சனி, 8 செப்டம்பர், 2018

கலெக்டர் கண்ணன் செய்த களப்பணி... அரவணைத்த காவல் உதவி ஆணையர்

1)  "சமூகத்திற்கு தேவையான கடமைகளை கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டியது, குடிமகனின் முதல் பணி.... " 

தமிழக சாலைகளில், வியாழன் தோறும், விபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும், 'தோழன்' தன்னார்வ குழுவின் நிறுவனர் ராதாகிருஷ்ணன்.


2)  தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பல்வேறு வசதிகளுடன், திருமுல்லைவாயல் மேல்நிலைப்பள்ளி பொலிவுப்பெற்றுஉள்ளது.முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனத்தின் உதவியுடன், கடந்த கல்வி ஆண்டில் மட்டும், 16.83 லட்சம் ரூபாய் செலவில், பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.......


ஆமாம்..    அரசு ஒன்றுமே செய்யாதா...?

3)  தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதரவற்ற சிறுவனை காவல் உதவி ஆணையர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம்...  படிக்கும்போது கண்கலங்க வைத்தது.  பாராட்டுகள் காவல் உதவி ஆணையர் பாலமுருகன் ஸார்.


4)  ங்குள்ள நிவாரண முகாமுக்கு சென்ற கண்ணன், தான் ஒரு கலெக்டர் என்பதை யாரிடமும் கூறவில்லை. அங்கிருந்தவர்கள் கண்ணனிடம், 'பையை ஓரமாக வைத்து விட்டு நிவாரண பணிகளில் ஈடுபடுங்கள்' என, அதட்டலாக கூறினர். நிவாரண பணியில் தன்னையும் இணைத்து கொண்டார். லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கினார். பிற மீட்பு பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிரமாக களப் பணியாற்றினார்.....


அவர் கொடுத்த விடுமுறை கடிதத்தை யூனியன் பிரதேச நிர்வாகம் ஏற்காமல் தொடர்ந்து பணி புரிந்த நாட்களாகவே அறிவித்து விட்டது. .

5)  எங்க குடும்பம், பணியாளர்கள் தேவைக்கு போக மீதியை, இலவசமாக கொடுக்கிறோம்.


சுற்று வட்டாரத்தில் கர்ப்பமடைந்த பெண்களுக்கு, 7ம் மாதம் முதல், குழந்தை பிறக்கும் வரையும், 1 வயது வரை குழந்தைகளுக்கும், 16 கோவில்களுக்கு அபிஷேகத்திற்காகவும், சேலத்தில் உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லத்துக்கும் பால் கொடுக்கிறோம்.....

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இயற்கை விவசா யிகளுக்கு, நாட்டு மாடு தேவையெனில், ஒரு ஜோடி மாடு கொடுக்கிறோம். அந்த மாடுகள் மூலமாக கன்று பிறந்த உடன், அந்தக் கன்றை அவர்களுக்குக் கொடுத்து, அந்த ஒரு ஜோடி மாட்டைத் திரும்ப வாங்கிக் கொள்வோம்....

சேலம் மாவட்டம், ராஜாப்பாளையம் பெத்தாம்பட்டி கிராமத்தில், 'காமதேனு' என்ற பெயரில், கோசாலை நடத்தி வரும் பாஸ்கரன்.
26 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்
  துரை செல்வராஜூ ஸார்..
  கீதா ரெங்கன்...
  பானு அக்கா...
  மற்றும் அனைவருக்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை எதிர்பார்க்கலை போலவே! :) இஃகி, இஃகி, துரை தான் சமத்து. வந்தாலும் வராட்டியும் விடாமல் வரவேற்கிறார். :)

   நீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. அனைத்து செய்திகளும் மகத்தானவை..

  நல்லோர் யாவரும் நலம் பெற்று வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், அண்ணாஸ், அக்காஸ், தம்பி நெல்லை (நான் அக்கானு சொல்லணுமாம் அதுக்காகவே என்னை வம்புக்கிழுத்து ஹா ஹா ஹா) , நட்புகள், அனைவருக்கும்!

