புதிய புதிய உணவகங்களுக்கு செல்வதில் நானும் என் மகன்களும் சளைப்பதே இல்லை.
இரண்டு மாதங்களுக்கு முன் அண்ணா நகரில் இருக்கும் நம்ம வீடு வசந்தபவன் பிரம்மாண்ட ஹோட்டலுக்கு போனோம். இன்டீரியரே மிக அழகாய் இருந்தது. பெரிதாகவும் இருந்தது. VB World.
சாதாரணமாய் மற்ற வசந்தபவன்களில் சட்னி, சாம்பார், குருமாக்கள் அவ்வளவு சுவையாய் இருக்காது - என்னைப் பொருத்த வரை. ஆனால் இங்கு நன்றாக இருந்தது. அசைவ உணவுகளின் பெயர்களில் எல்லாம் சைவ உணவு வைத்திருந்தார்கள்.
இப்போதெல்லாம் நிறைய உணவகங்கள் சிறிய இடங்களில் கூட தொடங்கி விடுகிறார்கள். ஸ்ரீ மித்தாய் (சென்ற வாரம்), ஜல்பான் ( இரண்டு நாட்களுக்கு முன் ) போன்றவை உதாரணங்கள். விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில்தான் கூட்டம் அள்ளுகிறது. அதற்காக மற்ற நாட்களில் கூட்டம் இல்லை என்று நினைக்காதீர்கள். எல்லா நாட்களிலும் கூட்டம்தான், எல்லா உணவகங்களிலும்! ஷோ பிஸினஸ் மாதிரி உணவகம் கவர்ச்சியாய் இருக்க வேண்டும்.
கூட்டம் அதிகமாய் ஆனதும் வெளியில் ஒருவர் மொய் எழுதுபவர் மாதிரி சிறு நோட்டுடன் அமர்ந்து விடுவார். அவரிடம் சென்று பெயர் கொடுத்து, எத்தனைபேர் என்று சொல்லிவைத்தால், உள்ளே இருக்கைகள் காலியானதும் சீனியாரிட்டி வரிசைப்படி அழைப்பார்.
என் மகன் பெயர் ராகுல். எங்களுக்கு அடுத்ததாய் பெயர் கொடுத்திருந்தனர் ரசூல். அவர் பெயர் அழைத்ததும் எங்களுக்கு முன்னாள் அவர் குடும்பத்துடன் நடந்து சென்று குழப்பத்தை ஏற்படுத்தினார். நாங்கள் மொய்க்காரரிடம் விளக்கம் கேட்டு, அப்புறம் ஒரு ஆள் சென்று அவர்களை மரியாதையுடன் வெளியே அழைத்து வந்தார். நாங்கள் உள்ளே சென்றோம்!
உணவுகள் பரிமாறப்பட்ட உடன் நம் வழக்கப்படி ஆளுக்கு ஆள் கொண்டு வந்து வைக்கப்பட்ட பதார்த்தங்களை செல் கேமிராவால் குறி பார்க்க, எங்கள் மேஜைக்கான சர்வர் நான் ஃபோட்டோ எடுப்பதை பார்த்ததும் உடனடியாக என்ன செல் என்று கண்டுகொண்டார் போலும். என் மாடல் நம்பரைச் சொல்லி "கேமிராவில் Food என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் எடுங்கள்" என்றார். போனைத் திருப்பிக் காட்டினேன்.. "ஓ.. அதுலதான் எடுக்கறீங்களா?"
என் போன் மாடல் நம்பரைக் கூட சொன்னார் என்றதும் எப்படி என்று விவரம் கேட்டேன். சாம்சங்கில் பணிபுரிந்து, அங்கிருந்து சம்பள பிரச்னையில் வெளிவந்தததாகச் சொன்னார். இங்கும் நிலைக்கப் போவதில்லை என்றார். வேறு கம்பெனி தெடிக் கொண்டிருக்கிறாராம். B E. MBA.
ஏதோ ஒரு ஐட்டம் 'நன்றாக இருக்காது.. சாப்பிட்டிருக்கேன்' என்று சொன்னதும் சவால் விட்டு "இங்கு நன்றாக இருக்கும்" என்று சொல்லி "நான் உங்களுக்கு தரச்சொல்கிறேன். சாப்பிட்டுப் பாருங்க.. நல்லாயில்லைன்னா காசு கொடுக்கவேண்டாம்"என்றார். ஐட்டம் பெயர் நினைவில்லை. நன்றாகவே இருந்தது. அவரிடம் நான் பொய் சொல்ல விருப்பமில்லை.
கடைகளில் தரும் பொடி இட்லி மேல் எனக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. எங்க வீட்டு பொடி இட்லிதான் ஸ்பெஷல் என்று நினைப்பேன். இங்கு நன்றாகவே இருந்தது.
காபி நிறம் குறைச்சலாக இருக்கிறதே என்று பார்த்தால் மேலே உள்ள நுரையை விலக்கியதும் நிறம் தெரிந்தது. சுவையும் ஓகே.
ஐஸ்க்ரீம் நான் பெரும்பாலும் சாப்பிட மாட்டேன். பாஸின் விருப்பம்.
நான் தண்ணீர் பாட்டிலை படம் எடுப்பதை பின்னால் வரிசையில் ஒருவர் கேலியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
கொத்து இடியாப்பம்.
ஸ்பெஷல் மசாலா பனீர் என்று நினைக்கிறேன்.
சின்ன வெங்காயம் பொடி ஊத்தப்பம். நன்றாக இருந்ததது.
=================================================================================
நியூஸ் ரூம்
நீர்நிலையைக் காக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வராததால் திருப்பூரில் தவளைகளிடம் மனு கொடுக்கட்டது!
