சனி, 29 செப்டம்பர், 2018

நம்பிக்கையுடன் போம்மா... நல்லது நடக்கும்1)  ".............. இதுவரை, அரசு பள்ளி மாணவர்கள், ஐந்து லட்சம் பேரை சந்தித்துள்ளோம்.'படிப்பிற்கு வறுமையோ, தமிழ் வழிக் கல்வியோ தடையில்லை. பள்ளி பருவத்தில், உங்களை விட வசதி வாய்ப்பு குறைந்திருந்த நாங்கள், மருத்துவராகவும், ஆசிரியராகவும், வந்துள்ளோம் என்றால், உங்களால் ஏன் முடியாது' என, கேட்கும் போது, மாணவர்களிடம் உற்சாகத்தை காண்கிறோம்......"

அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்த, 30 பேருடன் சேர்ந்து, மாணவர்களுக்கு வழிகாட்டியான, 'திசைகள்' அமைப்பை நடத்தி வரும், அரசு மருத்துவமனை மருத்துவர், தட்சிணாமூர்த்தி.


2)  ஆனந்தியை 'நம்பிக்கையுடன் போம்மா நல்லது நடக்கும்' என்று சொல்லி அனுப்பினார்.

இது நடந்து சில நாளாயிற்று

திடீரென ஒரு நாள் ஆனந்தியின் வீட்டு வாசலில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் கார் வந்து நிற்கிறது...3)  ஒரு வித்தியாசமான செய்தியாக...

உயிரிழந்த மாணவனின் வங்கிக் கடனை செலுத்திய அதிகாரிகள் பற்றிய செய்தி...
36 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. உயிரிழந்த மாணவனின் கடனை அடைத்த செயல் பாராட்டுக்குரியது..

  ஏழைத் தாயின் வயிற்றில் பாலை வார்த்திருக்கின்றார்கள்...

  பதிலளிநீக்கு
 3. புரட்டாசி சனிக்கிழமை...
  பெருமாள் கோயிலுக்குப் போய்ட்டாங்களா எல்லாரும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னிக்குக் கூட்டத்திலே பெருமாளை வீட்டிலேயே தான் பார்த்துக்கணும். :) ஒரே தலைவலி 2,3 நாட்களாக. அதான் தாமதம்! இப்போக் கூடச் சீக்கிரமாக் கணினியை மூடிட்டுப் போயிடுவேன். :(

   நீக்கு
  2. //புரட்டாசி சனிக்கிழமை...
   பெருமாள் கோயிலுக்குப் போய்ட்டாங்களா எல்லாரும்!...//

   பள்ளி கொண்ட பெருமாளானேன்!! லேட் திருப்பள்ளி எழுச்சி!

   நீக்கு
  3. இஃகி, இஃகி, நானும் வந்திருக்கேன் இன்னிக்கு! :) @Sriram :P

   நீக்கு
  4. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம். நான் லேட்னு சொன்னேன்!

   நீக்கு
  5. இஃகி, இஃகி! இன்னும் கொஞ்ச நாள் போனா 'இஃகி' போட்டால் யாரானும் அடிக்க வருவாங்கனு நினைக்கறேன். :))))))))

   நீக்கு
  6. "ஹா ஹா ஹா..."

   இதை காபி செய்து டிராப்டில் வச்சுக்கோங்க அக்கா.. அவ்வப்போது இதை காபி செய்து தேவையான இடத்தில போட்டுடலாம்! ஹிஹிஹி...

