செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

சிறுகதை : பொக்கிஷம் : கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்

 




கனகாம்பரம்

கு ப ராஜகோபாலன்


'மணி!' என்று வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

'எங்கேயோ வெளிலே போயிருக்கா, நீங்க யாரு?' என்று மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.

ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது.

மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.

ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசியபொழுது, ஸ்திரீ புருஷர்கள் சமானர்களாகப் பழக வேண்டு மென்றும், பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்த மென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அநுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவரம் அடைந்துவிட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி நன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ‘வீட்டில் மணி இல்லா விட்டால் பதில் வராது. கொஞ்சநேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் விடுவோம்' என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.

மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல: அசல் கிராமாந்தரம்; எந்தப் பக்கத்திலும் ரெயில் பாதைக்கே இருபது மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடைபாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதப் புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.

விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் `கொசாம்' விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலைமயிரை நடுவே வகிரெடுத்துத்தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட, நவநாகரிகப் போக்குப்படித் 'தொள தொள' வென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன் போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக்கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப்பட்டவள் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான்.

ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன் தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. படித்த பெண்கள் கூடப் புது மனிதர் களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷனுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப்பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.

'நான்-நான்-மணியின் சிநேகிதன் -' என்று சொல்லி மேலே என்ன சொல்லுவது என்பது தெரியாமல் தத்தளித்தான்.

'இதோ வந்துடுவா உள்ளே வந்து உட்காருங்கோ' என்றாள் சாரதா. அதைக் கேட்டதும் உண்மையிலேயே ராமு திகைத்துப் போனான். தலை கிர்ரென்று சுற்றிற்று. ஏதோ தப்புச் செய்துவிட்டவன்போலச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு சிறு தனிவீட்டில், தனியாக இருக்கும் இளம்பெண் தன்னை உள்ளே வந்து உட்காரச் சொன்னாள்! அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

'இல்லை, அப்புறம் வரேன்' என்று அரைகுறையாகக் கூறி தலையெடுத்துப் பார்க்காமல் வெகு வேகமாய்ப் போய்விட்டான்.


ந்து நிமிஷத்திற்கெல்லாம் இலையும் காய்கறியும் வாங்கிக்கொண்டு மணி உள்ளே நுழைந்தான்.

உங்க சிநேகிதராமே?-வந்து தேடினார்” என்று சாரதா குதூகலமாகக் குதித்துக்கொண்டு அவனை எதிர்கொண்டு போய்ச் சொன்னாள். அவள் மேனியும் குரலும் ஒரு படையெடுப்புப்போல் அப்பொழுது அவனைத் தாக்கின. மணி புதுக்குடித்தனத்தின் தொல்லைகளிலும் தன்னை வந்து தாக்கிய அந்த இன்ப அலையை அநுபவித்து ஆறுதல் அடைந்தான்.

`யார் அது?' என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக்கொண்டு கேட்டான்.

யார்னு கேக்கல்லே' என்று சொல்லிக்கொண்டு வலிகொண்டவள் போலப் பாசாங்கு செய்து, 'ஹா!" என்றாள்.

திடீரென்று மணியின் முகம் சிவந்தது, கோபம் பொங்கி எழுந்தது.

'எவ்வளவு தரம் சொல்லுகிறது உனக்கு? யார் என்று கேட்கிறதுக்கு என்ன கேடு உனக்கு? ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன மோசம்? உன் கையைப் பிடிச்சு இழுத்துடுவாளோ? என்று வார்த்தைகளை வீசினான்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்து மணி சாரதாவைத் தாறுமாறாகக் கோபித்துக் கொண்டான். 'பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி வந்து தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து கொண்டு கதவைச் சாத்திக்கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்' - இந்த மாதிரி உபதேசங்கள் செய்து முடித்தான். அதன் காரணமாக இருவரும் இரண்டு நாள் பேசாமல்கூட இருந்தார்கள்.

இந்தத் தடவை, தான் சொல்லப்பபோகிற பதில் மணிக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கப் போகிறது என்ற நிச்சயமான எண்ணத்தில், வேண்டிய மட்டும் பேசட்டும் என்று சாரதா வாயை மூடிக் கொண்டிருந்தாள். பிறகு அவன் ஒய்ந்ததும் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

யாருன்னு கேட்டேன். சிநேகிதன்னு சொன்னார். பேர் சொல்லல்லே. உள்ளே வந்து உக்காருங்கோ: வந்துடுவா'ன்னேன். அப்புறம் வரேன்னு
போய்ட்டார்".

சாரதா ஆவலுடன் மணியின் முகத்தைக் கவனித்தாள். அதில் எவ்விதமான சந்தோஷக் குறியும் தோன்றாததைக் கண்டு அவள் முகம் சுண்டிப்போய் விட்டது. சடக்கென்று திரும்பி உள்ளே போய்விட்டாள். - மணியோ அந்த மாதிரிப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. முதலில் அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது

அவள் பதில்; பிறகு தான் சொன்னதற்கு மேலாக, அதியாக அவள் நடந்து கொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. அதன் பிறகு ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்ப்படிந்து நடந்த மாதிரியா அது ? அல்லது... என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது. எல்லாம் சேர்ந்து அவன் வாயை அடக்கிவிட்டன. சாரதாவும் அவனைச் சாந்தப்படுத்தவோ பேச்சில் இழுக்கவோ முயலவில்லை. அவளுக்கும் கோபம்.

