திங்கள், 17 செப்டம்பர், 2018

"திங்க"க்கிழமை பதிவு – மாங்காய் தொக்கு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



இந்த ஊர்லநாங்க இருக்கற ஃப்ளாட் ஜன்னலில்அடுத்த பில்டிங் மாமரம் தெரியும்சில கிளைகளும் பக்கத்துலதான் இருக்கும்.  அடுத்த பில்டிங்ல தெரிஞ்சவங்கதான் இருக்காங்க. அதுனால அந்த மாமரங்களில் இருந்து ஒரு சில காய்களைப் பறிப்பதில் பிரச்சனை இல்லை. 


அதுல இருக்கற மாங்காயைப் பறிக்கஎன் பெண் பெட் பாட்டிலைவைத்து ஒரு துரட்டி போன்று பண்ணிவச்சிருந்தாள்பாட்டில் நடுவில் ஓட்டைபோட்டிருக்கும்அதில் மாங்காயை நுழைய வைத்து கம்பை இழுத்தால்பாட்டிலில் மாங்காய் உட்கார்ந்துக்கும் (கீழ விழுந்துடாம). அவள்இல்லாதபோதுஅதை உபயோகப்படுத்திப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.  அதற்கேற்றவாறு 5 மாங்காய்கள் தனித் தனிக் கிளைகளில் இருந்தன.  ஜன்னல் வழியாக அவற்றைப் பறித்துவிட்டேன்மனசுலஎன்ன மாதிரி ஐடியா இவளுக்கு வந்திருக்கு என்று பெருமிதம்தான்அவள் 6-7வது படிக்கும்போது, வீட்டில் இருந்த Cardboard boxஐ வைத்து துணிகளை மடிப்பதற்காக ஒன்று செய்தாள். அதில் டி.ஷர்ட்டை வைத்து அட்டையை மடித்தால், டி.ஷர்ட் மடிந்துவிடும். அவளோட இன்னோவேஷனைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். (ஆனா பாருங்க, எனக்குள்ள மோசமான குணம், யாரையும் பாராட்டறதில்லை.  மனசுக்குள்ளேயே, ‘அட’ என்று நினைத்துக்கொள்வேன். அதுனால நான் பாராட்டும்போது நிஜமாகவே பாராட்டறேனா இல்லை சும்மா சொல்றேனா என்றே என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு எப்போதும் சந்தேகம் வரும் ஹா ஹா ஹா).

பறித்த மாங்காயை என்ன செய்யஒரு மாங்காயை கட் செய்து பார்த்தேன்புளிப்பு இருந்தது (பறித்தது ஜூன்ல). மாங்காய் தொக்கு செய்யலாம்என்று தோன்றியது.  இந்தத் திங்கக் கிழமைக்கு மாங்காய் தொக்கு செய்முறை.



தேவையான பொருட்கள்

மாங்காய் 3
நல்லெண்ணெய் 100 மி.லி.
பெருங்காயம்
கடுகு
மிளகாய்ப் பொடி
வேண்டுமென்றால் மஞ்சள் பொடி கொஞ்சம்
வெந்தயப் பொடி கொஞ்சம் (இது வெந்தயத்தை வறுத்து பொடித்துக்கொள்வது. என் மனைவி ஏற்கனவே ரெடியா வச்சிருந்தா)
தேவையான அளவு உப்பு

செய்முறை

மாங்காயைக் கழுவி தோலைச் சீவிக்கோங்க.
நல்லா துருவிக்கொள்ளுங்கள்.

நல்லெண்ணெயைக் காயவைத்து கடுகு பொரித்துக்கொள்ளவும்.
கடுகு வெடித்தவுடன், திருவி வைத்திருக்கும் மாங்காயைப் போடவும்.
அதனுடன் பெருங்காயப் பொடி, கொஞ்சம் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறவும்.

சூட்டில் மாங்காய் வேகவேண்டும். அவ்வப்போது கிளறவும்.

மாங்காய் துருவல் வெந்துவிட்டால் அதனுடன் உப்பு சேர்த்துக் கிளறவும். 

இப்போ வெந்தயப் பொடியையும் சேர்த்துக் கிளறவும்.

இப்போ சுருண்டு எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும். மாங்காய் தொக்கு தயாராகிவிட்டது என்று அர்த்தம்.

அடுப்பை அணைத்து, மாங்காய்த் தொக்கை ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.








நான் இங்க வந்தபோது, மாம்பழ சீசன் ஆரம்பித்துவிட்டது. மாங்காயெல்லாம் பெப்ருவரி, மார்ச் ஆரம்பத்தோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. பொதுவா மாங்காய் ஊறுகாய்க்கு பங்கனப்பள்ளியோ அல்லது ருமானி மாங்காயோ ரொம்ப நல்லா இருக்கும். அடை மாங்காய் போட நீலன் நல்லா இருக்கும். (ருமானியும் ஓகே). தொக்கு செய்ய கிளிமூக்கு மாங்காய்தான் உபயோகப்படுத்துவாங்க. நான் உபயோகப்படுத்தின மாங்காய் என்ன ஜாதி (அட… காயிலயும் ஜாதி இருக்கே) என்று தெரியலை. இங்கல்லாம் (நான் இருக்கிற பகுதில) ஒவ்வொரு காம்பவுண்டிலயும் ஒன்று அல்லது இரண்டு மாமரங்களைப் பார்க்கிறேன். பாலைவன ரோஜா போல, மாங்காயை யாரும் பறிக்காமல் பெரும்பாலும் மரத்திலேயே சூட்டில் பழுத்து அல்லது காற்றில் உதிர்ந்து வீணாகப்போகிறது. எனக்குத்தான், என்ன இது, அததற்குரிய மரியாதையை மக்கள் கொடுக்கலைன்னு தோணும்.

கடைல மாங்காய் தொக்கு வாங்கினோம்னா, அளவுக்கு அதிகமான உப்பு இருக்கும். நாம எதிர்பார்க்கிற வாசனை வராது. சுலபமா, மாங்காய் தொக்கு செஞ்சு பாருங்க. தயிர் சாதத்துக்கு ரொம்ப யம்மியா இருக்கும்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

100 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும்
    அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நன்றி. இப்போல்லாம் நீங்க ரொம்ப பிஸியாகவும் ஆகிட்டீங்க. இந்த வெள்ளிக்கிழமையாவது ஒரு புகழ் பெற்ற பாட்டைப் பகிருங்கள்.

      நீக்கு
    3. புகழ் பெற்ற பாட்டு என்பது அநேகமாக எல்லோரும் அடிக்கடியோ, எப்போதாவதோ, அவ்வப்போதோ கேட்டிருப்பார்கள். ஆனால் அதிகம் கேள்விப்படாத - நான் அதிகம் ரசிக்கும் பாடல்களைப் பகிர்கிறேன். பாருங்கள் சில பாடல்களை நீங்களே முதல் முறை கேட்டிருப்பீர்கள்! மேலும் புகழ் பெற்ற பாட்டு என்பது அவரவர் அளவீட்டில் மாறுபடும்!

      (சீரியஸா பதில் சொல்லிட்டேனோ!!!)

      நீக்கு
    4. @ஸ்ரீராம் - நீங்க சொல்றதுலயும் ஒரு உண்மை இருக்கு. உங்க வெள்ளி இடுகைகளுக்குப் பிறகுதான் நான் பாடல்களின் வரிகளை இன்னும் கூர்ந்து பார்க்கிறேன். அதாவது காணொளியைவிட, கவிதையின் வரிகளுக்கு முக்கியத்துவம் வெள்ளி இடுகை தருதுன்னு நினைக்கிறேன். அதுதான் உங்களின் நோக்கமாக இருக்கணும்.

      நீக்கு
    5. வரிகள் ஸ்பெஷல்தான். சமயங்களில் பாடலின் டியூன் வரிகளை அலட்சியப்படுத்த செய்து விடும். உதாரணம் சில டி ஆர் பாடல்கள்.

      தோள்மீது தாலாட்ட என்றொரு பாடல்.

      வார்த்தைகளை சந்தத்துக்குள் திணிக்கும் டி ஆர் இந்தப் பாடலிலும் சாதாரண வரிகளை அடுக்கடுக்காய்த் திணித்திருப்பார் என்றாலும் எஸ் பி பியும், அந்தப் பாடலின் டியூனும் பாடலை மனதில் வைத்திருக்கும்.

      மண்ணு குதிரை அவனை நம்பி வாழ்க்கை என்னும் ஆற்றில் இறங்க அம்மா நெனச்சாடா... உன் மாமன் தடுத்தேண்டா...

      இந்த வரிகளை எஸ் பி பி உச்சஸ்தாயியில் பாடுவார். அடுத்த வரி அதற்கும் உச்சம்.

      வார்த்தை மீறி போனா பாரு.. ஓ...

