திங்கள், 20 டிசம்பர், 2021

'திங்க'க்கிழமை : முள்ளங்கி சாம்ப்ஜி  - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

தேவையான பொருள்கள்: 




முள்ளங்கி(பெரியது)    -  2
தக்காளி                           -  3
வெங்காயம்                    -  2  
காரப்பொடி                    - 1 1/2 டீஸ்பூன்  
உப்பு                                  - 1 டீஸ்பூன் 
தனியா தூள்                    - 1/2 டீஸ்பூன் 


தாளிக்க :

எண்ணெய்      - 3 மேஜைக்கரண்டி 
கிராம்பு - 3
சீரகம்   - 1 டீ ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய்         - 2 
பட்டை ஒரு சிறு துண்டு அல்லது பட்டை பொடியும் போடலாம். 

செய்முறை:

முதலில் முள்ளங்கியை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும்.



ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும்  சீரகம், கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இல்லை, பட்டை  இவைகளைப் போட்டு வதக்கி விட்டு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

அது நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்.          




பின்னர் வெந்த முள்ளங்கியை வேக வைத்த நீரோடு சேர்த்து மசித்து அதோடு உப்பு, காரப்பொடி, தனியாதூள் இவைகளையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கடைசியாக நறுக்கிய கொத்துமல்லி இலைகளை தூவி இறக்கி விடலாம். இது சப்பாத்தி, பூரிக்கு மட்டுமல்லாமல் சாதத்தோடு பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கிறது.



என் மகள் செய்த இந்த சப்ஜி மிகவும் நன்றாக இருந்தது. அவளிடம் என்ன பெயர் என்று கேட்டேன். "அதெல்லாம் எதற்கு? சாப்பிட நன்றாக இருக்கா? இல்லையா?" எனகிறாள். 

எ.பி.க்கு அனுப்பி வைக்கிறேன். வெந்நீருக்கு அழல் அமுதம் என்று பெயர் சூட்டிய ஸ்ரீராம் பார்த்து ஒரு பெயர் வைக்க மாட்டாரா?

94 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். திருவாதிரை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. வணக்கம்.

      நீக்கு
    2. யெஸ் திருவாதிரை. இங்கு திருவாதிரைக் களியும் தாளகமும் ஆயிற்று!!! கோயிலுக்குத்தான் போக முடியலை.

      கீதா

      நீக்கு
    3. இங்கும்,

      களியும் கூட்டும்

      சேர்ந்துண்டு களித்தாயிற்று!

      நீக்கு
  2. புதுமையான ரிசிப்பி ..பக்கத்துல வந்துட்டீங்க சாப்பிட வரலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்முறையில் எழுதியதை நல்லா படிச்சுப் பார்க்கலையா?

      செய்தது மகள். இவரோ விருந்தினர். அதனால சான்ஸ் நஹீ.

      பேசாம பெங்களூர் பக்கம் வந்தால் அவங்க வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிடுங்க (கூப்பிட்டால் ஹா ஹா.. எனக்கு அனுபவம் இல்லை)

      நீக்கு
    2. வாங்க குடும்பத்தோடு! வரவேற்க காத்திருக்கிறோம்.

      நீக்கு
    3. //வாங்க குடும்பத்தோடு! வரவேற்க காத்திருக்கிறோம்.//

      ஆமாம்.. தனியா வந்தா அனுமதி கிடையாது!!!!! ஹிஹிஹி...

      நீக்கு
    4. //கூப்பிட்டால் ஹா ஹா.. எனக்கு அனுபவம் இல்லை)// நீங்கள் மற்றவர்கள் வீட்டில் கை நனைக்கும் பழக்கம் இல்லாதவர் ஆயிற்றே? உங்களை எப்படி அழைப்பது?

      நீக்கு
  3. முள்ளங்கி சாம்ப்ஜி இது ஸ்ரீராம் வைத்த பெயரா?

