செவ்வாய், 4 செப்டம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : நதியின் ஓட்டம் - அனுராதா பிரேம்குமார்நதியின் ஓட்டம்...
அனுராதா பிரேம்குமார்தாத்தா...தாத்தா…எந்ததிரிங்க


எங்க உங்க பை... நீங்க இன்னும் எடுத்து வைக்கலையா…


தாத்தா...


நான் வரலடா.. நீங்க போயிட்டு வாங்க…

அப்பா அப்பா... இங்க பாருங்க இந்த தாத்தா வரலையாம்…


வர சொல்லுங்க அப்பான்னு செல்வி ஓடி போய் அவங்க அப்பா செல்வன்ட்ட சொன்னா…


செல்வன் வீட்டுக்குள்ள வந்து அவங்க அப்பா வேலுகிட்ட,


"என்ன அப்பா ..என்ன ஆச்சு..எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம்ன்னு தானே சொன்னோம்… நீங்க ஏன் வரல சொல்லறீங்க…"


"தோணலை டா .. நீங்க போயிட்டு வாங்க" ன்னு சொல்லிட்டு இருந்தார்..


அப்போ அங்க வந்த செல்வி அம்மா ராசாத்தி…


"மாமா என்னாச்சு? வாங்க... உங்களைய தனியா எல்லாம் விட்டு போக முடியாது…"


"உங்களுக்கு என்ன சிரமம்…"


"நாம வேன்ல தான் போறோம் தேவையானப்ப நிப்பாட்டிக்கலாம்... ஒண்ணும் கவலையில்ல.."


"அதுக்கு இல்லமா.. நீங்க சந்தோசமா போயிட்டு வாங்க. நான் வீட்டில் இருந்துகிறேன்…"


"வாங்க மாமா.. தனியா உங்களை மட்டும் இங்க விட்டுட்டு போய் எங்களாலும் நிம்மதியா இருக்க முடியாது…"


"ம்ம்ம்ம்... சரி மா... வரேன்…"

எல்லாரும் போறது கோவிலுக்கு குல தெய்வ பூஜை..


முன்னாடி எல்லாம் நான்தான்  முதலில் கிளம்புவேன்….


அதுவும் காவேரி கரையில் உள்ள எங்க அம்பாளை  பார்க்கணும்னா கசக்குமா என்ன ….


அந்த இடமும்... கோவிலும் அவ்ளோ அழகு. அதைப்பத்தி பேச ஆரம்பித்தால் அவ்ளோதான்…


நாள் முழுக்க கோவில் பெருமையை பேசிட்டே இருப்பேன்...

சின்ன வயசு நினைப்பு எல்லாம் அங்க போனா தானாவே கூடவரும்..

ஆனா இப்போ உடல் உபாதை வீட்டில் இருந்தால் போதும்ன்னு தோணுது….


என்ன பண்ண? வயசாகுதே...


இருப்பினும் பசங்களுக்காகன்னு கிளம்பியாச்சு…

கோவிலுக்கு போய் பொங்க வச்சு சாமி கும்பிட்டு.. எல்லாருக்கும் ஒரு மன நிறைவு..


அம்பாளின் தரிசனம்.. எப்பவும் அமைதி தரும் அல்லவா…

திரும்ப ஊருக்கு கிளம்ப ஆளுக்கு ஒரு வேலை பார்க்குறாங்க...


அப்போ நான் அங்க ஓடும் ஆத்தை பார்த்து உட்கார்ந்துட்டேன்…..
பேத்தி வந்து "தாத்தா என்னாச்சு?" னா….


"இல்ல மா பாரேன் இந்த ஆத்தை… எத போட்டாலும் எடுத்துக்கிட்டு….. எந்த சலனமும் இல்லாம ஓடுது…"


"நம்ம வாழ்கை போல…"


"தாத்தா! அப்போ நாமும் இந்த ஆறு போல எது நடந்தாலும் சலனம் இல்லாம போகனுமா…"


"அப்படி இல்லமா செல்லம்..


எங்களை போல வயசாகும் போது அது சரி தான் ...எல்லாத்தையும் ஏத்துகிட்டு சலனம் இல்லாம போகணும்…


ஆனா நீங்க சின்ன புள்ளைங்க  எல்லாம்..இந்த ஆத்துலேந்து நாம எப்படி வளைந்து கொடுத்து வாழணும்னு கத்துக்கணும்ம் டா.."


"அப்படியா தாத்தா.."


