தமிழ் வருடப்பிறப்பு அன்று இந்த மாங்காய் வெல்லப்பச்சடியும் வேப்பம்பூ பச்சடியும் எல்லோரது வீட்டிலும் தவறாமல் இடம் பெற்று விடும். மாங்காய் வெல்லப்பச்சடி செய்யும்போது மாங்காய் கனமாக, செங்காயாக இருந்தால் சுவை அதிகமாக இருக்கும். வெல்லம் மண்டை வெல்லமாக, அரிந்தால் மொழுமொழுவென்று வருகிற மாதிரி இருக்கவேண்டும். அது கிடைக்கவில்லையென்றால் நல்ல தேன் நிறத்தில் அச்சு வெல்லமாக, புது வெல்லமாக இருக்க வேண்டும்.
தேவையானவை:
பெரிய, செங்காய்ப்பதமான ஒட்டு மாங்காய்-1
வெல்லம்-இனிப்புக்குத்தகுந்தவாறு
சின்ன வெங்காயம் [ மிகவும் பொடியாக அரிந்தது]-5
கடுகு- 1 ஸ்பூன்
பெருங்காயப்பவுடர்-அரை ஸ்பூன்
உருக்கிய நெய்- 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
உப்பு- ஒரு சிட்டிகை
ஏலக்காய்-5
தேங்காய்த்துருவல்- 2 மேசைக்கரண்டி
செய்முறை;
மாங்காயைத்தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும், வெந்தாலும் உடைந்து போகாதபடி இருக்க வேண்டும். அப்போது தான் சாப்பிட சுவையாக இருக்கும்.
வாணலியில் மாங்காய்த்துண்டுகளை போட்டு மூழ்கும் வரை நீர் விட்டு உப்பு, தூள்கள் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் உருகி மாங்காய்த்த்துண்டுகளுடன் குழைந்து வரும்போது ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து கடுகு வெடிக்கும் சப்தம் குறைந்ததும் சின்ன வெங்காயம், காயம் சேர்த்து மிருதுவாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய் சேர்த்து பிரட்டி மாங்காயில் கொட்டி ஏலக்காயைப்பொடி செய்து போட்டு மேலும் இரண்டி நிமிடங்கள் சமைத்து இறக்கவும். சுவை மிக்க மாங்காய் வெல்லப்பச்சடி தயார்!
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லை... வாங்க..
நீக்குமாங்காய் வெல்லப் பச்சிடியின் படம் மிக அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குநாங்கள் வேப்பம்பூ சேர்ப்போம். சின்ன வெங்காயம் மிளகாய்த் தூள் சேர்ப்பது நான் கேள்விப்படாத்து
ஆம். நாங்களும் வெங்காயம் சேர்த்ததில்லை. அதுவும் இனிப்பு பச்சடியில். வேப்பம்பம்பூ பச்சடி கூட தனியாகத்தான் செய்வோம். இப்படி வித்தியாசமாக இருப்பதை அறியத்தானே வித்தியாசமான ரெசிப்பிக்கள் வேண்டுமென்பது!
நீக்குகற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
இது தஞ்சாவூர் பக்குவம்..
பதிலளிநீக்குஆனாலும் தாளிப்பதில்லை..
காலங்களில் மாறாத மிகச் சிறந்த பச்சடி..
/// மாங்காய் கனமாக, செங்காயாக இருந்தால் சுவை அதிகமாக இருக்கும்.. ///
பதிலளிநீக்குபட்டுக்கோட்டை வட்டாரத்து மாங்காய் மிகவும் ஏற்றது..
தன்னிகரில்லா சுவை.. அடடா..
தாளிக்கும் பக்குவம் எனில் வெல்லம் சேர்ப்பது இல்லை..
பதிலளிநீக்குஅது வேறு!..
தமிழ் வருடப்பிறப்பில் கட்டாயம் இடம் பெறும் மாங்காய் பச்சடி பிடித்தமான ஒன்று. சின்ன வெங்காயம் சேர்ப்பதில்லை, மிளகாய்பொடிக்கு பதில் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்ப்பார்கள். இதே போன்று பைன் ஆப்பிள் பச்சடியும் பிடித்தமான ஒன்று.
பதிலளிநீக்குஆனால் சீசன் இல்லாத சீசனில் மாஙகாயை தேடி அலைய முடியுமா??
பெங்களூரில் அனேகமாக வருடம் முழுவதும் மாங்காய் மார்கெட்டுகளில் பார்க்கிறேன். சீசனில் கிலோ 30-40 ரூ, சீசனில்லாத சமயத்தில் 100-160 ரூ.
நீக்குநேற்று கூட ஒரு மாங்காய் வாங்கி வந்தேன். எப்போதும் கிடைக்கிறது.
