கில்லர்ஜி :
நண்பர் டி.டி. குடும்பத்துல பிரச்சனை வரக்கூடாதேன்னு நினைத்து சொன்னேன். பாவம் இப்போ இந்தப்பொண்ணு வீட்டில் என்ன புகையப்போகுதோ ?
பதில்:
அட! "டி டி படங்களுக்கு" நண்பர் டி டி குடும்பத்தில் பிரச்சனை வருமாம்! ஆனால் கில்லர் + ஹா . பி (ஹாலிவுட் பியூட்டி) படத்துக்கு, கில்லர் குடும்பத்தில் பிரச்சனை வராதாம்! ஹா.பி வீட்டில் புகையப்போகுதாம்! இது என்னங்க ( அ)நியாயம்!
நிஜத்தைக் காணாமல் நிழலால் சந்தோஷம் வந்து விடுமா ?
பதில் : சந்தோஷம் கொள்ளவேண்டும் எனில், நிஜங்களைவிட, நிழல்கள்தாம் அதிக கற்பனைகளுக்கு இடம் தரும். நிஜம் இல்லையேல் நிழல் இல்லை. ஆனால், நிழல் இல்லாமல், நிஜங்கள் உண்டு.
நிழல் சந்தோஷம்!
கைநிழலில் முயல் காட்டுபவர்கள் உண்டு! இந்த முயல் செய்யும் குறும்பு எந்த (வ)கை!
கீதா சாம்பசிவம் :
பதில் சொல்றவங்க இப்போக் குறைஞ்சுட்டாங்களே! நீலவண்ணக் கண்ணர் இன்னும் பிசியா இருக்காரா? மற்ற ஆ"சிரி"யர்கள் எல்லாம் ஏன் பதில் சொல்லலை?
கேள்விகள் எல்லாம் நான் கேட்கிறாப்போல் அசட்டுத்தனமாக இல்லாமல் இன்னும் கொஞ்சம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அறிவுஜீவித் தனமாக இருந்திருக்கலாமோ?
ஏஞ்சல் :
1,கிசுகிசுக்கள் இப்போ நிறையவும் வேகமாக பரவ காரணம் என்ன ?
வம்பில் நமக்கிருக்கும் ஆர்வம், வம்பு வதந்திகளை மிக எளிதாக மிகப்பெரிய அளவில் பரப்ப ஊடகங்களில் இருக்கும் வசதி, எளிதில் நம் பெயர் "பிரபலம்" அடைவது இவைதான் வதந்திகள் நெருப்பாக பரவக் காரணம்.
2,பொய் தகவல்களை பரப்புபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை என்ன கொடுக்கலாம் ?
பொய்த் தகவல்களை கேடுசெய்யும் எண்ணத்துடன் பரப்புவது இப்போதே தண்டனைக்குரிய குற்றம் தான். நம்மைக் கேட்டால் மூன்றாண்டு சிறை எனச் சொல்லலாம்.
பொய்த்தகவல்களுக்கு தண்டனையாக ஒரு குறிப்பிட்ட எண்களுக்கு மெல் புகார் வந்தால் அவர்களை அந்த ஊடகத்திலிருந்து கொஞ்ச நாட்களுக்கு விலக்கி வைக்கலாம் 2 yellow card வாங்கினால் அடுத்தது red card என்கிறாற்போல்.
3, பல பத்திரிகைகள் மற்றும் பிரபல சேனல்கள் மண வாழ்வில் வெற்றிபெற்ற சினிமா நடிக தம்பதியரை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுகிறார்கள் இத நம்பி இளம் பிள்ளைகள் காதலில் விழுகிறார்கள் .
சினிமா நட்சத்திரங்களின் காதலுக்கு ஊடகங்களில் இப்படி ஒரு முக்கியத்துவம் தேவையா ?
பிரபலங்களின் கா & க -வுக்குத் தரப்படும் விளம்பரம் தேவையற்றது பொருளற்றது. இதற்கும் கூட வம்பில் நாட்டத்தை வியாபாரமாக்கும் ஊடகங்களே காரணம்.
4,உங்களுடைய மேஜிக் charm என்ன ? அதை யாரிடமிருந்து பெற்றீர்கள் ?
எதுவும் இல்லை. ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு. எல்லாவற்றுக்கும் cause & effect பற்றி ஆலோசிப்பது உண்டு.
என் மாஜிக் சார்ம் என்று எதுவும் கிடையாது. என் பெரும் குறைபாடு தொணதொணப்பு எரிச்சசலூட்டும் ஜோக்ஸ்.
