வியாழன், 27 செப்டம்பர், 2018

வயசுக் கோளாறு



சி நே சி ம  

"மாப்பிளே..  உபேரா, ஓலாவா ..  என்ன 'ஆப்' வச்சிருக்கீங்க... எனக்கு ஒரு வண்டி புக் பண்ணுங்க...  எங்க அண்ணன் கிளம்பறார்.."

சித்ராவின் ஒன்று விட்ட மாமா இவனிடம் வேண்டுகோள் வைத்தபோது ராஜாராமன் பந்தி பரிமாறுவதில் இருந்தான்.

"இதோ வர்றேன் மாமா...  ஃபோன் அங்கே இருக்கு...  கொஞ்ச நேரம் கழிச்சு பண்றேன்..."

"சின்ன வண்டி புக் பண்ணுங்க போதும்...  அவன்  ஒருத்தன்தான்...  நீங்க பாட்டுக்கு தாம்தூம்னு உங்க வழக்கம் போல பெரிய வண்டி புக் பண்ணிடாதீங்க..."

பல்லைக் கடித்தான் ரா.ரா.   தொடர்ந்து ஒரு வரி கூட இவரோடு சாந்தமாய் பேச முடியாது...   மனைவி அவன் கையை அமுக்கி அமைதி காக்கச் சொன்னாள்.  "அதான் நான் வரமாட்டேன்னேன்..."  மனைவியிடம் பல்லிடுக்கில் பேசினான்.  மாமா பக்கம் திரும்பியவன்,

"அதோ இருக்கு ஃபோன்...   நீங்களே புக் பண்ணிக்கோங்களேன்.."

"அதெல்லாம் தெரிஞ்சா நான் பண்ணிக்க மாட்டேனா மாப்பிளே.."    'ஹா ஹா ஹா' என்று சிரித்தார்.


நன்றி இணையம்.

வண்டி புக் செய்யப்போனவன் "இப்போ ஒன்றும் வண்டி அவைலபில் இல்லை மாமா..  கொஞ்ச நேரம் போகட்டும்" என்றான். 

மூன்றாவது பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ராஜாராமன்.  முதல் பந்தியின் பாதியிலிருந்தும், இரண்டாவது பந்தியிலும் பரிமாறிவிட்டுதான் உட்கார்ந்திருந்தான்.  


நன்றி இணையம் 

கல்யாணம், விருந்து என்று போனால் சாப்பிட்டு முடித்த உடன் சமையல் பொறுப்பாளரைப் பார்த்து பாராட்டி விடுவது எப்போதுமே ராஜாராமன் வைத்திருக்கும் பழக்கம்.

"நீங்க பிளான் பண்ணிகிட்டே இருந்தீங்க...   நாங்க முடிச்சிட்டோம் பார்த்தீர்களா?"  எதிரே மாமா நின்றிருந்தார்.

நிமிர்ந்து பார்த்த ராஜாராமன் சாந்தமாகப் புன்னகைத்தான்.   மனைவியைத் திரும்பிப் பார்த்து விட்டு (விடமாட்டார் போல) சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

சித்ரா நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"இவர் நான் புக் செய்த ஆள்...   இவரைவிட சிறப்பாக வேறு யாரும் சமையல் செய்ய முடியாது...  எங்களுக்கே திருப்தியாய் இருந்தால்தான் ஒத்துக்கொள்வோம்... எப்படி? "

மனைவி வழி உறவினர் வீட்டு விழா.   மனைவியின் உறவினர் சமையலுக்கு ராஜாராமன் வீட்டுக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்த இரண்டு சமையல் மாமிகளை கேட்டுப்பார்த்தார்.   அவர் போட்ட கண்டிஷன்களுக்கு இந்த இரண்டு மாமிகளும் ஒத்துவரவில்லை.   வேறொரு நபரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தபோது  "நாங்கள் ஒரு ஆளை முடிவு பண்ணிவிட்டோம்" என்றார்.    இவை எல்லாம் இரண்டே நாட்களில் நடந்த சம்பவங்கள்.

சாதத்துக்கு சாம்பாரையே அளந்துதான் ஊற்றினார் பரிமாறுபவர்.  காயையே காணோம்.  தான் முதல் பந்தியில் பரிமாறியபோது நிறைய சாம்பார் இருந்ததை கவனித்திருந்தான் ரா.ரா.  காயும் இப்போது அளவாகவே விழுந்தது.  வடை ஒன்றே ஒன்று!

என்ன நடந்திருக்கும் என்று ராஜாராமனுக்கும் தெரியும்.  முதல் பந்தி முடிந்த கையோடேயே விழா நடத்திய அந்த உறவினரின் நண்ப, நண்பிகள் பாத்திரங்களுடன் வந்து பார்சல் எடுத்துச் செல்வதை முதல் நாளே கவனித்திருந்தான்.  முதல் நாள் இரவு ஒரு சப்பாத்தி, இரண்டு இட்லியுடன் இவனை அனுப்பி விட்டிருந்தனர்.

சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவியவன், மொபைலை எடுத்து அந்த மாமாவுக்கு ஒரு வண்டி புக் செய்தான்.  


நன்றி இணையம்.


"சின்ன வண்டிதானே மாப்பிளே..?"

"ஆமாம்...  டி வி எஸ் 50..."  

"ஹா...   ஹா..  ஹா...   மாப்பிள்ளைக்கு குறும்பு.."  மாமா தனது அண்ணனிடம் கைகாட்ட, அவர் தனது பைகளைச் சேகரம் செய்துகொண்டு வாசல் நோக்கி நடந்தார்.  

சமையல் பொறுப்பாளர் பக்கம் வந்ததும் நின்றான் ரா ரா.   இயல்பான இவன் பழக்கத்தால் கையை நீட்டி அவர் கைகளை பற்றி குலுக்கி "எல்லாம் நல்லா இருந்தது.. " என்றான்.  அவர் அளவாக மகிழ்ந்து "தேங்க்ஸ்" என்றார்.

கிளம்பப் போனவனை கூடவே வந்த மாமா தடுத்தார்.  "என்னம்மா சித்ரா...   என்ன சொல்றான் உன் புருஷன்..."  சித்ராவைக் கேட்டு விட்டுஅட்டகாசச் சிரிப்பு சிரித்தார் மாமா.  தொடர்ந்து "எப்படி எங்க ஆளு?  நீங்க சொன்ன கான்டராக்ட் ஆள் கேட்ட காசுல பாதி காசுலயே ஏற்பாடு பண்ணியிருக்கேன்"  ராஜாராமைப்பார்த்து பெரிதாகச் சிரித்தார்.

"தெரிகிறதே...   பாதி பாதி சாப்பாடுதான் கிடைக்கிறது...  நேற்று கூட இரண்டாவது பந்தியிலேயே எனக்கு ஒரு இட்லி, ஒரு சப்பாத்திதான் கிடைத்தது.."

சமையல் சங்கடமாய் நெளிந்தார்.  

புன்னகையுடன் கிளம்பியவன் கையைப் பிடித்தார் மாமா.

"ஒவ்வொரு ஐட்டமும் பேசுமே...  என் செலெக்ஷன்ன்னா சும்மாவா...   என்ன மாப்பிளே..  சொல்லுங்க சாம்பார் எப்படி?"

சித்ராவைத் திரும்பிப் பார்த்தான் ராஜாராமன்.

"சாம்பார் அரைக்கல்லு உப்பு அதிகம்னாலும் ஓகே மாமா..   காயைத்தான் ஒன்றையும் காணோம்..."

சமையல் பொறுப்பு நிமிர்ந்து மாமாவைப் பார்த்து விட்டு ராஜாராமனைப் பார்த்தார்.

"தீர்ந்திருக்கும் மாப்பிளே..  கடைசிப் பந்தியில் உட்கார்ந்தால் எப்படி?  

"மாமா..  நான் சாப்பிட்டது மூன்றாவது பந்தி.  அதோ இன்னும் இரண்டு பந்தி ஓடவேண்டும்..."

"மோர்க்குழம்பு?"

"இருந்ததா என்ன?"

"ரசம் அமர்க்களமான இருந்திருக்குமே..."

   "நன்றாயிருந்தது..  கொஞ்சம் நீர்வளம்..  தாளிதம் வேற கொஞ்சம் கருகி விட்டது போல"

நேற்று ஒரு சப்பாத்தி, இரண்டு இட்லி போட்டதும் இன்னொரு சப்பாத்தி கேட்ட இவனிடம் "இன்னும் ஐந்து பேர் சாப்பிடணும்...   ஐந்து சப்பாத்தியும் பனிரெண்டு இட்லியும்தான் இருக்கு" என்று சொன்ன அந்த சமையல் பொறுப்பாளர் மேலும் நெளிந்தார்.

"அவியல் நல்லாயிருந்ததா இல்லையா?"

'சமையல்'  சித்ராவின் மாமாவை 'போதுமே' என்பது போலப் பார்த்தார்.  'உங்க ரெண்டு பேர் பகைல என் தலை உருளுது...'  -  மைண்ட்வாய்ஸ்!

சித்ரா ராஜாராமனை அதே போல பார்த்து "கிளம்பலாம்" என்றாள்.  

"அவியல் நன்றாயிருந்தது..   ஆனால் தேங்காய்தான் கொஞ்சம் அழுகல் போல..."  ராஜாராமன் விடுவதாயில்லை.

ஏதோ சொல்ல வந்த மாமாவை கைகாட்டி நிறுத்திய ராஜாராமன் "பாயசம் ஜோர் மாமா.. "

புன்னகை பெரிதானது மாமா முகத்தில்.

"எனக்கு எப்பவுமே ஸ்வீட் கம்மியா இருந்தாதான் பிடிக்கும்.  நல்லவேளையா பாயசத்தில் ஸ்வீட்ட்டே இல்லை...  ஆமாம்..  மைசூர்பாகுக்கு நெய் சேர்க்க மாட்டீர்களா?  டால்டாதானா?"

