து தொலைபேசி வந்தது.

"அப்பா...   என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"

மனதில் ஒரு அலார்ம் அடித்தாலும் எரிச்சலுடன்  "ம்ம்ம்... சினிமா பார்த்துக்கிட்டிரு இருக்கேன்..  என்ன விஷயம்?" என்றேன்.

"எப்ப வருவே?"

"சினிமா ..முடிஞ்சதும்."

"விளையாடாதப்பா...  அப்பா...   மனசை ஸ்திரமா வச்சுக்கோ..."

இதயம் ஒரு கணம் நின்று துடித்தாலும் காட்டிக்கொள்லாமல் சாதாரணமாக "நானா விளையாடறேன்?  என்னடா?" என்றேன்.

பிஸியான வேலை நேரத்தில் அவன் ஃபோனும்,  பீடிகையும் ஏற்கெனவே என் எச்சரிக்கை செல்களை எழுப்பி இருந்தன...

"அம்மா அழுதுகிட்டிருக்கா..."

"ஏண்டா? "  பதட்டத்தை மறைக்கக் கஷ்டப்பட்டேன்.  ஒரு பக்கம் ஆபத்து அவளுக்கில்லை என்கிற சிறு நிம்மதி..   மறுபக்கம் வேறு யாருக்கு என்னவோ என்கிற சிறு பதட்டம் அரைநொடிகளில் வயிற்றில் சடசடக்க...

"மனசைத் தேத்திக்கோ..."

"சொல்றா....."  அடிக்குரலில் உறுமினேன்.

"நம்ம பூனை இல்லை?   செத்துப்போச்சு..."

"ம்ம்ம்..."  பதிலா?  பெருமூச்சா?  பெருமூச்சு என்றால் எதனால்?  அதுவும் ஒரு சிறு அதிர்வைக் காட்டுகிறதே...  இப்போது உணர்வுகள் ஸ்திரப்பட்டு திசை மாறின.

"அம்மா அரை மணி நேரமா அழுதுகிட்டு இருக்கா...  ரோட்ல கிடக்கற அதைப் பார்த்துப் பார்த்து..."

"அதை ஏண்டா பார்க்க விடறீங்க?  உள்ளே அழைச்சுக்கிட்டு போ..   நான் வேலை முடிஞ்சு வரேன்"

ஒரு வழியாய் வீட்டுக்கு வந்தபோது சமாதானம் அடைந்திருந்தாள்.  மழை நின்று சிறு தூறல் மட்டும்..  என்னிடம் சில உணர்வுப் பரிமாறலை எதிர்பார்த்தாள்.  இந்த உணர்வுக் குவியத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு வரும் மூச்சுத்திணறல் போன்ற அவஸ்தைகளை எனக்குத் தெரியும் ஆதலால் சாதாரணமாக இருந்தேன்.

எனவே ஏமாற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளும் சாதாரணமாக இருக்க முயற்சித்தாள்."அப்பா...   அதோ பாரு ரோட்ல..  "  நான் பார்க்க மறுத்தேன்.  உயிருடன் மடியில் குழந்தை போல விளையாடிய செல்லத்தை ரோடில் அப்படிப் பார்ப்பதை மனம் விரும்பவில்லை.

ஏற்கெனவே வீட்டில் நான்தான் இது போன்ற 'பெட்'களிடம்  மிகவும் அன்பு வைத்திருக்கிறேன் என்ற கருத்து உண்டு.  அதன் இழப்புகளில் மிகவும் அப்செட் ஆகியும் இருக்கிறேன் முன்காலங்களில்.  அதனால் நான் வீடு வந்ததும் நான் அழலாம், குறைந்தபட்சம் கண்கலங்கலாம் என்று எதிர்பார்த்திருந்தார்கள்.  அவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று தெரியும்.

நான் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.   மனைவி அதைப் பற்றி பேசியதும் காது கொடுத்துக் கேட்டு விட்டு "பாவம்" என்று மட்டும் கருத்து சொல்லி நகர்ந்தேன்.  மகன்கள் என்னைத் தொடர்ந்தார்கள்.  என் கண்களை கவனித்தார்கள்.நான் ஏதாவது புலம்புவேன் என்று எதிர்பார்த்தார்கள்.

என் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாலும் 'பூனாச்சு'வின் இழப்பைத் தாங்க முடியவில்லை.  வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.  மகன்களும், மனைவியும் என் சோக வெளிப்பாட்டை எதிர்பார்த்து, அது காணப்படாததால் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.அது என் மனைவியின் பின்னாலேயே செல்வதையும், பால் ஊற்றக் கேட்டு அழைப்பதையும்,  துணி காயப்போடும்போது மகன்களின் டிராயர் நாடாவைப் பிடித்துத் தொங்கி இழுப்பதையும், வேப்ப மர பூஜையின்போது கூடவே சென்று வேப்பமரக்கிளையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள்.அதிகாலையில் என் மடியில் அமர்ந்து என்னை டைப்ப விடாமல் கையைப் பிடித்து இழுக்கும்.  நான் வீட்டில் இருந்தால் என் மடிதான் பெரும்பாலும் அதற்குத் தூங்கும் இடம்.  அல்லது என் எதிரே கம்பியூட்டர் டேபிளில் அமர்ந்து தூங்கும்.  

இதே மாதிரி இன்னும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் இருந்தன.  நானே இன்னொரு குட்டியின் படமும் வெளியிட்டிருந்தேன்,  எனவே எங்கிருந்தாவது இது மியாவ் என்று வந்து விடும் என்று நம்பினேன்.  ஆனால் முதல் நாள் காலையிலிருந்தே அது வராததால் அது வராது, அதுதான் இறந்து விட்டது என்பது மனைவியின் நம்பிக்கை.  ஏனோ என் நம்பிக்கை திடமாக இருந்தது.

திடீரென வாசலில் இருந்து மெல்லிய மியாவ் கேட்டது.  உற்சாகமாக எழுந்தேன்.

"இங்கே பார்...  வந்து விட்டது..   நான் சொல்லவில்லையா?  ஏய் பூனாச்சு...  அதுக்குள்ள கவலைப்பட வச்சுட்டியே"  என்றபடி வேகமாக வெளியில் சென்றேன்.  

படிக்கட்டில் என் இளையமகன் அமர்ந்து செல்லில் ஓடிக்கொண்டிருந்த விடியோவை ஆஃப் செய்தான்.  எதிர்பார்த்தான் போலும்.

மூன்று மாத உறவுதான்.  மறுபடியும் ஒரு (பிரசவ) வைராக்யம்..   இனி செல்லங்கள் வளர்க்கக் கூடாது..    நாங்களா கொண்டு வந்தோம்..    எங்கிருந்தோ வந்தது..  

என்னை சூழ்ந்துகொண்டனர் மனைவியும், மகன்களும்.இன்று ஐந்து நாட்கள் ஓடிவிட்டது.  ஹூ....ம்.