  அப்பால மதியம் மேல்தான் வர இயலும்...நிறைய பதிவுகள் வெயிட்டிங்க்....நேரம் கிடைப்பதே இப்போது சிரமமாக இருக்கிறது...முடிந்த அளவு வாசிக்க முயற்சி!!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. முதல் மற்றும் ஐந்தாவது செய்திகள் அறியாதவை... நன்றி... அனைவருக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 7. எல்லா ஊர்களிலும் இப்பொழுது பள்ளியை பராமரிப்பது பொதுமக்களின் வேலையாகி விட்டது.

  இது அரசுக்குத்தான் அவமானம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதே இதன் அடையாளம். எத்தனை வருடங்களுக்கு அரசையே எதிர்பார்ப்பது? முன்னெல்லாம் பள்ளியில் வகுப்பறைகளைக் கூடச் சுத்தம் செய்வது அந்த அந்த வகுப்பு மாணவ, மாணவிகளே! வாரம் ஒரு குழு எனத் திட்டமிட்டு வகுப்பறையைச் சுத்தம் செய்து, குடிக்க நீர் பிடித்து வைத்து, கழிவறையைச் சுகாதாரமாகப் பேணி எல்லாம் செய்தோம். இப்போ அதெல்லாம் தினசரிகளில் பெரிசாப் படம் பிடித்துப் போட்டு மாணவ, மாணவிகளுக்குச் சித்திரவதை எனச் சித்திரிக்கின்றனர்! :(

   நீக்கு
 8. அனைத்தும் நல்ல செய்திகள்.
  அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 9. அனைத்தும் பாசிட்டிவ் செய்திகளாக இருக்கிறதே.பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 10. மதிய வணக்கம்! :) இப்போது தான் வர முடிந்தது.

  அனைத்தும் அருமையான செய்திகள். சம்பந்தப்பட்ட நல்லுள்ளங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. தோழனை இங்கு கண்டதும் மீண்டும் எனக்கு பல நினைவுகள். 2012 ல் சாலை விதிகள் குழு தொடங்கிய சமயம் அதன் பின் அவர்கள் நிறைய பாம்ப்லெட்ஸ் ஒவ்வொரு சிக்னலிலும் கொடுத்துவந்தார்கள். அதில் எனக்கு சேரலாமே என்று ஆர்வமும் எழுந்தது. அப்போது நான் பாண்டிச்சேரி சென்னை என்று இருந்ததால் முடியவில்லை. 2013 ல் நான் மாம்பலம் பஸ்டான்ட் சிக்னலில் இருந்த போது இந்த நோட்டிஸ் கொடுத்தார் ஒரு தோழன். அதைப் பெற்ற நான் தொடர்பும் கொண்டேன். மெயிலும் வந்தது. பயிற்சி தினம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு அறுவை சிகிச்சை. எதிர்பாராவிதத்தில் வந்ததால் அதன் பின் கலந்து கொள்ள இயலாமல் போனது. அதன் பின் அவர்களை திருவான்மியூர் சிக்னல் என்று பல இடங்களிலும் பல வேடங்களில் பார்ப்பதுண்டு. நான்ம் வண்டி ஓட்டுபவள் என்பதால் மனதில் தோன்றும். நல்லதொரு சேவை என்று. ஆனால் இப்போது சேர முடியாத சூழல்.

  தோழர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மேலும் அவர்களது சேவை விரிய நன்மை பயத்திடவும் எனது வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. இன்றைய டாப்பர் பாலமுருகன் அவர்கள் தான். அந்தச் செய்தியில் //அன்று இரவு தூக்கமே வரவில்லை. மனம் தத்தளித்தது. யாருமே இல்லை என்றால் சிறுவன் என்ன செய்வான். எதிர்காலத்தில் பழிக்குப் பழியாக கொலைகாரனாகி விடக் கூடாது. அவனை எப்படியாவது ஆதரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று இரவோடு இரவாக என் மனைவி கலா ராணியுடன் இதுகுறித்து விவாதித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஏற்கெனவே, 2 குழந்தை உள்ள நிலையில் மேலும் ஒரு குழந்தை நமக்கு சுமை அல்ல என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்த நாள் காலையிலேயே சிறுவன் தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று அங்குள்ள நிர்வாகிகளிடம், கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும் அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானாலும் நானே செய்வேன் எனவும் எழுதி கொடுத்துவிட்டு, எனது செல்போன் எண்களையும் கொடுத்தேன்.

