பருப்புசிலி என்பது பெரும்பாலும் விசேஷங்களுக்குச் செய்வார்கள்.
கொத்தவரை, வாழைப்பூ, பீன்ஸ் போன்ற காய்களை பருப்புசிலிக்கு உபயோகிப்பார்கள். புடலங்காய் கூட பருப்புசிலிக்கு ஒருவித சுவையைக் கொடுக்கும். நான் கொத்தவரை, பீன்ஸில் செய்துபார்த்திருக்கிறேன். இந்தத் தடவை அருமையான ஃப்ரெஷ் வாழைப்பூவை பழமுதிர்ச்சோலை காய்கறி கடையில் பார்த்தேன். என் மனைவியை பருப்புசிலி செய்யச் சொன்னேன்.
வாழைப்பூவில், கள்ளனை எடுக்கவேண்டும். இது ஒரு வேலை. சில வருஷங்களுக்கு முன்பு, திருவரங்கத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு திருவானைக்கா கோவிலின் முன்பு, கள்ளனை எடுத்த வாழைப்பூவை விற்றுக்கொண்டிருந்தார்கள் (ஒன்று 10 ரூபாய்… சென்னைல புது வாழைப்பூவே 20 ரூபாய்னு நினைக்கறேன்). கோவிலுக்குப் போய்விட்டு வெளியே வரும்போது வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்குள் தீர்ந்துபோய்விட்டது.
இந்த வாழைப்பூவைப் பற்றி நினைக்கும்போது என் சிறுவயது ஞாபகம் வருது. அப்போல்லாம் (கசின்ஸ் எல்லோரும் 5லிருந்து 10 வயசு) எல்லோரும் பெரியப்பா வீட்டிற்கு வருடாந்திர விடுமுறைக்குச் செல்வோம்.
இரவு பெரியப்பா, கையில் தயிர் சாதம் போட்டு, குழம்பு விடுவார். எங்களுக்கெல்லாம், வாழை மடல்தான் தட்டு மாதிரி உபயோகப்படும் (கையில் வாங்கும்போது கீழே சிந்தக்கூடாது என்று). வாழைப்பூ இல்லாத சமயத்தில், வாதா மர இலைதான் எங்களுக்கு ‘தட்டு’. சாப்பாடு சாப்பிடுவதென்றால், வாழை இலை அல்லது தையல் இலை.
நினைவு சிறு வயதிற்குச் செல்கிறது. இப்போ செய்முறைக்கு வர்றேன்.
தேவையான பொருட்கள்
ஒரு வாழைப்பூ + நிறைய பொறுமை
¼ கப் கடலைப் பருப்பு
¾ கப் துவரம் பருப்பு
3-4 சிவப்பு மிளகாய்
தேவையான அளவு எண்ணெய், உப்பு, கடுகு, கருவேப்பிலை
செய்முறை
முதல்ல கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றை ஊறவைத்துக்கொள்ளுங்க. ½ மணி நேரம் ஊறினாப் போறும்.
வாழைப்பூவை, கள்ளனை எடுத்துவிட்டு, சிறியதாக கட் பண்ணிக்கோங்க.
அதனை மோர் ஜலத்தில் (butter milk) போட்டுக்கோங்க (இல்லைனாகறுத்துடும்)
இப்போ, ஊறின பருப்பை, உப்பு சேர்த்து, கர கர வென அரைத்துக்கோங்க. அவசியம்னா கொஞ்சம் தண்ணீர் விட்டால் போதும்.
இதை இட்லி தட்டில் வைத்து வேகவைத்துக்கோங்க.
அந்த சமயத்துல, வாழைப்பூவில் உள்ள நீரை எடுத்துவிட்டு, கொஞ்சம் நல்ல தண்ணீர் ஊற்றி, ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடுங்க. பூ நல்லா வேகணும். வெந்த பிறகு, தண்ணீரை வடிகட்டி, வெந்த வாழைப்பூவை மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. இதோட கொஞ்சம் உப்பு சேர்த்து குலுக்கிக்கொள்ளுங்கள். (ஏற்கனவே பருப்புக்கும் உப்பு சேர்த்திருக்கோம். அதனால ரொம்ப உப்பு சேர்த்துடாதீங்க)
வெந்த பருப்பு இட்லிக்களை எடுத்து, உதிர்த்தாலே உதிர்ந்துவிடும். அப்படி இல்லாதபட்சத்தில், சிறிது சிறிதாக கட் பண்ணிக்கோங்க.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தபிறகு, கடுகு, கருவேப்பிலை திருவமாறவும் (தாளிக்கவும்). அத்துடன் உதிரான பருப்பைச் சேர்த்து கொஞ்சம் கிளறவும். அதோட வெந்த வாழைப்பூவையும் சேர்த்துப் பிரட்டவும்.
இப்போ வாழைப்பூ பருப்புசிலி ரெடி.
வாழைப்பூவைச் சேர்ப்பதற்கு முன்பு, நிறைய எண்ணெய் விட்டு பருப்பை முறுகலா வதக்கலாம். சிலருக்கு பருப்பு முறுகலா இருந்தால் பிடிக்கும். எனக்கு எண்ணெய் பிடிக்காது என்பதால், முறுகவிடவில்லை.
நிறைய ஸ்டெப்ஸ் இருக்கறமாதிரி தோணும். ஆனால் செய்வது சுலபம்தான்.
அன்றைக்கு நான்தான் வாழைப்பூ பருப்புசிலி செய்தேன். சில நாட்கள் கழித்து என் மனைவி, கொத்தவரை பருப்புசிலி செய்தாள். அவள் என்னைவிட நன்றாகச் செய்திருந்தாள் என்று தோன்றியது. (கொஞ்சம் சாஃப்டா இருந்தது).
வாழைப்பூ இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கணையத்தை வலிமையாக்கும். பெண்களுக்கு வாழைப்பூ சாப்பிடுவது நல்ல உடல் நலத்தைத் தரும். இரத்த அழுத்தத்துக்கும் நல்லது. உடல் சூடு குறையவும் வாழைப்பூவை உண்ணலாம்.
வாழைப்பூ அடை, வாழைப்பூ வடையிலெல்லாம் சேரும் அளவைவிட, வாழைப்பூ பருப்புசிலியில் அதிக அளவு வாழைப்பூ நம் உடலுக்குச் சேரும். வெறும் வாழைப்பூ பொரியலும் நல்லா இருக்கும், ஆனா பசங்க அந்தத் துவர்ப்பினால் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள்.
ஒருத்தர் சொன்னார், வாழைப்பூவை மரத்திலிருந்து பறித்த இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தணுமாம். இல்லைனா, அதன் மருத்துவ குணம் குறைந்துவிடுமாம். அதுக்கு எங்க போறது?
நீங்களும் இந்தப் பருப்புசிலியைச் செய்துபாருங்கள்.
Note: தையல் இலையும், வாதா மர இலையும் கூகுளாரிடமிருந்து சுட்டது. அவருக்கு நன்றி.
அன்புடன்
நெல்லைத்தமிழன்
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா அண்ணன்மார் தம்பிமார் தங்கைகள் நட்பூக்கள் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா.
நீக்குஆஆஆஆஆஆ இன்று கீதாவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ இருங்கோ அடுத்த மாதம் எங்களுக்கு நேரம் மாத்துவினம்.. அதன் பின்பு அடிக்கடி ஜம்ப் ஆவேன்ன் எல்லோரும் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:))
நீக்கு//அடுத்த மாதம் நேரம் மாத்துவினம்// - அதிரா... அடுத்த மாதம் அக்டோபர்.. குளிர் ஆரம்பிக்கும் சமயம். க்வில்டுக்கு வேலை கொடுக்கப்போகும் நீங்க எப்படி முழிச்சிருந்து, எப்படி எங்கள் பிளாக் பார்த்து.... ஏதும் நடக்கிற கதையாகச் சொல்லுங்கள்...
நீக்கு@கீதா ரங்கன் - தம்பிமார் லாம் கிடையாது. ஒரே ஒரு தம்பிதான்... ஹாஹா
நீக்குவாழ்க.. வளர்க...
பதிலளிநீக்குஆறிப் போறதுக்குள்ள நெல்லையின் உசிலியைச் சாப்பிட ஓடோடி வந்துட்டேன்...ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார். இனிய காலை வணக்கம்.
நீக்குஸ்ரீராம்....(உங்கள் அலுவலக) ஹேமா அவங்கள்டேர்ந்து நீங்க வாங்கிப் போடற செய்முறை வந்து ரொம்ப மாதங்களாகிவிட்டதே...
நீக்குநெல்லை வாரம்?
பதிலளிநீக்குஎங்கள் வரம்!
நீக்குஹை! செம! ஸ்ரீராம் ரசித்தேன்!!!
நீக்குகீத
முந்தாநாள் தான் சமாராதனைக்குக் கொத்தவரை பருப்புசிலி செய்தேன். சாப்பிடத் தான் வயிறு இல்லை. வாழைக்காய்ப் பொடிமாஸ், பருப்புசிலி, பூஷணிக்காய்க் கூட்டு! கூட்டு அநேகமா எல்லோரும் போட்டுக்கறாங்க. கறி எது பண்ணினாலும் ஜாஸ்தி செலவே ஆகிறதில்லை. இஃகி, இஃகி, எனக்கும் கூட்டுத் தான் பிடிக்கும். வழக்கம்போல் ரங்க்ஸ் நேர்மாறாக! :))))))
நீக்கு///இஃகி, இஃகி, எனக்கும் கூட்டுத் தான் பிடிக்கும். வழக்கம்போல் ரங்க்ஸ் நேர்மாறாக! :))))))///
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
வணக்கம் சகோதரி
நீக்குசகோதரர் துணையெழுத்தை போடாமல் ஒரு வார்த்தையை உருவாக்கினார் என்றால், நீங்கள் துணையெழுத்தை கொஞ்சமும் நாடவேயில்லையே.! 👌 இது உங்கள் தனித்துவமா? ஹா. ஹா. ஹா.
நன்றி ஸ்ரீராம் வெளியிட்டமைக்கு. உங்க கமெண்ட் (உணவைப் பற்றி) இப்போல்லாம் கொடுக்கறதில்லைன்னு நினைத்தேன். அப்புறம் கொடுத்துருக்கீங்க.
நீக்கு//கறி எது பண்ணினாலும் ஜாஸ்தி செலவே ஆகிறதில்லை.// - கீசா மேடம்... பசங்க இருந்தபோது செய்வதெல்லாம் செலவழிந்ததா இல்லை அவங்க, இது எனக்கு வேண்டாம், அது வேண்டாம்னு மிச்சம் வச்சிடுவாங்களா (அவங்க பசங்களா இருந்த வரைல)
நீக்குநெல்லை, எங்க பெண்ணைக் காய் சாப்பிட வைப்பதற்குள் எனக்குப் போதும் போதும்னு ஆயிடும். உ.கி.கறி, பருப்புசிலி, வெண்டைக்காய் போன்றவற்றைத் தவிர்த்து எதுவும் சாப்பிட மாட்டா! அதுக்காகவே அடிக்கடி வெஜிடபுள் சாதம் பண்ணிக் கொடுப்பேன். பையர் தான் அப்போவும் இப்போவும் எல்லாக் காய்களும் சாப்பிடுவார். எங்க பெண் சாப்பிடப் படுத்தினமாதிரி வேறே எந்தக் குழந்தையும் படுத்தி இருக்காது! :)))))))
நீக்குஇங்க நான் பார்த்தது, பையன் பெண் இருவரின் விருப்பங்களும் வேறு வேறு. ஒருத்தருக்கு ஒண்ணு பிடிக்கும்னா அது அடுத்தவருக்குப் பிடிக்காது. நான் 'அம்மா'வாக இருந்திருந்தால், இருவரும் செய்வதைச் சாப்பிடும்படிப் பண்ணியிருப்பேன் (ஏன்னா இந்த மாதிரி விஷயத்தை நான் பிசினெஸ் ரீதியா அணுகுவேன், அதுல பாசம் கீசம்லாம் கொண்டுவர மாட்டேன்). பொதுவா பசங்களை வளர்ப்பது என்பது பெரிய கஷ்டமான விஷயம்தான்.
நீக்கு//பெரிய கஷ்டமான விஷயம்தான்// - இதைச் சொல்லும்போதே, நான் எப்படி என்று என் மனசுக்குள் கேட்டுக்கறேன். நானும் ஸ்பெசிஃபிக் ஈட்டர்தான். இதெல்லாம் பிடிக்காது என்று எனக்கும் ஒரு பெரிய லிஸ்ட் உண்டு. அதிலும், முயற்சி பண்ணி-முதல் தடவையா உண்ணாமலேயே, மனசுக்குள் பிடிவாதமாக இது பிடிக்காது என்று இருந்துவிடுவேன். அதுபோல்தான் 10-15 வருடங்களாக வட நாட்டு உணவை சாப்பிடாமலேயே இருந்தேன். வீட்டில் பசங்க வற்புறுத்தல் பேர்ல பண்ணற பாவ்பாஜி போன்ற பலவைகளை நான் தொடக்கூட மாட்டேன். (முன்னால). இன்று வரை எனக்கு பானிபூரி (அதில் ஓட்டை போட்டு புளித்தண்ணீர் மாதிரி விட்டுச் சாப்பிடுவாங்களே) பிடிக்காது. அதுபோல எல்லா இடத்திலும், எல்லார் வீட்டிலும் நான் சாப்பிடமாட்டேன். என் மனசு சொல்லணும், அவங்களும் ரொம்ப வற்புறுத்தணும். இதெல்லாம் பிறக்கும்போதே வரும் குணமோ?
நீக்குபானி பூரி அவ்வளவாப் பிடிக்காது. பேல் பூரி வீட்டிலே செய்து சாப்பிடுவதே அதிகம்! கடைகளில் வாங்குவதே இல்லை. சாட் ஐடங்களே பலதும் வீட்டில் தான்!
நீக்குபடங்கள் செம நெல்லை....நானும் பருப்பு இந்தக் காம்பினேஷனில் அல்லது ஈக்வல் அளவும் செய்வதுண்டு...
