வெள்ளி, 28 செப்டம்பர், 2018

வெள்ளி வீடியோ 180928 : குளிர் விடும் கண்கள் அன்பைப் பொழிகின்ற மேகம்.. மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம்


படம் வெளிவந்த ஆண்டு 1975.  உறவு சொல்ல ஒருவன்.  விஜயபாஸ்கர் இசையில் இனிய பாடல்கள் நிறைந்த படம்.  எல்லாப் பாடல்களுமே இனிமை.  


இந்தப் படத்தை தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட் மாதாந்திர பட வரிசையில் திறந்தவெளித் திரையரங்கில் பார்த்தேன்.  




'பனிமலர் நீரில் ஆடும் அழகை', 'கேளு பாப்பா ஆசையின் கதையை' போன்ற நல்ல பாடல்கள் உண்டு.  தென்னகத்து ஹேமமாலினி பத்மப்ரியாவும் படத்தில் உண்டு.  அவர் பேராசைதான் படத்தின் கதை.




இந்தப் பாடல் கே ஜெ யேசுதாஸ் குரலில் அமைந்துள்ள இனிமையான பாடல்.  மிக இனிமையான பாடல்.




பாடலை எழுதியவர் கண்ணதாசனாயிருக்கக் கூடும்.  இல்லையென்றால் பஞ்சு அருணாச்சலம்.  வரிகள் அமைப்பிலிருந்து கண்ணதாசனாயிருக்கவே வாய்ப்பு அதிகம்.




இந்தப் படம் கன்னட மாங்கல்ய பாக்யா என்கிற படத்தின் தமிழ்த் தழுவல்.    ஆனால் வேறு டியூன்.  இசையமைப்பாளர் வேறு அல்லவா?  இந்தப் பாடல் கன்னடத்தில் ராஜன் நாகேந்திரா இசையில் எஸ் பி பி பாடி இருக்கிறார்.  இந்தக் கன்னடப் பாடல் ஆகாஷ் வாணி வரலாற்றில் ஒரு அதிகமுறை கேட்கப்பட்டு சாதனை படைத்த பாடலாம்.  அந்தப் பாடலையும் கேட்டேன்.  என்னதான் நான் எஸ் பி பி ரசிகனாய் இருந்தாலும் இந்தப் பாடல்தான் அதிக இனிமை.




மோகனப் புன்னகை ஊர்வலமே 
மன்மத லீலையின் நாடகமே 
மோகனப் புன்னகை ஊர்வலமே 
மன்மத லீலையின் நாடகமே   

குளிர் விடும் கண்கள் அன்பைப் பொழிகின்ற மேகம் 
மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் 
..............  இன்பம் யாவும் தணிக்கின்ற எண்ணம் வேண்டும் 
தழுவாத அங்கம் தொட்டு உறவாடவா   

இனிக்கின்ற கொவ்வை செவ்வாய் அழைக்கின்ற ராகம் 
துடிக்கின்ற கன்னம் ரெண்டும் சொல்லட்டும் பாடம் 
மழை முகில் கூந்தல் கண்டேன் 
மதி முகம் தோன்றக் கண்டேன் 
மனதிலே மஞ்சம் கண்டேன் உறவாடவா  

ஒரு புறம் உன்னைக் கண்டால் கோபுர கலசம் 
மறுபுறம் பார்க்கும் போது மேனகைத் தோற்றம் 
நடையினில் அன்னம் கண்டேன் 
இடையினில் மின்னல் கண்டேன் 
அசைவினில் தென்றல் கண்டேன் உறவாடவா  


66 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் (தில்லில ஸ்வீட்டோடு சொல்லிட்டு இங்கும்!!!) துரை அண்ணா, அண்ட் எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். நான் நடனம் ஆடிக்கொண்டே இருக்கிறேன்!

      நீக்கு
  2. காஃபியோடு கிட்டுவுடன், உங்களோடு தில்லியில் ஒரு நடனம் பாட்டு கேட்டுட்டு இங்க பாடல் கேட்க வந்தாச்சு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. என்ன ஒரே முத்துராமன் தாத்தாவின் பாடலா இருக்கே!!! ஏஞ்சலுக்கு ரொம்பப் பிடிச்சுரும்!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது முத்துராமன் பாடல் இல்லை கீதா.. யேசுதாஸ் பாடல். விஜயபாஸ்கர் பாடல்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸாரி முத்துராமன் நடித்த படப் பாடல்னு சொல்லிருக்கணும்...ஹிஹிஹி


      கீதா

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் எல்லாருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  5. அந்தப் பக்கம் ஓரமா போய் நின்னுக்குவோம்!...

