வியாழன், 27 பிப்ரவரி, 2025

காய்கறிக் கூடையில் நத்தை

பருப்பு கீரையும், புளிச்ச கீரையும் பாக்கி.  அதுவும் வாங்க வேண்டும். பருப்பு கீரை வாங்கினால் கடைய வேண்டும் என்றார்கள்.  அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.புளிச்ச கீரையை என்ன செய்யணுமோ...  கவலையாய் இருக்கிறது.  இதைத்தவிர, அக்கேஷனலாக முடக்கத்தான் கீரையும், ஒரு பைக்குள் வல்லாரைக் கீரையும் ஒளித்து வைத்துக் கொண்டு அதையும் விற்கிறார் அந்த பெண்மணி.  அதை வாங்கினால் என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க வேண்டும்.  முடக்கத்தான் கீரையை தோசை மாவில் போட்டு தோசை வார்த்துக் கொடுத்திருக்கிறார் என் அம்மா.  அப்போது நான் பள்ளிச்சிறுவன். வல்லாரையை என்ன செய்ய வேண்டுமோ...

வாரத்துக்கு மூன்று நாள் கீரையை அதிகம் என்று எல்லோரும் அபிப்பிராயப்பட்டனர்.  காணாததைக் கண்டவர் போல நான் வாங்கி கொண்டிருந்தேன்.  காய்ந்த மாடு கம்பில் விழுவது போல என்பார்களே..  அந்த ஆர்வம்.  எனினும் வாரத்துக்கு மூன்று நாட்கள் என்பதோடு நிறுத்திக் கொண்டேன்.

நடுவில் ஒருநாள் வேறு ஏரியாவில் நடை போட்டதில் பழைய சின்ன கட்டு வெந்தயக்கீரையும் கண்ணில் பட்டு சபலப்படுத்தியது.  அதை ஒரு சக்கரம் போல அடுக்கி வைத்திருந்தார் அந்த விறபனைப் பெண்மணி.  போட்டோ எடுக்காமல் போனேன்.  'அடுத்த தரம் கண்ணே' என்று அதனிடம் காதலுடன் சொல்லி விட்டு வந்தேன்.

நடுவில் ஒரு சம்பவம்.  

இது நான் குறிப்பிட்டிருக்கும் காய்கறிக்கடை இல்லை.  கொஞ்சம் காசு கூடுதல் என்று தோன்றினாலும் காய்கள் இங்கு தரமாக இருக்கும்.


ஒருநாள் வேறொரு கடையில், பூச்சி பசலைக்கீரை வாங்கிய கடையில்  புதினா, வெண்டைக்காய், தக்காளி பூண்டு வாங்கி வந்தோம். வேறொரு கடையில் வாங்கிய ப்ரக்கோலியும் அதில் இருந்தது. 

வீட்டில் கொண்டு வந்து  ஒயர்கூடையோடு வைத்திருந்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து எடுத்து அலம்பி ப்ரிட்ஜில் வைக்க எடுத்தால்....

அந்தப் புதினா மேல் ஒரு மீடியம் சைஸில் நத்தை உட்கார்ந்திருந்தது!

ரொம்ப அருவறுப்பாகப் போய் அதை எடுத்து வெளியில் போட்டாலும் என்ன செய்வது என்றே யோசனையாக இருந்தது.  சமைக்கலாம் என்கிற எண்ணமே வரவில்லை.   எதிலிருந்து, எப்படி வந்தது என்று தெரியவில்லை.  நடுவில் ஒரு கோவிலில் பத்து நிமிடம் சுவரில் சாய்த்து வைத்திருந்ததோடு சரி..  அநேகமாக புதினா கட்டில் இருந்திருக்க வேண்டும்.  புதினா மேல்பகுதி இலைகளை வெட்டி எறிந்தும் அருவருப்பு அடங்கவில்லை.

வாக்களிப்புக்கு விட்டேன்.  கீதா அக்கா, கீதா ரெங்கன். மற்றும் குடும்பம்.  கேஜிஜி நத்தை மிகவும் சத்துள்ளது என்று மீட்டா மூலம் தகவல் தெரிவித்தார்.  ஒருவர் உப்புத் தண்ணீரில் களைந்து உபயோகப்படுத்தலாம் என்று சொல்லி இருந்தார்.

கீதா அக்கா சொன்னதைத்தான் செய்தேன்.  ஏனெனில் என் மதிலும் அதுதான் இருந்தது.  "த்ரோ இட் அவே" என்று சுருக்கமாக அனுப்பி இருந்தார்.  "வெண்டைக்காய், தக்காளி?"  என்று கேட்டேன்.  "ஆல்" என்று பதில் வந்தது.  Done!

முளை, அரைக்கீரைகளை வேரை நறுக்கி விட்டு அலம்பி, கீரைகளை தனித்தனியே பிரித்தெடுத்து சோதித்து மென் தண்டுகளோடு நறுக்குவது வாடிக்கை.  பசலையை, மணத்தக்காளிக் கீரைகளை இலையை மட்டும் பிரித்து எடுத்து நறுக்குவது வாடிக்கை.  வெந்தயக்கீரையை வேர் மட்டும் நீக்கி சிறு தண்டுடன் அப்படியே சாம்பாரில் போட்டு விடுவோம்.
அரைக்கீரையை நறுக்கும்போது இவளவு பெரிய இலைகளாக இருக்கும் இதைப்போய் அரைக்கீரை என்கிறார்களே என்று சும்மா ஒரு மெஸேஜ் குடும்பத்தில் விட்டேன்.  விக்கியிலிருந்து அரைக்கீரை விவரங்களை ஒரு சித்தப்பா 121 ல் அனுப்பி இருந்தார்.

சனிக்கிழமை கீரை வாங்கவில்லை.  ஞாயிறு கடை லீவு.  இந்த வாரம் திங்கட்கிழமை சென்றபோது மறுபடி முளைக்கீரை வாங்குவோமா என்கிற எண்ணம் பசலையைப் பார்த்ததும் மாறியது.  நடுவில் பருப்புக் கீரையும், வல்லாரையும் வேறு குழப்பியது.  எனினும் சபலம் வென்றது.  நான் பசலைக்கீரை ரசிகன்.

வாங்கியதும் சந்தேகம் வந்தது.  கீரையின் கால்கள் - அதுதாங்க தண்டுப்பகுதி - போலியோ வந்தது போல இளைத்திருந்தன.  ஒருவேளை பேலியோ கீரையோ என்றெண்ணி விற்பனைப் பெண்மணியிடம் கேட்டேன்.அவர் என்னை இளக்காரமாகப் பார்த்தார்.  


"பாலக் கீரைங்க ஐயா" 

"ஆ...   இதுதானா அது..  கேள்விப்பட்டிருக்கிறேன், ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறேன்.  நேரில் இப்போதுதான் பார்க்கிறேன்" என்று நினைத்துக் கொண்டு 'எப்புட்டி அம்மகு நிப்பட்டியே கதி' என்பது போல முளைக்கீரைக்கே போய்விடலாமா என்று யோசித்தபடி கீரையை பையிலிக்கருந்து வெளியே எடுத்தேன்.  "ஐயே...  இதையே வாங்கிட்டு போங்க...  எல்லாக் கீரையும் அதே பருப்புதான், மொளகாதான், தேங்காய்தான்" என்று மறுபடி என் கையிலேயே அதைத் திணித்தார்.  பாஸும் 'சும்மா வாங்குங்க' என்று அனுமதி கொடுத்ததும் அதை வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

கீரை, காய், வாழைத்தண்டு எல்லாம் நறுக்குவது என் தலையில்...   ச்சே...  என் டிபார்ட்மென்ட்!

நெருங்குவதற்கு கையில் எடுத்தால் அதன் தண்டுகள் அநியாயத்துக்கு ஒல்லியாய் இருந்தன.  என்ன செய்யலாம் என்று பேசியபடி - "பசலைக்கீரையை என்ன செய்வோமோ அதையே செய்துடுவோம்..." -நறுக்கத்தொடங்கினேன்.  பாலக் பனீர் செய்யலாம் என்றால் சப்பாத்திக்குதானாம் அது.  என் வழக்கப்படி பொடியாய் நறுக்கி எடுத்து வைத்து விட்டு வந்து விட்டேன்.
மது- என் மருமகள் - அதை சென்று பார்த்த உடன் என்னிடம் வந்தாள்.  "அப்பா..  புலாவும், பாலக் பனீரும் செய்யவா?"

கசக்குமா என்ன?  "ஓ...!"  என்றேன் சந்தோஷத்துடன்.

"ஆனா அப்பா..  பாவம் நீங்க...  பாலக் பன்னீருக்கு கீரையை இவ்வளவு நறுக்கி இருக்கவே வேண்டாம்...  உங்களுக்கு வேலை"

"பரவாயில்லை விடு.. ஏதோ வித்தியாசமாய் இருக்கட்டும்"

அன்று மதியம் நாங்கள் கிளம்பி சுகுமாரை பார்க்கப் போவதாய் பிளான் இருந்தது.  கொஞ்ச நேரத்தில் நல்ல நல்ல வாசனைகள் மூக்கை வந்து உரசிச்ச செல்ல..  மணிகள் கரைந்தன.

"சரியா இருக்கா பாருங்க" என்று சுவைக்கு ஸ்பெசிமன் வந்தபோது சுவையில் மயங்கிப்போனேன்.




சாதாரணமாக புலாவ் செய்தால் மிகவும் கம்மியாகத்தான் சாப்பிடுவேன்.  இன்று தட்டில் நிறைய விழுந்ததும், அச்சச்சோ..  எப்படி சாப்பிடப் போகிறேன் என்று நினைத்தேன்.  உள்ளே போனதே தெரியவில்லை.

நறுக்கி வைக்கப்பட்டு மீதி இருக்கும் தண்டுகளையும் நறுக்கப்பட்டிருக்கும் கீரையையும் வைத்து சொல்லுங்கள்..  இது என்ன கீரை?

அனுபவம்தான்...   திங்களாயிருந்தால் என்ன, வியாழனாயிருந்தால் என்ன!

======================================================================================


=================================================================================================

பொக்கிஷம்  : எழுத்தும் தொழிலும்

நகை செய்வது மட்டுமின்றிக் கலை நுணுக்கம் மிக்க வேறு பல தொழில்களுக்கும் தங்கம் தேவைப் படுகிறது. ஐரிகை வியாபாரத்தில் ஈடுபட்டவரும், பிரபல எழுத்தாளருமான ஸ்ரீ எம். வி. வெங்கட்ராம் தங்கக் கட்டுப்பாட்டினால் தாக்கப்பட்டுள்ள எண்ணற்ற மக்களின் விசனமிக்க நிலையைச் சாங்கோ பாங்கமாக விளக்குகிறார்.