....எந்த காரணத்துக்காகவும், அதை சகித்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட அந்த அதிகாரி, கெட்ட நோக்கத்துடன், மற்ற அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பி, அதன் மூலம் வேறு யாருக்கோ பயன் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் இப்படி நடந்திருப்பது போல இருக்கிறது.எனவே, சுங்கத்துறை முதன்மை கமிஷனர் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். மும்பை: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, தன்னுடைய சொத்துக்களை மூன்றில் ஒரு பங்கை மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி கொடுத்தது தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. யார் இந்த மோகினி மோகன் என்ற கேள்வியும் அனைவரிடத்தில் எழுந்துள்ளது.
சென்னையில் முதல்நாள் விடாமுயற்சி படம் பார்க்க வந்து நோ பார்க்கிங்கில் நிறுத்திய வாகன ஓட்டிகளிடமிருந்து 50,000 க்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- உத்தரகன்னடா: சிகள்ளி கிராமத்தில், தீபநாதேஸ்வரா கோவிலில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் இல்லாமல், திரி இல்லாமல் எரிந்து கொண்டிருந்த மூன்று விளக்குகள், திடீரென அணைந்துள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு கெடுதல் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
- கொழும்பு: இலங்கையில், மின் நிலையத்துக்குள் நுழைந்து குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது. [10/2/25]
- மூணாறு : கேரளாவில், பொருட்களை பாதி விலைக்கு கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி, சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், 600 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மூவாற்றுபுழா போலீசார் கைது செய்தனர்.
- ஹாவேரி: உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்த நபரை, வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது உயிர் பிழைத்த சம்பவம், ஹாவேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிஷ்டப்பா உடலை, ஆம்புலன்சில் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். வாகனத்தில் மனைவி, இரு மகன்கள் இருந்தனர். அப்போது அவரின் இளைய மகன், 'அப்பா அங்கு பாருங்கள். நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது; எழுந்திருங்கள் அப்பா...' என்று அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்ட பிஷ்டப்பா, 'ஹா...' என்று கூறி மூச்சை இழுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஆம்புலன்சை நிறுத்தி, உடனடியாக ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- 125 சவரன் போலி நகைகளை அடகு வைத்த கில்லாடி சிக்கினார் அவை போலி நகை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஏற்கனவே தன் கடையில், கார்த்திக் அடகு வைத்த நகைகளின் விபரத்தை எடுத்து பார்த்தார். அதில், கடந்த ஜன., 23ம் தேதி முதல் தற்போது வரை நான்கு முறையாக, 6.68 லட்சம் ரூபாய்க்கு 125 சவரன் நகைகளை அடகு வைத்தது தெரிய வந்தது.
- ஜெய்ப்பூர்: மனைவிக்கு, 15 லட்சம் ரூபாய் கொடுத்து வேலை வாங்கி தந்தவர், மனைவி தன்னை விட்டு பிரிந்ததால், கடும் கோபம் அடைந்து ரயில்வே துறையில் புகார் அளித்தார். அதன் வாயிலாக, ரயில்வே தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.
- புதுடில்லி: பாலிவுட்டில் 1975ம் ஆண்டு வெளியான 'ஷோலே' ஹிந்தி படத்தின் டிக்கெட் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
==============================================================================================
இணையத்தில் படித்து, தெரிந்து கொண்டது.


வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா?
விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? ஆம், என்றால் ஒரு சில பைலட் பயிற்சி பள்ளிகளில், பலரது சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்க விடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தொங்கி கொண்டிருக்கும் சட்டைகளின் பின் பகுதியில், பல்வேறு எழுத்துக்களையும், குறியீடுகளையும் நீங்கள் காண முடியும்.
சட்டைகளின் பின் பகுதியை
மட்டும் ஏன் கிழித்து தொங்க விட்டுள்ளனர்? அதில் உள்ள எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்? என நீங்கள் யோசனை செய்திருக்க கூடும்.
பைலட்களுடைய சட்டையின் பின் பகுதியை கிழித்து தொங்க விடுவது என்பது நகைச்சுவைக்காகவோ அல்லது அலங்காரத்திற்காகவோ செய்யப்படும் விஷயம் கிடையாது. மாறாக மாணவர்களாக இருந்து பைலட்களாக உருவெடுப்பவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான நடவடிக்கைதான் இது. அதாவது பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்னர், அவர்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். பைலட்டாக உருவெடுக்கும் மாணவர்களுடைய சட்டையின் பின் பகுதியை, அவரது வழிகாட்டிதான் கிழிப்பார். இந்த பாரம்பரிய நடவடிக்கை நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதை போல், இதற்கான காரணமும் வியப்பை கொடுக்கிறது.
எந்தவொரு பைலட்டின் வாழ்க்கையிலும், விமானத்தை முதல் முறையாக தனியாக இயக்குவது என்பது மிக பெரிய சாதனைதான். முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, தங்களது வழிகாட்டியின் தலையிடுதல்கள் எதுவும் இல்லாமல், தாங்கள் கற்று கொண்ட அனைத்து விஷயங்களையும் அவர்கள் சுயமாகவே செய்ய வேண்டும்.
விமான பயணத்திலேயே டேக்-ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும்தான் மிகவும் சவாலான விஷயங்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்தையும், வழிகாட்டியின் உதவிகள் இல்லாமல் மாணவர்கள் செய்ய வேண்டும். விமானத்தை தனியாக இயக்குவதற்கு தயாராகி விட்டேன் என்பதை மாணவர்கள் காட்டும் தருணம் இது.
விமானத்தை தனியாக இயக்குவது என்பது பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதி. எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு நடக்கும் விஷயம்தான் நமக்கு ஆச்சரியம்.