பதிலளிநீக்குஅது போல பருப்பை அரைத்து ஆவியில் வேக வைத்து உதிர்த்து தாளித்தும் செய்வதுண்டு...இல்லைனா அரைத்ததும் அப்படியே வாணலியில் போட்டு உசிலித்தும் செய்வதுண்டு...ஆவியில் வேக வைத்துச் செய்வதில் எண்ணை குறைவாகச் செலவாகும். நானும் ஸாஃப்ட் உசிலிதான் செய்வதுண்டு. நல்லாருக்கு நெல்லை ரெசிப்பி ...மணக்குது இங்குவரை !!!!
கீதா
நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். ஸ்ட்ரேஞ்ச்லி, பதின்ம வயது அல்லது ஒரு அளவு வயது வரை இருந்த, உணவின்மீதான ஆர்வம் குறைவதுபோல் எனக்குத் தோன்றுகிறது. சில சமயம் நீங்கள் செய்யும் உணவைப் பார்க்கும்போது ஆர்வம் வரும். சின்னவனாக இருந்தபோது எனக்கு பருப்புசிலி ரொம்பப் பிடிக்கும். திருமணம் ஆன பிறகும், சாத்துமது, பருப்புசிலி காம்பினேஷன் (அல்லது மோர்க்குழம்புக்கு) பிடிக்கும்.
நீக்குஅப்புறம் வரேன் கீதாக்காவின் குறிப்புகள் பார்க்க...
பதிலளிநீக்குகீதா
சாட்டைப் பயிறு என அழைக்கப்படும் பயத்தங்காய்/தட்டாங்காய், முட்டைக்கோஸ், குடைமிளகாய் போன்றவற்றிலும் பருப்பு உசிலி செய்யலாம். என் அம்மா வீட்டில்/பிறந்த வீட்டில் தான் பருப்பு உசிலிக்கு அரைத்ததை வேக விடுவார்கள். அதற்கென ஒற்றைத் தட்டு தனியாக இருக்கும். ஆனால் மாமியார் வீட்டில் வேக விடக் கூடாது. அரைத்த விழுதை அப்படியே எண்ணெயில் போட்டு வதக்கணும். எண்ணெய் கொஞ்சம் கூடுதல் செலவு! ஆனாலும் இதுவும் நன்றாகவே இருக்கும். நான் கீரைவகைகளைச் சேர்த்தும் பருப்புசிலி செய்வேன். வாழைப்பூ ஒன்று வாங்கினால் எங்களுக்கு 3 நாட்கள் வருவதால் யாரானும் வந்தால் வாழைப்பூ. இல்லைனா எப்போவானும் அடைக்குப் போட வாழைப்பூ. மிச்சம் இருக்கும் வாழைப்பூவைத் தேங்காய், துவரம்பருப்புப் போட்டு வெல்லம், அல்லது சர்க்கரை போட்டுக் கறி செய்தால் துவர்க்காது. இல்லை எனில் வாழைப்பூக் குழம்பு!
பதிலளிநீக்குவாழைப்பூ துவையலை விட்டு விட்டீர்களை?
நீக்குகீதா சாம்பசிவம் மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்குஅது என்ன... மாமியார் வீடுகள்ல அவங்களுக்கு தனி ரசனை இருக்கக்கூடாதா? உங்களுக்கும் புதிது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருந்தது இல்லையா?
கீரைல பருப்புசிலியா? முட்டைக்கோஸிலா? ... எப்போவாவது செய்துபார்க்கணும்.
ரொம்ப நல்லா இருக்கும் நெல்லைத்தமிழன் கொஞ்சம் நசுங்கின மாதிரி பருப்பை வேகவைச்சி மசிக்கணும் அப்புறம் அப்பளம் இதுவும் சேர்த்து செய்வேன் முட்டைகோஸ் உசிலில
நீக்கு//அது என்ன... மாமியார் வீடுகள்ல அவங்களுக்கு தனி ரசனை இருக்கக்கூடாதா? // அவங்களுக்குத் தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே ஆட்டி வரும்! :) நாங்கல்லாம் வாங்கிச் சாப்பிடுவது தானே அன்றும் இன்றும் என்றும். :)))) முட்டைக்கோசை நான் முதலிலேயே வேக வைப்பதில்லை. முட்டைக்கோஸ் பருப்புசிலி எனில் பருப்பு விழுதோடு சேர்த்து முட்டைக்கோஸைப் பொடியாக நறுக்கிக் கலந்து வேட்டில் வேக வைத்துப் பின்னர் தாளிதம் போட்டு நன்கு வதக்குவேன். சில சமயம் இலைகள் பெரிதாக இருந்தால் சேம்பு இலையில் செய்கிறாப்போல் இலையில் பருப்பு விழுதைத் தடவிச் சுருட்டி வைத்து வேட்டில் வேக வைத்துப் பின்னர் துண்டங்களாக்கி வதக்குவேன். இரண்டுக்கும் எங்க வீட்டில் ஓட்டு விழாது! :) கீரைப் பருப்புசிலிக்கு அமோக ஆதரவு உண்டு. கீரையைப் பொடியாக நறுக்கிக் கொண்டு பருப்பு விழுதில் போட்டுக் கலந்து வேட்டில் வேக வைக்கணும். மற்றவை முன் சொன்னாப்போல் தான். எந்தக்கீரையிலும் செய்யலாம்.
நீக்குகீதாக்கா நானும் இதே காய்களில் உசிலி செய்வதுண்டு...புடலைங்காயும் பருப்புசிலி செய்த்துண்டு. நல்லாருக்கும். புடலங்காய் அவ்வளவா பிடிக்காதவர்களும் கூட சாப்பிட்டதைக் கண்ட அனுபவம் உண்டு. பருப்பு உசிலிக்காக இருக்கலாம்...
நீக்குநெல்லை நானும் இப்போதும் சாப்பாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஸ்பெஷலாகச் சமைப்பதில்லை. மகனும் இல்லையே. எனவே வீட்டில் யாரேனும் கேட்டால்தான்...
ரசம் அண்ட் பருப்பு உசிலி செம கோம்போ எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லை...
கீதா
கீசா மேடம்... முட்டைக்கோசுக்கும், அதே பருப்பு உசிலி செய்யும் முறைதானே. இல்லைனா பாசிப்பருப்பு சேர்ப்பீங்களா? கீரைப் பருப்புசிலி என்பதும் அதே மெதட் என்று நினைக்கிறேன். இதுவரை சாப்பிட்டதில்லை. குறிப்புகளுக்கு நன்றி.
நீக்குஏஞ்சலின் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அங்கெல்லாம் ஃப்ரெஷ் வெஜ் என்றால் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், அங்கத்தைய பெரிய கத்தரிக்காய், தக்காளி போன்றவைதானே....
நீக்குதில்லையகத்து கீதா ரங்கன்... சமையல் செய்யும் திறமை அதிகமாவதற்கு பெரிய காரணம், சாப்பிடறவங்கதான். அவங்க ரசித்தால்தான் நிறைய செய்துபார்க்கத் தோன்றும். இங்க வந்தப்பறம் ஃப்ரெஷ் காய்கறிகள் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. கருத்துக்கு நன்றி.
நீக்குநான் பருப்புசிலி எனில் துவரம்பருப்பு மட்டும் தான் போடுவேன். ஆட்கள் நிறைய இருந்தால் அதிக அளவில் பண்ணணும்னா மட்டும் து.பருப்போடக் கொஞ்சம் க.பருப்பு சேர்ப்பேன். பாசிப்பருப்பில் எல்லாம் பண்ணினதே இல்லை. கீரைப்பருப்புசிலி என்னோட சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கம் முருங்கைக்கீரைக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க! அதேதான் எல்லாக் கீரைகளுக்கும்.
நீக்குநன்றி கீசா மேடம்... உங்க தளத்துல (அது எது என்பதிலும் படிக்கறவங்களுக்குத் தலை சுத்தும்), ஒன்றின் செய்முறை சட்டுனு கிடைக்கறதில்லை. கூகுள்ல போட்டுத் தேடினாலும் சமயத்துல வர்றதில்லை.
நீக்குஇப்போக் கூட மைசூர்ப்பாகுனு தட்டச்சினதும் வந்த இரண்டு லிங்கைக் கொடுத்திருக்கேன். :) யாரும் தலை சுத்தலா இருக்கிறாப்போல் எல்லாம் இன்று வரை சொன்னதில்லை. பலரும் அதில் படித்துச் செய்து பார்த்தேன் என்றே சொல்வார்கள்/சொல்கிறார்கள். எல்லாத்துக்கும் அந்த அந்த சமையலின் பெயர் தலைப்பிலேயே வரும்படி தான் கொடுத்திருப்பேன்.
நீக்குகீசா மேடம்... எண்ணங்கள்லயும் சமையல் குறிப்பு வருது. உணவே மருந்திலயும் வருது. நான் யோசிக்கிறேன், எந்தத் தளத்துலேர்ந்து அந்தக் காலத்துல உங்க ரெசிப்பிக்களை ஒரு டாகுமெண்டில் சேமித்தேன் என்று....
நீக்குவாழையின் துவர்ப்பு மிகவும் நல்லது... பலர் இதனை உணர்வதில்லை..
பதிலளிநீக்குவாழைத்தண்டு சிறுநீரகத்தில் கற்களைக் கரைப்பதைப் போல
வாழைப்பூ ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சமன் செய்கிறது...
வீட்டுத் தோட்டத்தில் வைத்தியம்...
ஆனால்
இதுதான் பலருக்கும் பிடிக்காதே...
ஆடம்பர அன்னிய வைத்தியம் என்றால் ஆனந்தம்...
ஒரு காலத்தில்
செக்கு எண்ணெயைப் பற்றிக் கடுப்பேற்றி ரீபைண்டு எண்ணெய்க்கு லாலி பாடிய பத்திரிகைகள்
இப்போது செக்கு எண்ணெய்க்கு காவடி எடுக்கின்றன...
இயற்கையை ஒட்டி வாழ்ந்தோம்..
வாழ்கிறோம் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது...
நான் இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வாங்கிச் சமைத்ததே இல்லை. எப்போவும் நல்லெண்ணெய் தான், கடலை எண்ணெய் தான். அதுவும் குஜராத் கடலை எண்ணெய் ரொம்பவே பிரபலம். ராஜஸ்தானில் நல்லெண்ணெய் நேரே செக்கில் இருந்தே வாங்கி வருவோம். சூடாக!
நீக்குஇதுமட்டுமில்லை.. துரை அண்ணன்... வட்ஸப்பில ஒரு வீடியோ உலா வந்துது வாழைப்பூ பயன்கள் பற்றி.. படிச்சதும் ஆஆஆஆஆஆஆஆஆஆடிப்போயிட்டேன்ன்:))
நீக்குஊசிக்குறிப்பு:
குட்டி வயசிலிருந்தே நேக்கு வாழைப்பூ ரொம்பப் பிடிக்குமாக்கும்:)..
>>> வாட்ஸப்பில ஒரு வீடியோ உலா வந்துது.. <<<
நீக்குஅதையெல்லாம் நம்பாதீங்கோ...!...
துரை செல்வராஜு சார்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை, வரும்படிக்கு ஏற்றபடி தங்கள் கருத்துக்களை வெளியிட்டுத் திணிப்பார்கள். அவைகளை நான் நம்புவதே இல்லை.
நீக்குநீங்களே பார்த்திருப்பீங்க. 'வேத காலத்தில் சொன்ன முறையில் டூத் பேஸ்ட்', 'உங்க பேஸ்டுல உப்பு இருக்கா' என்றெல்லாம் கோல்கேட் விளம்பரப்படுத்துவதை. எனக்கு எரிச்சலாக இருக்கும். இன்னும் கொஞ்சம் நாளில் உங்க டூத் பேஸ்டுல உமிக்கரி இருக்கா, பச்சைக் கற்பூரம் இருக்கான்னும் அவங்க விளம்பரம் பண்ணுவாங்க. உமிக்கரியோ இல்லை ஆயுர்வேத (இனிப்பு சேர்க்காத) பற்பொடிகளோ, நன்றாக வாயைக் கொப்பளித்தும் கொஞ்சம் தங்கியிருந்தால் தொந்தரவு இல்லை. ஆனால் இனிப்பையே ஆதாரமாகக் கொண்டு வரும் ஜெல்லி டூத் பேஸ்டுகள், நார்மல் டூத் பேஸ்டுகளால் பற் சிதைவு வருகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
துரை சார்... செக்கு எண்ணெயிலும் இப்போ நிறைய ஃப்ராடுகள் வந்துவிட்டன. கோல்ட் பிரஸ், மரச் செக்கு, மிஷின் செக்கு என்று. நல்லெண்ணெய் (செக்கு எண்ணெய்) 220 ரூபாயிலிருந்து 320 வரை ஒரு லிட்டருக்கு இப்போ கிடைக்குது. மற்றபடி இதயம் அது இது என்ற நல்லெண்ணெய்களில் எத்தனை சதவிகிதம் பாரபின் ஆயில் என்பதை யாராவது கண்டுபிடித்தால்தான் உண்டு.
நீக்குவிளம்பர ஃப்ராடை முதலில் ஆரம்பித்தது விகடன். அதைத் தொடர்ந்து கல்கி, குமுதம் என்று அவர்களும் ஆரம்பித்துவிட்டன. அவங்க எதைப் பற்றியேனும் இரண்டு பக்கத்துக்கு எழுதியிருந்தாங்கன்னா, பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால் சைடுல Advt என்று போட்டிருப்பாங்க. அதற்கு அப்புறம், 'சிறப்புப் பக்கம்' (சரியான பெயர் சட்னு ஞாபகத்துக்கு வரலை) என்று ஃப்ராடு பண்ணினார்கள். மொத்தத்தில், ஏமாந்தவர்கள் பொதுமக்கள்தான். ஹா ஹா ஹா.
