வியாழன், 6 பிப்ரவரி, 2025

பாவம் கோழிக்குஞ்சு...

 ஒரு பொதுவான பார்வையில் இத்தனை வருடங்கள் ஆகியும் புத்தகக் கண்காட்சி அன்று எப்படி இருந்ததோ அப்படியே பழமை மாறாமல் இருக்கிறது.  நாகரீக வசதிகள் எத்தனையோ வந்தும்  கூட எந்த வசதிகளையும் செய்யாது கண்காட்சி நடத்துகிறார்கள்.  முதலில் கால் தடுக்காமல் நடக்க முடிவதில்லை.  தரைவிரிக்கும் முன்பு ஒரு JCP வைத்து சமப்படுத்த மாட்டார்களா?  

சாதாரணமான தெருக்கள் மற்றும் சாலையிலேயே நடமாடும் கழிவறை வசதிகள் வைக்கமுடியும்போது இங்கு உள்ளே அப்படி ஏற்பாடு செய்யாதது ஏனோ?  ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் முடிவிலும் இருபக்கமும் நான்கைந்து நாற்காலிகள் போட்டால் என்ன?  கால் வலிக்கும்போது மக்கள் படும்பாடு...  உள்ளே தள்ளு வண்டியில் வரும் தேநீரை கொஞ்சம் தரமானதாக கொடுக்கலாம்.  20 ரூபாய் வாங்குவதில் குறைவில்லை.  சகாய விலையில் தரமான தேநீர் வழங்க வேண்டும்.  வெந்நீரும் சாதா நீரும் வழங்கும் மெஷின்கள் வாங்கி இரண்டுமூன்று வைக்கலாம்.

செய்ய மாட்டார்கள்.  நம் அமைப்பு அப்படி.

சாஹித்ய அகாடமி அரங்கில் புத்தகம் வாங்கும்போது பாஸ் போன் செய்தார்.  அவர் ஓய்வாக தூரத்தில் ஒரு இருக்கை பிடித்து அமர்ந்து கொண்டிருந்தார்.  எனக்கு காவலாக வந்திருந்தார்.  இருமி, மயங்கி விழுந்து விடக் கூடாதாம்!

"பழ. கருப்பையா வருகிறார்"

மறுபடி போன் பேசி உங்கள் அரங்குக்கே வந்திருக்கிறார் என்று அவர் சொன்னபோது அவர் என் அருகில் நின்றிருந்தார் என்பதோடு, அவசரமாக அலைபேசியில் வேகமாக ஒருபடம் நான் எடுத்திருந்தேன்.  அவருக்குத் தெரியாமல் எடுக்க முயன்றதால் OOF ல் வந்திருந்தது!

அவரே என்னிடம் பேசினார்.  என்ன புத்தகம் வாங்கலாம் என்று யோசனை கேட்டார்.  கொஞ்ச நேர உரையாடல்களுக்குப் பின் நான் சொன்ன பருவம் - பைரப்பா புத்தகம் எடுத்துக் கொண்டார்.  :தம்பி...  நல்லாயிருக்கும்ல?  நீங்க சொல்றீங்கன்னு நம்பி வாங்கறேன்.."

"இதோ பாருங்க ஐயா...மகாபாரதம் சம்பந்தபப்ட்ட கதை.  நான் பாதிதான் படித்திருக்கிறேன்.  ஒவ்வொருவர் ரசனையும் மாறுபடும்.  உங்கள் ரசனை என்ன என எனக்குத் தெரியாது.  வாங்கிப் படித்துப் பாருங்கள்" என்றேன்.

அருகில் வந்த பாஸை நானும் அவரும் பேசிக் கொண்டிருப்பதை படம் எடுக்கச் சொன்னால், அவர் தயங்கோ தயங்கு என்று தயங்க, பழ. கருப்பையாவுடன் வந்திருந்தவர்களில் ஒருவர் 'படம் எடுக்கணுமா?  இதிலென்ன இருக்கு?  வாங்க, நில்லுங்க' என்று படம் எடுத்துத் தந்தார்.  