சாப்பாடு முடிந்து வெளியே போகும்வரை மணி ஒருவார்த்தை கூடப்பேசவில்லை. தெருவழியாகப் போய்க்கொண்டே என்ன என்னவோ யோசித்தான். அவன் மனம் சொல்லமுடியாத வேதனையை அடைந்தது. சாரதா அவ்வளவு தூரம் போய்விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. படித்த பெண் அம்மாதிரி செய்திருந்தால் அதில் ஒன்றும் விசேஷம் இராது. ஒரு கிராமாந்தரப் பெண், முகம் தெரியாதவனை உள்ளே வந்து உட்காரச் சொன்னது மிகவும் அநாகரிகம். சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? 'என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு? என்றோ, அல்லது 'சுத்த அசடு/' என்றோ நினைத் திருப்பான் அல்லது...

இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு. தெருவில் மணி எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா? இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில் அவள் அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான் சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக் கோபத்தை உண்டாக்கினால் ? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள் ? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும் சொல்லி யிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம் ? சொல்லியிராவிட்டால் அசட்டுத் தனம் ஆபத்தாக அல்லவோ முடியும்?

இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன் மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடிய வில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின் களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான சொற்கள்

"இதோ வந்துடுவா?' என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை! இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! - தன் புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! 'சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! தன்னையும் நம்பினாள்... அவளா அசடு? அவள் தான் உண்மையான பெண்! நான் சந்தித்த முதல் பெண்... அதனால் தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது. மணியை மாலையில் கண்டு அவனிடம் சொல்ல வேண்டும்'. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான் முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச் சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்

மாலை ஆறு மணி இருக்கும். சாரதா வீட்டுக்காரியங்களைச் செய்து முடித்துவிட்டு அறையில் தலையை வாரிப் பின்னிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு கட்டில் தொடுக்கப்படாத கனகாம்பர புஷ்பங்கள், எதிரே முகம் பார்க்கும் கண்ணாடி, ரிப்பன், சீப்பு, வாசனைத் தைலம் முதலியவை இருந்தன.

உள்ளே நுழைந்த மணிக்கு இவற்றையெல்லாம் பார்த்ததும் ஏதோ ஓர் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

இது என்ன பூவென்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்ளுகிறாய்?' என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்.

ஆனால், கனகாம்பரத்தைத்தான் அவன் சொல்லுகிறான் என்று நினைத்துச் சாரதா, அந்தச் சந்தரர்ப்பத்தில் அவனது பட்டண நாகரிகத்தை இடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

--'பட்டணத்துலே எல்லோரும் இதைத்தானே வச்சுக்கறா? சங்கீத வித்வத்சபைலே கூட இதைத்தானே தலைதாங்காமெ வச்சுண்டு வந்தா?” என்று சாரதா சொன்னாள்.

'எல்லாம் பட்டணத்துலே செய்யறாப்பலே செய்யணும்னு யார் சொன்னது? அப்படி கட்டாயமா? பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கு, அவர்கள் வைத்துக் கொள்ளுகிற கனகாம்பரமும், வாசனை யில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டாம் காக்காட்டான் பூவைத் தலையில் வச்சுக்கற பெண்களுடைய வாழ்க்கை ரஸனையும் அப்படித்தான் இருக்கும்.'

'நீங்கதானே நான் பட்டணத்துப் பெண் மாதிரி இருக்கணும்னேள்? இல்லாட்டா ஒங்களுக்கு வெக்கமா இருக்கும்னேளே?' என்று சாரதா மணியின் முகக்குறியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு கூறினாள்.

அதுக்காக மூணாம் மனுஷனைப்போய் ஆத்துக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?’ என்று மணி ஆத்திரத்தில் கொட்டிவிட்டான்.

சாரதாவின் முகம் சட்டென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு – தன் பெண்மைக்கு-அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள் போல அவளுடைய முகத்தில் ஓர் அழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்ந்து முடிந்துகொண்டு கனகாம்பரப்பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.

இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான். அடிபட்ட நாய்போல மௌனமாக அறைக்குப் போய் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படிப்பதாகப் பாசாங்கு செய்தான்.

ஏழு அடிக்கும் சமயத்தில் ராமு வந்தான். மணி கலகலப்புடன் பேச முயற்சி செய்தும் பயன்படவில்லை. வந்ததும் வாரததுமாய் ராமு, மணி, நான் காலையில் வந்திருந்தேன். நீ எங்கே போயிருந்தாய்?" என்றான்.

'நீயா வந்திருந்தாய்?' என்று கேட்டுவிட்டு மணி மௌனத்தில் ஆழ்ந்தான்.

மணி, எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் என்பெயரைக் கூடச் சொல்ல மறந்து போனேன்'.

ராமுவின் தொண்டை அடைபட்டது. மணி தலை குனிந்து கொண்டான்; ஆவனால் பேசவே முடியவில்லை. நண்பர்கள் இருவரும் சில நிமிஷ நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமு நிலைமையை ஊகித்துவிட்டான். திடீரென்று எழுந்தான்.

மணி, நான் போய்விட்டு வருகிறேன். இதைச் சொல்லத்தான் வந்தேன்'

'இங்கேயே சாப்பிடேன், ராமு?

இல்லை.  இன்று வேண்டாம்.

இரவு சாப்பாடு பேச்சில்லாமல் முடிந்தது. ஜன்னல் வழியே பாய்ந்த நிலவைக் கவனிப்பதுபோல மணி ஏங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். சாரதா பால் டம்ளரை எடுத்து வந்து மௌனமாக நீட்டினாள்.

