பயணம் இனிதானது. பகல் பயணத்தைவிட இரவுப்பயணம் மிக இனிமையானது. இரவின் அமைதியில் பயணம் செய்யும்போது இரவின் குளுமையும், மனதின் நினைவுகளும் கூடவே வருகின்றன.
பகலில் பரபரப்பாக பார்த்த அந்த சாலைகளை இரவின் அமைதியில் பார்த்திருக்கிறீர்களா? அதை ரசிக்க ஒரு ஜென்மம் வேண்டும். . பயணம் முடிகிறதே... இரவு விடுகிறதே என்கிற ஏக்கம் மனதில் படரும்.
இதில் இரண்டு வகை இருக்கிறது. சந்தோஷமான பயணம். துக்கத்துக்கான பயணம்..
சந்தோஷத்துக்காக பயணத்திலேயே - இன்பமான பயணத்திலேயே ஒரு சுகமான துக்கம், ஒரு வகை உணர்வுகளின் கனம் மனதை வருட பயணிப்பது ஒரு ரகம்.
ஏதோ காரணத்தால் தவறாகப் போன உறவை மீட்டெடுக்க காதலர்கள் இருவருமே முயன்றாலும், ஏதோ ஒரு மௌன மாயத்திரை அவர்களைத் தடுக்கிறது. தாற்காலிகம்தான். அது நீங்கி, சேரும் அந்த சுகமான கணம் எப்போது வரும்?
கூட வரும் நண்பர்களுக்கோ அது ஜாலியான பயணம். இவர்களின் உனர்வுகளின் கனம் புரியாமல் குஷியாக பாடிக் கொண்டு வருகிறான் நண்பன்.
ஹிந்திப் பாடலின் தமிழ்ப் பொருளை ஓரளவுக்கு சுமாராக தமிழில் தர முயன்றிருக்கிறேன். அவசரமாக உணர்வுகளை மட்டும் கடத்துகிறேன்! கவிதையாக மாற்ற நேரமில்லை.
1988 ம் வருடம் வெளியான 'தேஜாப்' படத்தின் பாடல். அணில் கபூர், மாதுரி நடித்த படம். இசை லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர்கள்..
காட்சியைப் பார்த்தீர்கள் என்றால் அந்த இரவு நேர சுகமான பயணத்தில் நீங்களும் கவரப்பட்டு விடுவீர்கள். அவர்களுடனேயே பயனபபிட ஆரம்பித்து விடுவீர்கள். அந்தக் காதலர்களின் ஊடலில் நீங்களும் கலந்து விடுவீர்கள். இரவு நேரத்துக்கு ஏற்ற லேசான துள்ளலுடன் கூடிய இனிமையான பாடல். ஷப்பிர் குமார், நிதின் முகேஷ், அல்கா யாக்னிக் குரலில்.
அல்ட்ரா வழங்கும் தரமான காணொளிகளை பகிர முடியவில்லை. எனவே சுமாரான காணொளியினைப் பகிர்கிறேன்.
(நாம் செல்லும்) இந்த இடமே தூங்குகிறது வானம் தூங்குகிறது
வீடுகள் யாவும் தூங்குகின்றன
சாலையும் தூங்குகிறது
இரவானதும் வீடிருப்பவர்கள் வீட்டுக்கு விரைகிறார்கள், தூங்குகிறார்கள்
இரவு நேரத்தில் இலக்கில்லாமல் சுற்றும் நாம்
சாலைகளில் தொலைந்து போகிறோம்
இந்தத்தெருவா அந்தத் தெருவா
இந்த ஊரா அந்த ஊரா
எல்லா இடமும் தூங்கும்போது
எங்குதான் செல்வது
ஆம். எல்லா வீடுகளும் ஏன் சாலையுமே தூங்குகிறது
நான் சொல்வதைக் கேளேன் - இல்லை
நீயாவது பேசு
இவளவு அருகிலிருக்கிறோம்
மௌனம் சாதிக்காதே
நாம் அருகிலும் இருந்தாலும் (மனதளவில்) தூரத்திலும் இருக்கிறோம்
தளையில்லாமல் இருந்தாலும் எதுவும் செய்ய முடியாமலும் இருக்கிறோம்
காதல் ஏன் நம்மிடையே மறந்து போனது சமூகம்
நம்மை பிரிப்பதில் எப்படி வென்றது
என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சோகத்தால் சூழப்பட்டுள்ளது
வாழ்க்கை கண்ணெட்டும் தூரம்வரை இருள்தான் தெரிகிறது
ஆம். எல்லா வீடுகளும் ஏன் சாலையுமே தூங்குகிறது
இந்த இடம் தூங்குகிறது வானம் தூங்குகிறது
வீடுகள் யாவும் தூங்குகின்றன
சாலையும் தூங்குகிறது
==========================================================================================
1985 ல் மோகன் இளவரசி, ரேவதி நடிப்பில் R. சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் குங்குமச்சிமிழ். அற்புதமான பாடல் ஒன்றை இளையராஜா மோகனராகத்தில் இந்தப் படத்தில் வழங்கியுள்ளார். பாடலை எழுதி இருப்பவர் வாலி.