//குஜராத் கடலை எண்ணெய் ரொம்பவே பிரபலம்// - கீசா மேடம்... இப்போ கடலை எண்ணெய் உபயோகிப்பதே குறைந்துவிட்டது. நான் சிறுவனாக இருந்தபோது பட்சணம் செய்ய (கார பட்சணம்) கடலை எண்ணெய்தான் உபயோகிப்பார்கள். இப்போ எல்லாத்துக்கும் ரிபைண்டு ஆயில் என்று எங்கெங்கிலும் ஆகிவிட்டது.
நீக்குநான் பஹ்ரைனில், சில பிராண்டு ஆயில் (கார்ன் ஆயில், சூர்யகாந்தி ஆயில்) விலை குறைவாக இருப்பதைப் பார்த்து அதை வாங்க முனைந்தேன். அந்த ஹோல்சேல் கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர். அவர் சொன்னார், ஒரு சில பிராண்டுகள் பெயரைச் சொல்லி, அதை மட்டும் வாங்குங்கள், இந்த பிராண்டெல்லாம், 20-30% அளவுக்கு வாசனை இல்லாத ஆயில் (பெட்ரோலிய பை பிராடக்ட்) சேர்ப்பார்கள் என்றார். நம்ம ஊரில் இதுவே 70% ஆக இருக்கும்.
நான் ரிஃபைன்ட் எண்ணெய் வாங்கினதே இல்லை. என் மாமியாருக்கும் பாமாயிலில் மோகம் அதிகம். அவங்களும் என்னோட நாத்தனாரும் விளக்குக்குக் கூடப் பாமாயில் பயன்படுத்துவாங்க. :) இத்தனைக்கும் என் மாமியார் அதிகம் சாப்பிட்டது தே.எண்ணெய் தான். எனக்கு நல்லெண்ணெய் தான் பழக்கம். அது தான் நான் பயன்படுத்துவதும். அதே போல் சுட்ட எண்ணெய் மிஞ்சினால் மீண்டும் பயன்படுத்துவதில்லை. கொட்டி விடுவேன் கொஞ்சமும் கலங்காமல். சுட்ட எண்ணெய் எனக்குச் சின்ன வயசில் இருந்தே ஒத்துக்காது. இப்போல்லாம் அவருக்கும் பிடிக்கிறதில்லை. மற்றபடி நல்ல வாசனை வரும் கடலை எண்ணெய்தான். இங்கே ஆயில் மில் இருக்கு. அதிலே வாங்குகிறோம். பக்ஷணங்கள் செய்தாலும் வீணாவதில்லை. என்றாலும் முறுக்கு, தட்டை, மிக்சர், ஓமப்பொடி போன்றவை தே.எண்ணெய் தான்.
நீக்குநாங்க பெரும்பாலும் பாமாயில் சாப்பிட்டதில்லை. நெல்லைப் பகுதில வடி எண்ணெய்னு விற்பாங்க (எண்ணைக் கடைக்காரர், ஒவ்வொரு எண்ணெய் எடுக்கும்போதும் அது அந்த பெரிய தட்டில் வடியும். இதுல தேங்காய், கடலை, நல்லெண்ணெய் போன்றவை கலந்திருக்கும். அது ஒரு தனி வாசனை). அதனை உபயோகப்படுத்துவாங்க.
நீக்குஓ... முறுக்கு, தட்டை போன்றவை தேங்காய் எண்ணெய்ல செய்யறீங்களா? கல்லிடைக்குறிச்சில ஒரு ஸ்வீட்ஸ் கடை இருக்கு. அங்கே இருந்து ஆர்டர் செய்து கொரியரில் வரவழைப்பேன் (தீபாவளிக்கு). அவங்க தேங்காய் எண்ணெய்தான் உபயோகப்படுத்துவாங்க.
இந்த வாழைப்பூ மடலில் இரவு நேரம்(அப்போல்லாம் முதல் நாளே ஆய்ந்து நறுக்கி மோரில் போட்டு வைப்பார்கள்) தயிர்சாதம் சாப்பிட்டால், அதுவும் மருதாணி இட்டுக் கொண்ட கையில் எடுத்துச் சாப்பிட்டால்! சொர்க்கம் தான். இந்த அனுபவத்தைக் குழந்தைகளும் பெற வேண்டும் என நினைத்துக் குழந்தைகளுக்குப் போட்டால் அவங்க ரசிக்கவே இல்லை! :)
பதிலளிநீக்குஹை ஃபைவ் கீதா அக்கா. வாழைப்பூ மடலில் தயிர் சாதம், அதுவும் முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றி வைத்த சாதத்துடன் கெட்டித் தயிர் ஊற்றி பிசைந்த சாதத்தை அதுவும் மருதணி இட்டுக்கொண்ட கையால் சாப்பிடுவது சொர்க்கம் தான்.
நீக்குஆஹா. கீதாமா. அதல்லவோ சொர்க்கம். அம்மா போடும் சாதத்தை விட பாட்டி போடும் சாதம் இன்னும் இனிமை. மருதாணி இன்னோரு இனிமை. மனம் விரும்புதேன்னு பாடத் தோன்று கிறது.
நீக்குஎனக்கெல்லாம் அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது. அதைவிட, மாலையில் என் பெரியப்பா, தயிர் சாதம், அன்றைய குழம்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு வருவார். நாங்க பசங்கள்லாம் விளையாடுவோம் (மணலில்). அவர் அனுஷ்டானங்களை முடித்தபிறகு, அங்கிருக்கும் பாறையைச் சுத்தம் செய்து அதில் அமரவைத்து கையில் உணவு போடுவார்.
நீக்குஇந்த மாதிரி அனுபவங்களே இந்தக் காலத்துப் பசங்களுக்குக் கிடையாது.
//அதுவும் மருதணி இட்டுக்கொண்ட கையால் சாப்பிடுவது// - வருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம். கீசா மேடம் சொன்னதற்கும் நீங்க சொல்வதற்கும் அர்த்தம் வித்தியாசமா வருதே.
நீக்குநீங்க சொல்வதை, புதிதாகத் திருமணமான கணவன் சொன்னால் அர்த்தம் இருக்கும்.
கள்ளனை எடுத்து விட்டீர்கள் இல்லையா. பார்க்கவே அமிர்தமா இருக்கு. என்ன ரசனை என்ன ரசனை. பாத்திரத்துல பாதி சாதம் தானே இருக்கு. காக்கைக்குப் போட்டு விட்டீர்களோ. மனம் நிறை வாழ்துகள் முரளி.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி வல்லிம்மா... சரியாக கவனித்திருக்கிறீர்கள். அன்றைக்கு கண்டருளப்பண்ணியபிறகு, சாதத்தையும், மோர்க்குழம்பையும் பெண்ணிற்கும் மனைவிக்கும் போட்டுவிட்டு பருப்புசிலி எடுக்கவந்தபோதுதான், சன்னிதியில் வைத்து படம் எடுக்கலையே என்று நினைவு வந்தது. அப்போது எடுத்ததுதான் இந்தப் படம்.
நீக்குகாக்கைக்கெல்லாம் சாதம் போடற வழக்கம் (வாய்ப்பு) இல்லை வல்லிமா. ஒரு வரியில் என் பெரியப்பா வீட்டு நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். அங்க, ஆராதனம், அக்னிக்கு, காக்கைக்கு அன்னம் இட்ட பிறகுதான் எல்லோரும் சாப்பிடவே உட்காரமுடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் வைழைப்பூ பருப்பு உசிலி செய்தேன். அப்போது எ.பியில் பகிறலாமா என்று தோன்றியது. ஆனால் கிச்சன் கில்லாடிகள் நிறைந்திருக்கும் இந்த சபையில் ப.உ.கூடவா இத்தனை நாட்களாக பகிராமல் இருந்திருப்பார்கள்? என்று விட்டு விட்டேன். பார்க்கவே நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு///ஆனால் கிச்சன் கில்லாடிகள் நிறைந்திருக்கும் இந்த சபையில் //
நீக்குஎன்னைத்தானே சொன்னீங்க:)) சே..சே.. ஷை ஷையா வருது:))..
ஊசிக்குறிப்பு:
கிரடிட் ஐ நாங்களே பிடுங்கி:) எடுத்துக் கொள்ளோணும்:) மற்றவர்களோ வந்து நமக்குத்தூக்கித் தரப்போகினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)).. பெயர் போடாமல் கொமெண்ட் போட்டிருக்கிறேன்ன்.. ஏனெனில் இது ஆருக்கான கொமெண்ட் என ஸ்ரீராம் வந்து ஒண்ணொண்ணா தேடிப்பிடிப்பாருக்கும் என:)) பூஸோ கொக்கோ:)).. நோகாமல் நொங்கெடுக்க விட மாட்டேன்ன்ன் ஹா ஹ ஹா ஹையோ நேக்கு என்னமோ ஆச்சு.. மீ ரன்னிங்:))
நானா? சேச்சே...
நீக்குபா.வெ.மேடம்.. சில சமயம் எனக்கும் தோன்றும், இதை அனுப்பினால், அதற்குள் வேறு யாரும் அனுப்பியிருப்பார்களோ என்று. நான் மைசூர்பாக் செய்து அதை அனுப்பணும் என்று மனதில் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் கீசா மேடம் அதனை சமீபத்தில் செய்து படங்களோட போட்டுட்டாங்க. அதுக்காக சும்மா இருக்க முடியுமா? அதே மைசூர்பாக்கை, கூட 1 ஸ்பூன் ரவை சேர்த்தேன், அத்துடன் வெனிலாப் பவுடர் சேர்த்தேன் என்று ஏதாவது சிறிது சேர்த்து செய்த பிறகு அனுப்பிவிடவேண்டியதுதான். தலைப்பை, 'பழங்கால கீசா மேடம் செய்முறைக்குப் போட்டியா புத்தம் புதிய செய்முறை' னு போட்டுடவேண்டியதுதான். (ஊ.இ.பி.கோ.ஆ வா என்று கீசா மேடம் சண்டைக்கு வராமல் இருக்கவேண்டும்)
நீக்கு:))))))
நீக்குஶ்ரீராம் ஒரு முறை ப.உ. பகிர்ந்திருந்தாரோ? அதில் அவர் மகனுக்கு ப.உ.எனறால் வா.ப.உ தான் பிடிக்கும் என்று எழுதியிருந்ததாக நினைவு. எனக்கும் அப்படித்தான். அதன் பிறகு பீன்ஸ், கொத்தவரைக்காய் ப.உ. பிடிக்கும்.
பதிலளிநீக்குஎனக்கு எல்லா ப.உ வும் பிடிக்கும். பஹ்ரைனில் 'சங்கீதா' ஹோட்டலில் (இதே பிராண்டுதான்) சில வருடங்களுக்கு முன்பு ஒரு அருமையான செஃப் இருந்தார் (24 வயசுப் பையன்). அட்டஹாசமாக எல்லாம் செய்வார், பருப்பு உசிலி உள்பட. அது வியாழன் அன்று வரும் என ஞாபகம் (மோர்க்குழம்புடன்). ஆனா பாருங்க, அவருக்கு இங்க போஸ்ட் ஆபீசுல வேலை கிடைச்சு, அந்த வேலையை ரிசைன் பண்ணிவிட்டு இங்கு வந்துவிட்டார். நான் அவர்ட்ட சொல்வேன், நான் பெரிய பணக்காரனாக இருந்தால், நிச்சயம் உங்களோடு ஜாயிண்ட் வென்சர் போட்டு, கனடா போன்ற இடங்களில் ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பேன் என்று.
நீக்குஎங்க மாப்பிள்ளை என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். மாமி, நீங்க ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம், நான் அதிலே உங்களுக்கு நல்ல காசு கிடைக்கும் என்பார். அம்பேரிக்காவிலும் பெண் மெம்பிஸில் இருக்கும்போது நான் சமைத்துச் சாப்பிட்ட சிலர் எங்க வீட்டு விசேஷங்களுக்குச் சமைத்துத் தாருங்கள் எனக் கேட்டதும் உண்டு. :))))
நீக்குஎனக்கு ரொம்ப வருடங்களாக ரெஸ்டாரண்ட் வைக்கணும்னு ஆசை. ஆனா என் ப்ரொஃபஷனை விட்டுட்டு அதை வைக்கத் தயக்கம் (ஆனாலும் ஒண்ணு கவனிக்கணும், எனக்கு ரெஸ்டாரண்ட் ப்ரொஃபஷனில் ஒன்றும் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்ள ரொம்ப ஆசை).
நீக்குஅமெரிக்காவில் நீங்கள் இருந்திருந்தால், உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால், நன்றாக நீங்களே சம்பாதிக்கலாம். அங்கெல்லாம் 'இதை இதை இந்த அளவு செய்யுங்க' என்று சொல்லி (உதாரணம், ஜீரக ரசம் 1 லிட்டர், வத்தக்குழம்பு, இந்தக் கூட்டு, காய் என்று) ஆர்டர் கொடுத்துவிட்டு வார இறுதியில் வந்து வாங்கிக்கொள்வார்களாம் (அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அந்த வாரத்தை ஓட்ட). இதில் காசு என்பதையும் தாண்டி, ஒரு ஆத்ம திருப்தி வரும் என்பது என் அனுமானம்.
வறுத்து அரைத்த பருப்பை வேக வைத்து, அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுழற்றினால் கட்டிகள் இல்லாமல் உதிர உதிராக ஆகி விடும். ஸாஃப்டாகவும் இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம். அப்படியும் செய்திருக்கிறேன். ஆனால் ரொம்ப குழைவாக அரைத்திராமலிருந்தால், வேகவைத்தவுடன் உதிர்ப்பது சுலபமாயிடும்.
நீக்குஎனது வீட்டில் அடிக்கடி வாழைப்பூ வடை செய்வார்கள் இதை செய்யச் சொல்லணும்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கில்லர்ஜி.. எனக்கென்னவோ வாழைப்பூ வடை பிடிப்பதில்லை. வடை என்றாலே மெது வடை (எண்ணெய் அதிகமாக இருக்கக்கூடாது), சோம்பு, பூண்டு போடாத மசால் வடைதான் பிடிக்கும். அந்த ஊரில் ஒரு ரெஸ்டாரண்டில், வெள்ளிக்கிழமை தோறும் திருமால் வடை என்று ஒரு 1/2 அடிக்கு சற்று குறைவான விட்டமுள்ள வடை போடுவார்கள். அது ரொம்ப நல்லா இருக்கும்.
