வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வெள்ளி வீடியோ 180914 : ராமன் அவனல்ல பழிச்சொல்லைக் கேட்க ; கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க





ஏ வி எம் ராஜனின் மனைவி புஷ்பலதா தயாரிப்பில் 1981 இல் வெளிவந்த ஒரு மொக்கைத் திரைப்படம் லாரி டிரைவர் ராஜாக்கண்ணு. 


எம் எஸ் விஸ்வநாதன் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் குரலில் ஒரு இனிய பாடல்.  காட்சியைப் பற்றி நோ கமெண்ட்ஸ்.



வழக்கம் போல எஸ் பி பாலசுப்ரமணியம் குரல் ஸ்பெஷல்.  உடன் இழையும் வாணி ஜெயராம் குரலும் இனிமை.  அண்ணன் தங்கைப் பாடல்.  தங்கைக்கு கண் தெரியாது என்று பாடலைக்கேட்கும்போது தெரிகிறது.  

ரசிக்கலாம்.





என்னென்பதோ ஏதென்பதோ 
கண்ணில் ஒளியேற்றும் தீபம் 
கடவுள் வடிவான ரூபம் 


மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து 
மங்கை தோளோடு தோள் சேர நின்று 
மானம் மரியாதை காவல்கொண்டு 
வாழ்வான் உன் உள்ளம் கோவில் என்று 
அண்ணன் கடன் தீர்க்க வந்தான் 
தன்னை உனக்காக தந்தான் 


ராமன் அவனல்ல பழிச்சொல்லைக் கேட்க 
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க 
ஏட்டில் அதுபோல நூறு தெய்வம் 
ஊரில் இவனல்ல வேறு தெய்வம் 
கண்ணை இமை போலக் காப்பான் 
கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான் 


என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் 
கோடி ஜென்மங்கள் குருடாகப் பிறப்பேன் 
நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது?
நாளும் நீ இன்றி வாழ்க்கை ஏது?
அன்பில் அலைபாயும் நெஞ்சம் 
அண்ணன் திருப்பாதம் தஞ்சம் 


75 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  2. பின்னாட்களில் ஜிவாஜி அவர்கள்
    தன் பெயரைத் தானே கெடுத்துக் கொண்ட படங்களுள் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குக் காரணம் தயாரிப்பாளரின் அன்புத்தொல்லை.

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, எல்லோருக்கும்

    ஹை இன்னிக்கு கீதாக்காவுக்கு பிடிச்ச ஹூரோ பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பாட்டு இப்ப கேட்க முடியலை அப்பால...அருகில் டிவி சானல் ஓடுகிறது எனவே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு தனியாகவே கேளுங்க கீதா... எஸ் பி பி வாணி ஜெயராம் குரலில் நன்றாயிருக்கும்.

      நீக்கு
    2. ஜிவாஜிக்கு எஸ்பிபி?கடவுளே! பாவம் எஸ்பிபி! அப்போத் தான் டிஎம் எஸ் இருந்தாரே! என்ன ஆச்சு அவருக்கு?

      நீக்கு
  5. பயங்கர வில்லன் தன்னை நல்ல பாம்பு கடிக்கும்படி செய்து கொள்வான்..

    நல்லபாம்பு அவனைத் தீண்டியதும்
    அவனுக்கு டிராகுலா மாதிரி பற்கள் தோன்றும்..

    அந்தப் பற்களால் கடித்து வில்லன் பிறரைக் கொல்வான்....

    ஜிவாஜி ரசிகர்களே கடுப்பான படம் இது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... கடவுளே... நல்லவேளை நான் படம் பார்க்கவில்லை. இந்தப் பாட்டு நல்லாயிருக்கும். கேட்டிருக்கேன். அவ்ளோதான்!

      நீக்கு
    2. ஆ ஆ ஆ ஆ துரை அண்ணா எப்படிப் பார்த்தீங்க

      நான் பார்த்ததில்லை...(இல்லாட்டாலும் என்னவோ எல்லா படமும் பார்த்த மாதிரி பேச்சு கீதானு என் குரலே எனக்குச் சொல்லுது....ஹிஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
  6. அந்த திராபையில்
    இந்தப் பாடல் மட்டுமே பா.சோ...(!)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானை சோறு? ஹா ஹா ஹா...