=================================================================================================


திப்பு சுல்தான் பெருமை.  [தினமலர் திண்ணை பகுதியிலிருந்து]

ஹைதர் அலி, தன் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் அனைத்தையும், இதர நாடுகளிலிருந்து தான் விலைக்கு வாங்கினார். ஆனால், திப்பு சுல்தானோ தனக்கு தேவையான அனைத்து ஆயதங்களையும், மைசூரிலேயே தயாரித்துக் கொண்டார். அவருடைய பீரங்கிகள், மைசூரிலேயே வார்க்கப்பட்டன. ஆங்கிலேயே படைகளின் பீரங்கிகளை விட, பெரிதாகவும், குண்டுகள் அதிக தொலைவு செல்லும் வீச்சையும் பெற்றிருந்தன.ராக்கெட் ஆயுதங்களையும், திப்பு சுல்தான் மைசூரிலேயே உற்பத்தி செய்து, போர்க்களத்தில் உபயோகித்தார். ராக்கெட் ஆயுதம் பயன்படுத்தப்படாமலிருந்த காலத்தில், ஐரோப்பாவில் நடைபெற்ற யுத்தங்களில் கூட, முதன் முதலில், திப்பு சுல்தான் தான், ஆங்கிலேயருக்கு எதிராக, மைசூர் யுத்தத்தில், ராக்கெட்டுகளை பிரயோகம் செய்தார். சீறிப் பாய்ந்து வரும் ராக்கெட்டுகளை கண்டு, வெள்ளைக்காரப் படைகள் பதறிப் போயின.

ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (முன்னாள் இந்தியப் ஜனாதிபதி) ஒரு சமயம், அமெரிக்காவின் ராக்கெட் தொழில் நுட்ப ஆய்வுக்கூடமான, 'வாலேபஸ்'சுக்கு சென்றார். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான, நாசாவுக்கு சொந்தமான இடம் அது. அங்கு வரவேற்பு கூடத்தில், ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களக் காட்சியை பிரதிபலிக்கும் மிகப் பெரிய ஓவியம், சுவரை அலங்கரித்திருந்தது. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருத்த அவ்வோவியம் குறித்து அப்துல்கலாம், தம் சுயசரிதையில்,

'அந்த ஓவியத்தில், ராக்கெட்டுகளை செலுத்திக் கொண்டிருந்த வீரர்கள் வெள்ளையர்களாக இல்லாதது, என் கவனத்தை கவர்ந்தது; கூர்ந்து பார்த்தேன். ஆசிய உருவமைப்பும், நிறமும் கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டனர். பிரிட்டிஷாரை எதிர்த்து, இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கபட்டணத்தில் (கர்நாடக மாநிலம்) திப்பு சுல்தான் நடத்திய விடுதலைப் போர்க் காட்சி அது என்பதைக் கண்டு, பிரமித்துப் போனேன்.திப்புவின் தாய்நாடே, நினைவு கூர தவறிய அவருடைய ராக்கெட் தொழில்நுட்பத்தை, நாசா நினைவுக் கூர்ந்து, ஓவியமாக தீட்டி, அலங்காரமாக வைத்திருந்ததைப் பார்த்த போது, ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது...' என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல்கலாம்.

— ஜி.ஆளவந்தார் எழுதிய, 'மாவீரன் திப்புசுல்தான்' நூலிலிருந்து.

ஃபேஸ்புக்கில் இதைப் பகிர்ந்தபோது வந்த கமெண்டில் ஒன்று...


========================================================================================================


தினமலர் வாரமலரில் வொய் ஜி மகேந்திரா எழுதி வந்த 'நான் சுவாசிக்கும் சிவாஜி'  தொடரிலிருந்து இன்னும் சில பகுதிகள்...

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி, தமிழ்த் திரை உலகில், தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அவரை வைத்து, 18 படங்கள் தயாரித்தவர்; அதில், பல வெற்றிப் படங்கள். இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என்று, பிற மொழியில் வெளியான வெற்றிப் படங்களை, தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றி கண்டவர்.

இவர், திவான் பகதூர் ரங்காச்சாரியின் நேரடி பேரன்.   திவான் பகதூர் என் அம்மாவின் தாத்தா என்பதால் பாலாஜி எனக்கு மாமா.பாலாஜி தயாரிப்பில் சிவாஜி நடித்த படம் 'நீதி'. ​  ​இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில், நடந்து கொண்டிருந்தது. 

படப்பிடிப்பு முடிந்து, காரில் சிவாஜியும், பாலாஜியும் மைசூருக்கு திரும்பிக் கொண்டிருக்கையில், பாதி வழியில், காரின் ஒரு டயர், பங்க்சராகி விட்டது. 'திவான் பகதூர், இப்ப என்ன செய்யப் போற...' என்று கேட்டார் சிவாஜி. 'நம்ம யூனிட்டை சேர்ந்த, அடுத்த கார் வரும் வரை, இங்கே தான் காத்திருக்க வேண்டும்...' என்றார் பாலாஜி.

உடனே, தன் சட்டையை அவிழ்த்து, வேஷ்டி, பனியனுடன் தலை யில் முண்டாசு கட்டி, காரை விட்டு இறங்கினார் சிவாஜி. ஜாக்கி எடுத்து வைத்து, பங்க்சரான டயரை கழற்றி, ஸ்பேராக இருந்த மற்றொரு டயரை மாற்றினார். 'இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக் கணும் முதலாளி...' என்று, பாலாஜியை கலாய்த்து விட்டு, 'வா போகலாம்...' என்றார். 

நெடுஞ்சாலையில், அடுத்த வண்டி, எப்போது வரும் என்று, தெரியாத நிலையில், சிவாஜியே, டயரை மீண்டும் பயணிக்க வழி செய்ததைத் கண்டு, பாலாஜிக்கு ஆச்சரியம்.

பாலாஜியின் மற்றொரு படம், சட்டம். கமல் ஹீரோவாக நடித்த இப்படத்தில், எனக்கும் ஒரு முக்கியமான பாத்திரம். படத்தை இயக்கியவர் கே.விஜயன். மகாபலிபுரம் அருகே, காலை 7:00 மணிக்கு ஆரம்பித்த படப்பிடிப்பில், வில்லன் என்னை சுட்டுக் கொல்லுகிற காட்சி. 'இரண்டு மணி நேரம் போதும்; நீ, 9:00 மணிக்கெல்லாம் கிளம்பி விடலாம். உன்னை கரெக்டாக அனுப்பி வைக்கிறேன்...' என்று, பாலாஜி உறுதி அளித்தார். பல்லாவரம் அருகே டி.யோகானந்த் இயக்கத்தில், சுமங்கலி படத்தின் படப்பிடிப்பு. சிவாஜி லாரி டிரைவராகவும், க்ளீனராக நானும் நடித்தேன். பாலாஜி படப்பிடிப்பை முடித்து விட்டு, உடனே பல்லாவரத்திற்கு சென்று, சிவாஜியுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். 