அதுவரையில் அவளுடைய முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை. அப்பொழுதுதான் தலையெடுத்துப் பார்த்தான். அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான்.
சாரதா!' என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

'வேண்டாம்!' என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள்.

நான் சொன்னது என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.

கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?’ என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன்  பேச்சை மாற்றிவிட்டாள். 


- கலைமகள் மார்ச் 1938 -

61 கருத்துகள்:

  1. சிறிய விடயம் தான் அதை வைத்து பழைய கதாசிரியர்களின் எழுத்து நடையை இப்போதுதான் படிக்கிறேன் ஜி.

    1960 காலகட்டமாக தெரிகிறது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 60 ல் இது சகஜமாகி இருக்கும்.  38 ல் அவ்வளவு நவீனமான விஷயம்!

      நீக்கு
    2. சகஜமெல்லாம் இல்லை. எழுபதுகளில் கூட நான் புக்ககம் சென்ற புதுசில் வீட்டு வேலைக்காரரிடம் தோட்டத்தில் இருந்து ஊறுகாய்க்கு மாங்காய் வேண்டும்னு கேட்கப் போய் மாமியாரும், நாத்தனாரும் பின்னி எடுத்துட்டாங்க. அதே வேலை ஆளுடன் மதுரையில் இருந்து ரயிலில் வரச்சே பேசிக் கொண்டு தான் வந்திருந்தேன். ஊரில் அப்படி எல்லாம் பேசக் கூடாதாம். அதோடு மாமாவிடம் ஏதேனும் கேட்பதெனில் மாமியாரிடமோ/நாத்தனாரிடமோ சொல்ல்ணுமாம். அப்புறமா அவங்க அவர்ட்டே சொல்லுவாங்களாம், விடிஞ்சது போனு நினைச்சுண்டேன்,
      ஆனால் என்னால் இதை எல்லாம் கடைப்பிடிக்க முடியலை என்பதையும் சொல்லியே ஆகணும்.

      நீக்கு
    3. நான் மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளாகிறேன்!

      நீக்கு
    4. இதனாலேயே என் கடைசி நாத்தனார் மதுரைக்காரப் பொண்ணுங்களுக்கு அடக்கமே இல்லை என்பாள். அதோடு யாரானும் பையருக்குப் பெண் பார்த்தால் மதுரைக்காரப் பெண்ணும், கேட்டை நக்ஷத்திரமும் வேண்டாம்னு வற்புறுத்திச் சொல்லுவார்.:)

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு AI படங்களும் அழகோ அழகு.
    கதை நிகழ்வின் காலத்திற்கேற்றவான தேர்வின் சாதுர்யத்திற்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. குபாராவை இங்கு பார்த்ததிலும் சந்தோஷம். பி.எஸ்.ராமையா, சி.சு. செல்லப்பா, லா.ச.ரா, ஆர்வி, எம்.வி.வி., தி.ஜா.. என்று இந்த வரிசை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும். 

      ஆனால் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தவிர, அப்போதைய அவ்வளவு புகழ்பெறாத எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட உத்தேசம்.

      நீக்கு

  5. ​ஒரு சிறிய சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு அதனால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணங்களை எழுதி ஒரு எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி செல்லும் உத்தி கு ப ரா வுக்கே தனி. அவருடைய அத்தைகய கதை "விடியுமா" எ பி யில் சனி 'நான் படிச்ச கதை"யில் வந்தது நினைவில் இருக்கிறதா?
    1941இல் கலைமகளில் வெளிவந்த "இளமைப் பலி" என்ற கி வா ஜ எழுதிய சிறுகதையை சனியில் அலசலாம் என்று இருந்தது தள்ளி போவதும் கதைக்கரு ஒரு காதல் சப்ஜெக்ட் என்பதால் தான்.
    கனகாம்பரம் தலைப்பு கனகாம்பரம் தலையில் வைத்துக்கொண்ட பெண் படம் கிடைக்கவில்லையா? தலையில் மல்லைகை அல்லவா உள்ளது!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​ஆம். நினைவிருக்கிறது.

      அவள் கனகாம்பரத்தை தலையில் வைத்துக் கொள்ளாமல் கீழே வைத்து விடுகிறாள் என்பதை நினைவில் கொள்க!!!

      நீக்கு
    2. ஆமா "விடியுமா" ....என் மனதில் விடியல் என்றே நினைவுக்கு வந்து கீழ சொல்லியிருந்தேன் இப்ப அண்ணாவின் கருத்தைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
    3. ​//இது என்ன பூவென்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்ளுகிறாய்?' என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்.//

      நீக்கு
    4. 1941இல் கலைமகளில் வெளிவந்த "இளமைப் பலி" என்ற கி வா ஜ எழுதிய சிறுகதையை சனியில் அலசலாம் என்று இருந்தது தள்ளி போவதும் கதைக்கரு ஒரு காதல் சப்ஜெக்ட் என்பதால் தான்.//

      அண்ணா, அந்தக் கதையில் பகிர முடியாம என்ன இருக்கு? அதெல்லாம் ஒன்னுமில்லை, அண்ணா. பகிருங்க நான் வாசித்திருக்கிறேன். கி வா ஜ வின் கதைகள் பிடிஎஃப் ஒன்று இருக்கு tamilvu லருந்து எடுத்தது.