அவருக்கு மொரார்ஜி மேல் என்ன கோபம் வருகிறது பாருங்கள்...!

'பஸ்மாசுரன் கதை!
எம்.வி.வெங்கட்ராம்

ஜரிகையில் என்ன பொருள்கள் உள்ளன என்பது வாசகர்களில் புலருக்குத் தெரிந்திருக்கக் காரணம் இல்லை. பட்டு நூல், அதற்கு மேல் சுற்றிய சன்னமான வெள்ளி இழை,அந்த வெள்ளிக்குத் தங்க முலரம் பூச உதவும் சில ரசாயனப் பொருள்கள் - இவ்வளவும் சேர்ந்து ஜரிகை ஆகிறது.

ஐரிகைக்கு ஏகபோக உற்பத்தி ஸ்தலம் சூரத் நகரம். சூரத் தொகுதியிலிருந்து பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரர் யார், தெரியுமா? பயப்படாமல் கேளுங்கள்: மொரார்ஜி தேசாய்! தங்கம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலில் ஈடுபட்ட நான் மொரார்ஜிப் பெருமானைத் தியானிக்காமல் கட்டுரையை ஆரம்பிக்க முடியாது.

இன்றைய பாரத் சர்க்கார் என்ற பெரிய கோயிலில் மூலவர் மொரார்ஜி, உற்சவர் நேருஜி என்று எனக்குத் தோன்றுகிறது. உற்சவரை விட மூலவருக்குத் தான் யந்திரபலமும், மந்திர மகிமையும் அதிகம் என்று உங்க ளுக்குத் தெரியும்.

மொரார்ஜியின் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தால். நேரடியாக அடியுண்ட ஜரிகைத் தொழிலும் ஒன்று. ஐரிகை உற்பத்திக்குப் போதிய தங்கம் தருவதற்கு ஆட்சியாளர்கள் உடனபடாததால், கோடிக் கணக்கில் இத் தொழிலில் முதலீடு செய்துள்ள முதலாளிகள் வேறு தொழில்களை தேடு கின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக் கணக் ன தொழிலாளர் குடும்பங்கள் தவிக்கின்றன. சூரத் ஜரிகையை வாங்கி ஜவுளி உற்பத்தியாளரிடம் விற்பனை செய்யும் வியாபாரிகள் நாடு முழுதும் உள்ளனர். அவர்கள் இத்தொழில் இனிப் பிழைக்காது என்று அஞ்சுகின்றனர். புராண இதிகாச காலங்களிலிருந்து, இந்த நாள் வரை இந் நாட்டுக்குப் புகழ் தேடித் தரும் ஓர் அழகுத் தொழில் தங்கச் சட்டத்தால் அழியும் நிலையை எட்டியுள்ளது. ஜரிகை இல்லாத வேஷ்டியை நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். ஜரிகை இல்லாத பட்டுச் சேலையை நினைக்க முடியுமோ? ஜரிகை கிடைக்காததால் நெசவாளர்களின் நிலை பழையபடி வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதை ஆகியுள்ளது!

தங்கச் சட்டத்தால் நாட்டுக்கு ஏற்பட் டுள்ள சூக்குமமான நன்மைகள் மொரார்ஜி யின் ஞானக் கண்களுக்குத் தென்படுகின்றன. நம் ஊனக் கண்களுக்கோ மக்களின் சமூக வாழ்க்கை அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது. நகை செய்யும் தொழிலாளர். நகைக் கடைக்காரம், ஜரிகை உற் பத்தியாளர், ஐரிகைத் தொழிலாளர், ஜவுளி உற்பத்தியாளர், நெசவாளர், வளையல் செய்வோர். இன்னும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் சட்டத்தால் பிழைப்பிழந்து விட்டனர். இந்த நாலு பவுன் நகையை வைத்துக் கொண்டு நான் பணக்காரன் என்று தலை நிமிர்ந்து நடந்த ஏழையின் முதுகு ஓடிந்து விட்டது. 'ஐயாயிரத்துக்கு என்னிடம் நகை இருக்கிறது. பெண் கல்யாணத்தை ஜமாய்த்து விடுவேன்',  என்னிடம் நான்கு பவுனுக்கு நகை இருக்கிறதே! ஜமாய்த்து விடுவேன்' என்பன போன்ற மத்திய வகுப்பாரின் கனவுகளில் மண் விழுந்து விட் டது. பதுக்கும் அளவுக்குத் தங்கம் வைத்துள்ள செல்வந்தர்களை இந்தச் சட்டம் என்ன செய்துவிடும்? சட் டத்தால் நசுக்குண்டவர்கள் தொழிலாளிகள், ஏழைகள். மத்தியதர வகுப்பினர் தாமே! கோடிக் கணக்கான எளிய மக்கள் இத்தனை இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனரே. காந்தி போதித்த அஹிம்சையின் விளைவோ இது?

தங்கச் சட்டத்துக்கு அற் புதக் காரணங்கள் காட்டு கிறார் மொரார்ஜி. தங்கக் கள்ளக் கடத்தலை இச் சட்டம் தடுக்குமாம். கள்ளக் கடத்தலை கண்டுபிடிக்க முடியாத போலீஸ்காரர், அஜாக்கிரதையாக இருந்துகொண்ட வீட்டுக்காரர்களைக் கட்டி உதைத்தால் எப்படி இருக்கும்?  சில ஆயிரம் அல்லது சில லட்சம் கள்ளக் கடத்தல்காரர்களைக் கண்டு பிடிக்க முடியாமல் நாட்டு மக்களை ஹிம்சிக்கத் துணிகிறார் நிதி அமைச்சர்!  சட்டம் வந்த பின் கள்ளக் கடத்தல் குறைந்துள்ளது என்று பார்லிமெண்டில் சொல்லுகிறார்:  கடத் தல்காரர்கள் அவரிடம் கணக்குக் காட்டி இருப்பார்களோ? கடத்தல்காரர்களைப் பிடித்து தண்டிக்கக் கையாலாகாதவர்கள். தங்கச் சட்டத்தை ஏமாற்றத் தங்கத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்களே. அவர்களை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ ?

பாரத மக்களுக்கு உள்ள அதிகப்படியான தங்க மோகத்தைக் குறைக்கவே இச் சட்டம் என்று அறம் பேசுகிறார் தேசாய்ப் பெருமான், ஆகா, இந்நாட்டில் தோன்றிய மகான்களும், மகா புருஷர்களும் போதித்ததைச் சட்டத்தால் செயல் படுத்த இவர் முனைந்துள்ளார். பெண்ணாசை கூடாது என்று நம் பெரியோர்கள் உபதேசித்தார்கள். அதற்கு ஏதாவது காவல் சட்டம் கொண்டு வருவாரோ?  செய்தாலும் செய்வார் நம் மதி மந்திரி! மண்ணாசையும் கூடாதுதான்; ஆகாசத்தில் குடியேறுங்கள் என்று உத்தரவிடுவாரோ என்னவோ! சீன ஆக்கிரமிப்பால் இச் சட்டம் விளைந்ததாய்க் கூறுகிறார்கள். நாட்டில் பதுங்கிய தங்கம், பதுங்காத் தங்கம் அவ்வளவும் சர்க்கார் கைக்கு வந்தாலும் அது பத்து நாள் போருக்குக் காணாது என்று பொருளாதார வல்லுநர்கள் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். ஆனால் தேசாய் பிரபு 'என் அரசியல் வாழ்வு பாழானாலும் சட்டத்தைக் கைவிட மாட் டேன்' என்று சூளுரைத்து. மக்களை மாக்களாய்க் கரு திப் பேசுகிறார்.

மனைவியரின் தாலி ஒளி மங்கினாலும். செய்யும் தொழில் பறி போனாலும் உண்ணும் சோற்றில் மண் விழுந்தாலும் மக்கள் அமைதியாக. மிகவும் அமைதியாக இருப்பதற்குக் ணம் யாதோ? இதுதான் நம் தலையெழுத்துப் போலும் என்று எந்த அக்கிரமத்தையும் கொண்டு சிவனே ஒப்புக் என்று காலத்தை ஓட்டும் நிலை என்று மாறுமோ?  மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் திராணியை என்று திரும்பப் பெறப் போகிறார் களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஜரிகை வியாபாரத்தைச் சொந்தத்தில் தொடங்கினேன். பம்பாய் ராஜ்யத்தில் உள்ள சூரத் நகரம் ஐரிகை உற்பத்தியை இன்று வரை ஏகபோகமாக அநுபவித்து வருகிறது. அங்கிருந்து ஜரிகை வரவழைத்து, பட்டு நூல் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விற்பதுதான் என் தொழில்.

ஆரம்பத்தில் எனக்குப் பேராசையாக ஒன்றும் கிடையாது. அப்போது எனக்குச் சின்னக் குடும்பம்; யாரிடமும் சேவகம் செய்யாமல் மாதம் சம்பாதித்தால் போதும் என்கிற அடக்கமான ஆசையுடன் தொழிலை ஆரம்பித்தேன். முதலில் சூரத்தில் இருக்கும் ஒரு ஜரிகைக் கம்பெனிக்குச் சரக்கு வேண்டிக் கடிதம் எழுதினேன்: என்னை அவர்கள் நேரில் அறிய மாட்டார்களாதலால் ஈரக் கைப் பாங்கு மூலம் அனுப்பும்படி எழுதினேன்; ஆனால் அந்தக் கம்பெனியாரோ, நான் கேட்டதற்கு இரு மடங்கு சரக்கை எனக்கு நேராக அனுப்பி வைத்தனர்; எம் என் தொழில் திறனையும் பற்றி அவர்களுக்குத் தெரியும். என்றும். சரக்கை விற்று மெதுவாகப் பணம் அனுப்பலாம் என்றும், மேலே தேவைப் படும் சரக்குக்கு ஆர்டர் எழுதும்படியும் அவர்கள் கடிதம் எழுதினார்கள். நான் 'ஆர்டர்' எழுதா விட்டாலும் அவர்களிடமிருந்து சரக்குகள் வந்தன.  ஆறு மாதங்கள் கழித்துச் சூரத்துக்குச் சென்றேன். எனக்குச் சரக்கு அனுப்பிய கம்பெனியார் வீட்டில் தங்கினேன். காலைக் குளியலையும். ஆகாரத்தையும் முடித்துக் கொண்டு, எனக்குப் பரிச்சயமான மற்றொரு கம்பெனியாரை, சிவாஜி கம்பெனி என்று வைத்துக் கொள்ளுவோமே, பார்க்கச் சென்றேன்.