சமையல் பொறுப்பாளர் நொந்துபோய் அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதல் பந்தியில் எல்லோருக்கும் தயிர் போட்டேன்.  இப்போ மோர்தான் எல்லோருக்கும்..  அடுத்த பந்திக்கு மோராவது இருக்குமா தெரியவில்லை.. "

'மொட்டை மாடியில் பந்தி வச்சிட்டு, வரவங் எல்லாம் டம்ளர் டம்ளரா மோர் குடிச்சா நான் என்ன செய்ய...'  முணுமுணுத்துக்கொண்டார் சமையல் காண்டிராக்ட்.

சமையல்காரர் பக்கம் திரும்பிய ராஜாராமன்  "ஸார்.. நீங்கதான் என்ன செய்வீங்க..   இவங்க இவங்க ப்ரெண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் கண்டிப்பு காட்டி இருக்கணும்.."  என்று விட்டு நகர்ந்தான்.

சித்ராவும் பின்தொடர்ந்தாள்.  "நீங்க அவரைப் பாராட்டியே இருக்க வேண்டாம்.." என்றாள் குறையுடன்.

வாசலுக்கு வந்தபோது மாமாவின் அண்ணன் தெருமுனையில் ஒரு டி வி எஸ் 50 காரர் தன் கையிலிருந்த 'செல்'லை பார்த்தபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்து கொண்டிருந்ததை பார்த்து  "அச்சச்சோ...  நிஜமாகவே டி வி எஸ் 50 புக் பண்ணிட்டாரா மாப்பிள்ளை?"  என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

டி வி எஸ் 50 கூரியர்காரருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஊபர்க்காரரிடம் அவரைக் கைகாட்டிவிட்டு தன் பைக்கை நோக்கி நடந்தான் ராஜாராமன்.








அப்புறம்?  என்ன கமெண்ட் போடப்போறீங்க?.....




ஓகே...   அடுத்த வாரம் பார்ப்போம்....


                       

     

81 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ் அண்ணாஸ், தம்பிஸ் நட்பூஸ்..எல்லோருக்கும்

    கீதா



    பதிலளிநீக்கு
  2. தில்லில ஸ்வீட் எடு கொண்டாடுனு வெங்கட்ஜி போட்டிருந்தாரா ஸ்வீட் சாப்பிட்டுக்கிட்டே இங்க ஓடியாந்தேன்...பறந்துதான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கயும் உங்களுக்கு பதில் சொல்லிட்டு, இங்கேயும் பதில் சொல்லிட்டேனே, கவனிக்கலையா கீதா?!!

      நீக்கு
    2. இப்பத்தான் அங்க மற்றொரு கமென்ட் போட்டேன் இங்க வந்ததால் கவனிக்கலை இதோ போறேன்...ஹையோ இன்னிக்கு தில்லி செம கொண்டாட்டமா இருக்கு....சுவையோ சுவைனு...நிறைய பெயர்கள் குறித்துக் கொண்டேன்..நெட்டில் தேடினால் ரெசிப்பிஸ் கிடைக்குமேனு...

      கீதா

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம்.

    ஆஹா.... ஊர்வம்பு! நல்லா இருக்கு! சிலர் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வெங்கட்.

      ஆம். அதுதான் சி நே சி ம!!

      நீக்கு
  5. அந்தக் காலத்தில
    நாகப்பட்டினத்தில காத்தான் சத்திரம்... ன்னு ஒன்னு இருந்ததாம்...

    அது பரவாயில்லை போல் இருக்கு!...

    மிச்சம் பண்றேன் பேர்வழி...ன்னுட்டு
    இலை -
    U & T.. யா!..
    C & C.. யா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இலை - U & T.. யா!..
      C & C.. யா?.. ​//

      ஓ... அபுரி!

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... இப்போல்லாம் இலை போடும் வழக்கம் குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக இலைபோல ப்ளாஸ்டிக்கில் ப்ரிண்ட் செய்து அதனைப் போடுகிறார்கள் (மீண்டும் அலம்பி திரும்பவும் பந்திக்கு வராதுன்னு நினைக்கறேன்.. யாரே அறிவர்...)

      நீக்கு
    3. /// U&T., C&C.. //

      அதே... அதே... சபாபதே!..
      அதே... அதே... சபாபதே!..

      நீக்கு
    4. புதிர் விடுவிக்கப் பட்டது.

      நல்லவேளை..

      இல்லா விட்டால் அடுத்த பதினைந்து நாட்களில் சலூன் போகு வேலை மிச்சமாகி இருக்கும்!

      நீக்கு
    5. அன்பின் நெ. த..

      நம்ம ஊர் பத்திரிக்கை ஒன்னு..
      மாதாந்திரமோ... என்னமோ!..

      இந்தப் பக்கம் பசுமை.. ந்னுவான்..
      அந்தப் பக்கம் பாரம்பரியம் ந்னுவான்.

