காரக் குழம்பு மசாலாப் பொடி..
குவைத்தில் சொந்த சமையலில் இருந்தபோது கைப்பக்குவமாக தயாரித்துக் கொண்ட - காரக் குழம்புக்கான மசாலாப் பொடி...
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு 4 Tbsp
உளுத்தம் பருப்பு 2 Tbsp
அரிசி 2 Tbsp
மிளகு 1 Tbsp
வெந்தயம் 3 Tbsp
சீரகம் 5 Tbsp
உலர்ந்த மல்லி 6 Tbsp
உலர்ந்த குண்டு மிளகாய் 10
கறிவேப்பிலை 5 இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் 2 Tbsp
தேவையான பொருட்கள்

காரக் குழம்பு
செய்முறை :-
கறிவேப்பிலையை முதல் நாளே வெயிலில் உலர வைத்துக் கொள்ளவும்..
வாணலியை மிதமான சூட்டில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மேற்குறித்த பொருட்களை ஒவ்வொன்றாக கல் உப்பு உட்பட சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிளகாய் முதற்கொண்டு எந்தப் பொருளும் கருகி விடக் கூடாது.
வறுத்தெடுத்த பொருடகள் நன்றாக ஆறியதும் முதலில் மிளகாயைப் பொடி செய்து கொண்டு - அடுத்தடுத்து வறுத்த பொருட்களை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.
அரைத்தெடுத்த பொடியை காற்று புகாத (Air tight container) கலனில் அதிக பட்சமாக மூன்று மாதங்களுக்கு சேமித்து வைத்திருக்கலாம்..
நான்கு பேருக்கான குழம்பு என்றால் 2 Tbsp மசாலாப் பொடி போதும்.
காரக் குழம்பு தாளிப்பதற்கு எப்போதும் தரமான நல்லெண்ணையையே பயன்படுத்தவும்..
ஃஃஃ
நல்ல குறிப்பு. எங்கள் செய்முறையில் கடலைப் பருப்பு, உளுந்து சேர்ப்பதில்லை. துவரம்பருப்பை வறுத்து சேர்ப்போம்.
பதிலளிநீக்குகுறிப்பு சொல்லிக் கொடுக்க எவரும் இல்லை..
நீக்குபாக்கெட்டில் அச்சிடப்பட்ட விவரங்களைக் கொண்டு செய்து கொள்வேன்..
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
தங்கள் அன்பினுக்கு நன்றி நெல்லை.
குழம்புப் பொடியில் நாங்கள் மசாலா சேர்ப்பதில்லை.
நீக்குமசாலா என்பது என்ன?..
நீக்குஏலக்காய் முதலான ஒரு சில நறுமணத் திரவியங்கள் மட்டுமே..
இன்றைக்கு மசாலா என்பதன் அர்த்தம் வேறு
நாங்க ஏலக்காய் போன்ற நறுமணப்பொருட்களை காரத்துக்கு உபயோகிப்பதில்லை. இனிப்புக்கு மாத்திரம்தான். புலாவ் பிரியாணி அசைவம் என்பதால் வாயின் வாசனைக்கு ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்தனர். சைவப் பிரியர்களும் அதனையே காப்பியடித்தனர்
நீக்குதுரை அண்ணா குறிப்பில் ஏலm. அப்படி எதுவும்.சொல்லவில்லையே..நார்மல் சேர்மங்கள் தானே
நீக்குகீதா
இல்லை. இன்றைய குறிப்பு நன்று. நாம் நம் தமிழக பாரம்பர்ய செய்முறைகளில் ஏலம், இனிப்பு தவிர கிடையாது என்று சொன்னேன்
நீக்குபொதுவாகக் குழம்புப் பொடி (சாம்பார்ப் பொடி வேறே) செய்தால் அதில் து.ப., க/ப., உ.ப சேர்ப்பது உண்டு. மிளகு, வெந்தயம் அளவாகவும் சேர்ப்போம். இதிலும் அவை மட்டும் தான் இருக்கின்றன. மசாலா என்னும் சொல் வட இந்திய மொழிக்காரங்க எல்லாப் பொடிகளுக்கும் பயன்படுத்துவாங்க. சாம்பார்ப் பொடியின் சாமான்களையும் மசாலா சாமான்கள் என்றே சொல்லுவார்கள். இது ஒரு பொதுவான சொல், எல்லாப் பொடிகளுக்கும் பயன்படுத்துவது. ஆகவே நாம் நினைக்கும் சரியான மசாலாப் பொருட்களான ஏலம், கிராம்பு, ,சோம்பு, இலவங்கப்பட்டை போன்றவை சேர்த்துப் பண்ணும் பொடியை கரம் மசாலா என்பார்கள். ஆனால் பொதுவாகத் தமிழ்நாட்டில் மசாலா என்றாலே கிராம்பு, இலவங்கப்பட்டை, சோம்பு போன்றவை சேர்த்ததையே நினைக்கின்றனர். பூரி கிழங்கில் மசாலாப் பொருட்களே கிடையாது. வெங்காயம் தவிர்த்து. ஆனால் பெரும்பாலோர் பூரி மசாலா என்கின்றனர்.