    பதிலளிநீக்கு

  4. அம்மாவிடம் பிள்ளைகள் கற்றுக் கொண்ட காலம் போய் பிள்ளைகளிடம் அம்மா கற்றுக் கொள்ளும் காலம் வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இயல்பானதுதான். எங்க வீட்லயும் நான் பார்க்கிறேன். மகள் விதவிதமான கேக்குகள், ஜாம், என்ன என்னவோ பண்றாள். (படங்களைக் கொடுத்து சுருக்கமான செய்முறை தா.. எபிக்கு அனுப்பறேன் என்கிறேன்.. இன்னும் தரலை) நிறைய வித்தியாசமா கத்துக்கொண்டுவிடுகிறார்கள் (யூ டியூபில்)

      என் பையன் கான்வொகேஷனுக்கு எல்லோரும் போயிருந்தோம். பயங்கர மழை. வெளில சாப்பிடலை. இவ மட்டும் அவ வண்டில வீட்டுக்குச் சீக்கிரமா வந்துட்டா. நாங்க வீட்டுக்குப் போனால் சுடச்சுட (கொஞ்சமா) உப்புமா தந்தாள். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுக்கா இவ்வளவு பாராட்டு, நிஜமாவா கிண்டலா என அவள் கேட்கும்படி ஆயிற்று.

      நீக்கு
    2. மழையில் சீக்கிரம் வந்து உப்புமாவும் செய்து கொடுத்த மகளுக்கு மனம்
      நிறை ஆசிகள். உண்மையில் எங்கள் மருமகள்களும் மகளும் கற்றிருக்கும்
      செய்முறைகள் அதிசயிக்க வைக்கின்றன.

      எனக்கும் முள்ளங்கி சாம்பார் பிடிக்கும்.
      அந்த நாளைய முள்ளங்கி.
      இப்போது சில முள்ளங்கியின் வாசனையை
      ரசிக்க முடியவில்லை.
      வயதும்காரணமாக இருக்கலாம்.:)
      சிங்கம் சாப்பிடாத பல பொருட்களை நானும் சாப்பிடாமல் இருந்து பழகிவிட்டேன்.

      நீக்கு
    3. மகள் என்ன? பேத்தியின் கூட கற்றுக்கொள்ள ரெடி :)

      நீக்கு
    4. கற்றுக்கொடுக்கவும், கற்றுக்கொளளவும் வயது தடையில்லை.  

      பானு அக்கா..  'கற்றுக்கொடு, ஏதேனும் கற்றுக்கொடு' என்று பாலகுமாரன் கவிதை ஒன்று எழுதி இருந்தார்..  நினைவிருக்கா?

      நீக்கு
    5. மகள் என்ன? பேத்தியின் கூட கற்றுக்கொள்ள ரெடி :)//

      பானுக்கா ஹைஃபைவ்!! அதே....அதே

      ஸ்ரீராம் சொல்லியிருப்பதை ஆமோதிக்கிறேன்...முதல் வரி!!

      கீதா

      நீக்கு
    6. இவ மட்டும் அவ வண்டில வீட்டுக்குச் சீக்கிரமா வந்துட்டா. நாங்க வீட்டுக்குப் போனால் சுடச்சுட (கொஞ்சமா) உப்புமா தந்தாள். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுக்கா இவ்வளவு பாராட்டு, நிஜமாவா கிண்டலா என அவள் கேட்கும்படி ஆயிற்று.//

      சமத்துத் தங்கம்!!!

      கீதா

      நீக்கு
    7. மகள் உங்கள் பசியறிந்து உணவு சமைத்துக் கொடுத்த்தற்குப் பாராட்டுகள்.

      நீக்கு
    8. மகளிடம் என்ன பேத்தி இடமும் நான் கற்றுக் கொள்கிறேன் அக்ரூட் சட்னி தெரியுமா மிகவும் நன்றாக இருக்கிறது பேத்தி செய்ததை பார்த்து நானும் அறிந்துகொண்டேன் அன்புடன்

      நீக்கு
  5. டின்னர் டைம் வந்துவிட்டது கிச்சனுக்கு போய்விட்டு நேரம் கிடைத்தால் வருகின்றேன்

    பதிலளிநீக்கு
  6. ஆஹா திப்பிசம். இப்படியும் செய்யலாம் அப்படியும் செய்யலாம் என்று எதிர்ப் பாட்டு பாடும் கீதா மாமியைக் காணலையே! முள்ளங்கி இன்னும் மார்க்கட்டுக்கு வரவில்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முள்ளங்கி, கோவைக்காய், தக்காளி, கேரட், வெண்டை, கோஸ் எல்லாமே கிலோ பத்து ரூபாய்க்கு பெங்களூரில் வாங்கியிருக்கேன். புடலை, பீட்ரூட், நூல்கோல், கீரைகள். போன்ற பலவும் கிலோ இருபதுக்குக் கிடைத்தன (அந்தந்த சீசனில்) பீன்ஸ் போன்ற மற்றவை 30-40 ரூ.

