திங்கள், 13 டிசம்பர், 2021

"திங்க"க்கிழமை :  ஓமப்பொடி - சியாமளா வெங்கட்ராமன் ரெஸிப்பி 

 ஜானகி பாடிக்கொண்டே சாமி படத்திற்கு பூவைத்துக் கொண்டிருந்தாள் 

அப்போது *அம்மா அம்மா* ப்ளீஸ் நீ பாடிய சங்கதியை திரும்பவும் பாடு" என்றாள் மாதங்கி. 

தான் பாடிய பாட்டின் சங்கதியை மறுபடியும் ஜானகி பாடினார்

"அடிமுடி காணா ஞானியரும்(யோகியரும்)
கண்டு வணங்கிட மூவுலகு அளந்தவனே
திருவடி வணங்கியே பாடுகின்றோம்
இனி மறுபடி பிறவா வரம் தருவாய்"

"ஆ......... இதுதான்! அடி எது முடிஎ..து இன்று தெரியவில்லை இல்லையா? அதுபோல ஆரம்பம் எது முடிவு எது தெரியாத ஒரு பட் சணம் சொல் பார்ப்போம்" என்று மாதங்கி ஜானகியை கேட்க... "போடி காலங்காத்தால தொந்தரவு பண்ணாதே" என ஜானகி கூற...... 

"நான் சொல்றேன் நீ இந்த தீபாவளிக்கு பண்றே" எனக் கூறினாள் மாதங்கி.

"இதோ பார் தீபாவளிக்கு நிறைய வேலை இருக்கு நீ அது இது என தொந்தரவு பண்ணாதே"  என்று தப்பித்தோம் பிழைத்தோம் என்று சமையல் உள்ளுக்குள் சென்றாள்.

கூடவே சென்ற மாதங்கி "இருக்கிற பட்சணங்களில் ரொம்ப ஈசி இதுதான்" என்றாள் 

"அது என்ன அப்படிப்பட்ட பட்சணம்?" என்று திரும்ப கேட்க,

" அப்படி வா....... வழிக்கு! அதுதான்............. ஓமப்பொடி!!!!!! ஹி.ஹி
ஓம பொடியில் எது ஆரம்பம் எது முடிவு என்றுஎடுக்க முடியாது அல்லவா? எனக்கூறி கலகலவென்று சிரித்தாள் மாதங்கி.

ஜானகி யும் சிரித்துக்கொண்டே "ஆமாண்டி இதுவரை நான் யோசித்தது இல்லை சரி சரி தீபாவளிக்கு பண்ணுறேன் போதுமா?" எனக் கூறினாள்.

"நீமட்டும் பண்ணினால் போதாது* எங்கள் ப்ளாக்* 
நண்பர்களும் பண்ணி தீபாவளியைஅசத்த வேண்டாமா? எனவே சுலபமாக ஓமப்பொடி செய்யும் முறை உடனே எழுது" என்றாள்.

ஜானகியும் *எங்கள் பிளாக்கிற்கு* எழுதிய ரெசிபி இதோ........

ஓமப்பொடி




தேவையான பொருட்கள்

கடலைமாவு....1 கப்
அரிசி மாவு.......4 டேபிள் ஸ்பூன்
சில்லி பவுடர்.....1 டீஸ்பூன்
உப்பு.......... தேவையான அளவு
வெண்ணெய். (ஒரு ஸ்பூன் இருந்தால்)
எண்ணெய்...... தேவையான அளவு
கருவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை
கடலை மாவு அரிசி மாவு சில்லி பவுடர் உப்பு ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் ஓமப்பொடி அச்சில் மாவை போட்டு மூன்று சுற்று வரும்படி பிழியவும். பொன்னிறமாக வந்தும் திருப்பி போட்டு எடுக்கவும்.  கறிவேப்பிலையைப் பொறித்துப் போடவும்  இது செய்ய10 நிமிடம் கூட ஆகாது.  இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சுலபமாக சாப்பிட உகந்தது. நீங்களும் இந்த தீபாவளிக்கு ஓமப்பொடி செய்து தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