உண்ணா விரதம்

சூரத்தில் உள்ள மிகப் பெரிய ஜரிகைக் கம்பெனிகளில் சிவாஜி கம்பெனியும் ஒன்று. அவர்களுடைய ஏஜண்டு ஒருவர் ஏற்கனவே கும்பகோணக்கில் இருந்தார்.  ஏஜண்டு நியமிக்கிற வழக்கம் இந்தக் கம்பெனியாருக்கு இல்லை; ஆகையால் எனக்குச் சரக்கு அனுப்பும்படி அவர்களை நான் கேட்கவே இல்லை; நட்பு முறையில் தான் அவர்களை சந்திக்கப் போனேன். இரண்டாவது  அவர்கள் கொடுத்த தேநீரைப் பருகியதும் சிவாஜி கம்பெனி மகன்லால் கேட்ட முதல் கேள்வி: "ளங்கள் சரக்கை நீ விற்பனை செய் கிறாயா?"

இந்தக் கேள்வியை எதிர்பாராத நான் மகிழ்ச்சியால் அதிர்ந்து விட்டேன்; அந்தக் கம்பெனியின் ஏஜன்னிக்காகத் தவம் கிடக்கும் எத்தனையோ ஜரிகை வியபாரிகள் இருக்க, அவர்களாகவே வலிய வருவது என்றால் --“முன்பே உங்களுக்கு ஓர் ஏஜண்ட் இருக் கிறாரோ" என்றேன்.

இருத்தால் என்ன? இரண்டாவது ஏஜண்ட் நியமிப்பது எங்கள் இஷ்டம்; எங்கள் பணத்தைக் கொண்டு நாங்கள் தயாரிக்கிற சரக்கை யார் மூலமாகவும் நாங்கள் விற்போம் எழுத்திரு; பாக்டரிக்குப் போய் வேண்டிய சரக்கைத் தயார் செய்து கொள்!!' என்று அன்புக் கட்டளை இட்டார் மகன்வால்,

ஒரு வாரத்துக்குப் பிறகு நான் ஊர் திரும் பும்போது, சுமார் முப்பதாயிரம் ரூபாய்ச் சரக்கு எனக்குப் பின்னால் ரயில்வே பார்சலில் வந்து கொண்டிருந்தது. சொந்த முதலீடு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கடன் வாங்கும் வாய்ப்புக்கள் தொழில் அபிவிருத்திக்கு அவசியம் என்பதை வியாபாரிகள் அறிவார்கள். தொழில் தொடங்கிய போது இருந்த அடக்கமான ஆசையை நான் மறந்து விட் டேன்; முதல் ஆண்டிலேயே என் வரவுசெலவு பல லட்சங்களைக் கடந்தது. இதற்கு, என் அறிவும் திறனும் காரணம் என்று கூற முடியுமா?  எங்கள் சரக்கை விற்றுத் தந்து எங்களைக் கௌரவிக்க வேண்டும் என்று வந்தார் இன்னொருவர்; சந்திரவதன் என்று அவரை அழைப்போம்; சொன்னதுடன் நில்லாமல் சரக்கும் அனுப்பத் தொடங்கினார். ஒரு முறை அவர் கும்பகோணம் வந்தார். அந்தச் சமயம் பார்த்து, சிவாஜி கம்பெனி யிடமிருந்து ஏராளமாகச் சரக்கு வந்தது. அதைக் கண்ட சந்திரவதனுக்குப் பொறுக்கவில்லை.  இனி சிவாஜி கம் பெனி சரக்கை விற்கக் கூடாது. வந்த வாபஸ் செய்யும்வரை நான் சாப்பிடமாட்டேன்" என்று உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். எனக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. சிவாஜி கம்பெனியார் வருத்தப்படுவார்களே என்கிற வேதனை. ஆனால் சிவாஜி கம்பெனி சரக்கை விற்பனை செய்தால் இரண்டு சத விகிதம்தான் லாபம் கிடைக்கும்; ஏராளமாய்க் கடன் வாங்கி, கடன் கொடுக்க வேண்டும். சந்திரவதனின் சரக்கில் நூற்றுக்குப் பத்துப் பதினைந்து சதவிகிதம் லாபம் கிடைக்கும். இந்தச் சரக்கு பெரும்பாலும் ரொக்கத்துக்கு விற்பனை ஆகும். தொழில் ரீதியாகப் பார்த்தாலும், சந்திரவதனுடன் தொழில் செய்வதே லாபகரமானது. தவிர, அவர் கொண்டாடிய சகோதர பாசம் வேறு! ஆகவே, சிவாஜி கம்பெனியாரின் சரக்கைத் திருப்பி அனுப்பி, அவர்களுடைய ஜரிகையை என்னால் விற்க இயலவில்லை என்று கடிதம் எழுதினேன். தம்பி சந்திரவதன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சூரத்துக்குப் போனதும் ஜரிகை மழையாகக் கொட்டுவதாயான தம் குழந்தைகள் மீது ஆணையிட்டு விட்டுத் திரும்பினார். அங்கே போனதும் அவருக்கு ஒரு மதுரை அண்ணனின் நேசம் கிடைத்தது. மதுரைக்காரர் பெரும் பணக்காரர். ஆகவே, சந்திரவதனின் பாசம் அந்தப் பக்கம் சாய்ந்தது; எனக்குச் சரக்கு அனுப்புவதைப் படிப் படியாகக் குறைத்துக் கொண்டே வந்து, வருட முடிவுக்குள் சரக்கு அனுப்புவதையே நிறுத்தி விட்டார்! அது பட்டும்அல்ல, தப்புக் கணக்குக் காட்டி என்னை இருபதாயிரம் ரூபாய் வரை மோசம் செய்திருப்பதையும் அப்போதுதான் கண்டு பிடித்தேன்!  அப்புறம் என்ன? சிவாஜி கம்பெனியிடம் சரக்குக் கேட்க வழி இல்லை: தம்பி சந்திரவதன் சரக்கு அனுப்பவில்லை. புதிய ஏஜன்ஸி தேடி அலையவேண்டிய தேவை ஏற்பட்டது." பகை நடுவிலே அன்பும், புகை நடுவிலே தீயும். பெருந்துன்பங்களுக்கிடையே இன்பமும் இருப்பது போல, எனக்கு அறிமுகமான ஜரிகைத் தொழிவில் எத்தனையோ ஏமாற்றங்களும் மோசடிகளும் இருப்பினும் நேர்மையான வாழ்க்கைக்கும் வழியுண்டு, இல்லா விட்டால் எண்ணற்ற மக்கள் இத் தொழிலில் ஈடுபட்டிருப்பார்களா? சிவபெருமானைப் போன்று பொன் மனம் படைத்த சூரத் தொகுதிவாழ் மக்கள் ஸ்ரீ மொரார்ஜி தேசாய், தங்கள் வோட்டுக்களைப் பெற்றுத் தங்கள் தலையிலேயே இப்படிக் கைவைப்பார் என்று கனவிலும் கருதியிருக்க மாட் டார்கள் ! ஆணவம் மிகுந்து ஆண்டவனது தலையிலேயே கை வைக்க முயன்ற பஸ்மா சுரனின் கதை ஸ்ரீ மொரார்ஜிக்கு மறந்திருந்தால் நினைவூட்ட வேண்டியதுதான் !
===============================================================================================

எந்த நோயையும் 
எனக்கானதென்று 
சொந்தம் கொண்டாடவே 
முடிவதில்லை 

எனக்கு முன்பிருந்தே 
அந்த நோயால் 
தாங்களும் 
அவதிப் படுவதாகவே 
அதைக் 
கேட்கும் அனைவரும் 
போட்டிக்கு வருகின்றனர்.

அவர்கள் படும் 
அவஸ்தைக்குமுன் 
என் அவஸ்தை 
ஒன்றுமேயில்லை 
என்றே 
வலியுறுத்துகின்றனர் 

==============================================================================

"வீரமணி மீது தணியாத கோபம் உண்டானது"
வலம்புரி ஜான் எழுதும் உண்மை நிகழ்ச்சி
ஓடக்காரன் வடக்கு நோக்கி துடுப்பைப் போடுகிறபோது , அதிலே பயணம் பண்ணுகிற நான் மாத்திரம் தெற்கு நோக்கி திரும்பி வரமுடியாது. ஒப்புக்காக சொல்லிக் கொண்டிருந்த உதவாக்கரை விவகாரங்களிலிருந்து இப்போது நான் விடுதலை பெற்றிருக்கிறேன். என் கால்களில் இன்னமும் சங்கிலிகள் இருக்கலாம், சிறகுகள் இலகுவாகிவிட்டன.
பார்க்க முடியாத ஒன்றை தொட்டு உணர முடியாத ஒன்றை- நான் எப்படி நம்புவது என்று தான் அம்புலி மாமா காலத்தில் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போது 60 வயதிலும் அதையே சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
வேளாங்கண்ணியில் தொடங்கிய 'அம்மா அழைப்பு' என்கிற பதிகத்தை பாடி முடிப்பதற்காக போன வருஷம் கொன்னூர் மூகாம்பிகை கோவிலுக்கு போனேன். என் மனையாளும் மகனும் கூடவே வந்தார்கள்.
பெங்களூரில் மகாலட்சுமி லே அவுட்டில் மூகாம்பிகை பக்த மண்டலின் என்று இருக்கிறது. அங்கே நாயக் என்று ஒருவர். பெயர் வாய்ந்த இன்ஜினியராக இருந்தவர். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டார். அம்பாள் அவர் மீது பிரத்யட்சமாகிறபோது அவர் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்று கேள்விப்பட்டேன்.
பெங்களூர் நண்பர்கள் என்னை அவரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த நேரம் வந்தது. அவர் சொன்னவைகள் ஈர நதியின் பிரவாகத்தை போல இப்போதும் எனது நெஞ்சில் ஒரு அழகோடு நடந்து கொண்டிருக்கின்றன. "நீ இவைகளை நம்புவதற்காக ஒரு அடையாளம் சொல்லுகிறேன்" என்று சொல்லிவிட்டு, "கொன்னூர் மூகாம்பிகை கோவிலில் இருந்து நீ திரும்புகிறபோது 'காளிங்கன்' என்கிற சர்ப்பம் உனக்கு எதிர்ப்படும்". என்கிற அருள் வாக்கு வந்தது .
கோயிலுக்குச் சென்றேன். மூர்த்தி கணேஷ் பட் என்கிற புரோகிதரின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். அபரணை கரையில் பதிகமும் முடிந்தது. ஊர் திரும்புகிற நேரம். பஸ் நகர்ந்து கொஞ்ச நேரம். என் துணைவி கேட்டாள் -"சர்ப்பம் தென்படும் என்றீர்களே" ஒரே ஒரு நிமிடம். இப்போதும் உடல் குலுங்கி போகிறது.
வலது புறத்திலிருந்து இடது புறமாக கருப்பு வெல்வெட் நிறத்தில் ஆள் உயரத்திற்கு ஒரு சர்ப்பம் தலையை தூக்கி அருள் வழங்குவது போல படம் காட்டியது. பஸ்ஸை நிறுத்தி அனைவரும் கீழே விழுந்து வணங்கினர். சொன்னது நடந்தது; நடக்கிறது; நடக்கும். சுவாசிக்கிற காற்றே சொந்தமில்லை என்கிற போது அம்பாளை சரணடைந்து தானே தீர வேண்டும்?
அன்றிலிருந்து அம்பாள் மீது பிரேமை உண்டானது மாத்திரமல்ல வீரமணி மீது தணியாத கோபம் உண்டானது
=======================================================================================

Love Through Time

This photo from “A Photographic History of Men in Love, 1850s-1950s” captures an intimate moment from a time when male partnerships were illegal. Approximately 120 years ago, this couple posed with a sign, symbolizing their bond in a world that condemned their love.

