சனி, 22 செப்டம்பர், 2018

என் பெயர் சுதர்சன். வயது 64 ..

1)  சாரணர் இயக்கத்தில் நான் இருந்ததால், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம், இயல்பிலேயே தோன்றியது. அந்த அனுபவங்களை வைத்து, இன்னும் சிறப்பான செயல்திட்டங்களுடன், நானும், மனைவியும் சேர்ந்து, 'போதி மரம்' எனும் முதியோர் இல்லத்தை துவங்கினோம்...  

சேலம் மாவட்டத்தில் உள்ள, 'போதி மரம்' சேவை இல்லத்தின் நிர்வாகி, ரமேஷ் குமார்.


2)  "......  எனக்கு கொஞ்சம் அரசியலில் ஈடுபாடு இருந்தது ஒரு பெரிய கட்சியின் உறுப்பினர் கார்டு கூட வைத்திருந்தேன் உள்ளூர் அமைச்சர் ஒருவரை நேரி்ல் பார்த்து எனது பட்டப்படிப்பிற்கு ஏற்ற ஒரு வேலை தருமாறு கேட்டேன் அவர் பிராமணராக இருப்பவர்களுக்கு உதவுவது இல்லை என்றார் அவர் முன்னாலேயே கட்சியின் உறுப்பினர் கார்டை கிழித்துப்போட்டுவி்ட்டு அரசியலுக்கும் முழுக்கு போட்டுவிட்டு திரும்பினேன்...."   


என் பெயர் சுதர்சன்....  வயது 64 ஆகிறது....
3)  சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராம மக்கள் மழை நீரை நான்கு கண்மாய்களில் சேமித்து நீர் மேலாண்மையில் முன்னோடியாக விளங்குகின்றனர். 


4)  புற்றுநோய்ச் சிகிச்சையில் ஒரு படி முன்னேற வழி கண்டு பிடித்திருக்கும் மதுரை மருத்துவர் செந்தில்குமார்.5)  சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, மழலையர் பள்ளியை கிராம இளைஞர்களே நடத்தி வருகின்றனர்.6)  மேலும், மின் கசிவு ஏற்பட்டால், கைத்தறி துணிகளில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடிவு செய்தேன். இது, வருங்காலத்தில் சமூகத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் என்றும் யோசித்தேன்; அதன் வெளிப்பாடே, இந்த கைத்தறி விசிறி....


மின்சாரம் இல்லாமல் இயங்கும், விசிறியை கண்டு பிடித்துள்ள, தினேஷ்.

34 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமையான செய்திகள். ஆட்டோ சாமி - உழைப்பில் இருக்கும் ஆனந்தம் வேறு எதில்.....

  பதிலளிநீக்கு
 2. நல்ல செய்திகள்...

  மின்சாரம் இல்லாத விசிறி வரும் என்றே நினைத்தேன்....

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மின்சாரம் இல்லாத விசிறி வரும் என்றே நினைத்தேன்...//

   விட்டுட்டேனா? அட முருகா!

   நீக்கு
  2. மின்சாரம் இல்லா மின் விசிறி வந்து விட்டதே இந்த பதிவில்

   நீக்கு
  3. வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அட முருகா...

   நீக்கு
  4. /வந்து விட்டதா? அதைக் கூட கவனிக்கவில்லையா நான்? அட முருகா../

   புரட்டாசி முதல் சனியன்று மாமனையும், மருமகனையும் ஒன்றிணைக்க செய்து விட வேண்டி தாங்கள் இயற்கை காற்றாக வந்த பதிவை கவனிக்கவில்லை போலும்.! ஹா ஹா ஹா ஹா.