      ஆனால் சமீப மாத்த்தில் பலதும் வெகு விலை. முள்ளங்கி 40-50 ரூ. இதுக்கெல்லாம் மழைதான் காரணம்

      நீக்கு
    2. யெஸ்ஸு நெல்லை...ரொம்ப ரொம்ப சீப்பாக கிடைக்கும். பீன்ஸ் கூட 15க்குக் கிடைத்தது. இப்போதுகொஞ்சம் விலை கூடியிருக்கு

      நாங்கள் ரெகுலராக ஒரு சின்ன கடையில் வாங்குகிறோம் இங்கு அங்கு ம பூஷணி சில சமயம் 1/2 கிலோ அளவு சும்மாவெ கொடுத்துவிடுவார் அந்தப் பெண்மணி என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்

      கீதா

      நீக்கு
    3. முள்ளங்கி அவ்வப்போது வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  கவனிக்கவும் "றேன்".

      நீக்கு
    4. எங்க வீட்டில் இப்போத் தான் பையருக்காக முள்ளங்கி வாங்கி வந்தோம். இரண்டு வருஷங்களாக முள்ளங்கி, நூல்கோல்,முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், டர்னிப் ஆகியவற்றுக்குத் தடா! நான் சாப்பிட்டுக்கலாம். ஆனால் அவர் சாப்பிட முடியாது. அதனால் வாங்குவதே இல்லை. எங்க வாடிக்கை காடரர் வாரம் நான்கு நாட்களாவது பீட்ரூட் பண்ணிடுவார். மீதி நாட்கள் முட்டைக்கோஸ்! அவரோட மெனுவைப் பார்த்தால் சமயத்தில் தலை சுத்தும். பீட்ரூட் ரசம், முட்டைக்கோஸ் வெங்காயக் கூட்டு, முள்ளங்கி சாம்பார்னு பண்ணி இருப்பார். மூன்றுமே சாப்பிட முடியாது. ஆகவே என்னிக்கானும் ரொம்ப முடியலைனாத்தான் மெனுவைப் பார்த்துட்டுச் சொல்ல வேண்டி இருக்கு. :(

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியம் அமைதியுடன் இருக்க இறைவன் அருளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. முள்ளங்கி சாம்பார் எனக்கு மட்டும் பிடிக்கும்.

    மற்றபடி முள்ளங்கியை வீட்டில் யாரும் விரும்புவதில்லை.

    செய்முறை சுலபம். படத்தில் மட்டும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரொம்பப் பிடிக்கும் நம் வீட்டில் எல்லோருக்கும்...இங்க சீசன் ல இலையோடுகிடைக்கும் ஃப்ரெஷ்ஷா ரொம்ப நல்லாருக்கும்

      கீதா

      நீக்கு
    2. முள்ளங்கி நறுக்கியதும் அப்படியே உப்பைத்தொட்டுக்கொண்டு இரண்டு வில்லைகள் சாப்பிடுவேன்.  அப்பா தட்டில் முளலங்கி நறுக்கித்தரச்சொல்லி உப்பு தொட்டு சாப்பிடுவார்.  ஆனால் இதில் ஒரு சிரமம் என்னவென்றால் அபப்டிக் பச்சையாக சாப்பிட்டால் நாக்கு மரத்துப்போன மற்ற பண்டங்களின் சுவை தெரியாது போய்விடும்.

      நீக்கு
    3. ஆமாம் நானும் பச்சையாக சலாட் செய்வதுண்டு ஆனால் அதில் ஒரு காரம் இருக்கும் அதுதான் கொஞ்சம் படுத்தும். ஆனால் சலாடில் மற்றக் காய்களோடு கலந்துவிட்டால் அவ்வளவு தெரிவதில்லை

      கீதா

      நீக்கு
    4. //முள்ளங்கி நறுக்கியதும் அப்படியே உப்பைத்தொட்டுக்கொண்டு இரண்டு வில்லைகள் சாப்பிடுவேன். அப்பா தட்டில் முளலங்கி நறுக்கித்தரச்சொல்லி உப்பு தொட்டு சாப்பிடுவார். ஆனால் இதில் ஒரு சிரமம் என்னவென்றால் அபப்டிக் பச்சையாக சாப்பிட்டால் நாக்கு மரத்துப்போன மற்ற பண்டங்களின் சுவை தெரியாது போய்விடும்.//

      திருத்தப்பட்ட பதிப்பு :

      முள்ளங்கி நறுக்கியதும் அப்படியே உப்பைத் தொட்டுக்கொண்டு இரண்டு வில்லைகள் சாப்பிடுவேன்.  அப்பா தட்டில் முள்ளங்கி நறுக்கித் தரச் சொல்லி உப்பு தொட்டு சாப்பிடுவார்.  ஆனால் இதில் ஒரு சிரமம் என்னவென்றால் அப்படிப் பச்சையாக சாப்பிட்டால் நாக்கு மரத்துப்போய் மற்ற பண்டங்களின் சுவை தெரியாது போய்விடும்.  சல்ஃபர்!

