ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

ஞாயிறு 180923 : நேதாஜி இருக்கிறாரா?


 மொட்டுகள் ஏன் இன்னும் மலராமல் தயங்கிக் கிடக்கின்றன?  மேலே உள்ள செய்தியைப் படித்ததிலிருந்துதான் தயங்குகின்றனவாம்.  ஏனென்றால் இவற்றை ஸ்பீக்கர் பூ என்றும் சிலர் அழைப்பார்களாம்!
இது என்ன?  எனக்குத் தெரியாது..  ஆனால் எங்கள் ஆசிரியர் கேஜிஎஸ் சொல்லக்கூடும்.  ஏனென்றால் படமே எப்பவோ அவர் அனுப்பியதுதான்!
காக்கை வந்து அழைத்தபோது கையில் அப்பளம்தான் கிடைத்தது.  அதைப் போட்டதும் ஒரு கொத்தில் தூளான அப்பளத்தைச் சுவைக்கும் காக்கை..  வருடம் 2015!அதே இரண்டாயிரத்துப் பதினைந்து.  அப்பா மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம்.  ஜன்னலில் நிறைய புறாக்கள் வந்து அமர்ந்தன.  செல்லை எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்து வெளிப்புற படிக்கருகே இருந்து படம் எடுத்தபோது அனைத்தும் பறந்துபோக, இரண்டு மட்டும் அங்கேயே அமர்ந்து எனக்குப் போஸ் கொடுத்தன!  

பொதுவாக புறாக்களைப் பார்க்கும்போதெல்லாம் எல்லோருக்கும் "கொஞ்சும் புறாவே..." பாடல் நினைவுக்கு வரும்.  முன்னர் எனக்கும் அப்படிதான்.  இப்போதெல்லாம் 'காதல் பரிசு' படப்பாடலான, படத்தில் இடம்பெறாத "புறாக்களே புறாக்களே..."  பாடல் சட்டென நினைவுக்கு வருகிறது!மதுரைக்கு அப்போது செல்லும்போது ஒருமுறை இப்படியும் அதிருஷ்டம் வாய்த்தது.  வைகை ரயிலை இப்படி நான் பார்த்தது அது புறப்படுவதற்கு முன்தான்.  சென்னையிலிருந்து மதுரை வரை இப்படி இருந்தது முதலில் நன்றாகத்தான் இருந்தது...   பின்னர் போரடித்தது!
என் பாஸ் எப்போது மதுரை சென்றாலும் சாப்பிட ஆசைப்படும் ஒரு இடம்.  இதுவும் கங்க்வாலா என்று அழைக்கப்படும் ஒரு டெல்லிவாலா கடையும் பாஸுக்குப் பிடிக்கும்.  அதற்கு முக்கியமான காரணம் மறைந்த அவர் தந்தை அவருக்கு (திருமணத்துக்கு முன்) அங்கு அடிக்கடி அழைத்துச் சென்றிருப்பதுதான்.  சிலசமயங்களில் சுவை நரம்புகளைவிட நினைவு நரம்புகள் சுவை அதிகம் தருகின்றன இல்லை?படத்தில் நேதாஜி இருக்கிறாரா?  கண்ணில் படுகிறாரா?   தூரத்திலிருந்து கூட்டத்தின் நடுவே ஒரு பரிதாப முயற்சி!மருத்துவமனையிலிருந்து விடுபட்டு வீடு வந்த அப்பாவைப் பார்க்க வந்த எழுத்தாளர்கள் கர்ணன் அவர்களும், உஷாதீபன் அவர்களும்...


வைகைப்படியில் நின்று நீளமான வைகையை ஒரு க்ளிக்.  அப்போது புகைப்பட நிபுணர் ராமலக்ஷ்மியால் (போனால் போகிறது என்று)  'நன்றாயிருக்கிறது இந்த க்ளிக்' என்று சிறு பாராட்டு வாங்கிய படம்...சிறு படகு போல இல்லை?  இடைவெளி இன்றி ஒட்டி நிற்கும் இரட்டையர்!?
குமுதம் பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள் ரொம்பப் பிரபலம்.  60 களில் வந்த கிசுகிசுப் பக்கம்.  யார், என்ன என்று ஏதாவது கண்டு பிடிக்க முடிகிறதா?2015 புத்தகக் கண்காட்சியில் என்னை சற்று நேரம் நிறுத்திய ஸ்டால்.  இளமை நினைவை மீட்டியது!  அப்போ ஒரு புத்தகம் ஐம்பது காசுகள்.  இப்போது?  100 ரூபாய்!  இரண்டு புத்தகங்கள் (மாயாவி) வாங்கி வந்து படித்தேன்.