  மேலும், அன்றே கார்த்திக்கை எனது வீட்டுக்கு அழைத்து உணவளித்தேன். எனது மகனுக்குள்ள உடைகளை அவனுக்கு அளித்தேன். தற்போது கார்த்திக்கும் எனது இன்னொரு மகன்தான். அவன் எனக்கு சுமை அல்ல சுகம்தான்.//

  இதை வாசிக்க வாசிக்க என்னை அறியாமல் அழுதே விட்டேன் ஸ்ரீராம். அந்த அதிகாரியை நேரடியாக மனமாரப் பாராட்ட வேண்டும் என்றும் தோன்றுகிறது. அதிலும் அந்த வரிகள் பழிக்குப் பழி பல சினிமாக்களில் இப்படித்தான் ஹீரோயிஸம் காட்டப்படுகிறது.....மிக மிக நல்லதொரு செயலைச் செய்துள்ளார் பாலமுருகன் மாமனிதர்..

  கீதா

  பதிலளிநீக்கு
 13. மேல்னிலைப்பள்ளி மேம்படுத்தப்பட்ட இப்படியான பல பாசிட்டிவ் செய்திகளை நீங்கள் வெளியிடும் போது எனக்குத் தோன்றும் அதே வரிகளை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள் நீலவண்ணக்கண்ணன்!!!!!

  கலெக்டர் வாழ்க! இப்படி எல்லா அதிகாரிகளும் செயல்பட்டால் நாட்டில் எத்தனை முன்னேற்றங்கள் வரும்...நல்லதொரு சமுதாயம் உருவாகும்.

  பாஸ்கரன் அவர்கள் காமதேனு என்று நடத்திவரும் சேவை காமதேனுவாய் வளர வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அனைத்துச் செய்திகளும் நல்ல செய்திகள்.

  கலெக்டர் சேவை பற்றி எங்கள் ஊர் இதழ்களிலும் வந்தது. சமீபகாலமாய் பதிவுகள் எதுவும் நான் எதுவும் எழுத முடியவில்லை.

  போலீஸ் உதவி ஆணையர் பாலமுருகனின் செயல் மிக மிகப் போற்றுதற்குரியது. மனதை நெகிழ்வித்தது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 15. நற்பணிசெய்வோரை அறிமுகம்செய்யும் பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 16. சிறுவனைத் தத்தெடுத்ததும், கலெக்டர் பத்தியும் படிச்சிருக்கேன். பள்ளிகளைச் சீரமைப்பது அரசின் பணியில்லையா எனக் கேட்டிருக்கீங்க! ஏன் பொதுமக்கள் சீரமைத்தால் என்ன தப்பு? எல்லாவற்றுக்கும் அரசின் கைகளையே எதிர்பார்க்கிறாப்போல் கடந்த வருடங்களில் ஆட்சி செய்தவர்கள் ஒரு தவறான முன்னுதாரணத்தையும், மனப்பான்மையையும் ஏற்படுத்தி விட்டார்கள். மக்கள் டாஸ்மாக்கிற்கு மட்டுமே செலவழிச்சால் போதும், மத்ததை அரசு பார்த்துக்கும் என்னும் மனோபாவம் உருவாகி விட்டது! என்னத்தைச் சொல்ல! இப்படியானும் உருப்படியாச் செய்யறாங்களே என நினைக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 17. ஆட்சியரின் அரிய பணியைப் போற்றுவோம் பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 18. செய்தித் தொகுப்பு வழக்கம்போல சிறப்பாக அமைந்துள்ளது. செய்திகளில் இடம்பெற்ற நல்ல மனிதர்களை பெருமைப்படுத்திப் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 19. செய்தித் தொகுப்பு வழக்கம்போல சிறப்பாக அமைந்துள்ளது. செய்திகளில் இடம்பெற்ற நல்ல மனிதர்களை பெருமைப்படுத்திப் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!