      ஆனா, பிளாஸ்டிக் இலைக்கு வெளம்பரமும் பண்ணுவான்...

      ஊர்ல சில விருந்துகள்..ல பிளாஸ்டிக் இலைய பார்த்திருக்கேன்...

      எச்சில் இலையத் தின்ன நாய்கள் வயிறு வீங்கி செத்துப் போன சேதிகளும் வந்தது....

      இந்த வருசம் ஓணம் பண்டிகைக்கு இங்கே பிளாஸ்டிக் இலையை வாங்கி அடுக்கி வெச்சிருந்தானுங்க கடைகள்..ல...

      நீங்க சொல்ற மாதிரி உள்ளிருக்கும் ரகசியத்தை யாரே அறிவார்...

      நீக்கு
  6. சில நேரங்களில் சில மனிதர்கள்

    ஹா ஹா ஹா ஹா....செம ஸ்ரீராம்....இப்படித்தான் பல பந்திகளில் சிலர் ஒழுங்கா மேனேஜ் செய்யத் தெரியாமல் காய் மற்ற ஐட்டம் எல்லாம் குறைந்து போகும்....கடைசி பந்தியில் கேட்கவே வேண்டாம்...சில சமயங்களில் ஒன்றுமே இருக்காது...அந்த மாமா கொஞ்சம் அலட்டலோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யூகம்! இது கற்பனைதான் கீதா!

      நீக்கு
    2. தில்லையகத்து கீதா ரங்கன் - இதுக்குத்தான் 'பந்திக்கு முந்து' என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனா அந்தப் பழமொழிக்கும் புது அர்த்தம் கண்டுபிடிப்பவர்களுக்கு கடைசிப் பந்திதான் வாய்க்கும். ஹாஹா

      நீக்கு
    3. ஹையோ நெல்லை ஹைஃபைவ். இதை காலைல சொல்ல நினைத்து ஓடிப் போய்ட்டேன் இப்ப வந்து சொல்லனும்னு வந்தா நீங்க முந்திக்கிட்டீங்க...ஹா அஹ ஹா ஹா ஹா....பந்திக்கு முந்திக்கோ சபைக்குப்/படைக்குப் பிந்திக்கோ....

      கீதா

      நீக்கு
  7. டிவிஎஸ் 50 ஹையோ ரொம்பவே சிரித்துவிட்டேன் ஸ்ரீராம்...சிரிச்சு முடில...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைக்கிள விட்டிட்டீங்களே!!! ஹா ஹா ஹா ஹா ஆனா அது கூட ஊபர் ஓலாவை விட சீக்கிரம் போயிடும் இடுக்குல நுழைந்து...

      கீதா

      நீக்கு
    2. ஹா... ஹா.. ஹா..

      சென்னையிலேயே இப்போது சைக்கிளை 'அவர் வாடகை'க்கும், 'நாள் வாடகை'க்கும் விடும் திட்டம் அரசாங்க சார்பிலேயே கொண்டு வந்திருப்பதாக செய்தியில் படித்தேன் கீதா...

      நீக்கு
    3. ஓ மெய்யாலுமா ஸ்ரீராம்....ஏன்னா நான் சைக்கிள் ஓட்டலாமானு யோசனைல இருக்கேன்...ஆனா என் ஹைட்டுக்கு சைக்கிள் அதுவும் லேடிஸ் சைக்கிள் பழசு கிடைக்க மாட்டேங்குது. 7, 8 ஆங்க்கிளாஸ் பசங்க ஓட்டற சைக்கிள் கிடைக்குதானு பார்க்கணும் ஹா ஹா ஹா ஹா ஹா

      சென்னைல கொண்டு வந்திருக்காங்கனா ரொம்ப நல்ல திட்டம் ஸ்ரீராம். ஜப்பான்ல பலரும் சைக்கிள் பயன்படுத்துவாங்க. என் மகன் இருக்கும் இடத்திலும் சரி யுனிவெர்சிட்டி க்ளினிக்கிலும் சரி ப்ரொஃபஸர்ஸுமே சைக்கிள் ல தான் வருவாங்களாம். இவன் ஏரியா பசுமை, புகை இல்லா கிராமமாம்....அவன் சொன்னப்ப என் காதுல புகை வந்துச்சு.!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் கீதா... மிகச் சமீபத்தில் செய்தித்தாளில் படித்தேன்.

      நீக்கு
    5. இதை மாதிரி வேண்டாத வேலை கிடையாது. இங்க முதல்ல சைக்கிள் போக ரோடு எங்க இருக்கு? முதல்ல லேன் டிசிப்பிளின் இல்லாத ஊருக்கு சைக்கிள் வெட்டிவேலை என்பது என் அபிப்ராயம். 7000 ரூ சைக்கிளை 12000க்கு வாங்குவதில்தான் இது முடியும். நம்ம ஊர் இன்ஃப்ராஸ்டிரக்சர், பாதையோர ஆக்கிரமிப்பை சரி செய்யாமல் இதெல்லாம் வீண் வேலை.