      கீதா

      நீக்கு
    5. // கனகாம்பரப்பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு//

      நான் இந்தப் பகுதியை வரைய எடுத்துக் கொண்டேன்!

      நீக்கு
    6. என்னோட பெரியப்பா கனகாம்பரம் வாங்கித் தலையில் வைச்சுக்கக் காசே கொடுக்க மாட்டார். மல்லிகை, முல்லை, பிச்சிப்பூக்கள் தான் வாங்கித் தொடுத்து வைச்சுக்கணும். கல்யாணம் ஆன புதுசில் மதுரை வழக்கத்தில் மல்லிகைப்பூவும், கனகாம்பரமும் வாங்கித் தொடுத்துத் தலையில் இரண்டையும் வைச்சுப்பேன். ரங்க்ஸுக்குப் பிடிக்கலை. என் மாமியார் தோட்டத்தில் அத்தனை பூக்கள் இருக்கும். நாத்தனார் பறிச்சுண்டு வருவா. பெரிய மாலை போலத் தொடுத்து வைச்சாலும் அத்தனையையும் ஸ்ரீராமருக்குப் போட்டு விட்டு ராத்திரி படுக்கப் போறச்சே அதிலிருந்து இரண்டே இரண்டு மல்லிகைப் பூக்களைக் கிள்ளிக் கொடுத்துத் தலைக்குள்ளே தெரியாம வைச்சுக்கோ என்பார். நாங்கல்லாம் முழ நீளம் தலையிலிருந்து தொங்கும் பூச்சரத்தை வைச்சுக்கறவங்க. எனக்கு இதுவும் இன்னொரு ஆச்சரியம்.

      நீக்கு
  6. ஸ்ரீராம், முன்னுரையை அப்படியே டிட்டோ செய்கிறேன்.

    நானும் சில குப ரா கதைகள் வாசித்திருக்கிறேன். அதுவும் அவர் சுதந்திரம் எல்லாம் கிடைக்கும் முன் எழுதிய கதைகள்!

    அக்காலகட்டத்திற்கு அசாத்திய துணிச்சல் என்று தோன்றியது.

    இக்கதையை விட "சிறிது வெளிச்சம்", "ஆற்றாமை" கதைகள் இன்னும் மேலே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   அடுத்து கொஞ்ச நாள் கழித்து தாய் கதையும் வெளியிட நினைக்கிறேன். 

      ஆனால் அப்போது இந்த அளவு எவ்வளவு பெரிய அளவில் மனதை பாதித்திருக்கிறது பாருங்கள்.  கி வா ஜ போது போன்ற கதையை வெளியிடவே மறுக்கிறார்!  ராஜாஜி இதை கண்டிக்கிறார்!!

      நீக்கு
    2. ஆமாம் பார்த்தேன். அது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இருங்க இப்படியான கண்டனங்களுக்கு குபரா என்ன பதில் சொன்னார் என்பதை இங்கு தரேன்....எனக்கு அது ரொம்பப் பிடிச்சது.

      //``என் கதை புத்தகத்தை விமர்சனம் செய்தவர்களில் யாரோ ஒருவர், நான் உடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம். இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான். நான் கவனித்த வரை, என் அனுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன” என்பதே கு.ப.ரா-வின் வெளிப்படையான வாக்குமூலம்..//

      கீதா

      நீக்கு
    3. நல்லது. அவர் அளித்திருந்த நீண்ட பதிலின் சிறிய பகுதி இது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  7. கு ப ராவின் கதைகள் ஒவ்வொருவரின் உணர்வையும் அக்கால நடையுடன் சொல்லிச் செல்லும் விதம் ரொம்ப நல்லாருக்கும். ஜெ கே அண்ணா கூட நான் படிச்ச கதையில் கு ப ராவின் கதை ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

    தலைப்பு டக்கென்று நினைவுக்கு வர மாட்டேங்குது...விடியல்? ஆனா கதையில் தலைப்பு கதையில் பொழுது விடிந்ததா இல்லை அந்தக் கதாபாத்திரத்திற்கு விடியலா என்பது போன்று அழகா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. தி ஜாவும், கரிச்சான் குஞ்சுவும் இவர் எழுத்தில் ஈர்க்கப்பட்டு இவரோடு பழக வேண்டும் என்று சென்னையில் தாங்கள் பார்த்த வேலையை விட்டு கும்பகோணம் வந்தார்களாம். குப ரா தன் புத்தகங்களைத் திண்ணையில் வைப்பார் போலும் விற்பனை என்ற பெயரில் ஆனால் நண்பர்கள் அங்கு உட்கார்ந்து வாசித்துவிட்டுச் செல்வார்களாம். சிலர் எடுத்துக் கொண்டு போய் வாசித்துவிட்டுத் திருப்பித் தருவார்களாம். விற்பனைன்னு ஒன்றுமே இருக்காதாம். அதைப் பற்றிக் குபராவிடம் கேட்டால், "தாட்சண்யமாக இருக்கு. விரும்பி வாசிக்கிறார்களே அதுவே நல்ல விஷயம்தானேன்னு சொல்வதுண்டு என்று சிட்டி குறிப்பிட்டதாக ஆனந்தவிகடன் கட்டுரை ஒன்றில் இணையத்தில் சில நாட்களுக்கு முன் வாசித்தேன்.

    அக்கட்டுரையில் தான் இந்த ஆற்றாமை, சிறிது வெளிச்சம் கதைகள் பற்றி.