சென்ற வார ஞாயிறு புகைப்படப் பகிர்வில் பானு அக்கா இந்த ஜோக்கை நினைவு கூர்ந்திருந்தார்கள்.  என் சேமிப்பிலேயே இருந்தது.   97 கருத்துகள்:

 1. அன்பின் நேதாஜி, ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. கமெண்ட் போட ரொம்பப் படுத்துகிறது. என் கணிணிப் பிரச்னையா தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 3. ஸ்பீக்கர் பூவுக்கு இப்போ ஊமத்தம் பூவு.. ந்னு பேர் மாத்திட்டாங்களாமா!?...

  பதிலளிநீக்கு
 4. 70/80 களில் நூற்றுக்கும் மேற்பட்ட மதனோட ஜோக்ஸ் நறுக்கி வெச்சிருந்தேன்..

  எப்படியோ தவறிப் போய் விட்டது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெட்டில் இப்பவும் நிறைய கிடைக்கிறது துரை ஸார்...

   நீக்கு
  2. நெட்டில் கிடைத்தாலும்
   நம்முடைய சேகரிப்பு பொக்கிஷம் தானே...

   நீக்கு
  3. அது உண்மை. அது மட்டுமல்லாமல் நெட்டில் அளவாகத்தான் கிடைக்கும். நம் கலெக்ஷனில் ரெவாரெ, சி தி சி. மு ஜா மு, மற்றும் பொதுவான ஜோக்ஸும் கிடைக்குமே... இருக்குமே...!

   நீக்கு
  4. சிரிப்புத் திருடர் சிங்காரவேலு என்னிடமும் இருந்தார். பறந்து விட்டன!

   நீக்கு
  5. மதன் இருக்கட்டும் கீதா அக்கா.. மற்ற படங்கள் பற்றி ஓரிரு வார்த்தைகள்...?!!

   நீக்கு
 5. காலை வணக்கம்.

  படங்கள் சிறப்பு 👌. ரெட்டை வானல் ரெங்குடு செம...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வெங்கட். நன்றி. அது ஓசி! சொந்தப் படங்கள் எப்படி?!!!

   நீக்கு
 6. இனிமே காக்காய்க்கு எல்லாம் கொண்டாட்டம் தான்...

  மகாளய பட்சம் ஆரம்பிக்கப் போகுதே...

  ஆனாலும்,
  அப்பளமா போடாம இருக்கணும்...

  பதிலளிநீக்கு
 7. அதிலும்
  சிரிப்புத் திருடன் சிங்காரம் என்று கூட அவ்வப்போது தொடர் போடுவார் - மதன்..

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் அருமை. உங்களிடம் நங்கநல்லூர் "கும்பகோணம் ஐயர்" மெஸ் எங்கு இருக்புன்னு கேட்கணும்னு நினைத்தேன்.

  மதுரைன்னாலே ஹேப்பி மேனை நினைவுக்குக் கொண்டுவருகிறீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லைத்தமிழன்..

   கோவிலிலிருந்து வெளியே வந்து போலீஸ் பீட் தாண்டி இடது புறம் திரும்பி நேராக அது சேரும் சாலைக்கு வந்து வலது புறம் திரும்பி வந்தால் இடது பக்கமாக பார்த்துக் கொண்டே வந்தால் மாமி மெஸ் வரும். முன்னதாக வலது பக்கத்தில் 30 வது தெரு திருப்பதிலேயே அன்னப்ராசனம் கடை வரும்!

   நீக்கு
  2. மதுரைன்னாலே ஹேப்பிதான் நெல்லை..!!!