நீக்குநல்லதொரு குறிப்பு! நிறைய பேருக்கு பயன்படும்.
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
பதிலளிநீக்குஉங்களுக்கும் நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்வரவு..
நீக்குபிரார்த்தனைக்கு நன்றி
துரை அண்ணா குறிப்பை அளவை குறித்துக் கொண்டேன். காரக்குழம்பு ரொம்பப்பிடிக்கும். பொடி செய்து வைத்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅண்ணா, மிளகாய் கொஞ்சம் கூடுதலோ? பார்த்து போட்டுக் கொண்டால் ஆச்சு....
கண்டிப்பாகச் செய்துவிட்டுச் சொல்கிறேன் அண்ணா .
இங்கு கறிவேப்பிலை வா டூவதில்லை வெயிலில் வைக்காமலேயே உலர்ந்துதான் போகும் கையால் பொடித்து விடும்.அளவு...எனவே நீங்கள் சொன்னது போல் செய்திடலாம்
கீதா
மிளகாய் அவரவர் விருப்பம்.. சற்று குறைவாக எனில் நல்லது..
பதிலளிநீக்குதங்கள் அன்பினுக்கு நன்றி.
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி சகோ..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவு நன்றாக உள்ளது. இன்றைய கார குழம்பிற்கு தேவையானவற்றை பக்குவமாக சொல்லியிருப்பது சிறப்பு. தாங்கள் குறிப்பிட்டள்ள அளவு வகைகளை நானும் தெரிந்து கொண்டேன். குறித்தும் வைத்துக் கொண்டேன்.
பருப்பு துவையலுடன் இசைந்ததாக இருக்கும் இந்த கார குழம்பு.
இதற்கு அப்பளங்களை பொரித்து துண்டுகளாக செய்து குழம்புடன் (அப்பள குழம்பு மாதிரி.) முதலிலேயோ, இறுதியிலோ சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தற்காலத்தில் அப்பள மாவில் ஏதேதோ ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன...
நீக்குஅதனால் தான்
பதிவில் சொல்லவில்லை..
தங்கள் அன்பினுக்கு நன்றி.
வருகையும் கருத்தும் மகிழ்ச்சியம்மா..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஉலர்ந்த குண்டு மிளகாய் 30 அல்ல..
பதிலளிநீக்குபத்து போதும்.
அது கவனக் குறைவு. தட்டச்சுப் பிழையால் ஏற்பட்டு விட்டது..
மன்னிக்கவும்
வருகை தந்த அனைவருக்கும்
பதிலளிநீக்குநெஞ்சார்ந்த நன்றி
காரக்குழம்பு செய்முறை நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
தங்கள் அன்பினுக்கு நன்றி.
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சியம்மா
எங்க அம்மா வீட்டில் மி.வத்தல், துவரம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்த்ப் பொடி செய்து வைத்துக் கொண்டு கல்சட்டியில் தாளிதம் செய்து, தான்களைப் போட்டு வதக்கிக் கொண்டு புளி ஜலம் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவைத்து புளி வாசனை போகும்போது மேற்சொன்ன பொடித்த பொடியைப் போட்டுக் கலந்து விடுவார்கள். இதை வெந்தயக் குழம்பு எனச் சொல்லுவதுண்டு. இப்போவெல்லாம் வெந்தயம் தாளித்தாலே வெந்தயக்குழம்பு என்றாகி விட்டது.
பதிலளிநீக்குகாரக்குழம்பு மசாலாப்பொடிநல்ல செய்முறை.
பதிலளிநீக்கு