முதல் முறையாக விமானத்தை தனியாக வெற்றிகரமாக இயக்கி விட்டு வந்த பின்னர், புதிய பைலட்டுடைய சட்டையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரிக்கோலால் கிழிப்பார். அதன் பின்னர் கிழிக்கப்பட்ட சட்டையில், புதிய பைலட்டின் பெயர் மற்றும் அவர் முதல் முறையாக தனியாக இயக்கிய விமானத்தின் விபரங்கள் எழுதப்படும்.
அத்துடன் ரன்வே மற்றும் ஏர்போர்ட் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படும். இதனைதான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்க விடுகின்றன. சட்டையின் பின் பகுதியை கிழிக்கும் இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் தங்கள் மாணவர்கள் மீது, அதாவது புதிய பைலட்களின் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
ஹெட்செட்கள் மற்றும் ரேடியோ கம்யூனிகேஷன் ஆகியவை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு, அதாவது மனிதர்கள் பறக்க தொடங்கிய ஆரம்ப நாட்களில், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய திறந்தநிலை காக்பிட் கொண்ட விமானங்களில்தான் மாணவ பைலட்களுக்கு, வழிகாட்டிகள் பயிற்சி வழங்குவார்கள். இந்த விமானங்களில் மாணவர்கள் முன்னே அமர்ந்திருக்க, வழிகாட்டிகள் பின்னால் அமர்ந்திருப்பார்கள்.
தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது. எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும்.
இதன் பின்னர் மாணவ பைலட்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பியதும், தேவையான ஆலோசனைகளை வழிகாட்டிகள் அவர்களுக்கு வழங்குவார்கள். ஆனால் மாணவ பைலட்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின், இப்படியான ஒரு வழக்கத்தை கடை பிடிக்கிறார்கள்.
========================================================================================

==============================================================================================
========================================================================================================
பழைய பிளாக்கர் திரு ஆஸிப் மீரான் FaceBook ல் ஒரு போட்டி வைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு காதல் கவிதைகள்.. என்டர் தட்டி என்டர் தட்டி எழுதும் கவிதைகள்... சிறிய எள்ளலுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். பரிசு என்ன என்றெல்லாம் தெரியாது. அமைதிச்சாரல் இப்படியான கவிதைகள் அடிக்கடி வெளியிடுவதைப் பார்த்து அவரை விவரம் கேட்க, அவர் சொன்னார். நானும் அங்கு வெளியிட்ட இரண்டு 'கவிதைகள்'!
====================================================================================================
எழுத்தாளர் சாண்டில்யனோட இயற்பெயர் தெரியுமோ.....
பாஷ்யம் னு பேர பாத்ததும் யாருனு தெரியாம பாதி பேர் புலம்புனா, மீதி பேர் எதோ வடக்கன் னு சொல்லி திட்டிகிட்டு திரியுராங்க..
ஆர்யாவை தெரியுமா
என்று கேட்டால் நம்மில் அனைவரும் உடனே சொல்வோம்.. "அய்யே... ஆர்யா யாருன்னு கூட தெரியாதா....? அவர் பெரிய ஹீரோ..."
ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம் என்றால்.... நாம் உடனே பின்வாங்குவோம்... யோசிப்போம்.... நடிகர் ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யாமா... என கூகுள் செய்வோம்...."
தாம் எப்பாடு பட்டாவது தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று மாபெரும் கொள்கையுடன் "தமிழர் நலன்.. தமிழ் தேசியம்.." என்றெல்லாம் உணர்ச்சிகளை தூண்டிவிடும் சமகால தந்திரசாலிகளை தலைவன் என்று போற்றிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஆர்யா என்ற பாஷ்யம் சற்று அந்நியப்பட்ட பெயர்தான்...
1932 ஜனவரி மாதம் 25ம் நாள் அந்த ஆர்யா என்கிற பாஷ்யம் திருவல்லிக்கேணியின் கடைத்தெருவில் துணிக்கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான்... அவன் கேட்டது..."இங்கே இந்திய தேசியக்கொடி இருக்கிறதா.."
பலர் "இல்லை" என்று சொல்லிவிட்டார்கள்... சிலர் அவர்கள் ரகசியமாய் விற்பனைக்கு வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள்....
பாஷ்யத்தின் தேவை அந்த சிறிய கொடி அல்ல... அவனின் கற்பனையில் இருந்த கொடியின் அளவில் காலேஅரைக்கால் அளவுகூட இல்லை அவர்கள் காட்டிய கொடி... அவனின் தேவை பெரிய அளவு... மிகப்பெரிய அளவு.... யோசித்தான்....
ஒரு பெரிய நான்கு முழ வேட்டியை வாங்கினான்... வண்ணப்பொடிக்கடையில் காவியும் பச்சையும் நீலமும் வாங்கிக்கொண்டான்.... தம்பு செட்டி தெருவில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.... வாங்கி வந்த வேட்டியில் ஒருபக்கம் காவியையும், ஒருபக்கம் பச்சையும் கரைத்து நனைத்து நடுவே நீல ராட்டை வரைந்து ஒரு இந்திய தேசியக்கொடியை உருவாக்கினான்.... அதில்..."இந்தியா இன்றுமுதல் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது.." என்று எழுதினான்....அதை காயவைத்து மடித்து இடுப்பில் சுற்றிக்கொண்டான்... மேலே காக்கி அரைடவுசரும், காக்கி சட்டையும் அணிந்துகொண்டான்..
மீண்டும் திருவல்லிக்கேணி வந்தான்.... சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபால சந்தித்தான்... "நான் எங்கு போனாலும் என் பின்னே தூரமாக தொடர்ந்து வா" என கட்டளையிட்டான்...
