வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வெள்ளி வீடியோ 180907 : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்


பெத்த மனம் பித்து என்றொரு படம்.  1973 இல் வெளியான இப்படத்தில் நாயகன் நாயகி முத்துராமன் - ஜெயா.முத்துராமன் என்றதும் ஒரு இடைவெளிக்குப் பின் வரத்தொடங்கி இருக்கும் ஏஞ்சல் சிரிக்கக்கூடும்!  ஆனால் பாட்டைக் கேட்டுப்பாருங்க ஏஞ்சல்...  

துரை ஸார் கண்டிப்பாக ரசிப்பார்.   கீதா அக்கா...  "நான் இந்தப் படம் பார்க்கவில்லை" என்பீர்கள்.  நானும் பார்க்கவில்லை!

வி. குமார் இசையில் பூவை செங்குட்டுவன் பாடலை டி எம் எஸ்ஸும், பி சுசீலாவும் பாடி இருக்கிறார்கள்.பாடலைக் கேட்கும்போதே காட்சி அமைந்திருக்கக் கூடிய பின்னணி புரியும் பாடல்.  வி குமார் இனிமையாக இசை அமைத்திருக்கிறார்.

காலம் நமக்குத் தோழன் 
காற்றும் மழையும் நண்பன் 
பொன்னூஞ்சல் இல்லை 
பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே 

பொன்னூஞ்சல்தானே தாயின் மனம் 
பூ மெத்தைதானே தந்தை மனம் 
ஆராரோ பாடும் பாடும் அன்பான நெஞ்சம் 
கண்ணே நீ துயிலும் மஞ்சமடா..  மஞ்சமடா...

செல்ல மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் 
ஏழையுடன் வந்தாளடா..
ஸ்ரீராமன் அடிதொட்டு பின்செல்லும் சீதைக்கு 
பெருமைகள் வேறேதடா..
பெத்த மனம் பித்தாக பேதை மனம் கல்லாக 
தன் சொந்தம் வெறுத்தாளடா 
தந்தை மனம் தவித்திருக்க பரமனுடன் துணை நின்ற 
பார்வதியும் பெண்தானடா 


தனிமரமாய் நின்றவனைத் தழுவுகின்ற பூங்கொடியாள் 
சுகமென்ன கண்டாளடா 
கொடியுண்டு மரமுண்டு 
குழந்தையெனும் கனியுண்டு குறையென்ன கண்டேனடா 
உனதன்னை துயர்தன்னை நான் தீர்க்கும் முன்னாலே 
உன்கவலை கொண்டேனடா 
கண்ணனாக நீயிருக்க மன்னனாக அவரிருக்க 
கவலைகள் எனக்கேதடா 74 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் அண்ணாக்கள், அக்க்காக்கள், நட்புகள் அனைவருக்கும்..
  வெள்ளி பாடல் கேட்க வந்தாச்சு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பியை விட்டுவிட்டீர்களே கீதா ரங்கன்...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா நெல்லைத் தம்பி அதை ஏன் கேக்கறீங்க நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சின்ன பாப்பான்னே நினைப்பா.....(நீங்களும் அண்ணன்னே என் மனசுல நினைப்பு) அதான் ஹிஹிஹிஹி....

   கீதா

   நீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. வி. குமார் இசையில் பூவை செங்குட்டுவன் பாடலை//

  இதெல்லாம் புதிய தகவல்கள் எனக்கு ஸ்ரீராம்...

  அருமையான பாடல் இசை. இலங்கை வானொலி இருந்தவரை நிறைய கேட்டதுண்டு...பொதுவாக மதிய வேளையில் வரும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் அவ்வப்போ தேடி எடுக்கற செய்திதான் கீதா....

   நீக்கு
 4. வரிகள் அருமை ஸ்ரீராம்....அழகான ராகம்....பாடிப் பார்த்துக் கொண்டிருக்கேன்...முடிந்தால் இப்ப சொல்லறேன் இல்லைனா மதியம் தான்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்... வந்து சொல்லுங்க. காத்திருக்கிறேன் கீதா.​

   நீக்கு
 5. அதானே!...