அன்று சட்டம் படப்பிடிப்பில், சற்று தாமதமாகி விட்டது. சிவாஜி எனக்காக காத்துக் கொண்டிருப்பாரே என்று, எனக்கு ஒரே டென்ஷன். மொபைல் போன் வசதி இல்லாத காலம் என்பதால், தாமதத்தை அவருக்கு தெரிவிக்கவும் இயலவில்லை.

என் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதும், பல்லாவரத்தில், படப் பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு, காரில் படு வேகமாக வந்து சேர்ந்தேன். சிவாஜி கோபித்து கொள்வாரே என்ற பயம்; அவரை காக்க வைத்து விட் டோமே என்ற குற்ற உணர்ச்சி. தயங்கி தயங்கி அவரிடம் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், எழுந்து, இரு கை கூப்பி, 'என் பெயர் சிவாஜி கணேசன்; 1952லிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்; என்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாத வரை, முடிந்த வரைக்கும் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு, வருவேன். நீங்கள் எல்லாம் ரொம்ப பிசி நடிகர். சொன்ன நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் தாமதமாகத் தான் வருவீங்க...' என்றார்.

அவரை மேலே பேச விடாமல், 'என்னை மன்னிக்கணும்; பாலாஜி சார் படம். மகாபலிபுரம்கிட்டே ஷூட்டிங்; 9:00 மணிக்கு என்னை அனுப்பி விடுவதாகவும், 'சிவாஜி சார் கிட்டே நான் சொல்லிக்கிறேன்...' என்று பாலாஜி சொன்னதலும் தான்...' என்று தயங்கியபடியே கூறினேன்.

'பாலாஜி படமா... அவன் அப்படித்தான். சரி சரி... நீ போய், மேக்-அப் போட்டுட்டு சீக்கிரம் வா...' என்றார். பாலாஜிக்கும், அவருக்கும் இடையே இருந்த அன்பின் காரணமாக, சிவாஜி உடனே சாந்தமாகி விட்டார். அதனால், அன்று நான் தப்பித்தேன்.

அண்ணாவின் ஆசை என்ற படத்தின் மூலமாக, பாலாஜியை திரைப்பட தயாரிப்பாளராக ஆக்கியது ஜெமினி கணேசன் - சாவித்திரி தான் என்றாலும், அவரை திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக நிலைத்து நிற்க வைத்தது சிவாஜி கணேசன் தான். கடைசி வரைக்கும், அந்த நன்றி மறக்காதவராக, இருந்தார் பாலாஜி.

சிவாஜி மறைவின் போது, பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அப்போது தான், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். பெசன்ட் நகர் மயானத்தில், சிவாஜிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சிவாஜிக்கு, 21 முறை பீரங்கி முழங்கி, இறுதி அஞ்சலி செய்யப்பட்டது. தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல், அங்கு வந்து, ராணுவ வீரர் போல் அட்டென்ஷனில் விறைப்பாக நின்று, சல்யூட் அடித்து, தன் இறுதி மரியாதையை செலுத்தினார் பாலாஜி. சிவாஜியின் உடலுக்கு, அவர், இறுதி அஞ்சலி செய்த அந்த காட்சி, இன்றும், என் கண் முன் நிற்கிறது.

சென்னை தூர்தர்ஷன் நிலையத்தில், துணை இயக்குனராக பதவி வகித்த, டி.எஸ். நாராயணசுவாமி, சிவாஜியின் நெருங்கிய நண்பர். சிவாஜியின் வாழ்க்கை சரித்திரத்தை, அவர் எழுதினார். அதில், சிவாஜி தனக்குப் பிடித்த நடிகர்களின் பட்டியலில், என் பெயரை பிரத்யேகமாக குறிப்பிட்டது பெருமைக்குரிய விஷயம்.

அதே போல மலேசியாவில், ஒரு பிரபல, 'டிவி'க்கு சிவாஜி பேட்டி அளித்த போது, 'இன்றைக்கு நம்பர் ஒன் காமெடியன் ஒய். ஜி. மகேந்திரன் தான்! அவனுடைய, டைமிங் சென்ஸ் சரியாக இருக்கும்...' என்று, குறிப்பிட்டிருந்தார். இவை இரண்டையுமே, எனக்கு கிடைத்த ஆஸ்கர் விருதுகளாக கருதுகிறேன்.

சென்னை எழும்பூரில், சிவாஜிக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசும் போது, மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பேசினேன்.
இதைக்கேட்டு, கை தட்டி ரசித்தனர் சிவாஜி ரசிகர்கள். ஆனால், மேடையில் அமர்ந்திருந்த சிவாஜி, இதை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை, அவர் முகம் காட்டியது.

விழா முடிந்ததும், என்னை கூப்பிட்டவர், 'புத்திசாலித்தனமாக பேசியதாக நினைப்பா? கைதட்டல் வாங்கணும்கிறதுக்காக, எதை வேண்டுமானாலும் பேசாதே. என்னை மேடையிலே வைத்துக் கொண்டு, மத்தவங்களை விமர்சனம் செய்றேயே, நான்தான் சொல்லிக் கொடுத்து, உன்னை பேச சொன்னேன்னு தானே மத்தவங்க நினைப்பாங்க. இதனால் எனக்கு கெட்ட பெயர் தான் வாங்கிக் கொடுக்கிறே...' என்றார். அவர் சொன்னதில் இருந்த நியாயம் எனக்கு புரிந்தது; அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

இன்றும் அவர் கொடுத்த அறிவுரையை, நான் பின்பற்றுகிறேன்.
பாலு மகேந்திராவின் ஊமைக்குயில் படத்திற்காக, பெங்களூரில் ஒரு ஸ்டுடியோவில், நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பக்கத்து செட்டில் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் இருப்பதாக சொன்னார்கள். விசாரித்ததில், அவர் செட்டில் இல்லை; ஸ்டுடியோவை சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றனர். எடுக்க வேண்டிய காட்சியில், அவர் ரொம்ப களைப்பு அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வருத்திக் கொண்டு, ஓடுகிறார் என்று தெரிந்தது.

இது பற்றி, சிவாஜியிடம் நான் ஒரு முறை பேசிய போது, 'யுசுப்பாய் பெரிய நடிகர். அவர் செய்தது அவருக்கு பொருந்தும். என்னைக் கேட்டால், டயர்டாக காட்சியில் இருக்க வேண்டும் என்றால், டயர்டாக நடிக்க வேண்டும். கொலைகாரனாக வரும் போது, இரண்டு கொலை செய்துட்டா, செட்டுக்கு வர முடியும்...' என்றார்.

அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, விசேஷ விருந்தினராக, 1962ல், அமெரிக்கா சென்றிருந்தார் சிவாஜி. அங்கிருந்து திரும்பி வரும் போது ரோம் நகருக்கு சென்றார், அங்கு ஒரு ஒட்டலில் சாப்பிட்டார். 

சிவாஜியின் சாதனைகளைப் பற்றி கேள்விப்பட்ட அந்த ஓட்டல் முதலாளி, சிவாஜி சாப்பிடுவதை புகைப்படம் எடுத்து தங்கத்தால், பிரேம் செய்து, தன் ரெஸ்டாரென்டில் மாட்டியிருக்கிறார்.