   நீக்கு
 4. எல்லாமே புத்தம்புதுசு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம். வெங்கட ரமணா கோவிந்தா கோவிந்தா🙏🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் பானுக்காவின் சத்தம் வேற மாதிரி இருக்கற மாதிரி இருக்கே!! ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
 6. மாவட்ட ஆட்சியர் போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்
  போற்றுவோம் வணங்குவோம்

  பதிலளிநீக்கு
 7. மாவட்ட ஆட்சியர் செய்தது மனதை நெகிழ்த்தியது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத் தகுதியே நெஞ்சில் ஈரமிருக்கவேண்டும் என்பதுதான். முதல் செய்தியும் மனதைக் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டுமே நல்ல செய்திகள்.
  அரசு பள்ளியில் படித்தாலும் உயர்ந்த நிலை அடையலாம் என்று தன்னம்பிக்கை அளிக்கும் நல்ல செயல். அவர்களியயும் வாழ்த்த வேண்டும்.
  நம்பிக்கையோடு போம்மா என்ற மாவட்ட ஆட்சியர் இவர்செய்த செயல் அந்த குழந்தைகள் நல்லபடியாக வாழ உதவும்.கலெக்டர் தன்னை அண்ணன் என்று கூறி கொண்டது மிக சிறப்பு. அண்ணன் வாழ்க!

  பதிலளிநீக்கு
 10. கந்தசாமி எங்க ஊர் கலெக்டர். பெரியர்களை மதிப்பது, ஆதரவற்றோருக்கு நலத்திட்டங்கள் செய்வது, பழங்கால இடங்களை புதுப்பித்தல்ன்னு நல்லாவே செயல்படுகிறார். ஆட்சியாளர்கள் அவர் கையை கட்டிப்போடாம இருந்தால் நல்லா இருக்கும்.

  ஒருவர் உயிரிழந்துட்டா அவரோடு வங்கி லோன் காலாவதியாகிடும்ன்னுல நினைச்சுட்டு இருக்கேன்

  பதிலளிநீக்கு
 11. புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும்தான் பரியேறும் பெருமாள் ஞாபகத்தில் வருகிறாரோ !

  பதிலளிநீக்கு
 12. நெகிழ வைத்த பதிவு. கலெக்டரும், வங்கி அதிகாரிகளும் கண்ணீர் வர வழைத்து விட்டனர். கோடிக் கணக்கில் கடன் வாங்கி விட்டு நாட்டை விட்டு ஓடி விட்டு ஓடி விட்டவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, அப்பாவிகளை ஆட்டிப் படைக்கின்றனர்.(இன்று கில்லர்ஜியின் வேலையை நான் செய்கிறேனோ?;)

  பதிலளிநீக்கு
 13. கலெக்டர் உண்மையில் கருணைசாமிதான்.

  மிச்சமுள்ள கடனை உடனே திருப்பு என வங்கி நோட்டீஸ் அனுப்பி மிரட்டாமல் இருந்திருந்தால், ஒருவேளை பாலமுரளி இன்னமும் உயிரோடிருந்திருப்பாரோ என்றும் ஒரு சிந்தனை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அதே சிந்தனை. அந்தக் குற்ற உணர்ச்சியில்தான் அவர்கள் அப்படிச் உதவி செய்தார்களோ ​என்றும் தோன்றியது. எப்படியும் நல்ல செயல்.

   நீக்கு
  2. இந்தியர்கள் (குறிப்பா தமிழர்கள், மலையாளிகள்) சிலர், கல்ஃப் வங்கிகள்ல லோன் வாங்கிட்டு, கட்டாமயே இந்தியா திரும்பி அப்ஸ்காண்ட் ஆயிடறாங்க. வங்கிகளும் ரொம்பவும் தேடுவதில்லை (லோனுக்கு இன்ஷ்யூரன்ஸ் இருப்பதாலும், தேடுவதில் கூடுதல் பணம் செலவழியும் என்பதாலும்.). ஆ னா ல், எப்போவாவது மறந்துபோய் அந்தத் தேசத்து ஏர்போர்ட்டுக்குப் போனால், அவ்வளவுதான், உடனே ஜெயிலில் போட்டுடுவாங்க, எவ்வளவு குறைவான தொகையாக இருந்தாலும் சரி. உதாரணமா துபாய் பேங்க் லோனை ஸ்வாகா பண்ணியவர், பல வருடங்களுக்குப் பிறகு, ஓமான் செல்லும் வழியில் ஃப்ளைட், துபாயில் இறங்கியது (அவர் மறந்திருப்பார் போலத் தெரிகிறது, கனெக்டிங் ஃப்ளைட் இருந்திருக்கலாம், இல்லை சென்ற ஃப்ளைட்டில் பிரச்சனை என்பதால் வேறு ஃப்ளைட் மாத்தியிருக்கலாம்). உடனே இமிக்ரேஷனில் அவரை அரஸ்ட் பண்ணிட்டாங்க.