==========================================================================================
வீரம் விளைஞ்ச மண்ணு...  ஸீட்டு ரிசர்வ் பண்ணவே நாங்க இதைத்தான் போட்டு வைப்போம்!  -  நன்றி  :  தினமலர் 


=============================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் +




-  போலி கால் சென்டர்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மியான்மரில் போலி கால் சென்டரில் பணிபுரிந்த 1,000-க்கும் மேற்பட்ட சீன தொழிலாளர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து கொண்டு வரப்பட்டனர். இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக சீனா தனி விமானங்களை தாய்லாந்துக்கு அனுப்பி உள்ளது. இந்த நடவடிக்கைக்குப்பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப உள்ளனர்.

-  வாஷிங்டன்: பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து, எப்.பி.ஐ., இயக்குனராக காஷ் படேல் பதவியேற்று கொண்டார். அவர், 'அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்களை எப்.பி.ஐ., வேட்டையாடும்' என உறுதி அளித்துள்ளார்.


சென்னை,: ரயில்வே பெண் காவலர் ஒருவர், தனக்கு உயர் அதிகாரிகள் கொடுத்த, 'டார்ச்சர்' விபரங்களை பட்டியலிட்டு, தன் பணியை ராஜினாமா செய்துள்ளார்.  இக்கடிதம் போலீஸ் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-  ஆக்ரா: தாஜ்மஹால் அருகே காணாமல் போன நாயை இரவு பகலாக 104 நாட்கள் தேடிய தம்பதியின் பாசப்போராட்டம் வெற்றி அடைந்தது. வழி தெரியாமல் காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்த நாய், வளர்த்தவரின் குரல் கேட்டதும் ஓடோடி வந்து அவரை கட்டித்தழுவிக் கொண்டது.

ஐ.சி.டி., எனப்படும், இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி திட்டத்தில், ரூ.500 கோடி ஒதுக்கி ஹைடெக் லேப்களை அமைத்து, பாடம் கற்றுத் தரச் சொன்னால், பாடத்திட்டத்தையே தமிழக அரசு உருவாக்கவில்லை என அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

-  மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப்  பொருளை போல இந்திய நிறுவனம் ஒன்றின் மருந்துகள் தவறாக பயன்படுத்தப் படுவதால் அந்த மருந்துகள் உற்பத்திக்கான அனுமதியை திரும்பப் பெறுமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


-  சிதம்பரம் : சிதம்பரத்தில் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மெகா சைஸ் முதலையை பார்த்து, வீட்டில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். வனத்துறையினர் முதலையை பிடித்து, வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

லக்னோ : உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவதற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.

-  கட்டாக் :ஒடிசா மாநிலத்தில், 45 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வுகளில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், உயிரிழந்த சிலம்ப மாஸ்டருக்கு, அவரது மாணவர்கள் கதறி அழுதபடி சிலம்பம் சுற்றி அஞ்சலி செலுத்திய காட்சி, காண்பவர் கண்களை குளமாக்கியது. Video Available.

-  புதுடில்லி: பஞ்சாபில், இல்லாத துறைக்கு, 20 மாதங்களாக அமைச்சர் ஒருவர் செயல்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்புவனம்: திருப்புவனத்தில் டூவீலரை திருடியவர் மீண்டும் மன்னிப்பு கடிதத்துடன் அதே பகுதியில் விட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.  

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்த், சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் 9 கோள்களில், நாம் வாழும் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பது செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கியூரியா சிட்டி விண்கலத்தை இறக்கி அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமா நாசா ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த ஆய்வில், செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
====================================================================================


பொக்கிஷம் :  

கீழ்க்காணும் துணுக்குகளில் ஏற்கெனவே வந்திருந்தவை எதுவும் இருந்தால் மன்னிக்கவும்.  இன்று இதை வெளியிட்டதோடு டிராப்டில் அழித்து விடுகிறேன்.

40 - 1






107 கருத்துகள்:

  1. அலிபாபாவும் துணுக்கு சமீபத்தில் மூணாறில் பார்த்த அலிபாபாவும் 41 டிஷ்களும் என்ற ஹோட்டலை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
  2. கீரை புராணம் சுவாரசியம். மற்ற காய்கறிகளையும் நீங்கள்தான் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலம்புரி ஜானின் 'தாய்' பத்திரிகை வாசித்திருக்கிறீர்களா, ஸ்ரீராம்?

      நீக்கு
    2. ஆமாம், நான்தான் திருத்துவேன்!

      காய்கறி என்ன தப்பு செய்தன, நான் அவற்றை திருத்த? ஹிஹிஹி... நான் திருத்தினால் அவைதான் திருந்துமா?!! ஹிஹிஹி...

      நீக்கு
    3. சிலமுறை அந்த குண்டு தாய் புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன், கொஞ்சம் வாசித்திருக்கிறேன் ஜீவி ஸார். ஆனால் அதிலிருந்து எதுவும் நினைவில் இல்லை!

      நீக்கு
    4. வலம்புரி ஜான் திறமையானவர் ஆனால் நெளிவு சுளிவு இல்லாத்தால் வீணாய் போனவர். நல்ல மனிதருக்கு இது இல்லாத்து , அதிலும் அரசியல்வாதியாக இருந்துகொண்டு நெளிவு சுளிவு இல்லாத்தே அவருடைய வீர்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.

      நீக்கு
    5. பருப்புக் கீரையை அப்படியே மசிக்கலாம். கோங்குரா கீரையை (புளிச்ச கீரையை ) மசித்துப் பருப்புச் சேர்த்து சாம்பார்ப்பொடி பெருங்காயம் போட்டுக் கொதிக்கவிட்டுத் தே. எண்ணெயில் தாளித்துக் குழம்புக்குப் பதிலாக சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம். நான் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணினு எல்லா வகைக்கீரைகளும் வாங்கிச் சாப்பிட்டிருக்கேன் அம்பத்தூரில் இருக்கையில். குப்பைக்கீரை உள்பட. குப்பைமேனிக்கீரையை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துக் கொண்டு சோப்புக்குப் பதிலாகத் தேய்த்துக் குளிக்கவும் செய்கிறேன். ஆச்சு! இதோ வெயில் வந்தால் இனி அது தான்.

      நீக்கு
    6. வலம்புரி ஜானுக்கு வார்த்தை சித்தர் என்றொரு பட்டம் உண்டு. 

      வலம்புரி ஜான், அவர் மனைவி பானு ஆகிய இருவராலும் தாம் அர்சூன் தாசு என்பவரிடம் வாங்கிய கடன் ரூ. 12.28 லட்சத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. எனவே, அர்சூன் தாசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னை உயர்நீதி மன்றம் 2004 ஏப்ரலில் அவர்கள் இருவரையும் வக்கற்றோர் (திவாலானோர்) என்று அறிவித்தது 

      நீக்கு
    7. கீதா அக்கா...   கோங்குரா குறித்துக் கொண்டேன்.  குப்பைமேனி கீரையை இன்னும் உபயோகத்தில் வைத்திருக்கிறீர்களா, அட!

      நீக்கு
  3. செவ்வாயாயிருந்தால் என்ன, சனிக்கிழமையாயிருந்தால் என்ன?

    பதிலளிநீக்கு
  4. ஆமாம்
    நோயின் உபாதை
    ஆளாளுக்கு அவர்கள்
    உடல் நிலைக்கேற்ப
    மாறுபட்டிருக்கும் என்பதை
    மறந்து விடுகின்றனர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கிருக்கும் அத்தனை நோய்களும் அவர்களுக்கும் அதே சமயம் இருப்பது ஆச்சர்யம்தானே?  நமக்கு என்பது இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை குறிக்கிறது.  யார் சென்று என்ன சொன்னாலும்!

      நீக்கு
  5. ​கீரை புராணம் நத்தை என்ற இலவச இணைப்பால் ரசிக்க தக்க ஒன்றாக இருந்தது. வாரத்தில் ஒரு நாள் கீரையை சாப்பிடுவது அலுத்து விடும் எங்களுக்கு. எப்படித்தான் வாரத்தில் மூன்று நாள் கீரை சமைக்கிறீர்களோ?

    சிறுபிள்ளையில் பாடிய பாட்டு நினைவில்

    நத்தையாரே நத்தையாரே
    அத்தை வீடு பயணமோ
    அத்தை வீடு போக முதுகில்
    தண்ணீர் குடம் வேண்டுமோ?

    உங்க வீட்டில் நத்தையாரின் அத்தை இருக்கிறார் போலும்?

    என்ன கீரை என்பதிற்கு விடை மணத்தக்காளி கீரை.

    முதல் முறையாக காங்கிரஸ் இல்லாமல் அமைக்கப்பட்ட ஜனதா ஆட்சி.... பிரதமர் மொரார்ஜி. சாதாரண மக்கள் எல்லோரும் மிகவும் தனிப்பட்ட முறையிலும், அலுவலக ரீதியிலும் மிகவும் கஷ்டப் பட்ட காலம் அவரது காலம். எமெர்ஜென்சி எடுக்கப்பட்டாலும் அதை விட கடுமையான சட்டங்களை கொண்டு வந்தவர். மூத்திரக் குடி, 18 காரட், பசை பச்சரிசி, சர்க்கரை ரேஷன், கட்டாய சேமிப்பு (சம்பளத்தில் ஒரு ப்குதியை பிடித்துக்கொள்வார்) subsidy போன்ற வற்றை முற்றிலும் அழித்தது என்று ஒரு பதிவு அளவுக்கு எழுத முடியும். முடியுமானால் துணுக்கு செய்தியாக அவ்வப்போது சனி பகிர்வில் இணைக்கிறேன்.