===============================================================================================


அடுத்த வாரம் பார்ப்போம் நண்பர்களே....

93 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும்
  மு.வ. சங்கத்தினர் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. உங்களுக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   நீக்கு
 2. அனைவருக்கும் காலை வணக்கமும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் பானு அக்கா.. உங்களுக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூனையாக இருந்தாலும் கிளிகளாக இருந்தாலும் அவற்றால் நினைவில் ஏற்படும் வடுக்கள் மாறுவதே இல்லை..

   நீக்கு
 4. ஆனாலும் திப்பு சுல்தானை பிடிப்பதில்லை..

  இவரால் கர்நாடகத்தின் (அல்லது கேரளா) சில ஊர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை என்று படித்திருக்கிறேன்...

  நாட்டுக்கு நல்லது செய்தார் வெள்ளை அடித்தார் என்றால் அது ஆள்பவனின் கடமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி சு பற்றி என் கருத்தும் அஃதே துரை ஸார்...!!!!

   நீக்கு
  2. ஓ இபப்டியும் செய்தி உண்டா திசு பற்றி!!?? ரொம்பவே புதுசா புதுசா தகவல்கள்...

   கீதா

   நீக்கு
 5. காலை வணக்கம்.

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வெங்கட். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

   நீக்கு
 6. பூனை - சோகம். இதுவும் கடந்து போகும்....

  தி.சு. - என்ன சொல்ல....

  சிவாஜி பற்றி வொய்.ஜி. - தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. தமிழ் நாளிதழ்கள்/வார இதழ்கள் படிப்பதே விட்டுப் போயிற்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிவாஜி வொய் ஜி மகேந்திரா கட்டுரை 4 வருடங்கள் பழசு... நன்றி வெங்கட்.

   நீக்கு
 7. அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வல்லிம்மா.. உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. பூனைதான் வந்துவிட்டதே எதுக்கு இந்த ஹூஊஊம்.

   ஆனாலும் இறைவனடி சேர்ந்த இன்னோரு பூனைக்கு அஞ்சலிகள்.
   சிவாஜி பற்றிய செய்திகள் சூப்பர்.
   கே பாலாஜி மிகப் பிடித்த நடிகர். அவருக்கு இருந்த உடலமைப்புக்குப் பெரிய நடிகராக வந்திருக்க வேண்டியது.
   கூகிளில் தேடும்போதுதான் மிசஸ் ஒய் ஜி பியும் பாலாஜியும் உறவு என்று தெரிந்தது.

   நீக்கு
  3. பூனை எங்கே வந்தது வல்லிம்மா? படங்களிலா?

   பாலாஜி - வொய் ஜி எம் உறவு பற்றி ஒரு வாட்ஸாப் செய்தி கூட வந்தது.

   நன்றிம்மா..

   நீக்கு
  4. ஒ ஸாரிமா. தப்பா படித்திருக்கிறேன். பாவம் அந்த செல்லம்.

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  தங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

  விநாயகர் படங்கள் மிகவும் அற்புதம்.

  பூனையின் முடிவு மனதை கலங்க வைத்தது. என்னாச்சோ என்று படிக்க வைத்தது. நம்பிக்கை இழக்காமல் நீங்கள் வாசல் நோக்கி விரைந்ததும் என் கண்களும் எழுத்தில் விரைந்தது. ஐந்து நாட்கள் ஓடி விட்டன என்றதும் சோகம் புரிந்தது. காலம் எப்படியும் மனதை மாற்றி விடும்.

  திரை உலகின் நட்பு பற்றி அறிந்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. மற்றவைகள் நிதானமாக விரிவாக படித்த பின் வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா அக்கா. உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   //காலம் எப்படியும் மனதை மாற்றி விடும்.//

   ஆமாம்... உண்மைதான்!

   நீக்கு
 9. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 10. இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. கொழுக்கட்டை படமும் இணையத்திலிருந்தா? என்ன கொடுமை சரவணன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நெல்லை... பதிவு நேற்றே ஷெட்யூல் செய்யப்பட்டு இட்டது... அப்புறம் எப்படி?

   நீக்கு
 13. வியாழன் கதம்பம் எப்போதும்போல் அருமை.

  வளர்ப்புப் பிராணிகளின் மீது எல்லோரும் கொள்ளும் அன்பு எனக்கு எப்போதுமே ஆச்சர்யம்தான். அது எப்படி அப்படி அன்பு இருக்கமுடியும் என்பதே என் நினைப்பு.

  எவ்வளவு பெரிய ஆளாக இருந்தபோதும் உச்சியை அடைந்து அவர்கள் கீழே இறங்கித்தான் ஆகிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? சிலர் அந்தச் சாதனையிலேயே மிச்ச வாழ்க்கையை ஓட்டிவிடுகிறார்கள். பலர், கீழே விழுந்தபிறகு எழாமலேயே இருந்துவிடுகிறார்கள்.

  பாலாஜியின் பின்னணி இப்போதுதான் எனக்குத் தெரியும். ஒரு சமயம் தொடர்ந்து அவர் சிவாஜியை வைத்துப் படம் எடுத்தார். அனேகமாக எல்லாப் படங்களுமே நன்றாக இருந்தன. பாலாஜிதானே மோகன்லாலின் மாமனார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எப்படி அப்படி அன்பு இருக்கமுடியும்// - இதுக்கு அர்த்தம் உங்களுக்காக அனுதாபப்படலைன்னு இல்லை. தொலைத்தவர்களுக்குத்தான் தொலைத்த பொருளின் அருமை தெரியும். மற்றவர்களுக்கல்ல.

   நீக்கு
  2. கதம்பத்தை ரசித்ததற்கு நன்றி நெல்லை.

   பழைய அனுபவங்களினால் எச்சரிக்கையாக இருந்தாலும் வலிய வந்து மடியில் இடம் பிடித்து செல்லம் கொஞ்சும்போது என்ன செய்வீர்கள்?

   உச்சியை அடைந்தவர்கள் கீழே இறங்குவது எதற்குச் சொல்கிறீர்கள்? திப்புவுக்கா? வொய் ஜி எம்முக்கா?

   இந்த உறவு லிஸ்ட்டில் பெரிய உறவுப்பாட்டாளமே இருக்கிறது... ரஜினி, அனிருத், தனுஷ் வரை நீளும்!

   நீக்கு
 14. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈஈ:) முதலாவது கொழுக்கட்டைப் படம் எப்படிக் கிடைச்சதூஊஊஊஊஊஊஊ?:)) ஹா ஹா ஹா நான் திருச்சியில அவிச்சதென நினைச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா:).