  இப்படிப்பட்ட பாடல்களை ரசிப்பதே சுகம் அல்லவா!...

  ஆனாலும் ஸ்ரீராம் அவர்களிடம் தனிப்பட்ட விருப்பம் ஒன்று சொல்ல வேண்டும் -

  அது மின்னஞ்சலில்!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுகமான ராகம். நன்றி துரை ஸார்.

   மின்னஞ்சலுக்காகக் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 6. காலம் நமக்குத் தோழன்
  காற்றும் மழையும் நண்பன்
  வாழ்வில் சந்திக்கும் உறவுகள்
  உள்ளத்தில் வாழும் என்பேன்!

  சிறந்த பகிர்வு

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  இந்த வாரம் நல்ல பாடல். நானும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். முத்துராமன் நடிப்பும் மிகவும் நன்றாக இருக்கும்.பாட்டின் வரிகளும் நன்றாக இருக்கின்றன. இந்த படத்திற்கு இசை யார் அமைத்தது என தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மற்றொரு தடவை தங்கள் பதிவினால் பாடலை கேட்க வைத்தமைக்கு மிகவும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா.

   உங்கள் தளத்தில் ஒரு அருமையான கதை இன்று வாசித்தேன். உணர்வுபூர்வமான கதை.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   என் தளம் வந்து கதையை வாசித்து நல்லதொரு கருத்துக்கள் கூறியமைக்கு என் நிறைந்த நன்றிகள். இது 76 ல் எழுதியது. திருத்தங்கள் ஏதும் செய்யவில்லை. எனினும் தங்களின் பாராட்டுக்கு நன்றி.

   நீக்கு
 8. பாடல் வரிகள் அருமை...

  காட்சிகளை பார்க்கும் போது (கிட்டத்தட்ட வீடு ஒரே மாதிரி உள்ளதாலோ ?), 'துலாபாரம்' படத்தில் வரும் கீழுள்ள பாடல் மனதில் ஓடியது...!

  பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
  பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே...
  பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
  ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   எனக்கும் இந்த படமும் (தூலபாரம்) இந்த பாடலுந்தான் நினைவுக்கு வந்தது. இதுவும் அடிக்கடி கேட்டு கண் கலங்கியுள்ளேன். ஏழ்மையின் நிலையை மனதில் இருத்தி விட்டு செல்லும் பாடல்கள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. ஆமாம் DD.. எனக்குமே அந்தப் பாடல் நினைவுக்கு வரும்தான்.

   நீக்கு
 9. பலமுறை கேட்டு ரசித்த பாடல் டி.எம்.எஸ்ஸின் உச்சரிப்புக்காகவே கேட்கலாம்.

  இப்பாடலை பூவை செங்குட்டுவன் எழுதியது எனக்கு புதிய விடயம்.

  இவரை வளரவிடவில்லை சிலர் நல்ல பாடலாசிரியர்.

  பதிலளிநீக்கு
 10. எங்கள் ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 11. முத்துராமன் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல அவர் சிறந்த கால்பந்தாட்ட வீரரும் கூட

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... முத்துராமன் கால்பந்தாட்ட வீரரா? புதிய தகவல். நன்றி நண்பர் குத்தூசி.

   நீக்கு
 12. அனைவருக்கும் காலை வணக்கம்.....

  1973 - நான் பிறந்து இரு வருடங்கள் ஆன போது வந்த படம் - பார்த்திருக்க வாய்ப்பில்லை. பாடலும் கேட்ட மாதிரி இல்லை. இப்போது தான் கேட்டுக் கொண்டிருக்கேன்.

  தேடித் தேடிப் பாடல்களை கேட்கத் தரும் உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

  இப்போது தான் வரமுடிந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. நீங்கள் பிறந்து இரண்டே வருடங்கள்தான் ஆனதா அப்போது? பாடல் எப்படி இருந்தது வெங்கட்?

