செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : மேலூர், மேலாளர் மேகநாதன் - கில்லர்ஜி


மேகலா ஓர் தீர்மானத்துடன் நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும் பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம் வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன் பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,

அவன் நேர்மை நியாயம் தர்மம் என்று சிந்தாந்தம் பேசிக்கொண்டே திருணமாகி ஆறு வருடமாகியும் குடும்பத்தின் உயர்வு சிந்தனை இன்றி அலுவலகமே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் வலியக்க தரும் பணத்தைக்கூட கொடுப்பவனை அவமானப்படுத்தி விரட்டி விடுபவன் மகனை நல்ல ஸ்கூலில் சேர்க்க வேண்டும் வருமானம் போதவில்லை நமக்காக வாழ்ந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து விட்டார் இனி நமக்கென்று யாருமில்லை கணவனையும், மகனையும் தவிர சொந்த பந்தங்கள் ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்கள் நம்மை நாமே தீர்மானிப்போம்.

பாவனாவை அலுவலகத்தில் அப்படியும், இப்படியும்தான் பேசுகின்றார்கள் அதனால் அவளது வாழ்க்கைத்தரம் தாழ்ந்து விட்டதா ? மாறாக உயர்ந்து கொண்டுதான் போகின்றது எவ்வளவு தைரியமாக மேலாளரின் காரில் ஏறிப்போகின்றாள் அவளது கணவனுக்கு தெரியாதா ? தெரியும் என்றுதானே அலுவலகத்தில் பேசுகின்றார்கள் அப்படியானால் அவளுக்கு கணவன் மீது பயம் இல்லையா ? அப்படியானால் நாம் மட்டும் கணவனுக்கு பயப்பட வேண்டுமா ?

வாழ்க்கைக்கு வருமானம் போதவில்லை பிறகு எப்படித்தான் வாழ்க்கையை கடத்துவது யார்தான் யோக்கியமாக வாழ்கின்றார்கள் நாம் இப்படி வாழ்வதால் சென்னையில் கண்ணகி சிலைக்கு பக்கத்தில் நமக்கும் சிலை வைக்கப் போகின்றார்களா ? இல்லையே இன்னும் சொல்லப் போனால் இனிமேல் அந்த மாதிரி வாழ்பவர்களுக்குத்தான் சிலை வைப்பார்கள் இன்றைய சமூகம் இப்படிப்பட்டவர்களைத்தானே துதிக்கின்றது.

குஷ்புவுக்கு கோயிலே கட்டினார்களே... அப்படியானால் எப்படியும் வாழலாம் என்றுதானே அர்த்தம் இதனால் சுந்தர். சி. யை யாரும் மதிக்காமல் இருக்கின்றார்களா ? போனவாரம் அவருடையை பேட்டியை டி.வி.யில் பார்த்தோமே கல்லூரிப் பெண்கள் அவரை இப்பொழுதும்கூட இஷ்டப்படுவதாக சொன்னார்களே... பொதுவில் இப்படிச் சொல்வதற்கு அவர்கள் தயக்கமோ, வெட்கமோ படவில்லையே இதையெல்லாம் அவர்களின் பெற்றோர்களும் பார்க்கத்தானே செய்வார்கள் இவர்களையும் நாளை ஒருவன் திருமணம் செய்யத்தானே போகின்றான்.

நம்ம அண்ணாச்சி ஆர்.கே.செல்வமணி இவருக்கும் மதிப்பு இருக்கத்தானே செய்கின்றது ரோஜா இப்பவும்கூட டி.வி ப்ரோக்ராமில் கே.பாக்கியராஜை கட்டிப்பிடித்து ஆடினாரே.... இதெல்லாம் பூர்ணிமாவுக்கு தெரியாதா ? தெரியும் தெரியாதது போல் நடிக்கின்றார்கள் எல்லோருமே நடிகர்-நடிகைகள்தானே இவர்களெல்லாம் இப்படி உலகறிய வாழும் போது நாம் மேலூர் என்ற சிறிய வட்டத்துக்குள்தானே வாழ்கிறோம் யாருக்கு தெரியப்போகிறது ?

பாவனா இப்படி இருப்பது உலகுக்கு தெரியுமா ? அலுவலகத்தில் இருக்கும் சுமார் முப்பது பேர்களுக்கு தெரியும் இப்பொழுது பாவனா அலுவலகத்தில் யாரையும் மதிப்பதில்லை பியூன் பிரசாத்கூட சொன்ன மறுநொடியில் காஃபி வாங்கி வந்து கொடுக்கின்றான் நாம் மூன்றுமுறை அழைத்து நாலாவது தடவையாக அழைத்த பிறகுதான் என்ன ? என்று சவடாலாக கேட்கின்றான் இதற்கெல்லாம் காரணம் என்ன ? மேலாளருடன் நெருக்கம்தானே...

உண்மையிலேயே அவள் புதுமையானவள்தான் ஒரே வருடத்தில் அலுவலகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விட்டாளே அதனால்தான் எல்லோரும் ரகசியமாக தலைவி என்கின்றார்களோ ? நாமும் அவளைப்போல் புரட்சி செய்தால் நம்மையும் தலைவி என்று சொல்வார்களே அது நமது காதுக்கும் வந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் நமக்கென்ன அழகு இல்லையா ?