    பின்னூட்டப் புயல்..ல வீசுது!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டப் புயல்!!! ஹா... ஹா... ஹா... புயல் இப்போ டாட்டா காட்டிட்டு மதியம்தான் மறுபடி வரும்!

      நீக்கு
    2. ஹா அஹ அஹ ஆமாம் ஸ்ரீராம்.!!!!! யெஸ் துரை அண்ணா..இப்ப புயல் வேற இடத்துல மையம் கொள்ளப் போகுது!!!

      கீதா

      நீக்கு
  6. ஸ்ரீராம் தில்லில கேட்டுச்சு...இங்க வந்து பாட்டு கேட்கும் போது ஏனோ வால்யூம் (கணினி ஸ்பீக்கர் ) ம்யூட் ஆகிடுச்சு வேலை செய்யலை...பார்க்கிறேன் வந்து கேட்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம் வால்யூம் சரியாகி இப்ப கூட தில்லில பாட்டு கேட்குது இங்கதான் பாட்டு கேட்கலையே....எனக்கு மட்டும் தானா?

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு எனக்குக் கேட்குதே கீதா... துரை ஸார் பாட்டு கேட்குதா?

      நீக்கு
    2. ஸ்ரீராம் எனக்கு இப்பவும் கேட்கலை. மொபைல்ல மதியம் கேட்க முடிஞ்சுச்சு கேட்டுட்டேன்...அருமையான பாடல் நிறைய கேட்டதுண்டு. அதுவும் தாஸ் மாமா பாடல்...வரிகள் ரொம்ப நல்லாருக்கு.

      மதியம் மொபைலில் கேட்க முடிந்த பாடலை இப்ப மீண்டும் மொபைலில் கேட்க முயற்ச் செய்தால் ப்ளே ஆகலை....கணினியிலும் ஆகலை என்னவோ தெரியலை. ஆனா மத்த பாட்டு எல்லாம் ப்ளே ஆகுது ரெண்டிலும்....

      கீதா

      நீக்கு
    3. மற்றவர்கள் யாரும் பாடல் கேட்கவில்லை என்று சொல்லவில்லையே கீதா.. அவர்கள் யாரும் விடியோவை ஓடவிட்டுப் பார்த்தார்களா என்று தெரியவில்லை!

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. இந்த படமும் பார்த்து இருக்கிறேன்.
    பாடலும் கேட்டு இருக்கிறேன்.
    இனிமையான பாடல்.
    பத்மபிரியா பேராசையால் வாழ்வை தொலைத்த கதை.

    //இந்தப் படத்தை தஞ்சாவூர் ஹவுசிங் யூனிட் மாதாந்திர பட வரிசையில் திறந்தவெளித் திரையரங்கில் பார்த்தேன். //

    சாரின் அண்ணா தாஞ்சாவூர், திருச்சியில் ஹவுசிங்க் யூனிட் குடியிருப்பில் இருந்த போது விடுமுறைக்கு போவோம். அப்போது நானும் சில படங்கள் இப்படி திறந்தவெளி திரையரங்க்கில் பார்த்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்ப தஞ்சையில் நான் படம் பார்த்த நேரங்களில் சிலநேரம் நீங்களும் அங்கே இருந்திருக்கிறீர்கள்! கிரேட் அக்கா.

      நீக்கு
  10. நாங்களும் சில படங்கள் இப்படி திறந்தவெளி திரையரங்கில் பார்த்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதா மாதம் ஒரு படம், சில சமயங்களில் இரண்டு மூன்று படங்கள் இது போல போடுவார்கள். மாதாந்திர எல்லா வீடுகளிலும் பணம் வசூலிப்பார்கள்.

      நீக்கு
  11. இனிய காலை வணக்கம். இனிய பாடல். விஜய பாஸ்கர்
    இசை எப்பொழுதுமே இனிமை.

    சுஜாதா,முத்துராமன் ஜோடியின் படத்தில், சுஜாதா கடைசியில் ஜெயிப்பார்.
    காவிரி நதியின் ஓரத்தில் கண்ணகி காத்திருந்தாள்
    மாதவி காண வந்தாள்னு ஒரு பாடல் வரும் .அதுவும் பத்மப்ரியா
    என்றே நினைக்கிறேன்.

    வாழ்ந்து காட்டுவேன் படமோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..

      நீங்கள் சொல்வது வாழ்ந்து காட்டுகிறேன் படப்பாடல்தான். வாணி ஜெயராம் குரலில் இனிமையான பாடல். அதுவும் என் லிஸ்ட்டில் இருக்கிறது.