   நீக்கு
 13. எப்படியும் வெள்ளி பாடலுக்கு தேடி எடுக்கும் ஆர்வம் ரசிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 14. நல்ல பாடல். அந்த சமயத்தில் கல்லாரி மாணவர்கள் ஹிந்தி பாடல்களை விரும்பி கேட்டுக் கொண்டிருந்தார்கள். மிக சொற்பமான தமிழ் பாடல்கள்தான் நன்றாக இருக்கும். அவற்றுள் இதுவும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பானு அக்கா. ஹிந்திப் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை தமிழ்ப்பாடல்கள் பக்கம் அப்போது திருப்பியவர் இளையராஜா. நான் ஹிந்தியையும் விடவில்லை!!

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 16. அருமையான பாடல்.
  படம் பார்த்து இருக்கிறேன்.
  பணக்காரப்பெண் ஏழையை காதலித்து திருமணம் செய்து கொள்வது.
  வீட்டை எதிர்த்து தன்னுடன் வந்தவளும், குழந்தையும் கஷ்டபடுவதை நினைத்து வருந்தி பாடுவார் முத்துராமன்.
  மீண்டும் கேட்டு மகிழ்ந்தேன்.
  பழைய பாடல் தொகுப்பில் வைக்கிறார்கள். (தேன்கிண்ணம், தேன் அமுது இசையமுது, என்றும் இனிமை )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் பார்த்திருக்கிறீர்களா? பாடல் இனிமையான பாடல்.

   நீக்கு
 17. இனிய பாடல் ரசித்து மகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 18. / முத்துராமன் என்றதும் ஒரு இடைவெளிக்குப் பின் வரத்தொடங்கி இருக்கும் ஏஞ்சல் சிரிக்கக்கூடும்! //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) ஒரு செகண்ட் திரும்பி ஆடு மேய்க்க போயிறலாமான்னுதான் நெனச்சேன் :)
  சரி இருங்க பாட்டை கேட்டுபார்த்திட்டு வரேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... ஏஞ்சல்.. ஏற்கெனவே உங்களுக்கு முத்துராமன், சிவகுமார் என்றால் அலர்ஜி!

   நீக்கு
  2. ஹாஹாஆ :) ஜெய் அங்கிள் கூட தான் :)
   எங்க சித்தப்பா மாதிரி வருமா என்ன இருந்தாலும் :) இதை 1000 முறை வாசிக்கவும்
   இதோ இந்த ஹீரோயின் சிவகுமார் சித்தப்பா நடித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி எனக்கு ரொம்ப பிடிக்கும்

   நீக்கு
  3. ஓ... ஹீரோயின் சுபாவா? எனக்கு யாரென்று தெரியவில்லை!

   நீக்கு
  4. பேர்லாம் தெரில :) சும்மா face பார்த்த நினைவு

   நீக்கு
 19. ஹிஹிஹிஹி, இஃகி, இஃகி, இஃகி, இந்தப் படம் பார்த்திருக்கேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய லண்டன் காலை திருச்சி மதிய வணக்கம்ஸ் கீதாக்கா

   நீக்கு
  2. ஆ.... கீதாக்கா... நீங்கள் படம் பார்த்து விட்டீர்களா? ஆ...

   நீக்கு
  3. வாங்க ஏஞ்சல், எப்போ வருவீங்க?