"ஆமா டா...தங்கம்…


ஆறு பாரு எல்லா இடத்திலேயும் சமமா ஓடுது...மேடு பள்ளம் பாக்கலை…


நல்லவங்க கெட்டவங்க பாக்கலை…


பாசக்காரன் மோசக்காரன் பாக்கலை…


அனைவரையும் சமம்மா பார்த்து…


விட்டு கொடுத்து ஓடுது…


அப்படி நீங்க இருக்கணும் டா…


எப்பவும் நிலையா.. நல்லவங்களா.."


"என்ன தாத்தா ... உங்களுக்கு மட்டும் சலனம் இல்லாம ன்னு சொன்னீங்க… எங்களுக்கு வேற சொல்லறீங்க…"


"அப்படி தான் டா... காலம் மாற மாற எல்லாம் மாறுது… நீங்க நல்லவங்களா வாழ பழகிட்டா வாழ்க்கையில் ஒரு நிம்மதி கூடவே வரும்..."

"சரி தாத்தா… நீங்க சொல்ற மாதரி யே இருக்கேன்" ன்னு சொல்லி செல்வி தாத்தாவை பார்த்து சிரித்தாள்…


அந்த நிமிஷம் தாத்தாவுக்கும் மனதில் ஒரு நிம்மதி...


திரும்பி அவர் ஆத்தை பார்க்கும் போது வழக்கம் போல் அவள் எந்த சலனமும் இல்லாமல்…


ஓடி கொண்டிருந்தாள்…


நம் வாழ்க்கை போல்...

47 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. காலை வணக்கம் பானு அக்கா. இன்று நீங்கள்தான் ஃபர்ஸ்ட்! துரை ஸாரைக் காணோம்!

   நீக்கு
 2. ரத்தின சுருக்கமாக சென்றது கதையின் நகர்வு.வாழ்த்துகள் அனுராதா மேடம்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. அனு, கதை அருமை.
  அதன் போக்கிலே போற ஆறு போல் வாழ்க்கை அருமை.
  காவிரி ஆறு மூலம் தாத்தா பேத்திக்கு சொல்லும் வாழ்வியல் சிந்தனை அருமை.
  வாழ்த்துக்கள் அனு.

  பதிலளிநீக்கு
 5. வாழ்க்கையில் ஆறு போல எல்லோரையும் சம்மாகக் கருதும் உணர்வு, வயதாகும்போது சலனமில்லா ஆறுபோல அமைதி- இரண்டையும் நன்றாக இணைத்திருக்பிறீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. இது எனது மூன்றாவது சிறுகதை..

  இந்த படத்திற்காக இங்கு பல பல அருமையான கதைகளை வாசித்த போது என் மனதில் தோன்றிய சிறிய சிந்தனை...

  பல உணர்ச்சி மிகு கதைகளின் நடுவே ஒரு சிறு முயற்சி..

  மிக்க நன்றி ஸ்ரீராம் சார் விடாமல் ஊக்கம் தந்தது எழுத தூண்டுவதற்கு..

  பதிலளிநீக்கு
 8. அருமையான கருத்துக்கள் உள்ள கதை... பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  மனதில் தோன்றிய பாடல் வரிகள் :-

  ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
  ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
  காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
  காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை

  அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
  அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

  அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும்
  அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தெளிந்துவிடும்
  அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
  அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி dd சார்..

   அழகான பாட்டுடன் வாழ்த்தியதற்கு..

   நீக்கு
 9. வணக்கம் சகோதரி

  அருமையான கதை. வாழ்வில் சிறு வயதிலிருந்து ஓடும் ஆறு போல வளைந்து தரும் பக்குவத்தை பேத்திக்கு கற்று கொடுப்பது மட்டுமில்லாமல், தன்னைப் போல் பெரியவர்கள் ஆற்றின் சலனமில்லா நீரோட்டத்தைப் போல வாழ வேண்டும் என்று உணர்ந்து, உணர்த்துவது வரை.. என கதையை மிக அற்புதமாக கையாண்டு எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகளுடன், வாழ்த்துகளும்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி....விரிவான கருத்திற்கும் வாழ்த்திற்கும்

   நீக்கு
 10. கருத்துள்ள கதை. கதாசிரியருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சலனமில்லாமல் ஓடிக்கொண்டே கொண்டே இருக்கும் நீரோட்டம்போலவே கருத்தைத் தெளிவாக உணர்த்திய கதை. பாராட்டுகள்.அன்புடன்

  பதிலளிநீக்கு
 12. தெளிந்த நீரோட்டம் போலவே தெளிந்த கருத்துள்ள கதை! சிக்கெனச் சுருக்கமாயும் இருக்கு. வாழ்த்துகள். என்ன இன்னிக்கு வழக்கமா வரும் யாரையுமே காணோம்? துரைக்கு வேலைப்பளுவா? உடல் நலக்குறைவா? ஶ்ரீராமும் அப்புறம் வரலை!