அங்கேயிருந்த ஒரு மின்சார ஒயரை தொட்டு விட்டேன் போலிருக்கு, என் கையைத் தவிர என் உருவம் மறைந்து விட்டது!  அவருக்கு பின்னால் 'மலையாளச் சிறுகதைகள் புத்தகத்துடன் நிற்கிறேன்.  அதில் அவரிடம் கையெழுத்தும் வாங்கி கொண்டேன்.

சாஹித்ய அகாடமி அரங்கில் நான் எதிர்பார்த்த மாதிரி புத்தகங்கள் கிடைக்கவில்லை!

நான் அங்கிருந்து கிளம்பும்போது ஸ்டால் காரருடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

***************************

என் மகனுக்கெல்லாம் பிடிக்கும், எனக்குப் பிடிக்காது.  உருளைக்கிழங்கு ஸ்ப்ரிங் ரோல்.  அது எந்த அளவு ஃபேமஸ் என்பது அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு குவியலிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

உள்ளே செல்லும் வழியில் விதைகள் விற்பனைக்கு வைத்து காத்திருந்த இளைஞர்.

அழகிய சணல் பைகள்.  ஒரு வயதான மாது...   இருங்கள்..  வாக்கிய அமைப்பை மாற்றுகிறேன்...  வயதான மாது ஒருவர் விற்றுக் கொண்டிருந்தார்.  யாராவது வாங்க மாட்டார்களா என்கிற ஏக்கம் வழியும் கண்களுடன்..

மேலே ஸ்பெஷலைஸ் செய்யப்பட்டு வெளியிட்டிருந்த உருளைக் கிழங்குதான்..  சாதாரண படம்!

விதைகள் மட்டுமா, செடிகளும் விற்பனைக்கு...

அவர்கள் அடுக்கி வைத்திருந்த அழகுக்காகத்தான் மாஞ்சு மாஞ்சு உருளைக்கிழங்கை போட்டோ எடுத்தேன்!  இதோ இன்னொன்று!  ஸ்டிக் குத்தி தயாராக அடுக்கி இருக்கிறார்கள்.


பெருமாளே...   

அழகா இருக்கேப்பா...

நான் என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன் என்று ஆர்வம் இருந்திருக்கும்.  இதோ....



ஓகே..   எல்லோரும் எழுந்து நில்லுங்கள்...  புத்தகக் கண்காட்சி இந்த வருட பகிர்வு இனிதே முடிந்தது.  ன கண மன அதிநாயக ஜெயஹே...


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அப்போதைய முயற்சியும், வல்லிம்மாவின் முத்தாய்ப்பும்!



என்னவோ சொல்ல ட்ரை பண்ணியிருக்கான்....!
=================================================================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் +


-  மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெங்களூரு :தீராத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படும் நோயாளிகளை, கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

-  வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத்தாக்க வாய்ப்புள்ளதாக நாசா பயமுறுத்தி உள்ளது! 

-  திருமணம் செய்யாமல் (Live-In) இணைந்து வாழ்வோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் ஒன்றை உருவாக்க ராஜஸ்தான் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

- சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் வால்வோ பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியார் மூலம் இயக்க மாநகர போக்குவரத்துக்கு கழகம் முடிவு செய்துள்ளது.

-  உத்தரபிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஒரு முதியவர் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டு பின்னர் சேர்ந்திருக்கிறார்.  மனைவியை தவறவிட்டபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்குள் போலீசார் அழைத்து வந்து என்னிடம் விட்டுவிடுவார்கள் என்று அந்த முதியவர் கூறினார்.

-  தமிழக கிராமங்களில், எட்டாம் வகுப்பு மாணவர்களில், 64 சதவீதம் பேரும், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 35 சதவீதம் பேரும், இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட படிக்க முடியாத நிலையில் உள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-  மஹா கும்ப நகர்:உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில், 77 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் உட்பட, 118 பேர் அடங்கிய வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் புனித நீராடினர்.

-  திருமண வரவேற்பில் மணமகன் "சோளி கே பீச்சே க்யா ஹை" பாடலுக்கு ஆடியதால் ஆபாச பாடல், குடும்ப கெளரவம் என்று சொல்லி பெண்ணின் தந்தை  திருமணத்தை நிறுத்தி மணமக்கள் உட்பட எல்லோரையும் கண்கலங்க வைத்தார்!