   நீக்கு
  4. வந்திட்டேன்க்கா ..ஆனா கொஞ்சம் ஜெட் லாக் மாதிரி இருக்கு ..எப்படியும் பிளேனை விட்டு இறங்கித்தான் ஆகணும் :)
   மைண்ட் 100% ஸ்டேபிள் ஆனதும் என் பக்கம் பதிவு வரும் அது வரைக்கும் எல்லார் வீட்டுக்கும் விசிட்டிங் :)
   க்ளூட்டன் ப்ரீ ஸ்னாக்ஸ் செஞ்சி வைங்க

   நீக்கு
 20. கிட்டத்தட்டப் பணமா, பாசமா கதைக்கரு! அதிலும் பணக்கார ஜரோஜா தேவி, ஏழை ஜெமினியைக் காதலிப்பார். இதிலும் அப்படியே!அப்போல்லாம் இம்மாதிரிக் கதைகள் தான் நிறைய வரும்! முத்துராமன் பிடித்த நடிகர்களுள் ஒருத்தர். ஆனால் நான் இந்த வாரம் எம்கேடி பாட்டைப் போடுவீர்கள்னு நினைச்சேன்! உங்களுக்குப் பிடிச்ச ராகங்கள் அவரோட பாடல்களில் கிடைக்குமே! :P:P:P:P

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதை வைத்து எம் கே டி பாடல் போடுவேன் என்று நினைத்தீர்கள்?

   நீக்கு
  2. இஃகி, இஃகி, அவர் தானே இளைய ஹீரோக்களில் முன்னணி வகிப்பவர்! அதான்! :)))))

   நீக்கு
  3. இப்போ நான் கிர்ர்ர்ர்ர் சொல்லணுமா, ஸ்மைலி போடணுமா, புன்னகைக்கணுமா?!!!!

   நீக்கு
 21. பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் :)
  பயந்த அளவு முத்து அங்கிள் எக்ஸ்பிரெஷன்ஸ் காட்டலை :))
  ஆரம்ப இசை செம ..ஆனா எல்லாத்திலயும் டாப் அந்த சுட்டி குட்டி பாப்பா !! செம ஸ்வீட் .கருப்பு மை போட்டு வச்சி கியூட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல்... முத்துராமன், குட்டி பாப்பாவை எல்லாம் விடுங்க... காட்சியை விடுங்க... கானம் எப்படி? டி எம் எஸ் குரல், பி சுசீலா குரல், இசை எப்படி?!

   நீக்கு
  2. கானம் காதுக்கு இனிமை இரைச்சலில்லா இசை டி எம் எஸ் ,சுசீலா குரல் குழைகிறது தேனாய்

   நீக்கு
  3. ஶ்ரீராம், என்ன இருந்தாலும் டி.எம்.எஸ். குரல் முத்துராமனுக்குப் பொருந்தவில்லை! இன்னொரு படத்தில் (தபால்காரன் தங்கை?) சீர்காழி முத்துராமனுக்குக் குரல் கொடுத்திருப்பார்! அதுவும் பொருந்தாமல் தான் இருக்கும். முத்துராமனுக்கு ஏற்ற குரல் எனில் பிபிஎஸ் மட்டுமே! சுசீலா ஓகே!

   நீக்கு
  4. ஜெமினிக்கு பிபிஎஸ் ஓகே... முத்துராமனுக்கு யார் குரல் பொருத்தம் என்று சொல்ல முடியவில்லை!

   நீக்கு
  5. நிச்சயமா டிஎம்.எஸ் இல்லை.

   நீக்கு
  6. //முத்துராமனுக்கு ஏற்ற குரல் எனில் பிபிஎஸ் மட்டுமே!// - கீசா மேடம்... இப்போவாவது ஒத்துக்கிறீங்களா? பெண்களுக்கு வெரைட்டியே கிடையாது (குரல்). யார் பாடினாலும் ஒரே மாதிரி இருக்கும். ஆண்களுக்கு ஒவ்வொருவருக்கும் பெர்சனாலிட்டிக்கு ஏத்த மாதிரி வெவ்வேறு குரல் தேவைப்படுது, நல்லா ரசிக்க. அதுனாலதான் ஆண்கள்னா ஒரு கெத்து. ஹாஹாஹா

   நீக்கு
  7. ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல் அதே அதே சபாபதே!!!!