இருவருமாக மவுண்ட் ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச்சீட்டு வாங்கி நுழைந்தார்கள்.. இரவு 12 மணி.. படம் முடிந்து அனைவரும் வெளியேற.... செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணிமுடிந்து பொழுதுபோக்க சினிமா பார்க்க வந்து வெளியேறியவர்களுடன் கலந்தான்... அதற்காகத்தான் அந்த காக்கி சீருடை தயார் நிலை...
காக்கி சீருடையில் கூட்டத்தில் கலந்து நுழைந்ததால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இவனை யாரும் கண்டுகொண்டு தடுக்கவில்லை...
காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்க... இவன் மட்டும் ரகசியமாய் பிரிந்து, கோட்டையின் கொடிமரம் நோக்கி நடந்தான்... 200 அடி உயர கொடிமரத்தில் 140 அடி ஏறிவிட்டான்.... அந்த அளவுவரைதான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது.. அதற்கும் மேலே 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்புதான்.... மனதில் எரிந்த சுதந்திர வேட்கை , அந்த இரும்புக்குழாயை இறுகப்பற்றும் உறுதியை தந்தது அவனுக்கு...
அடி அடியாய் ஏறி 60 அடியையும் கடந்து உச்சியை அடைகிறான்... ஒரு உடும்பை போல தன்னை குழாய்களில் பிணைத்து இறுக்கிக்கொண்டு , தன இடுப்பில் இருந்த இந்திய தேசியக்கொடியை உதறி அந்த கம்பத்தில் கட்டுகிறான்...
சறுக்கியபடி கீழிறங்கி நழுவி. மீண்டும் தம்புச்செட்டித்தெருவை அடைகிறான்... மறுநாள் காலை ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது...... எல்லா உயரதிகாரிகளும் கோட்டை கொடிமரத்தின் அருகே குழுமுகிறார்கள்...
"யார்.. யார்.... "
கேள்விகள் அவர்கள் புருவங்களை உயர்த்த.. ஆத்திரம் அவர்களின் கண்களை சிவக்க வைக்க... கொடிமரத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது... அந்த திகாரிகள் கூட்டம்.... அதுவே அந்த தேசியக்கொடிக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தந்தது...
எதுவுமே தெரியாதது போல தம்புச்செட்டித்தெருவில் தனியாளாய் நடந்து கொண்டிருந்தான் பாஷ்யம் என்ற ஆர்யா...
அதே 1932ம் வருடம் ஜனவரி 26ம் தேதியை நாம் சுதந்திரதினமாக கொண்டாடவேண்டும்.. என்று ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறைகூவலை செயலாக்கவே பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினான்... இதை செய்தபோது அவனுக்கு வயது 25.
தற்போதைய திருவாரூர் மாவட்டம்.. அந்நாளைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் சேரன் குளம் தான் அந்த ஆர்யா என்கிற பாஷ்யத்தின் சொந்த ஊர்...
இவன் ஒரு பார்ப்பனன் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால்... நீங்கள் ஒரு சமகால சமூகநீதி காவலன் என்பதை சொல்லவே வேண்டாம்...
டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ.... சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தானப்பிறகுதான் அங்கிருந்த கோட்டைகளில் தேசியக்கொடி பறந்தது.... ஆனால்... சுதந்திரம் வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி அழகுபார்த்தவர்கள் நாம்
பொருளாதார தேடலில் எங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த "திரைகடலோடி திரவியம் தேடு" நாங்கள் பூமிப்பந்தில் ஏதோ ஒரு மூலையில் நிலைகொண்டிருக்கலாம்... இந்தியா என் தேசம்.... என்ற நினைவுகள் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டுதான் நாங்கள் இருக்கிறோம்....
=================================================================================================+
\==============================================================================================\
காசு கொழுத்து கிடக்குது என்று பாட்டி சொல்வார். அது போலத்தான் 5 பேர் 3000 ருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு செலவு செய்தது. ஆமாம் பாஸோட ஐஸ் கிரீம் காம்ப்ளிமெண்டா? பில்லில் காணோம். இரா தொக்கு எறா போட்டதா? வேறு என்ன போட்டிருந்தார்கள். போட்டோவில் தண்ணி பாட்டிலில் கரப்பான் பூச்சி கிடக்கிறாப்புல இருக்கிறது.
பதிலளிநீக்குமனு தவளையிடம் கொடுக்கப்பட்டதா, தண்ணீரில் போடப்பட்டதா? எந்த நீர்நிலையில் தவளை உள்ளது?
இலங்கை இந்துக்கள் என்று பெயரை பார்த்தாலுமே அது ஒரு போலி அக்கௌன்ட் என்பது தெரிகிறது. இந்து, முஸ்லீம் என்ற மதப்பிரிவினை இலங்கை வரை புரை ஓடி விட்டதா?
As per my knowledge Yale recruited indentured labour only, not captured slaves.
ஹோட்டல்லே சாப்பிடுவீங்க. அடுத்து ஹோட்டல் பில் கட்டி மாளல்ல என்று கவிதையும் எழுதுவீர்கள். புரியலையே! எனக்கு மட்டும் ரகசியமாக சொல்லுங்கள். யார் அந்த காதலி?
பாஷ்யம் என்ற பெயர் ரெட்டியார் சமூகத்திலும் உண்டு. கடலூரில் பாஷ்யம் ரெட்டியார் என்ற முன் நாள் மேயருக்கு சிலை உண்டு.
கல்கி வீட்டில் திருடு போனது போல் எனது திருவனந்தபுரம் வீட்டிலும் திருட்டு நடந்தது. அதே போல் தான். பட்டு புடவைகள், சட்டைகள், போன்றவை திருடு போயின. அது ஒரு பெரிய கதை.
ஜோக்குகள் பரவாயில்லை.