-  பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த, 'ஹிப்னோ தெரபிஸ்ட்' ஆன, நிக்கோலஸ் அஜுலா என்பவர், 'இந்த ஆண்டில், மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்...' என, கணித்துள்ளார்.  இவர், கடந்த, 2018ல், 'கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்...' என, முன்கூட்டியே கணித்துக் கூறியிருந்தார்.

-  மும்பை; மஹாராஷ்டிராவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

-  நைரோபி: கென்யாவில் அதிக எடை கொண்ட யானை ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எடை 10 ஆயிரம் கிலோ ஆகும்.

-  டெக்சாஸ் : அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். டெக்சாசின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தடைய உள்ளது.

சென்னை: தமிழக காவல் துறையின் மெத்தனம் பற்றி கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம். கோர்ட் உத்தரவையே அலட்சியம் செய்யும் போலீசாரை வைத்துக் கொண்டு எவ்வாறு நீதியை நிலைநாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

- பெங்களூரு: சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த அனைத்து சந்திப்புகளிலும் விரைவில் ஏ.ஐ. சிக்னல்கள். 

- புது டில்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் முதல் கேரளாவில் உள்ள சபரிமலை வரை நாடு முழுவதும் 18 ஆன்மீக தலங்களில் ரோப் கார் திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

- நாகப்பட்டினம்: தமிழக அரசின் முதன்மை தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் நாகையில் இயற்கை சீற்றத்தால் பெற்றோர், உறவுகளை இழந்த இரண்டு பெண் குழந்தைகளை காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்டதோடு தினசரி தன் குடும்பத்தோடு சென்று அந்த குழந்தைகளோடு நேரம் செலவழித்து வந்தார். அதில் ஒரு பெண்ணிற்கு 2022ல் திருமணம் நடந்தது. மற்றொரு பெண்ணிற்கு நடந்த திருமணத்தை ராதாகிருஷ்ணனும் அவர் மனைவியும் பெற்றோர் ஸ்தானத்தில் முன்னின்று நடத்தி வைத்தனர். 

- திருத்தணி: முகூர்த்த நாளான பிப்ரவரி இரண்டாம் தேதியன்று திருத்தணி முருகன் கோவிலில் 40 ஜோடிகளுக்கும், அங்கிருக்கும் திருமண மண்டபங்களில் 80 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

- கோலாலம்பூர் : மலேஷியாவில் நடந்த 19 வயதிற்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., டி 20 உலக கோப்பை இரண்டாவது சீசனில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

- ஜனவரியில் புதிய உச்சம் தொட்டது யு.பி.ஐ. பண பரிவர்த்தனை. 

- யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அதிகரித்திருப்பதால் சாக்லேட் விற்பனை சரிவு. இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் சில்லறை கெடுப்பதற்காக பதிலாக அந்த மதிப்பிற்கு சாக்லேட்டுகள் கொடுப்பது வியாபாரிகளின் பழக்கம். அதற்காக சாக்லேட்டுகள் வாங்குவார்கள் கடை முதலாளிகள். இப்போது பெரும்பாலோர் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி விடுவதால் சாக்லேட் வாங்குவது குறைந்து விட்டது என சாக்லேட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வருத்தம். 