நீக்குஅன்புச் சகோதரர் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஇன்றைக்கு எனது குறிப்பை வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி!!
பிறகு வருகிறேன்!!
நல்ல பச்சடிக் குறிப்பு.
பதிலளிநீக்குபடம் நன்று.
ஏலம் சேர்த்ததில்லை. செய்து பார்க்கிறேன்.
பட்டை போடுவேன்.
அட! மனோ அக்கா இது வித்தியாசமாக இருக்கிறதே. இதுவரை வெங்காயம், மிளகாய்த் தூள், ஏலம், சேர்த்துச் செய்ததில்லை, மனோ அக்கா. தாளிப்பதில் வற்றல் மிளகாய் தாளிப்பதுண்டு பச்சை மிளகாய்க் கீறிப் போட்டு கொதிக்கும் போது...அப்படிச் செய்வதுண்டு..
பதிலளிநீக்குஇது வித்தியாசமாக இருக்கு. செய்துவிடுகிறேன். பச்சடி ரொம்பப் பிடிக்கும் ஆனால் எனக்குச் சாப்பிட முடியாதுதான்.
கீதா
கேரளத்துபைனாப்பிள் பச்சடியும் ரொம்ப நன்றாக இருக்கும். ரொம்பப் பிடிக்கும். அதற்குத்தேங்காய் சேர்ப்பதுண்டு
பதிலளிநீக்குகீதா
படமே அள்ளிவிட தூண்டுகிறது...
பதிலளிநீக்குபாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!!
பதிலளிநீக்குஇனிய கருத்துரைகளுக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!!
பதிலளிநீக்குஇனிய கருத்துரைக்கு அன்புள்ள நன்றி சகோதரர் ஜெயகுமார் சந்திரசேகரன்!
பதிலளிநீக்குதஞ்சையில் சென்ற மாதம் கூட சமைப்பதற்கு பெரிய மாங்காய்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. வெந்தய மாங்காய் ஊறுகாய் நிறைய செய்ய முடிந்தது.
ஆனால் மாங்காய் பச்சடியும் மாங்காய் தொக்கும் செய்ய ஒட்டு மாங்காய்கள் தான் அருமையாக இருக்கும்!!
புகைப்படமே ஆசையை தூண்டுகிறது.
பதிலளிநீக்குவருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி மாதேவி!
பதிலளிநீக்குஅவசியம் இந்த பச்சடியை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்!
கீதா! இந்த மாங்காய்ப்பச்சடியை செய்து பார்த்து விட்டு எப்படியிருந்ததென்று சொல்லுங்கள்! நெய்யில் வதக்கிய சின்ன வெங்காயத்தின் crunchy tasteம் நெய், ஏலத்தின் மணமும் வெல்லத்தில் குழைந்த மாங்காய்த்துண்டுகளுமாய் சுவைக்க மிகவும் சுவையாக இருக்கும்!
பதிலளிநீக்குஓணத்திற்கு பைனாப்பிள் பச்சடியை எங்கள் உணவகத்தில் செய்வார்கள்!!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!
பதிலளிநீக்குஇனிய கருத்துரைக்கு அன்புள்ள நன்றி கில்லர்ஜி!
பதிலளிநீக்குமாங்காய் பச்சடி படம் அருமை.
பதிலளிநீக்குவெங்காயம் , ஏலக்காய் சேர்த்து செய்தது இல்லை.
நீங்கள் சொன்ன பக்குவத்தில் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.
இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
பதிலளிநீக்குஅவசியம் இந்த மாங்காய் பச்சடி செய்முறையை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!
இந்த முறையில் வெங்காயம், தேங்காய் சேர்த்துச் செய்தது இல்லை. மாங்காய் குழைய வெந்த உடன் உப்புக் கொஞ்சம் சேர்த்து வெல்லம் சேர்த்து விடுவோம். வெல்லம் உருகிச் சேரும்போது கொஞ்சமாக மாவு கரைத்து விட்டு விட்டு, புது வருஷப் பிறப்பு எனில் வேப்பம்பூவைப் புதியதாகப் பறித்துச் சுத்தம் செய்து நெய்யில் வதக்கிச் சேர்ப்போம். இல்லை எனில் நெய்யில் கடுகு, சின்ன மி.வத்தல் தாளித்துச் சேர்த்துத் தேவையானால் ஏலக்காய் சேர்ப்பது உண்டு.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மனோ சாமிநாதன் அவர்களின் சமையல் குறிப்புக் குறித்துத் தி/கீதா அடிக்கடி சொல்லுவார். முடிந்தால் அவங்க வலைப்பக்கம் போய்ப் பார்க்கணும். எங்கே! கணினியில் உட்கார்ந்து வேலை செய்வதே அரிதாகிக் கொண்டு வருது. :(
பதிலளிநீக்கு