5,அம்மா செய்த கொழுக்கட்டை உங்கள் வீட்டம்மா செய்த கொழுக்கட்டை எது பெஸ்ட் ???? இதற்கு 5 காரணங்களை கூற வேண்டும் :)
ஐந்து காரணங்கள் சொல்ல வேண்டும் என்பதால் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை!!
அம்மா மனைவி இருவருமே மிக சிரததையுடன் கொழுக்கட்டை செய்தவர்கள். Best நான் செய்வதுதான்! அம்மா மாவிடித்துக் கிளறி வீட்டில் இருந்த 10 பேருக்கும் வருகிற மாதிரி நிரவல் செய்வார்கள்.
மனைவியின் பக்தி பிரசித்தம்.
மூவரும் செய்த கொழுக்கட்டையின் அழகு, ருசி இரண்டுடன் வழக்கமான fillings தவிர வேறு முயற்சிகள்செய்வோர், இடித்த மாவு மெஷினில் அரைத்தது மிக்ஸியில் அரைத்தது கிளறும் போது வெவ்வேறு வழிகள் விரியாமல் இருக்க மைதா
இப்படி பல காரணங்கள்.
அம்மா வீட்டம்மா அவங்க அம்மா எல்லாருமே கொ.க நிபுணர்கள்.
6, ரோட்டில் போகும்போது எதேச்சையாக வசனம் பெயர் அல்லது படம் இவை பார்த்துவிட்டு போயிருப்போம் அது பின்னாளில் உங்களில் தாக்கத்தை அல்லது பலனை கொடுத்திருக்கா ?? ஏற்கனவே கீதாக்காவுக்கு பதில் கொடுத்திருக்கிங்க தற்செயல் நிகழ்வுகள்ன்னு அதில் கேள்விக்கு விடைகள் கிடைச்ச மாதிரி ஆனாலும் வேறு பதில்களும் இருக்குமே அதை சொல்லுங்க ?
ஆவடி போகும் வழியில் கௌதம் டீ ஸ்டால் என்று தம்பி பெயர் பார்த்துப் போய் 2 வாரங்கள் கழித்து யாருக்கோ வழி சொல்ல முடிந்தது.
7, நாம் எடுக்கும் முடிவுகளில் எது சிறந்தது அல்லது இதுதான் சிறந்தது என்று எப்படி தீர்மானிப்பது ?
பெரிய பதில் தேவைப்படும் கேள்வி. மசாலா தோசையா பூரியா என்கிற அன்றாட முடிவுகள் தாண்டி வாழ்வை பாதிக்கும் முடிவுகள் பற்றி?
முடிவுகளில் சிறந்ததாக நாம் நினைப்பதைத்தானே தேர்வு செய்கிறோம் ?
8. இது கூடவா தெரியாதுன்னு குழந்தை கேட்கும்போது வரும் ஆனந்தம் பெரியவங்க அதாவது மனைவி கேட்கும்போது வருவதில்லையே ஏன் ?
குழந்தைகள் பெரியமனுஷத்தனமா பேசுவதும் பெரியவர்கள் குழந்தைத்தனமாகப் பேசுவதும் ஒன்றாகுமா?
குழந்தை கேட்கும்போது அட இவ்வளவு தெரிந்திருக்கிறதே என்ற மகிழ்ச்சியும், மனைவி கேட்கும்போது இது கூட தெரியாமல் போயிற்றே என்ற ஆதங்கமும் வரத்தான் செய்யும்.
9. அ ,ஆ ,இ ,ஈ தெரியும் அதென்ன அ நா ஆவன்னா ???
"அன்று ஊமைப் பெண்ணல்லோ... இன்று பேசும் பெண்ணல்லோ.."
50 வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்குத் தமிழ் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தோம்.
ஆனா ஆவன்னா ஆயிரங் காலத்துப் பழக்க விளைவு. ஒண்ணாங்கிளாசில் என் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களிடம் (!) தம் கட்சியை வாதிக்கக் கேட்டிருக்கிறேன்.
10. முகத்துக்கு மேக்கப் அவசியமா ?
முகத்துக்கு சொந்தக்காரர்களையும், அன்றாடம் அவர்களைப் பார்ப்பவர்களையும் பொறுத்தது.
முகத்துக்கு மேக்கப் அவசியமா என்பது, அது இல்லாத "த~, அ~" படங்களைப் பார்த்தால் தெரியும்.