  அனைவருக்கும் பிள்ளையார் சடுர்த்தி வாழ்த்துக்கள்... எல்லோருக்கும் சகல இன்பமும் கிடைச்சு கலகலப்பாக நலமாக.. அதிராவோடு கோபிக்காமல்:).. அதிராவின் போஸ்ட்டுக்கெல்லாம் ஒழுங்காக் கொமெண்ட்ஸ் போட்டு:) நலமே வாழ, கொழுக்கட்டையுடன் இருக்கும் இனிப்புப் பிள்ளையாரின் ஆசி கிடைக்கட்டும் அனைவருக்கும்..._()_.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா... இணையத்திலிருந்துதான் படம். ஆனால் இன்று இரண்டு மூன்று இடங்களிலிருந்து கொழுக்கட்டை கிடைத்தது. எல்லாமே நன்றாயும் இருந்தது.

   நீக்கு
 15. என்ன சொல்றீங்க ஸ்ரீராம்?????? என்னால ரைப் பண்ண முடியமல் உடம்பு சோர்ந்து விட்டதுபோல இருக்கு.. உண்மையில் கண் எல்லாம் முட்டி விட்டது எனக்கு.... ஓரிரு தடவை படத்தில பார்த்தாலும் பூநாச்சு எங்க வீட்டு டெய்சியின் தம்பி என்பதைப்போல கற்பனை பண்ணி மனதில நெருக்கமாக்கி விட்டேன்ன்..

  இப்போது இருக்கும் வட்டத்துள் எங்கள் வீட்டு டெய்சி, அஞ்சுவின் ஜெசி மல்ட்டி, பூநாச்சு... எங்கள் அண்ணன் வீட்டு லியோ... இவர்களைப்பற்றி அஞ்சுவும் நானும் அடிக்கடி பேசிக் கொள்வோம்ம்.. போஸ்ட்கூட போடலாம் என இருந்தேன்.. ஏன் இப்படி ஆச்சு..... :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா.. உங்கள் அதிர்ச்சியும், கீதா ரெங்கனின் விசாரிப்பும் என் கண்களில் நீர்த்திரையிட வைக்கின்றன!

   //ஓரிரு தடவை படத்தில பார்த்தாலும் பூநாச்சு எங்க வீட்டு டெய்சியின் தம்பி என்பதைப்போல கற்பனை பண்ணி மனதில நெருக்கமாக்கி விட்டேன்ன்..//

   அப்போ எங்களுக்கு எப்படி இருக்கும்...

   //ஏன் இப்படி ஆச்சு..... :(//

   சிறுவாழ்வு வரம் வாங்கி பிறவிக்கடன் முடித்துள்ளது. அதிருஷ்டக்காரப் பூனை.

   நீக்கு
 16. சிவாஜி அவர்கள் கடைசிவரை தவறாமல் பஞ்ச்வாலிட்டியை கடைப்பிடித்தார்.

  பதிலளிநீக்கு
 17. திப்பு சுல்தானின் இன்னொரு பிறவி அப்துல் கலாம் என்று எங்கோ படித்த நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொரு பிறவி என்பதை எல்லாம் சந்தேகப்படாமல் நம்புகிறீர்களா ஜி எம் பி ஸார்?

   நீக்கு
  2. படித்ததில் நம்பிக்கை எங்கே வருகிறது

   நீக்கு
 18. எங்கள் பிளாக் குடும்பத்தினர் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. செல்லங்களிடம் அதிகமா அன்பு செலுத்திட்டா எதையும் மறக்கவே முடியாது ..
  மனைவிக்கு ஆறுதல் சொல்லுங்க .வாசிக்கும்போது அழுதிட்டேன் :( எங்களுக்கு பல அனுபவங்கள் ஊரில் உண்டு இங்கே மூன்றரை வருடங்கள் லைஃப் ஸ்பான் உள்ள ஹாம்ஸ்டரை வாங்கி அது போனதும் இனி செல்லமே வேண்டாம்னு இருந்த தருணத்தில் தான் ஜெசி வந்தா பிறகு மல்ட்டி .என் கணவர் கூட சொல்வார் அதிகமா அன்பு செலுத்த வேண்டாம் பழக வேண்டாம்னு ஆனாலும் பாழும் மனசுக்கு தெரியுமா அன்பு அளவோட கொடுக்கணும்னு . னு மனசை தேத்திக்கோங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல்.. இப்படிப் பழகி கஷ்டப்படுவதில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. ஏற்கெனவே இனி நோ மோர் செல்லம்ஸ் என்று முடிவெடுத்திருந்தோமே....

   நீக்கு
 20. இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அக்கா. உங்களுக்கும் வி.ச. வாழ்த்துகள்!

   நீக்கு
 21. பிள்ளையார் படங்கள், மோதகம் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
 22. பூனையின் விஷயம் அறிந்து மிக வேதனை அடைந்தேன்.
  ஐந்து நாட்கள் ஓடி விட்டதா? படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.
  நம்முடன் பழகிய பின் அவை நம் சொந்தம் போல் ஆகிவிடுகிறது.
  பழகி பிரிவது கொடுமை.

  //இங்கே பார்... வந்து விட்டது.. நான் சொல்லவில்லையா? ஏய் பூனாச்சு... அதுக்குள்ள கவலைப்பட வச்சுட்டியே" என்றபடி வேகமாக வெளியில் சென்றேன்.//

  வந்து இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று இந்த நல்ல நாளில் இதைப் பகிர் வேண்டாம் என்று முதலில் நினைத்தேன். அப்புறம் இதில் என்ன இருக்கிறது என்று பகிர்ந்து விட்டேன். நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திப்புசுல்தான் செய்தி, மற்றும் பாலாஜி, சிவாஜி செய்திகளும் நன்றாக இருக்கிறது.

   நீக்கு
 24. உங்க செல்லத்தின் ஆன்மா நற்கதி அடையட்டும். வளர்ப்பு பிராணிகள் விஷயத்தில் நான் நெ.த. கட்சி .
  திப்பு சுல்தானைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
  பாலாஜி,சிவாஜி நட்பு பற்றிய செய்தி சுவை. பாலாஜியின் தாய் மலையாளி. அவருடைய அப்பாவின் இரண்டாவது மனைவி. இதை அவர் ஜெயா டி.வி.யில் கூறினார். மோகன்லால் அவருடைய மாப்பிள்ளை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சந்தேகம் நேற்று முகநூலில் சிவாஜியின் நிறைகுடம் படம் பற்றி கொஞ்சம் பாதகமான செய்திகளை போட்டு விட்டோமே என்று இன்று இங்கு பரிகாரமா? ஹா ஹா!
   அது என்ன வொய்.ஜி.? ஒய் நாட் ஒய்.ஜி.?

   நீக்கு
  2. வாங்க பானுமதி அக்கா. ஆமாம். திப்பு சுல்தான் பற்றி இருவேறு கருத்துகள் உண்டு.இதனால் கர்னாடக அரசியலில் சிறு சலசலப்பு கூட எழுந்தது என்று நினைவு!

   திரையுலகில் "இந்தக்" குடும்பம் ரொம்பப் பெரிசு! நன்றி அக்கா.