   நீக்கு
 3. அனைவருக்கும் காலை வணக்கம்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  காலை எழுந்தவுடன் கண்ணில் பட்ட இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. தலைப்புகளே மனதை கவர்கின்றன. விரிவாக படித்த பின் மீண்டும் வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. 'போதி மரம்' சேவை இல்லத்தின் நிர்வாகி, ரமேஷ் குமார், மற்றும் அவருடன் பணியாற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  நாங்கூர் தலத்தில் ஆட்டோ ஓட்டும் சுதர்சன் அவர்கள் வாழ்க! மாதவபெருமாளுக்கு பிரசாதம் செய்யும் பணி கிடைத்து இருக்கே!
  பெருமாள் நல்ல நிலையை கொடுப்பார். (பெருமாளின் கையில் இருப்பவர் அல்லவா)

  சிவகங்கை மக்கள் கண்மாய்க்கு நீர் வரும் வழிகளை சரிசெய்து நீர் வரவழைத்து , மழைநீரை பாசனத்திற்கு சேமித்தது மகிழ்ச்சி. அவர்களுக்கு பாராட்டுக்கள். மற்ரவைகளை படித்து விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. தினேஷ் மற்றும் ரமேஷ் குமார் இவர்களின் தகவல்கள் புதிது... அனைவருக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 7. மருத்துவர் செல்வக்குமார், சிவகங்கை அருகே உள்ள கிராம இளைஞர்கள், மின்சாரம் இல்லா மின் விசிறி கண்டுபிடித்த தினேஷ் எல்லோருக்கும், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  அனைத்து நல்லசெய்திகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  "போதி மரம்" சேவை இல்லத்தின் சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியவர்கள.

  ஆட்டோ ஓட்டும் சுதசர்ன் அவர்களின் கதை நல்ல நேர்மையாக வாழ வேண்டுமென இருக்கும் அனைவருக்கும் ஒரு உதாரணம். அவருடைய உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

  இரண்டு சிவகங்கை செய்திகளும் சிறப்பானவை.. நீர் நிலைகளை காத்து பயனுள்ளதாக ஆக்கி வருபவர்களுக்கும், கல்விகள் தரம் உயருமாறு பள்ளியில் சீர்திருத்தம் செய்து வரும் இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்.

  புற்று நோய்க்கு மற்றொரு வழியில் தீர்வு கண்டு விருதுகள் பெற்ற மதுரை மருத்துவருக்கும், மின்சாரம் இல்லாத விசிறி அறிமுகபடுத்தியவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். அனைத்துச் செய்திகளுமே பாராட்டப்படக் கூடியவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. திரு.சுதர்சன் ஐயா போல் இன்றைய இளைஞர்கள் சிந்தித்து எழுந்தால் ???????

  நாடு முன்னேறும் நடிகன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.. ஹா..

   நடிகை நடிகையரை விட்டு விடுங்கள் கில்லர் ஜி!

   நீக்கு
  2. >>> நடிகை நடிகையரை விட்டு விடுங்கள் கில்லர் ஜி.. <<<

   போன ஜன்மத்துப் பகையா இருக்குமோ..ன்னு சந்தேகம்!...

   நீக்கு
 10. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய செய்திகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. அனைவரும் பாராட்ட வேண்டியவர்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. திருவாளர்கள் ரமேஷ், தினேஷ், சுதர்சன், செந்தில்குமார் நேர்மை, உழைப்புக்காகவும், நற்பணிக்காகவும் கவனம் ஈர்க்கிறார்கள். கூடவே வேப்பங்குளம் கிராமத்து மக்களும், மழலைப்பள்ளி நடத்தும் இளைஞர்களும் சமூகப்பணியை சிரமேற்கொண்டு செய்துவருவதும் மகிழ்ச்சி தருகிறது.

  தமிழ்நாட்டில் அரசியல் குப்பை, சினிமா நெடியும் (அபத்த சினிமாவைச் சொல்கிறேன்) சராசரி மனிதர்களை பாதிப்பதைத் தவிர்க்கமுடிந்தால் தமிழ்நாடு மகிழ்நாடாகிவிடும். ஆனால் அரசியல் வியாதிக்கு மருந்தில்லையே...!