இதுவும் இரவு பாடல்தான். இங்கு இரவு தூங்குகிறது, நிலவு தூங்குகிறது..
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழுமிந்த சொந்தம்
நான் இனி நீ நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே - நிலவு தூங்கும் நேரம்
கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம்? ஏன் தயக்கம்? கண்ணா வா இங்கே
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டுமே இனிமையான பாடல்கள்.
/பகலில் பரபரப்பாக பார்த்த அந்த சாலைகளை இரவின் அமைதியில் பார்த்திருக்கிறீர்களா? அதை ரசிக்க ஒரு ஜென்மம் வேண்டும். . பயணம் முடிகிறதே... இரவு விடுகிறதே என்கிற ஏக்கம் மனதில் படரும்./
உண்மை.. இரவு நேர பயணம் என்பது சுகமான ஒன்றுதான். அந்த இருளும், அதற்கென்றே அதனுடன் பயணிக்கும் நறுமணமும், நம் மனதின் பழைய நினைவுகளாக பயணிக்கும் போது அது ஒரு தனி அனுபவம்தான். நன்றாக விவரித்துள்ளீர்கள்.
முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை பிறகு சத்தம் வைத்து கேட்கிறேன். காட்சி மட்டும் பார்த்தேன். ஆனால், இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இனிமையான பாடல். நடிகர் மோகன் பாடல்கள் தொகுப்பில் ஆடியோவில் அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டு இரவு சம்பந்தபட்ட இனிமையான பாடல்களாக தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கும், அதன் விபரங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. முதல் பாடலின் வரிகளை படித்து உணர்வைப் புரிந்து கொண்டு காட்சியையும், பாடலையும் ரசியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீக்குஜிந்தகி ஏக் சபர் ஹை சுஹானா
பதிலளிநீக்குயஹாம் கல் க்யா ஹோ கிஷ்னே ஜானா
இப்பாட்டும் நினைவில் வந்தது. அன்டாஸ்
Jayakumar
அருமை. அது வேறு ஜானர். பழைய பாடல்களில் அதுவும் கிஷோர் பாடல்களிலேயே சில பாடல்கள் உள்ளன. ஜிந்தகி கா ஸபர் ஹை ஏ கைஸா ஸபர் கோயி சம்ஜானா நஹி கோயி ஜானா நஹி.. (safr 1970) அப்புறம் ஜிந்தகி கே சபருமே (ஆப் கி கசம்) பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?
நீக்குபயணம் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் Raah Pe Rehte Hain Yaadon Pe Basar Karte (Namkeen) கிஷோர் கேட்டிருக்கிறீர்களா? காலா பத்தர் படத்தில் ஏக் ராஸ்தா ஹை ஜிந்தகி பாடலும் கேளுங்கள்.
மேலும் பியாஸே மன் படத்தில் வரும் ஜீவன் ஹை ஏக் சப்னா பாடலையும், தோஸ்த் படத்தில் வரும் காடி புலாராஹீ ஹை பாடலையும் சிபாரிசு செய்கிறேன்!!
நீக்கு'இது ஒரு தொடர்கதை' -- வரியைப் பார்த்ததும் விட்ட இடத்தில் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆசை பீறிட்டது.