   :) :) :)

   நீக்கு
 9. எல்லாம் நல்லா இருக்கு. காக்கைக்கு அப்பளத்தை எப்போவுமே நொறுக்கிச் சாப்பிடத் தான் பிடிக்கிறது. எனக்கு அப்பளத்தை நொறுக்கினாலே பிடிக்காது. ரசம் சாதத்தில் ஊற வைச்சுச் சாப்பிடுவேன். :))))

  பதிலளிநீக்கு
 10. அப்படி ஒண்ணும் கூட்டம் இல்லைனாலும் நேதாஜி தெரியத் தான் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லா உற்றுப் பாருங்கள்... எதிரே மரங்களின் மறைவில்...

   ஹா.. ஹா.. ஹா.. படம் எடுத்த நேரம் மாலை மயங்கும் வேலை வேறு...

   நீக்கு
  2. அதைப் பார்த்தேன். என்றாலும் நன்றாகத் தெரியவில்லை தானே! அதான் சொன்னேன். தெரு பழகினவங்க தான் கண்டு பிடிக்க முடியும், இல்லைனா தொழில் நுட்ப நிபுணர்கள்! :)))))

   நீக்கு
 11. மாயாவி புத்தகங்கள் எல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் பாடப்புத்தகத்தினுள் ஒளித்து வைத்துக் கொண்டு படித்தவை! முன்னே மர்மக்கதை எழுத்தாளர் ஒருத்தர் சிரஞ்சீவிங்கற பேரிலே எழுதிக் குவித்தார். தெரியுமா உங்களுக்கு? அதெல்லாம் பெரியப்பா வீட்டில் படித்தவை! அங்கேயும் தாத்தா வீட்டிலேயும் புத்தகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. எந்தப் புத்தகம் வேணாலும் படிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாயாவியைக் கூடவா ஒளித்து வைத்துப் படிக்கவேண்டும்?!! என்ன கொடுமை! சிரஞ்சீவி.. கேள்விப்பட்டிருக்கிறேன்.

   நீக்கு
 12. மாடர்ன் ரெஸ்டாரன்டுக்கு இப்போ சமீப காலங்களில் போனதில்லை. டெல்லிவாலா ஒரே சொதப்பல்வாலாவாகி விட்டது. ஆசையாய்ப் போயிட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))) அது ஆரம்பித்த புதுசில் அங்கே இருந்து வரும் மணமே ஆளை இழுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அதுதான் தோன்றியது. பழைய பெருங்காய டப்பாதான் எல்லாமே.. மா ரெ கூட அப்படிதான் தோன்றியது. அப்போ புதுசில் பிடித்திருந்திருக்கும். ஆனாலும் மா ரெ ல் கூட்டத்துக்குக் குறைவில்லை.

   நீக்கு
  2. 2,3 பேர் மாடர்ன் ரெஸ்டாரன்டை எங்களுக்கு இப்போப் போய்ப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்திருக்காங்க தான். ஆனால் அவங்கல்லாம் நல்ல சமையல் சாப்பிட்டிருப்பாங்களா என நம்ம ரங்க்ஸுக்கு ஜந்தேகம்! இஃகி, இஃகி, அதான் ரிஸ்க் எடுக்கறதில்லை. மதுரைனா கோபு ஐயங்கார் தான். அதுவும் இப்போப் பையரோட ஏப்ரல்லே போனப்போ சொதப்பல் தி கிரேட்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெள்ளையப்பம் கடிக்கவே முடியலை!

   நீக்கு
  3. கோபு அய்யங்காரும் அப்படித்தானா? செஃப் மாறியிருப்பார்!

   நீக்கு
 13. காலை வணக்கம். நீண்ட பதிவாக தெரிகிறது. வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ஊமத்தம் பூவுக்கு இப்படியொரு பெயரா,,,,?இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்,நேதாஜி இருக்கிறாரோ இல்லையோ,அவர் நினைவு சுமந்து நாம் இருக்கிறோம்,ரெக்கை முளைத்த புறாக்கள் இரண்டும் ஆஸ்பத்திரி ஜன்னலிலிருந்து ஆளற்ற வைகை எக்ஸ்பிரஸில் வந்து அமர காத்திருக்கிறதோ,ஜோக் விகடனில் வெளி வந்ததா,,,?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் விமலன்.. ஊமத்தம் பூவுக்கு ஸ்பீக்கர் பூ எண்டொரு பெயர் உண்டு. ஜோக் விகடனில் வந்ததுதான்.. மதன் விகடனில்தானே போட்டுக்கொண்டிருந்தார்...