மதுரை கோல்மால் கல்லூரியில் படிக்கும் பொழுது எத்தனை பேர் நமக்கு லட்டர் கொடுத்தார்கள் காரணமென்ன ?  நமது அழகுதானே... ஏன் வலைப்பதிவர் கில்லர்ஜிகூட லட்டர் கொடுத்தாரே... நாம் யாருக்கும் மசியவில்லையே.... கடைசிவரை நமது நினைவாகத்தானே இரண்டாவது திருமணம்கூட செய்யாமல் வாழ்கின்றார் போதும் போதும் பொறுத்தது போதும் இனி நமது மனதில் மாற்றம் வாழ்வில் ஏற்றமே...

இன்றே அலுவலகம் போனதும் மேலாளரை சந்திக்கின்றோம் நாம் சிரித்தால் போதுமே அவருக்கு புரிந்து விடும் பாவனாவை ஓரம் கட்டி விடலாம் மேகலா ஓர் தீர்மானத்துடன் கணவன் முகுந்தனை அலுவலகத்துக்கும், மகனை ஸ்கூலுக்கும் அனுப்பி விட்டு வழக்கத்தைவிட சற்று கூடுதலாக ஒப்பனை செய்து கொண்டாள் பெர்ஃப்யூம் சற்று கூடதலாக அடித்தாள் ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் இறங்கினாள்.
 
வழக்கம்போல் நகரப் பேருந்திலிருந்து இறங்கி சற்று தொலைவில் இருக்கும் அலுவலகம் நோக்கி நடந்தாள் சாலையைக் கடக்கும் பொழுது தன்னுடன் ஒரு வயதான அம்மாள் தனது கால் ஊனமான கணவரை தட்டு வண்டியில் இழுத்துக் கொண்டு கடந்தார் மேகலாவுக்கு அவர்களைக் கண்டதும் மனம் பாரமாகி விட்டது கிழவி நல்ல சிவப்பு இளவயதில் நல்ல அழகானவளாக இருந்திருக்க வேண்டும் முகத்தைப் பார்த்தாளே தெரிகின்றது மரத்தடி நிழலில் நின்ற அந்த தம்பதிகளிடம் கேட்டாள்.


ஏம்மா உங்க பிள்ளைகள் எங்கே இருக்காங்க ?
எங்களுக்கு பிள்ளை இல்லம்மா தெய்வம் எங்களுக்கு அந்த பாக்கியத்தை கொடுக்கலை.
இவருக்கு கால் எப்படி ஊனமாச்சு ?
இவரும் நல்லாத்தான்மா இருந்தாரு... இது நேர்மைக்கு கிடைச்ச பரிசு.
புரியலையே.... எப்படி ?
இவரு ஈ.பி.ஆபீசுல வேலை பார்த்தாருமா... ஒரு கம்பெனிக்காரன் கரண்டை திருட்டுத்தனமா போஸ்ட்லருந்து எடுத்தான் அதை தடுத்தாரு.. அவன் எவ்வளவோ லஞ்சம் கொடுத்துப் பார்த்தான் இவரு மசியவே இல்லை மேலிடத்துக்கு புகார் கொடுத்துட்டாரு அவன் கோபத்துல ஆள் வச்சு காரை விட்டு ஏற்றி காலை ஒடிச்சுட்டான் அதுக்குப் பிறகு இருக்கிற வீட்டை வித்து இவரைக் காப்பாற்றுனேன் எல்லாம் இழந்துட்டு இப்போ இவருக்காக வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் என்னை மகாராணியாட்டம் வைச்சு இருந்தாரு நான் இவரை இப்படித்தான் வைச்சு இருக்க முடியுது இன்னும் எவ்வளவு காலமோ இவரு செய்த புண்ணியத்துல ஏதோ கிடைக்கிற தர்மத்தை வச்சு காலத்தை ஓட்டுறேன் இவரு காலை ஒடிச்சவன் இப்போ மந்திரி ஆயிட்டான் யாருகிட்டே போய் நியாயம் கேட்க ? இதுதான் உலகம்.

கேட்டுக் கொண்டே இருந்த மேகலாவுக்கு கண்ணீர் வந்து விடும்போல் இருந்தது சட்டென பர்ஸை திறந்து இருபது ரூபாயை எடுத்து அந்த அம்மாளிடம் கொடுக்க அந்த வாங்கி கொண்டதும் கைகூப்பி...
நீ மகராசியா வாழணும் தாயி....
என்று சொல்லி தனது ஆசைக் கணவனை இழுத்துக் கொண்டு கடந்தார்.

ச்சே எவ்வளவு கீழ்தரமாக நாம் தப்புக்கணக்கு போட்டு விட்டோம் ஊனமுற்ற கணவனுக்காக, தனக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியாத கணவனுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்யும் இந்தக்கிழவி எங்கே ? நாம் எங்கே ? இந்தக்கிழவி நினைத்திருந்தால் அன்றே இவரைக் கழட்டி விட்டு எப்படியோ வாழ்ந்திருக்கலாமே அதற்கு இந்த சமூகத்தில் எவ்வளவு பேர் தயாராக இருக்கின்றார்கள் மேலாளர் மேகநாதன் போல் நமது கணவன் நமக்கு என்ன குறை வைத்தார்
சோறு போடவில்லையா ?
நல்ல உடை வாங்கித் தரவில்லையா ?
பொக்கிஷமாக நமக்கு ஓர் மகனைத் தரவில்லையா ?
அவரா நம்மை வேலைக்கு போகச் சொன்னார் ?
நாம்தானே வேலைக்கு போனால் ஆடம்பரமாக வாழலாம் என்று அவரையும் மீறிச் செல்கிறோம் அவர் தினமும் சொல்கின்றாரே... வேலைக்கு போய் நீ கஷ்டப்பட வேண்டாம் என்று நாம் கேட்டோமா ?