பதிலளிநீக்குஆஹா... அருமை.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குநிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
பதிலளிநீக்குஇரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
அருமையான பாடல்..
ஆமாம். மோகனமாய் இழையும்.
நீக்குஇளவரசி -
பதிலளிநீக்குஇளவரசி தான்..
அடடே... எனக்கு அவர்மேல் பெரிய அபிப்ராயம் இல்லை!
நீக்குஹிந்தி பாடலை சிபாரிசு செய்யும் நாள் சரியில்லை. ஹிந்தி திணிப்பு மும்முரமாக இருப்பதாக எல்லோரும் குமுறும் வேளையில் இது போன்று பரிந்துரை செய்வது ஏன் என புரியவில்லை.
பதிலளிநீக்குஅதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நானே உங்களிடமே பிறமொழிப் பாடல்களையும், குறிப்பாக ஹிந்திப் பாடல்கள் சேர்த்து பகிரப்போகிறேன் என்று சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே மெயில் செய்திருக்கிறேனே...
நீக்குஎல்லோரும்னா யாரு? சிபிஎஸ்ஸி பள்ளிகளை நடத்திக்கொண்டு அரசுப் பள்ளியில் ஹிந்தி இருந்தால் தங்கள் வருமானம் போய்விடுமே என நினைக்கும் அரசியல் திருடர்களா இல்லை தங்கள் பசங்களை நல்ல பள்ளிகளில் பல மொழிகளைப் படிக்க வைத்துவிட்டு ஏழைகளுக்குக் கண்ணீர் வடிப்பதுபோல் நடிக்கும் சிவகுமார் குடும்ப சூர்யா ஜோதிகா போன்ற தேசத் துரோகிகளா? இல்லை நடிகர் கொள்ளையர்களா (விஜய் போன்று)
நீக்குஜெ கே அண்ணா இதை காலையில் சொல்ல நினைத்து வேறு வேலைகளில் விட்டுப் போனது.
நீக்குஅதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அது அரசியல் இது கலை இங்கு.
பார்க்கப் போனா கூவறவங்க அத்தனை பேரும் சிபிஎஸ்ஸி பள்ளி புதிய அரசியல் என்ட்ரி ஆளும் கூட நடத்துகிறார். அவங்கவீட்டு குழந்தைகள் எல்லாரும் மும்மொழிப் பள்ளிகளில்தான் படிக்கறாங்க. ஏன் ஆள்றவங்க வீட்டுலயும் கூட ஆங்கிலப் பள்ளி பல மொழிகள் கற்புக்கும் பள்ளிதான் நடத்தறாங்க. அவங்களுக்கு ஒரு நியாயம். சாமானிய மக்களுக்கு ஒரு ரூல், மூளைச் சலவையா? தாய்மொழி முக்கியமாக எடுக்கணும்னு அதில் சொல்லப்பட்டிருக்கு.
ஏமாளி மக்கள் கூட்டம் இதுங்க பின்னாடி அலையும் தங்கள் எதிர்காலமே இருட்டாகிறது என்பதை நினைச்சுப்பார்க்காம. சுயபுத்தி இருந்தாத்தானே?
The national education policy of 1968 introduced the three-language formula, meaning that apart from Hindi and English, there should be a third language which is a part of modern India and must be used for education in Hindi-speaking states. அப்போதிலிருந்து பேசப்படும் ஒன்று அவ்வப்போது மாறிக் கொண்டே இருந்தாலும்.
ஹிந்தி மொழி மாநிலங்களுக்கும் இந்தக் கொள்கை தான்.
கீதா
முதல் வரிகளைப் பார்த்ததும் நம்ம வெங்கட்ஜி இரவு மலையேற்றப் பயணம் பத்தி சொல்லியது நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஅடுத்த வரிகளையும் சேர்த்து டிட்டோ செய்கிறேன். இரவுப் பயணம் செமையா இருக்கும். எனக்கு என் பழைய நினைவுகள், பயணம் செய்தப்ப நள்ளிரவில் கார் ஓட்டிக் கொண்டே தூக்கம் வரப்ப உடனே நிறுத்தி அந்த இரவுச் சத்தம் சுவர்க்கோழி போல மரங்களிடையில் கேட்குமே அதை ரசித்து, ரோட்டில் தூரமாய் புள்ளிகள் தெரிய வரும் வண்டிகள்....இன்னும் திகில் அனுபவம் என்று எல்லாம் நினைவுபடச்சுருள் விரிந்தது.