   நம்ம ஊர் மாதிரி கழுத்தைப் பிடிக்கும் வழக்கம், அடியாட்களை அனுப்புவது என்பதெல்லாம் அங்கு கிடையாது.

   நீக்கு
  3. ஏகாந்தன் அண்ணா அண்ட் ஸ்ரீராம் ஹைஃபைவ் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

   கீதா

   நீக்கு
 14. மூன்று நல்ல பதிவுகள்.
  திசைகளுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.
  கலெக்டர் கந்தசாமி போன்ற மனிதர்கள் வாழ்வில் நம்பிக்கை ஊட்டுகிறார்கள். இந்தச் சின்னக் குழந்தையின் குடும்பம் சிறக்க வேண்டும். செழிக்க வேண்டும்.

  கடனை அடைத்த பெரிய மனிதர்கள். இறந்த மாணவனின் ஆத்மா
  சாந்தி அடைந்திருக்கும். அந்தத் தாயாருக்கும் நல் வழி கிடைக்கும்.
  பதிவுகளுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 15. திசைகள் எல்லா திசைகளிலும் பரவி வளர வாழ்த்துகள்!

  ஆட்சியர் கந்தசாமி அவர்களின் செய்தியை வாசித்து வரும் போது சத்துணவு வேலை கொடுத்தது ஓகே அக்குடும்பத்துக் குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டே அடுத்த வரியை வாசித்ததும் மகிழ்ச்சி. படிப்பும் கூடவே! வாழ்க ஆட்சியர் கந்தசாமி! இதுதான் ஆரம்பம் என்றால் இன்னும் ஏழ்மையில் வாழும் இது போன்ற குழந்தைகளுக்கு நிறைய நல்லது செய்ய வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 16. மூன்றில் இரு செய்திகளைப் படித்துள்ளேன். இருப்பினும் உங்கள் தளத்தில் போற்றத்தக்கோர் வரிசையில் இடம்பெற்றமையறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 17. நல்ல செய்திகள் மூன்றுமே. திசைகளுக்கு வாழ்த்துகள் ஆட்சியாளருக்கும் வாழ்த்துகள்! தொடரட்டும் அவர்கள் பணிகள்!
  அந்த மாணவர் பாவம். ஒரு வேளை வங்கிக் கடன் கேட்டு நோட்டீஸ் வந்தது அவரைப் பாதித்திருக்குமோ? இல்லை என்றால் இப்படி எல்லாம் கடனை ரத்து செய்து மீதியைக் அதிகாரிகள் கட்டுவது என்பது நடக்குமா? யோசிக்க வைக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 18. மூன்று செய்திகளும் சிறப்பு. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.....

  பதிலளிநீக்கு
 19. மூன்றும் அருமையான செய்திகள். ஆட்சியர் கந்தசாமி மிகவும் கவர்ந்துவிட்டார். இப்படி அதிகார பலத்தை நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் நாட்டுக்கு நல்லது. அவரும் ஆனந்தி மற்றும் சகோதரர்களும் இனிதே வாழட்டும்.

  பதிலளிநீக்கு
 20. நல்ல எடுத்துக்காட்டுகள்
  இவர்களைப் போல
  எல்லோரும் நல்லது செய்வோம்!

  பதிலளிநீக்கு
 21. நல்ல உள்ளம் வாழ்க நாடு போற்ற வாழ்க பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!