   நீக்கு
 25. அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள். எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் விளைந்திட நம்பி வணங்கும் எல்லோரையும் தம் தும்பிக்கையால் ஆசீர்வதித்திடட்டும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரெங்கன். உங்களுக்கும் வி.ச வாழ்த்துகள்.

   நீக்கு
 26. ஸ்ரீராம் பூனாச்சு முதலில் கதை என்று நினைத்துவிட்டேன். அப்புறம் தான் தெரிந்தது நம்ம பூனாச்சு என்று. ஹையோ எப்படி ஆச்சு? உங்கள் வீட்டில் எல்லோருமே நாலு கால் செல்லங்களிடம் அன்புடன் இருப்பதால் இப்படியான சம்பவங்கள் மனதைக் கலக்கும் தான். எப்படி ஸ்ரீராம்...நான் ஃபோட்டோவில் பார்த்தே சொக்கிப் போனேன்...அந்தச் செல்லம் உங்க மடில எல்லாம் விளையாடி தூங்கி...எப்படி எப்படி ஆச்சு? ஏதேனும் கடித்துவிட்டதா? வண்டி அடிபட்டதா? உங்க காம்பவுண்டுக்குள்ள அப்படி ஒன்னும் வண்டிகள் வராதே...செல்லங்கள் நம்முடன் இருந்துவிட்டு இப்படிப் பிரிந்தால் ரொம்பவே மன வருத்தம் அது நீங்க ரொம்ப நாள் எடுக்கும்....வாசித்ததும் மனது என்னவோ செய்தது...என்ன சொல்ல என்று தெரியலை ஸ்ரீராம்...வேறு ஏதோ சொல்லப்போகிறார் உங்கள் பிள்ளை என்று பார்த்தால் பூனாச்சு....பூனாச்சு என் மனக்கண்ணிலும் இருக்கு...பாவம்...மௌசை எல்லாம் ஆட்டுமே...தட்டிவிடுமே...புத்தகம் மேல் ஏறிப் படுத்திருக்குமே...அழகு செல்லம்...வெற்றிடம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... நீங்கதானோ உங்க மகனை வெட் படிக்க சிறு வயதிலிருந்தே மோட்டிவேட் செய்தது?

   நீக்கு
  2. நெல்லை நான் மோட்டிவேட் செய்தது உண்மைதான் ஆனால் அவன் தான் முதலில் தன் விருப்பத்தை 2 ஆம் வகுப்பு படிக்கும் போது வெளிப்படுத்தினான். சென்னைக்கு வந்திருந்த போது மாமியார் வீட்டிற்கு லோட்டஸ் லேர்னிங்கிலிருந்து அனிமல் என்சைக்ளோபீடியா 25 வால்யூம் கொண்டு வந்திருந்தார்கள். அதை ப்ர்மோ பண்ண வீட்டிலிருந்த குழந்தைகளிடம் பேசினார்கள். ஏற்கனவே என் மகன் எங்கள் கிராமத்திற்குப் போகும் போது மாடு ஆடு கோழி, நாய் பூனை என்றுதான் விளையாடுவான். லோட்டஸ் பீப்பிள் எல்லா குழந்தைகளிடமும் கேள்வி கேட்டனர். நீ என்னவாகப் போற நு என் மகன் நான் அனிமல் டாக்டர் என்றான். அப்போது அவனுக்கு வெட்னரியன் என்ற வார்த்தை எல்லாம் தெரியாது. உச்சரிப்பும் வராது. ஆங்கிலம் பேசவும் வராது. அவர்களோ ஆங்கிலத்தில்தான் பேசினார்கள்...

   நான் அப்புறம் அவனிடம் கேட்டேன் நீ சும்மா சொன்னியா இல்லை நிஜமாவே படிக்க ஆசையானு ஏன்னா அவனுக்கு லேர்னிங்க் டிஸெபிலிட்டி இருந்தது. அதனால்....ஏன் விருப்பம்னு கேட்டதுக்கு அவன் சொன்ன பதில், "பாவம் நமக்கு தொப்பை வலிச்சா சொல்லுவோம் அவங்களுக்கு எல்லாம் சொல்லத் தெரியாது. நான் தடவிக் கொடுத்து மருந்து கொடுத்து ஊசி போட்டு பாத்துப்பேன்" இதை அவன் திருத்தமாகக் கூடச் சொல்ல இயலாத நிலை அப்போது. எழுதவும் வராது. படிக்கவும் மிகவும் கஷ்டப்பட்டான் பள்ளியில். அப்போதுதான் நான் இதை வைத்தே அவனை மோட்டிவேட் செய்து கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வைத்தேன். பெரிய விடைகள் எல்லாம் சிறிது சிறிதாக ஆக்கி அவனுக்குச் சொல்லிக் கொடுத்து...அவனுக்கு இரு வரிகளுக்கு மேல் எழுதுவது மிகவும் சிரமம். மனதில் ஓடுவதை எழுதுவது மிகவும் சிரமம் அவனுக்கு. பெரிய விடை என்றால் சோர்ந்து போய் அழுவான்...படுத்துக் கொண்டு விடுவான்..இது 9 ஆம் வகுப்பு வரை..அப்புறம் மெதுவாக எப்படியோ..கல்லூரியிலும் பரீட்சை எழுத மிகவும் சிரமப்பட்டான்...ஆனால் செமினார் வகுப்பு நன்றாக எடுப்பான் என்று ஆசிரியர்களும் நண்பர்களும் சொல்லுவார்கள். வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து தூங்கிவிடுவானாம். ஆனால் ப்ரொஃபஸர் கேள்வி கேட்டால் டக்கென்று பதில் சொல்லிவிடுவானாம்.... உழைப்பான். அந்த உழைப்பும் இறைவனின் அருளும் கை கொடுக்க இப்பவரை வந்தாயிற்று. இப்போது அதை எல்லாம் நினைத்தால் நாமா, அவனா இதை எல்லாம் கடந்து வந்தோம், வந்தான் என்று. இறைவனுக்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்....பிரார்த்தனைகள் (வேண்டுதல் அல்ல....) அதனோடு சேர்ந்த நம் முயற்சிகள் என்றுமே நம்மை வழி நடத்தும் என்ற அசையாத நம்பிக்கை....நெல்லை. உங்கள் கேள்வி பலவற்றை நினைவு படுத்தி ஃப்ளாஷ்பேக் ஓடிடுச்சு...ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. கீதா ரெங்கன்... எனக்குக் எங்கள் அருகாமை வீட்டுக்காரர் மேல் சந்தேகம் உண்டு. ஆனால் பார்க்காமல் எதையும் சொல்ல முடியாது. செல்லம் இல்லாமல் போர்தான் அடிக்கிறது. பழகி விடும்!

