ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

ஞாயிறு 180916 : மழை இல்லாச் சென்னை ; மதுரைச் சமையல்


சென்ற வாரம் ஒரு 'ஆப்டிகல் இல்லியூஷன்' படம் வெளியிட்டு, அதைப் பார்த்து விட்டு எதிர் சுவரைப் பாருங்கள்...   சுவரில் என்ன உருவம் தெரிகிறது என்று கேட்டிருந்தேன்.  ஒருவருமே முயற்சித்துப் பார்க்கவில்லை என்று தெரிகிறது.

யாரைப் படம் எடுக்கிறார் இந்த இளம் போட்டோகிராஃபர்?  நிச்சயமாக என்னை இல்லை!  நான் தான் இங்கிருந்து அவரைப்புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேனே...!இதோ..  இந்த இளம் சிறுவனைதான்!  இருவரும் எங்கள் உறவுகளே.   சென்ற மாதம் என் சித்தப்பாவின் சதாபிஷேகம் நிகழ்ச்சியில்...  இது போன்ற விழாக்களில் இது மாதிரி இளசுகளின் பங்களிப்புகள் ஒரு சுவாரஸ்யம்.மறுபடியும் ஒரு பழைய படம்...   2015 இல் அப்பாவைப் பார்க்க மதுரை சென்றபோது என் கைவண்ணத்தில் உருவாகிக் கொண்டிருந்த சமையல்!  பாஸுக்கு அப்போது வாட்ஸாப்பில் அனுப்பப் பட்டது!!சென்ற வாரம் நண்பர் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஒரு காட்சி..   ஏதோ மழை வரப்போவது போலவே போக்குக் காட்டிய நேரம்...  கடைசியில் தூறல் கூடப்போடவில்லை.சதாபிஷேகத்தில் கண்ணைக் கவர்ந்த கெண்டி!
இது இடைவேளை மாதிரி...   மதன் ஜோக்ஸை ரசித்து விட்டு மேற்கொண்டு படங்கள் பார்க்கலாம்..!
இது எங்கள் வீட்டு புத்தகக் கலெக்ஷனிலிருந்து எடுக்கப் பட்ட ஒரு பைண்டிங் புத்தகத்தின் முதல் பக்கம்.  பைண்டிங் புத்தகம் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்ல வேண்டும்?!!தங்கை பெண் வீட்டுக்குச் சென்றபோது அவள் என் பாஸுக்கு "வைத்துக் கொடுத்தது".  பார்க்கவே கவர்ச்சியாய் இருந்ததால் ஒரு க்ளிக்.அங்கு என் அலைபேசியை வாங்கி என் தங்கையின் (விஸ்காம் முடித்த) இளைய பெண் அவள் குடித்துக் கொண்டிருந்த காபிக்கோப்பையை ஒரு க்ளிக் செய்தாள்...  

 

 சொல்லக் சொல்லக் கேட்காமல் எங்கள் மளிகைக் கடைப் பையர் (வயது 24) அணில் கொழுக்கட்டை மாவை தலையில் கட்டிவிட்டார்.  அதற்கு இந்த கொழுக்கட்டை செய்யும் அச்சும்,  'கொழுக்கட்டை செய்வது எப்படி' என்கிற புத்தகமும் இலவசம்!  முகநூலில் இந்தப் படத்தை வெளியிட்டு இது என்ன என்று கேட்டபோது ஒரு நண்பர் பலாப்பழம் என்றார்!இந்தப் பக்கத்திலிருந்து அந்த கொழுக்கட்டை அச்சு!


பிரித்தால் இப்படி...   இதில் எப்படி கொழுக்கட்டை மாவை வைத்து பூரணம் அடைப்பார்களோ...   நம் கையே நமக்கு உதவி!


அந்தப் புத்தகம்!


பிரித்துப் படித்தால்....


இதுதான் அந்த மாவு.  இன்னும் பத்திரமாக, பிரிக்கப் படாமல் இருக்கிறது.  கடைக்காரரின் அன்புத் தொல்லை!  எங்கள் ப்ளாக்கில் அணில் கொழுக்கட்டை மாவுக்கு விளம்பரம்!  

111 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. என்ன ஒருத்தரையும் காணோம்..
  ஊருக்கு எங்கேயும் போய்ட்டாங்களா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருவாங்க... வருவாங்க... ஞாயிற்றுக்கிழமை பாருங்க...!!

   நீக்கு
  2. குஞ்சுலு வருமோனு காத்திருந்தேன். அது தூங்கிப் போய்விட்டதாம். அதான் காலையிலே வரலை! :) இப்போதைக்கு எந்த ஊரும் இல்லை! (அப்படினு நினைச்சுட்டு இருக்கோம்.)

   நீக்கு
  3. அப்போ இன்று கீசாக்கா லேட்டூ:).. அதெப்படி எப்போ லேட்டா வந்தாலும் கைவசம் ஒரு சாட்டுச் சொல்லியே தப்பிடுறா கர்ர்ர்ர்:))

   நீக்கு
  4. அதிரடி, அதை ஏன் கேட்கறீங்க! எங்க காலை குஞ்சுலு வரலையேனு சாயந்திரம் காத்திருந்தா கரெக்டா நாங்க சாப்பிடப் போகும் நேரம் ஏழு மணிக்குப் பையர் கூப்பிடறார். அப்போவே அவங்களுக்குக் காலை எட்டரை மணி. அப்புறமா வெளியே போறாங்களாம். சரினு ஸ்கைபைத் திறந்தால் வீடியோவே வரலை! ஒரு பத்து நிமிஷம் அலைக்கழிச்சுட்டு அப்புறமாத் தான் வந்தது. என்னவோ போங்க! நம்ம குழந்தையைப் பார்க்க இப்படி எல்லாம் தவம் கிடக்கோமேனு நேத்திக்கு அப்போ ஆரம்பிச்ச சுய பச்சாத்தாபம், ராத்திரி முழுக்க என்னென்னவோ யோசனைகள்! :)))))) தூங்கவே இல்லை. தூங்கும்போது ஒரு மணி ஆயிடுச்சு! :)))))