      சிவாஜியை ஒழித்ததில் அவர் நண்பர்களுக்கு முக்கிய இடம்.

      ஆனால் இவர் ஏன் ஒத்துக்கொண்டார் என்ற கேள்வி வரும்.

      நீக்கு
    2. /// பானை சோறு?...///

      பானைச் சோறா!...

      நான் சொன்னது - பால் சோறு!...

      கிக்..கிக்..கிக்..கீ!...

      நீக்கு
    3. துரை சார்... நானும் ஹிட்லர் உமாநாத் போன்ற சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு, 'இனிமே மவனே மறந்தும் .... படத்துக்குப் போவியா' என்று என்னையே கடிந்துகொண்டிருக்கிறேன். அதுவும் நல்ல படங்களில்கூட, இயக்குநர்கள், சிவாஜி இறப்பதை ஒரு நாடகம் போல் ஆக்கி (6 பக்க வசனம், வாயின் இரண்டு பக்கங்களிலும் ரத்தத் துளிகள் சிந்தும்) ரசிகர்களை கடுப்பாக்குவதையே கடமையாகச் செய்துகொண்டிருந்த காலம்.

      இதுல பாட்டை எங்கே ரசிப்பது?

      கதை, சிவாஜியின் உடம்புக்கு ஏத்தமாதிரி இல்லததே பல படங்களின் தோல்விக்குக் காரணம். முகத்தில் மட்டும் ஒல்லியாக இருப்பதுபோல் கொண்டுவந்தால் போதுமா? ஹாஹாஹா.

      நீக்கு
    4. //இதுல பாட்டை எங்கே ரசிப்பது?//

      பாட்டை ரசிக்க காட்சி அவசியம் இல்லை நெல்லை.. வெள்ளி வீடியோ என்பதாலும் பாடலைப் பகிர அது அவசியம் என்பதாலும் விடியோவுடன் பகிர்கிறேன். பாடலைக் கேளுங்கள்.

      நீக்கு
    5. உண்மையைச் சொன்னவங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்னி!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே
    மற்றும் காலை வணக்கம் காணும் அனைவருக்கும் வணக்கம்.

    ஒருநாளேனும் இந்த காலை வணக்கத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பது என் அவா. இன்று அதை நிறைவேற்றித் தந்த ஆண்டவனுக்கு நன்றி.

    இந்த பாடல் கேள்வி பட்டதில்லை. சிவாஜி படங்கள், பாடல்கள் பொதுவாக எனக்கு பிடிக்கும். அதிலும் எஸ். பி. பியின் பாடல் எல்லாமும் பிடிக்கும். கேட்ட வைத்தமைக்கு என் நன்றி. நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. காலை வணக்கம்.

      பாடல் கேட்டு விட்டீர்களா?

      நன்றி வருகைக்கு.

      நீக்கு
  8. நல்ல பாடல். அண்ணனுக்கும் தங்கைக்குமான பரிவு தெரிகிறது.
    பாவம் இது போலப் படங்களில் அவர் மாட்டிக்காமல் இருந்திருக்கலாம்.

    நற்காலை வணக்கம் ஸ்ரீராம், கீதா, துரை,பானும்மா அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில கண்றாவியான படங்கள் அவர் பெயரைக் கெடுக்க என்றே எடுத்தார்கள் வல்லிம்மா!

      நீக்கு
    2. ஸ்ரீதேவியோட ஜோடியா நடிச்சது அதிலே ஒண்ணு! மறந்துட்டீங்களே! ஜிவாஜி தானாகட்டும் கௌரவமா விலகிக் கொண்டிருக்க வேண்டாமோ! :(

      நீக்கு
  9. படம் முரட்டு டப்பா.
    ஜோடி ஸ்ரீப்ரியா என்று நினைக்கிறேன்.

    நல்ல பாடல் இப்பொழுது அண்ணன் - தங்கை பால் எழுத கவிஞர்கள் இல்லை.
    அப்படி எழுதினாலும் மச்சானும், கொழுந்தியாளும் பாடும் கருத்துகளே வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல பாடல் இப்பொழுது அண்ணன் - தங்கை பால் எழுத கவிஞர்கள் இல்லை.
      அப்படி எழுதினாலும் மச்சானும், கொழுந்தியாளும் பாடும் கருத்துகளே வரும். //
      ஹா ஹா ஹா! ஜி, உங்களை அடித்துக் கொள்ள முடியாது. சான்ஸே இல்ல!