   நீக்கு
 15. நல்ல தொகுப்பு. வைகை வண்டியை நல்ல கோணத்தில் படமாக்கியிருக்கிறீர்கள். படகு போன்ற இலை அழகு. சிறு வயதில் நானும் இந்திரஜால காமிக்ஸ் ரசிகை. ஆனால் மாயாவி புத்தகங்கள் முன் போல்
  உங்களுக்குப் பரவசம் தருகின்றனவா என அறிய ஆவல்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ராமலக்ஷ்மி.

   மாயாவி புத்தகங்கள் பழைய வியப்பைத் தராது. ஆனால் அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் இல்லையா?

   நீக்கு
 16. படத்தின் மேல் க்ளிக் செய்து ஜூம் செய்தால் நேதாஜி இருக்கிறார்! வாசகர்களைக் கவரும் நல்ல தலைப்பு:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வாசகர்களைக் கவரும் நல்ல தலைப்பு:).//

   நன்றி. நேதாஜி கண்ணில் பட்டுவிட்டார் போல!

   நீக்கு
 17. ஊமத்தம்பூ, தும்பைப்பூ, எருக்கம்பூ என நிறைய கிராமத்தில் ரசித்திருக்கிறேன் என இப்போது தெரிகிறது. இதற்காகவாவது ஓரு முறை கிராமம் போகவேண்டும். நெட்டில் பூக்களைப் பார்க்கும் இளசுகளுக்கு நேரடியாகக் காட்டவேண்டும்.

  மதுரையின் மீது இப்படி ஒரு obsession-ஆ! நினைவுகளை வைத்துக்கொண்டு பழைய கடைகள், ஹோட்டல்களுக்குப்போக ஆசைப்படும் மனம். அப்படியாவது கடந்த காலத்தில் கொஞ்சம் கிள்ளி எடுத்துவரமுடியாதா என்கிற நப்பாசைதான்!

  போனவருடம் எஸ்.ரா-வின் பக்கத்தில் எழுத்தாளர் கர்ணன் பணக்கஷ்டத்தில் இருப்பதாகப் படித்தேன். அதற்கப்புறம் சிலமாதங்கள் கழித்து அவரது மொபைல் நம்பர், முகவரி என எஸ்.ராவின் பக்கத்தில் தேடியும் அகப்படவில்லை.

  நேதாஜி தெரிகிறார் உங்கள் படத்தில்.

  நேதாஜியின் அஸ்தி இருப்பதாகச் சொல்லப்படும் டோக்கியோவின் Renkoji temple -க்கு 2002-ல் சென்றிருக்கிறேன். அது ஒரு தனிக்கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்.. இந்தப் பூக்களைக் காண கிராமத்துக்குத்தான் செல்ல வேண்டுமா? புத்தர் மண்டி கிடக்கும் எங்கும் பார்க்கலாமே..

   மதுரை என்று இல்லை.. இளமை கழிந்த எந்த ஊர் பற்றிய நினைவும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன..

   கர்ணன் முகவரி, அலைபேசி எண் தேவைப்பட்டால் தருகிறேன். அவருடைய படைப்பு ஒன்று என் வேண்டுகோளுக்கிணங்க கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் முன்னர் வந்திருக்கிறது.

   நேதாஜி அஸ்தி பற்றிய கதையை உங்கள் தளத்தில் பகிரலாமே...

   நீக்கு
 18. கேட்க மறந்துபோனேன். இந்த antique clock கே.ஜி.எஸ்-க்கு எப்படி எங்கிருந்து கிடைத்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கே ஜி எஸ்க்கு கிடைத்தது படமா, கிளாக்கா என்று அவர்தான் சொல்லவேண்டும்.