Jayakumar
// காசு கொழுத்து கிடக்குது என்று பாட்டி சொல்வார். அது போலத்தான் 5 பேர் 3000 ருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு செலவு செய்தது. //
நீக்குசட்டென ஒன்று புரிந்தது. எதைப் பகிரவேண்டும், எதைப் பகிரக்கூடாது என்று...
துளசி ஜி பதிவில் நான் சொல்லி இருந்தேன்.. எளிதாக அடையக்கூடியவற்றை ஆசைப்பட்டால் அடைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் LIC பாலிஸி மாதிரி ஆகி விடும்.
மனு. தவளை - அதெல்லாம் உருவகம்தான். மனிதர்களிடம் கொடுத்தேன், நடக்கவில்லை. நீர்வாழ் தவளையாவது காது கொடுக்குமா என்று...
இலங்கை இந்துக்கள் நிஜமா, போலியா என்பது இருக்கட்டும்,. இந்த கட்டுரையைப் பகிர்ந்த பலபேர்களில் அந்த ஐடியும் ஒன்று. எனக்கு அங்கிருந்து கிடைத்தது. அவ்வளவுதான். ஒரிஜினல் யாரென்று தேடிப்பார்க்க வேண்டும்.
பில் கட்டி மாலையை நகைச்சுவைக்கு காதலர்தினத்துக்கு எழுதியது. வேலைக்கு போகாத, அல்லது ஆரம்ப நிலை சம்பளத்தில் காதலியை சமாளிக்க முடியாத காதலனின் புலம்பல்!!
ஆனாலும் ஆர்யா பற்றி நான் முன்னரே படித்திருக்கிறேன். ஒருமுறை பாரதியாரிடம் வந்து சாப்பிடவில்லை என்று காசு கேட்டவர் இவரா, நீலகண்ட பிரம்மச்சாரியா என்று நினைவில்லை.
ஜோக்ஸை அரசித்ததற்கு நன்றி JKC Sir !
இன்றைய வியாழன் பகுதி நன்று... ஆனால் என்னவோ.. ரொம்ப சிறப்பாக இல்லைனு மனசுல தோணுது. சட்னு கருத்து எழுதணும்னு தோணலை. காரணம் என்னவாயிருக்கும்னு யோசிக்கிறேன்.
பதிலளிநீக்குஇருக்கு, ஆனா இல்ல டைப் போல.....! ஹா ஹா ஹா யோசிச்சு விடை கிடைத்ததும் சொல்லுங்க...!
நீக்குஉயர்நிலை உணவகமோ என்னவோ... பெங்களூரில் உணவின் விலை இவ்வளவு அதிகமாகவில்லை. Ambience என்று சொல்லிக் கடந்துவிட முடியாது.
பதிலளிநீக்குஇட்லிக்கு எடுக்கும் மாவில் பாதி அளவு எடுத்து தோசைக்கு மூன்று மடங்குக்கு மேல் சார்ஜ் பண்ணறாங்க. எவ்வளவு விலை வைத்தாலும் சாப்பிட ஆட்கள் இருக்கும்போது அவனுக்கு என்ன கவலை
உயர்நிலைதான். அதே சமயம் சென்னையின் சங்கீதா, ஸ்ரீ மித்தாய் போன்ற உணவகங்களின் விலையும் இப்படிதான்.
நீக்குநான் வெஜ் பெயர்களில் உள்ள சைவ உணவின்மீது எப்படி எல்லோருக்கும் ஆசை வருகிறது எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநான் வெஜ்ஜில் ஆசை, ஆனால் சாப்பிட முடியாதே ன்ற வருத்தம் காரணமாக இருக்குமோ?
இல்லை, அதைச் சாப்பிட்டவர்கள் இங்கும் அதே பெயரா, இது எப்படி இருக்கும் என்று பார்க்கும் ஆவல் வரும். சுவை ஒரே மாதிரி இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும்.
நீக்கு
ஐஸ்க்ரீம், பொடி இட்லி தவிர வேறு எதுவும் என்னை ஈர்க்கலை.
பதிலளிநீக்குதுபாய் கராமாவில் என்க்கு ஃபேவரைட், நம்ம வீடு வசந்த பவன். துபாய் செல்லும்போதெல்லாம் அங்கு மாலை ஐந்தே முக்காலுக்கு முதல் ஆளாய் பரோட்ட, அன்றைய குருமா சாப்பிடுவேன். ஒரு நாள் பகிர்கிறேன்.
அந்தந்த உணவகங்களில் அந்தந்த நேரங்களில் அமைந்திருக்கும் செஃப் ஐ பொறுத்தது ருசி. ந வீ வ ப துணைப் பொருட்களின் சுவை பெரிதாக என்னை ஈர்த்ததில்லை.
நீக்குடாக்டர் பட்டம் கொடுத்த கையோடு பாடியை அனுப்சாங்களா இல்லை பிறகா?
பதிலளிநீக்குமாண்டவர் மீண்ட கதையா? புரியவில்லை.
நீக்குஅண்ணா பகுதி பற்றியது இந்துக் கருத்து
நீக்குஓ... ? அப்படியா?
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஉணவுகளின் புகைப்படங்கள் ஆசையை தூண்டுகிறது ஜி.
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஸ்ரீராம், நான் இந்த நம்மவீடு வசந்தபவன் அண்ணாநகரில் இருப்பதற்கு வீட்டிலுள்ளவர்களோடும், மற்றொருமுறை ஆவியோடும் சென்றிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅங்கு செட்டிநாட்டு பால் கொழுக்கட்டை நம் வீட்டில் கூட வந்தவர் சாப்பிட்டார். ஓகே என்று சொன்னார்.