வாட்ஸ் அப்பில் வந்த கேள்விகள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
திருமணம் அல்லது நண்பர் வீட்டுக்கு சென்ற பொழுது சாப்பிட்ட ஏதோ ஒரு பண்டம் உங்களுக்கு மிகவும் பிடித்து, அதை வீட்டில் செய்து தரச்சொல்லி சாப்பிட்ட அனுபவம் உண்டா?
அந்த அனுபவம் எனக்கு இல்லை.
திருமணம் என்றில்லை, மும்பை குல்கர்னி வீட்டில் செய்து போட்ட டோக்ளாவை விரும்பி சாப்பிட்டு வீட்டில் செய்து பார்த்தது உண்டு. நன்றாக சொல்லிக் கொடுத்திருந்தார்.
ரமணி vs ரமணி பார்ட் 2 இல் அவள் விதம் விதமாக தோசை வார்த்து போட்டது போல விபரீதமாக ஆகாமல் இருந்ததா?
சில தயாரிப்பாளர்கள் -ve இல்லாமல் all+ve என்று சில சீரியல்கள் எடுத்துக் கையை சுட்டுக்கொண்ட காரணங்கள் பல.
எத்தனை வயது வரை பக்தி படங்கள் பார்த்தீர்கள்? இப்போது பக்தி சீரியல்கள் பார்ப்பதுண்டா?
"பக்தி" படங்கள் மட்டுமே வெளிவந்த காலம் ஒன்று உண்டு. கங்காவதார் சீதா கல்யாணம், சிவலீலா என்று 1940+ ல் படங்கள் எல்லாமே புராணம் அல்லது மாயாஜாலம் தான். இல்லாவிட்டால் டூஃபான் க்வீன் மாதிரி எஸ் எஸ் கொக்கோ நடித்த ஸ்டண்ட் படங்கள்..!
படங்களின் தரத்தை உணராத வயதில் கடமை உணர்வோடு பக்தி படம் பார்த்ததோடு சரி.
பெரிய வெற்றி டிரெண்ட் சேஞ்சர் பக்திப் படமான திருவிளையாடல் எனக்கு அவ்வளவாக ரசிக்க வில்லை (பாலமுரளி பாட்டு தவிர).
பக்தி சீரியல் பக்கமே போவதில்லை. கடமை உணர்வுடன் ராமாயணம், மகா பாரதம் பார்த்ததுண்டு. மகா பாரதம் நன்றாக இருந்ததாக எண்ணுகிறேன். தற்செயலாக அனுமன் கதை சீரியல் கண்ணில் பட்டு மனம் நொந்ததுண்டு.
உங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்ததுண்டா?
கொடுத்து அவர்களைத் திகைக்க வைத்ததும் உண்டு
என்னை மாதிரியே பலரும் அதே நாளில் அதே கிப்ட் கொடுத்து என்னைத் திகைக்க வைத்ததுமன்றி கிப்ட் பெற்றவரும் எதை உபயோகிப்பது என்று தெரியாமல் திகைத்ததுண்டு
.அந்த நல்ல பழக்கம் என்னிடம் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் குடும்பத்தினருக்கு அவசியத்துக்கு மட்டுமே பொருள்கள் வாங்கிப் பழக்கமாகிவிட்டது.
=================================
நாங்க கேட்கிறோம், நீங்க பதில் சொல்லுங்க!
எங்கள் கேள்வி. (ரொம்ப சிம்பிள் கேள்விதான்.)
சிறந்த பதிலுக்கு நாங்க பரிசு தருவோம். சிறந்த பதிலை, வாசகர்களிடம் வோட்டெடுப்பு நடத்துவதன் மூலம் தேர்வு செய்வோம்.
கேள்வி 180919:
நீங்க ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் / யை.
மாணவர்களுக்கு, நீங்க சொல்லிக்கொடுக்கும் பாடம், (Subject) உங்களுக்கு விருப்பமான ஒன்று (your choice) என்று வைத்துக்கொள்வோம்.
உங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, உங்கள் பாடப் பகுதியில், நீங்க ஒரு வினாத்தாள் அமைக்கிறீர்கள். மொத்தம் பத்துக் கேள்விகள். அதில் ஏதேனும் ஏழு கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும்.
வகுப்பில் உள்ள முப்பது மாணவர்களும் பதில் எழுதிக்கொடுக்கிறார்கள்.
மூன்று மாணவர்கள் மட்டும், ( A, B, C என்று பெயர் வைத்துக்கொள்வோம்) மொத்தம் கொடுக்கப்பட்ட பத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதியிருக்கிறார்கள். எதையும் சாய்ஸில் விடவில்லை.