      நீக்கு
    6. டி.ஆர் பற்றி என் கணிப்பும் அதேதான். மீட்டருக்குள்ள அவருக்கு மேட்டர் வைக்கத் தெரியாது. பாடுபவர்கள், அதற்காக அந்த அந்த வார்த்தைகளை வெகு வேகமாகவோ இல்லை மெதுவாகவோ உச்சரித்துப் பாடுவாங்க. அதுனால நமக்குத்தான் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும். ஆனாலும் டி.ஆர். புது டிரெண்டுக்குக் காரணகர்த்தா என்பதிலும் சந்தேகமில்லை. அவர் 'கதை, திரைக்கதை, பாடல், இசை, டைரக்‌ஷன்' என்று எல்லாத் துறைகளிலும் கால் பதித்து முதன் முதலில் டைட்டில் போட்டுக்கொண்டவர். அவர் படத்தை கிளைமாக்ஸுக்கு முன்பு வரை பார்க்கலாம். அவருக்கு தானும் அழுது, மற்றவர்களையும் அவர் நடிப்பைப் பார்த்து அழ வைப்பதில், அதிலும் கிளைமாக்ஸில் தோல்வியைக் கொண்டுவருவதில் இணையற்றவர். (இல்லை இன்னொரு உதாரணம் பாலசந்தர். அவர் பிரகாஷ்ராஜ் தயாரித்த படத்தில் குறுக்குப் புத்தி கிளைமாக்ஸ் அமைத்து படத்தைத் தோல்வியுறச் செய்திருப்பார், அதுக்காகவே உழைத்தமாதிரி)

      நீக்கு
    7. நீங்கள் படம் பார்ப்பதைப் பற்றுச் சொல்கிறீர்கள். நான் பாடல் கேட்பதைப் பற்றிச் சொல்கிறேன். டிஆர் படங்களில் நான் பார்த்த ஒரே படம் ஒரு தலை ராகம்.

      நீக்கு
    8. மைதிலி என்னைக் காதலி படம் வரை (நான் எம் எஸ் ஸி படிக்கும்போது வந்த படம்), டி ஆர் படங்களையும் பாடல்களையும் ரசித்திருக்கிறேன். அவர் பாடல்கள், மேட்டருக்காக மீட்டரை காவு கொடுக்கும். நானும் உந்தன் உறவை போன்ற பல பாடல்களில் இதைக் காணலாம்.. வெள்ளி அன்று டி.ஆர் பாடல் ஒன்றை வெளியிடுங்களேன்.

      நீக்கு
  3. ஆகா...

    மாங்காய் புராணத்துடன்
    அருமையான தொக்கு....

    நேற்று தான் தயிர் சோறு கிளறி வைத்தேன்...

    முந்தைய மாங்காய் ஊறுகாய் இருக்கிறது...

    காலையிலேயே ஒருபிடி பிடித்து விட வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... ஒரு பேச்சலர் வாழ்க்கையை கண்ல கொண்டுவந்துட்டீங்க. தனியா இருக்கும்போது, வேலை, இறை பக்தி இவைகள்தாம் நமக்குத் துணையாக இருக்கும்.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஃபெப்ரவரி, மார்ச்சில் மாவடு தான் பருவம். மாங்காய்ப் பருவம் ஏப்ரலில் ஆரம்பித்து மே, ஜூன் வரை இருக்கும். சில சமயங்களில் அபூர்வமாக ஜூனுக்குப் பின்னரும் கிடைக்கும். சில மாமரங்கள் மே மாதத்தில் இருந்தே பழங்கள் கொடுக்க ஆரம்பித்தாலும் அவை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை. மே 20 தேதிக்குப் பின்னர் மாம்பழங்கள் சுவையாகக் கிடைக்க ஆரம்பிக்கும். காற்று ஆரம்பித்தால் மாம்பழம் விரைவில் பழுப்பதோடு இனிப்பும் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தோடு மாம்பழப் பருவமும் முடிவு. எனினும் அக்டோபருக்குப் பின்னர் கார் மாங்காய் வரும். அம்பத்தூரில் எங்க வீட்டு மாமரங்கள் கார் காலத்திலும் காய்ச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... காலை வணக்கம். மா புராணம் ஸூப்பர்.

      நீக்கு
    2. கீசா மேடம் வருகைக்கு நன்றி. நான் இப்போதான் பல வருடங்களுக்குப் பிறகு பாதி சீசனிலிருந்து இங்க இருக்கறேன். இந்தத் தடவை மாம்பழம் அவ்வளவாக சந்தைக்கு வரலை. பங்கனப்பள்ளி கிலோ 50 ரூபாய்க்கும் ருமானி 50 ருபாய்க்கும் கிடைத்தது. கிளிமூக்கு மாங்காய்தான் பழமுதிர்ச்சோலைல வரும். அது கிலோ 35ரூபாய்க்கும் வந்தது. இப்போ 160 ரூபாய்.

      எங்க ஊர்ல (சென்னையில், தாம்பரம் பக்கம்) நிறைய மாமரங்கள் இருந்தது. அதிலும் பங்கனப்பள்ளி காய்த்துக் குலுங்கும். கீழே இருந்தே எட்டிப் பறிக்கலாம். அனேகமாக தினமும் புது மாங்காய் பறித்து என் அம்மா ஊறுகாய் போட நான் சாப்பிடுவேன். சில சமயம் மழை, காத்து இருந்தால், 6 மரங்களிலிருந்தும் (ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை) இலைகளும் மாங்காய்களுமாக கீழே கொட்டி வீணாகும்.

      நீக்கு
  5. இங்கே திருச்சியில்,ஸ்ரீரங்கத்தில் தொக்கு மாங்காய் எனப் பெரியதாக ஒரு வகை மாங்காய் கிடைக்கிறது. அதில் தொக்குப் போட்டால் எனக்கு ஒரு வருஷத்துக்கு வரும்! :) இங்கே வந்த புதுசில் வாங்கிப் போட்டுட்டுத் தொக்கை எப்படிச் செலவு செய்யறதுனு தெரியாமல் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும்படி ஆச்சு! ஆகவே அதுக்கு அப்புறமாவே இந்தக் கல்லாமை எனப்படும் ஒட்டு மாங்காய்தான். ஒன்றோ இரண்டோ அளவைப் பொறுத்து வாங்கித் துருவித் துருவல் நிறைய இருந்தால் மாங்காய் சாதத்துக்கு வதக்கி வைச்சுட்டு மிச்சத்தைத் தொக்குப் போடுவேன். நாங்க சப்பாத்திக்கும் தொட்டுப்போம். முக்கியமாய் மேதி தேப்லா, மேதி பராட்டா, ஆலு பராட்டா, மூலி பராட்டா போன்றவற்றிற்குத் தொட்டுக்கத் தயிரோடு மாங்காய்த் தொக்கும் எங்களுக்குப் பிடிக்கும். நான் சாதத்துக்கு அதிகம் மாங்காய்த் தொக்குத் தொட்டுப்பதில்லை. துண்ட மாங்காயே பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவி, மைலாப்பூரில் மாங்காய் வாங்கி அங்கேயே கட் பண்ணி, இங்கு ஆவக்காய் ஊறுகாய் போட்டாள். முதல் ஒரு வாரத்தில் நான் நிறைய சாப்பிட்டேன். அப்புறம் ஃப்ரெஷ்னெஸ் போனப்பறம் சாப்பிடலை. சப்பாத்திக்கு மாங்காய் தொக்கு நன்றாகத்தான் இருக்கும். வருஷத்துக்கு வரும் ஊறுகாய்லாம் நன்றாக இருக்குமா? எனக்குத் தெரிந்து, மாங்காயை துண்டமாக்கி உப்பிட்டு காயப்போட்டுவைத்து, அதை வைத்துச் செய்யும் ஊறுகாய் மட்டும் மாதங்களானாலும் நல்லா இருக்கும். (முன்பெல்லாம் ஊறுகாய் சாதம், அதாவது சாதம், நல்லெண்ணெய், மாங்காய் ஊறுகாய் கலந்து, சாப்பிட இந்த ஊறுகாய்தான் நல்லாருக்கும்)

      நீக்கு
  6. நெல்லைத் தமிழர் மாமரங்களில் இருந்து மாங்காய்கள் பறிக்கப்படவில்லை என்பதைச் சொல்லி வருத்தப்படுகிறார். 2,3 மாமரங்கள் இருந்து குத்தகைக்கு விட்டு விட்டால் அவங்க பறிச்சுடுவாங்க. நமக்கும் கொடுத்துடுவாங்க. ஆனால் இப்படிச் சில வீடுகளிலே குத்தகைக்கு விடலை எனில் மாங்காய் பறிக்க மட்டும் ஒரு மரத்துக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை கேட்பாங்க! தெரிந்த இளைஞர்களை விட்டுப் பறிக்கச் சொல்லவும் பயமாக இருக்கும். மாமரங்களில் எறும்புகள் அதிகம். மேலே ஏறணும். ஏதானும் ஆகிவிட்டால் பெற்றவர்களுக்குப் பதில் சொல்லணும். இதே தான் தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்கும். ஆகவே நாங்க அம்பத்தூரில் இருந்தவரை தென்னை மரம் சுத்தம் செய்யும்போது தேங்காய்களைப் பறிக்கச் சொல்லிடுவோம். தனியாய்த் தேங்காய்களைப் பறிப்பதில்லை. தென்னை மரத்தில் ஏறுவது பழக்கப்பட்டவர்களால் தான் முடியும். அதற்கெனத் தனியான ஆட்கள் உண்டு. 2,3 மாதத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு நாலு தென்னை மரங்களையும் சுத்தம் செய்து தேங்காய், இளநீர்களைப் பறிப்போம். தேங்காய்களை விற்பதெனில் ஒரு தேங்காயை 3 ரூபாய்க்குத் தான் கேட்பார்கள். அல்லது 3 தேங்காய் 10 ரூபாய்க்குக் கொடுக்கச் சொல்லுவார்கள். அவங்களே கடைகளில் ஒரு தேங்காய் 15 ரூ வரை கொடுத்து மறுகேள்வி இல்லாமல் வாங்கிச் செல்வார்கள். ஆகவே நாங்க அக்கம்பக்கம் கோயில்களுக்குக் கொடுத்துடுவோம். தெரிந்தவர்கள், தேங்காய் வாங்க முடியாதவர்களுக்கு இலவசமாகக் கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா வீட்டில் 88லிருந்து இந்தப் பிரச்சனையைப் பார்த்திருக்கிறேன். தென்னை மரங்களில் காய் சிறியது. அதுக்கு ஒரு ஆளைக் கூப்பிட்டு ஏறச் சொல்லணும். பெரும்பாலும் மாமரங்களில் காய்கள் வீணாகத்தான் போகும். ஒரு தடவை 200 ரூபாய்க்கு ஒரு மரத்தில் உள்ள காய்களை எடுத்துக்கச் சொன்னபோது, எனக்கு அது வேஸ்ட் என்றுதான் தோன்றியது.

