புதன், 5 பிப்ரவரி, 2025

மாதம் ஒரு பரிசுப் போட்டி.

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

கங்கையில் முழுகி எழுந்தால் செய்த பாபங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் எனும்போது கும்பமேளா என்ற சிறப்பு குளியலின் நோக்கம் என்ன?

எல்லாவற்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. தேவலோகத்தில் இருந்து வந்த அமுத கலசம் கீழே விழுந்து சிதறிய போது அமுதத் துளிகள் எங்கெங்கெல்லாம் விழுந்தன என்பதை வைத்து புனித நீர் ஸ்தலம் என்று கொண்டாடுகிறார்கள். இதற்கு மேல் இதை ஆராய்ச்சி செய்வது அசாத்யம் மட்டுமல்ல அநாவசியம் கூட .‌

பக்தி உணர்ச்சியை வளர்க்கவும்,  மக்கள் பயணம் செய்து எல்லா பிரதேசங்களிலும் வணிகம் செழிக்கவும்,  ஆன்மீகம் தழைக்கவும் இந்த மாதிரி எல்லாம் நிர்ணயம் செய்து வைத்திருக்கிறதாக நான் நினைக்கிறேன்.

மேலதிக தகவல்கள் : 

சூரியன் குரு சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது .‌ இதே அடிப்படையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது கும்பகோணத்தில் கூட மகா மகம் வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மாசி மகம் என்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மகம் என்றும் சொல்வார்கள். 

இது போன்ற நம்பிக்கைகள் என்ன அடிப்படையில் ஏன் ஏற்பட்டன என்று நாம் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு இவை மிகப் பழைய காலத்திலிருந்தே அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

கிரகங்களின் அமைப்பை வைத்து நல்லது கெட்டது நடக்கும் என்று மக்கள் பலமாக நம்பியதால் ஒவ்வொரு கிரக அமைப்புக்கும் ஒரு விசேஷம் கற்பித்தது நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

இந்த புண்ணிய ஸ்நானங்களால் பலன் உண்டா இல்லையா என்பதை எந்த அடிப்படையிலும் யாரும் இப்படியோ அப்படியோ விவாதிக்க முடியாது. நம்பிக்கையின் பாற்பட்ட விஷயங்களை அறிவியல் கொண்டு அளப்பது துர்லபம். 

குளித்தால் பாவம் போகுமா தெரியாது. ஆனால் அழுக்கு நீங்கும்.  இப்படிச்  சொல்வது கூட இந்த மாதிரி புண்ணியக் குளியல்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் மகாமக குளத்து நீர் இந்த விழா சமயம் மிகவும் அழுக்காக இருக்கும் என்பதால் உடம்பு சுத்தமாவது கூட சாத்தியம் இல்லைதான்.

தமிழ் நாட்டில் கும்பகோணத்தில் மாத்திரம் மகாமகம் கொண்டாடப்படுகிறது, அதுவும் குளத்தில், என் அதை ஆற்றில் (காவேரி) வைத்துக்கொள்ளவில்லை?

அமுத கலசம் உருண்டு வந்து கீழே விழுந்து அமுதம் சிந்திய இடம் என்று மகாமக குளத்தைச் சொல்கிறார்கள்.‌ அதனால்தான் ஓடும் நதிநீரை விட்டு தேங்கி நிற்கும் குளத்து நீரை விசேஷமாகச் சொல்கிறார்கள்.

கே. சக்ரபாணி சென்னை 28

1.முதலில்  தங்கம் வாங்க அட்சயதிருதியை என்றார்கள். பின்  ரம்பா திருதியை என்றார்கள்   இப்போது  வசந்த பஞ்சமி  என்கிறார்கள்.  அடுத்த வருஷம்.  " ராவண தசமி " என்று  செல்வார்கள்  போலிருக்கிறதே! 

ஏதோ தங்கம் என்று ஒரு நல்ல முதலீட்டைச் சொல்கிறார்களே என்ற சந்தோஷப்பட வேண்டும். இதே " பயணம் போக வேண்டும்."   " "அன்னதானம் செய்ய வேண்டும் " என்றெல்லாம் சொல்லியிருந்தால் எப்படி இருக்கும் ?

& இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவர், அ_திரிதியைக்கு உப்பும் மஞ்சள் பொடியும் வாங்கினால் போதும் என்றார். அதனால் அ தி நாளில் உப்பு & மஞ்சள் பொடி மட்டுமே வாங்குகிறேன். ஒவ்வொரு நாளும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது! 