    அக்கட்டுரையில், புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா அவர்கள், புதுமைப்பித்தன் நினைவு மலரில், "இலக்கியப் பணி ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்துவது கஷ்டம் என்பதை நிரூபித்தவர்கள், குபராவும் புலமைப்பித்தனும்" என்று சொல்லியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலமைப்பித்தனை, புதுமைப் பித்தன் என்று புரிந்து கொள்கிறேன்.

      சுவாரஸ்யமான மேலதிக தகவல்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. அக்கட்டுரையில் புதுமைப் பித்தன்னுதான் குறிப்பிட்டிருக்காங்க. சுவாரசியமான தகவல்கள், ஸ்ரீராம்....தொடராக வந்திருக்கு கு ப ரா பற்றி. ஆனந்தவிகடனில்.

      கீதா

      நீக்கு
    3. // "இலக்கியப் பணி ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்துவது கஷ்டம் என்பதை நிரூபித்தவர்கள், குபராவும் புலமைப்பித்தனும்" என்று சொல்லியிருக்கிறார். //

      நான் இதைக் குறிப்பிட்டேன்.  நீங்கள் சொல்வது புரிந்தது. 

      நீக்கு
    4. குபராவும் புலமைப்பித்தனும்// ஆ ஆமா தட்டச்சுப் பிழை....இப்பதான் இதைக் கவனித்தேன் ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பொக்கிஷ கதை பகிர்வு அருமையாக உள்ளது. இந்த கதையை முன்பு படித்துள்ளேன். இப்போதும் படித்து ரசித்தேன். எழுத்தாளரைப்பற்றிய முன்னுரையையும் படித்துக் கொண்டேன். நல்ல எழுத்தாற்றல். இவரின் தங்கையும் நல்ல பெண் எழுத்தாளர். அந்த காலத்தில் இந்த மாதிரி புதுமை எழுத்தாளர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட மதிப்பு இருந்தது. அதை தவிர சில மாறுபட்ட கருத்துக்களை தருபோரும் உண்டென தெரிகிறது.

    பெண்களின் விட்டுக் கொடுத்தல் மனப்பாங்கு அந்த காலத்தில் அதிகம். ( இதற்காக இப்போது என்னுடன் சண்டைக்கு வைத்து விடாமல் இருக்கவேண்டும் 🙏.) மாறி வரும் காலங்களை குறிப்பிட்டேன் அவ்வளவுதான்...!

    தாங்கள் கதைக்கேற்ப தந்த இரு படங்களையும் ரசித்தேன். பழைய கால ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களை பார்த்த ஒரு திருப்தி உண்டாகிறது. நல்லதொரு பொக்கிஷ பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா..  கதையை நீங்கள் ஏற்கெனவே படித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. 

      நான் கூட நினைப்பதுண்டு, இப்படி புகழ்பெற்ற எழுத்தாளர்கனின் கதையை பெரும்பாலும் எல்லோரும் படித்திருப்பார்கள் என்று.  எனவேதான் நான் அதிகம் வாசிக்கப்படாத அப்போதைய தற்காலிக எழுத்தாளர்கள் கதைகளையும் பகிர நினைப்பேன்.

      பெண்கள் மனநிலை மாற்றம்...  காலத்தின் மாற்றம்.  ஓவியங்களை ரசித்ததற்கு நன்றி அக்கா,

      நீக்கு
    2. பெண்களின் விட்டுக் கொடுத்தல் மனப்பாங்கு அந்த காலத்தில் அதிகம். //

      இது நல்லது என்று சொல்றீங்களா கமலாக்கா? அக்கா சண்டை எல்லாம் இல்லை....ஹாஹாஹாஹா...உங்களையே கொஞ்சம் சுய அலசல் செய்து பாருங்க!!!!!

      விட்டுக் கொடுத்தலில் தவறில்லை. கண்டிப்பாக அந்த எண்ணம் வேண்டும் ஆனால் அந்தமனப்பாங்கு அதிகமாகும் போது, அட்வான்டேஜ் எடுக்கப்படும். பெண்களின் உணர்வுகள் ஒரு காலகட்டத்துக்கு மேல் கொந்தளிப்பாக மாறும். விட்டுக் கொடுத்தல் இருபக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துக் கொண்டே போகும் போது பெண்களின் சுயமரியாதை போகும். நம் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்.

      பெண்கள் ரொம்ப டாமினேட் செய்தாலும் ஆண்களுக்கு நல்லது இல்லை. குடும்பத்துக்கும்.... அப்படி ஆகும் ஆண்களைத்தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்போம்!!!!!!

      எனவே எந்தப் பக்கம் அதீதமானாலும் நல்லது இல்லை.

      கீதா

      நீக்கு
    3. பெண்களின் விட்டுக் கொடுத்தல் மனப்பாங்கு அந்த காலத்தில் அதிகம். //

      இது நல்லது என்று சொல்றீங்களா கமலாக்கா? அக்கா சண்டை எல்லாம் இல்லை....ஹாஹாஹாஹா...உங்களையே கொஞ்சம் சுய அலசல் செய்து பாருங்க!!!!!

      விட்டுக் கொடுத்தலில் தவறில்லை. கண்டிப்பாக அந்த எண்ணம் வேண்டும் ஆனால் அந்தமனப்பாங்கு அதிகமாகும் போது, அட்வான்டேஜ் எடுக்கப்படும். பெண்களின் உணர்வுகள் ஒரு காலகட்டத்துக்கு மேல் கொந்தளிப்பாக மாறும். விட்டுக் கொடுத்தல் இருபக்கமும் இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்துக் கொண்டே போகும் போது பெண்களின் சுயமரியாதை போகும். நம் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்.