      நான் எப்போ அங்க போனாலும், மரத்தின் மேல் ஏறி காய்களைப் பறிப்பேன். ஒரு தடவைதான் அதை வீடியோ எடுக்கச் சொல்லி, சொதப்பி 3 செகண்ட் வீடியோ வைத்திருக்கிறேன். இப்போ அவைகளெல்லாம், காணாமல் போன கனவுகள்தான். மரங்கள் எல்லாம் போயாச்சு.

      நீக்கு
  7. படங்களோடு சொன்ன விடயங்கள் அருமை.
    உங்களது மகளது துறட்டி ஐடியா ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  8. நாங்க துரட்டியில் பையைக் கட்டுவோம். மாங்காய் பைக்குள் விழுந்துடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பத்தில் 88களில், அப்பாவும் அம்மாவும் கீழே பெட்ஷீட் விரித்து நின்றுகொள்வார்கள். நான் மரத்தில் ஏறி பெரிய மாங்காய்களைப் பறித்துப்போடுவேன் (அதைப் பழமாக்குவதற்காக). நிறைய சமயம், நான் துரட்டியை வைத்துப் பறித்து கீழே விழாதபடி பிடித்துக்கொள்வோம்.... அது ஒரு கனாக் காலம்.

      நீக்கு
  9. அன்பு நெ,த உங்கள் மகளுக்கு முதல் பாராட்டு. கார்ட் போர்ட் பாக்ஸ்க்கும், தொறட்டி தயார் செய்ததுக்கும்.
    மாங்காய்த்தொக்கு நன்றாக வந்திருக்கிறது.
    ருமானி தொக்கும் நன்றாகத்தான் இருக்கும்.

    கீதா சொல்வது போலக் கார்த்திகையிலும் ஒரு ஈடு உண்டு.
    அனைவருக்கும் இனிய காலை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிம்மா. பொதுவா பெண்களுக்கு இந்த மாதிரி ஆர்ட் நன்றாக வரும்தானே.

      இப்போ எனக்கு மாங்காய் மேல ஆசை வந்து, தேடித் தேடி கிலோ 150 ரூபாய்ல, 3 கிளிமூக்கு மாங்காய் சென்ற வாரம் வாங்கினேன். இனி ஃபெப்ருவரிலதான் புது மாங்காய் வர ஆரம்பிக்கும்.

      நீக்கு
  10. காலை வணக்கம்.

    நெய்வேலியில் இருந்த வரை மாங்காய்க்கு பஞ்சமே இல்லை. வீட்டிலேயே ஆறு மாமரங்கள் உண்டு. அதில் இரண்டு ஊறுகாய் போட மிகவும் தோதான மாங்காய். அம்மா அடிக்கடி இந்த தொக்கு செய்து விடுவார். நிறைய பேருக்கு தரவும் செய்வார். அப்படி வாங்கிக் கொண்டு போகும் உறவினருக்கு தொக்கு என்று சொல்ல வராது அவர் - டொக்கு என்று தான் சொல்வார் - அதனால் அவர் பெயரை நாங்கள் டொக்கு மாமி என வைத்திருந்தோம்! சமீபத்தில் கூட அவரைப் பார்த்த போது டொக்கு மாமி என்ற பெயர் வாய் வரை வந்து விட்டது! கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்!

    மாங்காய் தொக்கு - தயிர் சாதத்துடன் பரமானந்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்வேலியில் இருந்த உறவினர்களும் அங்கு பலாப்பழங்களுக்கும் மாமரங்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லியிருக்கிறார். இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவை.

      வருகைக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  11. உங்களின் மகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்... நீங்களும் சொல்லிடுங்க...!

    செய்முறை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  12. நல்ல ஐடியா பண்ணிக் கொடுத்த உங்கள் மகளுக்கு பாராட்டுகள்.....மாங்காய் தொக்கு சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி உமையாள் காயத்ரி. (தவறா நினைக்காதீங்க. உமையாள், விசாலாட்சி (அப்படி பேர் வச்சுட்டு சாலா ன்னு கூப்பிடுவாங்க) போன்ற பெயர்களெல்லாம் நகரத்தார் குலத்தில்தானே நிறைய வைப்பார்கள். உங்கள் பெயர் படித்ததும் எனக்கு அவர்களின் நினைவு வந்தது... அது என் பொன்னமராவதி சிறு வயது நினைவுகள்)

      நீக்கு
    2. ஆம் நீங்கள் சொல்லுவது உண்மை தான்.

      விசாலாட்சியை சாலா ன்னு கூப்பிடுவாங்க. உமையாளை சிலர் உமா ன்னு சொல்லுவாங்க.

      என்னை அதிகம் தெரிந்தவர்கள் காயத்ரி ன்னும் , மற்றவர்கள் உமையாள் ன்னும் சொல்லுவார்கள்....நல்ல வேளை சாட்கட் எனக்கு இல்லை.....

      நீக்கு
    3. இன்று உங்கள் தளத்துக்குச் சென்றேன். அட... சரியாக நினைத்திருக்கிறோமே என்று தோன்றியது. உணவு செய்முறைகளை (நான் பார்த்த வரையில் வெஜ் தான் இருக்கு) படிக்கிறேன். செய்துபார்ப்பேன். நன்றி.

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. //பெட் பாட்டிலைவைத்து ஒரு துரட்டி போன்று பண்ணிவச்சிருந்தாள்.
    Cardboard boxஐ வைத்து துணிகளை மடிப்பதற்காக ஒன்று செய்தாள். அதில் டி.ஷர்ட்டை வைத்து அட்டையை மடித்தால், டி.ஷர்ட் மடிந்துவிடும்//

    இரண்டு கண்டுப்பிடிப்புக்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் உங்கள் மகளுக்கு.
    பாராட்டுங்கள் குழந்தைகளை தந்தையின் பாராட்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது சொல்லிமுடியாது. அவ்வளவு ஆனந்தம் தரும். என் போன்ற அப்பா செல்லங்களுக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கோமதி அரசு மேடம்... எனக்கு 'பாராட்டுவது' என்ற குணமே ஆரம்பத்திலிருந்து இல்லை. அதனால் அப்போ அப்போ இப்போல்லாம் மகிழ்ந்து பாராட்டும்போது, என் பசங்க, நம்பறதில்லை. என் கண்ணையே பார்ப்பாங்க, கடைசில ஏதேனும் விளையாட்டுக்குச் சொல்றேனா என்று. 'அப்பா செல்லம்' - ஆஹா. கொடுத்துவைத்தவர்தான்.

      நீக்கு
  15. எங்கள் வீட்டில் இருக்கும் மாமரத்திலிருந்து கிடைக்கும் காய்களைக் கொண்டு ஆவ்க்காய் ஊறு காய் இடுவாள் என் மனைவி எனக்கு அத்தனை காரம் ஒத்துக் கொள்ளாது தொக்கு செய்வாள் செலவு ஆகாது இருவர்தானே தொக்கு செய்ய எடுத்த சிரமத்தை விட புகைப்படம் எடுக்க ஆர்வம் தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி.எம்.பி சார்... நான் என்ன ப்ரொஃபஷனல் சமையல் நிபுணனா? ஏதேனும் செய்யும்போது, எ.பிக்கு அனுப்பலாமே என்று தோன்றி படங்கள் எடுத்துவைத்துக்கொள்வேன்.

      ஆவக்காய் ஊறுகாய், காரமாக - ஊறுகாய் போட்ட புதிதில் சாப்பிட ரொம்ப நல்லா இருக்குமே..