      நீக்கு
    2. //ஜோடி ஸ்ரீப்ரியா என்று நினைக்கிறேன்.//
      ஸ்ரீப்ரியாவேதான். ஒரு முறை ஏதோ ஒரு தொலைகாட்சி சேனலில்,"லாரி ட்ரைவர் ராஜ்கண்ணு போன்ற சிவாஜி நடித்த படங்களில் அவருக்கே ஞாபகம் இல்லாத படங்களில் நான்தான் அவருக்கு ஜோடி" என்றார்.
      சேனல் என்பதை தமிழில் எப்படி குறிப்பிட வேண்டும்?

      நீக்கு
    3. ஒளி அலை வருமாக்கா காற்றலை ஒலி பரப்புக்கு ரேடியோன்னா ஒளி அலை சரிவரும்னு நினைக்கிறன் :) எதுக்கும் நெல்லைத்தமிழன் சரியான பதில் சொல்லலாம் இல்லின்னா தமிழில் d எடுத்தவங்க வந்தும் சொல்லலாம் :)

      நீக்கு
    4. டமிலில் ஷனல் எனக் குறிப்பிடலாம் பானுமதி அக்கா... ஹையோ நேக்கு நேரமாச்சூஊ ரன்னிங்ங்ங்ங்:)

      நீக்கு
    5. எனக்கு யார் ஜோடி என்று கூடத் தெரியாது கில்லர்ஜி. எனக்கு இந்தப் பாடல் மட்டுமே அறிமுகம்! பாடலை எழுதியது யார் என்று கூட அங்கு தகவல் இல்லை!

      நீக்கு
  10. அட ஜிவாஜி பாட்டு..... நடத்துங்க.....

    கேட்ட மாதிரி இல்லை. இப்ப தான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேட்ட மாதிரி இல்லை. இப்ப தான் கேட்டேன்.//

      பாடல் எப்படி இருந்தது?

      நீக்கு
  11. கோட் சூட் பூட்ஸ் - எல்லாம் போட்டுக்கினு லாரி ஸ்டியரிங்கைப் புடிச்சு வளைக்கிறதுன்னா - சும்மாவா?...

    இத்தனைக்கும் அதுக்கு இயக்குனர்
    திருலோகசந்தர்..ந்னு நெனைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா:) ஏன் இப்பூடிப் புகையிதூஊஊஉ:)

      நீக்கு
    2. கோட் சூட் போட்டுக்கொண்டு லாரி ஓட்டுவதைப் பற்றி நானே குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன் துரை ஸார்... மறந்து விட்டேன்!

      நீக்கு
  12. OMG! கீதா அக்காவின் வியாதி எனக்கும் வந்து விட்டதா?இன்றைக்கு சனிக்கிழமை என்று நினைத்துக் கொண்டு பாஸிட்டிவ் செய்திகளை தேடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனா, கீசா மேடம், அடுத்த வார சனிக்கிழமை என்று நினைத்துக்கொண்டிருப்பார்....ஹாஹாஹா

      நீக்கு
    2. நடுவில் ஏதாவது விடுமுறை நாள் வந்துவிட்டால் இப்படிக் குழப்பம் வந்து விடும் பானு அக்கா.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    இனிமையான பாடல் காணொளி பார்க்காமல் வனொலியில் கேட்ட பாடல்.
    இப்போது தான் காணொளியுடன் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா. வானொலியில் பாடல் கேட்ட காலம் எல்லாம் போயி போச்!

      நீக்கு
    2. வாங்க ஜம்புலிங்கம் ஸார்... படம் மொக்கை. பாடல் நன்றாயிருக்கும்.

      நீக்கு
  15. பொதுவா உடம்பு வீங்கிவிட்டால், படங்களில் நடிப்பதை அதிலும் கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திக்கணும். துரதிருஷ்டவசமாக அப்போதுதான் அவர்களின் புகழ், பணவரவு மிக அதிகமாக இருக்கும். இதுக்கு சிவாஜி, எம்ஜியார், பார்த்திபன், விஜய் சேதுபதி போன்றோரெல்லாம் விதிவிலக்கல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடம்பு வீங்கிட்டால்.. நடிப்பதை மட்டும்தான் நிறுத்தோணுமோ?:).. சாப்பிடுவதை?:) ஹா ஹா ஹா டவுட்டூஉ:)

      நீக்கு
  16. உண்மை தான் இந்த மிகச் சுமாரான சிவாஜி கணேசன் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல் இது.