    எசப்பாட்டு

    உனக்கென்று தனியே ஒன்றுண்டு
    அதுதான் உன்னுடைய விதி.
    பிரம்மன் எழுதிய தலை எழுத்து
    எல்லோருக்கும் ஒன்று போல் இல்லை.

    இதையும் கவிதை என்று சொல்ல முடியுமா?

    காளிங்கன் கதை முகநூலில் வந்ததா?

    நியூஸ் ரூம் செய்திகள் நிறைய.

    ஜோக்குகள் பரவாயில்லை ரகம் தான்.

    இன்றைய பதிவு நீளம் அதிகம் என்றாலும் கீரை புராணம், மற்றும் மொரார்ஜி புராணம் மட்டும் மனதில் பதிகின்றன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் கீரை இல்லாமல் வாடியதால் அலுக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  மேலும் தற்சமயம் சாதத்தின் அளவை வெகுவாகக் குறைத்து, காய், கீரை பக்கம் கவனம் திருப்பி இருக்கிறேன்!

       நத்தையாரின் அத்தை பாடல் நானும் படித்திருக்கிறேனோ என்கிற ஐயத்தை மனதில் உண்டாக்கியது!

      மணத்தக்காளி கீரை என்பது சரியான விடை!  எளிதான கேள்வி!

      எதையுமே கவிதை என்று சொல்லிக் கொள்வது நம் உரிமை.  
      என் அம்மா வருடத்தில் ஓரிரு மாதங்கள் பிறழ்ந்த மனநிலையில் இருப்பார்.  திடீரென ஒருநாள் நார்மலுக்கு திரும்புவார்.  அன்று அவர் வாயிலிருந்து வரும் என் பெயர் கூட எனக்கு கவிதைதான்!

      காளிங்கன் கதை எங்கள் வீட்டு பைண்டிங் புத்தகம் உபயம்.  படம் சேர்க்க மறந்தேன்!

      செய்தித்துளிகள்தானே..  பாதிக்காது.  மனதில் சுவாரஸ்யம் என்று படும் செய்தியை மட்டும் லிங்க் தொட்டு வாசிக்கச் செல்லலாம்.

      பதிவு நீளமா?  ஆ...   குறைச்சல் என்ற குறை இருந்தது மனதில்!!!

      மொரார்ஜி பதிவு என்று நீங்கள் சொல்வது MVV எழுத்தும் வாழ்க்கையும் பகுதி..

      நன்றி JKC  ஸார்...

      நீக்கு
    2. மொரார்ஜி நேருவின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருக்கையில் தங்கக்கட்டுப்பாடு கொண்டு வந்தார். ஜனதா ஆட்சியில் பிரதமராக இருந்தப்போ இல்லை. தங்கக்கட்டுப்பாடு வந்தப்போ நான் பள்ளி மாணவி. இப்போ அக்ஷய த்ருதியைக் கூட்டம் போல் அப்போ பலரும் போய் நகைகள் அவரவரால் முடிந்ததை வாங்கி வைத்துக் கொண்டனர். எனக்கு அப்பா 14 காரட் அறிமுகம் ஆனதும் ஒரு சின்னத் தோடு வாங்கினார். செம்பு போல் சிவப்பாக இருந்தது. கொஞ்ச நாட்களில் தங்கக்கட்டுப்பாடெல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சென்று ஆகி விட்டது.

      நீக்கு
    3. கரெக்டுதான்.   இதற்குதான் கீதா அக்கா வரணும்ங்கறது...

      நீக்கு
  6. ஜரிகையில் சரி,
    தங்கப் பதக்கத்தில்
    தங்கம் இருக்குமா?
    பதக்கம் வாங்கிய யாராவது
    பகருங்களேன்..
    லலிதா, சொர்ணா யாரிடமாவது
    கேட்டுச் சொன்னாலும்
    சரி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட.  அதோடு இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...  ...  மைசூர்பாக்கிலோ, மைசூர் போண்டாவிலோ மைசூர் இருக்குமா?

      லலிதா பத்மினி சிஸ்டர்.  சொர்ணா யார்? 

      சொர்ணமுகியா?  அல்லது சொர்ணா அக்காவா?

      நீக்கு
    2. கீழே பாருங்கள்
      பின்னூட்ட நெரிசலில்
      பிதுங்கி விடக்கூடாது,
      பாருங்கள்..

      நீக்கு
    3. விடமாட்டேனே..  பார்த்து விட்டேன்.  பதிலும் சொல்லி விட்டேன்!

      நீக்கு
  7. நத்தையிருந்தால்
    சொத்தையா என்ன?..
    அத்தை மகளிடம் கேட்டேன்
    காலிஃப்ளவரில்
    கத்தை கத்தையாய்
    ஊர்வனவெல்லாம்
    உல்லாசமாய் திரிவதைப்
    பார்த்ததில்லையா
    என்றாள் பாவை.
    கள்ளி கண்ணசைவில்
    கயலும் புரண்டது கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயல் என்ன முயலும் வரும் அயல் வீடுகளில்.. ஃபிளவர் காலி என்று நம்பி வாங்கினால் அதில் நெளிந்தால் விட்டு விடுவோமா... கண்ணீர் விட்டு அழுதாலும் வெந்நீர் போட்டு எடுத்து விடமாட்டோம்?

      நீக்கு
    2. அந்த வெந்நீரில், நாங்கள்
      அடைக்கலமாகி
      விடுவோம் என்பது
      அவரவர் அசட்டுதனமான
      எண்ணங்கள்தான்..!
      கொதித்து கொந்தளிக்கும் வெந்நீரில் போட்ட கோபத்தில்
      பிடிவாதமாக
      ஃப்ளவரோடு ஒட்டிக் கொள்ளும், நாங்கள்
      கோபி மஞ்சூரியன் ஆகி விடுவதில்லையா..!
      ஆக, ஊர்ந்தாலும், நெளிந்தாலும்,
      நலிவுற்றாலும்,
      நாங்கள்
      நல்லவர்கள்தாம்..!

      நீக்கு
    3. ஆ...
      கமலா அக்கா...   அசத்தி விட்டீர்கள்.  புதிய அவதாரம்.

      அது சரி, புழுக்கள் அந்த தண்ணீரில் மிதந்து விடுமே...  வெதுவெதுப்பான தண்ணீர்த்தானே?  உள்ளேயே இருந்து விடும் என்று பயமுறுத்துகிறீர்களே!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா. நன்றி. எனக்கு இந்த காலிஃப்ளவர் காய்கறி எப்போதுமே அலர்ஜி தான். அதை நுணுக்கமாக பார்த்து எடுக்க வேண்டும். அப்படியும் புழுக்கள் இருக்குமோவென ஐயம் இருந்து கொண்டேயிருக்கும். உணவகங்களுக்கு செல்லும் போது, கோபி மஞ்சூரியன் கூட அவர்கள் எப்போதும் ஆர்டர் செய்து வந்தாலும் நான் மட்டும் அதை விருப்பமாக சாப்பிடுவதில்லை. எங்கள் வீட்டில் மற்ற அனைவரும் நாலு ப்ளேட் என வாங்கி விருப்பமாக சாப்பிடுவார்கள்.

      எப்போதாவது வாங்கும் கீரைகளைக் கூட ஆய்ந்து சுத்தப்படுத்தி எடுக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் கீரைகளை சட்டென ஆய்ந்து சுத்தப்படுத்துவதில் வல்லுனராகி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

      அடிக்கடி மகன் வாங்கும் இந்த பாலக்கில் கூட ஒரு பெரிய புழு ஒருநாள் தலைகாட்டவே அது பெரிய பெரிய இலைகளாக இருந்தும், பார்த்துப் பார்த்து எடுத்து சுத்தப்படுத்தி.... அப்பாடா..! விழிகள் சோர்ந்து விடுகின்றன. :))

      நீக்கு
    5. வெண்டைக்காயில் கூட புழுக்கள் இருக்கும் பார்த்திருக்கிறீர்களா? அதைத் திருத்துவது இன்னும் கடினம். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சோதிக்க வேண்டும்!

      நான் கீரையை விரைந்து நறுக்க மாட்டேன். கட்டைப் பிரித்து தண்ணீரில் அலசி, உதறி எடுத்து, தனித்தனி தண்டாக எடுத்து ஆய்ந்துதான் நறுக்குகிறேன்.

      நீக்கு
    6. புழு என்ற காரணத்திற்காகவே ரொம்ப நல்லதா இருந்தாலொழிய காலிஃப்ளவர் வாங்குவதில்லை. அதில் நான் பண்ணச் சொல்லுவது பஜ்ஜி ஒன்றுதான்.

      கடைகளில் புதியது போலத் தெரியணும் என்பதற்காக ஆவர்கள் தெளிக்கும் தண்ணீர்... ஐயகோ..

      நீக்கு
    7. ஆமாம்.. வெண்டைக்காய், கத்திரிக்காய் அவரைக்காய், பட்டாணிக்காய் என அனைத்திலும் அதன் அரசாட்சிதான்.

      நீங்கள் சுத்தமாக கீரைகளை அலசிப் பார்த்துப்பார்த்துதான் உபயோகிப்பீர்கள் என தெரியும். நமக்கு அப்படித்தானே பிடிக்கும். நானும் ஒவ்வொரு தண்டாக பார்த்துப் பார்த்துதான் ஆய்ந்து எடுப்பேன். சிலர் வேகமாக செய்கிறேன் பேர்வழியென சுத்தமாக கவனித்து செய்ய மாட்டார்கள்.

      இன்றும் வீட்டில் வெண்டைக்காய் பிட்லை செய்ய வேண்டும். அமாவாசை வேறு. மற்றும் எங்கள் பேரன் பேத்திக்கு இன்று நட்சத்திர பிறந்தநாள். அதனால் சமையலை முடித்து விட்டு பிறகு வருகிறேன். நன்றி சகோதரரே.

      நீக்கு
    8. ஸ்ரீராம், காலிஃப்ளவரை வெந்நீரில் போடக் கூடாது. நார்மல் தண்ணீரில் உப்பு போட்டு பூக்களை வைத்துவிட்டால் போதும். சுடு நீரில் போட்டால் புழுக்கள் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

      நார்மல் தண்ணீரில் அப்படிப் போட்டு ஒவ்வொரு பூவையும் நன்றாக அலசி எழுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் கொஞ்சம் வெந்நீரில் கழுவி விட்டு, சமைக்கலாம்.