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. மாங்கா தொக்கு செய்முறை அருமை, படங்களும் அழகு.
    தங்கை வீட்டில் மாமரம் இருக்கிறது மிக உயரமாய் மொட்டைமாடியை தாண்டி போகிறது.
    பறிக்க மிகவும் கஷ்டம்.மொட்டை மாடி போய் பறிக்கவும் கஷ்டம் கம்பால் தட்டி விட்டு கீழே விழுவதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    ஊறுகாய் போட்டால் நன்றாக இருக்கும் தோல் கடினமாய் இருக்கும். தோல் சீவிவிட்டு தொக்கு செய்வாள் தங்கை.
    சின்னதாய் இருக்கும் பழுக்கவைத்தால் இனிப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மா மரம் அகலமாக இருந்தால்தான் பறிப்பது எளிது. எங்கள் (தாம்பரம் பக்கம்) அப்பா வீட்டிலும் வாசலில் மிக உயரமாக மஞ்சநாத்தி மாங்காய் மரம் இருந்தது. அது நிறையக் காய்த்தாலும் எங்கேயோ உயரத்தில் காய்க்கும். அதனால் அதனைப் பறிக்க முடியாது, வீணாகத்தான் போகும். எப்போவாவது மழை காற்றின்போது வீட்டுக்குள் நிறைய காய்கள் விழும்.

      வீட்டில் மாமரம்... எவ்வளவு நினைவுகளைக் கொண்டுவந்துவிடுகிறது.

      நீக்கு
  17. அகலவாட்டத்தில் வளர இடம் இல்லாமல் மேல் நோக்கி வளர்ந்து விட்ட மரம். இரு பக்கமும் வீடு நடுவில் மரம்.

    பதிலளிநீக்கு
  18. செப்டம்பர் மாதத்தில் மாங்காய் தொக்கா என்று நினைத்தேன். நீங்கள் ஜுனில் அனுப்பியது செப்டெம்பரில்தான் போட்டிருக்கிறாரா ஸ்ரீராம்? அவ்வளவு டிராபிக் ஜாமா? கதைகளும் அப்படி வரிசை கட்டித்தான் நிற்கின்றன போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம்..... நான் பொதுவா படங்கள் எடுத்துவிட்டு உடனே (இப்போல்லாம்) அனுப்புவதில்லை. நேரம் கிடைக்கும்போது கட கடவென 5 அனுப்புவேன். அதை வரிசையாக வெளியிட்டாலும் நன்றாக இருக்காது. எல்லோரும் எழுதினால்தானே நன்றாக இருக்கும்.

      நீக்கு
  19. நான் சுண்டா மட்டும்தான் துருவி செய்வேன். தொக்கு செதில், செதிலாக சீவி செய்வதுதான் பழக்கம்.
    மாங்காய் தொக்கு தயிர் சாதத்திற்கு மட்டுமல்ல, ப்ரெட்டில் தடவி சாப்பிடுவேன். சப்பாத்தி, பூரிக்கும் சாய் டிஷ் ஆக மாங்காய் தொகை உபயோகப்படுத்துவது உண்டு.
    சொல்ல மறந்து விட்டேனே, உங்கள் மகளின் க்ரியேட்டிவிட்டிக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பா.வெ. மேடம். நானும் நீங்கள் சொன்னபடி முன்பு சாப்பிட்டது உண்டு. 'சுண்டா' என்பது ஒரு மாங்காய் வகையா?

      நீக்கு
  20. முதலில் சிறு கண்டனத்துடன் ஆரம்பிக்கிறேன் :) மகளை பாராட்டாமல் விட்டதுக்கு ..
    மகள்களுக்கு அப்பாவின் பாராட்டு என்பது ரொம்ப பெரிய விஷயம் .எப்பெல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ உடனே பாராட்டிடுங்க .
    எங்க வீட்ல கிளிமூக்கு வகை இருந்தது கோடைக்காற்றுக்கு மொத்தமா விழும் சாக்குப்பையில் போட்டிப்போம் ...
    தொக்கு நல்லா இருக்கு இங்கே சீஸன்லயும் குட்டி புளிப்பு மாங்காய்தான் கிடைக்கும் .அடுத்த சம்மருக்கு செய்யலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலின். என் இயல்பு அப்படி ஆகிவிட்டது. ஆனா என் பெண் மற்ற பெண்களைப்போலவே, கைவேலைகள், எங்கள் வீடுகளில் செய்யாத கேக், புட்டிங் என்று ஸ்பெஷலாகச் செய்வதில் ஆர்வம் கொண்டவள். அவள் வரைந்து தந்த கிருஷ்ணர்தான் என் மானசீகக் கடவுள். ஆனா பாருங்க, நானெல்லாம், பசங்களைப் பாராட்டக்கூடாது என்ற பரம்பரையைச் சேர்ந்தவன் (அந்த மெண்டாலிட்டி). என்ன செய்ய.

      நீக்கு
  21. ரொம்ப மன்னிக்கவும், நானும் நெ.த.வின் மகளைப் பாராட்ட மறந்திருக்கேன். எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயம். எங்க வீட்டில் அதாவது புக்ககத்தில் நெல்லைத்தமிழருக்கு உடன் பிறந்தவங்க எல்லோரும்! பாராட்டுச் சொல்லே வராது! தேவலை, பரவாயில்லை, குத்தமில்லை என்பார்கள்! அதைத் தான் நாம் பாராட்டாக எடுத்துக்கணும்! :))))) அப்படிச் சொன்னாலே பெரிய விஷயம்! கல்யாணம் ஆன புதுசில் நான் செய்யற வேலைகளைப் பார்த்துட்டு அக்கம்பக்கத்தினர் உங்க புகுந்த வீட்டில் உன்னைத் தலையில் வைச்சுக் கொண்டாடுவாங்கனு சொல்வாங்க. உண்மை எனக்குத் தானே தெரியும்! :))))) அதென்னமோ சிலருக்குப் பாராட்டுவது என்பது விளக்கெண்ணெய் குடிப்பது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கீசா மேடம்.

      //சிலருக்குப் பாராட்டுவது என்பது விளக்கெண்ணெய் குடிப்பது போல// - அப்படி இல்லை. இதை எப்படிச் சொல்லணும்னா, சிலருக்கு மற்றவரைப் பாராட்டுவது, ஏதோ அவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை அள்ளி பிறருக்குக் கொடுப்பது போல என்று சொல்லணும். இந்தக் குணத்தை ஆரம்பத்திலிருந்தே நான் சரி செய்யாமல் விட்டது என் தவறு (பிறரின் தவறும்கூட). அதாவது நான் ஒன்றும் சொல்லலைனா, 'நன்றாக இருக்கிறது', 'எனக்கு இன்று பிடித்திருந்தது' என்று சொன்னால் செய்திருந்தது 'அட்டஹாசம்' என்று எடுத்துக்கணும். ஆனா, சிறிது தவறு நேரிட்டாலும் உடனே சொல்லிடுவேன். ஹாஹாஹா.

      நீக்கு
  22. கெட்டிக்கார பெண் செய்த துரட்டி மாங்காய்த் தொக்கு செய்ய உதவியது. ஆமாம்.தொக்கு தோசைக்கெல்லாம் கூட தொட்டுக்கொள்ள நன்றாக இருக்குமே? தொக்குக்கு மிளகாய்ப்பொடியை மாங்காய் சுருண்டு வரும்போது போட்டு,ஒரு கிளறு கிளறி இறக்கினால்போதுமே. கலர் நன்றாக இருக்கும். கட்டின வீட்டிற்குப் பதம் இல்லை. மாங்காயோடு சேர்த்துப்போட்டால் ஈரப்பதமாகி மிளகாய்ப்பொடி கலர் வித்தியாஸமாகிவிடும் என்பது என்கணக்கு. எந்தத் தொக்கு கிளறினாலும் என்னுடைய முறை இதுவோ என்னவோ? தொக்கு மணக்கிறது. ருசிதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமாட்சி அம்மா... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொல்லியுள்ளது சரிதான். நானும் சில சமயம் இந்தப் பிரச்சனையைப் பார்த்துள்ளேன். தொக்கினுடைய நிறம் மிகவும் முக்கியம். நான் சில சமயம் காஷ்மீரி மிளகாய்ப்பொடி உபயோகப்படுத்துவேன். மிக்க நன்றி.

      நீக்கு
  23. ஆஆஆஆஆஆஆஆ இம்முறை மாங்காய்த் தொக்கோ.. அதுவும் நெல்லைத்தமிழனின்.. அதுவும் களவாகப் பிடுங்கிய மாங்காயில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))... ஜன்னல் ஊடாக கொக்கத்தடி கட்டிப் பிடிங்கினால் அது களவுதான்ன்ன்ன் இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன்ன்:)).. இப்பவே போகிறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு நேக்கு நீடி வேணும்:)).. என்னால இதை எல்லாம் பார்த்திட்டும் சும்மா இருக்க முடியாதூஊஊஊ:).. என் செக் எங்கே எனக்கு உடனடியா ஒரு ரிக்கெட் போடுங்கோ நெல்லைத்தமிழனின் பக்கத்து வீட்டுக்காரரைப் பேட்டி கண்டு:).. அவர்களின் மாங்காய் களவுபோன கண்ணீர்க் கதையை இப்பவே வீரகேசரியின் முதல் பக்கத்தில பிரசுரிக்கோணும்:)) அப்பாடா இதுக்கே நெஞ்சு படபடக்குதே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஞாஞாஞானி அதிரா. ஞானியாக இருந்துக்கிட்டு அங்க இருந்தே இதெல்லாம் ஞானத்தினால கண்டுபிடிக்க வேண்டாமா?