    பதிலளிநீக்கு
  17. இந்த படம்லாம் எப்போ வந்தது :) உள்ளே ஆலிவ் பச்சை ஷர்ட் வெளில போட்டிருக்கிற பிளேசர்ல பிங்க் சாட்டின் தச்சிருக்கு வ்வ் என்னா ஒரு காம்பினேஷன் ..
    பாட்டு ஆரம்ப வரி மட்டும் சூப்பரோ சூப்பர் அப்புறம் மேற்கோள் கட்டிய வரிகள் ராமன் கண்ணன் //வருமிடம் நல்லா இருக்கு :) ஸ்டார்டிங் மட்டும் பார்த்து மிச்சத்தை பாக்காம கூகிளில் கேட்டுட்டே டைப்பினேனே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///இந்த படம்லாம் எப்போ வந்தது :///
      உங்கட 14 ஆவது பேர்த்டே அன்று வந்துதேமறந்திட்டீங்களோ மிஸ்டர்?:)

      நீக்கு
    2. yeah :) just confirmed it was released on your 30th bday and i was 14 ROFL

      நீக்கு
    3. பாட்டை முழுசா கேட்டீங்கதானே ஏஞ்சல்? நல்லாயிருந்ததா?

      நீக்கு
  18. ஆரம்பத்திலேயே அந்த விக் கழண்டுருமுன்னே பயந்திட்டே இருந்தேன் :) தேடி வழங்கிய ப .இ .பா .இ பாராட்டுக்கள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீராம் குழம்பிடப் போறார்ர்
      ப பச்சை
      இ இலையிலே
      பா பாம்பார் அதாவது ஶ்ரீராமின் சுப்புக்குட்டி:)
      இ இருக்கிறார் என்று பொருள்:)

      நீக்கு
  19. முதலில் கருத்துகள் பின்பு பதிவில்பாட்டு என்பதுஎன்வக்ஷக்கம் ஆனால் அருத்துகளும் பட விமரிசனங்களும் பாட்டைக் கேட்க விடாமல் செய்துவிட்டது

    பதிலளிநீக்கு
  20. சிவாஜியை ஒழித்ததில் அவர் நண்பர்களுக்கு முக்கிய இடம்.

    ஆனால் இவர் ஏன் ஒத்துக்கொண்டார் என்ற கேள்வி வரும்.

    ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் சிவாஜி அவரிடம், " நீ சின்ன வயதில் அடிக்கடி தியானம், அது, இது என்று இமயமலைக்கு ஓடிப்போவதைப் பார்த்து என்ன இவனுக்கு இந்த சின்ன வயசுல போய் ஆன்மிகம்? என்று நினைத்துக் கொள்வேன், ஆனால் இப்போதுதான்டா புரிகிறது நீ செய்ததுதான் சரி. இப்போது நான் ஏன் நடிக்கணும்? எனக்கு என்ன பணம் வேண்டுமா? அல்லது புகழ் வேண்டுமா? என்னுடைய பண விவகாரங்களை என் தம்பி சண்முகம் கவனித்துக் கொண்டான், வீட்டு நிர்வாகத்தை கமலா கவனித்துக் கொண்டாள். எனக்கு நடிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது, அதனால் என்னால் நடிக்காமல் இருக்க முடியாது" என்றாராம். மகா திராபையான படங்களில் அவர் பின்னாளில் நடித்ததற்கு இதுதான் காரணமோ என்னவோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்ததற்கு நன்றி.

      நீக்கு
  21. இந்த பாடலை விஷுவலா பார்த்த நினைவு. ஆனா, பாடல்வரிகள் நினைவில் இல்லை

    பதிலளிநீக்கு
  22. இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிவாஜி படம்னாலே கடந்துடலாம். அதெல்லாம் பார்க்கவே வேண்டாம்! :)

      நீக்கு
    2. பார்க்க வேண்டாம் கீதா அக்கா... பாட்டு கேட்கலாம். நல்ல பாடல்தான்.

      நீக்கு
    3. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

      நீக்கு
  23. இனிய பாடல் கேட்டேன் ரசித்தேன் நன்று

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!