நீக்குகடலைப் பருப்பு சிறிது சேர்ந்து வாழைப்பூ பொரியல் செய்வதுண்டு. நேற்று அதுதான்.
பதிலளிநீக்குஉங்கள் செய்முறையின்படி பருப்பு உசிலியாக செய்து பார்க்கிறேன்.
வாழைப்பூவின் இதழ்களைத் தட்டாகப் பயன்படுத்துவது நல்ல உத்தி. அதுவும் குழந்தைகளுக்கு
சாதம் உருட்டிப் போடுகையில். அதெல்லாம் ஒரு காலம்.
வாங்க ராமலக்ஷ்மி மேடம். அடிக்கடி உங்களைப் பார்க்க முடிவதில்லை.
நீக்குவாழைப்பூ தட்டு, ரொம்ப வாசனையா இருக்கும். ஆனால் இந்தக் காலத்துல, பூ ரொம்ப நாளைக்கு இருக்கணும் என்பதற்காக, ஏதாவது மருந்து கலந்த தண்ணீரில் முக்கி எடுத்திருந்தால் (கோஸ், காலிஃப்ளவருக்குச் செய்வது போன்று)
இப்போதுதான் இதுபற்றி கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குவாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. நீங்கள் இப்போதுதான் கேள்விப்படுவது ஆச்சர்யமாக இருக்கு.
நீக்குவாழைப்பூ பருப்புசிலி செய்ததில்லை...
பதிலளிநீக்குசெய்முறை நன்றாக இருக்கிறது... நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' குறள் பற்றி நீங்க எழுதியிருக்கீங்களா?
நீக்குஎங்கள் வீட்டில் மாதத்திற்கு ஒருமுறையாவது பருப்புசிலி வந்துவிடும். காய்கறியையே பிரதானமாக சாப்பிடும் என் பெண்ணிற்குப் பிடித்த சப்ஜி. டெல்லியிலிருக்கும்போது இளம்பீன்ஸ் நிறையக் கிடைப்பதால் (குறிப்பாக குளிர்காலத்தில்) பீன்ஸ்-பருப்புசிலி. பெங்களூரில் வாழைப்பூவைப் பார்க்கமுடிவதால், வாழைப்பூ பருப்புசிலியும் செய்கிறார் மனைவி. அந்தக்காலத்தில் அம்மா நாள்கிழமைகளில் செய்தது கொத்தவரங்காய் பருப்புசிலி. இந்தமூன்றில் எதுவாயிருந்தாலும் பிடிக்கும். பருப்புசிலியை சும்மா ஒரு கப்பில் நிரப்பி ஸ்பூன் போட்டுக் கொடுத்தால் பட்சணம்போல் சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். சாதம் எல்லாம் வேண்டும் என்பதில்லை எனக்கு!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார். எனக்கும் அப்படித்தான். எந்தக் காயையோ கூட்டையோ ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தால் சாப்பிடப் பிடிக்கும். 'அம்மா செய்த பருப்புசிலி' என்று வாய் தவறிச் சொல்லி எப்போவாவது வம்பு வந்து சேர்ந்திருக்கிறதா வீட்டில்?
நீக்கு///இந்தத் தடவை அருமையான ஃப்ரெஷ் வாழைப்பூவை பழமுதிர்ச்சோலை காய்கறி கடையில் பார்த்தேன். என் மனைவியை பருப்புசிலி செய்யச் சொன்னேன். ///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தான் செய்யாமல்,.. ஹஸ்பண்ட்டை இப்போ மனைவியாக்கி ஓடர் போட்டிருக்கிறாராமாம்ம்ம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)).
வாங்க அதிரா..... ஏற்கெனவே சொல்லியிருக்கேனே. கிச்சனுக்குள் வந்தாலே, பார்டரைத் தாண்டி வந்த பயங்கரவாதி மாதிரி இப்போல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
நீக்குஉங்க கருத்தைப் படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. என் பசங்க அந்த ஊருக்கு வந்தபோது, ஒரு வாரத்தில் நான் அருமையா சமையல் கற்றுக்கொடுக்கறேன் என்று சொன்னேன். பெண், சட்டுனு, உங்கள்ட கத்துக்க முடியாதுப்பா, நீங்களே ஒவ்வொரு ஸ்டெப்பா செய்ய ஆரம்பிச்சுடுவீங்க, எந்த ஸ்டெப்புலயும் மூக்கை நுழைத்து நீங்க செய்வீங்க என்றாள். அதுமாதிரி, நான் கிச்சனுக்குள் நுழைந்து கட கடவெனச் செய்வது, சமயத்தில் மனைவிக்கு 'கர்ர்ர்ர்ர்ர்ர்' உண்டாக்கிவிடும் (செஞ்சா பரவாயில்லை, நான் கொஞ்சம் டமாரமடிப்பேன் ஹாஹாஹா)
//வாழைப்பூவில், கள்ளனை எடுக்கவேண்டும்.//
பதிலளிநீக்குஅதெல்லாம் எடுக்கோணும் எனும் கட்டாயம் இல்லை:).. நல்ல குட்டியாக வெட்டி எடுத்து விட்டால் போதும்.. நான் தான் சொல்லி இருக்கிறேனே.. இலங்கையர்கள் கள்ளனைப் பிடிப்பதே சே சே எடுப்பதே இல்லை.. அப்படியே வெட்டிச் சமைச்சுப்போடுவோம்ம்:).. ஹா ஹா ஹா..
கள்ளனை எடுப்பது எங்க வீடுகள்ல செய்வது. எதுக்கு புதுசா உங்க வழிப்படி, கள்ளனை எடுக்காமல் செய்வது? நம்பி ஒரு தடவை பொரியலுக்குச் செய்துபார்க்கலாமா? இல்லை எங்க வழக்கத்துல, ஏதேனும் அறிவியல் காரணம் இருக்குமா (கள்ளன் உடலுக்குத் தீமை என்பதுபோல).
நீக்குஅது நெல்லை தமிழன் ஸ்ரீலங்கன் தமிழர்கள் நம்மை மாதிரி ஒவ்வொரு பூவா பிரிக்க மாட்டாங்க .நடுல இருக்கே கூம்பு ஷேப் அதை மட்டும் கட் பண்ணி செய்றாங்க கூடவே லைம் ஜூஸ் சேர்க்கிறாங்க ஆனா எனக்கு அந்த சுவை பிடிக்கலை :) நானும் செய்ய போக அது மாதிரி அது பிங்க் காலரா மாறி கசப்போ கசப்பு !! .
நீக்குகுழாய் (குழை )சாதத்தை ட்ரை பண்ணலாம் ஆனா இது கசக்கும் சொல்லிட்டேன்
ஏஞ்சலின் - நீங்க சொல்றது என்னன்னா, பூ, மேலிருந்து 4 இஞ்ச்தான் இருக்கும். அதனால், மொத்தமாக 4 இஞ்சுக்குமேல் வாழைப்பூவை முழுவதும் வெட்டித் தூரப்போட்டுடுவாங்கன்னா சொல்றீங்க? மடலில் கறி செய்தால் கசக்காதோ? (ஆழ்ந்த துவர்ப்பு)
நீக்கு//ஒரு வாழைப்பூ + நிறைய பொறுமை// ஹா ஹா ஹா ட்ரூஊஊஊஊஊஊஊ:))
பதிலளிநீக்குநன்றி. நான் செய்து பார்க்கும்போதுதான் ஒவ்வொன்றின் கஷ்டம் புரிந்துகொள்ள முடிகிறது. ரொம்ப முன்பெல்லாம், தோசை மெதுவாக வருகிறதே என்று நினைப்பேன். நான் செய்யும்போதுதான் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நேரம் ஆகிறது என்று புரிகிறது. சமீபத்தில், வாழைத் தண்டை வெட்டியபோதும் இதனைப் புரிந்துகொண்டேன். நார் முழுவதும் எடுக்கலைனா, நல்லாவே இருக்காது. அது ஒரு பெரிய வேலை.
நீக்கு///அன்றைக்கு நான்தான் வாழைப்பூ பருப்புசிலி செய்தேன்///
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஅ என்னாது ரெயின் ட்ரக் மாறி ஓடுதே:)) நான் ஏசினது கேட்டிட்டுதோ?:))
நீங்க படிக்கப் படிக்க பின்னூட்டம் இடுறீங்க. ஆமாம் அதிரா... இடுகையின் கடைசியிலிருந்து முதல் வரி வரை படிக்கும் உங்கள் செக் எங்கே காணோம்? கிறிஸ்துமஸுக்கு நாட்கள் இருக்கிறதே....
நீக்குஎன் செக்:) இருக்கிறா ஆனா இல்ல:)).. ஆத்துக்காரர் வாங்கி வந்த சோன் பப்டியில் ரெண்டு பீஸை எடுத்துச் சாப்பிட்டு விட்டாவாம்ம்ம்ம்ம்:)).. அதலால இப்போ ஆள் குல்ட்டுக்கு அடியில:) அலர்ஜியாம்ம் ஹா ஹா ஹா.. இவவுக்கு இனிப்பு பிடிக்காது என சொல்லிக்கொள்வா:).. அப்படி இருக்க எதுக்கு இந்த வீண் வம்பு ஜொள்ளுங்கோ:)).. என் கையில அகப்பட்டாவோ அவ்ளோதேன்ன்ன்:)) ஹா ஹா ஹா ஹையோ மீ எஸ்கேப்பு:))
நீக்கு@அதிரா - //நான் ஏசினது// - இந்த 'ஏசினது' என்ற வார்த்தை நெல்லை நாகர்கோவிலில் உபயோகப்படுத்துவார்கள். சென்னையில் இருக்கும் ஸ்ரீராமுக்கும் , திருச்சி கீசா மேடத்துக்கும் எங்கே புரிந்திருக்கப்போகிறது. நெல்லைல, 'அவம் ரொம்ப ஏசுதாம்லே' என்று பேச்சுவழக்கில் சொல்வோம்.
நீக்குஅதிரா - //வாங்கி வந்த சோன் பப்டியில் ரெண்டு பீஸை // - அச்சப்பம் ஒழுங்கா வரலைனு ஹஸ்பண்டை அழகாச் செய்ய வச்சாங்க. அப்புறம் கையில கட்டுபோட்டேன்னு படத்தைப் போட்டு 8 வாரம் காணாமல் போய்ட்டாங்க. இப்போ அலர்ஜின்னு சொல்லிட்டாங்களா? நல்லவேளை நீங்க அது சோன்பப்டினால என்று சொல்லிட்டீங்க. இல்லைனா, அவங்க அடுத்த செய்முறை ஏதேனும் போட்டாங்கன்னா, நான் சந்தேகத்தோடயே படிப்பேன் (இதைச் செய்தால் நமக்கும் அலர்ஜி வந்துடுமோன்னு).
நீக்குhttps://i2.wp.com/www.girlsdp.com/wp-content/uploads/2018/03/Screenshot_902.png?resize=371%2C660
நீக்குதிருச்சி கீசா மேடத்துக்கும் எங்கே புரிந்திருக்கப்போகிறது. நெல்லைல, 'அவம் ரொம்ப ஏசுதாம்லே// krrrrrrrrrrrrrrrrrrrrrr
நீக்குகீசா மேடம்... நம்முடைய இடத்திலிருந்து (அதாவது பிறந்த வளர்ந்த ஊர்) நாம் மற்ற பல இடங்களுக்குச் சென்று வாழும்போது, நம் இடத்திற்குரிய வட்டார மொழியை நாம இழந்துடறோம் இல்லையா? என்னால் நெல்லைத் தமிழில் பேசமுடியாது. நான் தமிழகத்தில் பல இடங்களில் குறைந்தது 3 வருடங்களாவது இருந்திருக்கிறேன். நீங்களும் மதுரைத் தமிழில் பேசமுடியாதில்லையா?
நீக்குவட்டார வழக்கு சில முறை நம்மையும் அறியாமல் வந்துடும். மொழி மாறினாலும் அடிப்படைக் குணம் மாறாதே. என்னோட வெளிப்படையான பேச்சும், பரிமாறும் முறையும் என்னை எந்த ஊர்னு காட்டிக் கொடுத்துடும். யாரானும் வேண்டாம், போதும்னா நான் மேலே பரிமாறுவதை நிறுத்திடுவேன். ஆனால் இங்கே தஞ்சைப்பக்கம் வேண்டாம்னு சொன்னால் மேலும் உபசாரம் செய்து போட்டுக்கொண்டே இருக்கணும் என்பாங்க! இந்த விஷயத்தில் இன்றளவும் என்னவருக்கு என்னிடம் குறை தான்! :) ஆனால் இங்கே திருச்சி நண்பர்கள் என்னோட இந்த குணத்தைத் தான் பாராட்டாகச் சொல்றாங்க! பலவிதமான பறவைகள் போல பலவிதமான மனிதர்கள்! :)
நீக்குகீசா மேடம்... ஐயோ... உங்கள் குணம் எனக்குச் சரிப்பட்டுவராது. ஞாபகமா உங்க வீட்டுக்கு வரும்போது, நீங்கள் ஒரு தடவை 'வேணுமா' என்று கேட்டால், 'கப்' என்று தட்டைத் தூக்கி வாங்கிக்கணும் போலிருக்கு. இது சரிப்பட்டுவருமா?