Happy  Deepavali



குறிப்பு : 
திருமதி சியாமளா வெங்கடராமன் இந்த ரெசிபியை அனுப்பியது என்னவோ தீபாவளிக்கு முன்தான்.  ஆனால் அதற்குள் மற்ற ரெசிப்பிக்கள் வரிசையில் நின்றதால் இது இன்று வெளியாகிறது!  உங்களுக்கும் மறுபடி தீபாவளி கொண்டாட ஒரு வாய்ப்பு! - ஸ்ரீராம்.

48 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும் சொல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது

    பதிலளிநீக்கு
  2. என் மனைவி நன்றாக செய்யும் பட்சணத்தில் இதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு

  3. ஓமப்பொடி எளிமையான ரிசிப்பி அந்த ரிசிப்பி செய்முறையை சொலவதற்கு முன்பு அதற்கு எழுதிய முன்னுரை மிக அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  சற்றே மாறுதலான வடிவில் தந்திருக்கிறார்.

      நீக்கு
  4. செய்முறை நன்று. முன்னுரை அதைவிட நன்று.

    பதிலளிநீக்கு
  5. ஓமப்பொடியில் ஓமம் சேர்க்கவேண்டாமோ?

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம்(அதிரடி பாஷையில்).
      ஓமப்பொடி மில் ஓமம் இல்லாவிட்டால் என்ன?மைசூர் பாக் ல் மைசூர் இருக்கிறதா? :))

      நீக்கு
    2. ஓமத்தை முழுசாகப் போட்டும் பண்ணலாம். ஓமத்தை வறுத்துப் பொடித்தும் சேர்க்கலாம். வாசனை நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. பானுக்கா மைசூர் பாக் என்று பின்னாளில் தான் பெயர். உங்களுக்குத் தெரியுமே இங்கு கர்நாடகாவில் மசூர் தால் ரொம்ப ஃபேமஸ் ஆச்சே...அந்த மசூர் பருப்பு மாவில் அலல்து அரைத்துச் (ட்ரெடிஷன்ல் மெத்தட் என்றால் பருப்பை ஊற வைத்து நைசாக அரைத்துச் செய்வாங்க) செய்வதுதான் மசூர்பாக் நாளடைவில் மைசூர்பாகு என்றானது.

      கீதா

      நீக்கு
    4. அதுவும் கடலைமாவில் செய்வதானது.

      கீதா

      நீக்கு
    5. நான் மைசூர்ப்பாகின் பின்னணி பற்றி மரபு விக்கியில் எழுதி இருக்கேன். ஆனால் இப்போ அங்கே போக முடியலை. என்னோட "எண்ணங்கள்" வலைப்பக்கம் எங்காவது போட்டிருக்கேனானு பார்க்கணும்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் இறைவன் அருளால் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஈஸி ஓமப்பொடி அருமையாக இருக்கிறது. ஓமத்தைத் தான்
    காணோம்.
    இது வட இந்திய முறை என்று நினைக்கிறேன்.

    பானிப்பூரியில், அந்த மசாலா SEV type.

    முன்னுரை கதை மிகவும் அருமை.
    தீபாவளிக்கு மட்டுமா . எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் செய்யலாம்.


    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸோ யெஸ்ஸ்ஸு

      நீக்கு
    2. கீதாம்மாவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்.கு.கு வரப் போகிறதே.
      எனக்கே சந்தோஷமா இருக்கு.
      வலி எல்லாம் ஓடிவிடும்.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.
    சுவையான ஓமப்பொடி செய்முறையை அதை விட சுவையாக சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா ஓமப்பொடி!!!! மிகவும் பிடிக்கும். செய்முறை சொன்ன விதம் அசத்தல் அதாவது முன்னுரை வித்தியாசமாக. மிகவும் ரசித்தேன் ஓமப்பொடியுடன்!