   நீக்கு
  5. பொதுவா இதெல்லாம் பகிர மாட்டேன். ஆனால் இன்னிக்கு என்னமோ ஒரு மனோநிலையில் சொல்லிட்டேன். உடனே மறந்துடணும்! அப்புறமா எனக்குத் தன்னம்பிக்கையே போயிடும்! :)))))

   நீக்கு
 3. கொழுக்கட்டை செய்யத் தெரியாமல் போனதா?...

  அணில்காரன் தயவில் பயிற்சி வகுப்பு நடக்கும் போல!...

  மாவு விக்கிறதுக்கு
  என்னா ஒரு கும்மியடி!?.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொழுக்கட்டை செய்யத் தெரியாதவர்கள் இருக்கிறார்களே ஜி... அவர்களுக்கு உதவும் அது!

   நீக்கு
 4. பலாப்பழம் ஹா.. ஹா.. ஹா..
  அணில் கம்பெனியின் இன்கம் எவ்வளவு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி.. அணில்காரனுக்கு எவ்வளவு வருமானம் என்று எனக்கெப்படி...!!!

   நீக்கு
  2. ஹாஹா. ஸ்ரீராம். சூப்பர் பலாப்பழம். அச்சு சொல்றேன்.
   துளசி கோபால் இதை வைத்து 54 கொழுக்கட்டை செய்து கோவிலுக்குக் கொடுத்தாராம்.

   சதாபிஷேகப் படங்கள் வெகு அழகு. அந்த மொட்டை மாடி பள பளா என்று அழகா இருக்கு.
   விகடன் ஜோக் கேட்பானேன்,. அத்தனையும் சுவை.
   இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

   நீக்கு
  3. நன்றி வல்லிம்மா. ஒவ்வொன்றாய் இந்த அச்சில் கொழுக்கட்டை செய்ய நிறைய பொறுமை வேண்டும்!!

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 6. படங்கள் எல்லாம் அழகு.
  நாம் கையால் செய்த கொழுகட்டையை அதில் வைத்து எடுத்தால் அச்சு விழும்.
  அவர்களுக்கு விற்பனை தந்திரம்.
  இப்போது இருக்கும் அவசர உலகத்தை சேர்ந்தவர்களுக்கு கை கொடுக்கும் பாக்கெட் மாவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் மளிகைக்கடைப் பையர் வற்புறுத்தித் தந்து சென்றுள்ளார் அக்கா. பார்ப்போம்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. இல்லை நண்பரே... இதில் செய்தால் சாதாரண கொழுக்கட்டை வடிவம் வரும் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 8. ரெட்டைவால் ரங்குடுவை மறக்க முடியுமா? அணில் கொழுக்கட்டை மாவில் இப்படி எல்லாம் இலவசம் கொடுக்கிறாங்களா? ம்ம்ம்ம், இந்த அச்செல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. கையால் செய்வது போல் வருமா? படங்கள் எல்லாம் வழக்கம் போல் பிரமாதம். அது என்ன இரண்டு சாம்பார் அடுப்பில்? ஒண்ணில் முள்ளங்கி சாம்பார்னு நினைக்கிறேன் . கொதித்துக் கொண்டிருப்பது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொன்று ரசம் என்று நினைக்கிறேன் அக்கா. மறந்து போச்சு... மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது! ஏதோ ஒருநாள் கூத்தின் புகைப்படம் அது.

   நீக்கு
 9. நீண்ட காலத்திற்குப் பின் ரெட்டைவால் ரங்குடுவைக் கண்டேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  நல்லத் தொகுப்பு. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.. படங்கள் மிக அழகு.

  தங்கள் கை பாகத்தில் சாம்பார் ருசி, மணம் தெரிகிறது.

  மழை இங்கு தினமும் சொல்லி வைத்தாற் போல் மதியமானதும் பெய்கிறது

  "பூக்களிடையே கெண்டி" என்ற தலைப்பில் ஏதாவது எழுதலாம்.

  மதன் காமெடி அருமை. முன்பெல்லாம் நிறைய படித்தது நினைவுக்கு வருகிறது.

  மஞ்சள் குங்குமச் செப்புக்கள் மிக அழகாக இருக்கின்றன. உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது.

  தமிழ்வாணன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதைக்கூட படித்திருக்கலாம். ஆனால் நினைவில்லை.படித்தால் நினைவு வரும். நிறைய இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கிறோமோ?

  கொழுக்கட்டை அச்சு கதை நன்றாக உள்ளது
  என்னிடமும் ஒன்று உள்ளது. (அணில் அல்ல) எப்போதோ பொருட்காட்சியில் வாங்கியது.(நினைவு பொருளாக வைத்திருக்கிறேன்.) தங்களின் அணில் சேவை நன்றாக உள்ளது. படங்கள் அருமை.

  என் தளம் வந்து கருத்துக்கள் சொன்னமைக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா.

   நேற்று நல்ல மழை பெய்தது. நான் படம் போட்டதை பார்த்து அதற்கு ரோஷம் வந்து விட்டது போலும்!

   பூக்களிடையே கெண்டி என்ற தலைப்பில் என்ன எழுதலாம்? எழுதுங்களேன்... படிப்போம்.