கீதா
வாழ்வின் சுகமான தருணங்கள்... சுவையான அனுபவங்கள்... ரசிக்க வேண்டிய விஷயங்கள் கீதா... நன்றி!
நீக்குஸோ கயா பாடல் சூப்பரா இருக்கு ஸ்ரீராம், காட்சி தொடங்கும் போதே ஆஹா இரவு மழை இரவுப் பயணம்! பாட்டு நல்லாருக்கு.
பதிலளிநீக்குரசித்துப் பார்த்தேன். இதே மெட்டில் தமிழ்ப்பாடலும் இருக்கிறது. அல்லது ஆரம்பம் இதே போன்று
கீதா
இங்கு பகிரக் கிடைத்த காணொளி, ஒளியும் சரி, ஒலியும் சரி, சற்றே தரம் குறைவு கீதா.. யூடியூப் சென்று அல்ட்ரா குறியிட்ட காணொளியில் இந்தக் காட்சியைப் பாருங்கள், கேளுங்கள்... இன்னும் சுகமாக இருக்கும்.
நீக்குஇதே மெட்டில் தமிழ்ப் பாடலா... நினைக்கு நினைவில்லை.
ஆனால் புதுப்புது அர்த்தங்கள் கேளடி கண்மணி பாடலைச் சொல்கிறீர்களோ...
ஆமாம் இப்ப நீங்க சொன்னதும்தான் கேளடி கண்மணி வரிகள் நினைவுக்கு வருது. ஆரம்ப மெட்டு. ஹிந்திப் பாட்டைக் கேட்டதும் அது டக்கென்று நினைவுக்கு வந்தது
நீக்குகீதா
அந்த அல்ட்ரா குறியிட்ட காணொளியைப் பார்க்கிறேன். பார்த்துவிட்டேன் குவாலிட்டி நல்லாருக்கு ஸ்ரீராம் நீங்க சொன்னாப்ல.
நீக்குபாட்டு clarity, minute details உம் கேட்குது
கீதா
இரண்டாவது பாடல் சொல்லணுமா...ரசித்த பாடல். அருமையான பாடல். இளையராஜா.....இரவு நேரப் பாடல்கள் பெரும்பாலும் மோகனமா இருக்குமோ? நிலவும் மலரும் ஆடுது, ஆஹா இன்ப நிலாவினிலே....
பதிலளிநீக்குராஜாவிடம் பியானோ வாசிப்பாளர் சொல்லியிருக்கிறார் ராஜாவின் மெட்டுகள் ஜெராக்ஸ் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்று. முழுவதும் வீடியோ பார்க்கவில்லை
கீதா
அது எல்லோர் இசையும் பற்றி சொல்லப்படுவதுதான் கீதா.. நிறைய இருக்கவும் இருக்கும்.
நீக்குஆமாம், ஸ்ரீராம். ஹிந்திப்பாடல்கள் இங்கும் பிரதிபலிக்கும். அது போல சில ஆங்கிலப்பாடல்கள் இங்கு காப்பி என்றும் சொல்வதுண்டே....
நீக்குகீதா
நான்தானே உன் புதுக்கவிதை என் எண்ணங்கள் நான் எண்ணிய வண்ணங்கள் பாடல் கேட்டிருக்கிறீர்களா கீதா? அது ஒரு ஆங்கிலப் பாடலின் ஆரம்பத்தை ஒத்திருக்கும். அது என்ன தெரியுமா?!!
நீக்குஇரண்டு பாடல்களுமே கேட்டு மிகவும் ரசித்த பாடல்கள். மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇரவுப் பயணம் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள். எனக்கும் பிடித்தமானது இரவுப்பயணம் சூரிய வெப்பம் இல்லாமல் அமைதியாக ஆனந்தமாக பயணிக்கலாம்.
பதிலளிநீக்குகுளிர்கால நிலை உள்ள இடங்களுக்கு பகலில் பயணிப்பது சுகமானது.