    ஓமம் சேர்க்க வேண்டாமோ? அஃப்கோர்ஸ் ஓமம் சேர்க்காமலும் செய்யலாம்தான்.....

    இது பல வட இந்திய சாட் வகைகளிலும் மேலே தூவுவதுண்டே அந்த வகையாக இருக்கலாம். நம் வீட்டில் சும்மானாலும் பீச் சுண்டல் செய்தாலும் வீட்டில் ஓமப்பொடி இருந்தால் தூவுவதுண்டு.

    சுவாரசியமாகச் சொன்னதை ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நான் முன்பெல்லாம் இப்படி பல கதைத்தல் முன்னுரைகளுடன் எழுதுவது நினைவுக்கு வந்தது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் தொற்று குறித்த கவலை நீங்கி மன மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  12. நாங்க ஓமப்பொடி எனில் ஓமத்தை ஊற வைத்து அரைத்துச் சாறு எடுத்து மாவு பிசையும்போது சேர்த்துக் கொள்வோம். நோ மி.பொ. மிக்சருக்குப் பண்ணினால் கொஞ்சமாக உப்பு, காரம் சேர்ப்பது உண்டு. உ.கி. சேர்த்து கறுப்பு உப்பு, பெருங்காயம், மி.பொ. கொஞ்சம் போட்டு ஆலு புஜியா பண்ணுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க ஓமப்பொடி எனில் ஓமத்தை ஊற வைத்து அரைத்துச் சாறு எடுத்து மாவு பிசையும்போது சேர்த்துக் கொள்வோம். நோ மி.பொ. //

      யெஸ்ஸூ

      கீதா

      நீக்கு
  13. எல்லோரும் படிப்பதற்கு ஏதுவாக முன்னுரையை ரசமான கற்பனையுடன் சொல்லி இருக்கார். இல்லாட்டியும் நாமல்லாம் என்னென்னிக்கும் "திங்க"க்கிழமைக்காரங்களே! படிக்காமல்/சொல்லாமல் விட்டுடுவோமா?

    பதிலளிநீக்கு
  14. கு.கு. இந்தியாவுக்குத் தன் பெற்றோருடன் வந்திருக்கு. இப்போதைக்கு ஒரு வாரத்துக்கு மடிப்பாக்கத்தில் இருந்துட்டுப் பின்னர் ஶ்ரீரங்கம் வரும். கு.கு.வின் அப்பா (பையர்) மட்டும் நேற்றிரவு இங்கே வந்து விட்டார். ஏற்கெனவே ஆயிரம் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு இணையத்துக்கு இப்போல்லாம் வரேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா எஞ்சாய் மாடி!! கு.குவுடன்!! ஒரு வாரம் கழித்து வரப் போகிறதே!!!

      பரவால்ல இந்தச் சாக்குல நீங்க இணையத்துக்கு வரலைனாலும்...கு.கு, பையர் மரும்கள் இவங்களோடு நேரம் செலவழிப்பதுதானே மிக முக்கியம்.

      கீதா

      நீக்கு
    2. வாழ்த்துகள் கீசா மேடம்... குகு உடன் நேரம் நன்றாகச் செல்லட்டும்.

      //ஏற்கெனவே ஆயிரம் சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு// தினமலர் வாரமலர்ல ஒரு பழமொழி ரெகுலரா 'சினிமா' பகுதில போடுவாங்க. ஏற்கனவே அக்லி இப்போ பிக்லி என்பதுபோல.. சட்னு நினைவுக்கு வரலை. ஹா ஹா

      இருந்தாலும் அவங்களோடு நேரம் செலவழிப்பதுதான் சரி.