      நீக்கு
  8. இது எங்களுக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை நினைவூட்டுகிறது. 2011 ஆம் ஆண்டு எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரும் நபர்களுக்குச் சாப்பாடு போட நாங்க கும்பகோணத்தில் ஒருவரிடம் சொல்லி நூறு சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தோம். ரோடு வேறே கொத்திப் போட்டிருந்தாங்க. இத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தில் சாப்பாடு வந்ததும் சாப்பிட்ட தாயாதிக்காரர்கள் சிலர் அந்த ஊரில் அவங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களை எல்லாம் பாத்திரம் கொண்டு வரச் சொல்லிச் சாப்பாடை அவங்களே அள்ளி அள்ளிக் கொடுத்தாங்க. நம்ம ரங்க்ஸோ காந்தியின் ஸ்வரூபம். வாயே திறக்கலை. பார்த்துட்டுப் பேசாமல் இருந்தார். சமையல் கான்ட்ராக்டரோ இன்னும் 30 பேர் சாப்பிடணும், சாப்பாடு பத்தாமல் போயிடும்னு என் கிட்டே புலம்பல்! கடைசியில் அப்படித் தான் நடந்தது. எங்களுக்கும் கடைசிப் பந்தியில் உட்கார்ந்த இன்னும் பத்துப் பேருக்கும் பாயசம் கூடக் கிடைக்கலை. :( சிலர் அப்படித் தான். தங்களுக்கு வேண்டும் என்றால் மத்தவங்களுக்கு இருக்கானு பார்க்க மாட்டாங்க! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இது எங்களுக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை நினைவூட்டுகிறது.//

      இதில் அது ஒன்று மட்டுமே அல்ல அனுபவம்!

      இது நான் இல்லாத, ஆனால் நான் பார்த்த மூன்று அல்லது நான்கு கேரக்டர்களைக் கலந்து செய்த கற்பனை கீதா அக்கா. ஒவ்வொன்றிலும் ஒரு குணநலன். ஆனால் ஒரு அணுவில் நானும் இருக்கிறேன்! ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    2. நீங்களே சொல்லிட்டீங்களா ஸ்ரீராம்...ஹா ஹா ஹா ஹா...அப்ப நானும் சொல்லிடலாம் உங்களைக் கண்டு பிடிச்சிட்டேனே!!!

      கீதா

      நீக்கு
    3. நான் அனுபவத்தைச் சொன்னேன் கீதா.. நீங்கள் சொல்லி இருந்ததும் (121) சரிதான்!

      நீக்கு
  9. தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு ம.கா. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்புக்கும் இதற்கும் சம்பந்தமா? கண்டு பிடிங்க! ஹா... ஹா.. ஹா..

      நீக்கு
    2. யார் வயசுக்குக் கோளாறு.
      மாமாவைச் சமாளித்த ராஜாராமன் வாழ்க. கொஞ்சம் கிலியும் பட வைத்த சாம்ர்த்தியம்
      ஆஹா ஆஹா..
      எந்த இடத்துக்குப் போனாலும் டிபன் காரியர் கொண்டு வருபவர்களைப் பார்த்திருக்கிறேன்.

      கேட்டால் வேஸ்ட் நாட் வாண்ட் நாட் என்பார்கள்.
      யாருக்கு வேஸ்ட் யாருக்கு வாண்ட்னு கோபமா வரும்.

      இந்த மாதிரிப் பிரகிருதிகளை ஒன்றும் செய்ய முடியாது.

      நீக்கு
    3. வாரப்பத்திரிகைகளில் ஏன் பெண்கள் போட்டோவை அட்டைப்படமாக போடுகிறார்கள் அது போலத்தான் இது ஸ்ரீராம்மின் வயசுக் கோளாறு.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா.. எல்லா பந்தியும் முடிந்தபிறகு மிஞ்சுவதை பிரித்து எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் முதல் பந்தியில் சாப்பிட்டவர்கள் பாக்ஸுடன் நிற்பதை சில இடங்களில் பார்த்திருக்கிறேன்!

      நீக்கு
    5. வாங்க JK ஸார்.. வராத உங்களையும் இந்தப் பக்கம் வரவழைத்திருக்கிறது வயசுக்கோளாறு!!!

      நீக்கு
    6. ஸ்ரீராம் அக்காக்கு மண்டை காயுது!!!!...தேம்ஸ் காரங்க வந்தா அக்காவைத் தூக்கி காவிரில போட்டுருவாங்க மண்டை குளிரனு!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    7. கீதாக்கா எல்லாம் அந்த ராஜாராமனும், அந்த மாமாவுக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைதான்....அவர் பேச்சு அதற்கு ரா ரா வின் பதில் நக்கல் நையாண்டி அந்த மாமாவின் சுய தம்பட்டம்...என்று...