நீக்கு1989ல். சென்னையில் நான் வேலைபார்த்த (டிரெய்னி) கணிணி இன்ஸ்டிடியூட்டில் படித்தவன், தி நகரில் அவன் வீட்டுக்கு என்னையும் இன்னொரு பெண்ணையும் கூப்பிட்டான். அங்கதான், வீட்டுல, 4 அடி விட்டமுள்ள தோசைக்கல்லை அதற்கென உள்ள பெரிய கரிஅடுப்பில் உபயோகப்படுத்துவதைக் கண்டேன். அவன் அம்மா அப்போ பிஸி. ரவா தோசை அந்தப் பெரிய கல்லில் செய்தார்கள். என்னிடம் வேண்டுமா என்று கேட்டான். (அவ்வளவு பெரிய தோசை) நான் கூச்சத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டார்கள். பாவிப் பயல்.. இன்னொரு முறை என்னிடம் கேட்டிருக்கக்கூடாதோ? இந்த 'மீனாட்சி மேடம்' மாதிரி ஊர்ல நிறையபேர் இருக்காங்க போலிருக்கு..... 'உபசாரம்' செய்வதுதான் சரியான முறை. நான் இதுல 'தஞ்சாவூர்' கட்சி. ஹாஹாஹா.
ம்ம்ம்ம் எங்க வீட்டிலேயே சிலர் அதாவது புக்ககத்திலேயே சிலர் நிஜம்மாவே வேண்டாம் என்பார்கள். அவங்க கிட்டே வற்புறுத்திப் போட்டால் தூக்கி எறிவாங்க! இந்த அனுபவமும் உண்டு. ஆனாலும் என்னோட உபசரணைகளை நீங்க எங்க வீட்டுக்கு வந்து செல்லும் பதிவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டே வாங்க! :))))) எங்க மானசிக குரு வந்தாரெனில் சுமார் பத்துப்பேருக்கு மேலே அவரைப் பார்க்க எங்க வீட்டுக்கு வருவாங்க. அவரோடும் ஐந்தாறு பேர் வருவாங்க! எல்லோருக்கும் இட்லி, அரிசி உப்புமா என சமைச்சுப் போட்ட அனுபவம் உண்டு. அவர் எங்க வீட்டிலே மட்டும் தான் சாப்பிடுவார். :))))
நீக்கு//எங்க மானசிக குரு வந்தாரெனில்// - இது யார் கீசா மேடம்... 'ஆன்மீகம் ஃபார் டம்மீஸ்' இல்லையே?
நீக்குஇல்லை. தி.வா. தம்பி எனக்குத் தம்பி! இந்த இணைய உலகில் முதல் முதல் என்னை "அக்கா" என அழைத்தவர். இவர் அதாவது எங்கள் குரு என்னைவிட, திவா தம்பியை விட எல்லாம் சின்னவர் வயசிலே! ஆனால் தக்ஷிணாமூர்த்தியைப் போல்! எனக்கு இவரையும் (குருவையும்) இணையம் வந்தே பழக்கம் ஆனது. 2006 ஆம் ஆண்டிலிருந்து பழக்கம். கடைசியா எங்க வீட்டுக்கு வந்தது 2015 ஃபெப்ரவரியில்! அவர் தேடியது அவருக்குக் கிடைத்திருக்கும், அதான் வரலை என நண்பர்கள் சிலரும், இன்னும் சிலர் இம்மாதிரி அடிக்கடி தேடுதலில் சென்றிருக்கிறார். அம்மா இருப்பதால் வந்து தான் ஆகணும் என்கின்றனர். காத்திருக்கோம்! அம்பேரிக்காவில் இருக்கும்போது ஒரு தரமும், வந்தப்புறம் ஒரு தரமும் பேசினார். அப்புறமாத் தகவலே இல்லை! :(
நீக்குஎனக்கு அந்த மாதிரியானவரை கனெக்ட் செய்யுங்களேன் கீசா மேடம்..... எனக்கு தியானம் கைவரச் செய்யணும்...
நீக்குஉங்களுக்கு அதுக்குக் கொடுத்து வைச்சிருக்கணும். அதோடு தியானம் எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதைப்பற்றிப் பேசி விளக்கம் கொடுத்ததும் இல்லை. பொதுவான டிஸ்கோர்ஸ் மட்டுமே இருக்கும். ஆனால் என்ன ஆச்சரியம்னா நாம் எந்த விஷயம் பத்திக் கேட்கணும்னு நினைச்சுட்டு இருப்போமே அந்த விஷயம் பத்தி நாம் கேட்காமலே தெளிவு கிடைக்கும்படிப் பேசுவார். மற்றபடி யாரையும் வற்புறுத்துவதில்லை. நீங்க அவரைப்பார்த்தால் யோகி என நினைக்கமாட்டீங்க! பான்ட், ஷர்ட்டோடு தான் இருப்பார். கண்களின் ஒளி நம்மைச் சிலிர்க்க வைக்கும். அந்தக் கண்களைச் சிறிது நேரம் நேருக்கு நேர் பார்க்கணும். நம் உடம்பிலேயே ஒருவிதமான புல்லரிப்புத் தெரியும். தவறான எண்ணங்களே தோன்றாது. நமக்கெல்லாம் ஃபான் காத்துக் கூடப் போதாமல் வியர்த்துக் கொட்டும்போது அவருக்கு வியர்வையே தெரியாது! சாதாரண மனிதரைப் போல் தான் இருப்பார். ரேவதியிடம் கேளுங்க. இன்னும் சொல்லுவார். அவங்க பெண்ணுக்கும் இவரே இன்ஸ்பிரேஷன்! :)))) எங்க பெண்ணும் பார்த்துப் பேசி இருக்கா.
நீக்குநீங்களோ, நானோ தேடினால் அவர் வரமாட்டார். அவர் வரச்சே உங்களுக்கு நான் தெரியப்படுத்தினாலும் நீங்க வரமாதிரி இருக்கணும். குருவைச் சந்திக்கும் வேளை உங்களுக்கு வந்துவிட்டது என்றால் தவிர பார்ப்பதோ, பேசுவதோ கடினம்.
நீக்கு//குருவைச் சந்திக்கும் வேளை// - ஆம். நீங்கள் சொல்வது சரிதான். ப்ராப்தம்தான் இருக்கணும்.
நீக்குஉண்மையில் சூப்பரா வந்திருக்குது... நானும் பருப்பு சேர்த்துச் செய்வேன் ஆனா இப்படி இல்லை.. பருப்பை அவிய விட்டு பின்பு வாழைப்பூவை அதனுள் சேர்த்து அவிச்சு.. பால் சேர்ப்போம். இது வித்தியாச மாக இருக்கு செய்யோணும்.. என்னிடம் எப்பவும் கட் பண்ணி பக் பண்ணிய வாழைப்பூ ஃபிரீசரில் இருக்கும்.. தமிழ்க் கடை வந்ததிலிருந்து அப்படித்தான்.. இப்பவும் இருக்கே:))..
பதிலளிநீக்குகொத்தவரங்காய் உசிரும் சூப்பரா வந்திருக்கு.. உங்கள் வாழைக்காய் உசிரை விட அண்ணியின் உசிலி சூப்பராக்கும்:)) ஹையோ நேக்கு ரைமாச்சூ... பிளேன் எஞ்சின் ஸ்ராட் ஆகிட்டுது.. மீ பாய் பாய்ய்:).
அதிரா... பால் (தேங்காய்ப் பால்னு அர்த்தம் புரிந்துகொள்கிறேன்) சேர்த்து ஒரு தடவை பார்க்கிறேன்.
நீக்குஎன்னதான் நீங்க பெண்களைப் புகழ்ந்தாலும், புகழ்பெற்ற சமையல் நிபுணர்களில் ஆண்கள்தானே 99 சதவிகிதம்.. ஈழத்திலும் அந்த நிலைமைதான் என்று நினைக்கிறேன். (ஒருவேளை பெண்கள், 2-3 பேர்களுக்கு மட்டும் சமையல்னா சரியாச் செய்வாங்க, 10 பேர்களுக்கு மேல் என்றால் அவர்களால் ருசியாகச் செய்ய முடியாதோ? கீசா மேடம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்)
//நேக்கு ரைமாச்சூ... // - என்ன... ஏதாவது ஜிம், நீச்சல் குளம் இவற்றில் சேர்ந்திருக்கிறீர்களா?
நீக்குஹையோ அதுதான் அடிக்கடி ஜொள்ளுவேனே:).. ட்ரம்ப் அங்கிளோட மீட்டிங் போவேன் அடிக்கடி என.. மீ அவரின் பேசனல் செக்கரட்ட்டறி எல்லோ:)) அடிக்கடி இதை ஞாபகப்படுத்த வேண்டிக் கிடக்கே:)) கர்ர்ர்ர்:))..
நீக்குஎனக்குத் தெரிஞ்சு சென்னையில் இரண்டு பெண் சமையல் கான்ட்ராக்டர்கள் உண்டு. :))) பொதுவாக நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் நான், என் மன்னி, மாமியார் எல்லாம் 50 பேர்களுக்குச் சமைப்போம். என் பெண் நிச்சயதார்த்தம் திடீரென வைத்ததால் எங்க வீட்டிலேயே இரண்டு மணி நேரத்தில் ஏற்பாடு செய்யும்படி ஆச்சு! சுமார் 75 பேர் டிஃபன் தான் என்றாலும் நான், என் மாமியார், மன்னி மூவரும் செய்தோம். என் கடைசி நாத்தனார் உதவி செய்தார். எங்க வீட்டில் ஐயப்பன் சமாராதனைக்கு நாங்க தான் சமைப்போம். சுமார் 100 பேர் சாப்பிடுவார்கள். நான் சென்னையை விட்டு வரும் வரையில் எங்க வீட்டு ஸ்ராத்தத்துக்கு நான் மட்டுமே சமைப்பேன். சுமார் பதினைந்து பேர் குடும்ப நபர்கள் சாப்பிடுவாங்க! உதவிக்கு எல்லாம் யாரும் வரமாட்டாங்க!
நீக்குஅதிரா - //ட்ரம்ப் அங்கிளோட மீட்டிங் போவேன்// - ஓ நீங்க அவங்களா? அவரோட கொள்ககள்னாலதான் நிறைய பேர் அவரை வெறுக்கறாங்கன்னு நினைத்தால், இப்படி ஒரு காரணமும் இருக்குமோ?
நீக்குகீசா மேடம் - //ஐயப்பன் சமாராதனைக்கு நாங்க தான் சமைப்போம்.// - நான் பொதுவா சமையல் காண்டிராக்டர்கள் பார்த்ததில்லையே தவிர, ஒரு கூட்டத்துக்குச் சமைப்பது ரொம்பவும் கடினமானதல்ல என்பது என் அனுமானம். என்ன ஓரிரண்டு பேர்களுக்குச் சமைக்கும்போது, சொதப்பிவிட்டால் சரி செய்துடலாம், நஷ்டம் குறைவு. பெரிய கூட்டம் என்னும்போது ரொம்ப கவனமா சமைக்கணும். நான் பொதுவா சமைக்கும்போது அதிகமா சமைப்பேன். அதிலும் இனிப்புலாம் செய்தால் ரொம்ப அதிகமாத்தான் செய்வேன்.
நீக்குமுன்பெல்லாம் (நான் சொல்றது 50-60 வருடங்களுக்கு முன்பு) எல்லா விசேஷங்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள்தானே சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (உதவிக்கு மற்றவீட்டுப் பெண்மணிகளும் வருவார்கள் என்பதை நாவல்களில் படித்திருக்கிறேன்)
என் கல்யாணத்துக்கு அப்பளம், வடகம் முதல் அனைத்தும் வீட்டுத் தயாரிப்புத் தான்.
நீக்குகீசா மேடம்.... ஐயோ பாவம்... இதனைத் தயாரித்தவர்கள். எத்தனை உழைப்பு.... அப்போல்லாம் இதுதான் பொழுதுபோக்குன்னு நினைக்கறேன் (பலர் சேர்ந்து செய்யும்போது ஊர்க்கதை பேசிக்கொண்டு என்று). இப்போல்லாம் காசைக் கொடு, நல்ல பிராண்டை வாங்கு என்று முடிந்துவிடுகிறது... அதுலவேற, திருமண காண்டிராக்டர்கள், அப்பளத்திலேயே மணமகன்/மணமகள் பெயரை எழுதி, அப்பளம் சாப்பிடுபவர்கள் அங்கேயே நொறுக்கிச் சாப்பிடும்படிச் செய்துவிடுகிறார்கள்.
நீக்குபொழுது போக்குனு மட்டும் இல்லை நெல்லைத் தமிழரே, வீட்டில் செய்தால் அரைக்கிலோ உளுந்துக்கு 200 அப்பளத்துக்கும் மேல் வரும். அதையே கடையில் வாங்கினால் இரட்டிப்பு விலை!
நீக்குYou are right and You are wrong as well. என்னோட தியரி... முடிந்த அளவு கொஞ்சமா உடம்பை வருத்திக்கணும், ஏன்னா நல்ல பொருள் விலைக்குக் கிடைக்கும் என்றால், உடம்பை வருத்திக்கிட்டு பண்ணக்கூடாது. அதுனால யாருக்கும் பிரயோசனம் இல்லை. பசங்க சாப்பிடாதுகள். சமீபத்துல என் மனைவி ஸ்ரீஜெயந்திக்கு ஏகப்பட்ட ஐட்டம் செய்தாள். நான் ஒரு ஐட்டம் செய்தேன் (:-) ). அதுனால என்ன பிரச்சனைனா, எல்லாவற்றையும் சாப்பிட்டு உடம்பு வெயிட் போட்டதுதான். சாஸ்திரத்துக்கு ஓரிரு ஐட்டம், மற்றவை தேவைனா கடைல வாங்கிக்கணும் என்பது. தீபாவளிக்கு அவளை caution செய்துட்டேன். ஒரு காரம் ஒரு இனிப்புக்கு மேல் எதையும் செய்யக்கூடாது என்று. (அப்படி அவசியம் நமக்கு சாப்பிடணும் என்றால், உங்களையோ ஸ்ரீராமையோ இல்லை கீதா ரங்கனையோ விசிட் செய்தால் போச்சு)
நீக்குசில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தீபாவளிக்கு இருக்கும், இல்லாத எல்லா பட்சணமும் கொஞ்சம் கொஞ்சம் செய்தோம். ஐட்டம் கொஞ்சம் கொஞ்சம் என்றாலும் டேஸ்ட் செய்தாலே வயிறு டம்!