   நீக்கு
 19. அதென்னமோ தெரியல்ல.. கண்பட்டதுபோல:). புளொக் பக்கம் ஒழுங்கா பிரசண்ட் ரீச்சர் சொல்லவே முடியுதில்லை... விடக்கூடாஅது பூஸோ கொக்கோ என நினைச்சு இப்போ ஓடி வந்தேன்ன்... கதம்பம் வழமைபோல அழகு... ஸ்பீக்கர் பூக்களுக்கு.. ஊமத்தம் பூ எனத்தானே பெயர்?:)... பொருத்தமே இல்லையே:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூசாரே நீங்க மட்டுமில்ல நானும்தேன் ப்ரெஸன்ட் டீச்சர்ஸ்னு ஆஜர் வைக்கக் கஷ்டமாகி வருது!!! இருந்தாலும் பூஸார் மட்டும்தான் கொக்கோ பாருங்க நானும் உங்களைப் போலதான் ஓடோடி வந்தேன்....ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. வாங்க அதிரா... சமீபத்தில் ஸ்பீக்கர்கள் உபயோகிக்க தடை விதித்திருக்கிறார்கள். அதை இதோடு சும்மா சேர்த்துச் சொன்னேன். ஊமத்தம்பூவை சிலர் ஸ்பீக்கர் பூ என்று சொல்வார்கள்.

   நீக்கு
 20. அதென்ன மதுரை ரெயின் அவ்ளோ பழசா/வயசா இருக்கே:) ஒருவேளை வயதானோர் பயணம் செய்யும் புகைவண்டியோ?:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

  கற்பூரவள்ளி வாசம் வருது:)..

  அது பழைய கிராமஃபோன் எனப்படுவதுபோல இருக்கே.. ஆனா ஏ அண்ணன் மேலே சொல்றார்ர்.. மணிக்கூடு என.. எப்படி நேரம் பார்ப்பது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரை டிரெயின் மட்டும் இல்லை, பல டிரெயின்கள் அப்படிதான் இருக்கும்!

   கற்பூரவள்ளி வாசம்.. வந்த இருமல் நின்று விட்டது!

   நீக்கு
 21. ஸ்பிக்கர் பூ மலர தயங்கும் காரணத்தை ரசித்தேன்.
  நேதாஜி தெரிகிறார். நான் இரண்டு மூன்று தடவை அந்த வழியாக கோவிலுக்கு ஆட்டோவில் போகும் போது போட்டோ எடுத்து வைத்து இருக்கிறேன் நேதாஜியை.
  பழைய தரம் இருக்கும் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.
  பழைய ஆட்கள் இப்போது இருக்க மாட்டார்கள். அதுவும் பழைய ஆட்கள் வாடிக்கையாளர்களை தன் சொந்தம் போல் பார்ப்பார்கள். இப்போது அப்படி எதிர்ப்பார்க்க முடியாது. கடைகளும் நிறைய வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்பீக்கர் பூ ரசித்ததற்கு நன்றி கோமதி அக்கா.

   நானும் நேதாஜியை மட்டும் படம் எடுத்து வைத்திருந்தேன். இப்போது தேடமுடியவில்லை!

   ஆமாம்.. மதுரை நிறைய மாறி விட்டது.. அது சரி, எந்த ஊர்தான் மாறவில்லை!

   நீக்கு
 22. கற்பூரவள்ளி அழகு, படத் தொகுப்பு, ஸ்ரீப்பு எல்லாம் அருமை.
  அது திசைகாட்டும் கருவியோ , கப்பலில் இருப்பது போல் இருகிறது.

  பதிலளிநீக்கு
 23. //மருத்துவமனையிலிருந்து விடுபட்டு வீடு வந்த அப்பாவைப் பார்க்க வந்த எழுத்தாளர்கள் கர்ணன் அவர்களும், உஷாதீபன் அவர்களும்...//

  இருவரையும் பார்த்தது இல்லை.
  அவர்கள் நிற்கும் அறை பக்கம் செய்தி தாள்களா? அப்படி உயரமாய் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அக்கா... ​உஷாதீபன் கதைகள் இப்போதும் தினமணி கதிரில் அடிக்கடி வரும்.

   ஆமாம்.. பின்னால் தெரிவது வருடக்கணக்கில் சேர்த்து வாய்த்த தினசரி செய்தித்தாள்தான்!​

   நீக்கு
 24. திருவெண்காட்டில் இருக்கும் போது மாதா மாதம் மாயவர்ம் போய் வாங்கி வருவார்கள் முத்து காமிக்ஸ் கதை புத்தகத்தை.இரும்பு கை மாயாவிஇப்போதும் இருக்கிறது வீட்டில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 70 களில் வந்த முது காமிக்ஸ் புத்தகங்களே பத்திரமாக வைத்திருக்கிறீர்களா அக்கா?