      'பொய்மையும் வாய்மை இடத்து' என்ற குறளைப் படித்ததனால் வந்த வினை. மாங்காய் மரத்திலேயே இருந்து வெம்பி வீணாப்போகும் என்றால், களவெடுத்தாவது அதனை பிறருக்கு (வேற யாருக்கு எனக்குத்தான்) உபயோகப்படுமாறு செய்வது நேர்மையான செயல்தான். என்ன ஒரு பிரச்சனை என்றால், ஐயன் திருவள்ளுவர், இதற்கென தனிக் குறள் எதுக்கு இயற்றணும், பொய்மையும் வாய்மை இடத்தே என்று சொன்ன குறளையே இப்படிப் பொருள் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார் போலிருக்கிறது.

      நீக்கு
  24. //அடுத்த பில்டிங்ல தெரிஞ்சவங்கதான் இருக்காங்க. அதுனால அந்த மாமரங்களில் இருந்து ஒரு சில காய்களைப் பறிப்பதில் பிரச்சனை இல்லை. //

    நோஓஓஓஓஓஓஒ நீங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது டப்பூஊஊஊஊஊ:)).. சே..சே.. என்னால அடக்கிக் கொண்டு இருக்கவே முடியுதில்லை:) அநியாயத்தைத் தட்டிக் கேய்க்க எனக்கு கூட ஒராள் சப்போர்ட்டுக்கு கிடைக்குதில்லையே:)) ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    நெ.தமிழன் காதைக் கிட்டக் கொண்டு வாங்கோ ஒரு கதை ஜொள்றேன்ன் இது ரகசியமாக்கும்:).. இங்கு எங்கட பக்கத்து வீட்டு வளவில ஒரு மாமரம் போன்ற அப்பிள் மரம் இருக்கு.. காயோ காய்த்துச் சொரியும்... அங்கிருப்பது ஒரு கப்பிள் மட்டுமே... இங்கிருப்போர்.. இயற்கையாக விளையும் பழங்களில் பூச்சி இருக்கலாம் என்பதனால வீட்டுப் பழம் ஆருமே பறித்து உண்பதில்லை.. கடையில பக்கெட்டா வாங்கித்தான் சாப்பிடுவினம்.. சிலர் ஜாம் செய்யும் ஆர்வம் இருப்போர் மட்ட்டும் பிடுங்கிச் செய்வார்கள்.

    அதனால இம்மரம் காய்த்து அப்படியே சொரிந்து கொட்டும்.. எனக்கொரு ஆசை சே..சே.. அந்த மரம் எங்கள் பக்கமாக இருந்திருந்தால் வேலிக்கு மேலால எட்டி எட்ட்டிப் பிடுங்கலாமே என:)) ஹா ஹா ஹா.. எனக்கு பழத்தை விடக் காயாக பிடுங்கி மாங்காய்ப்பிஞ்சு போலச் சாப்பிடவே பிடிக்கும் உப்போடு... என்ன செய்வது உங்களைப்போல கொடுப்பனை எங்களுக்கு இல்லாமல் போச்ச்சே.. அதனாலதான் நாங்களே அப்பிள் நட்டு இப்போ முன்ன முன்னம் 4 காய்கள் வந்திருக்கு.. இனிப் பிடுங்கோணும்.. பிடுங்கிய பின்பு படம் போட்டுக் காட்டுறேன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை வேண்டுமானாலும் எழுதுங்க அதிரா. ஆனால் இந்த ஆப்பிள் மரங்கள் என்று சொன்னாலே எனக்கு ரொம்ப ஆர்வமாயிடும். துளசிதளம் என்ற தளத்தை நடத்தும் துளசி டீச்சர், அவர் வீடு நியூசிலாந்தில் கட்டுவதற்கு 6+ ஆப்பிள் மரங்களை வெட்டிவிட்டார் என்று படித்தபோது எனக்கு ரொம்ப வருத்தமாயிடுத்து. என் தம்பியும், வீடு கட்ட, நிலத்தில் இருந்த மாமரங்களை வெட்டிவிட்டேன் என்று சொல்லும்போது எனக்கு ரொம்பவும் கஷ்டமாயிடுச்சு.

      ஆப்பிள் மரத்திலிருந்து, அப்படியே ஆப்பிள் பறித்துச் சாப்பிடணும். 'ஆஹா என் ஆசை நிறைவேறுமா, கடல் அலையைப் போல மறைந்துபோக நேருமா' என்ற பாடல்தான் நினைவுக்கு வருது (இந்த மாதிரி பாடல்களை ஸ்ரீராமோ நீங்களோ வெளியிடமாட்டீங்களே). மரத்தில் அப்போ பறித்து சாப்பிடுவதுபோல் ஆகுமா?

      உங்கள் வீட்டில் ஆப்பிள் மரமா? படம் எடுத்து உடனே போடுங்க. அதுவும் நம்ம வீட்டு மரத்துல ஆப்பிள் காய்களா? நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது பச்சை ஆப்பிளா இல்லை இனிப்பு வகை ஆப்பிளா? (ரொம்ப வருடங்களா எனக்கு ஒரு ஆசை. கொஞ்சம் நகரத்துக்குப்பக்கத்துல ஆனால், மத்திய தமிழ்நாட்டுல, 1/4 ஏக்கர் போல் இடம் வாங்கி, வீடு கட்டிக்கொண்டு, சுற்றிவர பலவித மாமரங்கள், கொய்யா போன்றவற்றையும், சிறிய காய்கறித் தோட்டமும் போட்டுக்கொள்ளவேண்டும் என்று.

      நீக்கு
  25. உங்கள் மகளுக்கு கிரியேட்டிவிட்டி அதிகம் இருக்கிறது போலும்.. டிசைனர் எஞ்சினியரிங் படிச்சாவெனில் எங்கேயோ போயிடுவா என நினைக்கிறேன்ன்... பொதுவாக ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளுக்கே இப்படியான கெட்டித்தனங்களும்.. சிந்திக்கும் ஆற்றலும்.. அதனை செய்யும் பொறுமையும் அதிகம் இருப்பதுபோல எனக்கொரு உணர்வு.. உதாரணம் என்னைப் பாருங்கோ:)).. ஹையோ எதுக்கு இப்போ எல்லோரும் கலைக்கிறீங்க:))....

    காலம் ஒன்றும் கடந்து விடவில்லை.. மகள் சின்ன வயதில் செய்த கெட்டித்தனங்களை எல்லாம் சொல்லிச் சொல்லி இப்போ பாராட்டலாமே.. அது இன்னும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் குடுக்கும்.... எனக்கு எங்கள் அப்பா.. குட்டி விசயத்தைக்கூடப் பெரிதாகப் பாராட்டுவார்ர்ர்:).. இப்போ நினைக்கையில் அப்பா பொய்யாகப் பாராட்டியிருக்கிறார் என எண்ணத் தோணும்.. ஆனால் அப்பாராட்டுக்களும் ஊக்கங்களுமே என்னை நிறைய நல்ல வழிகளில் கொண்டு போயிருக்கு என்பதை இப்போ உணர்கிறேன். அண்ணியையும் பாராட்டுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... எல்லாப் பெண்களுக்குமே கிரியேட்டிவிட்டி அதிகம். நான் சின்ன வயசுல நிறைய படங்கள் வரைவேன். எங்க அப்பா, 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்பார். படிக்கறதை விட்டுட்டு இது என்னடா வேலை என்பார். நான் அவர் ரத்தம் இல்லையா?

      என் பெண்ணுக்கு கிரியேட்டிவிட்டி அதிகம் (இதை எழுதும்போதே, தன் பெண்ணைப் பற்றி புகழவோ மகிழவோ கூடாது என மனம் தடுக்குது). அவள் 7வது படித்தபோது மேசை விரிப்பு ஒன்று ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டுப் போகணும் (அதாவது வெறும் விரிப்பு வாங்கி அதில் டிசைன் அல்லது ஓவியம் போட்டுக்கிட்டுப் போகணும்). இது ஸ்கூல் பிராஜக்ட் என்று ஞாபகம். நான் ஒரு விரிப்பு வாங்கி, வேக வேகமா அதுல டிசைன் போட்டு (அதுவும் அழகாத்தான் இருந்தது) அவள்ட கொடுத்துட்டேன் (மறுநாள் சப்மிட் செய்யவேண்டும் என்பதால்). மறுநாள், அவள் டீச்சர் இன்னும் சில நாட்கள் கழித்து என்று சொன்னதால், அவளே இன்னொரு துணி வாங்கி அதில் டிசைன் போட்டு அதையே சப்மிட் செய்தாள். அவளுக்கு தன்னால் முடியும் என்ற எண்ணமும், தனக்குத் திறமை இருக்கு என்பதும், அடுத்தவர்களின் வேலையை அவள் வேலை என்று சப்மிட் பண்ணக்கூடாது என்பதும்தான் காரணம். நான் இதையெல்லாம் படம் எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு நாள் அனுப்ப முயல்கிறேன். (தெரிஞ்சால் அதை இணைத்துவிடுவேன்).

      லண்டன் காரங்களும் நீங்களுமே நிறைய கைவினைப் பொருட்கள், டிராயிங்க்லாம் செய்து உங்க தளத்துல போட்டிருக்கீங்களே.

      இப்போ தோணுது... பாராட்டியிருக்கணும் நிறைய என்று. என் மனைவி (முன்னெல்லாம்.... இப்போ இல்லை) நான் செய்யும் சிறிய சிறிய செயல்களையும் பாராட்டி, இது எனக்கு முடியாது, நீங்க செய்யுங்க என்று ஊக்கப்படுத்துவா.