      கமலாக்கா பூச்சி இருந்தால் சந்தோஷப்பட்டுக்கலாம். அப்பா பூச்சி மருந்து தெளிக்கலைனு.

      ஆமாம் கீரையை வேர் எடுத்துவிட்டு ஆய வேண்டியதை ஆய்ந்துவிட்டு உப்பு கலந்த நீரில் நன்றாக மூழ்கி வைத்துவிடும் வழக்கம்.

      கமலாக்கா உங்க பேரன் பேத்திக்கு எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். குழந்தைகள் என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டும். பிரார்த்தனைகள்.

      ஸ்வீட் செய்வீங்க! நீங்க கவனமா இருங்க!!!!ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    9. ஜீவி அண்ணா, கமலாக்கா கவிதைகளை ரசித்தேன்!!!

      கமலாக்கா கவிதை எழுதுவாங்க ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    10. வணக்கம் சகோதரி

      எங்கள் பேரன் பேத்திக்கு நீங்கள் அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி

      காலி ஃப்ளவர்விற்கு நீங்கள் சொன்னது போல முயற்சி செய்ய வேண்டும்.

      /ஸ்வீட் செய்வீங்க! நீங்க கவனமா இருங்க!!!!ஹிஹிஹிஹி. /

      ஆமாம். செய்யும் போதே கவனமாக இருக்க வேண்டும். ஹா ஹா ஹா.
      ஆனால், வெறும் பருப்பு பாயாசம் (பிரதமன்) மட்டுந்தான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கோவிலுக்கு வெளியில் செல்லும் போதே சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள். பார்க்கலாம்..! நன்றி சகோதரி.

      நீக்கு
    11. காலிபிளவரை வெந்நீரில் போடமாட்டேன்தான்.  ஏதோ எழுதி விட்டேன்.  உப்பு போட்ட நீரில் போடுவதுதான் வழக்கம்.

      கமலாக்கா கவிதை நான் முதன் முதலில் பார்க்கிறேன்.

      கமலாக்கா... உங்கள் பேரன் பேத்திகளுக்கு அன்பான நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகள்.

      நீக்கு
    12. Happy birthday and our blessings to the children, Kamala Hariharan.

      நீக்கு
    13. வணக்கம் சகோதரரே

      /கமலாக்கா கவிதை நான் முதன் முதலில் பார்க்கிறேன்./

      அட ராமா..! (உங்களையில்லை.
      சாட்சாத் அந்த ராமரை:)) )
      அப்படியா? அப்ப இது வரை எழுதியதில், இது ஒன்றுதான் ஏதோ ஒரளவு கவிதை மாதிரி இருக்குன்னு சொல்லுங்க...!:))) உங்கள் கருத்துக்கும் குழந்தைகளுக்கான பிறந்த நாள் (பேரன், பேத்தி இரட்டையர். மகனின் குழந்தைகள். ) வாழ்த்துக்களும் நன்றி. சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    14. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      நலமா? எப்படியிருக்கிறீர்கள். தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகளை, ஆசிர்வாதங்களை எங்கள் பேரன் பேத்திக்கு தந்ததை கண்டு மிக மகிழ்ச்சியடைகிறேன் சகோதரி. தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    15. வணக்கம் சகோதரரே

      ஜீவி சகோதரரைப் போல, உங்களைப் போலவெல்லாம் எனக்கு சட்டென கவிதை ஊற்று மடை திறந்த வெள்ளமென திறக்காது. ஆனால், இன்றென்னவோ உங்களிருவரின் கவிச் சொற்களை கண்டதும் என் உள்ளத்திலும் கவி ஊற்று சிறு துளியாய் கசிந்தது. உங்களின் இரு கவிதைகளும் படிக்கவே அருமையாக இருந்தது. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. கொஞ்சும் வரை கொஞ்சி விட்டு
    கொஞ்சி முடித்தபின்
    தூர விசிறி விடுவது தான்
    டிராப்ட்டின் தலையெழுத்தா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அதற்கான இடத்தை அடைந்தபின் இங்கு காலியாகத்தான் இருக்கும்!  ஆமாம், எதைச் சொல்கிறீர்கள்?

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  10. ஸ்ரீராம் கடைய வேண்டும் என்றால், கீரை மத்தினால் மசித்துக் கடைவது. அதிகம் தண்ணி இல்லாம கடைஞ்சா தெரிக்காமல் கடையலாம். கீரை கொதித்துக் கொஞ்சம் வேகத் தொடங்கும் சமயம் அடுப்பை சிம்மில் வைத்து மத்தைப் போட்டு மசித்துக் கடையலாம். கல்சட்டியில் கடையலாம், அல்லதுகொஞ்சம் உயரமான பாத்திரத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையவேண்டும் என்பதற்கு நானும் அப்படிதான் பொருள் புரிந்து கொண்டிருக்கிறேன் கீதா.  அதில் வெங்காயம் தக்காளி இரண்டு பல் பூண்டு எல்லாம் கூட சேர்ப்பார்கள்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    கீரை புராணம் சுவையாக இருக்கிறது. கீரைகளை பார்த்து வாங்குவதை ஆய்வதென்பது பெரும் சிரமம்.
    சென்னையில் லஸ்ஸில் இருக்கும் போது, தண்ணி துறை மார்கெட்டில் காய் வாங்க போகும் போது கீரைக்கட்டை கையில் எடுத்து நீண்ட நேரம் பரிசோதித்தால், "இன்னா பாத்துகினே இருக்கிறே" என கீரை விற்கும் பெண்மணியிடமிருந்து அதட்டல் வரும். பயத்தோடு நம் ஐயத்தை சொன்னால், "ஆமா, உன் வயித்திலேயே ஆயிரம் புழு இருக்கும். கீரைன்னா இருக்காதா?" என்ற கீதோபதேசம் பதிலாக வரும். உங்கள் பதிவை படித்ததும், அது நினைவுக்கு வருகிறது.

    ஆனால் கீரை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக உணவோடு பயன்படுத்த வேண்டும். தினமும் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். திரு வாரியாரின் சிஷ்யை (அவரின் பெயர் சட்டென மறந்து விட்டது. பிறகு நினைவு வந்ததும் சொல்கிறேன். ) யூடியூபில் ஆன்மிக உரையாற்றுவார் தான் தினமும் கீரை இல்லாத சாப்பாட்டை சாப்பிட மாட்டேன் என்பார். தினமும் மற்ற காயோடு ஒரு கீரை உணவும் அவசியம் என்பார். அதையும் தினமும், அவர் கைப்பட சமைத்து சாப்பிடுவாராம் .

    கீரைகளோடு உங்கள் வீட்டில், உங்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. மிகுந்த பொறுமைசாலி நீங்கள்.

    நத்தை வந்தாலும், அதை
    அதன் அத்தை வீட்டுக்கு
    வழி அனுப்பி விட்டு சிரத்தையோடு கீரையை சுத்தப்படுத்தி கீரையின்
    மனம் புண்படாதவாறு
    பார்த்துக் கொண்டு விட்டீர்கள். இனி எந்த கீரைகளும்,
    மனம் மகிழ்ந்து
    நத்தையின் நட்பை
    விட்டு உங்களோடு நட்புறவாக இணைந்திருக்கும்.

    ஒன்று தெரியுமோ? இந்த நத்தை ஆயுர்வேதத்தில் ஒரு நல்ல மருந்தாக உபயோகப்படுகிறது.( என் அளவிலும்) எழுதினால் நான் இப்படி எழுதிக் கொண்டே போவேன். மற்றவைகளை படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் காய்கறிகளில் புழு, பூச்சி...  இவ்வளவு ஆழ்ந்து பார்த்தால் எதையுமே சாப்பிடத்தோன்றாமல் போகும்!  அவ்வளவு பெரிய நத்தையைப் பார்த்ததும்தான் ஒரு மாதிரி ஆனது.  அதுவும் அது சங்கரும் இடங்களில் பிசுபிசுவென வேறு ஒன்று...   உவ்வே....!

      நீக்கு
    2. தேச. மங்கையர்க்கரசியா கமலா?

      நீக்கு
    3. தேச மங்கையர்க்கரசி என்பது மருந்தா?

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி.

      ஆமாம் சகோதரி. சரியான பெயரை சொல்லி விட்டீர்கள். அவர் பெயர் தேச மங்கையர்கரசிதான். அப்போது எனக்கு சட்டென அந்தப் பெயர் நினைவுக்கு வரவில்லை. பின்னர் கைப்பேசியை கையில் (கூகுளில் தேடுப் பார்க்க) எடுக்கக் கூட நேரமில்லாமல் போய் விட்டது. சரியாக நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. கீரையை ஆய்வது ரொம்பவே நேரம் எடுக்கும் வேலை. அவள் ஒவ்வொரு இலையின் பின்புறமும் சோதித்துதான் ஆய்வாள். நான் வேகவேகமாக ஆய்ந்துவிடுவேன். தண்ணீரில் சுத்தம் செய்கிறோம், பிறகு சூடாக்குகிறோம் என்ற எண்ணத்தில்.

    என்னுடைய உறவினர் தினமும் கீரையைச் சேர்த்துக்கொள்வார், அரைக் கரண்டிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரை ஆய்வது வேகமாகவும் செய்யலாம்.  தரம்பிரித்து, சோதித்து அடுக்கி விட்டோமானால் சரக்சரக்கென்று நறுக்கித் தள்ளி விடலாம்!!

      நான் நறுக்கிக் கொடுக்கும்போதே வீட்டில் 'திருப்பித் திருப்பி கீரையா?' என்கிறார்கள்!  அதேசமயம் செய்தபின் நன்றாய் இருக்கிறது என்று சாப்பிட்டு விடுகிறார்கள்!

      நீக்கு
  13. பஹ்ரைனில் கருப்பு திராட்சை வாங்கியபோது, அதில் ஒரு கொத்தில் ந்த்தை இருந்தது, அதனை அந்தக் கடையிலேயே வைத்துவிட்டேன், கொத்தை. பாக்கியை உப்பு நீரில் ரொம்ப நேரம் ஊறப்போட்டு, பிறகு அலம்பி உபயோகித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அதில் ஒரு கொத்தில் ந்த்தை இருந்தது, //

      நத்தைதானா? அடடே...