   நீக்கு
  2. 73 ம் வருடத்திலிருந்து இருக்கிறது ஸ்ரீராம், நீங்கள்தான் பார்த்தீர்களே!
   திருமணத்திற்கு முன் வாங்கியது இல்லை.
   திருமணத்திற்கு பின் கணவர் வாங்கி தந்த புத்தகம் அது.

   நீக்கு
  3. ஓ... பார்த்தேனா? நினைவில்லை அக்கா. ஓரிரு புத்தகங்கள் வாங்கிச் சென்று படித்து வீட்டுக் கொடுத்தேனோ?

   நீக்கு
 25. நேதாஜி படத்தில் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி துணை எங்கு இருக்கிறது என்று கேட்டு இருக்கலாம்.
  எல்லோரும் சொல்லி இருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 26. //சிலசமயங்களில் சுவை நரம்புகளைவிட நினைவு நரம்புகள் சுவை அதிகம் தருகின்றன இல்லை?//
  உங்கள் பாஸ் அங்கு போக விருப்ப பட்டது தன் தந்தையின் நினைவுகளை போற்றத்தான்.
  நினைவு நரம்புகள் சுவை அதிகம் தான்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  எப்போதும் போல் அழகான படங்கள்.

  ஊமத்தை செடியின் பூக்கள் ஸ்பீக்கர் ஒலி கேட்டு மலர தயாராக காத்திருப்பது அழகு.

  இரண்டாவது படம் அந்த கால டைம்பீஸின் ஒரு மாறுபட்ட புது வடிவமோ?

  என்ன இது! ஒரு அப்பள பஜ்ஜியாவது போடக்கூடாதா? வெறும் அப்பளம் விழுங்க முடியவில்லையே என நினைக்கிறதோ காக்கை...!

  புறாக்கள் கேமராவை பார்க்கும் பார்வையே அழகு.

  தங்கள் பாஸ் சாப்பிட ஆசைப்படும் உணவகம், இன்னமும் பெயர் மாறாமல் அப்படியே உள்ளதா? நினைவுகள் என்றுமே மறக்க இயலாதவைதான். உணவின் சுவையை விட நினைவின் சுவை மகிழ்ச்சியை தரும். உண்மைதான்..

  யாருமில்லாத வைகை ரயில் பிரயாண ஆசையை தூண்டுகிறது. எனக்கும் கூட்டம் படு அலர்ஜி. இதுவன்றோ சுகம் என எண்ண வைக்கிறது வைகை.

  நேதாஜி மரங்களுக்கிடையே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறாரே.. நான் தலைப்பை பார்த்து இன்னமும் அவரைப் பற்றிய புரளிகள்தான் ஓயவில்லையோ என நினைத்தேன்.

  நீள வாக்கில் எடுக்கப்பட்ட ரயிலும், படகு போன்ற அமைப்பையுடைய இலைகளும் கண்களை கவர்ந்த அழகான படங்கள்..

  புத்தகங்கள் அறிமுகமும், ஜோக்கும் நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   எல்லாப் படங்களையும் ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 28. கோமதி அரசு சொன்னதும் தான் கவனித்தேன். பக்கத்து அலமாரியில் பேப்பர்கள்/தினசரிகள்? அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை!

  அந்தக் கடிகாரம்(?) 1872 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பது தெரிகிறது. இதை கேஜிஎஸ் எங்கே வாங்கி இருப்பார்? அல்லது குடும்பச் சொத்து?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடிகாரம் முதல் பரிசு.
   நேதாஜி இரண்டாம் பரிசு,
   திரைக் கீஸூகீஸூக்கள் மூன்றம் பரிசு,நாற்காலியை உதைத்த நடிகர் யார்.
   கலர் ஸ்ரீயா, 60களில் தானே பிரபலம் ஆனார்.

   வைகை படம் ஜோர். மற்ற விவரங்கள் தெரியாது.
   எழுத்தாளர்கள் பக்கத்தில் காணப்படும் பத்திரிகைகள் உங்கள் வீட்டுதா.
   அந்த ஜோடிப்புறாக்களும் உங்களை மாதிரி ஊருக்குக் கிளம்புகிறதோ.
   கூம்பிய மொட்டு மலரும் படம் ஒன்றும் போடுங்கள். வாஸ்து சொல்கிறதுஹாஹா.