நீக்குஇப்போல்லாம் விசிட் பண்றவங்க வாங்கி வர்ற ஸ்வீட்தான், காரம்தான்! ஹிஹிஹி...
//விசிட் பண்றவங்க வாங்கி வர்ற ஸ்வீட்தான்// - எதிர்பார்ப்போடு வர்றாதீங்க என்பதைத்தான் எவ்வளவு நாசூக்காச் சொல்றீங்க. அட் லீஸ்ட், சாயந்திரமா வந்தால், மற்றவங்க கொடுத்துட்டுப் போன ஸ்வீட்டாவது இருக்க வாய்ப்பு இருக்குமில்லையா ஸ்ரீராம்?
நீக்குTo be truthful, எனக்கு இப்போல்லாம் எண்ணெய் இனிப்பு என்றாலே பிடிக்கறதில்லை. அப்போ அப்போ உள்ள மனநிலையைப் பொறுத்துத்தான் இனிப்பின் மீதான ஆர்வம்.
//வெறும் வாழைப்பூ பொரியலும் நல்லா இருக்கும், ஆனா பசங்க அந்தத் துவர்ப்பினால் விரும்பிச் சாப்பிட மாட்டார்கள்.//
பதிலளிநீக்குஇதேதான் எங்கள் வீட்டிலும், ஆனா கறி வகையை விட, சுண்டல் செய்தால் சாப்பிட்டு விடுவினம்.. அத்தோடு சுண்டலாக செய்தால்.. தனிப்பூ எல்லோ அப்படியே நிறைய உடம்பில் சேரும்.. பருப்பு சேர்த்தால் பருப்புதானே அதில் அதிகமாகுது...
ஆனா எந்த ஒன்றும், உடனேயே துப்பரவாக்கி வெட்டி ஃபிரீஸ் பண்ணிட்டால்.. அதிலிருக்கும் சத்துக்கள் அழியாது எனத்தான் நான் அறிஞ்சேன்.. ஃபிரிஜ்ஜில் வைத்திருப்பதுதான் தப்பு.
உண்மையில் கடையில் வாடிய மரக்கறி வாங்கிச் சமைப்பதைக் காட்டிலும்.. ஃபிரீஸ் பண்ணி விக்கும் மரக்கறிகளில் சத்துக்கள் அப்படியே கிடைக்குதாம், ஏனெனில் மரத்தால் பிடுங்கிய உடனேயே ஃபிறீஸ் பண்ணி விடுவதால்.
அதிரா.... //பிடுங்கிய உடனேயே ஃபிறீஸ் பண்ணி விடுவதால்.// - இது எனக்கு தெரியலை. எப்போதுமே ஃப்ரெஷ் வெஜ் தானே நல்லதுன்னு சொல்வாங்க. ஒருத்தர் சொன்னார், பறித்த 2 நாட்களுக்குள் சாப்பிட்டுடணுமாம். (அது எப்படி சாத்தியம் பெரும்பாலானவர்களுக்கு.. சென்னையிலேயே, கீரை வகைகள் தவிர, மற்றவை கடைகளுக்கு வருவதற்கே 2 நாளாகிவிடும்)
நீக்குஜொள்ள மறந்திட்டேன்ன் நாங்கள் வாழைப்பூ வடகமும் செய்வோம்ம்..
பதிலளிநீக்குநன்றி அதிரா... வடகம்... சாப்பிட்டு நாளாகிவிட்டது.
நீக்குவாழைப்பூ பருப்பு உசிலி மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குநானும் செய்வேன். வடை எப்போதாவது செய்வேன்.
மாயவரத்தில் வாழைப்பூவுடன் முருங்கை கீரை சேர்த்து உசுலி செய்வார்கள் நன்றாக இருக்கும்.
ஆவியில் வேகவைத்து செய்யும் முறையை ராஜி எழுதி இருந்தார்கள் அது மாதிரியும் செய்து பார்த்து இருக்கிறேன்.
சில பூ கசக்குது, கசக்காத பூ வாங்குவதுதான் கஷ்டமாய் இருக்கிறது.
சந்தையில் வாங்குவது சில நேரம் கசக்குது, சில நேரம் நன்றாக இருக்கிறது.
காள்ளன் ஆய்ந்து தருவது நல்ல விஷயமே!
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கொத்தவரங்காய் பருப்பு உசிலி பார்க்க அழகாய் இருக்கிறது.
வாங்க கோமதி அரசு மேடம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பாருங்க.... மதுரையில் இருந்தாலும் மாயவரம் ஞாபகம் இன்னும் உங்களை விட்டுப் போகலை.
நீக்குவாழைப்பூ சில கசக்கும் என்று நீங்க சொன்னப்பறம்தான் எனக்கு அது மனதில் தோணுது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது?
நெல்லைத்தமிழன், 36 வருஷத்திற்கு மேல் இருந்து விட்டேன் என் நினைவுகளிலிருந்து அந்த ஊரை, அந்த ஊர் நட்புகளை மறக்கவே முடியாது.
நீக்குஇப்போதும் கல்யாணம், கோவில் விழா என்று அழைப்புகள் வருது.
ஓ... அப்படிப்பட்ட ஊரை, நட்பை விட்டுவிட்டு வேறு வழியில்லாமல் மதுரைக்குச் சென்றுவிட்டீர்களா கோமதி அரசு மேடம். இவ்வளவு வருடங்கள் பழகிய இடத்தை விட்டுவிட்டு வருவது மிகக் கடினம்தான்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாழைப்பூ உசிலி சூப்பராக நல்ல கலருடன் வந்து இருக்கிறது. படங்களும், செய்முறை பக்குவங்களும் என்னையும் உசிலி செய்ய தூண்டுகிறது. நானும் தங்களைப் போலத் தான் ஆவியில் வேக வைத்து உதிர்த்து உசிலி செய்வேன். மிக அருமையாக உள்ளது. இதற்கு சாதத்தில் சேர்த்துக் கொள்ள ஒரு மோர் குழம்போ ,சின்ன வெங்காயம் போட்டு வத்தக்குழம்போ இருந்தால் நன்றாக இருக்குமென நான் நினைக்கிறேன். வாழைப்பூ உசிலி பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கமலா ஹரிஹரன் அவர்கள். இதுவரை வத்தக் குழம்புக்கு சின்ன வெங்காயம் (வெங்காயம்) உபயோகப்படுத்தினதே இல்லை. இதெல்லாம் முயற்சி செய்யவே என் மனைவி விடமாட்டாள். வீட்டு டேஸ்ட் போயிடுமாம். அதிலும் பசங்களுக்கு இந்த மாதிரி (எங்கள் வழக்கமில்லாத) செய்முறைகளை வீட்டில் செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறாள். ஹாஹாஹா
நீக்குஹையோ, ஆச்சரியமா இருக்கே! எங்கம்மா அடைக்குச் செய்வார்! அன்னிக்குக் கொண்டாட்டம் தான்! :) அதோடு முருங்கை, கத்திரி, சி.வெ.தக்காளி போட்டுப் பருப்புப் போடாமல் வெறும் குழம்பு பண்ணினால் அரிசி உப்புமா, வெண்பொங்கல் ஆகியவற்றுக்கு நல்லா இருக்கும். நான் அடிக்கடி பண்ணுவேன். நம்ம ரங்க்ஸ் செட்டிநாட்டுக் குழம்பு என்பார் அதை! :))
நீக்குகீசா மேடம்... இன்றைக்கு வழக்கமாகச் செய்யும் சாம்பார் கூடாது என்று நெட்டில் பார்த்து தக்காளி, வெங்காயம் போட்டு, வெண்டைத் தான் போட்டு, சின்ன வெங்காயம் தாளித்து சாம்பார் செய்தேன். அத்துடன் சாப்பிட பொடிதூவின கத்தரிக் கறி. மனைவி ஒன்றும் சொல்லவில்லை (ஏன்னா...கோபத்தில் இருக்கிறோம். ஹாஹாஹா. சாதாரண சமயமென்றால் இது என்ன... நம்ம வழக்கமில்லாத சாம்பார் என்று கடு கடு என்றிருப்பாள்). மகள் சாப்பிட்டாள். ஜலதோஷம் என்பதால் ஒன்றும் சொல்லலை.
நீக்குஇரண்டு நாட்களுக்கு முன்பு, அவளுக்கு ஜலதோஷம் ஜாஸ்தியாயிருக்கிறதே, என் ஸ்டாண்டர்டு ரசம் போர் அடிக்குதுன்னு சொல்வாளே, அவள் ஆசைப்பட்ட சாதாரண ரசம் (தக்காளி, சிறிது குழம்புப்பொடி, பருப்பு ஜலம், கொத்தமல்லி தழை. மிளகு/ஜீரகத்துக்குத் தடா சொல்லிட்டாள்) இரண்டு முறை ஏற்கனவே தொடர்ந்து செய்துட்டேனே என்று பூண்டு போட்டு (அப்போ மனைவி ஊர்ல இல்லை) மற்றபடி பருப்பு ரசத்தைச் செய்தேன். அவளுக்கும் உடம்புக்கு நல்லதே என்று. சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஏதோ வித்தியாசம் இருக்கு, என்னன்னு தெரியலை என்றாள். மெதுவா, பூண்டு போட்டு சாத்துமது சாப்பிடுவையா என்றால், 'பூண்டா, ரசத்திலயா... ஐயையோ' என்றாள். நல்லவேளை அது பூண்டு ரசம்னு நான் சொல்லலை. ரெசிப்பில சொன்னதுபோல் 8 பூண்டு பற்கள் போடாமல் 2 போட்டது நல்லதாகப் போயிற்று.
பரவாயில்லை, மனைவிக்குச் சமைத்துப் போடும் கணவன்மாரில் உங்களுக்கு ஒரு பெரிய "ஓ" நான் படுத்தால் கூட சமைச்சு வைச்சுட்டுத் தான் படுக்க முடியும் மாமியார் எங்களோடு இருந்தவரைக்கும்! :)))) மாமியார் மைத்துனரிடம் போனப்புறம் எனக்கு முடியலைனாலோ ஆக்சிஜன், நெபுலைசர் வைத்துக் கொண்டு வந்தாலோ அப்போ சாப்பாடு ஆர்டர் பண்ணிடுவார். அவர் சமைக்க மாட்டார்! இப்போவும் காஃபி கூடப் போட வர மாட்டார். மற்றபடி காய் நறுக்குவது போன்ற உதவிகள் உண்டு. ஆனால் எனக்குத் தான் அவர் நறுக்குவது பிடிக்காது! :)))) எங்க வீட்டிலும் பூண்டு ரசம் எல்லாம் மாமனார் காலத்தோட போச்சு! எங்களுக்குப் பிடிக்கவும் இல்லை; ஒத்துக்கவும் இல்லை. கோபத்தில் இருந்தால் எங்க வீட்டில் எல்லா வேலைகளும் சீக்கிரமா ஆயிடும்! :))) சாப்பாடும். கூப்பிட்ட உடனே வந்துடுவார். :)))
நீக்குஉண்மையா கடந்த சில வருடங்களாகத்தான் நான் சமையலறையில் தஞ்சம். அவங்க அந்த ஊரை விட்டு இங்க வந்தபிறகு கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன் (நானாகத்தான், அப்புறம் ஹோட்டல்லேர்ந்து ஒருவர் ஒரு நாள் வந்து 5 ஐட்டம் சொல்லித்தந்தார்).
நீக்குஆனா கீசா மேடம்... உண்மையா எல்லா ஆண்களும் சமையல் வேலை கத்துக்கணும், கிச்சன் வேலையையும் செய்யணும். அப்போதான் அவங்களோட கஷ்டம் தெரியும். (புரிஞ்சாலும் அதை எங்களால் சுலபத்துல ஒத்துக்க முடியாது, அது வேறு விஷயம்.ஹாஹா). சமையல்ல கஷ்டமான விஷயம் என்னன்னா, இரண்டுவேளை (மூன்று வேளை) என்ன செய்வது என்பதுதான். இரண்டாவது, செய்தவை, எவ்வளவு மிஞ்சும், மிஞ்சாது என்பதை கணிப்பதும் மிகவும் கடினம். ஏன்னா சாப்பிடறவங்க அவங்க தேவைக்குத்தான் சாப்பிடுவாங்க. இருக்கறதை பகிர்ந்து சாப்பிடமுடியாது. சில சமயம் பசி இருந்தால் நிறைய சாப்பிடுவாங்க, அப்போ கொஞ்சமா இருக்குன்னு சொல்ல முடியாது/கூடாது. இதைத்தான் நான் இப்போ கத்துக்கிட்டிருக்கேன். ஆனா ஒண்ணுல ஸ்டிரிக்டா இருக்கேன். மிஞ்சினால் (வேற யாருக்கும் கொடுக்க வாய்ப்பில்லை) தூரப் போடுவேன். நிச்சயமா என் வயத்துக்குள்ள போட்டுக்க மாட்டேன். (அனேகமா இந்தக் காரணத்துனாலதான் நம்ம வீட்டுப் பெண்கள் எடை அதிகமாறாங்க என்பது என் எண்ணம். எப்படி வீணாக்குவது, சரி நாமாவது சாப்பிட்டுவிடுவோம் என்று நினைப்பதால்).
பெரியப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகீழே சிந்தாமல் இருக்க வாழை மடல், தையல் இல்லை அருமை.
நல்ல யோஸனை.
ஒன்றை நினைக்கும்போது நம் சிறுவயது ஞாபகங்கள் நமக்கு வருவது இயல்புதானே கோமதி அரசு மேடம்.
நீக்குசிறிய வயதில் நாங்க, தையல் இலை தயார் செய்தது நினைவுக்கு வருது. இப்போ சமீபத்துல பெங்களூரில், 1 தையல் இலை 5 ரூபாய்னு வாங்கினேன். அதைவிட சென்னையில் ஒரு வாழை இலை 20 ரூபாய்.
உசிலி என்றால் வாழைப்பூ உசிலிதான் (எனக்கு).
பதிலளிநீக்குபருப்பு வருக்கும்போது தனியாய்ப் பருப்பு கொஞ்சம் எடுத்து எனக்கு வித்து விடுவார் பாஸ். அவர் வா.பூ உசிலி செய்வதைவிட, பீன்ஸ் உசிலி செய்வதுதான் அதுவம்.
