நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வியாழன், 20 பிப்ரவரி, 2025
பிரஹஸ்பதியிடம் சோமன்
கீரை சாப்பிட்டு வெகு நாட்களாயின என்பது மனதுக்குள் குறையாக இருந்தது. கடந்த ஜூன் முதல் நவராத்திரி வரை காலை -அதிகாலை- நடைப்பயிற்சி போய்க்கொண்டிருந்தேன். அதன்பிறகு நடைப்பயிற்சி சுத்தமாக நின்றுபோய் ஜனவரி வரை சும்மா இருந்துவிட்டேன். மறுபடி ஜனவரி 25 அன்று காலை உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் தொடங்கினேன்.
காலைவேளையில் அதிகபட்சம் 25 நிமிடங்களில் நடையை முடித்துக் கொண்டிருந்தேன், மாலை வேளை தொடங்கியபோது ஆற, அமர சுற்றி சுமார் ஒன்றேகால் மணி நேரம் குறைந்தபட்சம் நடக்கிறேன்!
அதுமட்டுமல்ல, நான்கு இடங்களில் மாலை வேளைகளில் பசுபசுவென கீரை விற்பதைப் பார்த்தேன்.
நான் கீரை வாங்கும் ஆஸ்தானக் கடை. கவரில் இருக்கும் காய்கள் பத்துப் பத்து ரூபாய்.
ஒவ்வொரு முறையும் எது அரைக்கீரை, எது முளைக்கீரை என்று கேட்டு கேட்டுதான் வாங்குவேன். அவர்கள் எப்படி சட்டென அடையாளம் கண்டுபிடிக்கிறார்களோ...
அங்கு மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும் வாங்கத் தொடங்கினேன். நடுவில் வாசலில் டெம்ப்போவில் வந்து என்னிடம் காய்கறி ஏமாற்றிக் கொண்டிருந்த - சே, விற்றுக் கொண்டிருந்த - காய்கறிக்காரர் 'இந்த சீசனில் கீரை வாங்காதீர்கள், நன்றாயிருக்காது' என்று பாடம் வேறு எடுத்தார். யாரிடம்? இந்த தஞ்சாவூர்க்காரனிடம்!
தஞ்சாவூரில் கீரைத்தண்டு என்று கிடைக்கும். தண்டு நன்றாக வளர்ந்து, தடிமனாக இருக்கும். கீரை இலைகள் கம்மியாகவும் பெரிதாகவும் இருக்கும். அந்தத் தண்டுகளை நறுக்கி அம்மா சாம்பார் வைப்பார். நான் சென்னை வந்து இதை பார்த்ததில்லை. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்பா மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்தால், அன்று வாங்கியதில் எந்தக் காய் மிக நன்றாக இருந்ததோ, ஜாலி மூடில் அதை ஸ்பெஷலைஸ் செய்ய இப்படி சொல்வார்... "ஹேமா... கத்தரிக்காய்னு கூப்பிடு.. 'ஓவ்' னு கேட்கும். வெண்டைக்காய்னு கூப்பிடு.. ஓஓய்னு கேட்கும்" என்பார். அம்மாவும் அவரைக் குஷிப்படுத்த காய் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். அப்பா குரலை மாற்றி 'ஓவ்' என்பார்! தஞ்சாவூரில் எல்லா காய்களும் அருமையாகக் கிடைக்கும்.
இங்கு கீரைக்கதைக்கு வருகிறேன்.
ஒருநாள் முளைக்கீரை, ஒருநாள் அரைக்கீரை, மறுநாள் பசலைக்கீரை என ஒரு வாரம், அடுத்த வாரம் மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரைக், பொன்னாங்கண்ணிக் கீரை என்று வாங்கினேன்.
முளைக்கீரைதான் எப்போதும் வாங்குவது. அதில் இரண்டு வகையாக மசியல் செய்வோம். ஒன்று பாசிப்பருப்பு போட்டு, இன்னொன்று துவரம்பருப்பு போட்டு என்று செய்வோம். பாஸ், து ப போடுவதை எங்கள் முறை என்பார். பா ப போட்டு செய்வது அவர்கள் முறையாம். இரண்டுமே நன்றாக இருக்கும். அரைக்கீரையை இப்போதுதான் நெடு நெடு நாட்களுக்குப் பிறகு வாங்கி, என்ன செய்வது என்று யோசித்து, மோர்க்கீரை செய்தோம். அவ்வளவாக பிடிக்கவில்லை.
இன்று பசலைக்கீரை வாங்கலாம் என்று சென்ற அன்று ஆஸ்தான கீரைக்கார அம்மா இல்லாமல், (ஞாயிறு லீவாம்) இன்னொரு கடையில் வாங்கி வந்தேன். வாங்கி பையில் போட்டது முதலே மனதில் குறுகுறு என்றிருந்தது. கீரை என்னவோ போல் இருந்ததாக தோன்றியது. ரொம்ப தூரம் வந்த பிறகு மறுபடி கையில் எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்தால், சிவப்புப் புள்ளிகளுடன் பூச்சி நிறைய அரித்திருந்ததது.
சரி, இதை தூக்கிப் போட்டு விடலாம் என்று நினைத்தபோது இரண்டு மாடுகள் ஓரமாக, ஓய்வாக உட்கார்ந்திருந்தன. முதலில் வெள்ளை மாட்டிடம் சென்று இதை நீட்டியதும் அது அப்படி ஒன்று கண்ணெதிரே நீட்டப்பபடவே இல்லை என்பது போல, ஜென் துறவி போல உட்கார்ந்திருக்க, இரண்டாவது மாட்டிடம் கொடுத்ததும் வாங்கி கொண்டது.
வாயில் வாங்கிய கீரையை கீழே போட்டு பசு நிதானமாக சாப்பிடுவதை படம் எடுத்துக் கொள்வதை ஒரு ஸ்கூல் பையன் புதிருடன் / கிண்டலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்! கவலை வேண்டாம், இப்போதும் தினசரி அந்த இடத்தில இந்த மாடுகளை பார்க்கிறேன்!
மறுநாள் திங்கட்கிழமை பசலைக்கீரை வாங்கி வெற்றியுடன் திரும்பினேன்.
பசலைக்கீரையை சின்ன வெங்காயம் தக்காளி, சாம்பார் பொடி போட்டு தேங்காய், பாசிப்பருப்பு சிவப்பு மிளகாய் அரைத்து விடுவது.
வெந்தயக்கீரை அதுவரை நாங்கள் வாங்கியது மினி சைசில் சிறிய கட்டுகளாக இருக்கும். இவர் இந்த முறை தந்த வெ. கீ முளைக்கீரை, மணத்தக்காலிக் கீரை சைசில் இருந்ததது. தயக்கத்துடன் ஒருமுறைக்கு இருமுறை வெ.கீ தானா என்று கேட்டு வாங்கி வந்து சமைத்தோம். அதைப் போட்டு வழக்கம்போல சாம்பார் வைத்தோம். பறந்தோடி விட்டது.
மணத்தக்காளிக் கீரை போட்டு பாசிப்பருப்பு, தேங்காய் போட்டு கூட்டு, மசியல் போல செய்வோம். வாய்ப் புண்ணுக்கு நல்லது என்ற பெயரில் அதுவும் ஓடிவிடும்.
பெரும்பாலும் கீரைகளை சாப்பாட்டுடன் சாப்பிடுவதை விட நான் சாப்பாட்டுக்கு ஒன்றரை மணி நேரம் முன் தனியாக கப்பில் வைத்து சாப்பிட்டு விடுவேன்.
பொன்னாங்கண்ணிக் கீரை வாங்கும்போது தயக்கமாக இருந்தது. காதில் கீதா பேசிக்கொண்டிருந்தார், நான் கீரைக்காரம்மாவிடம் தயங்கிப் பேசுவதைக் கேட்டு "ஸ்ரீராம்... வாங்குங்க.. நன்றாய் இருக்கும்" என்று சிபாரிசு செய்தார்.
அதுவரை பொன்னாங்கண்ணிக் கீரை சமைத்ததே இல்லை என்பதால் தயக்கமாக இருந்தது. அதுவேறு புள்ளிங்கோ பையன் தலை போல ஒரு மாதிரி கலரில் இருந்தது!
எப்படி செலவாகப் போகிறதோ என்று இருந்தது.
அதைத் தயக்கத்துடன் வாங்கி வந்து இலையை மட்டும் சேகரித்து நறுக்கி - நான் கீரை நறுக்குவதில் ஸ்பெஷலிட்டாக்கும் - சின்ன வெங்காயம், தக்காளி ஒரு பல் பூண்டு சேர்த்து வாணலியில் இட்டு சுண்டல் போல வதக்கினோம். சுருண்டு கொஞ்சமாகி விட்ட கீரையை சுவைத்தால்... அடடா... இரண்டு கட்டு வாங்கி இருக்கலாம் என்று ஏக்கத்துடன் தோன்றியது.
ஒரு வாரத்துக்கு அளவாய்த்தான் கீரை சாப்பிட வேண்டுமாம். எனவே போதும் என்று இந்த அளவில் நிறுத்தி அடுத்த வாரம் மறுபடி கீரைக்கு வருகிறேன்!!
இரண்டு நாட்களுக்குமுன் நான் இணையத்தில் பார்த்த இந்த முதல் புதிரை எங்கள் குடும்ப க்ரூப்பில் பகிர்ந்தேன். உடனே KGY மாமா சட்சட்டென சில விடுகதைகளைப் பகிர்ந்தார். அதெல்லாம் அவர் சிறுவயது நினைவுகளான், இன்னமும் நினைவில் இருக்கிறது என்றார். அவை... விடைகள் கடைசியில்... அதாவது ஒவ்வொரு கேள்வியின் 'இது என்ன?' என்பதைத் தொடர்ந்து கடைசியில்!
1) ஏழு ஏழு பதினாலு சோலை
இது தச்சனோட வேலை
விடுவிச்சவங்களுக்கு நவரத்ன மாலை.
இது என்ன? பல்லாங்குழி
2) பட்டை நீக்கி
பால் பட்டை நீக்கி
முத்துப் பட்டை நீக்கி
முன்னே வராள் சீமாட்டி
இது என்ன? வாழைப்பூ
3) ஒத்தைக் காலன் திம்மப்பன்
போவான் வருவான் திம்மப்பன்
இது என்ன? கதவு
4) ஓடுகிற குதிரைக்கு விலாவிலே பொத்தல் ?
இது என்ன? பஸ்
5) குதிரை ஓட வால் தேயுது.
இது என்ன? ஊசிநூல் தையல்
6) கையுண்டு கால் இல்லை நாராயணா
கழுத்து உண்டு தலை இல்லை நாராயணா
நெஞ்சுண்டு நினைவில்லை நாராயணா
என் பேரை சொல்வாயோ நாராயணா -
இது என்ன? சட்டை.