  பதிலளிநீக்கு
 13. அனைத்தும் நல்முத்துக்கள். திரு சுதர்சன் போல் கும்பகோணத்திலும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் முரளி என்ற பெயரில் (ஐயர்) இருக்கிறார். முன்னெல்லாம் நாங்க கும்பகோணம் சென்று தங்கி ஊருக்குச் செல்கையில் அவரிடம் தொலைபேசியில் தெரிவிப்போம். இப்போல்லாம் பார்த்தே ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கேயும் ஸ்ரீரங்கத்தில் ஒரு மாத்வ மாமா இருக்கார்! எப்போவானும் வருவார். அவர் அதிகம் கோபுர வாசலிலேயே இருப்பதால் எங்களுக்குக் கிடைப்பது அரிது., ஒரு சில பெண்களும் இருக்கின்றனர். இன்னும் சொன்னால் வடக்கே உத்தரப்பிரதேசம் மதுராவில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பிரிஜ்பாசி பிராமணர்களே! அதே போல் டெல்லி, சண்டிகரில் பொதுக் கழிவறை சுத்தம் செய்பவர்களும் உத்தரப்பிரதேச பிராமணர்களே! இப்போ எங்களுக்குக் கருவிலி, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போகவும் பூம்பாறை போகவும் கார் ஓட்டியவரும் பிராமணரே! எனக்குத் தெரிந்து பல வருடங்களாகச் சிலர் இப்படியான வேலைகளில் இருந்து வருகின்றனர். சுமார் 20, 30 வருடங்களுக்கும் மேல்! நேர்மையாகச் சம்பாதித்தால் எந்த வேலையாக இருந்தால் என்ன? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திலும் பலர் உள்ளனர்.

  பதிலளிநீக்கு
 14. மின்சாரம் இல்லா விசிறியைக் கண்டு பிடித்த தினேஷுக்குப் பாராட்டுகள். கொடைக்கானலில் அப்படி ஒரு விசிறி இல்லையேனு வருத்தமா இருந்தது! (சிரிக்கிறவங்க சிரிக்கலாம்! நமக்குக் கயிலையிலேயே வேர்த்துக் கொட்டின உடம்பாக்கும்!)

  பதிலளிநீக்கு
 15. செந்தில்குமாரும், மழலையர் பள்ளியும் ஏற்கெனவே படிச்சேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. கண்மாயில் நீர் வரக்காரணமான சிவகங்கை வேப்பங்குளம்
  மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர் சுதர்சனுக்கும், மிசாரம் இல்லாத விசிறி
  கண்டுபிடித்த இளைஞருக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.
  போதி மரம் மேம்மேலும் வளரட்டும்.
  சிவகங்கைச் சிறார்களின் படிப்பு 12 ஆண்டுகளும் நல்லபடியாகத் தொடரவேண்டும்.
  புற்று நோய் மருத்துவருக்கு மனம் நிறை நன்றி.

  கரும்பாக இனிக்கும் பாசிடிவ் செய்திகளுக்கு மிக மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 17. நேர்மறை எண்ணங்கள் கொண்டோர் பற்றிய சிறப்பான தொகுப்பு இது.

  பதிலளிநீக்கு
 18. சிவகங்கைச் செய்திகள் சூப்பர். கண்மாயும் இளைஞர்கள் நடத்தும் பள்ளியும்...செம..

  சுதர்சன் ஆஹா போட வைக்கிறார். நல்ல உதாரணம். இந்த சுதர்ஸனைத்தான் துரை அண்ணா இன்றைய பதிவில் சொல்லியிருக்காரா!!!!

  புற்று நோய் சிகிச்சை போலஸ் ...அருமை. மருத்துவருக்கு வாழ்த்துகள். மகனிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும்..

  மின்சாரமில்லா விசிறி!!! தினேஷுக்கு வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!