   அவை மஞ்சள் குங்கும சீப்புகள் அல்ல. சற்றே பெரிய கொள்ளான்கள்!

   தமிழ்வாணன் நாவல்கள் சிறுவயதில் பிடித்தன. இப்போதும் என்னிடம் அவர் கதைகள் பைண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன!

   நன்றி அக்கா.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   /நேற்று நல்ல மழை பெய்தது. நான் படம் போட்டதை பார்த்து அதற்கு ரோஷம் வந்து விட்டது போலும்!/

   இங்கே ஒரு வாரமாக சொல்லி வைத்தாற் போல் மதியம் இரன்டு மணியால் நல்ல மழை பெய்து வந்தது. மதியம் தொடங்கினால், இரவு தூறல், அல்லது லேசான மழை வரை பெய்யும்.

   நேற்று நான் சொன்னவுடன் நேற்று மதிய மழை லேசாகி, இன்று வெயில் காய்கிறது. இயற்கைக்கு கூட செவிப்புலன் நன்கு செயல்படுகிறது போலும். அல்லது தாங்கள் கூறுவது போல் ரோஷம் அதிகாக இருக்கிறதோ? இல்லை நம்மை பொய்யும் மொழி புலவராக்கி ஆனந்தமடைகிறதோ? தெரியவில்லை.. ஆக மாறி வரும் சீதோஷனம் நமக்கு உபத்திரவத்திற்கு அடிகோலாக அமைகிறது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. //இங்கே ஒரு வாரமாக சொல்லி வைத்தாற் போல் மதியம் இரன்டு மணியால் நல்ல மழை பெய்து வந்தது. மதியம் தொடங்கினால், இரவு தூறல், அல்லது லேசான மழை வரை பெய்யும்.//

   நான் இருப்பது சென்னையில். இங்கு அவ்வப்போது மேகம் இருண்டாலும், மழை இரண்டு நாட்களாகத்தான்!

   :) :) :)

   நீக்கு
 11. நான் நினைத்ததை கீதா சொல்லி விட்டார்கள், வெள்ளை முள்ளங்கி சாம்பார். பச்சை
  மிளகாய் முருங்கைக்காய் போல் தோற்றம் அளிக்குது.

  பதிலளிநீக்கு
 12. பூஜையில் வைக்கும் பீங்கான் ஜாடிகளா? தங்கையின் பரிசு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவை பீங்கான்...... என்றுதான் நினைக்கிறேன் கோமதி அக்கா. தங்கை அல்ல, தங்கையின் பெண்..

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஹா ஹா ஹா அந்த மொபைல் செட்டிங்கில் போய்.. ஓட்டோ கரெக்‌ஷன் என இருப்பதை ஓஃப் பண்ணிடுங்கோ கோமதி அக்கா.

   நீக்கு
  2. //மேஜை என்றால் பூஜை என்று அடிக்குது//

   எனக்கும் அந்த சிரமங்கள் உண்டு அக்கா.

   நீக்கு
  3. மொபைல் என்றால் ஓகே அதிரா.. கூகிளிலேயே அந்தக் கஷ்டம் இருக்கு எனக்கு!

   நீக்கு
 14. காலை வணக்கம் ஸ்ரீராம்.

  படங்கள் சிறப்பு. கெண்டி - பளபளவென ஈர்க்கிறது.

  ஹாஹா.... பலாச்சுளை :) இப்படி நிறைய அச்சுகள் வர ஆரம்பித்துவிட்டன. மூன்றாகப் பிரியும் கொழுக்கட்டை அச்சு கூட பார்த்தேன்.

  புக் பைண்டிங் - இப்படியே தான் தமிழில் எழுதி/படித்து வந்திருக்கிறோம். நீங்கள் கேட்ட பிறகு தான் தோன்றுகிறது இதற்குத் தமிழ் வார்த்தை உண்டா? ஏன் நாம் அதைப் பயன்படுத்தியதே இல்லை என!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். வாங்க வெங்கட். புக் பைண்டிங் கேள்வியை எல்லோருமே சாய்ஸில் விட்டு விட்டார்கள்! ஹா.. ஹா.. ஹா...!

   நீக்கு
 15. "வாங்க வாங்க" என்ற கடையில் அனில் கொழுக்கட்டை மாவு 44 ரூபாய்க்கு வாங்கினேன். பிறகு பழமுதிர்ச்சோலையில் 38 ரூபாய்க்கு அதே மாவு அன்று வாங்கினேன். கொழுக்கட்டை செய்யலை. இப்போ சேவை செய்யலாமா என்ற யோசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க என்றொரு கடையா?:) ஹா ஹா ஹா:))..
   இப்பவும் செய்யாதீங்க:) இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் அஞ்சுவின் இடியப்ப சேமா செய்யலாமா எனும் ஓசனை வந்தாலும் வரலாம்:) ஹா ஹா ஹா:).

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பதான் பானுக்காவுக்குப் போட்டுட்டு வந்தேன் அதுக்குள்ள நீங்களும் சேவைனு சொல்லியிருக்கீங்க நெல்லை......அதிரா உங்க கண்ணிலுமா படலை....இது இடியாப்பமல்லோ....

   நெத ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை முதலில் வாங்கினது எம் ஆர் பி ரேட் ஆக இருக்கும். சில கடைகளில் மட்டுமே எம் ஆர் பி இல்லாம 5 ரூபாய் 6 அல்லது 9 ரூபாய் கூட குறைந்து இருக்கும்...என் கசின் 36 நு சொன்னா...

   கீதா

   நீக்கு
  3. வாங்க நெல்லை... அந்த மாவை யாருக்காவது கொடுத்து சேவை செய்யப் போறீங்களா?!!