7) ஓடோடும் சங்கிலி உருண்டோடும் சங்கிலி பள்ளத்தை கண்டால் பதுங்கி ஓடும் சங்கிலி.
"பிறகு அவரைப் பற்றி அங்கும் இங்குமாகத் தெரிந்த விஷயங்கள் வியப்பைத் தந்தன. டி.ஜே.எஸ். ஜார்ஜ் அவற்றை கோர்வையாகத் தொகுத்திருக்கிறார். MS: A Life in Music 2004-இல் வெளியாகி இருக்கிறது. ஜார்ஜ் பத்மபூஷன் விருது பெற்ற பத்திரிகையாளர். பல வாழ்க்கை வரலாறுகளை எழுதி இருக்கிறார்."
எம்எஸ் தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தாய் மதுரை ஷண்முகவடிவு. ஒரு அண்ணன், ஒரு தங்கை. எல்லாருக்கும் ஒரே அப்பாவா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் யாரும் இவர்களைத் தன் பிள்ளைகளாக அங்கீகரிக்கவில்லை. எம்எஸ் எனபதே தாயின் பேரை வைத்துத்தான், மதுரை ஷண்முகவடிவு சுப்புலக்ஷ்மி என்பதின் சுருக்கம்தான். சிறு வயதிலேயே அவரது குரல் கவனிக்கப்பட்டிருக்கிறது. 10 வயதில் கச்சேரிகள் ஆரம்பம். 13 வயதில் முதல் கிராமஃபோன் இசைத்தட்டு. கும்பகோணம் மகாமகத்தில் அவர் பாடியது அவருக்கு கவனம் பெற்றுத் தந்திருக்கிறது.
சென்னையில் வசித்தபோது அவரை விகடனிலிருந்து பேட்டி காண சதாசிவம் வந்திருக்கிறார், சதாசிவம் முதல் பார்வையிலேயே விழுந்துவிட்டாராம். ஷண்முகவடிவு தன் குல வழக்கப்படி ராமநாதபுரம் ராஜா, நாட்டுக்கோட்டை செட்டியார் என்று பணக்கார புரவலர்களைத் தேடி இருக்கிறார். எம்எஸ்ஸுக்கு அத்தகைய வாழ்வில் விருப்பமில்லை. வீட்டை விட்டு வெளியேறி சதாசிவத்திடம் அடைக்கலம் புகுந்திருக்கிறார்.
சதாசிவம் திருமணமானவர். எம்எஸ்ஸை விட 14 வருஷம் பெரியவர். ஏற்கனவே 2 குழந்தைகள். 3-4 வருஷம் மணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள். எம்எஸ் சதாசிவத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறார். சதாசிவம் தன் வீட்டிலேயே எம்எஸ்ஸை குடிவைத்திருக்கிறார். முதல் மனைவிக்கு மன வருத்தமாம். ஆனால் அன்று இப்படிப்பட்ட உறவுகள் அபூர்வம் அல்லவே! எம்எஸ்ஸுக்கு சமூக அங்கீகாரம் தேவைப்பட்டிருக்கிறது, தேவதாசி வாழ்க்கைக்கு இது பரவாயில்லை என்று எண்ணி இருக்கிறார். சதாசிவம் ஏழை இல்லைதான், ஆனால் ஷண்முகவடிவு விரும்பிய அளவுக்கு பெரிய பணக்காரரும் அல்லர். அவர் தன் மகளை சதாசிவத்திடமிருந்து எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார்.
சதாசிவம் சிறந்த விற்பனையாளர், திறமையாகத் திட்டமிடுபவர். விகடனில் விளம்பரங்கள் பெருகச் செய்திருக்கிறார். ஆனால் பிற்காலத்தில் எஸ்.எஸ். வாசனோடு மனக்கசப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும். இரண்டு பேரும் இணைந்து கொண்டார்கள்.
சதாசிவத்திடம் அப்போது இரண்டு சொத்துக்கள் இருந்திருக்கின்றன. திறமையான, பிரபலமான பத்திரிகையாளர்/எழுத்தாளர் கல்கி; இசை மேதை எம்எஸ். கல்கி பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்று விருப்பம். பணம் வேண்டும். எம்எஸ் இவரிடம் முழு சரணாகதி. கே. சுப்ரமணியம் இயக்கிய சேவாசதனம் திரைப்படத்தில் எம்எஸ்ஸை நடிக்க வைத்திருக்கிறார். அந்தத் திரைப்படத்தின்போது ஷண்முகவடிவு குடும்பத்தினர் எம்எஸ்ஸை கடத்தினார்களாம், சதாசிவமும் கே. சுப்ரமணியமும் அவரை மீட்டிருக்கிறார்கள். திரைப்படம் பெருவெற்றி. அதில் வந்த பணம்தான் கல்கி பத்திரிகைக்கு மூலதனமாம்.
எம்எஸ்ஸைப் பொறுத்த வரை ஒவ்வொரு சிறு விஷயத்தையும் சதாசிவம்தான் திட்டமிடுவாராம். என்ன பாட்டு, என்ன உடை, என்ன நகை என்பதெல்லாம் கூட சதாசிவத்தின் முடிவுதானாம். எம்எஸ் என்னும் brand-ஐ வலுப்படுத்த சதாசிவம் இடையறாது முயன்றிருக்கிறார். எம்எஸ் இசை உலகில் புகழடைகிறார். அன்று பெண்கள் கர்நாடக இசை உலகில் அங்கீகாரம் பெறுவது கொஞ்சம் கஷ்டம்தானாம். எம்எஸ்ஸில் குரல், ஸ்வர சுத்தம் அந்தத் தடைகளை உடைக்கிறது.
அடுத்தபடியாக சகுந்தலை திரைப்படம். சகுந்தலையின்போது ஜிஎன்பியால் எம்எஸ் ஈர்க்கப்பட்டிருக்கிறார். கத்தை கத்தையாக காதல் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால் இன்னும் சதாசிவத்தின் பாதுகாப்பில்தான். சதாசிவம் அப்போதெல்லாம் தான் வீட்டை விட்டுப் போகும்போது எம்எஸ்ஸை வீட்டில் வைத்து வீட்டைப் பூட்டிவிட்டுத்தான் போவாராம்.
இதற்கிடையில் சதாசிவத்தின் முதல் மனைவி இறந்துவிட்டார். ராஜாஜி எம்எஸ்ஸுடன் திருமணம் இல்லாத உறவு தவறு என்று அழுத்தம் தந்திருக்கிறார். திருமணம் நடக்கிறது. எம்எஸ் ஐயராத்து மாமியாக மாற ஆரம்பிக்கிறார்.
அப்புறம் அடுத்த திரைப்படம், சாவித்ரி.
சென்னை மாகாணத்து கர்நாடக இசை மேதைகள் என்று அன்று ஒரு பத்து இருபது பேராவது இருந்திருப்பார்கள். ஆனால் வடக்கே யாருக்கும் இந்த மேதைகளைத் தெரியாது. சதாசிவம் எம்எஸ்ஸை அகில இந்தியப் புகழ் பெற வைக்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். அவரது திட்டம்தான் மீரா திரைப்படம். மீரா எம்எஸ்ஸை இசை சூப்பர்ஸ்டாராக மாற்றுகிறது. காந்தியும் நேருவும் காங்கிரஸ் தலைவர்களும் அவரது விசிறிகள் ஆகிறார்கள். ராஜாஜியின் உறவு இதற்கெல்லாம் பக்கபலமாக இருக்கிறது. மீரா எனக்கும் பிடித்த திரைப்படம், பார்க்கவில்லை என்றால் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். மீரா பஜன்களைக் கேட்பதற்காகவே பார்க்கலாம்.
சதாசிவத்துக்கும் அவருக்கும் இடையில் இருந்த பந்தம் perfect match of the opposites. சதாசிவம் எம்எஸ்ஸின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தன் கட்டில் வைத்திருந்தார். எம்எஸ் அப்படி கட்டுண்டிருப்பதில் இருக்கும் பாதுகாப்பைத்தான் விரும்பினார். சதாசிவம் எம்எஸ்ஸின் மானேஜராக, அவரது பிம்பத்தை கட்டமைப்பவராக, அவரது வழிகாட்டியாக இருந்தார். எம்எஸ் தனக்கு வேறு கவலை இல்லாமல் பாட்டுப் பாடும் நிலை வேண்டும் என்றே விரும்பினார். ஆனால் எம்எஸ் தனக்கென்று சிந்திக்கத் தெரியாத அடிமை அல்லர். அப்படி இருந்திருந்தால் அவர் தன் தாயை மீறி சதாசிவத்திடம் அடைக்கலம் ஆகி இருக்க மாட்டார். ஜிஎன்பியோடு உறவு வைத்துக் கொள்ளாமல் சதாசிவத்திடம் அவர் தொடர்ந்தது அவர் எத்தனை துல்லியமாக கணக்கு போட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.
தான் பிறந்த ஜாதிச் சூழலைத் தாண்டி சமூக அங்கீகாரத்தை, எந்த விதப் புற உலகக் கவலைகளும் இன்றி இசையில் மூழ்கி இருக்கக் கூடிய சூழலை விரும்பிய பெண்; பாதுகாப்புக்காக தனது காதலையும் துறக்கத் தயாராக இருந்த பெண். பெரும் கனவுகளைக் கண்டு அவற்றை நிறைவேற்றக் கூடிய ஒரு திறமையான ஒருங்கிணைப்பாளர். இருவரின் made for each other பந்தத்தை இந்தப் புத்தகம் அழகாக விவரிக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
- சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புட்ச் விலோர் ஆகிய இருவரும்அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் பூமில் இருந்து புறப்படுகிறது. அந்த டிராகன் விண்கலன் மூலம் மார்ச் 19-ம் தேதி அன்று அங்கிருந்து அவர் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வாஷிங்டன்: அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து, 409 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக செலவானது என்ற கணக்கு காட்டப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
- கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு அதிகமாக உள்ளது. பல இடங்களில் பாறைகள் தகர்க்கப்படுவதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகள்.
- இது குறித்து துபாய் விமான நிலையங்களின் முனைய சேவைக்கான அதிகாரி அகமது அப்துல் பகி கூறுகையில், "வாலிபர் பயம் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்பாமல் இருந்துள்ளார். அவருக்கு ஏரோபோபியா எனப்படும் பய நோய் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருக்கும் பயத்தை போக்கும் வகையில் தேவையான ஆலோசனை மற்றும வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் விமானத்தில் சொந்த ஊருக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார். பின்னர் விமான பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்" என்று அவர் கூறினார்.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதலில் கீரை புராணம் நன்றாக உள்ளது மாடு கீரை சாப்பிடும் படங்கள் அருமை. "பாழாய் போகிறது பசு வயிற்றில்" என்ற ஒரு சொல் வழக்கு போல் ("அதுவே நமக்கு மறுபடி பாலாக தந்து விடும் என்பதால் இந்த சொல் வழக்கோ.." என நான் நினைப்பதுண்டு.) . தூக்கி குப்பையில் எறிந்து விடாமல் மாட்டுக்கு தந்தது நல்லதுதான்.