தன்னைத்தானே நொந்து கொண்டாள் போதும் போதும் இன்றே அவரிடம் சொல்லி விட்டு நாளையே வேலையை நிறுத்திக் கொள்வோம் நமது மகனுக்கு நல்ல கல்வியை கொடுக்க நாம் உதவியாக இருப்போம் இப்பொழுதே அவருக்கு அலைபேசியில் சொல்வோமா ? வேண்டாம் மாலையில் நம் அன்புக் கணவர் வீட்டுக்குள் வந்ததும் பின்புறமாக அவரைக் கட்டிப்பிடித்து நமது சந்தோஷத்தை சொல்வோம்.

உடன் செல்லில் தனது அலுவலகத்தின் ரிஷப்பனுக்கு அழைத்து இன்று நான் வரமுடியாது என்று சொல்லி விட்டு நேராக மீன் கடைக்கு சென்றாள் முகுந்தனுக்கு பிடித்த அயிரை மீன் வாங்கினாள். மீண்டும் பேருந்து நிறுத்தம் வர அம்மா மதுரை மல்லிகைப்பூ வாங்கிக்கங்கம்மா என்று சொன்ன மீசைக்கார பெரியவரிடம் மூன்று முழம் வாங்கினாள் வீட்டுக்கு வந்தவள் மீனையும், பூவையும் வைத்து விட்டு நேராக குளியலறைக்கு சென்று உடைகளை களையாமல் அப்படியே வெகுநேரம் குளித்தாள்.

ஒப்பனைகளோடு அவளது மனதில் தேங்கிய அழுக்குகளும் கரைந்து தூம்பின் வழியாக வெளியே ஓடியது.


அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி

112 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. கதையை வெளியிட்டு 'என்னையும்' பிரபலப்படுத்தும் ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு நன்றிகள் பல...

   நீக்கு
  2. >>> 'என்னையும்' பிரபலப்படுத்தும்.. <<<

   பூக்கடைக்கு விளம்பரமா!...

   நீக்கு
  3. சுற்றி வளைத்து மீனும், பூவுமே வருகிறதே ஜி ?

   நீக்கு
  4. ஜி!..

   லோகத்துக்கு
   புஷ்பமும் வேணும்..
   மச்சமும் வேணும்!...

   நீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 3. ஆகா... இன்றைய பதிவு
  தேவகோட்டையாரின் கைவண்ணத்தில்!...

  பதிலளிநீக்கு
 4. கில்லர் ஜி யா!..
  கொக்கா!....

  சவுக்கடி மன்னன் கிட்டே வந்து மாட்டிக்கலாமோ!...

  பதிலளிநீக்கு
 5. மல்லிகைப் பூ வித்தாரே
  மீசைக்காரப் பெரியவர்.....

  அவர் யாருன்னு எனக்குத் தெரியும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... உண்மை (கலந்த) சம்பவமா இது?!!

   நீக்கு
  2. கற்பனையில் அந்தப் புகைப்படத்தால் எழுதினேன்...

   இப்படி உண்மையில் நிகழவும் வாய்ப்புகள் உண்டே...

   நீக்கு
 6. நல்லவேளை...

  டெஸ்பாட்சிங் DS Raju... ந்னு
  நம்மளையும் உள்ளே இழுத்து விடலை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... இப்படி வேற இருக்கா? இனி டபுள் கவனத்தோடு படிக்கோணும்!

   நீக்கு
  2. ஓஒ டி எஸ் ராஜுவைப்போய்... துரை என அழைக்க வச்சிட்டாரே துரை அண்ணன்:)... ஹா ஹா ஹா

   நீக்கு
 7. மீனையும் பூவையும் வாங்கினாலும்

  மீனுக்கு இடம் சமையலறை தான்..
  பூவுக்கு இடம் பூஜையறை தான்!...

  காசு கொடுத்தோம் என்பதற்காக
  மீனை தலையிலா வைத்துக் கொள்வது?.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... அப்படிப் போடுங்க அண்ணாச்சி... கலக்கறியளே ....

   நீக்கு
  2. ஹா அஹ ஹா ஹா ஸ்ரீராம் தில்லி பப்பு அவர்களின் பாதிப்பு ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 8. நரிகள் வாலை அறுத்துக் கொள்வதற்கு முன் யோசிக்க வேண்டும்...

  பூ வாடினாலும் மரியாதை குறைவதில்லை..

  மீன் வாடினால்!....
  குப்பைக் கூடையையும் தாண்டி விடும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குவைத் ஜி
   விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. துரை அண்ணனுக்கு மீனுடன் ஏன் இவ்ளோ கோபம்ம்ம்மாக்கும்:)... நீங்கதான் தங்கமீன் படம் போட்டவராச்சே:)... மீனுக்கு உசிரூஊஊஊ இருக்குதாக்கும்ம்ம்ம்:)..

   நீக்கு
  3. மீன் மேல எனக்கொன்னும் கோவம் இல்லே...