- தும்கூரு: தும்கூருவில் ஆகாஷ் ஜுவல்லரி என்னும் பெயரில் நகைக்கடை நடத்தி வந்த சிவானந்த மூர்த்தி என்பவர் நகைக்கடையோடு சீட்டுத் தொழிலும் நடத்தி வந்தார். சமீபத்தில் கூட்டுறவு சொஸைட்டி துவங்கினார். அதில் முதலீடு செய்பவருக்கு அதிக வட்டி தருவதாக அறிவித்தார். ஆனால் வட்டியும் தரவில்லை. ரூ. 30 கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு சிவானந்த மூர்த்தியின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். சிவானந்த மூர்த்தியின் மகன் ஆகாஷ், நாராயணா ஹிருதயாலயாவில் டாக்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- போபால்: ம.பி.,உஜ்ஜைன் மாவட்டத்தின் நாக்டா நகரில் சிவபாபா மதுபான நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி ஆயுதமேந்திய ஐந்து பேர் 18 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். அதில் சம்பந்தப்பட்ட ரோகித் சர்மா என்னும் முக்கிய குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  காலில் அடிபட்டிருப்பதாக கூறிய ரோகித் சர்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அவரை அங்கிருந்து சிறைச்சாலைக்கு அழைத்து வராமல் மசாஜ் சென்டருக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர், அங்கிருந்து ரோகித் சர்மா தப்பி விட்டான்.மேற்படி காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ரோகித் சர்மாவை தேட தனிப்படை அமைக்கப் பட்டிருக்கிறது.

-  சென்னை: ''விதவிதமான திட்டங்களை அறிவித்து, முதலீடுதாரர்களிடம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகக் கூறி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தேன்,'' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

-  புதுடில்லி: 'முதல் திருமணத்தில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், இரண்டாவது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பெண்ணுக்கு உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

-  சென்னை:'தாமரை பிரதர்ஸ் மீடியா' பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'சோழர்கள் இன்று' நுால், தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நுாலுக்கான பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மேல பார்த்தீங்களா?  வெரைட்டியா கலெக்ட் பண்ணியிருக்காங்க ரெண்டு பேரும்...  அச்சா..   பஹுத் இன்டரெஸ்டிங் ஹை..  அவுர் சோட்டி சோட்டி கபரேன் ஹேனா...  ஈஸிஸே பாஸ் கர் சகே...ஜ்யாதா வக்த் நஹி ஹோகா..

===========================================================================================


நான் வாசகன் என்ற சிற்றிதழ் ஒன்றை ஆசிரியராக இருந்து வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அதன் ஒரு வெளியீடாக சிறுகதைத் தொகுப்பு ஒன்று கொண்டு வந்தோம். ‘ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள்’ என்ற அந்தத் தொகுப்பில் எழுதியிருந்தவர்கள் (உதாரணத்திற்கு சில பெயர்கள்: ஆதவன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன், ‘குடிசை’ ஜெயபாரதி, இந்துமதி, வண்ணதாசன்) அன்று வெகுஜன வாசகர்களிடயே அதிகம் பிரபலமாகியிருந்திராத ‘புது எழுத்தாளர்கள்’. தொகுப்பை வெகுஜனங்களுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த, எங்கள் எழுத்துக்களின் மீது மதிப்பும் அன்பும் கொண்டிருந்த பிரபலங்களைக் (கமல்ஹாசன், கே.பாலச்சந்தர், சுஜாதா, இசையமைப்பாளர் எம்.பி. சினிவாசன்) கொண்டு வெளியிட்டு, வாசகர்களின் ‘ரியாக்ஷன்’களைப் பார்க்கக் கருதியிருந்தோம்.

அதற்கு சுஜாதா பெங்களூரிலிருந்து வந்தார். அதிகாலை நேரத்தில் அவரை வரவேற்க சென்ட்ரல் ரயில் நிலையம் போயிருந்தேன். அந்த நாட்கள் நான் ஒரு பிரம்மச்சாரியாக திருவல்லிக்கேணி மேன்ஷனில் தங்கியிருந்த நாட்கள். கார் வசதி கிடையாது. டாக்சி எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றவில்லை. எல்லோரையும் போல் சாலையைத் தவறான இடத்தில் தவறான தருணத்தில் கடந்து, மருத்துவக் கல்லூரி வாசலில் 21C பஸ்ஸில் ஏறித்தான் மைலாப்பூர் வந்தடைதோம்.உட்கார இடம் கிடைக்கவில்லை. நிமிர்ந்து நின்றால் தலை இடிக்கும் அந்த பஸ்சில் தலையைக் குனிந்து கொண்டு பேசிக் கொண்டே வந்தோம். ரங்கராஜன் நெடுநாள் பழகிய நண்பரைப் போல சகஜமாக சரளமாகப் பேசிக் கொண்டு வந்தார். அன்று நைலான் கயிறு வெகு தீவிரமாக வாசகர்களால் வாசிக்கப்பட்டும் நேசிக்கப்பட்டும் கொண்டிருந்தது. தொலைக்காட்சி இல்லாத காலம். எனவே எழுத்தாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்திருந்தது.