  பதிலளிநீக்கு
 13. அழகான கருத்தில் சிறிய கதை.சூப்பர் அனு.

  பதிலளிநீக்கு
 14. அப்பாடா...! இன்று தான் Facebook / WhatsApp போல் கருத்துரைகள் (!) இல்லாமல், வலைத்தளத்திற்கு உரிய மதிப்போடு - கச்சிதமாக - தெளிந்த நீரோடை போல் கருத்துரைகள் வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஸ்ரீராம் சார்... வாழ்க நலம்...!

  பதிலளிநீக்கு
 15. படத்துக்காக கதை அந்த வ்ரிசையில் தொடர்கிறது நல்ல முயற்சி

  பதிலளிநீக்கு
 16. அருமை.. அருமை...

  தெளிந்த நீரோட்டம் போல இனிமையான கதை..
  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 17. அது வந்துங்க...ண்ணா..

  நேத்து ராத்திரியோட நெட் நின்னு போச்சுங்க...

  இன்னிக்கு காலைல - வேலையில இருந்து திரும்பி வந்ததும்
  குளித்து முடித்து சமையலையும் முடித்து விட்டு 15 கி.மீ தொலைவிலுள்ள சிட்டிக்குச் சென்றால்
  அங்கே இணைய இணைப்புகளை எலி கடித்து விட்டதால் காலையில் இருந்தே இணைப்பு இல்லை..

  எனவே Re Charge செய்ய முடியாது என்று சொல்லி விட்டான்..
  அந்த வட்டாரம் முழுதுமே அப்படித்தான் இருந்தது...

  Re Charge செய்ய முடியாத வருத்தத்தில் வழக்கத்துக்கு மாறாக
  மூன்றாவது குறுக்குத் தெருவுக்குள் புகுந்து வந்தபோது - அங்கே ஒரு கடை...

  Re Charge செய்யப்படும் என்று!...

  கடந்த ஒருவருடமாக Re Charge செய்வதற்காக 15 கி.மீ., அலைந்த எனக்கு -
  பாலைவனப் பசுஞ்சோலை மாதிரி இருந்தது - அந்தக் கடை...

  இனிமேல் அடுத்த மாதத்திலிருந்து பிரச்னை இல்லை..ங்கண்ணா!

  அருகிலேயே கடை.. அலைச்சல் மிச்சம்...
  ஆகா!.. ஜாலி தான்!...

  பதிலளிநீக்கு
 18. துரையைக் காணோம்...ன்னு தேடுன
  அன்பு நெஞ்சங்களுக்கெல்லாம் மனமார்ந்த நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு அனு, தெளிவான,சலனமில்லாத கதை. இந்த ஒரு நிலைமை வரத்தான் எத்தனை பாடு பட வேண்டீ இருக்கு.

   தட்டுத் தடுமாறி மேலே ஏறிக் கீழே விழுந்து, கிடைத்த அழுக்கை எல்லாம் கடத்தி விட்டு, மலர்களை ஏந்திக் கொண்டு,
   நம்மைப் பக்குவப் படுத்தவே ஓடும் ஆறு.
   நளினமான கதை.
   மனம் நிறை வாழ்த்துகள் மா.

   நீக்கு
  2. நன்றி மா ..

   எப்பொழுதும் போல பாசமான வார்த்தைகளினால் வரும் கருத்து...மிக மகிழ்ச்சி மா

   நீக்கு
 19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. கருத்தும், நடையும் பிரமாதம்! இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமோ?பிரயாணத்தில் இருப்பதால் உடனே பின்னூட்டமிட முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நதியின் ஓட்டத்தை வைத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் தான் வந்தது..ஆனால் இன்னும் பெரிதாக எழுதினாலும் இதே கருத்து தான் அதனால் தான் சிறிதாகவே முடித்தேன்..

   கருத்திற்கு மிகவும் நன்றி ..

   நீக்கு
 22. காலை வணக்கம்.

  சிறு கதை - சிறப்பாக.... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 23. அனு சகோதரி கதை மிக நன்றாக இருக்கிறது. எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் எல்லோரும் நல்லவர்களாகவே நல்ல மனதுடன் ஆன கதாபாத்திரங்கள். தாத்தாவின் வரிகளில் அனுபவமும் அதனால் விளைந்த வாழ்க்கைத் தத்துவத்தையே கொண்டுவந்துவிட்டீர்கள். வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. ஹை அனு! வழக்கம் போல பாஸிட்டிவ் கதை. நன்றாக இருக்கு. ஷார்ட் அண்ட் ஸ்வீட். இன்னும் நிறைய எழுதணும் அனு நீங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!