படங்கள் எல்லாம் செமையா இருக்கே ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்
கீதா
இருக்காது என்று நினைக்கிறேன் கீதா. அநேகமாக இது நீங்கள் பெங்களூரு சென்றபிறகு திறக்கப்பட்டதாயிருக்கும்.
நீக்குகோயம்பேடு பக்கத்துல ஒரு நம்மவீடு உண்டோ?
நீக்குஅப்படினா அங்க
கீதா
எனக்கும் புதிய புதிய உணவகங்களுக்குச் செல்லப் பிடிக்கும். இப்பதான் ரொம்பவே குறைந்துவிட்டது. ஏற்கனவே நம்ம ஏரியாவில் புதுசா துறந்திருக்கும் ப்ரம்மா விற்குச் சென்று வந்தாச்சு. அங்கு எல்லாம் சுத்தமாகவும் கொஞ்சம் தமிழ்நாட்டு ஸ்டைலில் சில பதார்த்தங்கள். ஆனா என்ன ஆனாலும் சாம்பார் மட்டும் ம்ஹூம் இவங்க ஊர் சாம்பாரை விடவே மாட்டாங்க போல!! நல்ல கர்நாடக இசை மெலிதாக ஓடிக் கொண்டிருக்கும்.
பதிலளிநீக்குவீட்டருகில் வேற ஒன்று புதிதாக வந்திருக்கிறது. சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
கீதா
// ஆனா என்ன ஆனாலும் சாம்பார் மட்டும் ம்ஹூம் //
நீக்குஹா.. ஹா.. ஹா...
ஆனாலும் தயிர்சாதத்தில் கூட சர்க்கரை போட்டுக் கொடுத்துவிட்டு என்ன என்று கேட்டால், நீங்கள் முன்னரே சர்க்கரை வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும் என்று சொன்னது கொஞ்சம் ஓவர்!!
அது உடுப்பில அப்படி ஸ்ரீராம். மத்த உணவகங்கள்ல அப்படி இல்லை. அடுத்த முறை இங்க வந்தீங்கன்னா...கீதா வீட்டுலதான் சாப்பிடணும்...போனா போகுதுன்னு வேணா முத்தஹல்லில ஏதாச்சும் சாப்பிட்டுப் பாருங்க!
நீக்குஆனா எச்சரிக்கையும் தரேன் - இந்த ஊர்ல எந்த ஹோட்டல் போனாலும் பிஸிபேளா ஹூலி அன்னா, சாம்பார் சைட் டிஷ் வரும் பதார்த்தங்கள் ஆர்டர் செய்திடாதீங்க!!!
கீதா
மாட்டேனே... அனுபவம் இருக்கே...!
நீக்குகருத்தின் முதல் பாராவுக்கும் சேர்த்தா இந்த பதில்?!!!!!! ஸ்ரீராம்? ஹிஹிஹி
நீக்குகீதா
சேச்சே,,, நான் அப்படி சொல்வேனா... உங்கள் கைப்பக்குவத்தை ரசித்து ரசித்தவன் நான் (நாங்கள்... நானும் பாஸும்)
நீக்குஆமா நம்ம வீடு வசந்தபவனில் நல்லாருக்கும். ambiance நல்லாருக்கும்
பதிலளிநீக்குஇங்கு நம்ம ஏரியாவில் ஜல்பான் இருக்கு. அங்க ஒரு முறை போய் வந்தாச்சு. நல்லாருக்கும் கொஞ்சம் துட்டு கூடுதல் என்றாலும்...மித்தாயும் போய் வந்தாச்சு ஒரு முறை.
இங்க எத்தனை உணவகங்கள் சின்னதானாலும் சரி பெரிசானாலும் சரி, கூட்டம் செமையா இருக்கும். இன்னும் திறந்தாலும் சரி கூட்டம் அள்ளும் தினமுமே...
இந்தச் சீட்டெடுத்து சாப்பிடுவது சில வருஷங்களுக்கு முன்னரேயே அடையார் சங்கீதாவில், டி நகர் மத்ஸ்யாவில் அனுபவம் உண்டு. அதனால் டி நகர் மத்ஸ்யாவில் அடையார் சங்கீதாவில் முன்னரே புக் செய்திடுவாங்க நம்ம வீட்டில் யாரேனும் பார்ட்டி கொடுக்கறாங்கனா.
கீதா
ஆமாம்... சில வருஷங்களாக இந்த அவுட்ஸைட் ரிஸர்வ்கேஷன் நாடககிறதுதான்.
நீக்குஅடுத்து ஜல்பான் போடலாம் என்றிருந்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்களே... ஸோ. அது கேன்சல்!!!
:))
சாம்சங்கில் பணிபுரிந்து, அங்கிருந்து சம்பள பிரச்னையில் வெளிவந்தததாகச் சொன்னார். இங்கும் நிலைக்கப் போவதில்லை என்றார். வேறு கம்பெனி தெடிக் கொண்டிருக்கிறாராம். B E. MBA.//
பதிலளிநீக்குகடவுளே!
ஸ்ரீராம் நம்ம வீடு வ ப வில் உணவு நன்றாக இருக்கும். மற்ற கிளைகளில் சாப்பிட்டு நல்லால்லியேன்னு நினைப்போம் ஆனா இங்கு அப்படி இல்லை
கீதா
எனக்கென்னவோ ந வீ வ ப ரெண்டாம் பட்சம்தான்.
நீக்குஉணவக அனுபவங்கள் நன்று. புதிது புதிதாக இங்கேயும் நிறைய உணவகங்கள் வருகின்றன. சரியாக ஓடாமல் மூடியும் விடுகிறார்கள்.
பதிலளிநீக்குமற்ற தகவல் பகிர்வுகளும் நன்று.