      நீக்கு
    2. இங்கு நத்தை இருப்பது பெரிய விஷயமில்லை. பஹ்ரைனில் இருந்தது பெரிய விஷயம். எல்லா செக்கிங்கும் தாண்டி வந்திருக்கே

      நீக்கு
  14. புளிச்ச கீரையை - கோங்குரா - இதில் சிவப்பு வண்ணம் கலந்த தண்டும் உண்டு பச்சைத் தண்டும் உண்டு. ஆந்திரா பக்கங்களில் பெரும்பாலும் சிவப்புகலந்த தண்டு. அங்கு கோங்குரா இங்கு புளிச்ச கீரை அதில் புளிப்புத் தன்மை இருக்கும்ன்றதுனால.

    அந்த இலையை ஆய்ந்து சாம்பார் செய்யலாம். கோங்குரா தொக்கு செய்யலாம். அப்பால ஒன் டு ஒன் ல சொல்லறேன். கோங்குரா பச்சடி (தயிர்ப்பச்சடி இல்லை) ஆந்திரால அப்படித்தானே சொல்றாங்க. அது செய்யலாம். ஆந்திரா ஹோட்டல்களில் மதிய உணவு என்றால் தட்டின் அருகில் 4, 5 கிண்ணம் செட்டா ஒரு கம்பியில் ஒட்டிக் கொண்டு இருக்குமே அதுஇருக்கும். அதில் ஒன்றில் ஆந்திரா பருப்புப் பொடி, கோங்குரா தொக்கு நம்ம பாஷைல, ஆவக்காயா, வேறு ஒரு ஊறுகாய், நல்லெண்ணை அல்லது நெய் ஒரு சின்ன கிண்ணத்துல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னாங்கண்ணி கீரையிலும் சிவப்பு வண்ணம் கலந்த கீரை உண்டு.  புளிச்ச கீரையில் சிவந்த தண்டு!  அது இன்னும் வாங்கப்படவில்லை;செய்யப்படவில்லை!

      நீக்கு
    2. விதம் விதமாக செய்யலாம் என்றாலும் எங்கள் வீட்டில் ஒத்து வருவதில்லை. நான்தான் இறங்கி முயற்சிக்க வேண்டும்!

      நீக்கு
  15. வல்லாரையைத் துவையல் செய்யலாம் இல்லைனா மற்ற கீரைகளோடு சேர்த்துப் போட்டு செய்யலாம்.

    நத்தை இருந்தது அறுவறுப்பாகத் தோன்றினால் தூக்கிப் போட்டு விடலாம்தான். காலிஃப்ளவர், வெண்டை, கத்தரியில் ஏன் புடலங்காய், பாவக்காயில் கூட புழுவே இருக்கும் அதன் வேலைகளையும் செய்து அதாங்க கக்கா!!! புடலங்காய் நறுக்கும் போது புழு இருந்தா புழு வெளியில் வந்தால் மினிமம் ஒரு அடி தூரம் துள்ளும் புழுவின் தலையும் காலும் சேர்ந்து கொண்டு வட்ட வடிவாகித் துள்ளும். அதெல்லாம் தூக்கிப் போட்டு வெதுவெதுப்பான உப்பு நீரில் போட்டு நன்றாகக் கழுவி பயன்படுத்துவோமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் உவ்வே  சொல்ல வைக்கிறீர்களே...  !  பாகற்காயில் இதுவரை பார்த்ததில்லை.

      நல்லவேளை..  இன்னும் எந்தக் காயிலிருந்தும் அல்லது தேங்காயிலிருந்து உடைத்ததும் தேரை துள்ளவில்லை!!

      நீக்கு
  16. கீரைக்குள் கூடப் புழு இருக்கும். கூடவே அதன் கழிவுகளும். ஏன் முட்டைகளும் கூட இருக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. grrrrrrrrrr... இன்றோடு கீரை வாங்குவதை நிறுத்தி விடுகிறேன்!

      நீக்கு
    2. ஹாஹாஹா ஸ்ரீராம், மீண்டும் இங்கு வந்து ரெஃப்ரெஷ் பண்ணினா இந்த பதில்தான் கண்ணுல படணுமா!!!!!! பாருங்க....

      அதெல்லாம் ஒண்ணுமில்லை...தைரியமா சாப்பிடுங்க....நாங்க சாப்பிடலை!!!!!!!

      கீதா

      நீக்கு
  17. நீங்க காட்டியிருப்பது அரைக்கீரைதான் ஸ்ரீராம். எங்க ஊர்ப்பக்கம் இலை சின்னதா இலையை மட்டும் உதிர்த்து பெரிய சாக்குக்குள்ள வைத்துக் கொண்டு வருவாங்க சைக்கிளில். வாசல்ல வரும். திருவனந்தபுரத்துல கூட வாசலில் வந்ததுண்டு ஆனால் அப்புறம் காணாமல் போய்விட்டது. இப்ப ஊர்ல கூட வாசலில் வருவதில்லை!

    சென்னை வந்த பிறகுதான் இலைகள் இவ்வளவு பெரிசா பார்த்தது அரைக்கீரையில் அதுவும் தண்டோடு கடையில் வைத்திருப்பதை! ஊர்ல இலை மட்டும் பார்த்து பழகிட்டு இதுவா அரைக்கீரைன்னு கேட்டு
    "உனக்குக் கீரை கூடத் தெரியாதா? அப்ப கீரை சமைச்சதில்லையா உங்க வீட்டுல " என்றெல்லாம் கமென்ட்ஸ்!!! . ஆனா பாருங்க அவங்களுக்கு எங்க ஊர் பொருட்கள் பத்தி தெரியாதுன்றது வேறு விஷயம், ஏட்டிக்குப் போட்டியா நையாண்டி அடித்துப் பழக்கமில்லை!! அது தவறு என்பது பதிந்திருந்ததால்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரைக்கீரைதான்..  தெரியும்.  ஆனால் இவ்வளவு பெரிய இலையாய் இருக்கே என்றுதான்...

      நீக்கு
    2. அட! சென்னையில் இருக்கற நீங்களே இப்படிப் பார்த்ததில்லைன்றீங்களே!!

      கீதா

      நீக்கு
    3. நான் அரைக்கீரை வாங்கி இருந்தால்தானே!

      நீக்கு
  18. ஸ்ரீராம் நீங்க போட்டிருக்கும் படத்தில் இருபப்து பாலக் கீரை - பசலை போல இல்லை.....

    சென்னையில் சொல்லப்படும் பருப்புக் கீரையும் இங்கு சொல்லப்படும் பருப்புக் கீரையும் வேறாக இருக்கு.

    திருவனந்தபுரத்தில் பருப்புக் கீரைன்னு சொல்றது பரவலாக எல்லா ஊர்களிலும் டக்கென்று கூடை கூடையாகப் புதர் போல வளரும் சீமைப் பசலை. சைனா பசலைன்னும் எங்க மாமியார் சொல்வாங்க. வயலட் கலர் பூவோடு வருமே நீள் வட்ட இலைகளுடன். திருவனந்தபுரத்தில அப்ப பாலக் எல்லாம் கிடைப்பது அபூர்வம். அந்த சமயத்துல இந்த சீமைப்பசலையைத்தான் பாலக் பனீர் செய்வது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  பூச்சிப் பசலை வாங்கியபோது பசலை படம் போட்டிருந்தேன் - சென்ற வாரம்.  இப்போது போட்டிருப்பபவை பாலக் தான்!

      நீக்கு
  19. பாலக்கை ஆங்கிலத்தில் Spinach நு சொல்றாங்கோ!

    ஸ்மூதி செய்யறாங்க இங்கயும் தான். நாம் வீட்டில் வளர்த்தால் இலைகளை மட்ட்டும் கட் செய்து எடுத்துக் கொண்டு விட்டால் மீண்டும் இலைகள் வந்துவிடும் அப்படி 2, 3 முறை வந்த பிறகு அதன் பின் வளரும் இலைகளைப் பொருத்து எடுத்துவிட்டு மீண்டும் நடலாம்.

    வாங்கும் கீரையில் உள்ள வேரைக் கூட நட்டு வைக்கலாம் மண் நல்ல வளமாக இருந்தால் இலைகள் நன்றாக வரும் கூடவே அது மார்க்கெட் வரப்ப எத்தனை முறை இலைகள் மீண்டும் மீண்டும் துளிர்க்க விட்டிருக்காங்கன்றது பார்க்கணும்

    வேர் இல்லாம இலைகல் கொஞ்சம் தன்ண்டு நீட்டமா வருமே அப்ப அது மீண்டும் துளிர்க்க விட்டிருக்கலாம் (கடையில கட் பண்ணுவாங்களாகவும் இருக்கலம)

    வேரோடு வருவதும் இருக்கிறதே அப்ப அது கடைசி விளைச்சலாகவும் இருக்கலாம் இருந்தாலும் முயற்சி செய்யலாம் இங்கு பெரும்பாலும் வேரோடு வரும் என்பதால் நான் நட்டுவைத்து இலைகள் வந்து சமைத்திருக்கிறென். இப்ப செய்வதில்லை இந்த வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வந்திருக்கும் மணத்தக்காளியையும், பசலையையும் நட்டு வச்சிருக்கேன்..  பார்க்கலாம்!

      நீக்கு
    2. பாலக் ல வேர் இருக்கா? ம த வில் வேர் இருக்கா? இலைகள் வரட்டும்!

      கீதா

      நீக்கு
    3. இரண்டிலும் வேர் இல்லை.  ஆனால் இலைகள் வரும் என்கிறார்களே...

      நீக்கு
  20. பாலக் கிலுமே கூட வகைகள் உண்டு.

    ஓ படத்துக்குக் கீழ "பாலக் கீரைங்க" இத கவனிக்கலை நான் இப்பதான் இந்த இடத்துக்கு வருகிறேன்!!!!

    வர்ஷினி நன்றாகச் செய்கிறார், ஸ்ரீராம்!

    மணத்தக்காளிக் கீரை

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    இன்றைய அரட்டை கச்சேரி நன்று. அனைத்தும் ரசித்தேன் - குறிப்பாக கடைசி பொக்கிஷம்.

    பதிலளிநீக்கு
  22. வாழைமரத்தில் இப்படித் துளையிட்டு பயிர் செய்வதைப் பார்த்திருக்கிறேன் இன்னும் சில மரங்களில் கூடச் செய்யறாங்க. இங்கும்...இப்படிப் படிப்படியாக வைத்து....இடப் பிரச்சனை மண் இல்லா இடங்கள் பிரச்சனையாகி வருதே! இப்படித்தான் இனி..