      நீக்கு
    2. அது பறவாயில்லை, உங்களை நன்கு புரிந்து கொண்டோருக்கு, அருகில் இருப்போருக்கு.. உங்கள் குணம் புரியும்.. வாய் திறந்துதான் பாராட்டோணும் என்றில்லை.. ஒரு பார்வையே காட்டிக் குடுக்கும். உங்கள் மனம் நிறைந்த பாராட்டை..

      நீக்கு
  26. ஜன்னலுக்குக் கிட்டவாகத்தான் மரம் இருக்கிறது, ஜன்னலூடு மாங்காயைப் பார்த்தபின்பும் எப்படி ஆயாமல் இருக்க முடியும்:).. எங்கள் வீட்டில் மாமரச் சோலை.. ஆனா அது இந்தியாவில் அப்பழம் கிடைக்காது.. பென்னாம் பெரிய கரும்பச்சை நிற மாங்காய் பழுத்தால் கற்கண்டுபோல கட்டியாக இருக்கும்.. அதன் பெயர் “கறுத்தக் கொழும்பு மாங்காய்”:).. விலாட் எனப்படும் உருண்டை மாங்காய் மரமும் இருந்துது அதுவும் படு இனிப்பு பழம்... ஆனா ஒரு குறை.. இதன் பிஞ்சுகளைச் சாப்பிட முடியாது.. ஒன்று புளிக்கும் இல்லை எனில் கசக்கும்.. பழமானால்தான் தேன் போல இனிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.... நாம சின்ன வயதில் பார்த்த ஊருக்கும் இப்போது இருக்கும் ஊருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. என் சொந்த எண்ணம், பழைய இடங்களைக் கடந்து வந்த பிறகு, அந்த நினைவுகளோடே நாம இருந்துடணும். திரும்பவும் அந்த இடங்களுக்குச் சென்றால், நம் மனதில் மகிழ்ச்சி இருந்தாலும் வெறுமையும், நாம் நினைத்தமாதிரி ஊர் இப்போ இல்லையே என்ற வருத்தத்தையும் சுமக்க நேரிடும்.

      நீக்கு
    2. //எப்படி ஆயாமல்// - இது தமிழகத்தில் புழங்கும் சொல், ஆனால் வேறு அர்த்தத்தில். கீரையை ஆயுங்கள். இதனை பேச்சு வழக்கில், கீரய ஆஞ்சு தாங்க என்று சொல்வாங்க (தமிழர்கள் வீட்டில்). மாங்காயை 'ஆய்வது' அதாவது பறிப்பது என்ற அர்த்தத்தில் இது உபயோகப்படுத்துவதில்லை. மாங்காய் பறிக்கணும். கீரையை ஆயணும். உங்க தமிழ் எப்போதும்போல் நன்றாக இருக்கு.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நாங்கள் கீரையைத் துப்பரவாக்குவது எனத்தான் சொல்லுவோம்ம்.. ஆய்வது எனும் சொல் பாவிப்பதில்லை.. மரத்திலிருந்து பிடுங்கி எடுப்பனவற்றை மட்டுமே ஆய்தல் என்போம்ம்.. தேங்காய் ஒன்று ஆய்ஞ்சுதர முடியுமோ.. கொய்யாப்பழம் ஆய்ந்தேன்.. அல்லது பிடுங்கினேன்.. இப்படி வரும் பேச்சு வழக்கு..

      நீக்கு
    4. //அதிரா.... நாம சின்ன வயதில் பார்த்த ஊருக்கும் இப்போது இருக்கும் ஊருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.///

      100 வீதம் உண்மை, நம் ஒரு வீடு நாட்டுப் பிரச்சினையோடு உடைக்கப்பட்டு விட்டது என்றேனே.. இப்போ அண்ணன் வந்திருந்தபோது ஒரு படம் காட்டிக் கேட்டார்.. இது எந்த இடம் என.. எனக்குப் புரியவே இல்லை... தெரியவில்லையே என்றேன்ன்.. இதுதான் எங்கள் வீடு.. பார் மாமரங்கள் நின்ற இடத்தில் வெறும் பற்றைகள் இருக்கு.. வீடு இடிபட்டு அத்திவாரம் தெரியாமல் இருக்கு.. சின்ன வயதில்.. வீட்டுக்கு அருகில் ஒரு பழைய எண்ணெய்ச் செக்கு இருந்துது.. அதில் ஏறி ஏறிக் குதிச்சு விளையாடுவோம்ம்.. அச்செக்கை நினைவிருக்கா எனக் காட்டினார்ர்... நாம் சின்னவர்களாக இருந்தபோது.. அது பென்னாம் பெரிய செக்காக இருந்துது.. இப்போ குட்டியாக இருந்துது.. என்னால் நம்பவே முடியவில்லை.. இல்லை அண்ணன் இது அந்த செக்கு இல்லை என்றேன்ன்.. இல்லை அதுதான்.. அதே இடத்திலதான் இருக்குது என்றார்ர்... எல்லாமே கனவுபோல இருக்கு:(.

      நீக்கு
  27. ஆஹா இனி தொக்குக்கு வருகிறேன்.. பார்க்கவே வாய் ஊறுதே.. இதே முறையில்தானே நெல்லிக்காய் தொக்கும் ச்ய்வோம்ம்.. ஆனா அதுக்கு வெந்தயம் சேர்ப்பதில்லை.. அது எனக்கு பிடிக்கவுமில்லை.. ஆனா இது நிட்சயம் பிடிக்கும் எனக்கும் மூத்தவருக்கும் மாங்காய் ஐட்டம் எல்லாமே பிடிக்கும்.. மூத்தவரை தமிழ்க்கடைக்குக் கூட்டிப் போனால் அவர் தூக்குவது.. மாங்காய் தொக்கு.. மாங்காய் ஊறுகாய்.. பன்னீர்ர்...

    சின்னவரைக் கூட்டிப் போனால்.. சர்பத்.. சோடா.. மிக்ஸர் பக்கட்:).

    நன்றாக வந்திருக்குது தொக்கு.. இது கொஞ்ச நாட்கள் வைத்துச் சாப்பிடலாம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்காய், வத்தல் மிளகாய் இரண்டும் சூடு. வெந்தயம், நல்ல எண்ணெய் இரண்டும் உடம்புக்குக் குளிர்ச்சி. எல்லாம் சயன்சுங்கோ. இது டமில்ல 'டி' எடுத்தவங்களுக்கு எப்படித் தெரியும்?

      உங்க பின்னூட்டம் படித்தபின்பு, எனக்கு என் பசங்களுக்கு இருக்கும் வேறு வேறு விருப்பமும் சுவையும் நினைவுக்கு வருது. ஒருத்தருக்கு ஒண்ணு பிடிக்கும்னா இன்னொருத்தருக்கு அது பிடிக்காது...

      நீக்கு
  28. இங்கும் தமிழ்க் கடையில் ஒரு கிலோ மாங்காய் 4.99 பவுண்ட்ஸ்க்கு கிடைச்சது.. சூப்பர் மாங்காய்கள்.. வீட்டுக்கு வர முன்பே ஒரு மாங்காய் சாப்பிட்டு விட்டேன்ன்.. மொத்தம் 4 மாங்காய்கள் வந்தன.. கொஞ்சம் பெரிசு.. நல்ல பிஞ்சும்.. புளிப்பும் இல்லை. இனிக்கிடைக்குமோ தெரியாது கிடைத்தால் தொக்கு செய்கிறேன்... அந்த வடுமாங்காய் போன்ற குட்டிக் குட்டி மாங்காய்தான் எப்பவும் கிடைக்கும் அது பார்க்கப் பிஞ்சுபோல இருக்கும் வெட்டினால் உள்ளே மஞ்சளாக பழுத்திருக்கும்.. ஒன்றுக்கும் உதவாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைகாவது ஈழத்துக்குச் செல்ல நேர்ந்தால் மார்ச்-ஏப்ரல் சமயத்தில் சென்றால் மாங்காய், நுங்கு, பனங்கிழங்கு (அப்புறம் உங்கள் ஒடிடிடிடிடியல் கூழ்) எல்லாம் ரசித்துவிட்டு வரலாம் ஹாஹாஹா.

      மிக்க நன்றி அதிரா (இல்லை இல்லா.. புகழ்பெற்ற கதாசிரியை/எழுத்தாளினி அதிரா)

      நீக்கு
    2. ///மிக்க நன்றி அதிரா (இல்லை இல்லா.. புகழ்பெற்ற கதாசிரியை/எழுத்தாளினி அதிரா)///

      ஹா ஹா ஹா மிகுதிப் பட்டங்களை அதுக்குள் மறந்திட்டீங்களே:))

      நீக்கு
    3. //ஹா ஹா ஹா மிகுதிப் பட்டங்களை அதுக்குள் மறந்திட்டீங்களே:))//

      ஸ்வாமீ..... உங்களின் நினைவூட்டலுக்காக .... இதோ இந்த அடியிற்கண்ட பதிவின் அடியினில் தேடிப்பாருங்கோ.

      http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html ஒருசில பட்டங்கள் தென்படும். :)))))

      நீக்கு
    4. //அடியிற்கண்ட பதிவின் அடியினில் தேடிப்பாருங்கோ//

      அடியில் மீன்ஸ் ..... அந்த மிகவும் அகன்ற இடுப்பு ஒட்டியாணத்திற்கு (ஒட்டியாண படத்திற்கு) அடியில். கவனமாகப் பாருங்கோ, தெரியும்.