முட்டைகோஸ் போட்டு கூட பருப்புசிலி செய்வார்கள்.
என்னாதூஊ வித்து விடுவாரோ உங்க பொஸ்:) ஹா ஹா ஹா இது நல்ல ஐடியாவா இருக்கே:)... ஶ்ரீராம் ஓடிக்கமோன்ன் பிக்கோஸ் இது உங்களுக்கான கொமெண்ட்டாக்கும்:).. வாழ்க கூகிள்:) வளர்க அதன் ஸ்பெல்லிங் கரெக்ஷன்ஸ்:)...
நீக்குஹிஹிஹி... வைத்துவிடுவார் என்று படிங்க...
நீக்கு*அதுவம்.
அதிகம் என்று படிக்கவும்!
*வருக்கும்போது
வதக்கும்போது என்று படிக்கவும். கொஞ்சம் மொறுமொறுப்பாகவும் இருக்கும்!!!
முட்டைகோஸ் பருப்பு உசிலிக்கு பாசிப் பருப்பை மொட்டு மொட்டாக வேக வைத்து செய்வார்கள்.
நீக்குகொத்தவரை, பீன்ஸ் வாழைப்பூ போல பருப்புகளை அரைக்க வேண்டாம். வேகவைத்து உதிர்த்து போட வேண்டாம்.
ஸ்ரீராம்,, நீங்க புடலங்காய் பருப்புசிலி சாப்பிட்டிருக்கீங்களா? அதுவும், குடமிளகாய் பருப்புசிலியும் நன்றாகவே இருந்தன.
நீக்குவாழைப்பூவை இதழ் இதழாகப் பிரித்து, கள்ளன் எடுத்து நறுக்கியபடி வரும்போது ஒரு ஸ்டேஜில் இதற்குமேல் அதைப் பிரிக்க முடியாது என்று தோன்றும். அப்படியும் கொஞ்சம் வாழைப்பூ எடுத்து நறுக்கிய பிறகு மீதம் உள்ள அந்த இளம், சிறு பகுதியை...
பதிலளிநீக்குஅப்படியே சாப்பிட்டு விடுவேன்!
உண்மை.. அது மிகவும் ருசியாக இருக்கும். பல் கறை படிந்து விடும் என்று பாட்டி, அம்மா சொல்லியும் கேட்காமல் சாப்பிட்டு விடுவோம். அதில் துவர்ப்பு தெரியாது. இப்போது வாழைப்பூ நறுக்கினாலும், அப்படியேதான். ... இப்போதுதான் பச்சை காய்களை அப்படியே சாப்பிட்டு ஜீவிதம் பண்ணுகிறவர்கள் அதிகமாகி விட்டார்களே...
நீக்குசெய்ததுண்டு.ஹாஹா.
நீக்குஎங்க வீடுகள்ல, அந்தக் கடைசிப் பகுதியை (வெண்மையா தோல் இருந்ததுன்னா அந்தப் பகுதி வந்தாச்சுன்னு அர்த்தம்), பசங்களுக்கு குறுக்கே வெட்டித் தருவாங்க. அருமையா இருக்கும். இப்போதான் எனக்கு ஞாபகம் வருது, இந்தத் தடவை பருப்புசிலி செய்தபோது, அந்த வெண்மைப் பகுதியை என்ன செய்தார்கள் என்பது நினைவுக்கு வரவில்லை.
நீக்குநானும் கடைசி பகுதியை எல்லோருக்கும் வெட்டிக் கொடுத்து சாப்பிடுவேன்.
நீக்குவாழைப்பூவில் கள்ளனை எடுப்ப்தே பெரிய வேலை என்மனைவி வடை செய்வாள்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி.எம்.பி சார்... நம் பாரம்பர்ய உணவு, காய்கள் எல்லாமே உடலுக்குத் தேவையான சத்தைத் தருகின்றன. பஹ்ரைனில் இருந்தபோது, செள செள (பெங்களூர் கத்திரிக்காய்), மார்க்கெட்டுக்கு வெள்ளி அதிகாலையில் வரும். நான் போய் வாங்கிவருவேன். அப்போ கடைக்காரர் சொன்னார், இதனை பிலிப்பினோக்களுக்காக தருவிக்கிறோம் என்றார். அவங்க செள செள அதிகம் உபயோகிப்பார்களாம்.
நீக்குநெல்லைத் தமிழன் மேடைக்கு வரவும்:)...
பதிலளிநீக்குhttps://goo.gl/images/QwF0WQ
ஓ... இன்னும் பாக்கி ஆயுதங்கள் உங்களிடம்தான் இருக்கா? எல்லாமே கைப்பற்றிவிட்டேன்னு ராஜபக்ஷே எங்கிட்ட சொன்னாரே...
நீக்குஹையோ என்னை எயார்போர்ட்டில வச்சே அந்த மனிசன் கடத்திடப் போறாரெ இக்கொமெண்ட் படிச்சால்ல்ல்:)) ஹா ஹா ஹா நல்லவேளை அவருக்கு என் டமில்:) புரியாது:))
நீக்குஇன்னும் சற்று நேரத்தில் வருகிறேன். கொஞ்சம் பிஸியாகிட்டேன்...... என் பெண் என்னை அரிசி உப்புமா, சீரகம், மிளகு போடாம பண்ணச் சொன்னா. சாப்பிட்டும் ஆயிற்று. (சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப அருமையா வந்திருந்தது..ஹாஹா.. இதை எபிக்கு எழுதி அனுப்பினால் கீசா மேடம், எங்க அக்கா இவங்க அது எப்படி மிளகு, சீரகம் இல்லாமன்னு சண்டைக்கு வந்தாலும் வருவாங்க... அதிரா என்றால், இதுதான் நெல்லை ரெசிப்பின்னு சொல்லி தப்பிச்சுடலாம்...)
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ நெலைத்தமிழன் லாண்டட்ட்:)
நீக்கு//(சும்மா சொல்லக்கூடாது.. ரொம்ப அருமையா வந்திருந்தது..ஹாஹா.///
அதெல்லாம் சரிதான் உங்களை எப்படி கிச்சினுக்குள் விட்டாங்க:)) அதுவும் இந்த மாலை நேரத்தில:))
ஓ... என் மனைவி அவங்க அப்பா வீட்டிற்குச் (ஊருக்குச்) சென்றிருக்கிறார். எனக்கு உடனே நடிகர் ஜனகராஜ் ஞாபகத்துக்கு வருகிறார்.
நீக்குஹா ஹா ஹா...
நீக்குநெல்லைத் தமிழரே, இதைப் படிச்சதும் ஓடோடி வந்தேன். என்னோட சாப்பிடலாம் வாங்க வலைப்பக்கமோ அல்லது எ/பியிலோ அரிசி உப்புமாக் குறிப்பு இருந்தா தேடிப் பாருங்க. அரிசி உப்புமாவில் மிளகு, ஜீரகம் சேர்த்தாலே எனக்கு அலர்ஜி! சேர்க்காமல் எங்க அம்மா வீட்டு வழக்கப்படி பருப்புகள் ஊறவைச்சுத் தேங்காயோடு சேர்த்து அரைச்சு விட்டால் தான் அரிசி உப்புமா உப்புமா மாதிரி எனக்குத் தோணும். நான் மிளகு , ஜீரகம் சேர்த்துப் பண்ணுவதே கிடையாது. அதுவும் வெண்கல உருளியில் தான் பண்ணுவேன். குக்கரில் எல்லாம் இல்லை.
நீக்குநான் செய்தது அரிசி, துவரை, தேங்காய். இலுப்புச் சட்டியில் கிளறி, நீர் எல்லாம் போனபின்பு, குக்கரில் ஒரு விசில் விடுவேன். நேற்று ரொம்ப நல்லா வந்தது. இதற்கு முன்பு மிளகு, ஜீரகம் சேர்த்துச் செய்ததும் நன்றாக வந்தது, ஆனால் பெண், அவ்வளவாக ரசித்துச் சாப்பிடலை. (நாம நன்றாக வந்திருக்கு என்று நினைத்து காம்பிளிமெண்ட்ஸ் எதிர்பார்த்தால், ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுச் சென்றால் மனசுக்கு கர்ர்ர்ர்ர் என்று தோன்றுகிறது. அதைவிட, இரு வாரம் முன்பு அ.உப்புமாவுக்கு தேங்காய் துவையல் செய்திருந்தேன், என் பெண், பச்சை வாசனை வருது என்று சொல்லிட்டா. நான் பெர்ஃபெக்டாத்தான் செய்திருந்தேன், சாப்பிட சுலபமா இருக்கும்னு நினைத்து துளி அதிகமா தண்ணீர் சேர்த்தேன். அவ அப்படிச் சொன்னது எனக்கு ஒத்துக்கவே முடியலை..ஹாஹாஹா)
நீக்குசரி... ஸ்ரீராம் ஒத்துக்கொண்டால், அரிசி உப்புமாவை, எ.பிக்கு அனுப்பறேன். (ஐயோ... செய்முறையை....)
அதென்ன நெல்லை? எப்போது நான் அனுப்பப் கூடாது என்று சொல்லி இருக்கிறேன்?!!
நீக்குநீங்க எப்போதும் சொல்லலை ஸ்ரீராம். இருந்தாலும், வித்தியாசமான ரெசிப்பிதான் நீங்க எதிர்பார்பீங்களோன்னு தோன்றியது. நீங்கள் முதன் முதலில் 'திரும்பவும்' நினைவுபடுத்தி எழுதி அனுப்பச் சொல்லலைனா, நான் முதல் செய்முறையையே அனுப்பியிருக்கமாட்டேன். நீங்கள்தான் இதில் ஒரு ஆர்வத்தைத் தூண்டி எழுதும்படிச் செய்தது. மிக்க நன்றி. (சொன்னா நம்புவது கடினம். நான் சில சமயம் இதில் உள்ள செய்முறையைப் பார்த்து நினைவுபடுத்திக்கொள்வேன்.. எப்போவாவது ஒரு முறை செய்வதால் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன்).
நீக்கு//நீங்கள் முதன் முதலில் 'திரும்பவும்' நினைவுபடுத்தி எழுதி அனுப்பச் சொல்லலைனா,//
நீக்குஎது என்று நினைவில்லை.
எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம்..
நீங்கள் என்று இல்லை, நண்பர்கள் எல்லோருமே...
ஜூலை 2016 கடைசியில் நினைவூட்டினீர்கள். ஆகஸ்ட் 1ம் தேதி 2016ல் முதல் செய்முறை வெளிவந்தது. ஸ்ரீராம் உங்களுக்கு நன்றி. எனக்கு செய்து பார்த்து அனுப்புவதற்கும் ஊக்கம் கொடுத்ததுபோல் இருந்தது.
நீக்குகேஜிஜி சாரை ஏன் நீங்கள் ஒரு தி.பதிவுக்கு எழுதி அனுப்பச் சொல்லக்கூடாது? அவர் ரவா தோசை செய்தேன், அது செய்தேன் இது செய்தேன் என்று அப்போ அப்போ சொல்றாரே... புதன் கிழமையைத் தவிர மற்ற நாட்களில் தலையைக் காண்பிக்கக்கூடாது என்று விரதமா அவருக்கு?
https://tinyurl.com/yah5bplz
நீக்குhttps://geetha-sambasivam.blogspot.com/2013/07/blog-post_27.html
அரிசி உப்புமாப் பதிவுகள். இதைத் தவிர்த்து எ.பியிலும் கிடைக்கும். :)))) உங்களுக்குத் தேடத் தெரியலை! இஃகி, இஃகி,இஃகி
எங்கள் பிளாக் ஶ்ரீராம், வெளியிட்டமைக்கு நன்றி...
பதிலளிநீக்குநோஓஓஓஓஒ உப்பூடிச் சொல்லக்கூடாது:).. எங்கள் புளொக்கின் 3 வது ஆசிரியர் ஸ்ரீராம்.. எனத் தெளிவாச் சொல்லோணுமாக்கும்:))
நீக்குஅதிரா.. எங்க ஊர்ல ஜனாதிபதி No.1, பிரதமர் அதற்கு அடுத்ததுதான். ஆனால் பாருங்க, பிரதமருக்குத்தான் பவர் ஜாஸ்தி. இப்போ புரிஞ்சதா?
நீக்குகள்ள வோட்ஸ் வாங்கியிருப்பாரோ?:)) நான் பிரதமரைச் சொன்னேன்ன்:))) ஹா ஹ ஹா:))..
நீக்குஸ்ரீராம் ஏறிய மதுரை ரெயின் வேகத்தில கடகடவெனப் பதிலெல்லாம் போட்டு முடிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்.. நல்லிரவு.. இனி நாளைக்கு ஆருடைய கதையோ.. அந்தப் பரம் பொருளுக்கே வெளிச்சம்ம்ம் ஹா ஹா ஹா:)..
வழக்கத்துக்கு விரோதமா இன்னைக்கு 9.30 வரைல தூங்காம மறுமொழி எழுதிட்டேன். பொதுவா 8.45க்கே நான் உறங்கச் சென்றுவிடுவேன். பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் நன்றி.