அன்று எனக்கு ஒரு உண்மை புரிந்தது. வாசகனை விடத் தன்னை மேம்பட்டவனாகக் கருதிக் கொள்ளும் செருக்கு, அவரிடம் இல்லை.கடைசி வரை அந்த மனதை அவர் கைவிடவில்லை. எழுத வருகிறவன், குறிப்பாக இலக்கியச் சிற்றேடுகளில் எழுத்தைத் துவக்குகிறவன் அறிந்து கொள்ள வேண்டிய பால பாடம் அது. அது போன்று அவர் விளங்கியதற்கு ஓர் காரணம் உண்டு. அவர் எழுத்தை ஓர் ஆற்றலாகத்தான் (skill) கருதினார். அப்படித்தான் அதை நேசித்தார். அதை தவம், வரம் என்ற மிகை உணர்வுகளுக்கு அவர் உள்ளானதில்லை. அதனால்தான் எல்லா வகையான எழுத்தையும் எழுதிப்பார்த்து விடக் கருதினார்.என்னுடைய பார்வையில் இது ஒரு மனமுதிர்ச்சி.
எழுத்துக்களில் காணப்பட்டதை விடவும் அதிகமான ஒரு தேடல் மனம் (enquiring mind)  அவரிடம் இருந்தது. அந்த மனமிருந்ததால் அவர் எந்த விதமான தீர்மானங்களுக்கும் வந்துவிடவில்லை. அதாவது அவர் எந்த விஷயத்திலும் ஓர் நிலை எடுத்துக் கொண்டுவிடவில்லை. வெகுஜன எழுத்து Vs சிற்றிதழ் எழுத்து, யாப்பிலமைந்த கவிதை Vs நவீன கவிதை, Block Buster Vs Parallel Cinema, சோஷலிசம் Vs தாரளமயமாக்கல்,  விஞ்ஞானம் Vs ஆன்மீகம், கருணாநிதி Vs ஜெயலலிதா, கல்கி Vs புதுமைப்பித்தன் என எந்த விஷயத்திலும் கட்சி கட்டிக் கொண்டு ஆடியதில்லை. எப்போதும் பத்திரமாக இருக்கவே விரும்பும் மத்திய தர வர்க்க மனோபாவம் இது. என்னுடைய பார்வையில் இது அவரது ஒரு பலவீனம்.

- மாலன்

ஓகே ஓகே...  எனக்கு சுஜாதாவையும் தெரியாது..  மாலனையும் தெரியாது...  கண்டுக்காதீங்க..   அடுத்ததுக்கு போகலாம்!

===============================================================================================



இவ்ளோ சிரிச்சா போதுமா?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இணையத்தில் ரசித்த (திகில்) படம்...

ரூம் எல்லாம் புக் ஆயிடுச்சு ஸார்...   இதுதான் காலியா இருக்கு...   நைட் படுக்கதானே?  வேணுமா?

ம்ம்ம்...  ஒரு முப்பது நாப்பது வருஷங்களுக்கு முன்னாலேன்னா ட்ரை பண்ணியிருப்பேன்...


இத்தனை பேரும் இங்கிருந்தாலும் அந்த ஒருத்தரைத் தேடும் மனசு...!

ஜீ ஹான்ப்பா..   கஹான் ஹை ஓ  கியாரா ஆத்மி?



இதை ஒரு காணொளியிலிருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து லைக் குறியீடுகள் போன்றவற்றை எடிட் செய்தேன்.  நிச்சயம் AI ஒட்டுதல் இல்லை!  வீட்டில் வளர்த்த பறவை விமான நிலையம் வந்து "வந்துட்டியா' என்று மகிழ்ச்சி கொண்டாடுகிறதா?  அல்லது "நீதானா அந்தக் குயில் ?" என்று பாடுகிறதா?!  கண்களை பார்த்து மீன் என்று நினைத்து கொத்த வருகிறதோ!!