   நீக்கு
  2. வாங்க கீதா அக்கா... அவருக்கு வந்திருந்த படமாக இருக்கக் கூடும்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா.. குமுதம் கிசுகிசு பற்றி நீங்கள் மட்டுமே பிரஸ்தாபித்திருக்கிறீர்கள்! பரிசுகளை நன்றி!

   நீக்கு
 29. வாவ்!!! என்ன அழகான க்ளாக்! ஆன்டிக்!! எங்கிருந்து கிடைத்தது கே ஜி எஸ் அண்ணாவுக்கு?!! நல்ல கலெக்ஷன். (ஆஹா அங்கிள்னு சொல்லனுமோ...பூஸார் எல்லாரையும் அப்படித்தானே சொல்லிக் கொண்டு திரிகிறார்...ஹா ஹா)

  ஊமத்தம் பூ அண்ட் ஸ்பீக்கர் உங்கள் கருத்து செம...இரண்டையும் லிங்க் செய்து கொடுத்தது....மிக மிக ரசித்தேன் ஸ்ரீராம்...

  மாயாவி எல்லாம் வீட்டிலா ஆஆஆஆ....வீட்டில் அதெல்லாம் யார் கண்ணிலும் படக் கூடாது வாங்கிதரவும் மாட்டார்கள். எங்களை வாசிக்கவும் விட மாட்டார்கள். எங்கள் வீட்டு வாண்டுகளில் பாடப்புத்தகம் இடையில் கதை புக் வைத்து ரகசியமாகப் படித்தவள் என்றால் அது நாந்தேன்.ஆனா அதுவும் நான் யாருக்கும் கமிஷன் கொடுக்கலைனா என்னைப் போட்டுக் கொடுத்துடுங்க...எல்லாம் கே பில்லா, கே ரங்கா கேஸுங்க. ஆனா இப்ப ஒரே பாச மழைதான்...எங்கிட்ட

  நானும் ஒரு முறை காக்கைக்கு முழு அப்பளம் வைத்தேன். அது தூக்க முயற்சி செய்த போது கொஞ்சம் உடைந்தது. அப்புறம் உடைந்த பகுதியை அலெக்காகத் தூக்கிக் கொண்டு பறந்தது..அடுத்த வீட்டுக் கூரையின் மீது உட்கார்ந்து கொஞ்சம் அந்த அப்பளத்தை வைத்து அப்படியும் இப்படியும் தலையை ஆட்டியது. வேறு காக்கை வருகிறதா என்று பார்த்ததோ என்னவோ...அப்படி ஆட்டியதில் அப்பளம் உடைந்தது. வாயில் உள்ளதையும் கூரையின் மீது போட்டு உடைத்துத் தின்றது!!

  எனக்கு புறா பறப்பதை எடுக்க ரொம்பவே ஆவல் உண்டு. அதுவும் வெங்கட்ஜி பறக்கும் புறாக்கள் படம் பகிர்ந்த நினைவு. மிக அழகாக இருந்தது. நானும் பல முறை முயன்றும் முன்பு என் கேமராவில் சரியாகச் சிக்கவில்லை. இப்போது கேமராவே ரிப்பேர். படம் எடுக்க முடியாமல் இருப்பதே ஏதோ கை ஒடிந்தது போல் உள்ளது. ஸ்ரீராம் நீங்க பறந்த புறாக்களைக் கூட எடுத்திருக்கலாமோ?!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வர்றீங்க! எங்கள் காக்கை அந்த அப்பளத்தை கைவிட்டு விட்டது என்று நினைவு!

   பறந்த புறாக்களை படம் எடுத்தால் வானம்தான் மிஞ்சுகிறது!

   நீக்கு
 30. சுவை நரம்புகளை விட நினைவு நரம்புகள்// யெஸ் யெஸ் ஸ்ரீராம் அதுதான் முன் நிற்கும். அந்த அன்பும் அவர்கள் நம்முடன் ஆன பல சம்பவங்கள் அப்படியே ஒரு படம் போல மனதில் ஓடும்!