   டி எம் எஸ் குரல் முத்துராமனுக்குப் பொருந்தவில்லை என்பதோடு எனக்கு இந்தப் பாடல் வரிகளைப் பார்த்ததும் ஏனோ நம்ம பிபிஎஸ் குரல்தான் நினைவுக்கு வரும் இன்றும் அதே வந்தது. அப்புறம்தான் ஸ்ரீராம் பதிவில் சொல்லியிருந்ததைப் பார்த்ததும் ஆமாம் ல இது டி எம் எஸ் பாடல்னு .

   செம வாய்ஸ் சுசீலா வாய்ஸும்...

   கீதா

   நீக்கு
  8. ஏஞ்சல் எப்படி இருக்கீங்க!? ரொம்ப நாளாச்சு...ஜெஸி கருவாண்டி, மல்டி எல்லாம் எப்படி இருக்காங்க...

   கீதா

   நீக்கு
  9. i am good geetha .hope you are doing well .jessie and multi are fine ,karuvandi and his sis are still on holidays with their mom :)

   நீக்கு
  10. ஹ்ம்ஹூ எல்லா ஹீரோயின்ஸுக்கும் ஒரே வாய்ஸ் சரிவரல்லன்னு தோணுது

   இந்த லிங்க் பாட்டை பாருங்க அதே சிங்கர் தான் ராதா ஆன்ட்டி பொண்ணுக்கு ஒரு படத்தில் பின்னணி பாடினாங்க ஆனா இந்த படத்தில் பார்வதிக்கு செமையா சூட் ஆகுது .

   https://www.youtube.com/watch?v=naUh1vpq64o

   நீக்கு
 22. நேத்திக்குப் பதிவில் வாலி படக்கதைக்கும் ஆகிர் க்யோன் கதைக்கருவும் மைத்துனியைக் காதலிப்பதில் ஒரே மாதிரி எனச் சொல்ல இருந்தேன். ஆனால் வாலியில் தம்பி மனைவி! :)))) அப்புறமாத் தான் புரிஞ்சது! அங்கே கொடுக்க வேண்டிய பதிலை இங்கே கொடுத்துட்டேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... இங்க படிச்சாலும் அங்க படிச்சாலும் தளம் ஒண்ணுதானே!!

   நீக்கு
 23. நல்ல பாடல் ஸ்ரீராம் ஜி. நிறைய கேட்டதுண்டு. பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சில நினைவுகள்...தமிழ்நாட்டு நினைவுகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. பாடலின் முதலிரண்டு வரிகளை பலமுறை கேட்ட ஞாபகம் இருக்கு. முழுப் பாடலும் இப்போதான் கேட்டேன். பாவம்.... டிஎம்.எஸ் குரல் இந்தப் பாடலுக்கு, முத்துராமனுக்குப் பொருத்தமாக இல்லை.

  பதிலளிநீக்கு
 25. நான் ரசித்த பாடல்களில் ஒன்றினை தற்போது உங்கள் மூலமாகக் கண்டேன், கேட்டேன், நன்றி.

  பதிலளிநீக்கு
 26. நன்றாக நினைவிருக்கிறது இந்தப் படம். சாவித்திரியின்
  நடிப்பு அசத்தும். அப்பொழுதே ஓய்ந்து போன தோற்றம். மேஜர் சுந்தரராஜன் கண்டிப்பான அப்பா.
  இந்தப் பாட்டின் மூழுக்காட்சியிலும் அந்தக் குழந்தை நனையாமல் இருக்க வேண்டுமே என்று நான் தவித்தது நினைவுக்கு வருகிறது. பாந்தமாக நடித்திருப்பார் முத்துராமன். ஜெயாவும் கூட. ரசித்துப் பார்த்த படம் பாட்டு .மிக நன்றி ஸ்ரீராம்.

  jeya is mrs. Gukanathan.

  பதிலளிநீக்கு
 27. எனக்குப் பிடித்த பழைய பாடல். நினைவு நின்ற பாடல்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!