மாதந்தோறும் இந்த அகத்திக்கீரை நாம் சாப்பிட்டால் நல்லது. ஆனால் அதை விட ஒரு மாட்டுக்கு வாங்கித் தந்தால் புண்ணியம் என சொல்வதுண்டு.
இந்த பசலை கீரையும், பாலக் எனப்படும் கீரையும் ஒன்றுதானே..! இது அடிக்கடி வீட்டில் வாங்குகிறோம். (அதுவும் ஆன்லைன் வர்த்தகத்தில் மகன் வரவழைத்து விடுவார். ) இன்னம்ம் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
உண்மை கீதா அக்கா. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக அன்று பார்த்து வீட்டில் சப்பாத்தி இருக்காது! ஆனால், இனி தொடர்ந்து கீரை வாங்க முடியும். ஒவ்வொன்றாய் முயற்சிக்க வேண்டியதுதான்.
அப்படியா..? நான் இரண்டும் ஒன்றாக இருக்குமோன்னு நினைத்தேன். இங்கு தண்டு கீரை கிடைக்க மாட்டேன் என்கிறது. அதன் இலைகளை தேங்காய் சீரகம் வத்தலோடு அரைத்து கூட்டாக்கி விட்டு, மறுநாள் அதன் தண்டு சாம்பாருக்கு பயன்படுத்துவோம். அங்கு மதுரையில் இது கிடைக்கும்.
பருப்பு கீரை என்ற ஒன்று கூட அங்கு கிடைக்கும். வெறும் வேக வைத்த து. ப போட்டு அதை கடைந்தால் ருசியாக இருக்கும். சில கீரைகள் இங்கு கிடைப்பதில்லை. கிழங்குகளில் பிடி கருணையும் இங்கு கிடைப்பதில்லை. வரத்து இல்லை போலும்..! இல்லை பயன்படுத்துபவர்கள் கம்மியோ என்னவோ....! நன்றி சகோதரி.
பசலை கொடி....தரையில் படரும் கொடி, ஏறும் கொடி, என்று எல்லாம் உண்டு. நல்ல டார்க் பச்சையில் இருக்கும் பசலை உண்டு லைட் பச்சை பசலை உண்டு. தண்டும் பெரிசா குண்டா இருக்கும்
பாலக் அப்படி அல்ல......வேரோடு இருக்கும் தரையில் வளர்வது
ஸ்ரீராம் இனி வாங்கிச் சாப்பிடுங்க நலல்து. இங்கு கண்டிப்பாக வாரத்தில் 4, 5 நாட்கள் கண்டிப்பாகக் கீரை உண்டு, வேறு காய் செய்திருந்தாலும். கீரை பிசைந்து சாப்பிடுவது போலச் செய்தால் குழம்பு இருக்காது பெரும்பாலும் புளி தவிர்க்கிறேன்
ஹை, இங்கும் கவரில் விற்கப்படும் காய்கள் ரூ 10 அல்லது 20 க்குள்தான் இருக்கும்.
கீரை அடையாளம் கண்டுபிடிக்கலாமே, ஸ்ரீராம். பழகப் பழகத் தெரிந்துவிடும்.
படத்துல வலதுஓரமா இலை தெரியுது பாருங்க அது தண்ணிக் கீரை மாதிரி இருக்கு.
அதுக்கு அப்புறம் இருப்பது பொன்னாங்கண்ணி, அதன் வலப்பக்கம் பாலக், இந்தப் பக்கம் வந்தா அரைக்கீரை, அது தாண்டினா க்ளியரா இல்லை, ஆனா ஒன்று கொஞ்சம் சிவப்பு கலந்து தெரிகிறாது அது ஒரு வேளை சிவப்பு பொன்னாங்கண்ணியோன்னு தோன்றுகிறது. அதுக்குப் பிறகு மணத்தக்காளி, வெந்தயக் கீரை என்று நினைக்கிறேன்
இப்படி கவரில் விற்கப்படும் காய்கறிகள் சமயங்களில் மிக நன்றாய் இருக்கின்றன. சமயங்களில் கவுத்து விடுகின்றன! நேற்று கொத்தவரைக்காய் வாங்கி நொந்து போனேன். கொத்தவரை மார்க்கெட்டில் இளசாக கிடைக்கவே கிடைக்காது போல...
கீரைகளை அடையாளம் காண்பது எளிது. கீரைத்தண்டு பெரிதாக நானும் கும்பகோணம், தஞ்சாவூர்ப்பக்கங்களில் தான் பார்த்திருக்கேன். சில தண்டுக்கீரை வகையறாக்கள் சிவப்பாகவும் இருக்கும். மோர்க்கூட்டு, பொரிச்ச குழம்பு பண்ணலாம், சாம்பாரிலும் போடலாம். கீரை/தண்டு இரண்டையுமே நறுக்கிச் சேர்ப்போம். ஆறாம் மாசத்துத் தண்டு என என் மாமியார்/மாமனார் சொல்லுவார்கள்.
அரைக்கீரையில் பொதுவாக மோர்க்கூட்டு செய்வதில்லை ஸ்ரீராம், வெறுமன ப மி, பெருங்காயம் போட்டு மசித்து, கடுகு உ ப, சி மி, தாளித்தாலே ரொம்பச் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணை பயன்படுத்தி. மசிக்கும் போது வறுத்துப் பொடித்த உ ப பொ சேர்த்தால் அது சுவையாக இருக்கும்.
படத்தில் உள்ள கீரை, ஆ! பூச்சி ரொம்பவே அரித்திருக்கிறது. ஆனா பாருங்க ஒரு விஷயம் அப்ப நீங்க வாங்கும் இடத்தில் அவங்க கொண்டு வரும் கீரையில் மருந்து தெளிக்கப்படலை! அப்படிச் சந்தோஷப்பட்டுக்கலாம். இது வேளாண்மை செமினாரில் தெரிந்து கொண்ட விஷயம். ஓரிரு இலைகள் அப்படி இருந்தா அதை எடுத்துப் போட்டுவிட்டு சமைக்கலாம் என்றும் சொன்னாங்க.
மாடுகள், தினமும் கிடைக்கும்னு அங்கேயே இருக்கும் போல!!! படங்கள் நல்லாருக்கு.
நாங்கள் அன்று அப்படி செய்யவில்லை. சுண்டல் என்பது போல வதக்கச் சொல்கிறீர்கள். அரைக்கீரையில் லேசான கசப்பு இருந்தது.
நான் இந்த பூச்சி அரித்த கீரை ஆஸ்தானம் இலலாததால் வேறு கடையில் வாங்கியது.. சொல்லி இருக்கேனே.... ஆமாம், பூச்சி அரிச்சது, எல்லாம் செயற்கை உரம் போடாதது, நல்லது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பொன்னாங்கண்ணிக் கீரைப் பொரியல் ரொம்ப நல்லாருக்கும் அதுவும் சி வெ பூ போட்டு ஆஹா. ஆனா ரொம்பத் துளியாகிவிடும்.
முளைக்கீரை/தண்டுக் கீரையைக் கூட இப்படிப் பொரியல் செய்யலாம். நான் சி வெ பெ வெ போட்டும் செய்வேன். அப்புறம் எங்க ஊர்ப்பக்கங்களில் சா(ய்)ச்சப் பொரியல்னு செய்வதுண்டு சாய்ச்சனா ரொம்ப மையா அரைக்காம கொர கொரன்னு தேங்காய் ஜீரகம் சி மி போட்டு உரலில் அல்லது அம்மியில் அப்படித் தண்ணி விடாமல் அரைத்து எடுத்துச் செய்வது. மிக்சியிலும் அப்படி அரைத்துச் செய்யலாம் நல்லாருக்கும்
எல்லா கீரையையும் எல்லா விதங்களிலும் செய்யலாம். ஆனால் நம் வீட்டில் ஒன்று பழகி விட்டால் அதுவேதான் மறுபடி மறுபடி வரும்! அதைத்தான் நான் அடிக்கடி சொல்வேன். இந்த முறை இப்படி என்றால் மறுமுறை அதையே போட்டு வேறு முறையில் செய்ய வேண்டும் என்பேன்,
3-4 வருஷம் மணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.//
ஓ அப்பவே live in together!
நான் ஏதாச்சும் எம் எஸ் விஷயம் பற்றிச் சொல்லப் போனால், அப்புறம் என்னையும் வேறொருவரின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்! எனவே அந்த விஷயத்தைத் தொடாமல் செல்கிறேன்.
எம் எஸ் அவருடைய வாழ்க்கையை அவர் விரும்பியவாறு வாழ்ந்தாரா என்பது அவர் உள்மனதிற்குத்தான் தெரியும். நமக்கு அவர் நிறைவான நாம் பொறாமைப்படும்படியான நல்ல வாழ்க்கையை பேரும் புகழுமாக வாழ்ந்திருக்கிறார் என்றே தோன்றும்
இங்கும் சில தியேட்டர்கள் இல்லை ஆனால் அந்த பஸ் ஸ்டாப் இன்னும் அதே பெயரில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போபால் - நீதி இடிக்கிறதே. குடும்ப உறவுகளுக்கு எல்லாம் சட்டத்தில் வழி தேட முடியாது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உணர்வுகளுக்குச் சட்டத்தில் இடமில்லை.
ஏ ஐ - அச்சம்தான். எனவே பசங்க இனி அந்த ஏ ஐ யை மிஞ்சும் வகையில் திறமையுடன் இருக்கணும் அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போன்று...எப்படிப் பணத்தை நம்மை ஆளவிடாமல் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி...
அந்தச் சிறுமிக்குப் பாராட்டுகள். எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பெற்றோர் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும் அவர்களை எப்படியான பார்வையில் நடத்த வேண்டும் என்பதை நல்லவிதத்தில் சொல்லிக்க் கொடுத்து மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்,
கொல்கத்தா - போக்சோ - தூக்குத் தண்டனை - சூப்பர் தண்டனை. இதை எல்லா இடங்களிலும் செயல்படுத்த வேண்டும் அப்பதான் பயம் வரும்....அது சரிங்க, தமிழ்நாடு அண்ணா யுனிவேர்சிட்டி கேஸ் என்னாச்சுங்கோ?.....அதுவும் நேரடியாகவே குற்றவாளி தெரிஞ்சாச்சு தூ த கொடுக்காம.....
எம் ஜி ஆரை அறிமுகப் படுத்தியவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்பது வாசித்திருக்கிறேன். இந்தப் புகைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கிய படங்கள் பற்றி இணையத்தில் தேடிய போது இந்த விஷயம் தெரிந்தது.