   பூவா இருந்தாலும்
   மீனா இருந்தாலும்
   அததுக்கு ஒரு பக்குவம் இருக்கு..

   பக்குவம் கெட்டுப் போனா
   என்னத்துக்கு ஆகும்!..

   அதத்தான் சொன்னேனுங்கோ!..

   நீக்கு
 9. என்ன ஒருத்தரையும் காணோம்!...
  இன்னும் பொழுது விடியலையா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருவாக... வருவாக.. பொறுமையா இருங்க அண்ணாச்சி... காபி, கஞ்சி எல்லாம் ஆத்த வாணாம்?

   நீக்கு
  2. அதிரடிக் கதை. அழகான கதை இப்படியொரு திருப்பம் அனைவர்
   வாழ்விலும் வரச் சந்தர்ப்பம் இருக்கிறது.
   தவறி விழாமல் இறைவனே காக்க வேண்டும். நல்ல நச் கதையைக் கொடுத்த தேவகோட்டையாருக்கு மிகவும் நன்றி.
   ஸ்ரீராமுக்கு வாழ்த்துகள்.
   அனைவருக்கும் காலை வணக்கம்.

   நீக்கு
  3. கதையை இரசித்தமைக்கு மிக்க நன்றி அம்மா

   நீக்கு
  4. எல்லாம் நேரத்துக்கு ஆத்திட்டேன். ஆனாலும் வர முடியலை! சீக்கிரமாக் கணினியை மூடிட்டேன். :)

   நீக்கு
 10. அண்ணாச்சி..
  அப்படிப் போடுங்க அருவாள!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரிவாளா? நோ... நோ... வன்முறை கூடாது அண்ணாச்சி!!!!

   ஓ... நீங்களும் அதைத்தான் சொல்றியளா? அரிவாளை கீழ போடச் சொல்லுதிய... சரி அண்ணாச்சி...

   நீக்கு
  2. இன்னிக்கு ஸ்ரீராம் சௌத் மூட் போல ஹா ஹா ஹா ஹ துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் உங்கள் இருவரின் கான்வெர்சேஷன் ரொம்ப ரசித்தேன்...

   கில்லர்ஜி கதை ரொம்ப நல்லாருக்கு..உங்கள் ஸ்டைல் இடையில் சினிமாக்காரங்களையும் இழுத்து ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கு வெவரமா இப்ப சொல்ல முடியலை அப்பால வாரேன் மதியத்துக்கு மேல..இப்ப மீ ஓடிங்...

   கீதா

   நீக்கு
  3. நன்றி மீண்டும் வறுக்க, வருக...

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ஶ்ரீராம் சவுத் மூட்டில இருக்கிறாரோ?:)... அவர் எப்போ நோர்த் வீட்டுக்குப் போவார்ர்ர் ஹையோ சே சே டங்கு ஸ்லிப்பாகுதே:) மூட்டுக்குப் போவார் எனக் கேய்க்க வந்தேன்:)..

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. அருமையான கதை.
  தடுமாற்றம் மறைந்து விட்டது.
  தடம்மாறாமல் காத்த அந்த வயதான அம்மாவுக்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அந்த புகைப்படம்தான் இந்த கதையையும், முன்பு ஒரு கவிதையையும் என்னை எழுத வைத்தது.

   நீக்கு
 13. அனைவருக்கும் காலை வணக்கம். கல்லர்ஜி கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கிறாரா? வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேடம் எனது பெயரை இப்படியெல்லாம் கொலை செய்யலாமா ?

   நீக்கு
 14. //ஒப்பனைகளோடு அவளது மனதில் தேங்கிய அழுக்குகளும் கரைந்து தூம்பின் வழியாக வெளியே ஓடியது.//
  அருமையான நிறைவு.
  வாழ்த்துக்கள் தேவகோட்டை ஜி.

  திருவெண்காட்டில் செட்டியார் அம்மாவீட்டு மாடியில் குடி இருந்தேன், அவர்கள் தூம்பு அடைத்து இருக்கா பார் என்று என்னை ஒரு தரம் சொன்னார்கள் எனக்கு தெரியவில்லை அவர்கள் அர்த்தம் சொல்லி சிரித்தார்கள் அது நினைவுக்கு வந்து விட்டது.அவர்களுக்கு பூர்வீகம் தேவகோட்டை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் எங்கள் ஏரியாவில் இப்படித்தான் சொல்வோம்.

   தங்களது நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. அவர்களை மறக்க முடியாது. எனக்கு தாயாக இருந்தவர். கல்யாணம் ஆனவுடன் அங்கு குடியிருந்தேன் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்த அன்னை. இன்று தெய்வமாகி விட்டார். அவர் பேத்தி திருமணத்திற்குதான் தேவகோட்டை வந்தேன் முன்பு.

   நீக்கு
  3. ம்.. ம்.. வீடு சிவன் கோவில் அருகில்தானே ?

   நீக்கு
  4. தூம்பு தான் நாங்களும் சொல்வோம். :)

   நீக்கு
 15. பாதிக்கதை படிக்கும்போதே ரூட் எங்கேயோ போகுதேன்னு யோசிச்சேன். அடுத்து குஷ்பு, ரோஜா படித்த உடனேயே, நல்லவேளை ஊருக்குத் திரும்பியபிறகு பொழுதன்னைக்கும் தொலைக்காட்சி கில்லர்ஜி பார்க்கலை, பார்த்திருந்தால் டி டி (இது குறள்காரர் அல்ல), ஆர்யா, என்று நெடுங்கதை அளவுக்குப் போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்பொழுதுமே டி.வி. பார்ப்பதில்லை நண்பரே...