      பெண்கள் ரொம்ப டாமினேட் செய்தாலும் ஆண்களுக்கு நல்லது இல்லை. குடும்பத்துக்கும்.... அப்படி ஆகும் ஆண்களைத்தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்போம்!!!!!!

      எனவே எந்தப் பக்கம் அதீதமானாலும் நல்லது இல்லை.

      கீதா

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      /எனவே எந்தப் பக்கம் அதீதமானாலும் நல்லது இல்லை./

      உண்மை. தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய சிறு வயது அனுபவத்தில் உறவுகள் அனைக பேரையும் இது போல் பார்த்துள்ளேன். எங்கள் அப்பா, அம்மாவிடையே நீங்கள் சொல்வது போல் இருபக்கமும் அதீதமாகமல் சுமூகமாகவே வாழ்க்கை முறை நடந்துள்ளது. என் பாட்டி (அம்மாவின் அம்மா) அவர்களின் வாழ்வில் அவர் கணவரால் (இத்தனைக்கும் அவர் என் பாட்டியின் சொந்த அத்தை மகன்) பெற்ற சிரமங்களை சொல்லியுள்ளார்கள். இத்தனைக்கும் அவர்களின் கணவர் (என் தாத்தா) 30 வயற்குள்ளாகவே இவ்வுலக வாழ்வை இழந்து விட்டார். அப்போது என் பாட்டியின் பேச்சுக்களை கேட்டும் போது எனக்கும் நான் பார்க்காத தாத்தாவின் மேல் கோபங்கள் வந்துள்ளது. ஆனால், அப்போதும், அவரால் அந்த குறுகிய காலத்திலும், அத்தனை சிரமங்களை பட்டும், பாட்டி விட்டுத் தருதலின் இயல்பு பற்றி கூறிக் கொள்வார்கள். அது என் மனதிலும் ஆழமாக படிந்து விட்டது எனலாம்.

      இப்போதும் நான் வீட்டில்அனைவருக்கும் சரி, சரியென்றுதான் போகிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் இருபக்கமும் இந்த தன்மையிருந்தல் அவர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்தும். என்னவோ உங்கள் கருத்தைப் பார்த்தும் என் மனதில் உள்ளனவற்றையும் உரிமையுடன் கூறி விட்டேன். தவறாயின் பொறுத்துக் கொள்ளவும்.:))

      இந்தக் கதையின் இறுதியில் "அந்த மனைவி சொன்ன எனக்கும் கனகாம்பரமே பிடிக்காது" என்ற சொல் என் மனதில் பழைய நினைவுகளை உண்டு பண்ணி விட்டது. நன்றி சகோதரி. இப்படி மனம் விட்டு உரையாடுவதற்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. இந்த விஷயத்தில் இரண்டு பெண்களின் உரையாடலை கவனிப்பது சுவாரஸ்யம்!

      நீக்கு
    6. இப்போதும் நான் வீட்டில்அனைவருக்கும் சரி, சரியென்றுதான் போகிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் இருபக்கமும் இந்த தன்மையிருந்தல் அவர்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்தும். என்னவோ உங்கள் கருத்தைப் பார்த்தும் என் மனதில் உள்ளனவற்றையும் உரிமையுடன் கூறி விட்டேன். தவறாயின் பொறுத்துக் கொள்ளவும்.:))//

      கமலாக்கா ப்ளீஸ் இப்படித் தவறாயின் போன்ற வார்த்தைகளை இங்கு எங்களிடம் தவிர்க்கவும். உரிமையுடன் சொன்னதை வரவேற்கிறேன்.

      உங்கள் மனம் விட்டு இப்படிச் சொல்வதுதான் நல்லது.

      //அது என் மனதிலும் ஆழமாக படிந்து விட்டது எனலாம்.//

      யெஸ் இப்படியான ஸ்க்ரிப்ட்கள் தான் பெண்ணின் வாழ்க்கையாக அமைகிறது. சில பெண்களுக்குச் சுய சிந்தனை இருக்கும் அப்படியானவர்கள் இந்த ஸ்க்ரிப்டிலிருந்து வெளி வருவார்கள். சுய சிந்தனை இருந்தும் அதை வெளிக் கொணர முடியாத சூழல்களும் அமைவதுண்டு.

      //இப்போதும் நான் வீட்டில்அனைவருக்கும் சரி, சரியென்றுதான் போகிறேன்.//

      இதைத்தான் எதிர்பார்த்தேன் நீங்கள் சொல்வீங்களோ இல்லையோன்னு தோன்றியது. இதை, நான், உங்கள் கருத்துகள், பதிவுகளில் இருந்து ஏற்கனவே தெரிந்து கொண்டவை.

      இதில் குடும்ப லெவலில் சாதகம் இருக்கலாம் என்று எண்ணுவோம் ஆனால் நம் தனிப்பட்ட சிலவற்றை விருப்பங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எழுத்து உட்பட. இதை வேறு ஒரு முறை ஆதியின் பதிவில் சொல்லியதுண்டு, உங்கள் பதிவிலும் கூட.

      சரி வயசாச்சு போ...இதுவரை இப்படித்தானே இருந்தோம் இப்ப வயசானப்புறம் என்னத்த கிழிக்க...இப்படியே இருந்துவிடுவோம்னு தோணத் தொடங்கிவிடும் பலருக்கும்.