அரசிப்பள்ளியில் மணி அடித்ததும், அவ்வளவுதான் என்று முடித்திருக்கிறார் என்றால் அதைப் பற்றிச் சொல்ல வேறு ஒன்றுமில்லை என்பதாகவோ? தனியார்ப்பள்ளிக்கு நேரெதிராக நடந்தது என்ற ரீதியிலோ? அது ஒரு அனுபவம் என்றால் இதுவும் வேறொரு அனுபவம் இல்லையா? இதுதான் தேவை இல்லையோ? அந்தப் பருவத்தில்.
ராகேஷ் ரகுநாதன் - அவ்வப்போது பார்பப்துண்டு. செய்முறையை விட அவங்க அம்மாவும் அவரும் பேசிக் கொள்வது...சுவாரசியமாக இருக்கும். இதுவரை அவர் முறையில் எதுவும் செய்து பார்த்ததில்லை!
இன்றைய கவிதைகள் அருமை. "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.." என்ற வரிகளை முதல் கவிதை நினைக்க வைக்கிறது.
இரண்டாவது கவிதையும் ரசிக்க வைக்கிறது. வானின் கருமேகங்களும், வெள்ளைப் புறாக்களின் அருகாமையும் அவள் துயர் துடைக்க பாடுபடுகின்றனவோ..? படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால், இன்னும் பல அருமையான கவிதைகள் உருவாக்கும். (எனக்கில்லை..! உங்களைப் போன்ற கவி பாடும் உள்ளங்களுக்கு..) பகிர்வுக்கு மிக்க நன்றி.
அட, உங்களால் முடியாததா? என்னென்னவோ பிரமாதமாக எழுதுகிறீர்கள், வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்.. இதற்கு ஒரு கவிதை நீங்களும் எழுதுங்களேன்... ஒரு முயற்சிதானே?
விடுகதைகளுக்கு பதிலைக் காணோமே. மீன் பிடிக்கக் கூடாது என்னும் போர்டுக்குக் கீழே மீன் கொத்தி மீனை வாயில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது நல்லதொரு நகைச்சுவை. எம்.எஸ். பற்றி எதுவும் சொல்லாமல் போயிடறேன். தி.கீதா சொல்லி இருக்கும் ராகா யாரு? மண்டையை உடைக்குதே?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்தேனா, ஆனா எப்படியோ, .. நெ தமிழனும் ஸ்ரீராமும்... புளொக் என ஒன்றிருப்பதை நினைவுபடுத்தி வர வைத்திட்டினம் இங்கு ஹா ஹா ஹா கீதாவைக் காணமே என யோசித்தேன், நலமாக இருப்பது தெரியுது கொமெண்ட்டில்...
அது செரி:) எந்தாப் பெரிய போஸ்ட் இன்று... ஒண்டொண்டாப் படிக்கிறேன்...
ஓ... யு டியூப் காணொளியில் கொடுத்த கமெண்ட் பற்றிச் சொல்கிறீர்களா? ஒவ்வொரு வியாழனுமே இப்படிதான் தொல்லை செய்கிறேன் அதிரா... இந்த வாரம் கொஞ்சம் கம்மி என்று பெயர்! பொக்கிஷம் கூட இல்லை, பாருங்கள்!
கீரை என்றாலே அவ்ளோ ஆசையா இருக்குது, உங்களுக்கு எப்பவும் நிறையக் கீரை கிடைப்பதால் கொஞ்சம் பழுதானாலே எறிவீங்கள், நாங்கள் அப்படியோ.. இங்கு பாதி அழுகியிருந்தால்கூட வாங்கி வந்து துப்பரவாக்கி பாதியைச் சமைப்போம் ஆனா முழுவதுக்கும் காசு குடுத்துத்தான் வாங்கோணும்... குறையும் சொல்ல முடியாது கீரை வகைகள் இங்கு எடுத்து வரும்போது அழுகிவிடும்தானே.
அது சரி கீரை எப்போ பசுவாக மாறிச்சுதோ:)).. பசு பசு வென இருந்துது என்றீங்க ஹா ஹா ஹா...
நலமா? உங்களை இன்று பார்த்ததில் மிக்க மகிழ்வடைந்தேன். நீங்களும் அனுஷ்காவை பார்க்கும் ஆவலில் இன்று வந்து விட்டீர்கள் போலே...:)) தங்களது வருகைக்கு நன்றி சகோதரி.
இந்தக் கொடிப்பசளிக் கீரை, இங்கும் நல்ல பிரெஸ்சாக் கிடைக்குது தமிழ்க் கடையில, ஆனா அதைப் பார்த்தாலே எனக்குப் பயம் வாங்கியதே இல்லை, காரணம் படு குளிர்த்தன்மையானது, சாப்பிட்டால் இரவில் மூச்சுவிடக் கஸ்டமாகி நெஞ்சடைக்கும்.
ஆனா மனித உடம்பில் கபம் பித்தம் வாதம் என 3 பிரிவு இருக்குதாமெல்லோ.. இதில கப உடம்பிருப்பின் இப்படிக் குளிர் உணவுகள் ஒத்து வராதாம், ஏனைய உடல்நிலை எனில் யூயுபி ஆம்ம் அவர்களுக்கு ஹா ஹா ஹா. அந்தப் பசுவுக்கு குளிர் வந்திடப்போகுதே:).
சென்னையில் ஒரு குட்டி மார்கட் போனோம் காலையில்... ரி நகர் ஏரியாவில், ஆனா அங்கு பெரிசா கீரை வகை கிடைக்கவில்லை ஏமாற்றமாக இருந்துது.
எனக்கு பிடித்த கீரை பசலிக்கீரைதான். டி நகரில் முன்பு பெரிய காய்கறி மார்க்கெட் இருந்தது. பனகல் பார்க் திரும்பும் இடத்தில.. நாடியா, நடிகையர் எல்லாம் கூட வந்து வாங்குவார்கள். இப்போது எடுத்து விட்டார்கள்.
அதே சமய ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்து சென்றிருந்தீர்கள் என்றால் அங்கே ஒரு காய்கறி மார்க்கெட் பார்த்திருக்கலா. A to Z எல்லா கிடைக்கும்!
MS கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவர்கள் பாடுவதைக் கேட்டு இன்புறுவதே அல்லாமல் வேறொன்றும் தேவை இல்லை பராபரமே.
கண்களில் தெரிய்வது பீதியா, ஏக்கமா, துக்கமா, வெறுப்பா ஒன்றுமே புரியவில்லை. மோனா லிசா போன்று ஒரு .....
'காதலியும் கடன்காரனும்' கவிதையை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமம் தான். காண விரும்பும் நபரை நினைத்தால் எதிர்மறையாக காண விரும்பாத நபர தென்படுவார். '
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். (27) நல்வழி
அரசு பள்ளிகளில் மதிய இடைவேளை பற்றி ஒன்றும் கூறாமல் விட்டது ஏனோ? அவர்களுக்கு சமத்துவ உணவு, சத்துணவு., அடக்கத்துடன் தரையில் அமர்ந்து உண்கிறார்கள் என்று முடித்திருக்கலாம்
நேற்று தான் ராகேஷ் அழகர் கோயில் தோசை செய்யும் முறையை யு டியூபில் பார்த்தேன்.
NO FISHING போட்டோ நன்று., King fisher பறவை மல்லையா வை நினைவூட்டியது,
ஹா ஹா ஹா காதலி கடன்காரர்... கவிதை அருமை:)... பணக்கஸ்டத்தில் இருக்கும்போது காதல் எப்படி வரும், மனம் முழுக்க கடன் பற்றிய கவலையில்தானே இருக்கும் என நினைப்பேன்...
இன்னும் அனுக்காவின் பழைய நினைப்பிலேயே வாழ்ந்தால் எப்பூடி?:) இது ஆரம்பப் படமாக்கும்:).. இப்போதைய படம் பார்த்தால்... அனு ஆன்ரி:) ஆக்கும் ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)
கீரை பற்றிய விவரங்கள் நன்றாக இருக்கிறது. இங்கு வெள்ளிக்கிழமை சந்தைக்கு போனால் நல்ல கீரைகள் வாங்கலாம். ஆனால் என்னால் இப்போது போக முடியவில்லை.
போன் செய்தால் காய் கொண்டு வந்து கொடுப்பவரிடம் முதல் நாளே என்ன கீரை வேண்டும் என்று சொல்லி விட்டால் வாங்கி வந்து தருவார்கள். முளைக்கீரை என்று கேட்டேன் அவர்களுக்கு தெரியவில்லை, தண்டு கீரையா என்று கேட்கிறார்கள்.
அரைக்கீரையை கடைய வேண்டும் நன்றாக இருக்கும்.மீதி இருந்தால் புளிக்குழம்பையும் கீரை மசியலையும் கல் சட்டியில் போட்டு சுண்ட வைத்தால் மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
எம்எஸ் அம்மா பற்றிய வாழ்க்கை வரலாறு மனதுக்கு கஷ்டத்தை தருகிறது. அவர்களின் இனிமையான பாடல்களை மட்டும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களின் துன்பான வரலாறு நமக்கு தேவையில்லை என்றே தோன்றுகிறது.
நியூஸ்ரைம் செய்திகளில் 7 மாத குழந்தைக்கு ஏற்பட்டது மற்றும் ஈரானில் வயதானவரை திருமணம் செய்த குழந்தை மீடகப்பட்ட செய்திகள் படித்த போதும் அந்த குழந்தையின் கண்கள் மனதை கனக்க வைக்கிறது. என்ன மனிதர்கள் இவர்கள் ! இல்லை இல்லை மனிதர்கள் இல்லை.
ஒருநாள் முளைக்கீரை, ஒருநாள் அரைக்கீரை, மறுநாள் பசலைக்கீரை என ஒரு வாரம், அடுத்த வாரம் மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரைக், பொன்னாங்கண்ணிக் கீரை என்று வாங்கினேன்.
வெறுப்பேத்தாதீங்க ஸ்ரீராம், இங்கே, நாங்கள் இருக்கும் இடத்தில் பசலை அல்லது பாலக் என்று சொல்லப்படும் கீரையை தவிர வேறெதுவும் கிடைக்காது. சில வேளைகளில் முருங்கை கீரை கிலோ ரூ.600 அல்லது 700 க்கு கிடைக்கும் காம்புடனும் (கிலையுடனும்) இருக்கும் அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டில்.
ஊருக்கு வந்து விடுமுறை முடிந்து திரும்பி வரும்போது கட்டாயம் கொண்டுவரும் பொருட்களுள் - கீரைவகைகளில் , சி. கீரை, அறு(அரை) கீரை, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை. கொண்டுவந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு பொன்னைப்போல இல்லை இல்லை அதற்கும்மேல் சிறுக சிறுக பயன்படுத்துவோம்.