   அப்படியே பார்த்தாலும் கோபத்தோடு பார்த்து முடியவும் பதிவு எழுதி விடுவேன்.

   நீக்கு
 16. ஏதோ தொலைக்காட்சிதான் இந்த ஒழுங்கீனங்களைக் கொண்டுவந்ததுன்னு சொல்லாதீங்க. 87கள்லேயே சென்னைல நிறைய இதுபோல் பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் கடந்த 10 வருடங்களுக்கும் மேல், இது தவறு என்ற நிலை மாறி, நாகரீகம் என்ற நிலைக்கு வந்திருக்கு.

  முன்னெல்லாம், மதுரைல யாரும் எந்தக் பெண் பின்னாலும் சென்றால் மதுரைக் காரங்க கட்டிவச்சு உதைப்பாங்க என்பார்கள்... அதெல்லாம் சென்ற நூற்றாண்டில் இருந்திருக்கும்.

  கதையை முடித்தவிதம் அருமை. பாராட்டுகள் கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 17. தொலைக்காட்சிகளை விடுங்க. பத்திரிகைகளில் இந்தக் கதை வந்திருந்தால், பாவனா-ஆபீசர் காட்சி, சினிமா நடிகைகள், மேகலா குளிப்பது, இந்த சீன்களுக்குத்தான் ஓவியம் வந்திருக்குமே தவிர நீங்கள் படம் போட்டுள்ள இடத்துக்கல்ல. பத்திரிகைகள் என்ன குழந்தைகளுக்கும் மனிவர்களுக்குமா (சாமியார்கள் அல்ல). நடத்துறாங்க. ஹாஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நான் இக்கதை எழுதியதே இப்படத்தின் காட்சி மனதை பாதித்ததால்தான்...

   நீக்கு
 18. வாழ்வில் திருப்தியே முக்கியம் என்பதை அழகாக சொல்லும் கதை... வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகிலேயே பெரிய சந்தோஷம் எதிலும் திருப்திதான் ஜி. வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 19. மன்னித்துக் கொள்ளுங்கள் கில்லர்ஜி, போன் வழியே அனுப்பும் பொழுது அந்த அதிகப் பிரசங்கி ஆட்டோ ஸ்பெல்லிங் தவறு செய்து விடுகிறது, நான் அதை கவனிக்காதது தவறுதான். புத்தி போட்டுக் கொண்டு விட்டேன்.
  கல்லால் அடிப்பது போல ஒவ்வொரு பதிவும் ஸ்ட்ராங்காக இருப்பதால் கல்லர்ஜி என்றும் கூறலாம். ;))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாணியில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
   ஊசிக்குறிப்பாக ஒரு கேள்வி, சந்தடி சாக்கில் உங்கள் சீக்ரெட் க்ரெஷை வெளிப்படுத்தி விட்டீர்களா?

   நீக்கு
  2. தவறாக எழுதியதை சமாளிக்க இப்படியும் தூக்கி விட்டு எழுதலாமோ ?

   நீக்கு
  3. அதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை. மேகலா கற்பனையில் அப்படி ஆசைப்பட்டு சொல்லி இருக்கலாம் இதற்கு நான் பொருப்பு கிடையாது.

   நீக்கு
  4. நல்லவேளை கள்ளர்'ஜி என்று சொல்லவில்லை.

   நீக்கு
  5. கில்லர்ஜி, நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லோணும்:)...
   உங்களை யாரென்றே அப்போ எனக்கு தெரியாது, பெயரைப் பார்த்ததும் நீங்க ஏதோ நகைச்சுவைக்காக இப்படி கில்லர் என வச்சிருக்கிறீங்க என நினைச்சேன்... அப்போ இங்கு எனக்கு ஒரு கொமெண்ட் போட்டீங்க... நான் பதிலுக்கு .. கொலையாளிஜி ... என அழைத்திருந்தேன் நகைச்சுவையாக... அதை நீங்க கவனிச்சீங்களோ தெரியாது...
   அது நடந்து ஒரு கிழமைக்குள்.. கீதா பக்கம் போஸ்ட் பார்த்தேன் உங்கள் தங்கையின் பிரிவு பற்றி... அப்படியே ஆடிப் போய் விட்டேன்... அத்தோடு அப்படிச் சொன்னதை விட்டு விட்டேன்:)..

   நீக்கு
  6. ஆமாம் இதே தளத்தில்தான் அதற்கு மறுமொழியும் கொடுத்தேன்.

   நீக்கு
 20. அருமையான கதை..

  நல் எண்ணங்களுக்கு வரும் சோதனைகள் தான் எத்தனை...

  முன்பு தவறு செய்பவர்கள் தான் வெக்கப்படுவார்கள் ..இப்பொழுது தவறு செய்யாமல் இருப்பதற்கு வெக்கப்பட வைக்கிறது ..நம் சமூகம்..