    எப்படி ஸ்பேஸ் போறவங்களுக்கான சாப்பாட்டுக்காக ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு கேப்ஸ்யூல் வடிவங்கள் வந்ததோ அதையே வணிகமாக்கிடும் எண்ணங்கள் பெருகலாமே! அதான் எதிர்காலத்தில் உணவே காப்ஸ்யூல்னு சொல்லிட்டுருக்காங்க போல

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். நல்ல ஐடியா இல்லை?

      நீக்கு
    2. ஆமாம் நல்ல ஐடியா...ஹான் க் மூங்கிலிலும் செய்யறாங்க அப்ப டக்குனு நினைவுக்கு வரலை இப்ப வந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
  23. மொரார்ஜி தங்கம் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக இருக்கிறது வாசிக்க. எம் வி வி இந்தத் தொழிலும் செய்திருக்கிறாரா அட!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எம் வி வி இந்தத் தொழிலும் செய்திருக்கிறாரா அட! //

      இந்தத் தொழில்தான் செய்தார். எழுத்து பொழுதுபோக்கு.

      நீக்கு
    2. ஓஹோ!!! எனக்கு அவரை எழுத்தாளராய்த்தான் தெரியும்...அதுவே பெரிய விஷயம் இல்லையா

      கீதா

      நீக்கு
  24. நோய் பற்றிய உங்க கவிதை - சிரித்துவிட்டேன், ஸ்ரீராம். உண்மைதான்.

    அதுவும் சர்க்கரை - பிபி - மார்க்ஸ் கேட்டு ஒப்பீடுகள் உங்களுக்கும் அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன்!!

    நான் இல்லைப்பா போட்டிக்குனு சொல்லிடுவேன் அவங்க கிட்ட எல்லாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   அப்படிச் சொல்பவர்கள் மிகக் குறைவு!  'எனக்கும் எனக்கும்' என்று சேர்ந்து கொள்பவர்கள்தான் அதிகம்!

      நீக்கு
    2. அதேதான் ஸ்ரீராம்.......ஓ உனக்கு பரவால்லியே இவ்வளவுதானா எனக்கு அதை ஏன் கேக்கற நேத்து பூரா..........இதுக்காகவே நான் இல்லைப்பான்னு ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  25. வலம்புரி ஜானின் நிகழ்வு சுவாரசியம் ப்ளஸ் ஆச்சரியமும்....ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை உண்டாக ஒவ்வொரு நிகழ்வு, அதை உணர்தல் என்று...கடைசி வரி ரொம்பப் பிடித்திருந்தது!!!!!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திராவிட ஆட்சிகளில் அதை இப்படி வெளிப்படையாக சொல்வதற்கும் ஒரு தில்லு வேணும் இல்லையா?

      நீக்கு
  26. இணையத்திலிருந்து படம்...அது ஆச்சரியம் இல்லை என்றே தோன்றுகிறது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே!!! ஒரு காலத்தில் இதெல்லாம் இருந்தாலும் சமூகக் கட்டுப்பாடுகள் என்ற நாகரிகம் வந்த பிறகு தான் வேறுவிதமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம்.

    அருவா தின்னவேலியோ??!! இல்லை அந்தப்பக்கமோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வந்திருக்காஹ 

      நீக்கு
  27. செல்லம் - செய்தி நெகிழ்ச்சி.

    முதலைக்கு எப்பவோ நாம இங்கருந்துருக்கோமோ என்று பழைய நினைவு வந்துருச்சோ என்னமோ!

    செவ்வாய்ல கடற்கரை செய்தி நானும் பார்த்தேன். அதான் ஏற்கனவே செவ்வாய்க்குப் போக டிக்கெட் பதிவு செய்யணும்னு 5 வருஷம் முன்ன விளம்பரம்னு பெரிய செய்தி வந்ததே!! இப்ப இன்னும் தீவிரமாகலாம்.

    சங்கர் நியூஸ் எங்க? கூகுளில் பார்த்துக் கொண்டேன். அவர் எடுக்கும் படங்களின் கருத்து முரண்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. பொக்கிஷம் நலலருக்கு

    ஹான் ஒன்று முக்கியமான விஷயம் சொல்ல விட்டுப் போச்சே

    ஸ்ரீராம், காய்கறி நறுக்குதலில் உங்களுக்கு பெரிய பரிசு கொடுத்து கௌரவித்துப் பாராட்டிடுவோம்!!! நல்லா ஃபைன் கட்!!

    நம்ம வீட்டில் நானுதான்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.. 

      ஆனால் நான் ஒன்று கேள்விப்பட்டிருக்கேன்.  கீரையை அவ்வளவு பொடியா நறுக்கக் கூடாதாம்.  சத்து வீணாயிடுமாமே...

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      ஆமாம்.. கீரையை பொடிதாக நறுக்கக் கூடாது என்றுதான் சொல்வார்கள். அதுவும் நறுக்கியபின் தண்ணீரில் அலம்பி கூடாது. கடாயில் போட்ட பின் மூடி வைத்து சமைக்கக் கூடாது. குக்கரில் சாதத்துடன் வேக வைக்க கூடாது.

      "கீரை வேகுவதும், கிழவி சாகுவதும்" என்றொரு சொல்வழக்கு கூட உண்டே..! மற்ற காய்களை விட அவ்வளவு எளிதில் கீரை வேகுவதால் அந்த சொல்வழக்கு வந்ததோ என்னவோ..? என நானும் யோசிப்பேன். ஆனால், அந்த மாதிரி மரணம் எல்லோருக்கும் அமைய வேண்டுமே..! நான் கூடத்தான் சுயநலமாய் எனக்கு அப்படி பிரார்த்தித்து கொண்டேயுள்ளேன்.

      இன்றைய கீரை அலசல்கள் நன்றாக இருந்தன. நீங்கள் சொல்லிய வகை கீரைகளை அனேகமாய் நாங்களும் வாங்கியுள்ளோம் . (முருங்கை கீரையை தவிர்த்து. அது வாய்வுவை உண்டாக்குமென வாங்கியதில்லை. ஆனால், அதுவும் சிலருக்கு நன்மையை தருமாம். ) இன்றைய நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. நேற்று முருங்கைக்கீரை வாங்கி வந்தேன். இன்று அமாவாசை என்பதால் சமைக்கவில்லை. நாளை சமைக்கப்படும்!

      நீக்கு
    4. முருங்கைக்கீரையை சூப் வைச்சுக் கொடுத்துண்டிருந்தேன். ரங்க்ஸ் திடீரென சாப்பிட மாட்டேன்னு அடம். என்ன செய்யறதுனு புரியலை. நெல்லிக்காய்ச் சாறு காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இப்போ ஒத்துக்கலைனு வேறே சொன்னாரா! சரினு முருங்கைக்கீரையோடு கருகப்பிலை சேர்த்து நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்து உப்பு, மிளகு, ஜீரகப்பொடி, பெருங்காயம் போட்டு ஜலம் விட்டுக் கொதிக்க வைத்துக் கொஞ்சம் சுண்டின பின்னர் கொத்துமல்லி வேண்டுமானால் சேர்க்கலாம். கொதிக்கும்போதே கூடப் போடலாம். வடிகட்டி அரை டம்பளர் நெல்லிக்காய் ரசம் குடிக்கக் கொடுத்துடறேன். அப்படியும் ஹீமோக்ளோபின் "மந்து"னு உட்கார்ந்திருக்கு. ஏற மாட்டேன்னு அடம். :(

      நீக்கு
    5. முருங்கைக்கீரை சூப், அடை பருப்பு உசிலி, தக்காளி, சி.வெ சேர்த்து வதக்கல், பாசிப்பருப்புப் போட்டுத் தேங்காய், ஜீரகம் போட்டுக் கூட்டு. அப்படியே நறுக்கி சாம்பாரில் போட்டுனு பயன்படுத்தலாம். எங்க வீட்டில் அடைக்கே ஓட்டு விழும்.

      நீக்கு
  29. லலிதா, சொர்ணாக்கா
    மாளிகைகளெல்லாம்
    தி. நகரில் தான் இருக்கு!
    தெரியாது ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  30. கீரையுடன் நந்தை இன்று எ.பி.இல் இடம் பிடித்து பிரபலமாக வந்திருப்பார். :)
    எமக்கு உவ்வே தான் அவையும் ஜீவராசிதான் .

    வாழைமரத்தில் துளையிட்டு பயிர் நல்ல முயற்சி.

    நியூஸ்ரைம் பலவித செய்திகளைத் தந்தது.

    ஜோக்ஸ் ரசனை.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் மற்றவையனைத்தும் அருமை.

    /எந்த நோயையும்
    எனக்கானதென்று
    சொந்தம் கொண்டாடவே
    முடிவதில்லை /

    கவிதை அருமை. உண்மைதான். எதையுமே சொந்தம் கொண்டாட முடியாத இந்த உலகில், இதையும் சொந்தம் கொண்டாட எப்படி முடியும்.? வரிகளை ரசித்தேன்.

    வாழை மரத்தில் பயிர் செய்யும் முறை நல்லது.

    மண் விளைவித்த வீரம், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் தொகுப்பான பல செய்திகள் அனைத்தும் அருமை.

    பொக்கிஷ நகைச்சுவைகளில், முதலில் வந்தது சிரிக்க வைத்தது. இப்போது அந்த திரைப்படம் எடுத்திருந்தால் பாதிக்கு மேல் காணாமல் போயிருப்பார்கள். அதில் ஒருவன்தான் வணக்கம் சொல்லச்சொல்லி சாமர்த்தியமாய் திருடுகிறானோ..? அத்தனையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. கீரை புராணம் அருமை.
    //நடுவில் ஒரு கோவிலில் பத்து நிமிடம் சுவரில் சாய்த்து வைத்திருந்ததோடு சரி.//.

    சுவரில் நந்தை மழை காலத்தில் இருக்கும் . இப்போது இரண்டு மூன்று நாள் மழை பெய்தது அங்கு மழை பெய்ததா?

    கீரைகளை , புழு, பூச்சிகள் இல்லாமல் சுத்தம் செய்ய வெகு நேரம் எடுத்து கொள்வேன், அதில் நந்தை பூச்சி என்றால் தூக்கி எறிந்து விட வேண்டியது தான்.
    வாழைமரத்தில் பயிர் செய்வது நல்லதுதான். ஆனால் நம் ஊரில் வாழை மரம் கீழே கிடந்தால் அதை சுற்றி கரையான் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
  33. பொக்கிஷபகிர்வுகள், உங்கள் கவிதைகள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  34. வாரம் 3 நாட்கள் சேர்த்திட... வகை வகையான கீரைகளைப் பற்றிய ஆய்வு அருமை. கவிதை... உண்மை. ந்யூஸ் ரூம்... நன்றி. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!