மருத்துவமனைகள், டாக்டர்களின் சின்ன க்ளினிக், சிறிய, பெரிய உணவகங்கள்...
நீக்குஇவைதான் என்றும் கூட்டமான இடம்!
நன்றி வெங்கட்.
ஸ்பெஷல் மசாலா பனீர் என்று நினைக்கிறேன்.//
பதிலளிநீக்குgrilled போல இருக்கு. இப்படி மசாலாவில் ஊற வைத்து க்ரில் செய்ததுண்டு வீட்டில். பனீர், காலிஃப்ளவர் போன்ரவற்றை.
சின்னவெங்காயம் ஊத்தப்பம் கீழ இருக்கறதுஅதுதான் பனீர் மசாலா இல்லையா ஸ்ரீராம்?
கீதா
தெரியவில்லையே கீதா.. பார்த்தால் மஷ்ரூம் மாதிரி இல்லை?
நீக்குநியூஸ் ரைம் பலவித செய்திகளையும் அள்ளித் தந்துள்ளது.
பதிலளிநீக்குநமது நாட்டு மின் வெட்டுத் செய்தியும் இதில் அடங்கும். நேற்று ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை. காலை நமக்கு நெற்வசதி இருக்கவில்லை. வெள்ளிவரை திருத்த வேலைகளால் மின்வெட்டு நாளுக்கு இரு மணித்தியாலங்கள் வரை நாடு முழுதும் பகுதிபகுதியாக தொடரும்.
ஜோக்ஸ் ரசனை . கரப்பான் பூச்சி வாய்விட்டு சிரிக்க வைத்தது.
நன்றி மாதேவி.
நீக்குநீர்நிலையைக் காக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வராததால் திருப்பூரில் தவளைகளிடம் மனு கொடுக்கட்டது!//
பதிலளிநீக்குஇது ஒரு வகைப் போராட்டமோ? நீர்னிலையைக் காக்கலைன்னு சொல்லிட்டு பேப்பர் விடலாமா?
பண்ட் உயிரைக் காப்பாற்றியவர் தற்கொலை முயற்சி - புன்னகை மன்னன் கதை போல இருக்கிறதே!
இறந்தவர் பிழைத்தது - டாக்டர் அதை எப்படி உறுதிப் படுத்தினார்? உயிர் பிரிந்தால் கூட மீண்டும் அதைச் சரிப்படுத்த என்னவெல்லாமோ செய்வாங்களே...அதெல்லாம் செய்யலையோ? இரண்டாவது இது பல கேள்விகளை எழுப்புது.
கீதா
விநோதங்கள்....
நீக்குபைலெட் விஷயம் ஆச்சரியம் விந்தையாகவும் இருக்கு. புதிய தகவல்.
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குகல்கியின் பதில் ரொம்பப் பிடித்திருந்தது. இந்த மன நிலை எல்லோருக்கும் வருவது சிரமம். நல்ல மனநிலை.
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்குரெண்டு கவிதைகளையும் ரசித்து சிரித்துவிட்டேன் அதுவும் சனிக்கிழமை விரதம்!!! சிரிச்சு முடிலைப்பா...ஆனா உங்க கற்பனையின் சிறகுகள் albatross சிறகையும் மிஞ்சிடும் போல!!!!
பதிலளிநீக்குகீதா
நானும் இப்படி safe லவரா இருந்தவன்தானே!
நீக்கு:))
albatross சிறகா? அப்படீன்னா? நன்றி கீதா!
///அசைவ உணவுகளின் பெயர்களில் எல்லாம் சைவ உணவு ...///
பதிலளிநீக்குஆகா..
ஹிஹிஹி...
நீக்குபொக்கிஷங்களில் தூக்கு மேடை வாசித்தது போல இருக்கு இங்குதானோ?
பதிலளிநீக்குபோஸ்ட் ஆஃபீஸ்கு வழி - ஹாஹாஹா நல்ல பதில்! ரசித்து சிரித்துவிட்டேன்.
ஸ்கூல் பையன் பொய் ஹிஹிஹி....இது நம்ம காலத்துலயே ஃபேமஸ்!
கீதா
__/\__
நீக்குபாஷ்யம் - விஷயம் புதுசா இருக்கு. நீங்க எழுதியதா ஸ்ரீராம்?
பதிலளிநீக்குகீதா
சே... நானா... நான் அந்த அளவு எல்லாம் விஷயம் தெரிந்தவன் இல்லை கீதா!
நீக்கு///அசைவ உணவுகளின் பெயர்களில் எல்லாம் சைவ உணவு வைத்திருந்தார்கள்...///
பதிலளிநீக்குஆட்டு மாங்காய் அவியல் பொரியல், புடல் குடல் குஸ்க்கா வறுவல் என்றெல்லாம் இங்கே களேபரம்..
ரகசியம் இதுதானா!..
எப்படியோ
பதிலளிநீக்குஎல்லாத். தரப்பு உணவகங்களையும் தாங்கள் தான் வாழ வைக்க வேண்டும்..
இப்படியான பெருந்தன்மை எனக்கு இல்லை..
கோடு கிழித்தால் கிழித்தது தான்!..
அதுக்கு ஸ்ரீராம் நாலைந்து வங்கிகளைக் கொள்ளையடிக்க வேண்டுமே..
நீக்குஇப்பல்லாம் பசங்க எங்க கூப்பிடறாங்களோ அவங்களோட அங்க போவதுதான் பெற்றோருகக்கு அழகு. அப்படித்தான் ஸ்ரீராம் போயிருப்பார்னு நினைக்கறேன் இல்லைனா ஏதேனும் விசேஷ நிகழ்வாக இருக்கலாம்
:- ))
நீக்குமருமகளின் தம்பி ட்ரீட்.