முதல்பாடல் கேட்டதில்லை இப்பொழுதுதான் கேட்கிறேன் அருமையான பாடல்.
இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் அதுவும் நல்ல பாடல்.
பாடல் பகிர்வுக்கு நன்றி.
ரசித்ததற்கு நன்றி மாதேவி.
நீக்குஇரண்டும் சிறப்பான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குஸ்ரீராம், ஹிந்திப் பாடலின் உணர்வுகளை நீங்கள் தமிழில் கொடுத்தது ரொம்ப நல்லாருக்கு. மீண்டும் பாடலோடு அந்த ஹிந்தி வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டி...கொஞ்சம் புரிந்தது மீதி உங்கள் தமிழ்வரிகளோடு மீண்டும் கேட்டேன். நல்லா கொண்டு வந்திருக்கீங்க
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா... நான் அனுபவித்த உணர்வுகளை ஒருவராவது அதே போல உணர்ந்தார்கள் என்று சொன்னால் ஆளில்லாத தீவில் ஒரு சக மனிதனை பார்த்த சந்தோஷம் வருகிறது.
நீக்குகாதல் ஏன் நம்மிடையே மறந்து போனது சமூகம்
பதிலளிநீக்குநம்மை பிரிப்பதில் எப்படி வென்றது
என் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சோகத்தால் சூழப்பட்டுள்ளது
வாழ்க்கை கண்ணெட்டும் தூரம்வரை இருள்தான் தெரிகிறது //
இந்த வரிகள் ரொம்பவே உணர்வுகள் தெரிக்கும் வரிகள்!
ஆம். எல்லா வீடுகளும் ஏன் சாலையுமே தூங்குகிறது
இந்த இடம் தூங்குகிறது வானம் தூங்குகிறது
வீடுகள் யாவும் தூங்குகின்றன //
அவை எல்லாம் தூங்கட்டும் நம் மனம் மட்டும் விழித்திருக்கட்டும்!!! என்று ஏதேனும் வரி வருகிறதா? வரலைனா என்ன சேத்துக்குவோம்!! ஹிஹிஹி
கீதா
மறந்து போனது என்று வந்திருக்கிறதா? மறைந்துபோனது என்று டைப்படித்தேன்!
நீக்குசோகம் சூழ்ந்த என் வாழ்வின்
ஒவ்வொரு கணமும்
உறவுகளின் எதிர்ப்பில்
தோற்ற நம் காதலால்
துவண்டு
எதிர்காலம் இருளாகவே தெரிகிறது
இனிமையான பாடல்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஇரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டப்பாடல்கள்.
பதிலளிநீக்குமீண்டும் கேட்டேன்.
முதல் படம் பாட்டு கேட்டு இருக்கிறேன், படம் பார்த்தது இல்லை.
அடுத்த பாடல் படம் பார்த்து இருக்கிறேன் பாடும் ஜோடி சேர மாட்டார்கள். சோகபடம்.
முதல் படத்தில் உறவுகளின் எதிர்ப்பில் தோற்ற காதல் இந்த இரவு பயணத்தில் சந்தித்து சேர்வார்கள் என்று நினைக்கிறேன்.
இரண்டும் இனிமையான பாடல்கள்.
இரண்டுக்கும் ஒற்றுமை இருப்பதால் இந்த பாடல் பகிர்வா?
முதல் பாடல் சாலை இரவு பயணம் . அடுத்த பாடல் கடல்காற்றை, நிலவை ரசித்து இரவு நடப்பது சுகமானது.
நான் படம் பார்க்கவில்லை என்றாலும் மோகன் இளவரசி ஜோடி சேர்ந்து விடும் என்று விக்கியில் போட்டிருக்கிறார்கள். ரேவதில் சந்திரசேகரை திருமணம் செய்வாராம்.
நீக்குஆம், இரவுப்பாடல் என்பதால் நிலவு தூங்கும் நேரத்தை ஜோடி சேர்த்தேன் அக்கா.
முதல் பாடல் இடம்பெற்ற படம் அப்போது அதிரிபுதிரி ஹிட். குறிப்பாக 'ஏக் தோ, தீன்' பாடல் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது.
நீக்கு