ஆனால், அந்த மூன்று மாணவர்களும் எழுதிய விடைத்தாளில், முதல் ஏழு கேள்விகளுக்குள், மூன்று தவறான விடைகள். கடைசி மூன்று பதில்கள் அந்த மூவருமே சாரியான விடை எழுதியிருக்கிறார்கள். (மூவரின் விடைத்தாள்களிலும், எல்லா பதில்களும் ஒரே வரிசையில் இல்லை. ஆகவே ஒவ்வொரு மாணவனின் சரியான / தவறான விடைகளும், வெவ்வேறு. )
அந்த மூன்று மாணவர்களில், A = Average Student, B = எப்பொழுதும் முதல் Rank வாங்கும் மாணவன் / மாணவி. C = எப்பொழுதும் Fail mark வாங்கும் மாணவன் / மாணவி என்றால், நீங்க ஒவ்வொருவரின் விடைத்தாளுக்கும் என்ன மதிப்பெண் கொடுப்பீர்கள், ஏன், அந்த மூன்று மாணவர்களுக்கும் என்ன advice கொடுப்பீர்கள்?
(உங்கள் பதில்களை, எங்கள் மனோதத்துவ நிபுணரும் ஆய்வு செய்யக்கூடும்! ஆனால், பரிசு அவருடைய பொறுப்பு இல்லை!)
===============================
வாழ்க வளமுடன்....
பதிலளிநீக்குகாலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குநடை முடிந்த பிறகு வருகிறேன். புறப்பட வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குநன்றி துரை, அப்புறமா வரேன்.
நீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஎன்னோட அசட்டுக் கேள்விகள் கேஜிஜி சாருக்கு அலுத்துடுச்சு போல! :) இந்த வாரம் நீலவண்ணக்கண்ணர் மட்டுமே பதில் சொல்லி இருக்கார். :) அப்புறம் உடம்பில் கொழுக்கட்டை போல் வீங்கினது கேஜிஜி சாருக்குத் தானே! அதில் ஜந்தேகமே இல்லைனு நினைக்கிறேன். :)
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா.
நீக்கு😊
நீக்குகௌதமன் சார்! பதிலையே காணோமே! போகட்டும்! கொஞ்சம் மண்டையைப் பிச்சுக்க வைக்கிற ஒரு கேள்வி. கேட்கலாமா வேண்டாமானு ஜிந்திச்சுட்டு இருக்கேன். அப்புறமாவே வரேன். :)
நீக்குஏதோ புரிஞ்ச மாதிரி இருக்கு...
பதிலளிநீக்குஆனா -
கண்ணைக் கட்டி காட்டுக்குள்ள விட்ட மாதிரியும் இருக்கு...
எது? எங்கள் கேள்வியா?
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்களில் ஆசிரியர்களின் கேள்வியும் இடம் பெற்று விட்டதே.. நல்லது. இப்போது எதையும் விரிவாக படிக்க முடியவில்லை.ஒரளவு பதில்களை அனைவரும் பார்வையாக்குவதை ரசித்தப் பின் வருகிறேன். ஏனெனில், கஸ்டமான கேள்விகளுக்கு முதலில் காபியை உள் செலுத்தி மூளையை சுறுசுறுப்பாக வேண்டும். (அது இருக்கிறதா என்பது வேறு ஆராய்ச்சி... அதையும் காபி போட்டுக் கொண்டேதான் யோசிக்கனும்.)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிய காலை வணக்கம் கமலா அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஅந்தப்புள்ளே ஹாலிவுட் நடிகையா ?
பதிலளிநீக்குமுயல் யூரின் போகுது.
இது உலகமகா நடிப்புடா சாமி!
நீக்குகேள்வி பதில் ஸ்வாரஸ்யம்.
பதிலளிநீக்குஆஹா... வாசகர்கள் கிட்ட நீங்க கேள்வி கேட்டாச்சா... பதில்களைப் படிக்க ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.
நீங்களும் பதில் சொல்லலாமே!
நீக்குமுடிவு பற்றிய பதில் அருமை...
பதிலளிநீக்குகாணொளி பயமுறுத்துகிறது...
// ஏதேனும் ஏழு கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் //
பத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதியதே தவறு...!
பத்து கேள்விகளுக்கும் பதில் அளித்ததே தவறுதான்; ஆனால், நீங்க என்ன மதிப்பெண் தருவீர்கள், என்ன புத்திமதி கூறுவீர்கள் என்பதுதான் கேள்வி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமறுபடி நீங்களும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டீர்களா?
தனபாலன் சொல்லி விட்டாரே.