உண்மையிலேயே கேட்க வருத்தமாகத்தான் இருக்கிறது. எதை எதையோ ஏற்றுமதி செய்கிறார்கள். இதை ஏன் செய்வதில்லை. சரி, போகட்டும்.. நீங்கள் ஏன் கீரை விதைகளை அங்கு எடுத்துப்போய் தொட்டியிலோ, தோட்டத்திலோ பயிரிடக்கூடாது?
அப்புறம் எப்படி இருக்கிறீர்கள்? லாங் டைம் நோ ஸீ...!
கதம்பத்தில் இன்றைய மற்ற பகுதிகளும் நன்று. தங்கள் தந்தை காய்கறிகள் குறித்து சொன்னதை ரசித்தேன்.
எம் எஸ் அவர்களைப்பற்றிய செய்தியை தெரிந்து கொண்டேன். தில்லானா மோகனாம்பாள் சினிமா கதை ஏனோ நினைவுக்கு வந்தது.
செய்திகளில் பல மனம கனக்க செய்தது. ஆங்காங்கே படித்து ரசித்ததை படித்து தெரிந்து கொண்டேன்.
இரட்டையர்கள் இரட்டையர்களை மணந்து கொண்டது சரிதான். ஜோடிகளில் மூத்தவரை மணப்பெண்களில் இளையவர் மணக்க வேண்டுமெனவும், அந்த காலத்தில் சொல்வார்கள். என்னவோ அப்படியொரு சாஸ்திரங்கள்...!
அனுஷ்கா பதவிசமாக காத்திருக்கிறார். பானுமதி சகோதரியைத்தான் இன்னமும் காணவில்லை. வந்து விடுவார் என அனுஷ்காவுடன் நானும் நம்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
விடியச் சொல்ல மறந்திட்டனே... இன்றுதான் தெரியும் ஸ்ரீராம் நீங்கள் சென்னைக் காரர் இல்லை என்பது:) ஹா ஹா ஹா தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு கிழக்கால வீடெனச் சொல்லிட்டீங்க:))).. அப்போ கெள அண்ணன் எந்த ஊரோ...
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதலில் கீரை புராணம் நன்றாக உள்ளது மாடு கீரை சாப்பிடும் படங்கள் அருமை. "பாழாய் போகிறது பசு வயிற்றில்" என்ற ஒரு சொல் வழக்கு போல் ("அதுவே நமக்கு மறுபடி பாலாக தந்து விடும் என்பதால் இந்த சொல் வழக்கோ.." என நான் நினைப்பதுண்டு.) . தூக்கி குப்பையில் எறிந்து விடாமல் மாட்டுக்கு தந்தது நல்லதுதான்.
மாதந்தோறும் இந்த அகத்திக்கீரை நாம் சாப்பிட்டால் நல்லது. ஆனால் அதை விட ஒரு மாட்டுக்கு வாங்கித் தந்தால் புண்ணியம் என சொல்வதுண்டு.
இந்த பசலை கீரையும், பாலக் எனப்படும் கீரையும் ஒன்றுதானே..! இது அடிக்கடி வீட்டில் வாங்குகிறோம். (அதுவும் ஆன்லைன் வர்த்தகத்தில் மகன் வரவழைத்து விடுவார். ) இன்னம்ம் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// "பாழாய் போகிறது பசு வயிற்றில்" என்ற ஒரு சொல் வழக்கு போல் //
நீக்குஒருவேளை அது பாலாய் போகிறது பசு வயிற்றில் என்று வரவேண்டுமோ...
அகத்திக் கீரை வீட்டில் சமைப்பது ரொம்ப ரேர். துவாதசி ஸம்ப்ரதாயமெல்லாம் மாமிகள் வைத்துக் கொள்ளவில்லை!
பசலைக்கீரை வேறே, பாலக் வேறே கமலா.
நீக்குஆலு மேதி என வெந்தயக்கீரை போட்டுச் சப்பாத்திக்கு சப்ஜி பண்ணலாம். மேதி பராத்தா பண்ணலாம். தாலி பீத்தில் கூட வெந்தய்க்கீரை போடலாம். சாம்பார் பண்ணினால் அப்படியே காலி ஆயிடும். கடலை மாவில் பஜியா போடும்போது வெந்தய்க்கீரையையும் பொடியாக நறுக்கியோ நருக்காமலோ சேர்த்துப் போடலாம்.
நீக்குஉண்மை கீதா அக்கா. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக அன்று பார்த்து வீட்டில் சப்பாத்தி இருக்காது! ஆனால், இனி தொடர்ந்து கீரை வாங்க முடியும். ஒவ்வொன்றாய் முயற்சிக்க வேண்டியதுதான்.
நீக்குபாஸ்தான் அலுத்துக் கொள்கிறார். இத்தனைக்கும் நறுக்கித் தருவது நான்!
வணக்கம் சகோதரி
நீக்கு/பசலைக்கீரை வேறே, பாலக் வேறே கமலா./
அப்படியா..? நான் இரண்டும் ஒன்றாக இருக்குமோன்னு நினைத்தேன். இங்கு தண்டு கீரை கிடைக்க மாட்டேன் என்கிறது. அதன் இலைகளை தேங்காய் சீரகம் வத்தலோடு அரைத்து கூட்டாக்கி விட்டு, மறுநாள் அதன் தண்டு சாம்பாருக்கு பயன்படுத்துவோம். அங்கு மதுரையில் இது கிடைக்கும்.
பருப்பு கீரை என்ற ஒன்று கூட அங்கு கிடைக்கும். வெறும் வேக வைத்த து. ப போட்டு அதை கடைந்தால் ருசியாக இருக்கும். சில கீரைகள் இங்கு கிடைப்பதில்லை. கிழங்குகளில் பிடி கருணையும் இங்கு கிடைப்பதில்லை. வரத்து இல்லை போலும்..! இல்லை பயன்படுத்துபவர்கள் கம்மியோ என்னவோ....! நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலாக்கா, பசலை வேறு பாலக் வேறு.
நீக்குபசலை கொடி....தரையில் படரும் கொடி, ஏறும் கொடி, என்று எல்லாம் உண்டு. நல்ல டார்க் பச்சையில் இருக்கும் பசலை உண்டு லைட் பச்சை பசலை உண்டு. தண்டும் பெரிசா குண்டா இருக்கும்
பாலக் அப்படி அல்ல......வேரோடு இருக்கும் தரையில் வளர்வது
கீதா
ஸ்ரீராம் இனி வாங்கிச் சாப்பிடுங்க நலல்து. இங்கு கண்டிப்பாக வாரத்தில் 4, 5 நாட்கள் கண்டிப்பாகக் கீரை உண்டு, வேறு காய் செய்திருந்தாலும். கீரை பிசைந்து சாப்பிடுவது போலச் செய்தால் குழம்பு இருக்காது பெரும்பாலும் புளி தவிர்க்கிறேன்
நீக்குகீதா
ஹை, இங்கும் கவரில் விற்கப்படும் காய்கள் ரூ 10 அல்லது 20 க்குள்தான் இருக்கும்.
பதிலளிநீக்குகீரை அடையாளம் கண்டுபிடிக்கலாமே, ஸ்ரீராம். பழகப் பழகத் தெரிந்துவிடும்.
படத்துல வலதுஓரமா இலை தெரியுது பாருங்க அது தண்ணிக் கீரை மாதிரி இருக்கு.
அதுக்கு அப்புறம் இருப்பது பொன்னாங்கண்ணி, அதன் வலப்பக்கம் பாலக், இந்தப் பக்கம் வந்தா அரைக்கீரை, அது தாண்டினா க்ளியரா இல்லை, ஆனா ஒன்று கொஞ்சம் சிவப்பு கலந்து தெரிகிறாது அது ஒரு வேளை சிவப்பு பொன்னாங்கண்ணியோன்னு தோன்றுகிறது. அதுக்குப் பிறகு மணத்தக்காளி, வெந்தயக் கீரை என்று நினைக்கிறேன்
கீதா
இப்படி கவரில் விற்கப்படும் காய்கறிகள் சமயங்களில் மிக நன்றாய் இருக்கின்றன. சமயங்களில் கவுத்து விடுகின்றன! நேற்று கொத்தவரைக்காய் வாங்கி நொந்து போனேன். கொத்தவரை மார்க்கெட்டில் இளசாக கிடைக்கவே கிடைக்காது போல...
நீக்குகீரைகளை நன்றாக அடையாளம் காண்கிறீர்கள்.
கீரைத் தண்டு ஆமாம் திருவனந்தபுரத்தில் நன்றாகக் கிடைத்தது. சென்னையில் நானும் பார்த்ததில்லை. இங்கும்...தண்டு போட்டு சாம்பார்
பதிலளிநீக்குஅப்பா அம்மா விஷயம் நெகிழ்ச்சி மற்றும் சுவாரசியம், ரசித்தேன் அந்த வரிகளை.
கீதா
அது ஒரு அப்பா அம்மா காலம்! கீரைத்தண்டு என்று பேச்சு வந்தாலே எனக்கு அப்பா நினைவு வந்து விடும்! குழந்தைகள் பாதங்களில் சீண்டி அவர் சொல்வது
நீக்கு"கிச்சு கிச்சுடோய்.. கீரைத்தண்டுடோய்.. நட்டு வச்சேண்டோய்... முளை வரல்லடோய் "
கீரைகளை அடையாளம் காண்பது எளிது. கீரைத்தண்டு பெரிதாக நானும் கும்பகோணம், தஞ்சாவூர்ப்பக்கங்களில் தான் பார்த்திருக்கேன். சில தண்டுக்கீரை வகையறாக்கள் சிவப்பாகவும் இருக்கும். மோர்க்கூட்டு, பொரிச்ச குழம்பு பண்ணலாம், சாம்பாரிலும் போடலாம். கீரை/தண்டு இரண்டையுமே நறுக்கிச் சேர்ப்போம். ஆறாம் மாசத்துத் தண்டு என என் மாமியார்/மாமனார் சொல்லுவார்கள்.
நீக்குஇன்று நானே முளைக்கீரையை சரியாக எடுத்தேன்! கீரைக்கார அம்மா 'இன்னும் காணோமே என்று பார்த்தேன்' என்றார்!
நீக்குஅரைக்கீரையில் பொதுவாக மோர்க்கூட்டு செய்வதில்லை ஸ்ரீராம், வெறுமன ப மி, பெருங்காயம் போட்டு மசித்து, கடுகு உ ப, சி மி, தாளித்தாலே ரொம்பச் சுவையாக இருக்கும். தேங்காய் எண்ணை பயன்படுத்தி. மசிக்கும் போது வறுத்துப் பொடித்த உ ப பொ சேர்த்தால் அது சுவையாக இருக்கும்.