      நீக்கு
  15. ஜிலேபி, ஜாங்கிரி ஆகியவற்றிற்குக் கூட ஆரம்பமோ, முடிவோ தெரியாதே! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை இட்லிக்கெல்லாம் ஆரம்பம்  முடிவு இருக்கிறதா என்ன. முக்கால் வாசி பதார்த்தங்களுக்கு ஆரம்பம் முடிவு என்பது இல்லை.

       Jayakumar

      நீக்கு
  16. அடுத்து பருப்பு இல்லாமல் சாம்பார் (உ-ம் பெங்களூர் அமரக்க (பச்சை மொச்சை) சாம்பார்), உளுந்து இல்லாமல் இட்லி (உ-ம் ஈனோ, பேகிங் சோடா இட்லி)  செய்வது எப்படி என்று யாரவது செய்து பார்த்து எழுதலாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்க்காமலும் எழுதலாம்!!

      நீக்கு
    2. https://cookingforyoungsters.blogspot.com/2013/06/ இங்கே போய்ப் பார்த்தால் பருப்பில்லாமல் சாம்பார் செய்யும் முறை கிடைக்கும். எண்ணங்கள் வலைப்பக்கமும் போட்ட நினைவு. இந்தக் குறிப்பும் மற்றும் பலவும் அடங்கிய புத்தகம் மின்னூலாகக் கிண்டிலில் கிடைக்கிறது. ஹிஹிஹி, சுய விளம்பரந்தேன்!

      நீக்கு
    3. பாசிப்பருப்பு இட்லிக்கு உளுந்து சேர்த்தும்/சேர்க்காமலும் பண்ணலாம். ஈனோ,பேகிங் சோடா எல்லாம் போட்டு ரவா இட்லி, கேழ்வரகு மாவு இட்லி மற்றும் மிச்சம் சாதத்தை அரைத்து அதனுடன் ரவா சேர்த்து ஈனோ/பேகிங் சோடா சேர்த்துத் தயிர் விட்டுக் கடுகு,ப.மி. கறிவேப்பிலை, கொ.ம.இஞ்சி எல்லாம் போட்டுத் தேவையானால் காரட்/தேங்காய்த் துருவலும் சேர்த்து இட்லி வார்க்கலாம். இதற்கெல்லாம் உளுந்து தேவை இல்லை. அப்பாடா! இன்னிக்கே எழுதிட்டேன். :)

      நீக்கு
    4. என் மாமியார் அரிசியும், வெந்தயமும் மட்டும் போட்டு அரைத்து இட்லி, தோசை இரண்டும் வார்ப்பார். உள்ளே ஸ்பாஞ்ச் போல் வரும்.

      நீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. அவசர வேலையாக கோயில் தலம் ஒன்றிற்கு வந்துள்ளேன்..

    இறையருள் கூடி வருமானால் நமது தளத்தில் படங்களுடன் பதிவு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அனுப்புங்கள். வாழ்க வளமுடனும், நலமுடனும், பல்லாண்டுகள்!

      நீக்கு
  19. மீண்டும் தீபாவளியா....கிறிஸ்மஸ் கொண்டாடி விடலாம் :) புத்தாண்டும் வருகிறதே.

    பதிலளிநீக்கு
  20. செவ்வாய் பதிவில் துளசியின் கருத்தும், எனது இரு கருத்துகளும் போட வந்தால் ப்ளாகர் போடமாட்டேன் என்று சொல்கிறது ரோபோ செக்கிங்க் செய்த பிறகும்....ஆனால் பிற வலைகளில் போகிறது. ஸோ இப்பதிவில் டெஸ்டிங்க். ஒரு வேளை செவ்வாய் கருத்துகள் நிறைய என்பதால் அனுமதி கொடுக்க மாட்டேங்குதா...

    டெஸ்டிங்க்

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஓமபொடி செய்ய முன்னுரையும், ஓமப்பொடி செய்முறையும் அருமை.
    ஓமம் கலக்காமல் செய்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!