  என்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நமது செயல்களை தீர்மானிப்பது மனசாட்சி என்ற உள்மனது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 21. ////நம்ம அண்ணாச்சி ஆர்.கே.செல்வமணி இவருக்கும் மதிப்பு இருக்கத்தானே செய்கின்றது ரோஜா இப்பவும்கூட டி.வி ப்ரோக்ராமில் கே.பாக்கியராஜை கட்டிப்பிடித்து ஆடினாரே.... இதெல்லாம் பூர்ணிமாவுக்கு தெரியாதா ? ///

  ஹா ஹா ஹா இப்போ கில்லர்ஜிக்கு இதுதான் புகையுதோ:)...

  பதிலளிநீக்கு
 22. ////ஏன் வலைப்பதிவர் கில்லர்ஜிகூட லட்டர் கொடுத்தாரே... நாம் யாருக்கும் மசியவில்லையே.... கடைசிவரை நமது நினைவாகத்தானே இரண்டாவது திருமணம்கூட செய்யாமல் வாழ்கின்றார்///

  ஹா ஹா ஹா முடியல்ல முருகா:)... இப்படி ஓவர் நினைப்பில பலர் இருக்கிறார்கள்தான்... ஆண்களிலும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹலோ அது மேகலா நினைத்தது நான் என்ன செய்யமுடியும் ?

   நீக்கு
  2. ஹையோ அதிரா ஹைஃபைவ் நான் காலைல கில்லர்ஜிய இதைச் சொல்லிக் கலாய்க்க நினைத்து நேரமில்லாம ஓடிவிட்டேன் எனக்குத் தெரியும் நம்ம பூஸார் வாலைச் சுழற்றுவார்னு வந்து பார்த்துக்குவாங்கனும் நினைச்சேன்...டங்க்யூ டங்க்யூ!!!!

   ஊசி கேப்ல என்னெல்லாம் சொல்லிருக்கார் பாருங்க நைஸா கதைனு சொல்லிப்போடலாம்னும்.....

   கீதா

   நீக்கு
  3. மேகலா சொன்ன வார்த்தைக்கு நான் பொருப்பாளி இல்லை.

   நீக்கு
 23. பதில்கள்
  1. ஹி.. ஹி.. இதுல நகைச்சுவையா இருக்கூ ?

   நீக்கு
  2. ஏஞ்சல் அப்படி எல்லாம் சொல்லப்படாது நீங்க அவங்க செக்....(அவங்க இன்னும் உங்களுக்கு எந்தச் செக்கும் கொடுக்காம எல்லாம் மீதில இருக்குனு தெரியும் ஹா அஹ ஹா) அவங்க தமிழ்ல டி ஆக்கும்!!!

   கீதா

   நீக்கு
  3. பின்ன மேகலா இன்னும் கில்லர்ஜி நினைப்பிலேயே இருக்கிறா:).. தன்னாலதான் கில்லர்ஜி இன்னொருமணம் முடிக்காமல் இருக்கிறார் என்றதெல்லாம்.. கதைக்கு நகைச்சுவை குடுக்குதே:)) ஹா ஹா ஹா..

   இப்போ என் செக் எதுக்காகச் சிரிக்கிறா எனக் கொஞ்சம் கேட்டு ஜொள்ளுங்கோ கீதா:)) கர்ர்ர்ர்ர்:)).. தேம்ஸ் க்கு வேலை வரப்போகுதூஊஊஊஊஊஉ:) ஹா ஹா ஹா:).

   நீக்கு
  4. மேகலாவின் எண்ணங்கள் இப்பொழுது முழுமையாக அழுக்குகள் நீங்கி சுத்தமாகி விட்டது.

   ஆகவே மீண்டும் இதைப்பற்றி பேசி மேகலா மனதில் ஆசையை விதைக்க வேண்டாம் அதிரா

   நீக்கு
 24. கில்லர்ஜி வழக்கம் போல் கதையிலும் கலக்கிட்டார். நல்லவேளையாக மனசு மாறினாளே! எப்போவும் நமக்குத் தேவையானது நமக்குக் கிடைச்சுடும். அதில் திருப்தி அடைந்தால் போதுமானது. மேலும் வருமானம் சம்பாதிக்க இந்த வழி வேண்டாமே! வீட்டில் இருந்தே ஊறுகாய், சமையல் பொடிகள் தயாரித்தல், தையல் வேலை செய்தல், புடைவை வியாபாரம் செய்தல்னு எத்தனையோ குடும்பத்தைப் பாதிக்காவண்ணம் செய்து கொள்ளலாம். குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை பணம் உண்டாக்க பல வழிகள் உண்டு.

   சிலர் அவைகளை இழிவாக கருதும்போது நல்வழி மாறுகிறது.

   மேகலா மேன்மையானவள் அவளது பாட்டிக்கு பூர்வீகம் தேவகோட்டையாம் அதனாலும்கூட நல்ல வழியை தேர்ந்தெடுத்து இருக்கலாமோ...