பதிலளிநீக்குபடத்தில் உள்ள கீரை, ஆ! பூச்சி ரொம்பவே அரித்திருக்கிறது. ஆனா பாருங்க ஒரு விஷயம் அப்ப நீங்க வாங்கும் இடத்தில் அவங்க கொண்டு வரும் கீரையில் மருந்து தெளிக்கப்படலை! அப்படிச் சந்தோஷப்பட்டுக்கலாம். இது வேளாண்மை செமினாரில் தெரிந்து கொண்ட விஷயம். ஓரிரு இலைகள் அப்படி இருந்தா அதை எடுத்துப் போட்டுவிட்டு சமைக்கலாம் என்றும் சொன்னாங்க.
மாடுகள், தினமும் கிடைக்கும்னு அங்கேயே இருக்கும் போல!!! படங்கள் நல்லாருக்கு.
கீதா
நாங்கள் அன்று அப்படி செய்யவில்லை. சுண்டல் என்பது போல வதக்கச் சொல்கிறீர்கள். அரைக்கீரையில் லேசான கசப்பு இருந்தது.
நீக்குநான் இந்த பூச்சி அரித்த கீரை ஆஸ்தானம் இலலாததால் வேறு கடையில் வாங்கியது.. சொல்லி இருக்கேனே....
ஆமாம், பூச்சி அரிச்சது, எல்லாம் செயற்கை உரம் போடாதது, நல்லது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இல்லை ஸ்ரீராம் சுண்டல் போன்று இல்லை, இன்று கூட அரைக்கீரை மசித்திருந்தேன்.
நீக்குஅடுத்த முறை செய்யறப்ப உங்களுக்குக் காட்டுகிறேன். படம் அனுப்பறேன்
கீதா
சுண்டல் என்று சொல்லாமல் வதக்கல் என்று சொல்லலாம்! அல்லது துவட்டல்.
நீக்குபொன்னாங்கண்ணிக் கீரைப் பொரியல் ரொம்ப நல்லாருக்கும் அதுவும் சி வெ பூ போட்டு ஆஹா. ஆனா ரொம்பத் துளியாகிவிடும்.
பதிலளிநீக்குமுளைக்கீரை/தண்டுக் கீரையைக் கூட இப்படிப் பொரியல் செய்யலாம். நான் சி வெ பெ வெ போட்டும் செய்வேன். அப்புறம் எங்க ஊர்ப்பக்கங்களில் சா(ய்)ச்சப் பொரியல்னு செய்வதுண்டு சாய்ச்சனா ரொம்ப மையா அரைக்காம கொர கொரன்னு தேங்காய் ஜீரகம் சி மி போட்டு உரலில் அல்லது அம்மியில் அப்படித் தண்ணி விடாமல் அரைத்து எடுத்துச் செய்வது. மிக்சியிலும் அப்படி அரைத்துச் செய்யலாம் நல்லாருக்கும்
கீதா
எல்லா கீரையையும் எல்லா விதங்களிலும் செய்யலாம். ஆனால் நம் வீட்டில் ஒன்று பழகி விட்டால் அதுவேதான் மறுபடி மறுபடி வரும்! அதைத்தான் நான் அடிக்கடி சொல்வேன். இந்த முறை இப்படி என்றால் மறுமுறை அதையே போட்டு வேறு முறையில் செய்ய வேண்டும் என்பேன்,
நீக்கு1 . பல்லாங்குழி!!!! - இது ஒரு வீடியோவில் தெரிந்து கொண்டது
பதிலளிநீக்கு2, வாழைப்பூ? இதுவும் ஸ்கூல் டைம். 3 கதவு? இது ஸ்கூல் டைம்ல விளையாடியிருக்கோம்
6, சட்டை? இதுவும் ஸ்கூல் டைம்
கடைசி - தண்ணி? ஆனா அது பொருந்துதான்னு தெரியலையே
கீதா
நடுவில் ஒன்றிரண்டை விட்டுட்டீங்களோ... ஆனால் சொன்ன வரை சரியா சொல்லி இருக்கீங்க..
நீக்குவிடை அதில் ஹைலைட் பண்ணினா தெரியுதுன்றது பின்னாடி தெரிந்தது. அதைச் சொல்ல முடியலை நேற்று. நாளை மதியம் வரை கொஞ்சம் பிசி
நீக்குகீதா
3-4 வருஷம் மணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.//
பதிலளிநீக்குஓ அப்பவே live in together!
நான் ஏதாச்சும் எம் எஸ் விஷயம் பற்றிச் சொல்லப் போனால், அப்புறம் என்னையும் வேறொருவரின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்! எனவே அந்த விஷயத்தைத் தொடாமல் செல்கிறேன்.
அவருக்கு நல்லதே நடந்திருக்கிறது! எனலாம்.
கீதா
எம் எஸ் அவருடைய வாழ்க்கையை அவர் விரும்பியவாறு வாழ்ந்தாரா என்பது அவர் உள்மனதிற்குத்தான் தெரியும். நமக்கு அவர் நிறைவான நாம் பொறாமைப்படும்படியான நல்ல வாழ்க்கையை பேரும் புகழுமாக வாழ்ந்திருக்கிறார் என்றே தோன்றும்
நீக்குஹப்பா! அண்ணே வந்துட்டீங்க....எனக்கும் இதே கருத்துதான். நான் சொன்னா, அப்புறம் (ராகா என்னைத் திட்டுவாங்களோ!!!!!! ஹிஹிஹி) தப்பாகிடுமோன்னு பேசாமல் போய்விட்டேன்.
நீக்குஅதுவுமில்லாம, மேலே பதிவில் சொன்ன கன்டென்டில், அவர் விரும்பினார் இந்த வாழ்க்கையைன்னு...வேற சொல்லிருக்காங்க.
இன்னொன்றும் நான் ஸ்ட்ராங்காகச் சொல்வேன் ஆனா கண்டெனக் குரல்கள் எழலாம்.....
கீதா
கருத்துகள் என்னென்ன வருகின்றன என்று பார்க்க ஆவல்கொண்டே இதைப் பகிர்ந்தேன்!
நீக்குசஞ்சய் தத் - வேண்டாம் என்று சொன்னது நல்ல விஷயம்
பதிலளிநீக்குஇங்கும் சில தியேட்டர்கள் இல்லை ஆனால் அந்த பஸ் ஸ்டாப் இன்னும் அதே பெயரில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போபால் - நீதி இடிக்கிறதே. குடும்ப உறவுகளுக்கு எல்லாம் சட்டத்தில் வழி தேட முடியாது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உணர்வுகளுக்குச் சட்டத்தில் இடமில்லை.
ஏ ஐ - அச்சம்தான். எனவே பசங்க இனி அந்த ஏ ஐ யை மிஞ்சும் வகையில் திறமையுடன் இருக்கணும் அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போன்று...எப்படிப் பணத்தை நம்மை ஆளவிடாமல் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டுமோ அப்படி...
அந்தச் சிறுமிக்குப் பாராட்டுகள். எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் பெற்றோர் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதே சமயத்தில் ஆண் குழந்தைகளுக்கும் பெண்குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும் அவர்களை எப்படியான பார்வையில் நடத்த வேண்டும் என்பதை நல்லவிதத்தில் சொல்லிக்க் கொடுத்து மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்,
கீதா
__/\__
நீக்குகொல்கத்தா - போக்சோ - தூக்குத் தண்டனை - சூப்பர் தண்டனை. இதை எல்லா இடங்களிலும் செயல்படுத்த வேண்டும் அப்பதான் பயம் வரும்....அது சரிங்க, தமிழ்நாடு அண்ணா யுனிவேர்சிட்டி கேஸ் என்னாச்சுங்கோ?.....அதுவும் நேரடியாகவே குற்றவாளி தெரிஞ்சாச்சு தூ த கொடுக்காம.....
பதிலளிநீக்குகீதா
அண்ணா யூனிவர்சிட்டி மட்டுமா...
நீக்குஅந்தக் கண்கள் சொல்லும் உணர்வுகள் பல! நல்லகாலம் மீட்கப்பட்டாள்.
பதிலளிநீக்குஇதை ஒட்டி நான் ஒரு கதை எழுதினேன்..இங்கு கொரோனா சமயத்தில் வடகர்நாடகாவில் சின்ன பெண் குழந்தைகள் விற்கப்பட்டனர் அதை பேஸ் செய்து.....மின் நிலாவில்....
கீதா
அந்தக் கண்களை பார்த்து கதையும் எழுதலாம், கவிதையும் எழுதலாம்!
நீக்குகாதலி கடன் காரன்!!! பாருங்க அவஸ்தை. ரெண்டுபேருகிட்டயும் கடன் தான்!!!! கவிதையை ரசித்தேன் சிரித்தேன்!
பதிலளிநீக்குஅடுத்த கவிதையும் சூப்பர்.
முதல்ல வான் மழையா இருக்குமோன்னு பார்த்தேன்...
கீதா
1) ஹிஹிஹிஹி... 2) நன்றி.
நீக்குஎம் ஜி ஆரை அறிமுகப் படுத்தியவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்பது வாசித்திருக்கிறேன். இந்தப் புகைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கிய படங்கள் பற்றி இணையத்தில் தேடிய போது இந்த விஷயம் தெரிந்தது.
பதிலளிநீக்குகீதா
மேதைகள். ஆரம்ப கால அடிகோலிகள்.
நீக்குஎன் பெயர் ராமசேஷன் - வாசிக்க நினைத்திருக்கும் நாவல். ஏகாந்தன் அண்ணா ஆதவன் பற்றி பதிவு எழுத போது குறிப்பிட்டிருந்தார் என்று நினைவு.
பதிலளிநீக்குகீதா
நானும் பல வருஷங்களுக்கு முன்னால் படித்திருக்கிறேன். நினைவில்லை.
நீக்குஅரசிப்பள்ளியில் மணி அடித்ததும், அவ்வளவுதான் என்று முடித்திருக்கிறார் என்றால் அதைப் பற்றிச் சொல்ல வேறு ஒன்றுமில்லை என்பதாகவோ? தனியார்ப்பள்ளிக்கு நேரெதிராக நடந்தது என்ற ரீதியிலோ? அது ஒரு அனுபவம் என்றால் இதுவும் வேறொரு அனுபவம் இல்லையா? இதுதான் தேவை இல்லையோ? அந்தப் பருவத்தில்.
பதிலளிநீக்குகீதா
உங்கள் கருத்து என்ன என்று சரியாய் நேரடியாய் சொல்லவில்லை நீங்கள்.
நீக்குராகேஷ் ரகுநாதன் - அவ்வப்போது பார்பப்துண்டு. செய்முறையை விட அவங்க அம்மாவும் அவரும் பேசிக் கொள்வது...சுவாரசியமாக இருக்கும். இதுவரை அவர் முறையில் எதுவும் செய்து பார்த்ததில்லை!
பதிலளிநீக்குகீதா
ஆமாம், செய்து பார்த்ததில்லை. ஆனால் சுவாரஸ்யமாய் இருக்கும். இங்கு கும்பகோணம் ரசம் பற்றி சொல்லி இருந்தார்.