      நீக்கு
    5. ///ஸ்வாமீ..... உங்களின் நினைவூட்டலுக்காக .... இதோ இந்த அடியிற்கண்ட பதிவின் அடியினில் தேடிப்பாருங்கோ.

      http://gopu1949.blogspot.com/2017/06/8-of-8.html ஒருசில பட்டங்கள் தென்படும். :)))))///

      ஹையோ வைரவா.. புளொக் எழுதுவதை மறந்தாலும் ..லிங் குடுப்பதை மறக்கவில்லையே கோபு அண்ணன்:)) ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    6. @கோபு சார் - //உங்களின் நினைவூட்டலுக்காக // - லிங்க் கொடுத்ததால் செக் பண்ணினேன். அங்கு ஒரு சில பட்டங்கள்தான் 'அயோக்ய, அலட்டல், அந்தர்பல்டி' என் கண்ணில் படுகின்றன. இடுகையில் பிரச்சனையா இல்லை என் கண்ணில் பிரச்சனையா?

      நீக்கு
  29. படங்களைப் பார்த்தாலே என் நாக்கில் நீர் ஊறுகிறது ஸ்வாமீ ...... ஒரே ஜொள்ளுதான் போங்கோ. :)))))

    எனக்கு ஊறுகாய்கள் மட்டும் FRESH ஆக அந்த சிகப்பு நிறம் மாறாமல் இருக்க வேண்டும். மாதாமாதம் வேறு புதிய ஊறுகாய் மாற்றப்பட வேண்டும்.

    கசப்பு நார்த்தங்காய், உப்புக் கொளுஞ்சிக்காய், கடாரங்காய், தொக்கு மாங்காய், வடு மாங்காய், மாஹாளிக்கிழங்கு, வேப்பிலைக்கட்டி, எண்ணெயில் வதக்கினால் டப்-டுப் என்று வெடிக்கும் கசப்பான பச்சை சுண்டைக்காய், மோர்மிளகாய், பச்சை மிளகு, மொளகா இஞ்சி, வைஷ்ணவாள் செய்யும் புளிக்காய்ச்சல் முதலியவற்றில் எனக்கு மிகவும் பிரியமும் காதலும் உண்டு.

    இவை உங்கள் தகவலுக்காக மட்டுமே. இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாதாமாதம் அனுப்பி வைத்தால் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

    தங்கள் மீதும் ஊறுகாய்கள் மீதும் என்றும் பிரியத்துடன்
    கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாமீ, பேசாமல் தாங்கள் ஒரு ஊறுகாய் பிஸிநெஸ் ஸ்டார்ட் செய்யலாம்.

      மாதம் பலகோடி ரூபாய்கள் டர்ன் ஓவர் ஏற்படும். பணத்தின் மேல் படுத்துப் புரளலாம்.

      வலைத்தளத்தின் மூலம், இந்தியா மட்டுமின்றி, லண்டன், ஜெர்மன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற, பல வெளிநாட்டு நட்புகள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் ..... அவர்களில் பலர் .... நான்....நீ என ஏஜன்ஸி எடுக்க க்யூவில் வந்து நிறகக் கூடும்.

      அவர்களிடம் மட்டும் (சற்றே உஷாராக இருந்து) பல லக்ஷங்கள் முன்பணமாக வாங்கிக்கொண்டு, அக்ரிமெண்ட் போட்டு, சேல்ஸ் டார்கெட் ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம்.

      அட்வான்ஸ் நல் வாழ்த்துகள் ஸ்வாமீ. :)))))

      நீக்கு
    2. நவத்துவாரங்களிலும் சற்றே எரிச்சல் ஏற்பட்டாலும்......

      புத்தம் புதிய, காரசாரமான + சற்றே புளிப்பான, தொக்கு மாங்காய் ஊறுகாயை, அப்படியே சுடச்சுட சமைத்து இறக்கிய A-1 வெள்ளைப் பச்சரிசி சாதத்தில் கணிசமான அளவுக்குப் போட்டு, அதன் தலையில் செக்கில் ஆட்டிய நல்ல நல்லெண்ணெயை, கண்ணை மூடிக்கொண்டு விட்டு, நன்கு பிசைந்து, பொறித்த உளுந்து அப்பளம் + சேவை வடாம் + ஜவ்வரிசி வடாம் போன்றவற்றையும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ..... ஆஹா ..... ஆனந்தம் ..... ஆனந்தம் ..... ஆனந்தமே ! :)))))

      நீக்கு
    3. இது கோபு சார்தானா? பல்வேறு உணவுகளை சிலாகித்து எழுதும் திருச்சி வை.கோ (ஐயோ நான் அந்த ரா. யில்லாத பெயரை உபயோகப்படுத்தவில்லை) பாலகிருஷ்ணன் அவர்களா? அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி.

      நான் அதிகம் படித்துவந்த நீங்கள், முனைவர் கந்தசாமி அவர்கள் இன்னும் நிறையப் பேர், புது இடுகைகள் எழுதுவதில் ஆர்வமில்லாமல் இருப்பதில் எனக்கு வருத்தம்தான். எழுத விஷயமா இல்லை? எத்தனை பண்டிகைகள், அது சார்ந்த கோலாகலங்கள், உணவு, பிரசாதம்... எவ்வளவு இருக்கு உங்களுக்கு எழுத.

      சில படங்களை வெளியிட்டு ஸ்ரீராம், எ.பிக்கு கதை எழுதச் சொல்லியிருக்கிறார். 'சீதையைத் தொடங்கியதுடன், அதாவது 'சீதையை ராமன் மன்னித்தார்' என்று முடியும் கதையைத் தொடங்கியவுடன் மாயமாகிவிட்டீர்களே அந்த 'மாய மான்' போல.

      நீக்கு
    4. @கோபு சார் - //ஊறுகாய்கள் மட்டும் FRESH ஆக அந்த சிகப்பு நிறம் மாறாமல் இருக்க வேண்டும்// - ஆமாம் கோபு சார். அதிலும் மாங்காய் ஊறுகாய், அந்த வெடுக் என்று கடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும். 'தொஞ்சு போயிடுத்துன்னா' நான் அது பக்கமே போகமாட்டேன் (உங்களை மாதிரி).

      'கசப்பு நார்த்தங்காயிலிருந்து .... மாங்காய் இஞ்சி' வரை உங்க ப்ரிஃபெரன்சுல எனக்கு பெரும்பாலும் பிடிக்காதே... எனக்குப் பிடிக்காததை உங்களுக்கு எப்படி அனுப்புவேன்.

      உங்களுக்கு அனுப்பணும்னா, 'நந்தினி குந்தா' மட்டும் அனுப்ப நான் ரெடி. ஆமாம்... உங்களுக்கு பிரஷர் இல்லையா? சர்வ சாதாரணமா ஊறுகாய்லாம் கேட்கறீங்க...

      உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்கள், 'மீண்டும் ஜே.கே.பி' என்பதுபோல் உங்கள் தளத்தை தூசி தட்டி எழுத ஆரம்பிங்க. நாங்க படிக்க ரெடி.

      நீக்கு
    5. @ கோபு சார் - //ஒரு ஊறுகாய் பிஸிநெஸ் ஸ்டார்ட் செய்யலாம்.// - நான் எத்தனையோ இனிப்பு வகைகள்லாம் போட்டிருக்கேன். அப்போல்லாம் உங்களுக்குத் தோன்றாத ஐடியா 'ஊறுகாய் பிசினஸ்' என்று சொல்றீங்களே.

      //பணத்தின் மேல் படுத்துப் புரளலாம்.// - மெத்தைல படுத்தாலே தூக்கம் வர மாட்டேங்குது. நமக்கு எதுக்கு பணப் படுக்கை. (உங்களுக்குத் தெரியுமா, தங்கத்தை காலில் கொலுசாக அணிந்ததனால் செல்வம் இழந்தவர்கள், தங்கத் தட்டில் தினமும் சாப்பிட்டவர்கள் சாப்பாடே கிடைக்காத ஏழையான கதை என்று பல உதாரணங்கள் உண்டே).

      நீங்களும் பலப் பல வருடங்கள் கோடிக்கணக்கான ரூபாய்கள் புடைசூழ நடுவில் நீங்கள் அமர்ந்து வேலை பார்த்தேன் என்று சொல்லியிருக்கீங்களே (அவைகள் உங்கள் பணமல்ல என்பதையும் சொல்லியிருக்கீங்க).

      நீக்கு
    6. @கோபு சார் - //காரசாரமான + சற்றே புளிப்பான, தொக்கு மாங்காய் ஊறுகாயை - A1 பச்சரிசி சாதத்தில்...// - ஆஹா படிக்கும்போதே எனக்கு எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. அந்தோ... அதைச் சாப்பிட்டு அனுபவிக்கும் வயது போய்விட்டதே..