நீக்குபாஷ்யம் பற்றிய செய்தி, காதல் கவிதைகள், ஜோக்குகள் எல்லாமே இரண்டாம் முறை படிக்க நேர்ந்தது,இருந்தாலும் இரண்டாந்தர பதிவு என்று சொல்ல முடியவில்லை.
பதிலளிநீக்குஅனுஷ்காவை மிஞ்சும் அழகி வரும்வரை அவர் படத்தையே போடலாம்.
நீங்கள்தான் நிறைய சினிமா பார்க்கிறீர்கள் திரை விமர்சனம் சுருக்கமாக எழுதலாமே.
விமர்சிக்கிற அளவு படம் ஒன்றும் நன்றாக இல்லை. நன்றி பானு அக்கா.
நீக்குநன்றாக இல்லை என்பதை எழுதலாமே. நீலச்சட்டை மாதிரி பிரபலமாக வாய்ப்பு உண்டு.
நீக்குஉணவகம் பற்றிய தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
உணவகங்களின், பெயர்களும், உணவின் வகைகளும் நன்றாக உள்ளன. ஆனால், பொடி இட்லி படந்தான் மனம் கவர்ந்தது. (என்ன இருந்தாலும், இட்லி என்பது நம் பாரம்பரியமான உணவு அல்லவா..!) ஆனால் , இப்போதுள்ளவர்கள் வாயில் நுழையாத பெயருடன் உள்ளவைகளையே சாப்பிட விரும்புகிறார்கள். இட்லி என்ற பெயர் அவர்களுக்கு நாராசமாக உள்ளது. ஆனாலும் அதன் தரம் எந்த உணவகங்களிலும், என்றுமே தாழவில்லை. காலத்திற்கேற்றபடி, விதவிதமாக தன்னை மாற்றியபடி உலா வந்து கொண்டேயிருக்கிறது . அதை நினைத்தால் கொஞ்சம் பெருமையாகவும் உள்ளது. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குகுழந்தைகள் அழைத்து போகும் போது மகிழ்ச்சியாக போய் வர வேண்டியதுதான். உணவை விட அங்கு போய் மகிழ்ச்சியாக உரையாடி சாப்பிடுவது தான் மகிழ்ச்சி. அதற்குதான் உணவகம் போகிறார்கள்.ஏதாவது விஷேசம் அதை கொண்டாட போகும் போது உணவின் தரம், பணம் ஒரு விஷயமில்லை .
பதிலளிநீக்குஇப்போது கல்யாண வீடுகளிலும் இப்படி அசைவ உணவு பேரில் சைவ உணவு வைக்கிறார்கள். அந்த உணவின் பேரை அச்சடித்து கொடுத்து விடுகிறார்கள். நமக்கு வழக்கமான சாம்பார், ரசம், அவியல், கூட்டு , பொடிமாஸ் , தயிர் பச்சடி என்று சாப்பிட்டு பழக்கம் , மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடிவது இல்லை.
ஆம் அக்கா.. உண்மைதான் நீங்கள் சொல்வது. நன்றி. எனக்கு ரிலாண்டு வகை சுவைகளையும் ரசிக்கப் பிடிக்கும். பேஸ்புக்கில் பார்க்கவும்!!
நீக்கு//அப்போது அவரின் இளைய மகன், 'அப்பா அங்கு பாருங்கள். நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது; எழுந்திருங்கள் அப்பா...' என்று அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்ட பிஷ்டப்பா, 'ஹா...' என்று கூறி மூச்சை இழுத்து விட்டார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஆம்புலன்சை நிறுத்தி, உடனடியாக ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.//
பதிலளிநீக்குஅப்பா விரும்பி சாப்பிடும் ஓட்டல் பெயரை மகன் சொன்னதும் அப்பா பிழைத்து கொண்டது மகிழ்ச்சி.
//மூணாறு : கேரளாவில், பொருட்களை பாதி விலைக்கு கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றி, சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், 600 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மூவாற்றுபுழா போலீசார் கைது செய்தனர்.//
மாயவரத்திலும் "காவேரி" என்று ஒரு கம்பெனி இப்படி ஏமாற்றி ஓடியது. ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை.
செய்திகளிலும் ஒரு சாப்பாட்டு மேட்டர்... இல்லையா?!!
நீக்குஉங்கள் கவிதை படித்தேன், நகைச்சுவை நன்று.
பதிலளிநீக்குநன்றி அக்கா.
நீக்கு//கொழும்பு: இலங்கையில், மின் நிலையத்துக்குள் நுழைந்து குரங்கு செய்த சேட்டையால் நாடு முழுதும் மின் தடை ஏற்பட்டது. [10/2/25]//
பதிலளிநீக்குமாதேவியும் இந்த மின் வெட்டு பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைக்கு தொகுத்த செய்திகள் அனைத்தும் அருமை. நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன்.
உங்களது கவிதைகளை காதலர்களுக்காக படைத்த கவிதைகளை ரசித்தேன்.
நகைச்சுவைகளும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உணவக அனுபவம், படங்கள் நன்று. துள்ளலான எள்ளல் கவிதைகள். நியூஸ் ரூம் தொகுப்புக்கு நன்றி. பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ பெயர் காரணத்தின் பின்னான கதையை அறிந்து கொண்டேன். பெங்களூரில் ஒரு “பாஷ்யம் சர்க்கிள்” உண்டு. ஆர்வம் ஏற்பட்டு அதன் காரணப் பெயரையும் தேடி அறிந்து கொண்டேன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சாதாரண மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட மைசூரைச் சேர்ந்த அரசியல்வாதியான மைசூரைச் சேர்ந்த துப்புல் நரசிம்ம ஐயங்கார் பாஷ்யம் என்பவர் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது. பதிவு நன்று.
பதிலளிநீக்கு