நீக்குநோ ஃபிஷ்ஷிங்க்!!!! ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன். நல்ல கற்பனை!
பதிலளிநீக்குஇரட்டையர் இரட்டையரை மணந்தது இதற்கு முன்னும் நடந்ததுண்டே. இதைப் பார்த்ததும் என்னென்னவோ எழுகின்றன...
அது சரி, என்னைப் பார்க்கணும்னு சொன்னாங்களாமா? பானுக்கா! வருவாங்களா? கரெக்ட் டைமுக்கு வருவாங்களா? இல்லை லேட்டாக்கிடுவாங்களா? ஏன்னா எனக்கு வேற அப்பாயின்ட்மென்ட் இருக்கு. ஷூட்டிங்க் போணும், எதுக்கும் ரிமைன்ட் பண்ணிடுங்க, ஸ்ரீராம்.
கீதா
ஹா.. ஹா..ஹா... அனுஷ் காத்திருப்பார் கீதா.
நீக்குஎன்ன, இன்றைக்கு JKC ஸார் கமெண்ட் இன்னும் வரவில்லை? இந்நேரம் வந்திருக்க வேண்டுமே....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கவிதைகள் அருமை. "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.." என்ற வரிகளை முதல் கவிதை நினைக்க வைக்கிறது.
இரண்டாவது கவிதையும் ரசிக்க வைக்கிறது. வானின் கருமேகங்களும், வெள்ளைப் புறாக்களின் அருகாமையும் அவள் துயர் துடைக்க பாடுபடுகின்றனவோ..? படத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தால், இன்னும் பல அருமையான கவிதைகள் உருவாக்கும். (எனக்கில்லை..! உங்களைப் போன்ற கவி பாடும் உள்ளங்களுக்கு..) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட, உங்களால் முடியாததா? என்னென்னவோ பிரமாதமாக எழுதுகிறீர்கள், வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்.. இதற்கு ஒரு கவிதை நீங்களும் எழுதுங்களேன்... ஒரு முயற்சிதானே?
நீக்குஇந்த வார அரட்டை நன்று. அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇணைய இணைப்பு சரியில்லை. பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குOK...
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குவிடுகதைகளுக்கு பதிலைக் காணோமே. மீன் பிடிக்கக் கூடாது என்னும் போர்டுக்குக் கீழே மீன் கொத்தி மீனை வாயில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது நல்லதொரு நகைச்சுவை. எம்.எஸ். பற்றி எதுவும் சொல்லாமல் போயிடறேன். தி.கீதா சொல்லி இருக்கும் ராகா யாரு? மண்டையை உடைக்குதே?
பதிலளிநீக்குவிடுகதைகளுக்கு பதில் அங்கேயே இருக்கிறது கீதா அக்கா. விடுகதைக்கான முன்னுரையில் விடைகள் கடைசியில் என்பதைத் தொடர்ந்தும்,
நீக்குஒவ்வொரு விடுகதைக்கு கீழும் 'இது என்ன?' என்பதைத் தொடர்ந்தும் விடைகள் இருக்கின்றன. ஷிஃப்ட் அமுக்கிக் கொண்டு கர்சரை இழுக்கவும்!
தி கீதா சொல்லியிருக்கும் ரா கா = ரஞ்சனி காயத்ரி. சமீபத்து மியூசிக் அகாடமி controversies அடிப்படையில். (TMK Vs RAGA)
நீக்குஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்தேனா, ஆனா எப்படியோ, .. நெ தமிழனும் ஸ்ரீராமும்... புளொக் என ஒன்றிருப்பதை நினைவுபடுத்தி வர வைத்திட்டினம் இங்கு ஹா ஹா ஹா கீதாவைக் காணமே என யோசித்தேன், நலமாக இருப்பது தெரியுது கொமெண்ட்டில்...
பதிலளிநீக்குஅது செரி:) எந்தாப் பெரிய போஸ்ட் இன்று... ஒண்டொண்டாப் படிக்கிறேன்...
ஓ... யு டியூப் காணொளியில் கொடுத்த கமெண்ட் பற்றிச் சொல்கிறீர்களா? ஒவ்வொரு வியாழனுமே இப்படிதான் தொல்லை செய்கிறேன் அதிரா... இந்த வாரம் கொஞ்சம் கம்மி என்று பெயர்! பொக்கிஷம் கூட இல்லை, பாருங்கள்!
நீக்குகீரை என்றாலே அவ்ளோ ஆசையா இருக்குது, உங்களுக்கு எப்பவும் நிறையக் கீரை கிடைப்பதால் கொஞ்சம் பழுதானாலே எறிவீங்கள், நாங்கள் அப்படியோ.. இங்கு பாதி அழுகியிருந்தால்கூட வாங்கி வந்து துப்பரவாக்கி பாதியைச் சமைப்போம் ஆனா முழுவதுக்கும் காசு குடுத்துத்தான் வாங்கோணும்... குறையும் சொல்ல முடியாது கீரை வகைகள் இங்கு எடுத்து வரும்போது அழுகிவிடும்தானே.
பதிலளிநீக்குஅது சரி கீரை எப்போ பசுவாக மாறிச்சுதோ:)).. பசு பசு வென இருந்துது என்றீங்க ஹா ஹா ஹா...
அச்சோ... அவ்வளவு கஷ்டமா கீரை கிடைப்பது! கீரை பசுமையாக இருப்பதை பசுபசு என்று சொல்கிறேன்!
நீக்குவணக்கம் அதிரா சகோதரி
நீக்குநலமா? உங்களை இன்று பார்த்ததில் மிக்க மகிழ்வடைந்தேன். நீங்களும் அனுஷ்காவை பார்க்கும் ஆவலில் இன்று வந்து விட்டீர்கள் போலே...:)) தங்களது வருகைக்கு நன்றி சகோதரி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்
ஆஆ கமலாக்கா மிக்க நன்றி மிக்க நன்றி, எப்படியும் வரப் பார்க்கிறேன் இடைக்கிடையாவது இங்கு.
நீக்கு11 மணி அளவில் ஊட்டம் போட்டிருந்தேன் காணவில்லை.
பதிலளிநீக்கு5) தையல் நூல்.
கீரை புராணம் நன்று. நாம்
என்ன கீரை என இல்லை எதுவும் சமைப்போம் என்ற ரகம்.
எம்.எஸ் வரலாறு கண்டோம்.
நியூஸ்ரைம் மனைவியை கொன்ற கணவன் , கண் சிறுமி மனத்தை நெருடியது.
கவிதை நன்று.
இறுதியில் அனுஷ் வந்துவிட்டார் :)
11 மணி கமெண்ட் என்று ஒன்றும் இல்லை.
நீக்குஸ்பாமில் தேடிவிட்டேன்.
விடைகள் சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்.
நன்றி மாதேவி.
நன்றி.
நீக்குபோனில் போடுவதில் தவறி இருக்கலாம்.
__/\__
நீக்குஒன்று தெரிந்து கொண்டேன். நீங்கள் இங்கு வழங்கப்படும் மறுமொழிகளையும் படிக்கிறீர்கள் என்று!
நேரம் கிடைக்கும்போது உங்கள் பங்களிப்பு எதையாவது எங்களுக்கு அனுப்பலாமே.. கதை, நான் படிச்ச கதை, சமையல்...
இந்தக் கொடிப்பசளிக் கீரை, இங்கும் நல்ல பிரெஸ்சாக் கிடைக்குது தமிழ்க் கடையில, ஆனா அதைப் பார்த்தாலே எனக்குப் பயம் வாங்கியதே இல்லை, காரணம் படு குளிர்த்தன்மையானது, சாப்பிட்டால் இரவில் மூச்சுவிடக் கஸ்டமாகி நெஞ்சடைக்கும்.
பதிலளிநீக்குஆனா மனித உடம்பில் கபம் பித்தம் வாதம் என 3 பிரிவு இருக்குதாமெல்லோ.. இதில கப உடம்பிருப்பின் இப்படிக் குளிர் உணவுகள் ஒத்து வராதாம், ஏனைய உடல்நிலை எனில் யூயுபி ஆம்ம் அவர்களுக்கு ஹா ஹா ஹா. அந்தப் பசுவுக்கு குளிர் வந்திடப்போகுதே:).
சென்னையில் ஒரு குட்டி மார்கட் போனோம் காலையில்... ரி நகர் ஏரியாவில், ஆனா அங்கு பெரிசா கீரை வகை கிடைக்கவில்லை ஏமாற்றமாக இருந்துது.
எனக்கு பிடித்த கீரை பசலிக்கீரைதான். டி நகரில் முன்பு பெரிய காய்கறி மார்க்கெட் இருந்தது. பனகல் பார்க் திரும்பும் இடத்தில.. நாடியா, நடிகையர் எல்லாம் கூட வந்து வாங்குவார்கள். இப்போது எடுத்து விட்டார்கள்.
நீக்குஅதே சமய ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்து சென்றிருந்தீர்கள் என்றால் அங்கே ஒரு காய்கறி மார்க்கெட் பார்த்திருக்கலா. A to Z எல்லா கிடைக்கும்!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். ஸ்ரீராமுக்கு புல்லும் கீரையும் கட்டுரை எழுத உதவும். கட்டுரை நன்று.
பதிலளிநீக்குவிடுகதைகள் ஒன்றுக்கும் விடை தெரியவில்லை.பின்னர் ஆலோசிக்கிறேன்.
MS கதை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவர்கள் பாடுவதைக் கேட்டு இன்புறுவதே அல்லாமல் வேறொன்றும் தேவை இல்லை
பராபரமே.
கண்களில் தெரிய்வது பீதியா, ஏக்கமா, துக்கமா, வெறுப்பா ஒன்றுமே புரியவில்லை. மோனா லிசா போன்று ஒரு .....
'காதலியும் கடன்காரனும்' கவிதையை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமம் தான். காண விரும்பும் நபரை நினைத்தால் எதிர்மறையாக காண விரும்பாத நபர தென்படுவார். '
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல். (27) நல்வழி
அரசு பள்ளிகளில் மதிய இடைவேளை பற்றி ஒன்றும் கூறாமல் விட்டது ஏனோ? அவர்களுக்கு சமத்துவ உணவு, சத்துணவு., அடக்கத்துடன் தரையில் அமர்ந்து உண்கிறார்கள் என்று முடித்திருக்கலாம்
நேற்று தான் ராகேஷ் அழகர் கோயில் தோசை செய்யும் முறையை யு டியூபில் பார்த்தேன்.
NO FISHING போட்டோ நன்று., King fisher பறவை மல்லையா வை நினைவூட்டியது,
பொக்கிஷம் அனுஸ்கா வா?
Jayakumar
நன்றி JKC ஸார்... புல்லுக்கட்டு கட்டுரை ரசிக்கிறா மாதிரிதான் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்று புரிந்து கொள்கிறேன்!