      நீக்கு
  12. இனிய காலை வணக்கம்.

    இனிய பாடல். முத்துராமன் ரொம்பவே படுத்துகிறார்! :) பாடல் கேட்டிருந்தாலும் காட்சி இப்போது தான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சி அவசியமே இல்லை வெங்கட். கானம்தான்... யேசுதாஸின் இனிமையான குரலில் அழகான பாடல்.

      நீக்கு
  13. பாடல் கேட்டுயிருக்கேன்... படம் பார்த்த ஞாபகம் இல்லை...

    பதிலளிநீக்கு
  14. பாடல் நன்று, கேட்ட ஞாபகம் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  15. அக்காலகட்டத்தில் அந்த பத்மபிரியாவிற்காக நான் பார்த்த படங்களில் இதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு
  16. @ Dr.BJ : // அக்காலகட்டத்தில் அந்த பத்மபிரியாவிற்காக...//

    அடடா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... முனைவர் ஜம்புலிங்கம் ஸார்... அப்போ வைரநெஞ்சம் கூட கண்டிப்பா பார்த்திருப்பீங்க.. அதிலிருந்து ஒரு பாடல் பின்னால் பகிர்வேன்...

      நீக்கு
  17. இப்பூடிப் படம் வந்துச்சுனே தெரியலை! ஆகவே பாட்டும் கேட்டதில்லை. மற்றபடி திறந்தவெளித் திரையரங்கில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ப் படங்கள் பார்த்திருக்கேன். மதுரைலே இல்லை! அங்கெல்லாம் தியேட்டர் தான்! கல்யாணம் ஆகிச் சென்னை வந்தப்புறமா அம்பத்தூரி இரண்டு டென்ட் கொட்டாய்கள் தான் இருந்தன! அப்போ அது எனக்கு ஆச்சரியமா இருந்தது. எம்புட்டுப் பெரிய ஊரு! ஒரு தியேட்டர் கூட இல்லையேனு! ராத்திரி நைட் ஷோவில் இரண்டு படம் காட்டுவார்கள். ஒண்ணு தமிழ் இன்னொண்ணு கிந்தி! டிக்கெட் விலை என்னமோ ஒரு படத்துக்குத் தான். ஆனால் கிந்திப்படத்தை அவங்க காட்டும் விதத்தைப் பார்த்தால் படமே பார்க்காமல் எழுந்து வந்துடலாம் போல இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா.. டென்ட் கொட்டாய் வேற.. திறந்தவெளித் திரையரங்கம் வேற...

      நீக்கு
    2. அப்படின்னா அம்பத்தூரில் நான் பார்த்தது டென்ட் கொட்டாய்னு நினைக்கிறேன். ராஜஸ்தானில் திறந்தவெளித் திரையரங்கம்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    3. திறந்தவெளித் திரையரங்கில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ப் படங்கள் பார்த்திருக்கேன்.//

      அதிரா இந்த பாயின்டை நோட் பண்ணினீங்களா?!!!!! ஹா ஹா ஹா இல்லைனா நோட் பண்ணிக்கோங்க....

      கீதா

      நீக்கு
    4. நானும் திறந்த வெளில படங்கள் வருஷத்து ஒன்னு அல்லது ரெண்டு எங்க ஊர்ல திருவிழாவின் போது தேரடில நைட் ஷோ போடுவாங்க....வாகனம் எல்லாம் வலம் வந்து முடிஞ்சப்புறம். ஏதாவது ஒரு நாள் தான்....அப்புறம் சிவராத்திரிக்கு போடுவாங்க....ஆனா பெரும்பாலும் போட்டதையேதான் போடுவாங்க...

      சென்னையில் பிரர்த்தனாவில் குடும்பம் முழுசும் போனோம் 15 பேர்....ரமணா படம்...அப்புறம் அன்பே சிவம் படம்... அவ்வளவுதான்....ரொம்ப சின்ன வயசுல டென்ட் கொட்டகையில அப்பா வழி பாட்டி வீட்டுல வளர்ந்தப்ப பார்த்த படம் எல்லாம் நினைவில இல்ல...

      கீதா

      நீக்கு
    5. எங்கள் ஹவுசிங் யூனிட் திறந்த வெளித் திரைப்படங்கள் மறக்க முடியாத அனுபவங்கள் கீதா. நண்பர்களுடன் அமர்ந்து வெட்ட வெளியில் ஓரளவு சமீபத்தில் ரிலீசாகி இருந்த படங்களை பார்ப்பது... ஆஹா....