   நீக்கு
  4. சேவைக்கும் இடையாப்பத்துக்கும் எத்தனை வித்தியாசங்கள் உண்டு கீதா? அதிரா?

   நீக்கு
 16. வீட்டைப் பார்த்ததும், புதுமனை புகுவிழாவோ என்று நினைத்தேன்.

  பைண்டிங் புத்தகங்கள் (நல்ல நிலையில், நல்ல தொடர்) எனக்கு வாங்கிக்கொள்ள விருப்பம். எங்கு கிடைக்கும்?

  அப்பா பெயரைச் சொல்லி ஏகப்பட்ட பேர் சாப்பிடுவதற்காகச் சமைத்தீர்களோ? ஏற்கனவே 1/2 அடை சாப்பிடும் அப்பாவுக்காக, பெரிய பாத்திரத்தில் அடை மாவு செய்திருந்தீர்கள். இப்போது குறைந்தது 10 பேர் சாப்பிடும்படி முள்ளங்கி சாம்பார், ரசம் என்று வைத்திருக்கிறீர்கள்.

  எனக்கு குக்கரின் 'குண்டு' ஒரு இடத்தில் வைக்கவேண்டும் என்று ஸ்டிரிக்டாகச் சொல்வேன். என் கிச்சனில் (அதாவது நான் மெயிண்டெயின் பண்ணும் சமையலறை, for that matter வீடு முழுவதும்.... இப்போ இல்லை. அங்கு இருந்தபோது), கண்ணை மூடிக்கொண்டு நான் எந்தப் பொருள் எங்க இருக்கு என்று சொல்வேன். ஒரு நாளும் அனேகமா மாற்றி வைக்கவே மாட்டேன். படத்துல அடுப்பின்மீது அதனை வைத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா நானும் அப்படித்தான் நெ.தமிழன்.. கண்ணை மூடிக்கொண்டே எடுப்பேன் பொருட்களை.. கிச்சினில் மட்டுமல்ல ரூமிலும்தான்... ஆனா இது ஸ்ரீராமின் கிச்சின் இல்லையே:).. அவருகே தெரியாதுபோல எது எது எங்கிருக்கென:))...

   அப்பாவுக்கு வீட்டில் வச்சிருந்து டெய்லி சமைச்சுக் குடுக்காமல் வீட்டுப்போட்டு:) ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கால் போய்ச் சமைச்சு.. அதை எமக்குப் போட்டுக் காட்டி என்னா பில்டப்பூஊஊஊஊ:))..

   ஹா ஹா ஹா இப்போ ஸ்ரீராம் டென்ஷனாகி ஓடிவரப்போறார்ர்:) ஹையோ மீ எஸ்கேப்பூஊஊஊஊஉ என்னைக் காப்பாத்துங்கோ கோமதி அக்காவின் ரெட்டைப் பிள்ளையாரே:).

   நீக்கு
  2. //புதுமனைப்புகுவிழா//

   அப்படி நினைத்துக் கொள்வீர்கள் என்றுதான் விளக்கம் தந்திருக்கிறேன் நெல்லை!

   //பைண்டிங் புத்தகங்கள் (நல்ல நிலையில், நல்ல தொடர்) எனக்கு வாங்கிக்கொள்ள விருப்பம். எங்கு கிடைக்கும்?//

   மைலாப்பூரிலேயே பழைய கடை ஒன்று உண்டு. மதுரைப் பக்கம் போனால் நியூ சினிமா தியேட்டர் பக்கம் சாலையோரத்தில் சில கடைகள் உண்டு.

   சாம்பார் கொஞ்சம் நீர்வளமாகச் செய்தால் சட்டென நிறைய ஊற்றிக்கொண்டு செலவாகி விடும் நெல்லை. அது அங்கு இருந்த ஒரு நண்பர் சொன்ன பாணியில் செய்தது!

   எனக்கும் எல்லாப் பொருளும் ஒரு இடத்தில் வைத்து அந்த இடத்திலேயே எடுக்க வைக்கும் / நினைக்கும் வழக்கம் உண்டு. ஒழுங்கு என்று காரணமல்ல. மறதிதான் காரணம். மறதியைச் சமாளிக்க!

   நீக்கு
  3. ஆமாம் அதிரா.. அது என் சகோதரர் வீட்டு கிச்சன். அப்பா செயலாக இருந்த வரை நாடாறு மாதம் காடாறு மாதம் என்பதுபோல சென்னை ஆறு மாதம், மதுரை ஆறுமாதம் என்றிருந்தார். முடியாமல் படுத்த உடன் நாங்கள் தான் அங்கு சென்று பார்த்து வந்தோம்.

   சகோதரர் சமைக்க மாட்டார். சமைக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்திருந்தார். நான் செல்லும்போது என் கைவண்ணத்தை இப்படிக்கு கொஞ்சம் கொஞ்சம் காட்டுவதுண்டு!

   நீக்கு
  4. அந்த அந்தக்குக்கர்களுக்கு உள்ளேயே அதனதன் வெயிட்டைப்போட்டு மூடி வேலை ஆனதும் எடுத்து வைச்சுடுவேன். திரும்பத் தேட வேண்டாம் பாருங்க.

   புக் பைன்டிங்= புத்தக இணைப்புனு சொல்லலாமோ அல்லது புத்தகக் கட்டு? ம்ஹூம் கட்டு சரியில்லை. இணைப்பு அல்லது பிணைப்புனு சொல்லலாம்னு தோணுது!