தனபாலன் சொல்லியிருப்பது பதில் அல்ல. நாங்க கேட்டிருக்கிற கேள்வி, மாணவர்கள் செய்தது தவறா அல்லது சரியா என்பது அல்ல. நீங்கள் ஆசிரியர் என்றால், அந்த மூவருக்கும், என்ன மதிப்பெண்கள் தருவீர்கள், என்ன புத்திமதி கூறுவீர்கள் என்பதுதான். இந்தக் கேள்விகளுக்கு, நீங்கள் கூறும் விடைகள்தான் ஆராயப்படும். மேலும், இந்தக் கேள்விகளுக்கு, சரியான விடைகள், தப்பான விடைகள் என்று எதுவும் கிடையாது.
நீக்குநாங்க கேட்டிருப்பது Trick கேள்வி அல்ல. இவற்றிற்கு சரியான விடை, தவறான விடை என்று எதுவும் கிடையாது. நீங்க என்ன பதில் கூறினாலும், அந்த பதில்களுக்கு நாங்க உடனே விமரிசனமோ அல்லது சரி / தவறு என்றும் எதுவும் கூறப்போவதில்லை. ஓர் ஆசிரியராக, நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை மட்டும் எழுதினால், போதும். எங்கள் நோக்கம், கேலியோ, கிண்டலோ இல்லை.
பதிலளிநீக்கு// A = Average Student, B = எப்பொழுதும் முதல் Rank வாங்கும் மாணவன் / மாணவி. C = எப்பொழுதும் Fail mark வாங்கும் மாணவன் / மாணவி //
பதிலளிநீக்குஇதைப்பற்றியே நினைக்க மாட்டேன்...
1) இந்த மூன்று பேருக்கும் முதலில் எழுதிய 7 கேள்வி பதில்களுக்கு மட்டுமே மதிப்பெண்...!
2) ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 1 மதிப்பெண் என்று வைத்துக் கொள்வோம்...
3) // ஆனால், அந்த மூன்று மாணவர்களும் எழுதிய விடைத்தாளில், முதல் ஏழு கேள்விகளுக்குள், மூன்று தவறான விடைகள் //
மூவருக்கும் மூன்று மதிப்பெண்கள் போய் விட்டது...
4) // கடைசி மூன்று பதில்கள் அந்த மூவருமே சரியான விடை எழுதியிருக்கிறார்கள்... மூவரின் விடைத்தாள்களிலும், எல்லா பதில்களும் ஒரே வரிசையில் இல்லை. ஆகவே ஒவ்வொரு மாணவனின் சரியான / தவறான விடைகளும், வெவ்வேறு //
மீதம் உள்ள நான்கில் சரியான விடை இருந்தால் மட்டுமே மதிப்பெண்...!
5) // அந்த மூன்று மாணவர்களுக்கும் என்ன advice கொடுப்பீர்கள்...? //
இந்த விவரத்தை அந்த மூவர் உட்பட அனைவருக்கும் விளக்குவேன்... சரியான பதில்கள் உறுதியானதை முதலில் எழுதச்சொல்வேன்... நேரம் கிடைக்கும் போது எங்கள் Blog வலைத்தளத்தை படிக்கச் சொல்வேன்...!
Good response. Thank you.
நீக்குகடைசியில் எங்களுக்கு ஐஸா!
நீக்குஹா... ஹா... தங்களின் மாணவனாக...
நீக்குமுதலாம் ஆண்டு படிக்கும் போது, [PACR Polytechnic,(இப்போது கல்லூரி) Rajapalayam] முதல் செமெஸ்டர் தேர்வில் "Textile Chemistry"-ல் அடியேன் தான் அதிக மதிப்பெண் எடுத்து முதலிடம்... எனக்கே வியப்பு... பேப்பரை வாங்கி பார்த்தவுடன் தான் தெரிந்தது... ஏழு கேள்விகளுக்கு ஐந்து எழுத வேண்டும்... தெரியாமல் 7-யும் எழுதி இருந்தேன்... மனம் + உடம்பு முழுக்க படபடப்பு... நண்பர்களிடம் சொன்னேன்... அவர்கள் ஆசிரியரிடம் (HOD) சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்... அதன் பிறகு அந்த தவறை செய்யவில்லை, Textile Chemistry-யை மட்டும் அதிகம் கவனம் எடுத்து படித்தது எல்லாம் வேறு கதை...! ஆனால், செய்த தவற்றை, மனச்சாட்சி இன்று வரை உறுத்துகிறது...!