      நீக்கு
    7. உங்கள் பின்னூட்டங்கள், நெடுநாள் காணாமல் போயிருந்த மிக்க அன்புக்குரியவரை மீண்டும் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

      மிக்க நன்றி கோபு சார். எப்போதும் வாருங்கள். உங்கள் தளத்தைத் தூசு தட்டுங்கள்.

      நீக்கு
    8. கீழே விழாமல், வெகு லாவகமாக, மாங்காய் பறிக்கும் துரட்டியில் ஓர் இன்னோவேஷன்.....
      டீ ஷர்ட்டுகளை அழகாக மடித்து வைப்பதில், அட்டை மூலம் ஓர் இன்னோவேஷன்..........

      சபாஷ் !

      எனக்கு மட்டும் இப்படியொரு மகள் இருந்திருந்தால் இதுபோன்ற இன்னோவேஷன்களுக்கு மட்டுமே
      அவளுக்கு நான் ஒரு புத்தம்புதிய ‘இன்னோவா’ கார் வாங்கி பரிசளித்திருப்பேனாக்கும். :)))))

      அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லையே ......... ஸ்வாமீ. :(

      நீக்கு
    9. அதுதானே இது கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓபு அண்ணன் தானோ?:).. எனக்குச் சொன்னாரே தான் எந்த புளொக்கும் பார்ப்பதுமில்லை.. படிப்பதுமில்லை என.. அப்போ சொன்னதத்தனையும் பொய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஆ?:) கோபு அண்ணன் சூப்பர் மாட்டீஈஈஈஈஈஈ..:) பூஸோ கொக்கோ:) கையும் களவுமாகப் பிடிச்சிட்டேனாக்கும்..க்கும்..க்கும்:)).. ஹா ஹா ஹா.. பயந்திடாதீங்கோ கோபு அண்ணன்.. ஸ்வாமி[உங்கள் முறையில:)] இன் போஸ்ட் க்காவது தலையைக் காட்டியிருக்கிறீங்களே மகிழ்ச்சி...

      நீக்கு
    10. அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நீங்களா?

      ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக இருந்தீர்களே!

      எப்போது ’ஞானி:) அதிரா’ ஆனீங்கோ.

      யாரும் என்னிடம் இதுபற்றி சொல்லவே இல்லையே :((((((

      வயது ஆக ஆக கடைசியில் ஞானம் ஏற்பட்டு ஞானி ஆவது மிகவும் நல்லதுதான்.

      ஸ்வீட் 16 என்ற அந்த மாயை மறைந்து, 61 ஆகிவிட்டாலும், எங்கட அதிரா ஞானி ஆகிவிட்டது கேட்க மிக்க மகிழ்ச்சி, ’ஞானி அதிரா’

      நீக்கு
    11. @நெ.தமிழன்
      ஆஹா படிக்கும்போதே எனக்கு எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. அந்தோ... அதைச் சாப்பிட்டு அனுபவிக்கும் வயது போய்விட்டதே.///

      ஆஆஆஆஆஆஆஆஅ பொயிண்ட்டூஊஊஊஉ பொயிண்டூஊஊஊஊஊஉ.. வயசாகிட்டுதாமே நெ.தமிழனுக்கு.. அஞ்சு ஒடியாந்து டயரியில நோட் பண்ணிடுங்கோ.. பின்பு டிஸ்கஸ் பண்ண உதவும் நமக்கு:)).. ஹா ஹா ஹா விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலையேஎ:).

      நீக்கு
    12. @கோபு அண்ணன்
      ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக இருந்தீர்களே!

      எப்போது ’ஞானி:) அதிரா’ ஆனீங்கோ.

      யாரும் என்னிடம் இதுபற்றி சொல்லவே இல்லையே :(((((( ///

      இதுக்குத்தான் கொமெண்ட்ஸ் போடாவிட்டாலும் ஒயுங்கா புளொக்ஸ் படிக்கோணும்.. முக்கியமா அதிராவின் குறிஞ்சிப் போஸ்ட்:) எல்லாம் படிக்கோணுமென்பது:)).. உங்களுக்கு இது எங்கே புரியப்போகுது:)).. பேசாமல் எங்கட ஆச்சிரமத்தில மெம்பர் ஆகிடுங்கோ:)..

      நீக்கு
    13. அதிரா.... பெண்கள் ஆசிரமத்தில் ஆண்களைச் சேர்க்க முயலாதீர்கள். அதுவும் 'கோபாலகிருஷ்ணனை'. வம்பை எதுக்கு விலைகொடுத்து வாங்குகிறீர்கள்? ஹாஹாஹா

      நீக்கு
    14. //இதுபோன்ற இன்னோவேஷன்களுக்கு மட்டுமே// - கோபு சார்... நீங்க அயலார்களை வெகுவாக சிலாகித்துப் பாராட்டும்போது சொந்தப் பெண்ணையும் பாராட்டியிருபீர்கள். ஒருவரின் குணம் என்பது உடன் பிறந்ததல்லவா? எனக்கு 'குறைகள் பளிச்' என்று தெரியும் சொல்லிடுவேன். நிறைகள் தெரிந்தாலும் மனதில் வைத்துக்கொள்வேன்.

      நீக்கு
    15. @அதிரா //எனக்குச் சொன்னாரே தான் எந்த புளொக்கும் பார்ப்பதுமில்லை..// - நீங்கதானே எல்லாருக்கும், அதுவும் எனக்கு அறிவுரை இங்கே சொல்லியிருக்கீங்க. கோபு சார், இடுகைகளைப் படித்து பின்னூட்டமிட்டால், பாராட்டுவதற்குப் பதில் அவரை எச்சரிக்கிறீர்களே... அப்புறம் எப்படி அவர் திரும்பவும் பின்னூட்டம் போட வருவார்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    மாங்காய் தொக்கு படங்களுடன் செய்முறைகளும் அமர்க்களமாக இருந்தது.
    தயிர்சாதத்திற்கு ஏற்ற மாங்காய் தொக்கு. இவையிரண்டுக்கும் பொருத்தம் மிகவும் அருமையாய் இருக்கும். சாப்பிட சாப்பிட மனது நிறையாது. ஆனால் தயிர் சாதம் செய்த அளவு குறைந்து விடும். ஹா ஹா

    தங்கள் மகளின் துரட்டி செய்முறை அறிமுகம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன். டீஷர்ட்கள் மடிக்கும் விதத்தையும் நல்ல முறையில் செய்திருக்கிறார். அவருக்கு எங்களது பாராட்டுகளை தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன். நான் நீங்கள் நெல்லையில் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். சமீபத்தில் உங்கள் இடுகையில் ஒரு பின்னூட்டத்தில் பெங்களூரில் இருப்பதாகப் படித்தேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? பெங்களூரா இல்லை எங்களூரா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /ஒரு பின்னூட்டத்தில் பெங்களூரில் இருப்பதாகப் படித்தேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? பெங்களூரா இல்லை எங்களூரா?/

      எங்களூர் என்றால், திருநெல்வேலி சீமையா? அதுவென்றால் நான் பிறந்து வளர்ந்ததும் உங்களூர்தான். பின் வாழ்க்கை பயணமாக ஊர் ஊராக வந்து தற்சமயம் பெங்களூர் முகாம். இன்னும் எத்தனை ஊர்கள் பயணமோ? நெல்லையப்பருக்கே வெளிச்சம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நன்றி கமலா ஹரிஹரன். எல்லோருக்கும் 'எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் செல்லும்' என்ற கதைதான்.

      நீக்கு
  31. முதல்ல உங்க பொண்ணுக்கு பாராட்டு மழை பொழியறேன். என்ன ஒரு காமன் சென்ஸ் அண்ட் லேட்டரல் திங்கிங்க்!!! செம செம!! வெர்ச்சுவலா ஒரு பூங்கொத்து கொடுக்கறேன் உங்க பொண்ணுக்கு...இங்க போய் எடுத்துக்கச் சொல்லுங்க...

    https://images-na.ssl-images-amazon.com/images/I/41mmLam29cL.jpg God bless her!!!

    நெல்லை சேம் மெத்தட் தான்....இதே இதே...

    செமையா செஞ்சுருக்கீங்க...பார்க்கவே சுவை அள்ளுது. மாங்கா தொக்கு சாதம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் எழுந்துவிட்டது. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றி கீதா ரங்கன். உங்கள் வருகை, 'காவிரியில் வரும் தண்ணீரைப் போல் இருக்கும்' என்று நினைத்தால், 'வைகையில் வரும் தண்ணீரைப் போல்' அபூர்வமாகிவிட்டது. நேரப் பற்றாக்குறையோ?

      இணையத்தில் வஞ்சகமில்லாமல் பிறரைப் பாராட்டும் குணம் உங்களுக்கு மிகவும் அதிகம். அதுக்கே பாராட்டுகள். வாலி சொல்வதுபோல், 'ஊக்கு விக்க ஊக்கு விக்க, ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்'. ஆனா இதை நான் ரொம்ப வருடங்களாக உணரவில்லை.

      உங்களிடமிருந்து ஸ்பெஷன் உணவு முறை வந்து நாளாயிடுச்சே....

      நீக்கு
  32. மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அசோகன் குப்புசாமி. அது ஒரு ஃப்ளோல சொல்லியிருப்பாங்க. கொஞ்சம் பல் ரிப்பேர் ஆனவங்கட்ட கேட்டா வேற மாதிரி சொல்லுவாங்க.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!