      இப்படியான பெண்களின் திறமைகள் பல அப்படியே மழுங்கிப் போகும் என்பது வேதனையான ஒன்று. நிறைய சொல்லலாம்

      என் அம்மா நன்றாகப் படிப்பார். நல்ல அறிவு உண்டு. 9 ஆம் வகுப்பில் வயதுக்கு வந்ததும் அப்படியே படிப்பை நிறுத்திவிட்டுட்டாங்க வீட்டில்.

      அம்மாவுக்கு அரசியில், நாட்டுநடப்பு பற்றி அறிந்து கொள்ள ரொம்பப் பிடிக்கும். ஊரில் யார் வீட்டிலேனும் ஜூனியர் விகடன் கிடைக்கும். வாங்குவாங்க. தமிழ்ப்பேப்பரும். வாசித்து விவாதிக்கும் அளவு திறமை உண்டு ஆனால் ஒரு சில சமயங்களில் மட்டுமே நான் அதை நோட் செய்ததுண்டு. அவர் அம்மா இருந்தவரை அவர் இதெல்லாம் செய்தது இல்லை. வீட்டில் எந்தப் பத்திரிகைக்கும் அனுமதி கிடையாது. நான்கு சுவற்றுக்குள்...வீட்டு வேலைகள்...

      அம்மாவின் திறமைகள் எல்லாம் மழுங்கியிருந்திருக்கின்றன என்பது, அம்மா இறந்த பிறகு வீட்டில் சாமான் எல்லாம் ஒதுக்கிய போது ஒரு டயரி கிடைத்தது அதில் அவர் வரைந்திருந்த கார்ட்டூன்களைப் பார்த்து அசந்துவிட்டேன். அரசியல் கார்ட்டூன்கள்! என் மகனுடன் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என்று Rapidex english speaking course புத்தகம்....ஆனால் பாருங்க என் பையன் தமிழ்லதான் பேசுவான். இப்பவும். அம்மாவின் திறமைகள் வெளியில் தெரியாமலேயே போயாச்சு!

      கீதா

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      தாங்கள் சொல்லிய கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியென ஆமோதிக்கிறேன்.

      /சில பெண்களுக்குச் சுய சிந்தனை இருக்கும் அப்படியானவர்கள் இந்த ஸ்க்ரிப்டிலிருந்து வெளி வருவார்கள். சுய சிந்தனை இருந்தும் அதை வெளிக் கொணர முடியாத சூழல்களும் அமைவதுண்டு./

      உண்மை.. இந்த சூழல்கள் இருக்கிறதே...! அது செய்யும் கொடுமைகளால்தான் நம்முடைய சற்றைய துணிச்சல்களும், நீர்க்குமிழி போல அடங்கிப் போய் விடுகிறது. காரணம்.. "வாழ்க்கைப்பட்டு போகிற இடத்தில், பெரியவர்களுக்கும், கணவருக்கும் அடங்கி நடந்து கொள்.." என்ற தாரக மந்திரம் தினமும் மனதில் பதிந்து, சுய சிந்தனைகளை மேலெழும்ப விடாமல் பாதுகாத்துக் கொண்டு விடுகிறது. வேறென்ன சொல்வது?

      புகுந்த வீட்டிற்கு வந்ததே, உறவுகளையும், அங்கு வாழும் மனிதர்களையும் அனுசரித்துப் போக வேண்டும். மேலும் சமையல், மற்றும் வீட்டின் சுத்தங்கள், உறவினரை வரவேற்பது உபசரிப்பது என்ற வரைமுறைகளுக்குள் அடங்கிய வண்ணம் வாழ்ந்து பழக்கப்பட்டாகி விட்டது. காலங்கள் ஓடி நாம் திரும்பி பார்ப்பதற்குள் நம் உருவமே மாறி...! இதுதான் காலத்தின் சூழல்

      /நம் விருப்பங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எழுத்து உட்பட..!

      சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அப்போதைக்கு வளர்ந்த என் எழுத்துலக கனவு இப்படித்தான் சிதைந்து போனது. இப்போது பத்து வருடங்களாக என்னத்தையோ எழுதி முன்னுக்கு வர முயற்சி செய்கிறேன் என்றால், அது எங்கள் குழந்தைகளின் (அவர்கள் வளர்ந்த பின்னர்.) ஆரம்பகால ஊக்குவிப்பால்தான்.. அதன் பின் உங்களைப் போன்ற பதிவுலக நட்புகள் தந்த ஊக்கம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு ஒரு டானிக்காக இருந்து உதவி செய்கிறது. அதனால்தான் என் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல தவறுவதேயில்லை.

      தங்கள் அம்மாவின் திறமைகள் மிகவும் வியக்க வைக்கிறது. இத்தனை திறமைகளையும் வெளியில் காட்ட வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்குமென நினைக்கும் போது எனக்கே வருத்தம் மிகவும் எழுகிறது. அருகிலிருந்த உங்களுக்கு எவ்வளவு வருத்தம் வந்திருக்குமெனவும் புரிந்து கொள்ள முடிகிறது.தங்கள் பதில் கருத்தை படித்தவுடன் மனம் கனத்துப் போய் விட்டது .

      சிலரின் வாழ்க்கை இப்படி கனவுகளுடனேயே முடிந்துப் போய் விடுகிறது. அதற்கு உதாரணம் தங்கள் அம்மாவை போன்றவர்கள். வேறென்ன சொல்வது?