   நீக்கு
  5. //அந்த அந்தக்குக்கர்களுக்கு உள்ளேயே அதனதன் வெயிட்டைப்போட்டு மூடி//

   பாஸ் கிட்ட சொல்றேன். பாஸ் அதற்கென ஒரு தனி டப்பா வைத்திருந்தாலும் இது நல்ல ஐடியாவா இருக்கு.

   //புத்தக இணைப்புனு சொல்லலாமோ அல்லது புத்தகக் கட்டு?//

   திருப்தியாய் இல்லை. ஒரு வார்த்தை, ஒரே வார்த்தையில் அழகா அமையணும்!!

   நீக்கு
 17. ஆஆங்ங்ங் ஸ்ரீராமும் இப்போ கமெரா மான் ஆகிட்டார்ர்:)..

  ஹா ஹா ஹா பேஷின் ஐத்தூக்கி அடுப்பில் வச்சுக் கறி வச்சிருக்கிறீங்கபோலிருக்கே கர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசினைத் தூக்கி அடுப்பின் மீது வைத்து...

   சரியாய் பாருங்க.. அங்கே அடுப்பு எரியவில்லை.

   நீக்கு
 18. நல்ல வெயில் எறிக்குதே.. மழை வரப்போகும் நேரம் என நீங்க எமக்குப் போக்குக் காட்டுறீங்க:)).

  கெண்டியும் அழகு.. அது தாமரை இதழ்கள்தானே பரப்பியிருக்கு ..கொள்ளை அழகு.

  ஹா ஹா ஹா இடைவேளையும் ஆரம்பமோ.. அருமை:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு நாட்களாய் சென்னையில் நல்ல கிளைமேட் அதிரா. நேற்று கொஞ்சம் மழை கூட இருந்தது. படம் போட்ட நேரம்!

   நீக்கு
 19. எனக்கு மர்மக் கதையே பிடிக்காது.. பைண்டிங்... தொகுப்பு இணைப்பாக இருக்குமோ:)) ஹா ஹா ஹா தான் அறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்.. என அம்மம்மா சொல்லித்தந்திருக்கிறா:).

  அழகிய டிஷ்கள்.. இப்போதெல்லாம் இப்படி விதம் விதமாக கிடைக்குது.. இப்படிக் கவர்ச்சியாக கிச்சினில் பொருட்கள் இருந்தால்தான் சமைக்கும் ஆர்வமே அதிகமாகுது. உண்மையில் மண்சட்டி வாங்கியதில் இருந்து நான் நிறையக் கறிகள் வைக்கிறேன்ன்.... அதில் சமைக்கும் ஆசையில்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யெஸ் அதிரா மண் சட்டி, வெ உருளி, மாக்கல்சட்டி இதெல்லாம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அதில்தான் பெரும்பாலும் சமையல்...

   கீதா

   நீக்கு
  2. மர்மக்கதை பிடிக்காதா? ஓ... பயந்த சுபாவம் போலிருக்கு நீங்கள். ஆனாலும் சிறுவயதில் தமிழ்வாணன் கதை படிக்காமல் கடந்து வர முடியாதே!

   கீதா, அதிரா.. மண்சட்டியில் நான் சமைத்ததே இல்லை. கற்சட்டியில் சமைத்திருக்கிறேன்.

   நீக்கு
 20. இப்படி பற்றிஸ் செய்யும் அச்சு என்னிடம் இருக்கு.. அதில் வச்சு மூடி ஒன்று செய்யும் நேரத்தில் நான் கையால 3 செய்திடுவேன்:)..

  கொழுக்கட்டை மாவுக்கு நல்ல ஒரு அட் குடுத்திட்டீங்க இந்த ஞாயிறில்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதிரா... இந்த அச்சில் ஒவ்வொன்றாய் செய்யும் நேரத்துக்கு கைகளால் பரபரவென செய்து விடலாம். சிறுவயதில் நான் ரொம்ப அழகாய் சொப்பு பிடிப்பேனாக்கும். இப்போ சமீபத்தில் முயற்சித்தது இல்லை.

   நீக்கு
 21. உங்களிடம் இல்லாத புத்தகங்களே இல்லை போல உள்ளது. படங்களெல்லாம் பிரமாதம். மதுரைச் சமையலிற்கு குறிப்பு எழுத மாட்டீர்களா? காப்பிக் கோப்பையில் வீடு. அவசியம் வேண்டுமான ஸொத்து. எல்லாம் ரஸித்துப் படித்தேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க காமாட்சி அம்மா.. சாம்பாருக்கு எதற்கு அம்மா குறிப்பு! உங்களுக்குத் தெரியாததா? என்னிடம் நிறைய புத்தகங்கள் உண்டுதான். ஆனால் இல்லாத புத்தகமே இல்லை என்கிற அளவுக்கெல்லாம் இல்லை அம்மா.

   நன்றி அம்மா.

   நீக்கு
 22. ஓகே இன்னும் ரெண்டு மணித்தியாலத்துக்கு என்னை ஆரும் தேடக்கூடா:) மீ கிச்சினில் யுத்தம் செய்ய ரெடியாகிறென்ன்ன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன அதிரா யுத்தம் உங்க கைக்கும் வாய்க்கும் தானே!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. அதெப்பூடி கீதா?:) இவ்ளோ கரிட்டா அதெப்பூடி?:) ஹா ஹா ஹா:).. உண்மையில் சமைப்பவருக்குப் பசித்தால்தான் நன்கு சமைக்க வரும்.. நல்ல வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு சமைக்கச் சென்றால்ல்.. சமைக்க மனமே வராது.. இது உண்மைதானே?:).

   நீக்கு
  3. கிச்சன் யுத்தம் நேற்றே முடிந்திருக்கும்!