      நீக்கு
    5. ராஜஸ்தானில் பார்க்கணும். பெரிய முள்ளங்கியை (பெரிசுனா கற்பனை பண்ண முடியாத அளவுக்குப் பெரிதாக இருக்கும்.) கடித்துப் பச்சையாகச் சாப்பிடுவார்கள்.

      நீக்கு
  9. சாம்ப்ஜி!!!! சம்பந்தி என்று படித்துவிட்டேன்:)
    முள்ளங்கி சம்பந்தி யாராயிருக்கும்:)
    பெயர் வைத்த ஸ்ரீராமுக்கும் விளக்கம் சொன்ன

    முரளிக்கும் பல பல நன்றிகள்.

    நன்றிகள் என்று சொல்லலாமா .நன்றி மட்டும் சொல்லணுமா.
    அது ஒரு தனிக் கேள்வி.:)

    அன்பு பானுவின் முள்ளங்கி புதுவித செய்முறை.

    மிக நன்றாக இருக்கிறது. நல்ல குறிப்பு யார் சொன்னால் என்ன.
    பானு வின் மகளுக்கு மிக நன்றி. தெளிவான
    குறிப்புகள்.
    கச்சிதமான படங்கள்.
    செய்யலாம் என்று யோசிக்க வைக்கும் புதிய முறை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முள்ளங்கி சம்பந்தி செய்யாமல்லோ!!! சம்மந்தி - மலையாளத்தில் சட்னி/சட்னி பொடி!!!

      கீதா

      நீக்கு
    2. முள்ளங்கி போட்டு பொரியல் (கறி) யும் வெங்காயம் சேர்த்தோ, சேர்க்காமலோ செய்வோம்!

      நீக்கு
    3. ஸ்ரீராம் சூப்பரா இருக்கும் பொரியல். நான் கொஞ்சம் கூடுதலாகச் செய்துவிட்டு மீறுவதை மூலி பராத்தா...அதாங்க முள்ளங்கி பராத்தா செய்ய வைத்துக் கொள்வது உண்டு!!!

      முள்ளங்கி வடை அது போல பக்கோடாவும் நல்லாருக்கும்

      என் பாட்டி வெங்காயம் சாப்பிடாதவங்களுக்கு முள்ளங்கியை பயன்படுத்திக்குவாங்க!!!

      கீதா

      நீக்கு
    4. இந்த முள்ளங்கில்லாம் எங்க அம்மா நான் வேலைக்குப் போன சமயத்துல செய்தது (சாம்பார். அதுவும் கேரட்டும் போட்டு). நான் வளர்ந்த் இடத்தில் உருளை, தக்காளியே கிடையாது. இதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது

      நீக்கு
    5. மதுரையிலே (மட்டும்) சிவப்பு முள்ளங்கி தான் கிடைக்கும். அதைச் சாப்பிட்டுவிட்டுச் சென்னையிலே வெள்ளை முள்ளங்கியைப் பார்த்தால் ஒரே அலர்ஜியா இருக்கும். பின்னர் பழகி விட்டது. பானுமதியின் மகள் கொடுத்திருக்கும் செய்முறை நன்றாக இருக்கிறது. இதைக் கெட்டியாகப் பண்ணிட்டால் சப்பாத்தி இட்டு உள்ளே இந்தக் கலவையை வைத்து மூலி ரொட்டி பண்ணலாம். முள்ளங்கி (சாப் பண்ணினதால்) சாம்ப்ஜினு பெயராக்கும்னு நினைச்சேன்.

      நீக்கு
    6. முள்ளங்கிக்கீரையையும் விதம் விதமாகச் சமைக்கலாம்.

      நீக்கு
    7. @ஸ்ரீராம்: எங்கள் வீட்டில் முள்ளங்கி பொறியலில் வெங்காயம் சேர்க்க மாட்டோம், தேங்காய் சேர்ப்போம்.