      நீக்கு
  18. அந்த நான்கு வருடங்களில் ஒரே ஒரு சினிமா தியேட்டர் நாங்க இருந்த பகுதிக்கு எதிரே தண்டவாளத்துக்கு அந்தப்பக்கம் தெற்கே ராமாவரத்தில் வந்தது. அதுக்குச் சுத்திண்டு போகணும் என்பதால் போனதே இல்லை. அங்கேருந்து ராஜஸ்தான் போனால் இஃகி, இஃகி, அங்கேயும் டென்ட் கொட்டாய் தான்! ஆனால் எங்களுக்கெல்லாம் நாற்காலி வசதி இருக்கும். அப்புறமா ஆந்திராவெல்லாம் சுத்திட்டு மறுபடி அம்பத்தூர் வந்தால் பேருந்து நிலையம் அருகே ரங்கா என்னும் பெயரில் ஒரு டென்ட் கொட்டாய்! இத்தனைக்கும் எண்பதாம் ஆண்டு! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமாபுரத்திலிருந்து அம்பத்தூர் வரை சுத்திகிட்டு டென்ட் கொட்டாய் போகணுமா? அடேயப்பா..

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இது அம்பத்தூரின் தெற்குப் பகுதியில் உள்ள ராமாபுரம். ராமாவரம்னு எழுதி இருக்கேன். இந்தப்பகுதி நாங்க வசிச்ச பகுதி வெங்கடாபுரம்! அது ராமாபுரம்! பின்னர் பல காலனிகள், நகர்கள் என வந்து அம்பத்தூருடைய முகமே மாறிப் போச்சு! :(

      நீக்கு
  19. ரொம்ப நல்ல பாடல். சுஜாதாவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படங்களில் குறிப்பிடத்தக்க படம். அவரை குறிப்பிடாமல் பத்ம ப்ரியாவாம்....க்ர்ர்ர்ர்! எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்று நினைக்கிறேன். விவரங்கள் சொல்கிறேனே தவிர படம் பார்க்கவில்லை.:((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவை விட பத்மப்ரியா நல்லா இருப்பாங்க பானு அக்கா. அதுதான்....

      நீக்கு
    2. ஶ்ரீதர் இயக்கத்தில் சுஜாதாவும் ராஜேஷும்(?) நடிச்ச ஆலய தீபம் படத்திலும் சுஜாதா நடிப்பு நல்லா இருக்கும்.அவங்க பெண்ணாக இளவரசி என்பவர் வருவார். அவர் தான் கடைசியில் சுஜாதாவையும் ராஜேஷையும் சேர்த்து வைக்க முயன்று தமிழ் சினிமாவின் விதிப்படி சுஜாதா செத்துப் போவார்! :)))) என்றாலும் கதைக்கரு நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
    3. பத்மப்ரியாவை எப்படி அழகு என்று நினைக்கிறீர்கள்? முகத்தில் எதுவுமே இருக்காது. கவர்ச்சி கிடையாது, நடிக்கத் தெரியாது. அவரைப் போய் ஹேமமாலினியோடு ஓப்பிடுவது அநியாயம் இல்லை?

      நீக்கு
  20. நல்ல பாடல். முன்னம் ரசித்துக்கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. நல்ல பாட்டாக இருக்கு ஆனா இதுக்கு முன் கேட்டதாக நினைவில்லை..

    பதிலளிநீக்கு
  22. இந்தப் பாடல் என் நண்பர் சுரேஷ் என்பவர் விஜய வாடாவில் பாட நா டேப் செய்திருந்தேன் இப்போது எங்கேயோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் கேட்ட பாடல்தான் இது என்பதே மகிழ்ச்சி.

      நீக்கு
  23. அருமையான பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். முந்தைய வெள்ளி பாடலான வீணை பேசும் பாடலும் நிறைய கேட்டதுண்டு. அப்போது கேட்டது எல்லாமே இலங்கை வானிலி மூலம் தான். பின்பு இப்போதுதான் உங்கள் பகிர்வின் மூலம் கேட்கிறேன் ஸ்ரீராம்ஜி. நல்ல பாடல்கள் ஏசுதாஸின் குரல் அருமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழே பெயர் இல்லா விடினும் துளஸிஜி என்று தெரிகிறது. நன்றி ஜி.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் துளசியின் கமென்ட் போடும் போது அவர் பெயர் போட விட்டுப் போச்சு. ஆனாலும் போடலைனா அவர் கமென்ட் தான்நு தெரிஞ்சுருமேனு அப்புறம் டெலிட் பண்ணி மீண்டும் போடலை....

      கீதா

      நீக்கு
    3. ஜியில் கண்டு பிடிச்சுட்டேன்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!