   நீக்கு
 23. ரெட்டை வால் ரெங்குடுவில் எனக்கு மிகவும் பிடித்த ஜோக், அம்மாவும், அப்பாவும் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பார்கள், ரெங்குடு அவர்களிடம்,"எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போவதில் உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?" என்பான். சமீபத்தில் இதை எங்கள் குடும்ப குழுமத்தில் என் அக்கா பெண் பகிர்ந்திருந்தாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானு அக்கா.. அந்த ஜோக் நானும் ரசித்திருக்கிறேன். ரெட்டை வாழ் ரெங்குடு மட்டுமே? சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா...

   நீக்கு
 24. தமிழ்வாணனின் நாவல்களில் 'சங்கர்லால் துப்பறியும் மர்ம மனிதன்' என்னும் நாவலை சிறு வயதில் படித்திருக்கிறேன். ஆனால் ஞாபகம் இல்லை. 'பேய் பேய்தான்' என்று ஒரு கதை எழுதினார், அதை வைத்து என் பெரிய அக்கா என்னை பயமுறுத்துவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேய் பேய்தான் படித்ததில்லை. மர்ம மனிதன் என்னிடம் இருக்கிறது!

   நீக்கு
 25. டெனிஸ் த மெனெஸ் தான் ரெட்டை வால் ரெங்கிடுவின் இன்ஸிபிரேஷனோ
  பலாச்சுளை பொலிருக்கும் மோல்ட் கொழுக்கட்டை ஒரே மாதிரி வர உதவலாம் பெங்களூரில் அடிக்கடி மக்ஷை பெய்கிறது அதுவும்சற்று வலுவாக் கேரள மழையையும் வெள்ளத்தையும் பார்த்தபின் மழை பயமுறுத்துகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்.. 2015 க்குப் பின் சென்னையில் நவம்பர் டிஸம்பர் வந்தாலே சற்று கவலையாகத்தான் இருக்கிறது!

   நீக்கு
 26. அணில் கொழுக்கட்டை மாவில் சேவை செய்து விடுங்கள், நன்றாக வரும். அந்த மாவில் கொஞ்சம் உப்பும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறியவுடன் உதிர்த்தால் சேவை ரெடி. அதைக்கொண்டு தேங்காய் சேவை, எலுமிச்சம்பழ சேவை, உளுத்தம்பூர்ண சேவை, மிளகு ஜீரா சேவை என்று செயது கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும், இருந்தாலும் சொல்கிறேன்.

   நீக்கு
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பானுக்கா இது இடியாப்பம் இல்லையோ...சேவைனா புழுங்கரிசில...அப்புரம் கொழுக்கட்டையாவோ இட்லியாவோ செய்து சேவை நாழில பிழியறது அப்படிப் பிழியும் போது செம வாசனை வரும் புழுங்கரிசி தேங்காய் எண்ணைய் கலவை...சேர்ந்து....

   கீதா

   நீக்கு
  3. உங்க இரண்டு பேருக்கும் என் பதில். அணில் கொழுக்கட்டை மாவை, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறணும். (புழுங்கரிசி மாவைக் கிளறுவதுபோல). அதுக்கு அப்புறம் உருண்டையா பிடித்து, வேக வைத்து, பிறகு அதனை சேவை நாழில பிழியணும். அப்போதான் சேவை நல்லா வரும். இருந்தாலும் புழுங்கரிசி மாவுல பண்ணற டேஸ்ட் வராது என்றே நினைக்கறேன். நான் இதைச் செய்துபார்க்கப்போறேன் (ஒண்ணுக்கு ரெண்டு மாவு பாக்கெட் இருக்கு)

   நீக்கு
  4. எப்படிப் பண்ணினாலும் நல்லா வரணும். இல்லைனா இப்படி ஆகும். http://sivamgss.blogspot.com/2016/01/blog-post_17.html எல்லாம் ஒரு விளம்பரந்தேன்! நெ.த. பார்க்கலை அந்தப் பதிவை! அதுவும் தான்! :)

   நீக்கு
  5. அந்த அணில் மாவை என்ன செய்வது என்று இன்னும் யோசிக்கவில்லை பானு அக்கா. அந்த அச்சில் எப்படி வருகிறது என்று முயற்சிக்க வேண்டும்! அதற்கொரு நல்ல நாள் பார்க்கவேண்டும்!!

   நீக்கு
  6. அவர்கள் ஐடியா கொடுத்து சேவை செய்தால் இடியாப்பச் சிக்கல் செய்கிறீர்களே கீதா.. ஹா.. ஹா.. ஹா...

   நீக்கு
 27. ஸ்ரீராம் சென்ற பதிவில் அந்த உருவம் தெரிகிறது என்று சொல்லியிருந்தேன் முயற்சி செய்து ஆனால் என்ன என்று தெரியவில்லை..அந்தப் படத்தில் வலது பக்கம் தாடியுள்ள ஒரு உருவம் போலத் தெரிந்தது போல் இருந்தது...ஹா ஹா ஹா

  அப்புறம் எங்க வீட்டுச் சுவர் உருவம் பற்றிச் சொல்லியிருந்த நினைவு ஹிஹிஹிஹி.,..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா... சுவரில் இயேசு உருவம் தெரிய வேண்டும். நன்றாகவே தெரியும். மறுபடி முயற்சித்துப் பாருங்கள். நல்ல அனுபவம் அது.

   நீக்கு
 28. அந்தக் குட்டிப் பையன் சுட்டிப் பையன் போல!!!!

  ரொம்ப அழகு அந்த இரு கலர்ஃபுல் கிண்ணங்கள் வித் மூடி அழகான ஷேப்....