      நீக்கு
  10. அவளிடம் என்ன பெயர் என்று கேட்டேன். "அதெல்லாம் எதற்கு? சாப்பிட நன்றாக இருக்கா? இல்லையா?" எனகிறாள். //

    ஹாஹஹா அக்கா நம்ம வீட்டுலயும் இதே டயலாக் நான் விடுவேன் என் மகனிடம் இப்போது அவன் என்னிடம்....ஹிஸ்டரி ரிபீட்ஸ்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பானுக்கா சூப்பரோ சூப்பர் ரெசிப்பி.

    முள்ளங்கி பராட்டா, முள்ளங்கியிலும் சப்ஜி செய்யலாம் என்று என் தில்லி தங்கை அவள் மணமாகிப் போய் அங்கு கற்றதை எனக்குச் சொன்னாள். மிகவும் பிடித்துப் போனது.

    சுபாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். பிரத்யேகமாக அவளின் பெயர் சூட்டும் பதிலுக்கு!!!! ஹாஹாஹா

    பீட் ரூட் குக்கரில் வைப்பதுண்டு. காரட் கூட ரொம்ப தடியாக இருந்தால். ....முள்ளங்கியையும் இப்படிச் செய்ய எனக்கு இதுவரை தோன்றவே இல்லை பாருங்க...ஹாஹாஹாஹா துருவுவேன்..இது ரொம்ப ஈசியா போச்சு!!

    மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அணைவருக்கும் திருவாதிரை வாழ்த்துக்கள்.
    முள்ளங்கி எனக்கு மிகவும் பிடித்த உணவு.
    மறுத்துவ ரீதீயாக வாதப் பிரச்சனையைத் தீர்க்கும் அரு மறுந்து எனவும் கருதுகிறேன்.
    விரைவில் இதை முயர்ச்சித்துப் பார்க்கிறோம் மேடம்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  14. எனக்கு விருப்பமானது முள்ளங்கி சட்னி.. அடிக்கடி செய்வேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்முறை எழுதி அனுப்புங்க.

      நீக்கு
    2. வழிமொழிகிறேன்.

      அவசரமும் கூட... உடனே அனுப்பினால் அடுத்த வாரமே வாய்ப்பு!

      நீக்கு
    3. மன்னிக்கவும் அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம்!

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... நானும் எழுதி அனுப்பலாமான்னு பார்த்தேன். ஸ்ரீராம் ஒரு வருடம் கழித்துத்தான் வெளியிடுவேன்னு சொல்றார். அவ்வளவு நாள் என்னால் காத்திருக்க முடியாது. நீங்க எழுதி அனுப்புங்க. ஹா ஹா

      நீக்கு
  15. இன்றைய குறிப்புகளும் நன்றாகத் தான் இருக்கின்றன...

    வாழ்க முள்ளங்கி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முள்ளங்கி வில்லைகளை, பொடி உப்பு சேர்த்து சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. கடைகளில் 'பசுபசு புசுபுசு' என வெள்ளையாய், முனையில் பச்சைப்பசேர் இலைகளுடன்  முள்ளங்கிகளைக் கண்டால் முயல் மாதிரி அதன்மேல் பாயாமல் விடமாட்டேன்!

      நீக்கு
    3. அந்த இலைகளையும் வீணாக்காமல் சப்ஜி செய்வார்கள் வட இந்தியர்கள்.

      நீக்கு
    4. நன்றி துரை செல்வராஜு சார்

      நீக்கு
  16. எனக்கு கெம்ப்ளாஸ்டில் (மேட்டூர்) முதல் வேலை கிடைத்தபோது, அந்த ஊரில் இருந்த நண்பி என்னை அவங்க வீட்டிற்கு சாப்பிடக் கூப்பிட்டாங்க. அப்போது முள்ளங்கில கரேமது செய்து போட்டிருந்தார்கள். எனக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். இதுல கரேமதுலாம் செய்வாங்களா என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் சம்பந்தி கூட எங்கள் வீட்டில் முள்ளங்கி கறி செய்த பொழுது ஆச்சர்யப்பட்டார். அவர்கள் மூளி பராத்தாதான் செய்வார்கள்.