  ரயில் அந்த உட்புறம் எடுத்திருக்கும் படம் செம செம அழகு! எனக்கு ரயில் பயண்ம் என்றாலே அப்படியே குஷியாகிவிடுவேன். ரொம்பப் பிடித்த பயணம் என்றால் ரயில்தான். அதுவும் ஜன்னல் சீட் கண்டிப்பாக வேண்டும்!!!!!!

  கற்பூரவல்லி போட் போலவும் இருக்கு....நடுவில் இருப்பது ஊதுபத்தி செருகி வைக்க வாகாக இருப்பது போல் ஊதுபத்தி ஸ்டான்ட் போலவும் இருக்கு. அப்புறம் நடுவில் ஒரு மெலிதான தண்டுடன் கூடிய செம்பருத்தி அல்லது நாம் சிறு வயதில் கிள்ளி எறிவோமோ ஒரு பூ அந்தப் பூ அல்லது செவ்வந்திப் பூ இப்படி ஏதேனும் செருகி ஃப்ளவர் வேஸ் போலவும் அழகு செய்தால் எப்படி இருக்கும் என்றும், தீப ஏற்றும் விளக்கு போலவும் கற்பனை சென்றது!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா மேல் பாஸுக்கு பாசம் அதிகம். அதுதான்!

   ரயிலில் கூட்டம் இருந்தால் சுவாரஸ்யமா, காலியாய் இருந்தால் சுவாரஸ்யமா கீதா?

   கற்பூரவள்ளி கற்பனை சுவாரஸ்யம்!

   நீக்கு
  2. ரயிலில் கூட்டம் இல்லாம காலியா இருந்தா ஃபோட்டோ எடுக்க ஸ்வாரஸ்யம்!!! ஆனா கூட்டம் இருந்தா அது தனி ஸ்வாரஸ்யம்...பதிவு தேறுமேன்ற ஸ்வாரஸ்யம்!!!! என்ன சொல்லறீங்க ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 31. நேதாஜி கொஞ்சூண்டு தெரிகிறார்....

  அந்தப் புறாக்கள் அப்பாவை நலம் விசாரிக்க வந்தனவோ!!?

  கற்பூரவல்லி இன்னொன்றும் தோன்றியது...குழந்தைகள் இருவர் இரு கைகளையும் ஒருவருக்கொருவர் சேர்த்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுவார்கள் இல்லையா அப்படியும் தோன்றினர் அந்த இரட்டையர்!!!!

  எல்லாமே ரசித்தேன் ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேதாஜி வெயில் தாங்காமல் நிழலில் இருப்பதால் தெரியாமல் இருக்கிறார்! குழந்தைகள் தட்டாமாலை சுற்றுவது போல கற்பனை அழகு.

   புறாக்கள் அப்பாவை விசாரிக்கதான் வந்தனவோ.. இருக்கும்!

   நீக்கு
 32. இலைப் படகு சூப்பர். முத்து காமிக்ஸ் என்னுடைய பள்ளியிருதி நாட்களில் விரும்பி படித்திருக்கிறேன். இப்போது அதை வாங்கினீர்களா? குழந்தை மனசுதான் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பானு அக்கா.

   எனக்கு குழந்தை மனசுதான்! ஹா.. ஹா.. அந்த மாயாவி புத்தகத்தை இரண்டு வருடங்களில் இரண்டு முறை படித்து விட்டேன்!

   நீக்கு
  2. பானுக்கோவ்....நானும் அப்ப வாசிக்க முடியாத காமிக்ஸ் எல்லாம் என் மகன் வாசித்த போது வாசித்தேன்...இப்பவும் வாசிக்க ரொம்பப் பிடிக்கும்...

   கீதா

   நீக்கு
 33. கிசுகிசுக்கள் 70களில்தான் பிரபலம் ஆயின. ஆங்கில ஃபிலிம் ஃபேர் பார்த்து காப்பி அடிக்கப்பட்ட விஷயம். அதையெல்லாம் படித்தால் பெரிய அக்கா திட்டுவார்கள் என்பதால் படித்ததில்லை.

  பதிலளிநீக்கு
 34. நேதாஜி ஆர்வத்தை தூண்டவே எழுதியது அல்லவா நான்தேடவில்லை

  பதிலளிநீக்கு
 35. நறுக்கிய ஜோக்ஸ் நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!