// ஆனால், செய்த தவற்றை, மனச்சாட்சி இன்று வரை உறுத்துகிறது//
நீக்குநீங்கள் செய்ததில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
நல்லா இருக்கு டிடி! நான் ஃபெயில் ஆகும் மாணவிக்கு நிறைய மதிப்பெண்கள் கொடுத்து ஊக்கப்படுத்துவேன். முதல் இடத்தில் வரும் மாணவனிடம் தவறான பதிலைச் சுட்டிக்காட்டி இனி கவனத்துடன் பதில் அளிக்குமாறு சொல்வேன். சராசரி மாணவனின் முன்னேற்றத்தைப் பாராட்டுவேன்.
நீக்குஆஆஆஅ கிளவிகளும் பதில்களும் வந்திட்டுதோஓஓ என்னாதூஉ இம்முறை கிளவி கேட்கும் நமக்கே கிளவியாஆ சே சே கேய்வியா?:)... ஹையோ ஜிந்திக்கவே நேரம் போதல்ல.... பின்பு வாறேன்ன்ன்
பதிலளிநீக்குஅதுசர் அது எந்த ஊரு முசல்பிள்ளை:) அப்பூடி வித்தை காட்டுதே... எங்கட. ............... போல:) ஹா ஹா ஹா
பதிலளிநீக்குதேவக்கோட்டை முசலு!
நீக்குஹா ஹா ஹா அப்போ மேகலாக்கா பிடிச்சிடப்போறாவே... ஹா ஹா ஹா...
நீக்குஉங்கள் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் கேள்வியைப் படித்தேன்.
பதிலளிநீக்குமுதலில் ஒவ்வொருவரும் அடுத்தவன் பேப்பரை எழுதி முடித்ததும் வாங்கி காப்பி அடித்திருப்பார்களோ என்று தோன்றியது. இருந்தாலும் சந்தேகத்தின் பலனை மாணவர்களுக்கே கொடுக்கலாம் என்று நினைத்துவிட்டேன்.
மூன்று பேரும் ஒரே மதிப்பெண்கள் எடுப்பார்கள் (7 சரியான விடையினால்). ஆனால், எப்போதும் ஃபெயில் ஆகும் மாணவனுக்கு *"3 ஸ்டார்"*, ஆவரேஜ் மாணவனுக்கு *"2 ஸ்டார்"*, நன்றாகப் படிப்பவனுக்கு, *மூன்றாவது ரேங்க்*தான். இது முதல் இரண்டு மாணவர்களை மோடிவேட் செய்யும்.
எப்போதுமே முழுவதும் விடை தெரியும் கேள்விகளைத்தான் விடைத்தாளில் எழுதவேண்டும். அந்த இம்ப்ரெஷனிலேயே கடைசி வரை பேப்பர் திருத்துவார்கள்.
நீங்கள் தேர்வைப் பற்றிக் குறிப்பிட்டபோது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. என் தமிழாசிரியர் கிரகோரி அவர்கள் (பாளையங்கோட்டை தூய சவேரியார் மேநிலைப்பள்ளி), தமிழ் விடைத்தாளில், நாம் ஒவ்வொரு கேள்விக்கும் அந்தச் செய்யுள்களையும் சேர்த்து எழுதினால் கூடுதலாக 1/2 மதிப்பெண் தருவார். 2 மதிப்பெண் கேள்விக்கும் சமயத்தில் 2 1/2 மதிப்பெண் தருவார். வெறும் கோனார் உரை மட்டும் படிக்கக்கூடாது, மாணவர்கள் தமிழ்செய்யுளில் ஆர்வம் காட்டவேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
என்னோட கேள்வி! இதைக் கேட்டது நம்ம எங்கள் பிளாக் வாசக நேயர் சிநேகித சிநேகிதிகளில் ஒருத்தர்! நானும் நாலு நாளா மண்டை காய்ஞ்சு போய்க் கிடக்கேன். யான் பெற்ற இன்பம் பெறுக நீங்களும்!
பதிலளிநீக்குஅதாவது அவங்க கேட்டது என்னன்னா, ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்லோரும் எல்லாத்தரப்பினரும் வணங்கினார்களா? அல்லது பிராமணர்களால் மட்டும் ஆராதிக்கப்பட்டனரா என்பது தான்! ஆனால் அதிலே ஒரு பிரச்னை என்னன்னா அவங்க ஆழ்வார்கள், நாயன்மார்கள் தவிர்த்துனு கேட்கிறாங்க! //
இதான் அந்தக் கேள்வி. இதைப் பொதுவில் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையோடு அவங்க பொதுவில் கேட்கத் தயங்கி என்னைத் தனியாகக் கேட்டிருக்காங்க. நான் இன்னமும் பதில் சொல்லலை! // பதிலைக் கொஞ்சம் போல் ஒருத்தருக்குச் சொல்லி இருக்கேன். அவர் எனக்கு இது தெரியாதுனு ஒதுங்கிட்டார். நீங்க என்ன சொல்லப் போறீங்க என்று அறிய ஆவலுடன்!