   நீக்கு
  2. கில்லர்ஜி!! மேகலாவுக்கு இம்மாம் சப்போர்ட்டா அப்ப அதே அதே அதேதான் அதிரா எங்க போனீங்க...இங்க பாருங்க உங்களுக்கு கில்லர்ஜி கொடுத்த பதிலுக்கு இங்க பாருங்க கீதாக்காவுக்குக் கொடுத்துருக்கற பதிலை...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. அது கீதா.. புத்தியால் ஜிந்திச்சு ஒரு பதில்:).. மனசால ஜிந்திச்சு ஒரு பதில் என மாத்தி மாத்திக் குடுக்கிறார் பதில்களை:)).. ஹா ஹா ஹா... ஹையோ கீதா என்னை வம்பில மாட்டி விட்டிட்டீங்களே:))

   ///Geetha Sambasivam18 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 11:48
   கில்லர்ஜி வழக்கம் போல் கதையிலும் கலக்கிட்டார்.///

   எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:)).. கதையிலும் எண்டால்ல்ல்.. வேற எதில மும்முரமாக் கலக்குறார் என எனக்கு இப்போ தெரியோணும் கீசாக்கா:)..

   நீக்கு
  4. அதிரா குட்டையை குழபபாதீங்க...

   நீக்கு
 25. பிறரின் திடீர் வசதிகள்,குறுக்கு வழி, இவைகளைப் பார்க்கும்போது வசதிக்குறைவாக அதே இடத்தில் ஒட்டிக்கொண்டு நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு நாம்தான் அசடுபோல என்ற எண்ணம் உண்டாகி விடுகிறது. தவறி வாழ்ந்தால்கூட அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் வேண்டும். எல்லோரும் அப்படி இல்லை என்றாலும், புத்தி மாராமல் இருக்க இம்மாதிரி ஏதாவது, காட்சிகள்,பிறர் சொல்லும் கதைகள் ஸமயத்தில் உதவுகிறது. கதை மிக்க உணர்வு பூர்ணமாக இருக்கிறது. எல்லோருக்கும் நல்ல புத்தியையே கொடப்பா பகவானே என்று எண்ணத் தோன்றியது. அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா கதையை மிகவும் உள் வாங்கி படித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  நல்ல கதை. வாழ்வில் இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைப்படுபவர்களுக்கு ஒரு பாடமாக பிறந்த அழகான கதை. கடைசியில் மனம் திருந்தி நல் வழியில் செல்ல முடிவெடுத்த மேகலாவுக்கு பாராட்டுகள். அவளை அந்த நல்ல முடிவு எடுக்க வைத்த சகோதரரையும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன். இடைச் செருகலாக கற்பனை வார்த்தைகளை கலந்து ரசிக்கும்படி எழுதிய கதாசிரியருக்கு வாழ்த்துகள். முடிவு சுபமாக ஆனதில் மிக்க மகிழ்ச்சி. கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ கதையை மனது ஒன்றிப்படித்து அழகிய கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

   நீக்கு
 27. மனதை சலனப்படுத்த ஓராயிரம் வழிகள் பாய்ந்து வந்தாலும் சண்டி குதிரையை அடக்கும் அந்த கண் மூடியும் லகானும் தடுக்கும்..
  தப்பு செய்ய நினைக்கும்போது இப்படி பல விஷயங்கள் ஏற்றி விட்டாலும் உண்மை நேர்மை ஒரு மூலையில் இருந்து கோமாக்கு போன மனசாட்சியை தட்டி எழுப்பும் .மனிதர்களில் பல வகை தப்பு செஞ்சா என்ன ஆக போது என்போர் ஒருவகை இல்லை இப்படித்தான் இருக்கணும் என்பது ஒரு வகை ஆற்றில் ஒட்டு கால் சேற்றில் ஒரு கால் ஒரு வகை எந்த சஞ்சலம் ஏற்பட்டாலும் திருத்திக்கொண்டு வாழ்வதே சிறப்பு .நல்ல கதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மே 3 கில்லர்ஜிக்கு :) (மேலூர் மேலாளர் மேகநாதன் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பிறர் சொல்லி தன்னை மாற்றிக்கொள்வதைவிட தன்னைத்தானே ஆராய்ந்து மாற்றிக்கொள்வது பேரறிவு.

   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 28. கில்லர்ஜி அந்தப் படத்தையும் உள்ளே நுழைத்து நல்ல கருத்துடன் இணைத்துச் சொல்லிய விதம் சூப்பர். நேர்மைஅயகவும், நல்ல வழியிலும் பிழைக்க எத்தனையோ வழிகள் இருக்கு. ஆனால் ஏனோ சிலர் மனது இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது. எப்படியோ மேகலாவுக்குள்ளும் தான் செய்வது தவறு என்ற எண்ணம் இருந்திருக்கிறது அதனால்தான் அவளுக்கு அந்த வயதான மூதாட்டியின் செயலும் பேச்சும் அவள் எண்ணத்தை மாற்றி இருக்கிறது. இல்லை என்றால் ஒப்பனை செய்தது போல் வேஷதாரியாகவும் இருந்திருப்பாள். அவள் மனம் மாறியது நல்ல முடிவு கில்லர்ஜி.

  பாராட்டுகள் வாழ்த்துகள் கில்லர்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக அந்தப்படமே இக்கதையை உருவாக்கியது விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 29. அதுவும் சிலர் தங்கள் பக்கத்துவீட்டுக்காரர்களைப் போல் வாழ ஆசைப்பட்டு பகட்டாக இருக்க நிறைய செலவு செய்தல் என்பதும் சில பெண்களிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். புடவையிலிருந்து நகை, வீடு வரை எல்லா பொருட்களும் என்று ஆசைப்படுதல் விரலுக்கு மிஞ்சிய பொருளாதார வீக்கத்திற்கு அடிமை ஆதல் என்று சிலர் இருக்கின்றனர்....அப்படி ஈட்ட வேண்டும் எனும் போது மனம் திக்கற்று செயல்படுகிறது. இக்கருவைப் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம்...நல்லா சொல்லியிருக்கீங்க ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறருடைய வாழ்வோடு ஒப்பீடு செய்பவர்கள் எப்பொழுதுமே திருப்தி கொள்ளவே முடியாது.