2.  சில பேர்கள்  'நான் கனவில் கூட  நினைத்துப்பார்க்கவில்லை இப்படி. நடக்கும் என்று' என்றெல்லாம்  சொல்கிறார்களே  அப்போ கணவில் பார்த்தால்  நடக்கும் என்று அர்த்தமா  நடக்காது என்று. அர்த்தமா? 

# " கனவில் கூட நடக்காது என்று நினைத்திருந்தேன் " என்பதாகக் கொள்ள வேண்டும். 

= = = = = = = = = = 

KGG பக்கம் : 

பாண்டிச்சேரியில் எடுத்த மேலும் சில படங்கள்:

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு பைனாகுலர் லென்ஸ் அருகே மொபைல் காமிரா வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று. 


பிறகு அதே மொபைலில் ஜும் பண்ணிப் பார்த்தாலும், கிட்டத்தட்ட படம் இதே போன்றுதான் வந்தது! 

எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் சில பூச்செடிகளை படம் எடுப்பது என்னுடைய வழக்கம். 









சரி, இப்போதைக்கு இதை இங்கே நிறுத்திவிவிட்டு, வேறு ஒரு முக்கிய அறிவிப்பை செய்கிறேன்! 

= = = = = = = = = = = = =

மாதா மாதம் ஒரு பரிசுப் போட்டி வைப்பது என்றும், ஒவ்வொரு மாதமும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு அளிப்பது என்றும் ஒரு திடீர் யோசனை வந்தது. 

போட்டிகள் பலவிதமாக இருக்கும். 

என்ன போட்டி என்பது ஒவ்வொரு மாதமும் முதல் புதன் கிழமை அறிவிக்கப்படும். 

அதே மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை மாலை 6 மணிக்குள், போட்டிக்கான உங்கள் பதிவுகள்  எங்களுக்கு வந்து சேர்ந்துவிடவேண்டும். 

மாதத்தின் நான்காவது புதன் கிழமைப் பதிவில், பரிசு பெறுபவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படும். 

முதல் போட்டி : புகைப்பட போட்டி. 

போட்டிக்கான தலைப்பு : 

" உழைப்பே உயர்வு" 

உங்கள் மொபைல் போனில் நீங்களே எடுத்த படங்கள் மட்டுமே போட்டிக்கு அனுப்பவேண்டும். 

நீங்கள் அனுப்பும் படம்,  'உழைப்பையும் அதனால் வரும் உயர்வையும்' உணர்த்துவதாக  இருக்கவேண்டும். 

இந்த விவரங்களை மின்நிலா வாட்ஸ் ஆப் குழுவிலும் , எங்கள் blog வாசகர்கள் வாட்ஸ் ஆப் குழுவிலும் 31-01-2025 அன்று பகிர்ந்திருந்தேன். 




போட்டியில் பங்கேற்கிறேன் என்று சொல்லியிருப்பவர்களில், ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் படங்கள் அனுப்பியிருக்கிறார்கள் ஒருவர் 3 படங்கள் அனுப்பியிருக்கிறார். 

படங்கள் அனுப்ப இறுதி தேதி : 18.2.2025 புதன்கிழமை மாலை ஆறு மணி. 

எப்படி அனுப்பலாம்? 

வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புவதாக இருந்தால், 9902281582 என்ற எண்ணுக்கு அனுப்பவும். (குரல் அழைப்புகளுக்கு பதில் கிடைக்காது) 

மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதாக இருந்தால், engalblog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 

போட்டிக்கு கீழ்க்கண்ட படத்தை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயரைக் குறிப்பிடவும். நன்றி. 


போட்டி பற்றி சந்தேகங்கள் இருந்தால், கருத்துரை பகுதியில் கேட்கவும்! 

= = = = = = = = = = = = = =

11 கருத்துகள்:

  1. கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஜீவி ஐயா வருமான வரி பற்றி கேள்வி கேட்டு புதன் அன்று கேள்வி பதில் பகுதியில் பதிலாக அளிக்கலாம் என்று கோரினார்.
    என்னுடைய பதில் பின் வருமாறு.
    ஜீவி ஐயா:

    இரண்டு வகையான வரி கணக்கிடுதல் உண்டு என்று உங்களுக்கும் தெரியும். பழைய முறை, புதிய முறை.
    வருமான வரியின் முக்கிய அம்சமே உங்களுடைய வரி விதிப்பிற்கு உட்படும் வருமானத்தை கணக்கிடுவதுதான். பழைய வரி விதிகள் சேமிப்பு, மற்றும் நன்கொடைகளை ஊக்குவிக்க இவ்வினங்களில் பட்ட பல செலவுகளையும் வருமானத்தில் இருந்து கழிக்க உதவியது. உதாரணமாக PMCARES நிதியில் நீங்கள் 10000 ரூ நன்கொடை கொடுக்கிறீர்கள் என்றால் , இந்த 10000 ரூ யை உங்கள் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம். இது போன்று பல உள்ளன. இம்முறையில் டிரம்ப் போல் புத்தியுள்ளவர்கள் கோடிக்கணக்கில் வருமானம் இருந்தும் வரி கொடுக்காமல் இருந்தனர்.
    புதிய முறையில் வருமானத்தில் இருந்து ஒரு கழிவும் கிடையாது. ஆனால் வரி கணக்கில் மிகவும் தாராளமாக சலுகை உண்டு. அது தான் 12 லக்ஷம் வரை வரி கட்ட தேவையில்லை என்பது

    இது சுருக்கமான விளக்கம். விரிவாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பதிவு போறாது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய மொத்த வருமானம் (சம்பளம், பென்சன், வட்டி, வீடு வாடகை, மற்றும், தொழில் வருமானம்) 12 லக்ஷத்திற்குள் இருந்தால் வரி முழுதும் தள்ளுபடி செய்து வரி ஒன்றும் கட்டவேண்டாம். சம்பளம் /பென்சன் வருமானத்தில் 75000 ரூ ஸ்டான்டர்ட் டிடெக்சன் என்ற வகையில் குறைத்துகொள்ளலாம்.

    கரண்ட் பில் ஸ்லாப் போல அடிப்படையில் வருமானவரி ஸ்லாப் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வரியும் செஸ்சும் கட்டவேண்டும்.இது 12 லக்ஷ,/12.75 லக்ஷம் தாண்டினால் முழு வரியையும் கட்டவேண்டும்.
    உதாரணமாக மொத்த வருமானம் 12லக்ஷத்து 100 ரூ என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்குள்ள
    வரி 60015. செஸ் 2401 ஆக மொத்தம் 62316 ரூ வரி கட்டவேண்டும்

    இது புது முறை என்று சொல்லப்படுகிறது.

    இது தவிர பழைய முறை என்று ஒன்றும் உள்ளது,

    Jayakumar

    பதிலளிநீக்கு
  4. கௌ அண்ணா உங்க படங்கள் எல்லாம் அட்டகாசம். ரொம்பவே அழகாக வந்திருக்கின்றன, பூக்கள் படங்கள்.

    நானும் எங்கு சென்றாலும் பூக்கள், மலைகள், நதி, செல்லங்கள், பறவைகள், மரங்கள் என்று எடுத்துவிடுவதுண்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. கருத்தை முழுவதும் அடிப்பதற்குள் கீஸ் குதிப்பதால் (என்ன உற்சாகமோ தெரியலை!!!!) கௌ அண்ணா என்று சொன்னது மட்டும் வந்துவிட்டது.

      கௌ அண்ணா, நானும் போட்டியில் பங்கெடுக்கிறேன் "இதய emoji!!!!)

      மொபைலில் எடுத்த படங்கள் மட்டும்தான் அனுப்ப வேண்டுமா? கேமராவில் எடுத்திருந்தால் அனுப்பலாம்தானே?

      கீதா

      நீக்கு
  6. தலைப்பு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அண்ணா.

    உழைப்பு என்றால் ...ஓகே....'உழைப்பையும் அதனால் வரும் உயர்வையும்' உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். Vague! ஆகப் படுகிறது எனக்கு.

    அப்படினா சின்ன குறும்படம் போல 2,3 நிமிட வீடியோ போலனாதானே இதை உணர்த்த முடியும் இல்லையா?

    வெறும் புகைப்படத்தில் எப்படினு யோசிக்கிறேன். உழைப்பை மட்டும் சொல்லலாம் அவங்க உயர்ந்தாங்களான்னு, எப்படி? இது மிகவும் பொதுவான ஒன்றாக இருக்கிறதே என்று யோசிக்கிறேன் உழைப்பு என்பது எல்லா வேலைகளுக்கும் பொருந்துமேன்னு... அதாவது ஏழை முதல் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் வரை.

    (எனக்கு ஒரு ஐடியா இருக்கு ஆனால் அது வொர்க்கவுட் ஆகுமான்னு முயற்சி செய்கிறேன்!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நன்றி திரு. கே. ஜி. ஜி அவர்களே.
    அ. தி அன்று மஞ்சள் மற்றும் உப்பு வாங்கி முன்னேற்றம் அடைந்து உள்ளீர்கள் என்ற செய்தி சந்தோஷத்தை தருகிறது. நானும் செய்து பார்க்கிறேன்.
    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!