  அனில் கொழுக்கட்டை மாவு க்கு ஆமாம் ரெசிப்பி புக் கொடுத்தார்கள் என் கஸின் வீட்டில் அவள் வாங்கி வைத்திருந்தாள். ஆனால் அச்சு எதுவும் வரவில்லை. நான் எப்போதுமே நீங்க சொல்லியிருக்காப்புல தன் கையே தனக்குதவிதான் ஹா ஹா ஹா. நான் வீட்டில் தயார் பண்ணியிருந்த மாவுதான்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா.. அவன் சுட்டிப்பையன் தான். (ஒன்று விட்ட) தங்கையின் செல்லப்பய்யன்! துபாய் வாசி!

   நீக்கு
 29. மதன் ஜோக்ஸ் ஆஹா எத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கிறேன். சூப்பர் ஸ்ரீராம்....

  கெண்டி அழகு! அதுவும் பூக்களின் நடுவில் செமையா இருக்கு பள ப்ளனு.....ஆனா கெண்டி/கிண்டி மணிச்சித்ரத்தாழ் படம் பார்த்த பிறகு இந்த வார்த்தை கேட்டால் அந்த சீன் தான் நினைவுக்கு வரும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதன் ஜோக்ஸ் எப்பவுமே சுவாரசியம் கீதா... கெண்டியை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 30. மொட்டை மாடி பார்த்ததும் "மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி ஒரு லவ் ஜோடி பாடல் நினைவுக்கு வந்தது. ரொம்ப அழகா இருக்கு...மொ மா!!!

  அச்சு படம் பார்க்க அழகா இருக்கு...

  எனக்கு த்ரில்லர்/மர்ம படம், கதைகள் ரொம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும். இந்தக் கதை நெட்டில் கிடைத்தால் வாசித்துவிட வேண்டும்....

  என்ன ஸ்ரீராம் எப்ப அனில் மாவுக்கு அம்பாஸிடர் ஆனீங்க!! ஹா ஹா ஹா ஹா ஹா...

  ஆனா இம்முறை கடைகளில் எல்லாம் இந்த மாவுதான் முன்னில் வைக்கப்பட்டிருந்தது.

  உங்க கைவண்ணத்தில் சாம்பார் பார்க்கவே சூப்பரா இருக்கு...முள்ளங்கியோ அது மிதப்பது? பக்கத்து அடுப்பில் என்ன இருக்கு சாம்பார் இதில் வழிந்துவிடும் நு அதில வைச்சிருக்கீங்களா?

  சரி சரி படம் போட்டா மட்டும் போதாது எங்க எல்லாருக்கும் பந்தி வைக்கணும் அதுவும் நீங்க செஞ்சதுதான் ஹா ஹா ஹா ஹா...அதிரா, கீதாகா பானுக்கா, கோமதிக்கா, கமலாக்கா வல்லிம்மா எல்லாரும் கேளுங்க நான் சொல்றது சரிதானே!?!!?!?!

  வல்லிமா மட்டும் சொல்லுவாங்க...பாவம் கொழந்தைனு ஸ்ரீராமுக்கு சப்போர்ட் பண்ணி ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் போனால் செய்து கொடுக்காமல் இருப்பாரா ஸ்ரீராம் செய்து தருவார். அம்மாவுக்கு உதவி செய்யும் குணம் அவருக்கு உண்டு, அது போல தன் பாஸுக்கும் தான். அப்படி இருக்கும் போது அம்மா, அக்கா, தங்கை எல்லாம் வரும் போது கண்டிப்பாய் மணக்க மணக்க சாம்பார் செய்து தருவார். நாம் போனால் கை கட்டிக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் கூடமாட உதவி செய்வோம் இல்லையா கீதா? (ஸ்ரீராம் பயந்துவிடக்கூடாது)

   நீக்கு
  2. (ஸ்ரீராம் பயந்துவிடக்கூடாது)//

   ஹா ஹா ஹா கோமதிக்கா இதே இதே இதைத்தான் முந்தைய கருத்தில் அங்கு சொல்ல நினைத்தேன்!!

   ஆனா ஸ்ரீராம் பயப்படமாட்டார்...50 பேருக்குக் கூடச் சமைப்பார்னு தெரியுது...ஜஸ்ட் சும்மா ஒரு கற்பனை பண்ணிப் பார்த்தேன்...தலையில் முண்டாசு, கையில் கரண்டியுடன் மைமகாரா படத்தின் கமல் போல நாம சுத்தி நிற்க அவர் நடுவில் மய்யமா நின்று கொண்டு....

   "நான் சாம்பார்ல கத்தரிக்காயாக்கும் போட்டிருக்கேன் ஆரும் மீன்னு வாட் ஐ மீன்...அந்த மீன்னு நினைச்சுடப்டாது கேட்டேளா...!!"

   ஹா அஹ ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. ஸ்ரீராம் ஊரில் இல்லையோ ? அவர் பதிலகள் இல்லையே கீதா.


   மைமகாரா படத்தின் கமல் போல நாம சுத்தி நிற்க அவர் நடுவில் மய்யமா நின்று கொண்டு....

   "நான் சாம்பார்ல கத்தரிக்காயாக்கும் போட்டிருக்கேன் ஆரும் மீன்னு வாட் ஐ மீன்...அந்த மீன்னு நினைச்சுடப்டாது கேட்டேளா...!!"//
   ரசித்தேன் கீதா.

   நீக்கு
  4. நேற்று இரவு வரை வெளிச்சுற்று....

   இன்று காலை என்னுடைய திருப்பள்ளி எழுச்சியும் லேட்....

   விரைவில் வருகிறேன் அக்கா...

   நேற்றைய அரியர்ஸ் முடித்துக்கொண்டிருக்கிறேன்!!!!