   நீக்கு
 30. மாற்றங்கள் வாழ்வில் நிகழ ஏதோ ஒரு நொடி போதும் அழகாகச் சொல்லிச் சென்றவிதம் பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 31. அன்பின் அண்ணா.

  நலமா?

  வலைப்பூவில் தொடர்ந்து வரமுடியாத சூழலால் நீண்ட தூரம் விலகிச் சென்றது போல் ஆகிவிட்டது.
  வாசித்தாலும் கருத்து இட முடிவதில்லை என் கணிப்பொறியில்..

  தன் நிலை உயர வேண்டும் என்பதற்காக அவளைப் போல் தானும் மாறினால் என்ன என்று நினைக்கும்... வட்டத்துக்குள் இருந்து வெளியே வரத்துடிக்கும் பெண்ணின் பார்வையில் கதையின் நகர்த்தல் அருமை.

  மேலாளருடன் அணுக்கமான நட்பு கொண்டாடும் பெண்ணுக்குக் கிடைக்கும் மரியாதையும் ஊதிய உயர்வும் அப்படி சிந்த வைக்கிறது.

  அதற்காக அவளின் சிந்தனை ஏன் சினிமாக்காரர்கள் அப்படியில்லையா இப்படியில்லையா என்று சிந்திக்க வேண்டும்..? தன்னைச் சுற்றி நிகழ்பனவற்றைப் பற்றிச் சிந்தித்திருக்கலாம்.

  குஷ்பு, ரோஜாவெல்லாம் வலியத் திணித்தது போல் கதையோடு ஓட்டவில்லை என்பதே என் பார்வை... என் பார்வை தவறாக இருக்கலாம். இது என் பார்வையே...

  ரோஜாவோடு பாக்கியராஜ்கள் திரையில் ஆடும் போது மேடையில் ஆடுவதென்ன தவறு என்பதே பூர்ணிமாக்களின் எண்ணமாக இருக்கும். கலைத்துறையைப் பார்த்து நாம் மாற வேண்டும் என ஒரு பெண் நினைப்பது வேதனையானது...

  இடையில் கில்லர்ஜியும் லவ் லெட்டர் கொடுத்த ஆளாகிறார்... ஹி...ஹி... இது உங்க எழுத்து நடை... செம.

  முடிவில் திருப்தி..

  அருமை... கதை முழுவதும் உங்க டச் அப்பிக் கிடந்தது....

  கதைக்கான களம் அருமை... தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மனதில் தோன்றிய உண்மைக் கருத்தை முன்வைப்பது அழகு.

   திரைப்படக்காரர்களை பார்த்துதான் மனம் தவறான வழியில் அலைக்கழிக்கிறது.

   அதேநேரம் நடைமுறை வாழ்வில் அடிமட்டத்தில் வாழும் குடும்பத்தை பார்த்த பிறகே மனதில் தெளிவு பிறக்கிறது.

   அவ்வகையில்தான் கதையை நகர்த்தினேன்.

   நான் கோல்மால் கல்லூரியில் படித்தது உண்மை, மேகலாவுக்கு கடிதம் கொடுத்தது நினைவில் இல்லை.
   (ஒன்றா, இரண்டா ரினைவில் இருப்பதற்கு)

   நீக்கு
 32. எழுத்தாளர் கில்லர்ஜி வாழ்க! வாழ்க!

  பதிலளிநீக்கு
 33. கில்லர்ஜி வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

  நல்லா எழுதிருக்கீங்க. உங்களையம் கூட இடையில் சொல்லிக்கொண்டு உங்கள் பாணியில் எழுதிருக்கின்றீர்கள். மேகலா மனம் மாறும் இடம் அருமை. அந்தப்படம் உண்மையிலேயே மனத்தைக் கலங்கவைக்கும் படம். அதைக் கொண்டுவந்து சொன்ன விதத்தையும் ரசித்தேன் கில்லர்ஜி. மீண்டும் வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 34. கில்லர்ஜியின் கதை - நேற்றே படித்து விட்டேன். பின்னூட்டம் இப்போது தான்.

  நல்ல கதை. கடைசியிலாவது உணர்ந்து கொண்டாரே.

  பாராட்டுகள் கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
 35. நேற்று படித்து போனின் வழியே கருத்திட்டேன் வரவில்லை...ஏனோ...தெரியவில்லை

  கதை வெகு அருமை....கதையில் தங்களுக்கும் ஒரு பாத்திரமா...சரி சரி....நடக்கட்டும்

  தங்கள் எழுத்தின் தனிநடை சுவாரஸ்யமாய்....இருக்கிறது சகோ.

  நன்றி இரு சகோக்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரை வரவில்லையே...

   கதையில் எனக்கு பாத்திரமில்லை மேகலா புலம்பியதை நம்ப வேண்டாம் சகோ.

   நீக்கு
 36. அருமையான கதை பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 37. இன்றுதான் வாசிக்கமுடிந்தது. இது கதையல்ல, பாடம். நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!