   நீக்கு
  4. கீதா ரங்கன்... நெகிழவைக்கும் வகைல எழுதியிருக்கீங்க. மரம் வச்சவனுக்கு தண்ணீர் கொடுக்கத் தெரியாதான்னு சொல்லிடலாம். இருந்தாலும் நம்ம பையன் ஒரு நிலைக்கு வரும்வரை (அந்த நிலை என்பதற்கு ஒரு கோடு கிடையாது. படிச்சால், வேலை, பிறகு திருமணம், குழந்தை என்று நீண்டுகொண்டே போகும்). அதற்காக கூடச் சேர்ந்து உழைப்பது..... பகவான் கடைக்கண் எப்போதும் நோக்கட்டும்.

   நீக்கு
 27. ஐந்து நாள் ஆகிவிட்டது அதான் ஸ்ரீராம் சைலன்டா இருக்கீங்களா? ம்ம்ம் புரிந்து கொள்ள முடிகிறது....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதனால் சைலன்ட் இல்லை கீதா... வேறு குடும்ப விழாக்கள், அலுவலகம், நண்பர்கள் இல்லத் திருமண விழாக்கள் என்று பிஸி! இப்போ விநாயகர் சதுர்த்தி பிஸி!

   நீக்கு
 28. நல்ல நகைச்சுவை என்பது, இப்போது அந்த நகைச்சுவையைப் பார்த்தாலும் சிரிக்கணும் இல்லை குறைந்தபட்சம் ரசிக்கவாவது செய்யணும். ஒய்.ஜி.பி. மகேந்திரன் நகைச்சுவை கொஞ்சம் அசட்டுத்தனமானது. மீண்டும் சிரிக்கவோ ரசிக்கவோ முடியாது. அவர் நல்ல நடிகராக இருக்கலாம், சரியான பாத்திரம் கிடைத்தால். ஆனால் பொதுவா நகைச்சுவை நடிகரா திரைல வந்தப்பறம், அவங்களை சீரியஸ் ரோலில் பார்க்கமுடியாது.

  இப்பவும் நாகேஷோ, கவுண்டரையோ, இல்லை பழைய நகைச்சுவை நடிகர்களையோ ரசிக்க முடியும். மகேந்திரன் அந்த கேடகரில இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வொய் ஜி மகேந்திரனை என்னால் ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்க்க முடியவில்லை. அசட்டு நகைச்சுவைதான் பெரும்பாலும். இவர் வில்லனாக ஒரு படம் நடித்திருக்கிறார் தெரியுமோ? நாகேஷ், சோவுக்கெல்லாம் இவர் ஈடாவாரா? டிஸம்பர் சீசனில் இவர் மேடைநாடகம் ஒன்று பார்த்து ........ன்.

   நீக்கு
 29. சுஜாவுக்கும் என் ஆறுதல்கள்...என் ப்ரௌனி போன போதும் அப்படித்தான் அதுக்கு முன்ன பீம், ஸ்கூபி, ரோசி இப்படி பல...ஆனா ஒவ்வொனும் போகும் போது வேற ஒன்னு வந்துரும் வீட்டுக்கு....ஆனா இனி கண்ணழகிக்கு அப்புறம் தெரியலை...ஏன்னா ஒவ்வொரு தடவையும் பிரிவு வருத்தும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரெங்கன். பாஸ் கிட்ட சொல்லி விடுகிறேன்.

   நீக்கு
 30. பூனை பற்றி யாரும் சொல்லவே இல்லையே. படிக்கும் போது கண் கலங்கியது.


  திப்பு சுல்தானின் வாள் இன்றும் மைசூர் palaceயில் உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீகாந்த். சொல்லவில்லை என்று நினைவில்லை!

   நீக்கு
 31. திப்பு பற்றிய தகவல் படித்து மிகவும் வியப்படைந்தேன்.. புதிய தகவலே...அதற்கு வந்த கருத்து செம....ரொம்ப அழகா சொல்லிருக்காங்க. வரலாறு முக்கியமப்பா!!!!!

  கீதாவுக்கு மிகவும் மிகவும் பிடித்த ஜிவாஜி பத்திய தகவல் அருமை...புதுசு எனக்கு.

  அது சரி இந்த பாலாஜியின் மாப்பிள்ளை தானே கேரளத்து மோகன்லால்?!!!! அப்படி என்றால் மோகன்லாலுக்கும் வொய்ஜிக்கும் என்ன உறவு??!!!!!!!!! ஹிஹிஹிஹிஹி....(புதனுக்கு எடுத்துக்கலாமோ?!! ஆசிரியர்கள் எல்லாரும் ரூம் போட்டு ஃபேமிலி ட்ரீ போட்டு தலை முடி உதிர்த்து விடை கண்டு பிடிச்சு சொல்லுவீங்கதானே ஸ்ரீராம்!! ஹா ஹா ஹா ஹா )

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரெங்கன்.. திசு பற்றிய மாற்றுக்கருத்துக்கள் உண்டே... இந்த உருவுக்குடும்பம் பற்றி மாதங்களுக்கு முன்னாள் இதுபோல ஒரு வாட்ஸாப் புதிர் சுற்றி வந்ததைப் படித்திருப்பீர்கள்.

   நீக்கு
 32. நண்பர்கள், சகோதரிகள் அனைவருக்கும் விநாயகச்சதுர்த்தி வாழ்த்துகள்!

  கணபதி என்றிட கலங்கும் வல்வினை
  கணபதி என்றிட காலனும் கை தொழும்
  கணபதி என்றிட கருமம் ஆதலால்
  கணபதி என்றிட கவலை தீருமே!

  எல்லோருக்கும் இன்பம் தழைக்கட்டும்!
  கொசுக்கட்டை உங்கள் புகைப்பட்த்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன்!

  உங்கள் செல்லப்பூனை இறந்த்தது வருத்தம். இதுவும் கடந்து போகும். வேறு செல்லம் ஒன்று வந்து உங்கள் வருத்தத்தைப் போக்கிடும்.

  திப்பு பற்றிய தகவல் வியப்பு மற்றும் இந்தியாவின் பெருமை வெளிநாட்டில்...இங்குள்ள நமக்குத் தெரியவில்லை அதற்கு வந்தக் கருத்து சொல்வதிலிருந்து தெரிகிறது நாம் படித்த படிக்கும், அறிந்த வரலாறு தவறுதான் என்றும். ஆனால் ஹைதர் அலி திப்பு பற்றிய வீரம் தான் அதிகம் படித்த நினைவு.

  சிவாஜி பற்றிய தகவல்களும் புதிதுதான். அவர் நேரம் தவறியதே இல்லை என்பதும் ரொம்பவே டெடிக்கேட்டட் என்றும் தெரியும். ஒய்ஜி சொல்லியிருக்கும் அவரது அனுபவம் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் துளசியின் பதிலை அடிக்கும் போது கொழுக்கட்டை என்று வர வேண்டியது கொசுக்கட்டை என்று வந்துவிட்டது..திருத்தி வாசிச்சுக்கோங்க...இப்பல்லாம் டைப்புவதே கஷ்டமா இருக்கு...