பதிலளிநீக்குமுதலில் ஒரு பூங்கொத்து வாழ்த்துக்களுடன் ..எத்த்னை பொறுமையா ஒவ்வொருபடமா எடுத்து போட்டிருக்கிங்க அதுக்குதான் :)
பதிலளிநீக்குஎனக்கு வாழைப்பூ தேங்காய் சேர்த்து செய்றது ரொம்ப பிடிக்கும் .இந்த சீசனுக்கு ரொம்ப கிடைக்கவேயில்லை .அப்படி கிடைச்சதும் குட்டியா உள்ளே கருப்பா இருந்ததால் வாங்கி வீசினேன் .பருப்பு உசிலி செய்வேன் ஆனா நானா கடலை பருப்புக்கு பதில் பாசிப்பருப்பு தான் சேர்க்கிறது வழக்கம் .இந்த வாழைப்பூ மடல் தட்டு தேங்கா சிரட்டை தட்டு எல்லாம் ஒரு ரெஸ்டாரண்டில் பார்த்தேன் இங்கே அதே ஷேப்பில் கலரில் இருந்தது .நானா கூட வாழைப்பூ சாதம் இங்கே செய்து போட்டப்போ அதிலேதான் டிஸ்பிளே செஞ்சு படமெடுத்தேன் :)
அப்புறம் தாமதத்திற்கு மன்னிக்கவும் ..யாரோ ரெண்டு பேர் என்னை ஸ்வீட்ட் சாப்பிடாதவங்களாம் மனுஷங்களான்னு எப்பவோ கேள்வி கேக்க அது நேத்து கேசரி சோன் பப்டியை பார்த்து நினைவுக்கு வர சாப்பிட்டாதான் என்ன னு தோண சாப்பிட்டு பார்த்து தொலைக்க அதில் (கோதுமையும் கலரிங்கும் )இங்ரெடியன்ட்ஸை சரியா கவனிக்காம போக நாள் முழுக்க அவதி :) தலைவலி அலர்ஜினி பாடாப்படுத்திவிட்டுருச்சி :.. 6 கப் கிறீன் டீ குடிச்சி சரியாகி வரதுக்குள்ள இங்கே கல்யாண மண்டபமே காலி :)
வாங்க ஏஞ்சலின். ஊரில் இருக்கும்போதே காணாமல்போய்ட்டீங்களே என்றுதான் விசாரித்தேன். பாருங்க... இந்த வாரத்துல காமாட்சி அம்மாவின் பின்னூட்டம் இன்னும் வரலை. மனசுல நல்லா இருக்காங்களா என்றே ஓடிக்கொண்டிருக்கிறது.
நீக்குசோன் பப்டியை ஞாபகப்படுத்திட்டீங்களே.... ஸ்ரீகிருஷ்ணாவில், சாக்லெட் சோன்பப்டி, அப்புறம் சாதாரண சோன்பஃப்டிலாம் ரொம்ப நல்லா இருக்கும். (அது ஒண்ணுதான் அவங்ககிட்ட எனக்குப் பிடித்தது). ஆனா நெய் ரொம்ப சேர்ப்பதால் வெயிட் கடுமையா ஏறிடும் (ஜீனியும் அதில் மிக மிக அதிகம்). நேரம் கிடைக்கும்போது, சோன் பப்டி எப்படிச் செய்யறாங்க என்று யூடியூபில் பாருங்க. சாப்பிடும் ஆசை நிச்சயம் இருக்காது. ஹாஹாஹா.
சோன் பப்டில மைதாதானே உபயோகப்படுத்துவாங்க. அதுல எப்படி அலர்ஜி வரும்?
அது ஜெய்மின் பிராண்ட் .ஊரிலிருந்தே பாக்கிங் செஞ்சு வருது கெடாம இருக்க என்ன மேலே ஸ்ப்ரே செஞ்சி விட்டாங்களோ கடவுளுக்கு தான் வெளிச்சம் அதோட கேசர் //கலரிங்கும் போட்டிருக்காங்க ஆரஞ் எல்லாம் சேர்த்து அடிச்சிருக்கு ..முந்தி இப்படித்தான் revadi னு சொல்வாங்க சீனி பாகு காய்ச்சி அதில் எள்ளை உருட்டி குட்டி இட்லி போல செய்து கடையில் பார்த்து வாங்கி சாப்பிட்டேன் இதெல்லாம் இம்போர்ட்ஸ் அதனால்தான் பிரச்சினை நம்மூரில் அப்படியே ஒரே நாளில் முடியும் இல்லின்னா அடுத்த நாள் தீர்ந்துடும் .பலகாலம் ஷெல்ப் லைஃஉக்கு எதோ தெளிக்கிறாங்க
நீக்குஇதான் நான் சொன்ன revari /revadi
https://www.ruchiskitchen.com/recipe/homemade-til-rewari/
ஓஹோ... அதுதான் பிரச்சனையா? நான் ஹால்திராம், பிகான்ஜி போன்ற பிராண்டு சோன்பப்டி வாங்குவேன். நல்லா இருக்கும் ஆனால் ஓவர் இனிப்பு (உங்களுக்கு அதன் ரெசிப்பி தெரியுமில்லையா)
நீக்குநீங்க சொல்றதெல்லாம் ஒரு வாரத்துக்குள்ளேயே சாப்பிட்டால்தான் நல்லாருக்கும். இல்லைனா சவக்கு சவக்குன்னு இருக்கும்.
எனக்கும் ஒரு அலர்ஜி இருக்கு. அது எந்த மசாலா/பொருள்னால வருதுன்னு தெரியலை. முதல்ல கோதுமையோ என்று நினைத்தேன். ஆனால் ஏதோ ஒரு மசாலா. சமீபத்துல இங்க ஆன்லைன்ல பேல் பூரி ஆர்டர் செய்து (ஸ்விக்கில), அதுனால கொஞ்சமா அலர்ஜி வர ஆரம்பித்தது (இந்தியாவில் இதுவே முதல் முறை). அதுனால வெளி உணவு-மசாலா உள்ளது சாப்பிடவே பயமா இருக்கு.
சோன் பப்டி அப்போது தான் புதுசாச் செய்தது சாப்பிடணும்னா ராஜஸ்தான், குஜராது. இன்னும் சொல்லப் போனால் குஜராத் மட்டுமே! அதிலும் புஜ் நகரத்தில் கிடைக்கும் சோன் பப்டியும் ராபடியும் ரொம்பவே பிரபலம். கிலோ கணக்கில் தான் வாங்கிட்டு வருவார். மைதா மாவிலும் செய்வாங்க. கடலை மாவிலும் செய்வாங்க, பெரும்பாலும் கடலைமாவு சோன் பப்டி தான் வாங்குவோம். நம் கண்ணுக்கு எதிரே கிளறிக்கொட்டிய பின்னர் சுடச் சுட வாங்கி வந்து சாப்பிட்டதும் உண்டு.
நீக்குகீசா மேடம்... இப்போ எனக்குத் தெரிந்துபோய்விட்டது. டயபடிக்ஸுக்குக் காரணம். ஹாஹாஹா.
நீக்குஆமாம் "கிளறிக் கொட்டியபின்' - அப்படீன்னா துண்டு துண்டாப் போட்டதா இல்லை பஞ்சு மிட்டாய் போல் இருக்குமா?
பஞ்சு மிட்டாய் போல் எல்லாம் வாசல்லே மணி அடிச்சுட்டு வரவங்க விக்கிறதைப் பார்த்திருக்கேன். அதைத் தவிர்த்து ஒரு சில ரயில் பயணங்களில் வரும். கிளறிக்கொட்டி என்றால் கிளறிக் கொட்டித் தான்! துண்டங்கள் போட்டு அப்படியே நிறுத்துக் கொடுப்பாங்க! அதே போல் "டபேலி"யும் புஜ் நகரில் ரொம்ப நன்றாக இருக்கும்.
நீக்குவாழைப்பூ பொரியலை தேங்காய் எண்ணெயிலேயே செய்யுங்க நிறைய தேங்காய் துருவி சேர்க்க துவர்ப்பே தெரியாது .
பதிலளிநீக்குஅந்த அரிசி உப்புமா ரெசிப்பியும் கொஞ்சம் சீக்கிரமா இங்கே பகிரவும்
நன்றி ஏஞ்சலின். செய்துபார்க்கிறேன். அ.உ. செய்முறை, ஸ்ரீராம் ஓகே சொன்னால் அனுப்பிடறேன். (ஆனா அது வெளியாகும்போது உங்களுக்கு ஞாபகம் இருக்கணும், நாமதான் கேட்டிருந்தோம் என்று. ஹாஹாஹா. நான் எ.பிக்கு அனுப்ப இன்னும் 3க்கு படங்கள் ரெடி, எழுதி அனுப்பணும். அப்புறம்தான் இது)
நீக்குஎப்போது நான் அனுப்பப் கூடாது ன்று சொல்லி இருக்கிறேன்?
நீக்கு//(ஆனா அது வெளியாகும்போது //
அதான்... அதான்.. அந்தப் பொறுமைதான் வேண்டும்!
ஏஞ்சல், உடம்பு பரவாயில்லையா? வயிற்றுக்கோளாறு என்றாலே பிரச்னை தான்! என்னோட வலைப்பக்கம் வரதே இல்லையே! முடிஞ்சப்போ வாங்க!
நீக்குஎன்றைக்கு இருந்தாலும் முடிந்தபோது காமாட்சி அம்மா வந்து பின்னூட்டம் இடணும். நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.
பதிலளிநீக்குசுவையான ரெசிபி பாராட்டுக்குரியது
பதிலளிநீக்குவாங்க அசோகன் குப்புசாமி. ஏன் தாமதமாக வந்துட்டீங்க?
நீக்குநான் து.பருப்பை சேர்க்க மாட்டேன். அதேப்போல பருப்பு கலவையோடு வாழைப்பூவை சேர்த்து பிசைஞ்சே வேக வைப்பேன் தனியா வேக வைக்க மாட்டேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ராஜி. அட நீங்கள் சொல்வது வித்தியாசமா இருக்கே. அடுத்த முறை இதனை முயற்சிக்கிறேன் (அதுக்கு மனைவி கள்ளன் எடுத்த பூவைத் தரணும் ஹாஹா)
நீக்குஉங்கள் பெயரைப் படிக்கும்போது, எனக்கு உங்கள் 'கொழுக்கட்டை' செய்முறைப் பகுதியை நான் செய்துபார்ப்பதற்காக எடுத்து வைத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. இன்னும் செய்யும் சந்தர்ப்பம் வரலை. நீங்கள் போட்டிருந்த கொழுக்கட்டைகள் படம் என் நினைவில் அப்படியே இருக்கிறது.
நான் வந்து விட்டேன். நான் ஒரு இரண்டுவரிஎழுதுவேன் . மருந்துகள் சில மாற்றிக்கொடுத்ததில் கொஞ்சம் அசதி இன்றுதான் பார்த்தேன். என்னைக்குறிப்பிட்டு எழுதியிருந்ததைப் பார்த்து நான் வழக்கம்போல்.
பதிலளிநீக்குபருப்புசிலி நானும் இப்படிதான் ஆவியில்வைத்தும்,நேராகவே அரைத்ததை எண்ணெயில் வதக்கியும் செய்வது. கள்ளனை எல்லாம் அரிவாள் மணையில் கொத்துக் கொத்தாக நீக்கமுடியும். அருவாமணைதான் சொல்வது. பருப்புசிலி வாஸனையாக இருக்கிறது. துளி மஞ்சப்பொடி மறந்துட்டிங்கோ. கொத்தவரங்கா உசிலியில் இருக்கு. மைக்ரோவேவ் வந்த பிறகு பருப்பு அரைத்ததை அடைமாதிரி பரப்பி நான்கு நிமிஷங்கள் ஹைபவரில் மைக்ரோவேவ் செய்து எடுத்து, துண்டங்களாக்கி, ஆறியபின் மிக்ஸியில் இரண்டு மூணு சுற்று சுத்தி எடுத்தா அதை மாமூல் பருப்புசிலியா எண்ணெயில் காய்களுடன் வதக்கினால் புட்டு மாதிரி அதுவும் அபாரம். ஸரியா விவரிச்சனோ இல்லையோ/? உங்க வீட்ல கிச்சன் கிடைச்சதே. படங்களுக்கும்,பகிர்வுக்கும் பாராட்டுதல்கள் . நிறைய எழுதலாம். நன்றி அன்புடன்
வாங்க வாங்க காமாட்சியம்மா. அசதியிலும் இன்றைக்கே வந்து பின்னூட்டம் கொடுத்துட்டீங்களே.. மிக்க நன்றி.
பதிலளிநீக்குபொதுவா இந்தத் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க பின்னூட்டம் இடுவதை வைத்து, அவங்க ஊர்ல இருக்காங்களா, நலமா, வெளியூர் பயணமா இல்லை பிஸியா என்று தெரிந்துகொள்ளலாம்.
மைக்ரோவேவ் உபயோகித்து அடுத்த முறை செய்துபார்க்கிறேன். உங்கள் ஐடியாவுக்கு நன்றி.
அட... மஞ்சப்பொடியை மறந்துவிட்டேனா? கொத்தவரை பருப்புசிலி மனைவி செய்தது. நான் எப்போதும் ரெசிப்பி பார்த்துத்தான் செய்வேன். இப்போதான் சாம்பார், அரிசி உப்புமா, மற்ற ரெகுலராகச் செய்யும் ஐட்டங்களுக்கு ரெசிப்பி பார்ப்பதில்லை. ஹாஹா.
முடிந்தபோதெல்லாம் வாருங்கள்.
அருமையான செய்முறை...
பதிலளிநீக்குமிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார், வருகைக்கும் கருத்துக்கும்.
நீக்குவாழைப்பூ பருப்புசிலி - ஒரு பூவும் நிறைய பொறுமையும்.... உண்மை. திருச்சியில் நான் பார்த்த மூதாட்டி ஒருவர் வாழைப்பூவை ரொம்பவே அழகாக நறுக்குவார். அடுத்த முறை அவரை வாழைப்பூ நறுக்கச் சொல்லி காணொளியாக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பதோடு சரி!
பதிலளிநீக்குஉசிலி நல்ல ருசி!
நன்றி வெங்கட். திருவானைக்கா கோவிலின் முன்பு, கள்ளன் எடுத்த வாழைப்பூ விற்கிறார்கள். நீங்கள் எழுதும் 'உணவுத் திருவிழா' பதிவுகளைப் படித்து எனக்கும் அந்த மாதிரி உணவுத் திருவிழாக்களில் பங்கெடுத்துக்கணும்னு (ஒவ்வொரு ஸ்டாலிலும் டேஸ்ட் செய்யத்தான்) ரொம்ப ஆசை...
நீக்குசெய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது!
பதிலளிநீக்குமிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம். இன்றுதான் இந்தப் பின்னூட்டம் பார்த்தேன்.
நீக்கு