நீக்குவிடுகதைக்கு விடை அங்கேயே இருக்கிறதே. அதைப் பார்க்கும் வழியை மேலே சொல்லி இருக்கிறேன்.
MS பற்றி நீங்கள் சொல்லி இருப்பதை ஆமோதிக்கிறேன்..
கவிதைக்கு பொருத்தமாக நல்வழிப்பாடலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.
நான் அரசுப்பள்ளிக்கு ஒட்டு போட்டேன். கேஜிஜி தனியார் பள்ளிக்கு வோட்டு போட்டிருந்தார்!
ஹிஹிஹி ஆமாம்... அனுஷ்கா பொக்கிஷம்தான்.
ஹா ஹா ஹா காதலி கடன்காரர்... கவிதை அருமை:)... பணக்கஸ்டத்தில் இருக்கும்போது காதல் எப்படி வரும், மனம் முழுக்க கடன் பற்றிய கவலையில்தானே இருக்கும் என நினைப்பேன்...
பதிலளிநீக்குஎப்போதோ வாங்கிய கடனாயிருக்கலாமே...
நீக்குஇன்னும் அனுக்காவின் பழைய நினைப்பிலேயே வாழ்ந்தால் எப்பூடி?:) இது ஆரம்பப் படமாக்கும்:).. இப்போதைய படம் பார்த்தால்... அனு ஆன்ரி:) ஆக்கும் ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)
பதிலளிநீக்குசில நினைவுகளை கலைத்துக் கொள்ள விருப்பமில்லை! காணக் கிடைக்காத தெய்வீக அழகு!! நினைவுகள் இனிமையானவை.
நீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம், எப்பூடியெல்லாம் ஜமாளிக்கப் பழகிவிட்டீங்கள்.. இதை அண்ணியின் கவனத்துக்கு விடுகிறேன்..:) (நினைவுகள் இனிமையானவையாமே கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹையோ என் செக்:)கும் இங்கின இல்லாமல் போயிட்டாவே இப்போ:))
நீக்கு'செக்.' எப்படி இருக்கிறார்? அவர் மகள் படிப்பை முடித்திருப்பாரே....
நீக்குவிஸ்தாரமான பதிவு...
பதிலளிநீக்குபடித்து முடிக்க முடியவில்லை.
சிறப்பு..
வர வர செல்வாண்ணா எஸ்கேப் ஆகிக் கொண்டே இருக்கிறீர்கள்...
நீக்குகீரை பற்றிய தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குகீரை பற்றிய விவரங்கள் நன்றாக இருக்கிறது. இங்கு வெள்ளிக்கிழமை சந்தைக்கு போனால் நல்ல கீரைகள் வாங்கலாம்.
பதிலளிநீக்குஆனால் என்னால் இப்போது போக முடியவில்லை.
போன் செய்தால் காய் கொண்டு வந்து கொடுப்பவரிடம் முதல் நாளே என்ன கீரை வேண்டும் என்று சொல்லி விட்டால் வாங்கி வந்து தருவார்கள். முளைக்கீரை என்று கேட்டேன் அவர்களுக்கு தெரியவில்லை, தண்டு கீரையா என்று கேட்கிறார்கள்.
அரைக்கீரையை கடைய வேண்டும் நன்றாக இருக்கும்.மீதி இருந்தால் புளிக்குழம்பையும் கீரை மசியலையும் கல் சட்டியில் போட்டு சுண்ட வைத்தால் மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
தண்டு கீரைதானே இளமையில் (!) முளைக்கீரை?
நீக்குகீரையையும், காரக் குழம்பையும் எப்போதுமே பாஸ் சேர்த்துப் போட்டு மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்வார்.
ஆமாம் அப்படித்தான் நினைக்கிறேன்.
நீக்குஇளங்கீரை என்று சொன்னால் புரியுமோ?
இருக்கலாம். கீரை என்றாலே முளைக்கீரையைதான் குறிக்குமோ என்னவோ...
நீக்கு//"ஹேமா... கத்தரிக்காய்னு கூப்பிடு.. 'ஓவ்' னு கேட்கும். வெண்டைக்காய்னு கூப்பிடு.. ஓஓய்னு கேட்கும்" என்பார். அம்மாவும் அவரைக் குஷிப்படுத்த காய் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார். அப்பா குரலை மாற்றி 'ஓவ்' என்பார்! //
பதிலளிநீக்குஅப்பா, அம்மா பற்றிய நினைவுகள் பகிர்வு அருமை.
காய்கறி பற்றி பேசினால் இதெல்லாம் நினைக்கவும் வந்து விடும். அப்பாவின் அந்த காய்கறி வாங்கும் பழக்கம்தான் என்னிடமும் இருக்கிறது என்று நினைக்கிறேன்!
நீக்குஎம்எஸ் அம்மா பற்றிய வாழ்க்கை வரலாறு மனதுக்கு கஷ்டத்தை தருகிறது. அவர்களின் இனிமையான பாடல்களை மட்டும் கேட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களின் துன்பான வரலாறு நமக்கு தேவையில்லை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஉண்மைதான். அக்பர் அவர் வரலாற்றை எழுதி இருப்பதை சொல்கிறார் RV.
நீக்குநியூஸ்ரைம் செய்திகளில் 7 மாத குழந்தைக்கு ஏற்பட்டது மற்றும்
பதிலளிநீக்குஈரானில் வயதானவரை திருமணம் செய்த குழந்தை மீடகப்பட்ட செய்திகள் படித்த போதும் அந்த குழந்தையின் கண்கள் மனதை கனக்க வைக்கிறது. என்ன மனிதர்கள் இவர்கள் ! இல்லை இல்லை மனிதர்கள் இல்லை.
மனிதர்கள் மிருகங்களாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
நீக்குமிருகங்கள் கூட உயர்வானது அதை விட மோசமானவர்கள்
நீக்குஉண்மை.
நீக்கு"கிச்சு கிச்சுடோய்.. கீரைத்தண்டுடோய்.. நட்டு வச்சேண்டோய்... முளை வரல்லடோய் "//
பதிலளிநீக்குஅப்பாவின் பாட்டு நன்றாக இருக்கிறது.
அதை அவர் ஒரு ராகமாக பாடுவார். அவர் குரலே மனதில் ஒலிக்கிறது!
நீக்குஉங்கள் கவிதைகள், இரட்டையர் திருமண காணொளி, அனுவின் படம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஒருநாள் முளைக்கீரை, ஒருநாள் அரைக்கீரை, மறுநாள் பசலைக்கீரை என ஒரு வாரம், அடுத்த வாரம் மணத்தக்காளி கீரை, வெந்தயக்கீரைக், பொன்னாங்கண்ணிக் கீரை என்று வாங்கினேன்.
பதிலளிநீக்குவெறுப்பேத்தாதீங்க ஸ்ரீராம், இங்கே, நாங்கள் இருக்கும் இடத்தில் பசலை அல்லது பாலக் என்று சொல்லப்படும் கீரையை தவிர வேறெதுவும் கிடைக்காது. சில வேளைகளில் முருங்கை கீரை கிலோ ரூ.600 அல்லது 700 க்கு கிடைக்கும் காம்புடனும் (கிலையுடனும்) இருக்கும் அந்த பிளாஸ்டிக் பாக்கெட்டில்.
ஊருக்கு வந்து விடுமுறை முடிந்து திரும்பி வரும்போது கட்டாயம் கொண்டுவரும் பொருட்களுள் - கீரைவகைகளில் , சி. கீரை, அறு(அரை) கீரை, முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை. கொண்டுவந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு பொன்னைப்போல இல்லை இல்லை அதற்கும்மேல் சிறுக சிறுக பயன்படுத்துவோம்.
கொடுத்து வைத்தவர்கள்.
உண்மையிலேயே கேட்க வருத்தமாகத்தான் இருக்கிறது. எதை எதையோ ஏற்றுமதி செய்கிறார்கள். இதை ஏன் செய்வதில்லை. சரி, போகட்டும்.. நீங்கள் ஏன் கீரை விதைகளை அங்கு எடுத்துப்போய் தொட்டியிலோ, தோட்டத்திலோ பயிரிடக்கூடாது?
நீக்குஅப்புறம் எப்படி இருக்கிறீர்கள்? லாங் டைம் நோ ஸீ...!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகதம்பத்தில் இன்றைய மற்ற பகுதிகளும் நன்று. தங்கள் தந்தை காய்கறிகள் குறித்து சொன்னதை ரசித்தேன்.
எம் எஸ் அவர்களைப்பற்றிய செய்தியை தெரிந்து கொண்டேன். தில்லானா மோகனாம்பாள் சினிமா கதை ஏனோ நினைவுக்கு வந்தது.
செய்திகளில் பல மனம கனக்க செய்தது. ஆங்காங்கே படித்து ரசித்ததை படித்து தெரிந்து கொண்டேன்.
இரட்டையர்கள் இரட்டையர்களை மணந்து கொண்டது சரிதான். ஜோடிகளில் மூத்தவரை மணப்பெண்களில் இளையவர் மணக்க வேண்டுமெனவும், அந்த காலத்தில் சொல்வார்கள். என்னவோ அப்படியொரு சாஸ்திரங்கள்...!
அனுஷ்கா பதவிசமாக காத்திருக்கிறார். பானுமதி சகோதரியைத்தான் இன்னமும் காணவில்லை. வந்து விடுவார் என அனுஷ்காவுடன் நானும் நம்புகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவிடுகதையில் 3 கதவு.. 1 வானத்தின் நட்சத்திரங்களா? பாக்கியை படித்து யோசிக்க வேண்டும். அது சரி...! விடைகள் எங்கே உள்ளது.? நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விடுகதைகளுக்கு பதில் அங்கேயே இருக்கிறது அக்கா. விடுகதைக்கான முன்னுரையில் விடைகள் கடைசியில் என்பதைத் தொடர்ந்தும்,
நீக்குஒவ்வொரு விடுகதைக்கு கீழும் 'இது என்ன?' என்பதைத் தொடர்ந்தும் விடைகள் இருக்கின்றன. ஷிஃப்ட் அமுக்கிக் கொண்டு கர்சரை இழுக்கவும்!
விடியச் சொல்ல மறந்திட்டனே... இன்றுதான் தெரியும் ஸ்ரீராம் நீங்கள் சென்னைக் காரர் இல்லை என்பது:) ஹா ஹா ஹா தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு கிழக்கால வீடெனச் சொல்லிட்டீங்க:))).. அப்போ கெள அண்ணன் எந்த ஊரோ...
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் சென்னையில்தான் இருக்கிறேன். அடிப்படையில் தஞ்சாவூர்க்காரன், அப்புறம் மதுரைக்காரனும் கூட!
நீக்குகெள அண்ணன், நெல்லை, கீதா ரெங்கன், கமலா அக்கா ராமலக்ஷ்மி எல்லோரும் பெங்களுருவில் இருக்கிறார்கள்.
நீக்கு