      நீக்கு
  17. இன்று முதல் "முள்சாம்பா" என்று அழைக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  18. அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    இன்றைய திங்கப் பதிவு முள்ளங்கி சாம்ப்ஜி செய்முறை, படங்களுடன் நன்றாக உள்ளது. ரெசிபியை சுவைபட தயாரித்து தந்த பானுமதி சகோதரிக்கும், அதற்கு பெயர் வைத்து அழகு பார்த்த ஸ்ரீராம் சகோதரருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    முள்ளங்கியை நாங்களும் அடிக்கடி பல விதத்தில் (துவையல், சாம்பார், ரசம், கறி கூட்டு,பரோத்தா என) பயன்படுத்துவோம். இங்கு எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. முள்ளங்கி சாம்ப்ஜி குறிப்பு அருமை, பானுமதி வெங்கடேஸ்வரன்! செய்து பார்க்க வேண்டும். நானும் இது போல செய்வேன். அரைக்காமல், சிறு துண்டுகளாகப்போட்டு வேக வைத்து கடைசியில் தேங்காயும் சோம்பும் அரைத்துப்போட வேண்டும். மற்றபடி இதே பொருள்கள் தான்!

    பதிலளிநீக்கு
  20. என் நண்பர் ஒருவர் வீட்டில் முள்ளங்கியை முள்ளாங்கி என்றே உச்சரிப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  21. முள்ளங்கியில் ரசம், சூப், சட்னி, சாலட் என்று நிறைய செய்யலாம். முள்ளங்கியையும் காரட்டையும் பொடியாக அரிந்து போட்டு பொரியல் செய்யலாம்!
    சிறுநீர்ப்பாதை எரிச்சல், தொற்றுக்கு முள்ளங்கி சாறு குடித்தால் சரியாகும். அதை குடிப்பது சற்று சிரமம் என்பதால் அதோடு சம அளவு அன்னாசி சாறு கலந்து குடிக்கச் சொல்லுவார்கள்.
    முள்ளங்கி அடிக்கடி சாப்பிடுவது நல்லது என்பதால் முள்ளங்கி ரசம் வீட்டில் அவ்வப்போது செய்வேன்.
    நாலு வரமிளகாயை அம்மியில் நன்றாக அரைத்து 2 முள்ளங்கி, உப்பு வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுத்த முள்ளங்கித் துவையல் தோசைக்கு அருமையான காம்பினேஷன்!

    பதிலளிநீக்கு
  22. முள்ளங்கி "சாம்ப்"ஜி எனப் பெயர் வைத்த ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள். :))))) நல்லவேளையா யாரும் "சாம்புஜி"னு படிக்கலையோ பிழைச்சேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேத்திக்கு நான் கொடுத்த கருத்துரைகள் யார் கண்ணுக்குமே தெரியலையோ? வழக்கமாய் வந்து நன்றி சொல்லும் கௌதமன் சாரைக் கூடக் காணோமே! அநேகமா பானுமதி எல்லோருக்கும் பதில் சொல்லிட்டாங்க! என்னைத் தவிர, நான் இன்விசிபிளா இருக்கேனோ? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
  23. அனைவருக்கும் திருவாதிரை வாழ்த்துகள்.

    முள்ளங்கி பலருக்கும் பிடிப்பதில்லை உடல் நலத்துக்கு நல்லது என்கிறார்கள்.நாங்களும் இடையிடையே சமைத்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறையில் செய்து கொடுங்கள், முள்ளங்கி பிடிக்காதவர்களும் இது முள்ளங்கி போலவை இல்லையே? என்பார்கள்

      நீக்கு
  24. பதில்கள்
    1. மூங்ரா என்றால் முள்ளங்கி காய்கள்.டில்லியில் அதையும் சமைப்பார்கள்

      நீக்கு
    2. இந்த தயாரிப்புதிய முறையில் நன்றாக இருக்கிறதுஅழகான பெயரும் கூட சாம்ப்ஜி அன்புடன்

      நீக்கு
  25. @ நெல்லை..

    // துரை செல்வராஜு சார்... நானும் எழுதி அனுப்பலாமான்னு பார்த்தேன்...//

    ஸ்ரீராம் அவர்கள் கேட்டதுமே குறிப்பினைப் படங்களுடன் அனுப்பி விட்டேன்.. இன்னும் மேலிடத்தில் இருந்து தகவல் கிடைக்கவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 27 மட்டும்தான் இந்த வருட தி.பதிவு. அதனால உங்க பதிவு அடுத்த வருடம்தான். அதாவது ஒரு வருடம் கழித்து ஹா ஹா

      நீக்கு
  26. முள்ளங்கி சாம்ப்ஜி செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பானுமதி வெங்கடேஸ்வரனின் மகள் ரெஸிப்பி அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!