      என் பாட்டி கூட சில சமயம் அப்படித்தான்...என் கஸின் சொல்லுவான் பாட்டி கீதா நல்லா அடை பண்ணிருக்கா இல்லியானு கேட்டால், பாட்டி, "இதென்ன பெரிசு? நான் அடை வார்த்தா ஊருக்கே மணக்கும்.... கூடிடும்" என்று சொல்வதைக் கேட்டு நாங்கள் அனைவரும் சிரிப்போம். இப்படி பாட்டியைக் கலாய்ப்பதற்காகவே என் கஸின் கள் என்னைச் சொல்லுவார்கள்...

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. வயதான மாமா, இளம் வயது மருமகன் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அழகாய் வயசுக் கோளாறு என்று கவர்ச்சியான தலைப்பை போட்டு இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாய்ச் சொன்னீர்கள் கோமதி அக்கா... இருவருக்குமே பொருந்தும்.

      நீக்கு
  12. அனுபவ பகிர்வு அருமை. வந்தவர்களுக்கு உணவு இல்லாமல் வீட்டில் இருக்கும் ஆட்களுக்கு எடுத்து போவதால் ஏற்படும் விளைவு.
    இப்போது இலை கணக்கு போடுகிறார்கள் சமையல்காரார் இது போல் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் இத்தனை இலை என்று சொல்வது ஒரு கணக்காய் இருக்கும். ஆனால் இப்படி நடந்தால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்!

      நீக்கு
  13. சின்ன வண்டிதானே மாப்பிளே..?"

    "ஆமாம்... டி வி எஸ் 50..." //

    நல்ல நகைச்சுவை.


    //டி வி எஸ் 50 கூரியர்காரருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஊபர்க்காரரிடம் அவரைக் கைகாட்டிவிட்டு தன் பைக்கை நோக்கி நடந்தான் ராஜாராமன்//

    கடைசியிலும் அதை கொண்டு வந்தது அருமை.

    பதிலளிநீக்கு
  14. சில நேரம் சில மனிதர்கள் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  15. படிக்கும்போது சங்கடம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எப்படி டப்பாக்களைக் கொண்டுவந்து உணவை வாங்கிச் செல்வார்கள்?

    இதை எண்ணும்போது, நான் 4வது படித்த ஊரில், நகரத்தார்கள், பங்குனி (என்று ஞாபகம்) மாதத்தில் இலவச பானகம், நீர் மோர் ஒரு கட்டிடத்தில் வழங்குவார்கள் (பூலான்குறிச்சி, பொன்னமராவதிக்கு அருகில்). அதைத் தயாரித்து வழங்குவது ஒரு பிராமண குடும்பம். எங்கள் வகுப்பு ஆசிரியர், என் நண்பனை (அந்தக் குடும்ப உறுப்பினர்) இரு சொம்புகளோடு அனுப்பி, பானகமும் நீர்மோரும் கொண்டுவரச் சொல்லுவார்.

    மனித மனமே பொதுவா, இலவசத்துக்கு ஆசைப்படுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்...

      சங்கடம்தான். ஒரு பெண்.. டப்பாக்களில் உணவுப்பொருள்களை சேகரம் செய்துகொண்டே அருகில் இருக்கும் மகனிடம் சொல்கிறார்.. இதோ நீ பாட்டுக்க இப்படி உட்காரு.. அவங்க பாட்டுக்க பரிமாறுவாங்க.. சாப்டுட்டு வா.." உண்மையில் அந்த விழாவுக்கோ அந்தப் பெண்ணுக்கோ சம்பந்தமே இல்லை. இதில் மகன் வேறு... டப்பாக்களில் பார்சல் வேறு..!

      நீக்கு
    2. நெல்லை இது ரொம்ப சகஜமாக்கும் இங்கு. ரொம்பவே சங்கடமான விஷயம்தான். பலரும் அவர்களது ராத்திரி சாப்பாடு வரை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். கடைசியில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு..அதாவது சமையல் செய்தவர்களும் - ஆனால் சமையல் செய்தவர்கள் சாப்பிடுவதில்லை பொதுவாக. எடுபிடிகள்தான் சாப்பிடுவார்கள் - மீந்திருந்தால் எடுத்துக் கொண்டு போவது ஓகே. ஆனால் பலரும் ஊருக்குச் செல்பவர்களா இருந்தால் கைக்கு வேறு கட்டிக் கொண்டு போய்விடுவார்கள். எனவெ நாங்கள் எங்கள் வீட்டில் யாருக்கெல்லாம் எக்ஸ்ட்ரா வேண்டும் என்று கேட்டு அதாவது பார்சல் வேண்டும் என்று கணக்கிட்டு அதையும் சொல்லிவிடுவோம். பொதுவாகப் பார்சல் என்றால் புளியோதரை தயிர்சாதமாகத்தான் இருக்கும். டிபன் என்றால் இட்லி யாக இருக்கும்.