      நல்ல ஆழமான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். இந்த ஆறுதல் தரும் உங்களின் நட்பு இனி என் வாழ்நாள் உள்ளளவும் தொடர வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. ஜெ கே அண்ணா பகிர்ந்த கதையில் "விடியுமா" வில் முடிவில் விடிந்தது.....அது மறைமுகமான பதில் முடிவில்... 'குஞ்சம்மாளின்' வாழ்க்கைக்கு என்று தோன்றும்....

    குபரா பெண் முன்னேற்ற முற்போக்குச் சிந்தனைகள் உடையவர் என்று அவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது கதைகளில் தெரியும் இந்தக் கதையிலும் அது வெளிப்படுகிறது.

    நாம நினைப்போம் அப்போவே என்று...அதாவது சுதந்திரம் பெரும் முன்னரே என்று ஆனால் அந்தக் காலகட்டத்தில்தானே பெண் விடுதலை பற்றி பாரதி முழங்கினார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கு ப ரா எங்கள் அப்பாவின்‌சிநேகிதர். " அப்பப்போ ஆகாசத்தில் நட்சத்திரங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவான்" என்பதற்கு மேல் அப்பா எதுவும் சொன்னதில்லை. அது ஏன் என்று மெலிதாக எனக்கு புரிந்தது வெகு நாட்களுக்குப் பின்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் என்று சொன்னால் நாங்களும்...

      நீக்கு
    2. கு ப ரா நடசத்திரம் கீழே விழுவதை பற்றி தன் குழந்தைக்கு கதை சொல்வது வரும் அதுவும் நன்றாக இருக்கும். பொய் சொன்னால் ஒரு நடசத்திரம் கீழே விழும் என்று சொல்லி இருப்பார் குழந்தையிடம்.
      ஒரு நாள் குழந்தை அப்பா இன்று யாரோ பொய் சொல்லி விட்டார்கள் நடசத்திரம் கீழே விழுந்தது என்று சொல்லும்.

      நீக்கு
    3. நடசத்திரம் கீழே விழும் கதை கு. அழகிரி சாமி என்று நினைக்கிறேன். கு.பா ரா இல்லை என்று நினைக்கிறேன்.
      நட்சத்திரத்தை பார்த்து கொண்டே இருப்பார் என்று ராமன் அவர்கள் சொன்னதும் இந்த கதை நினைவுக்கு வந்து விட்டது.
      நட்சத்திரங்களை கண்டு ஆச்சிரியப் படுவார் என்பதை பின்புதான் மனதில் வாங்கி கொண்டேன்.

      நீக்கு
  12. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  13. ராஜகோபாலன் அவர்களது எழுத்துக்களை இதுவரை
    வாசித்தது இல்லை..

    அந்த காலத்து எழுத்தின் நடை அழகே அழகு..

    ராமாயணம் மகாபாரதம் பொன்னியின் செல்வன் மீண்டும் வாசிக்க விருப்பம்..

    இனித்திருந்த செவ்வாய் -
    இலக்கியச் செவ்வாய் ஆகின்ற்து..

    உண்மையான கருத்து என்னவெனில் கைத்தலப்பேசியும் இணையமும் ஒத்துப் போகாத இவ்வேளையில் எனது தளத்தின் அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றேன்...

    திங்கள் பதிவுகளும் அடங்கும்...

    தங்கள் பணியே பணி..
    சிறக்கட்டும்..
    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கீத வித்வத்சபைலே கூட இதைத்தானே தலைதாங்காமெ வச்சுண்டு வந்தா?” என்று சாரதா சொன்னாள்.//
      எம்.எல் .வசந்தகுமாரி கனகாம்பர பூவை தான் தலை நிறைய வைத்து கொண்டு கச்சேரி செய்வார்.

      நீக்கு
  14. கதை அழியா சுடரில் படித்து இருக்கிறேன்.
    விடியுமா கதை என் கணவர் எம்.ஏ படிக்கும் போது பாடபகுதியில் இருந்தது என்று சொல்லி இருக்கிறார்கள். ரயிலில் போகும் போது உள்ள கதை. உடம்பு சரியில்லா கணவரை பார்க்க போகும் கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கு ப ரா கதைகளில் வேறு சில கதைகளை  பின்னர் வெளியிட உத்தேசம் அக்கா.  ஒரேயடியாக தொடர்ந்து ஒரே எழுத்தாளரின் கதையை வெளியிட வேண்டாம் என்று அவ்வப்போது வெளியிட உத்தேசம்..

      நீக்கு
  15. கதை பகிர்வு அருமை பகிர்வுக்கு நன்றி.
    படங்கள் நன்றாக இருக்கிறது. முதல் படத்தை விட அடுத்த படம் நாகரீகமாக காட்டுகிறது சாரதாவை. அந்தக்கால கொண்டை அழகு. கையில் வாட்ச் அதுவும் அந்தக்கால மாடல்.

    பதிலளிநீக்கு
  16. என் கணவரின் அத்தைவீட்டு மாமா, மிகவும் கண்டிப்பானவர், வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு முதலில் இலையில் பரிமாறி விட்டார்கள் என்று மிகவும் கோப பட்டதாக சொல்வார்கள் அத்தை. கணவருக்கு தான் முதலில் பரிமாற வேண்டுமாம். சின்ன விஷயத்திற்கும் கோபித்து கொள்வார்களாம். நின்றால் குத்தம், நடத்தால் குத்தம் என்று.
    மனைவியை பேர் சொல்லி அழைக்கமாட்டார்களாம், ஏய் என்று கூப்பிட்டால் வள்ளுவரின் மனைவி வாசகி போல போட்டது போட்ட படி ஓட வேண்டுமாம் மாமாவை நோக்கி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!