//திடமான மனசு இருப்பவங்க// - இதெல்லாம் எப்போவோ பார்த்திருக்கிறேன். எந்தப் பெண்ணும் எல்லாக் கோணத்திலும், அல்லது எல்லா நேரத்திலும் அழகாக இருக்க மாட்டாங்க. 'அழகு' என்பது ரொம்ப ரிலேடிவ் வார்த்தை. ஒருத்தருக்கு ஒன்று அழகுன்னா, இன்னொருத்தருக்கு இன்னொன்று அழகு (ஆண்கள் பார்வையில்). அப்படி இல்லையென்றால், உலகத்தில் காதல் திருமணங்கள் எப்படி நடக்கும்? பொதுவா முதன் முதல் ஈர்ப்புக்குத்தான் அழகு முக்கியம் (அதுவே பலருக்குத் தேவையில்லை). அதற்கு அப்புறம், அவங்க மன நலம் தான், அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும். ரொம்ப அழகாக தேவதை மாதிரி இருக்கும் பெண், அவள் பெற்றோரை அவமதித்துப் பேசுபவராக இருந்தாலோ இல்லை இரக்கமில்லாமல் இருப்பதைக் கண்டாலோ, அவளுடைய காதலன் ஓவர் நைட்டில் டாட்டா காண்பித்துவிடமாட்டானா?
பதிலளிநீக்குகீசா மேடம் - //ஶ்ரீராமனையும் ஶ்ரீகிருஷ்ணனையும் எல்லோரும் எல்லாத்தரப்பினரும் வணங்கினார்களா?// - நீங்க கேட்டிருப்பது 'எல்லாச் சாதியினரும் வணங்கினார்களா' என்பதுதான். ஆம் என்பதுதான் பதில். அதாவது, யார் 'ஸ்ரீராமன்' அல்லது 'ஸ்ரீ கிருஷ்ணன்' மீது அன்பு கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லோரும் வணங்கினார்கள். இதில் பிராமணர்கள் என்பவர்கள் மட்டும் வராது. வைணவர்கள் (இதுவும் எல்லாச் சாதியையும் உடையது) நிச்சயமாக வணங்கினார்கள். சைவர்கள் (எல்லாச் சாதியும் உண்டு), சிவனை முக்கியத் தெய்வமாக வழிபட்டனர். ஸ்ரீராமரையும் ஸ்ரீகிருஷ்ணரையும் வணங்கினாலும், அவர்களிலும், 'தீவிர' சைவர்கள், அதாவது சிவன், பார்வதியை........ மட்டும் வணங்குபவர்கள் உண்டு.
பதிலளிநீக்குபிராமணர்களிலேயே, இப்போதும், முக்கியத் தெய்வமாக பலவித தெய்வ உருவங்கள் இருக்கின்றன. சிலருக்கு நரசிம்ஹர்தான் ஆராதனை தெய்வம்.
அந்த மூன்று மாணவர்களும் காப்பி அடித்திருக்கக்கூடும் என்றுதான் தோன்றுகிறது. விடைகளை ஒரே வரிசையில் எழுதாதது ஒரு ட்ரிக். அதனால் அந்த மூன்று மாணவர்களையும் மீண்டும் தனித்தனியாக அதே கேள்விகளுக்கு விடை எழுதச் சொல்வேன். எப்போதும் fail ஆகும் மாணவன்/மாணவி , இந்த முறையும் தேர்ச்சி அடைய மாட்டான்/ள் . ஆவெரேஜ் மாணவன்/மாணவி பார்டரில் பாஸ் ஆகலாம். எப்போதும் முதல் இடத்தைப் பிடிக்கும் மாணவன்/மாணவி கண்டிப்பாக 50+ எடுத்து விடுவார்கள். அவனுடைய பெற்றோர்களை மட்டும் அழைத்து பேசுவேன்.
பதிலளிநீக்குஎன்னுடன் படித்த ஓர் பெண், பின்னாளில் ஐ.ஏ.எஸ். எழுதி தேர்வானாள். கல்லூரி தேர்வுகளில் எந்த கேள்வியையும் சாய்ஸ் இல் விட மாட்டாள். எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி விடுவாள். "நான் எழுதி விட்டேன், அவர்கள் எந்த விடைக்கு வேண்டுமானாலும் மார்க் போட்டுக் கொள்ளட்டும்" என்று விடை திருத்துபவர்களுக்கு சாய்ஸ் கொடுப்பாள்.