   கீதா

   நீக்கு
  2. நன்றி துளஸிஜி. கொழுக்கட்டை நாங்கள் செய்தது அல்ல. இணையத்திலிருந்து எடுத்ததுதான். உங்களுக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   நீக்கு
  3. பரவாயில்லை கீதா... எனக்கு நிறையவே தட்டச்சுப் பிழைகள் வருகின்றன.. அவ்வப்போது அவசி கொண்டுதான் இருக்கிறேன்!

   நீக்கு
 33. மின்சாரம் அடிக்கடிப் போய்வந்துகொண்டு வயிற்றெரிச்சலைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கர்னாடகாவின் தலைநகரில், (குறிப்பாக நாங்கள் இருக்கும் ப்ரூக் ஃபீல்டு ஏரியாவில்), அதிராவைப்போல் ஜிந்தித்து அடித்த கமெண்ட் ஒன்று காணாமல் போய்விட்டது. மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்...

   ஓ.. மதுரை ட்ரிப் முடிந்து பெங்களூரு திரும்பி விட்டீர்களா?

   நீக்கு
  2. திரும்பியாச்சு! கர்ண்ட்-கட்டோடு முட்டி மோதி ஒரு பதிவும் போட்டுவிட்டேன் - செப்டம்பர் எனக்கு இன்றுதான் வந்திருக்கிறது எனக்கு..

   நீக்கு
  3. உங்கள் பதிவுக்கு வந்து கமெண்ட்டும் போட்டு விட்டேனே...

   நீக்கு
 34. தும்பிக்கையான் துயர்நீக்கி அனைவருக்கும் எப்போதும் அருள் புரிவானாக.

  பாலாஜி பற்றிய தகவல்கள் புதிது. மம்மூட்டி இன்னாருக்கு மாப்பிள்ளை , தெரியாதா என்று எங்கும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு கமெண்ட் போடவந்தேன்!

  பூனையின் சோகக்கதை, கிராமத்தில் உடம்பு தூக்கிவாரிப்போட உயிர்விட்ட பூனை ஒன்றின் நினைவுகளை மீட்டுவந்தது. அப்போதும் அதன் மறைவுக்கு காரணம் புரியவில்லை.

  சிவாஜிபற்றி தமிழ்வாணனின் கல்கண்டு இதழில், எழுபதுகளில் வெளிவந்த டிட்-பிட் ஒன்று நினைவுக்கு வருகிறது: ஹாலிவுட் லெஜெண்டான மார்லன் ப்ராண்டோ (Marlon Brando) Don Corleone-ஆக நடித்து உலகை அதிரவைத்த காலம். அவருடைய நண்பரால் அவருக்கு ஒருமுறை நமது சிவாஜியின் படம் போட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலீஷ் ஸப்-டைட்டில்ஸ் இல்லாத அசல் தமிழ்ப்படம். லயித்துப் பார்த்திருந்த ப்ராண்டோ, இறுதியில் சிவாஜிபற்றி சொன்னது: He is a tremendous actor..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஏகாந்தன் ஸார்... உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

   பூனையின் சோகம் உங்களுக்கும் உண்டா?

   சிவாஜி பற்றிய தகவல் புதிது என்றாலும் கல்கண்டு அகவலை நம்ப முடியுமா தெரியவில்லை!

   நீக்கு
 35. திப்பு பற்றி எழுதியிருக்கீங்கன்னும் ஓடி வந்து பார்த்தால்.... செல்லமியாவ் செத்துப்போயிருக்கு. மனசு ரொம்ப அப்ஸெட்....

  நாட்டுக்கு நல்லதுபண்ணுவது அரசனின் கடமைதான். எத்தனை பேர் பண்ணாம இரு(ந்துரு)க்காங்கன்னும் தெரிஞ்சுருக்கணுமே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி டீச்சர்.

   உண்மைதான். இப்பல்லாம் அவங்கவங்க கடமையைச் சரியாய்ச் செய்தாலே நல்லவங்களாயிடறாங்க!

   நீக்கு
 36. காலையிலேயே இந்தப் பதிவைப் பார்த்துட்டேன். அடுத்ததும் படிச்சேன். இரண்டுமே சோகமாக இருந்ததால் எதுவும் சொல்லலை. நாங்க பூனைக்குட்டிங்க வளர்க்காமலேயே அவை எங்க வீட்டில் வந்து குடி இருக்கும். அதுங்களோட பிரிவையே எங்களால் தாங்க முடியலை. நாலைந்து நாய்கள் சேர்ந்து கொன்று போட்டுவிட்டன! ஐந்து குட்டிகள்! ஒரு அம்மாப்பூனை! அதிலே இருந்தே அம்பத்தூர் வீட்டில் இருக்கப் பிடிக்காமலும் போச்சு! :( என்னவோ போங! இதுங்களை எல்லாம் வளர்க்கவும் வேண்டாம். அப்புறமாப் பிரிவு தாங்காமல் புலம்பவும் வேண்டாம். இப்போ எல்லாத்தையும் விட்டாச்சு. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதுங்களை எல்லாம் வளர்க்கவும் வேண்டாம். அப்புறமாப் பிரிவு தாங்காமல் புலம்பவும் வேண்டாம். இப்போ எல்லாத்தையும் விட்டாச்சு. //

   நான் மட்டும் தேடியா எடுத்து வளர்த்தேன் கீதா அக்கா? அதுவா வந்து ஒட்டிக்கொண்டது. இப்போ இரண்டு நாட்களாக ஒரு பெரிய பூனை வந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பூனைக்குட்டிக்கு அப்பாவோ, அம்மாவோ... அது கொஞ்சம் முன்னரே எங்களுக்குத் தெரிந்ததுதான்.

   "ஏண்டா.. நம்பி உங்களிடம் என் குழந்தையை விட்டு வச்சேனேடா.." என்று கேட்பது போல இருக்கு என்கிறான் என் இளையவன்.

   'அதை வளர்க்கலாமா' என்று என் பாஸ் கேட்கவும் பெரியவன், நான் எல்லாம் 'வேண்டாம் வேண்டாம்' என்றபோது சின்னவன் "அது அல்ரெடி வளர்ந்துடுச்சும்மா... வேண்டாம்" என்கிறான்!

   நீக்கு
 37. நேத்திக்குக் கூட வாட்சப்பில் ஒரு உறவுக்குழப்பமான செய்தி வந்தது. இந்த பாலாஜி, ஒய்ஜி. ஒய்ஜி பெண், சாவித்திரி பேரன்னு அவங்க உறவுகள் எல்லாரையும் குறித்து ஒரு செய்தி வாட்சப்பில் சில வருஷங்களாகச் சுற்றிக் கொண்டே இருக்கே. இப்போ லேட்டஸ்டா கன்னட/தமிழ் நடிகை ஜெயந்தி பற்றி. அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியில் முக. முத்து விக்ரமின் பெண்ணுக்கு மாமனாரின் தந்தைனு முடியுது! !!!!!!!!!!!!!!!!!!!! இதே வேலையா இருப்பாங்க போல ! :))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரை உலகில் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று போலிருக்கு!

   நீக்கு
 38. மிகவும் நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!