      இல்லை என்றால் பத்தாமல் போய்விடும்...கல்யாணங்களில் கூட உறவினர்கள் சாப்பிடும் போதே பரிமாறுபவர்களிடம் பார்சல் சொல்லிவிடுவதையும் பார்த்திருக்கிறேன். நெருங்கிய உறவினர் சிலர் திருமணங்களில்/அல்லது வீட்டு விசேஷங்களில் (சிலர் தான்) அவர்களே ஊருக்குச் செல்பவர்களிடம் வந்து எப்போது ரயில்/பஸ் கிளம்பணும் என்ன கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டு சமையல் செய்பவரிடம் சொல்லி கட்டிக் கொடுத்து விடுவதையும் பார்க்கிறேன்.

      ஸ்ரீராம் சொல்வது போல் சம்பந்தம் இல்லாதவர்களும் கூட வருவதுண்டு. பாவப்பட்டவர்களாக இருந்தால் நாங்கள் கண்டு கொள்வதில்லை.

      கீதா

      நீக்கு
    3. இதைத்தான் ஊர்ல விருந்து மார்ல சந்தனம் ன்று சொல்வார்களோ!

      பார்சல் கேட்பார்கள் என்று எதிர்பார்த்து இதுவரை நாங்கள் கணக்கு சொன்னதில்லை கீதா..

      என் பையன்கள் அவர்கள் டீனேஜில் ஒரு த்ரில் செய்வார்கள். எனக்குப் பிடிக்காது. அதாவது அருகாமையில் இருக்கும் திருமணம் நடக்கும் இடங்களில் சென்று சாப்பிட்டு வந்து விடுவார்கள். அவர்கள் கல்லூரிக் காலத்தில் இதெல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் த்ரில் விளையாட்டு...

      நீக்கு
  16. விருந்து நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  17. எங்கேயாவது எதையாவது லவட்டமுடியுமா என்று பார்ப்பது மனித மனத்தின் ஒருகூறுபோலும். பெரும்பாலானோர் இந்த குணத்தை லகான் போட்டு அடக்கிவைத்திருக்கிறார்கள். அடக்கமுடியாதவர்கள் சொம்புதூக்கி அலைகிறார்கள் - நீர்மோரோ, பாயசமோ, வெறும் ரசமோ ஏதாவது கிடைத்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசு கொடுக்கணும் என்றால், தேவையா அல்லது தேவையில்லையா என்று யோசிக்கும் மனம் (அதிக காசாக இருந்தால், அவசியம் தேவையா/இல்லையா என்று யோசிக்கும்), இலவசம் என்றால், தேவையோ தேவையில்லையோ, வாங்கிக்கொள்ளத் துடிப்பது ஏன்? (இந்த எண்ணம் எல்லாருக்குமே பொது என்று நினைக்கிறேன்)

      நீக்கு
    2. அலுவலகங்களில் நடக்கும் பிரிவுபசார அல்லது ப்ரமோஷன் பார்ட்டிகளில் கூட இதே நிலையைப் பார்த்திருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.. அதிலும் உயர் அதிகாரிகள்... என் உயர் அதிகாரி ஒருவர் செய்த கூத்து ஒன்றைச் சொல்லவேண்டும்.

      டெல்லியிலிருந்து உயர் அதிகாரிகள் வருகை என்று நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் கடையிலிருந்து உயர்வகை முந்திரி பருப்பு வாங்கி மேசை மேல் சிறு பேப்பர் தட்டுகளில் வைத்திருந்தோம். அவர்கள் அதை சீந்தவே இல்லை.

      அவர்கள் எழுந்து அறையை விட்டு வெளியே சென்றதும் எங்கள் உள்ளூர் அதிகாரிகள் (இரண்டு பெண்மணிகள்) எல்லோருடைய முந்திரி பருப்புகளையும் சேகரம் செய்த்து ஹேண்ட்பேகில் கொட்டிக் கொண்டார்களே பார்க்கவேண்டும்...!

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன்..

      ஒரு ஜோக் உண்டு... "ஒரு பேனா ஐந்து ரூபாய்" என்பார் கடைக்காரர். வாங்க வந்தவர் பேரம் பேசுவார். விலையைக் குறைத்துக்கொண்டு வருவார். ஒரு ஸ்டேஜில் கடுப்பான கடைக்காரர் "இந்தா சும்மாவே எடுத்துக்கோ" என்பார். உடனே வாங்க வந்தவர் "அப்படீன்னா ரெண்டா கொடு" என்பார். கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஜோக் ரிதம் படத்திலும் இடம்பெற்றது!

      நீக்கு
    4. நெல்லை யெஸ் இலவசம்னா அப்படித்தான்...மனித மனம்...

      ஸ்ரீராம் ஹையோ அதை ஏன் கேக்கறீங்க.....உயர் நிலையில் இருப்பவர்கள் கூட இப்படித்தான் செய்கிறார்கள். எப்படி மனம் வருது என்று எனக்குத் தோன்றும். மனம் கூசாதா? என்று.

      கீதா

      நீக்கு
  18. பதில்கள்
    1. யாருக்கு? யாருக்கோ...

      ஹா ஹா அதிரா.. படித்துப் பார்த்தால் தெரிகிறது!