   பிறந்தநாள் வாழ்த்துகள் கோமதி அக்கா...

   நீக்கு

  5. //நேற்றைய அரியர்ஸ் முடித்துக்கொண்டிருக்கிறேன்!!!! //
   ஓ ! சரி சரி முடித்துவிட்டு வாங்க

   பிரந்தநாள் வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. மொட்டைமாடி எவ்வளவு புதுசா இருக்கு பாருங்க கீதா... வாங்க வாங்க.. தைரியமா சமைத்து விடலாம்! ஆனால் முன்னாலேயே போன் பண்ணிட்டு வாங்க (ஓட வசதியா இருக்கும்!!!!)

   நீக்கு
 31. மொட்டை மாடி புதுவீடு என்று சொல்கிறது.
  மழை விழாமல் இங்கும் இரண்டு நாள் ஏமாற்றி சென்றது. இடி, மின்னல் மட்டும் மிரட்டியது.

  பதிலளிநீக்கு
 32. காஃபி மக் அழகா இருக்கு

  மொட்டை மாடியில் நீங்கள் படம் எடுத்த அன்று ஏமாற்றிய மேகம் இதோ இன்று பெய்து கொஞ்சம் கூலாகியிருக்கே...உங்க ஏரியாவிலும் பெஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். நெல்லை நாங்கலாம் கூல் ஆ இருக்கோம் இப்ப..ஹா ஹா ஹா

  நெட்டில் நடுவிரல்...............இதோ லிங்க் http://online.pubhtml5.com/gnba/hixz/#p=4

  முதல் பதிப்பு 1963 இரண்டாம் பதிப்பு 84 நு போட்டுருக்கு ஆனால் விலை ரூ9.25 தான்...84 லும் அப்படித்தானா? அட!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா.. சென்னை சற்றே கூலாகி இருக்கிறது!

   நாடு விரலுக்கு எனக்கு லிங்க் வேண்டாம்! என்னிடம்தான் புத்தகமே இருக்கிறதே....! ஹா.. ஹா.. ஹா.. நெட்டில் தமிழ்வாணனின் 'கருகிய கடிதம்' இருந்தால் படித்துப் பாருங்கள். சுஜாதா கொலையுதிர்காலம் கதையில் சொல்லி இருக்கும் டெக்னிக் பற்றி அப்போதே சொல்லி இருப்பார் அவர்.

   நீக்கு
 33. போன வார கேள்வி படத்தை இப்போதான் பார்த்தேன் அநேகமா லாஸ்ட் சப்பர் ஜீஸஸ் முகம் ?
  அதில் J அப்புறம் ஹார்ட்டின் ஷேப் எங்கியோ பார்த்த நினைவு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனா சுவற்றை பார்த்தப்போ எனக்கு ஒண்ணுமே தெரியலை

   நீக்கு
  2. ஆமாம் ஏஞ்சல்... அது ஜீசஸ் படம்தான். சற்றே தள்ளி தூரத்திலிருக்கும் சுவரைப் பார்த்தல் கலர்புல்லாக பெரிய ஜீசஸ் தெரிவார்.

   நீக்கு
 34. ரெட்டை வால் ரங்குடு ச்சூ ச்வீட் :)
  கெண்டி ஒரு சேரிட்டி ஷாப்பில் வச்சிருந்தாங்க :) இங்கே பால் அதில் ஊற்றி வைப்பாங்க நாமே காபி டீயில் கலந்துக்கணும் .என் கிட்டேயும் ஒன்னு இருக்கு குட்டி

  பதிலளிநீக்கு
 35. நான் அணில் வாங்கறதில்லை கேழ்வரகு சேமியானு நம்பி வாங்கி செஞ்சேன் ..அதில் கோதுமை மிக்ஸ் பண்ணிருக்காங்க .
  நான் எப்பவும் நிரப்பரா பிராண்ட் தான் புட்டு இடியாப்பம் கொழுக்கட்டை எல்லாத்துக்கும் .
  பைண்டிங் ...இணைத்து ஒட்டிய :) புக் ஆமா இதுக்கெல்லாம் ஆரம்பிச்சவங்கதானே தமிழ் பெயர் கொடுத்திருக்கணும் ..இவங்களா பஸ் ,பைண்ட் ,சானல் ரிக்ஸ்ஹா ,ஆட்டோ இப்படி சொல்லிட்டு அப்பாவிங்க எங்களை தமிழ் தெர்ல னு திட்றாங்க :)
  அந்த குங்குமச்சிமிழ்கள் அழகு எனக்கு யாரவது குடுத்தா முதலில் திறந்து வாசம் பார்ப்பேன் திருட்டுத்தனமா :) முந்தி ஊர்ல .

  பதிலளிநீக்கு
 36. உங்க niece க்ளிக்கிய கோப்பை பின்னால் கட்டிடங்கள் குட்டியாகிடுச்சிBackground blurred click சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் மட்டும் என்ன அணில் சேமியா வாங்கணும்னு ஒரு லட்சியமா வச்சிருந்தேன்? கட்டாயத்தின் பேரில் வாங்கியது! ஹா.. ஹா.. ஹா..!

   நீக்கு
  2. //உங்க niece க்ளிக்கிய கோப்பை பின்னால் கட்டிடங்கள் குட்டியாகிடுச்சிBackground blurred click சூப்பர் //

   நன்றீஸ். தங்கை பெண்ணிடம் சொல்லி விடுகிறேன்!

   நீக்கு
 37. சுவாரஸ்யமான தொகுப்பு. கொழுக்கட்டை மாவுக்கு நல்ல விளம்பரம்:).

  ரெங்குடு ராக்ஸ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!