பதிலளிநீக்குநடிகைகளின் திரையில் தெரியும் அழகிற்கு மேக் அப் மட்டும் காரணமில்லை. காமிரா மேனின் திறமையும் ஒரு காரணம். சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு சார்ம்(charm) இருக்கும். இந்த தொகுப்பில் வேண்டுமென்றே நடிகைகள் வெகு casual ஆக இருந்தபொழுது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேர்த்திருக்கிறார்கள். அல்லது அதுவும் ஃபோட்டோ ஷாப் ஆக இருக்குமோ?
பதிலளிநீக்குவிஞ்ஞான பூர்வமாகக் கேள்வி விடைகள் அமைந்திருக்கிறது
பதிலளிநீக்குஆசிரியர்கள் எல்லோருமே பதில் சொல்வது
அனுபவிக்கும் படி இருக்கிறது.
பதில் சொல்லப்படாத கேள்விகள் எந்த நரகத்துக்குப் போகும்
இது இந்த வாரத்துக்கான என் கேள்வி.
சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன....கௌ அண்ணாவுக்கு 5 வீக்கங்கள் உட்பட!!!! ஹிஹிஹிஹி...அம்மா என்று பொதுவாகச் சொல்லி குழந்தைகளின் அம்மா நுதான் சொன்னேன் என்று வீட்டம்மாவிடம் தப்பித்துவிடலாமே!!!.
பதிலளிநீக்குகீதா
ஆ!ஆஆஆ! இந்த நடிகைகள் எல்லாம் மேக்கப் இல்லைனா அவங்க வீட்டு ஆளுங்களாலேயே கூட கண்டுபிடிக்க முடியாது போலருக்கே..!!!! பாவம்!! வீட்டு ஆளுங்க...
பதிலளிநீக்குஅப்ப ஐஸ்வர்யாராய் மேக்கப்போட்டதாலதான் அம்புட்டு அழகா இருக்காங்க!!!
கீதா
சிறப்பான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு1,உங்கள் பார்வையில் தப்பு /தவறு என்பது எது ?
பதிலளிநீக்கு2,லோன் வொர்ட்ஸ் என்கிறார்களே இரு மொழியில் ஒரே வார்த்தை யூஸ் பண்ணுவாங்க ..kaputt ஆங்கிலத்திலும் ஜேர்மனிலும் இருக்கு இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் . அப்படி தமிழை வேறு மொழியினர் கடன் வாங்கி இருக்காங்களா பிற மொழியில் தமிழ் சொற்கள் இருக்கா ?
3,Child prodigies பலர் வாழ்க்கையில் இளவயதிலேயே அஸ்தமிப்பது ஏன் ? இன்னும் சிலர் பாதை மாறியும் போறாங்க அதன் காரணமென்ன ?
4,சினிமா சீரியல்களில் சிறு பிள்ளைகளை நடிக்க வைக்க வயது வரம்பு உண்டா ?
5,நம்ம நாட்டில் ஹோம் ஸ்கூலிங் இருக்கா ?
ஏஞ்சல், "குட்டன்" என்னும் அழகான தமிழ் வார்த்தையைத் தான் பெரியாழ்வார் பெரிதும் பயன்படுத்தி இருப்பார். ஆனால் இப்போ அது மலையாளிகளின் தனிப்பெரும் சொத்தாகி விட்டது. "ழ" என்னும் தமிழின் சிறப்பு "ழ"கரத்தையும் அவங்க சொந்தம் கொண்டாடறாங்க! ஏனெனில் இங்கே உள்ள தமிலர்கள் (க்ர்ர்ர்ர்ர்ர்) யாருக்கும் இந்த "ழ" "ள" "ல" உச்சரிப்புப் பாகுபாடு தெரியறதில்லை. இதைத்க் தவிரவும் இன்னும் பல சொற்கள் தமிழில் இருந்து மலையாளத்துக்குப் போயிருக்கு! ஒரு பெரிய பட்டியலே உண்டு.
நீக்குசின்னக்குழந்தைங்க கூடத் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களில் நடிக்கின்றனவே! இஃகி, இஃகி, ஆர்வக் கோளாறில் பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டேன். மத்ததுக்கு எ.பி ஆ"சிரி"யர்களே சொல்லிக்கட்டும்! :)
நீக்கு