      நீக்கு
  19. கதம்பத்தை நிறுத்தி விட்டுக் கதை சொல்லத் தொடங்கியிருக்கிறார் ஶ்ரீராம்:).. இதுவும் நல்லாத்தான் இருக்கு...

    புண்ணியம் தேடி காசிக்குப் போவினம் நான் புண்ணியம் தேடி ஸ்கூலுக்கு வந்தேன் படிப்பிக்க:) அதனால கும்மி அடிக்க முடியுதில்ல:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பத்தை நிறுத்தவில்லை அதிரா.. இதுவே பெரிதாக இருந்தது.. உங்களை எல்லாம் ரொம்பப் படுத்த வேண்டாமே என்று இதோடு நிறுத்தி விட்டேன்! அதுவும் தொடரும்!

      நீக்கு
    2. அலட்டல் மாமாவுக்கு சொல்ல வேண்டிய பதிலை அழகாக சொல்லிவிட்டு, உதவியும் செய்த ரா.ரா. வல்லவர்,நல்லவர், நாலும் தெரிந்தவர். இது போன்ற கேரக்டர்களை தொடர்ந்து பார்க்கலாமா?

      நீக்கு
    3. ஹா... ஹா... ஹா..

      நன்றி பானு அக்கா.

      பார்த்தால் பார்க்கலாம்!

      நீக்கு
  20. சி நெ சி ம முதலில் புரியவில்லை இப்போதைய குறுஞ்செய்திபோல் கீதாவின் பின்னூடம்பார்த்துபுரிந்துகொண்டேன் நீங்களுமா ஸ்ரீ நான் பார்த்த பந்திகளில் இப்படிக் கண்டதில்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி ஸார்.. வயசுக்கோளாறுன்னு ஒரு தலைப்பு வச்சுட்டேன்... அதனால் முதலில் வைத்த தலைப்பை சுருக்கி விட்டேன்! தமிழும் அழுகிறதோ!

      நீக்கு
  21. வயசுக் கோளாறு என்ற தலைப்பைப் பார்த்ததும் ஏதோ கட்டுரை அல்லது அதைப் பற்றிய கதை என்று நினைத்தேன்! இதுவும் கதைதான் ஆனால் வேறு வித வயசுக் கோளாறு. சி நே சி ம முதலில் புரியவில்லை. அப்புறம் தெரிந்து கொண்டேன். இரு தலைப்புகளோ?

    கதை நன்றாக இருக்கிறது. இந்தப்பக்கமெல்லாம் நான் அறிந்தவரை பந்தியில் இப்படி நடப்பதில்லை. பேக்கிங்கும் இருக்காது. யாரும் பேக் செய்து கேட்பதுமில்லை.

    //சின்ன வண்டிதானே மாப்பிளே..?"

    "ஆமாம்... டி வி எஸ் 50..." //

    நல்ல நகைச்சுவை. சிரிப்பை வரவழைத்தது. கதையில் ஆங்காங்கே நக்கலான நகைச்சுவையுடன் நன்றாக ரொம்ப அழகாக எழுதுகின்றீர்கள் ஸ்ரீராம் ஜி. கவிதையும் சரி கதையும் சரி எல்லாமே கலக்குகின்றீர்கள். கதையை ரசித்தேன்

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளஸிஜி. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கமெண்ட். பாராட்டுகளுக்கு நன்றி.

      நீங்கள் கல்யாண பந்தியில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இது மற்ற இல்ல விழாக்கள், அலுவலக பார்ட்டிகள்.. இபப்டி!

      நீக்கு
  22. Officeல இருந்தது படித்தேன். ஆமாம்... டி வி ஸ் 50... படித்ததும் சிரித்து விட்டேன். Oppositeல இருந்தது colleague கவனித்து 'சரி சரி விஜய்.. right right'னு நக்கலடிக்கிறார்..

    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீகாந்த். நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  23. வயஸுக்கோளாறு இளம்பருவத்துக்காரர்களுக்கான வார்த்தையாக இருந்தது. இப்போ அதுமாறி,முதியவர்களுக்காக ஆகிவிட்டது. எல்லா வகையிலும் எழுதி ஸகலகலா வல்லவன் என்று நிரூபிக்கிறீ்கள். சென்னையில்தான் கட்டுசாதம் .அருமையாகஇருக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா. இது கட்டுசாத வகையறாவில் வராது! சிறு விழா போன்ற நிகழ்ச்சி. நீங்கள் படித்து விட்டு பின்னூட்டம் இட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி அம்மா.

      நீக்கு
  24. //..வயஸுக்கோளாறு இளம்பருவத்துக்காரர்களுக்கான வார்த்தையாக இருந்தது. இப்போ அதுமாறி,முதியவர்களுக்காக ஆகிவிட்டது.//

    ஸ்ரீராம் -படித்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். என்ன செய்வது, காலத்தின் கோலம் என சொல்லிக்கொள்ளலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன் ஏகாந்தன் ஸார்..

      என்னை மாதிரி இளவயதுக்காரர்களுக்கில்லாமல் இப்போதெல்லாம் முதியவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

      சரிதானே?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!