ஹா..  ஹா..  ஹா...அட போப்பா...  அது  என்ன நெனச்சு பக்கத்துல போயி பார்த்துச்சோ....

இது நிஜமாக இருக்க வாய்ப்பில்லை.  என்னதான் வரையாடுகள் மலைப்பகுதியில் பிஸ்தா என்றாலும் இது ரொம்ப ஓவர்!  ஆனால் இப்படி அர்த்தமில்லாமல் இடம் பொருள் ஏவல் தெரியாமல் சண்டையிட்டுக் கொள்பவர்களுக்கு நல்ல பாடம்!!

அம்மாடி...   ஆனா பார்க்காவே பயம்மா இருக்கறது நிஜம்!

=============================================================================================

வாட்ஸாப் தந்த நகைச்சுவை!

Oh... These wives... 

====================================================================================================

இது பழசுங்க...  வாட்ஸாப் இல்லை!


கொஞ்சம் நேரம் கழிச்சு சிரிக்கவா?


யார் கண் என்று கண்டு பிடிக்க முடியதா?


இதோ பாருங்க...  முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுங்க...   ஸ்ரீராம் விடையை நாளை போஸ்ட்ல சொல்வானாம்.

===========================================================================================================



போதும்ப்பா...  போதும்...  இதோட நிறுத்திக்குவோம்...

8 கருத்துகள்:

  1. கோழிக்குஞ்சு... காலையில் சிரிப்பு வரவைத்த நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...   நன்றி.  

      சட்டுனு கடைசி ஐட்டத்துக்கு போயிட்டீங்க...

      நீக்கு
  2. புத்தகத்தில் துக்ளக் ரமேஷ் புத்தகம் தவிர வேறு எதையும் நான் வாங்கியிருந்திருக்க மாட்டேன்.

    பழ கருப்பையா அருமையான பேச்சாளர். இலக்கில்லாத கொள்கைகளால் அலைபாய்ந்தவர். மிகப் பெரிய படிப்பாளி. அவர் பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    நல்ல வேளை சொன்னீர்கள். நான் படங்களில் உங்களைத் தேடினேன், அவராக இருக்குமோ இவராக இருக்குமோ என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் பெரிய படிப்பாளியா என்பது தெரியவில்லை.  அவர் பேச்சு சட்டென சந்தேகம் ஏற்படுத்தியது!  

      நான் கூட அதைத்தவிர மலையாளாச் சிறுகதைகள் வாங்கி இருக்கேன்.  இன்னும் இரண்டு புத்தகங்கள்..  அதுவும் மலையாள மொழிபெயர்ப்பு.  அப்புறம் தடைசெய்யப்பட்ட துக்ளக்.

      நீக்கு
  3. காந்தக் கண்ணழகி. யாரென்று கண்டுபிடிப்பதில் மனம் செல்லவில்லை

    பதிலளிநீக்கு
  4. ஒரு வழியாக புத்தக காட்சி உலாவை முடித்தீர்கள். வாங்கிய புத்தகங்கள் 2000 ரூ வரும் என்று தோன்றுகிறது. புத்தக ரசனை வித்தியாசம். ஆன்மிகம், அரசியல், வேதங்கள் கூறும் வழிமுறைகள், பிறமொழி கதைகள், கேள்வி பதில்கள் என்று கலப்படமான தேர்வு. எதை படிப்பீர்கள், எதை படிக்கும்போதே தூங்கி விடுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

    நியூஸ் ரூம் செய்திகள் கூடுதல்.
    கவிதை .... கவிதை?

    தற்போது வெளியிடப்படும் புகைப்படங்களை பார்க்கும்போது எது உண்மை, எது போட்டோஷாப் என்று ஆராயவே தோன்றுகிறது. அமிதாப் கமன்ட் சுவை சேர்க்கிறது.

    ஸ்ரீராமுக்கு அனுஷ்காவை விட்டால் யார் இருப்பார். அதே கண்கள்!

    அந்த கோழிக்குஞ்சு ஜோக் தான் உண்மையான ஜோக். பதிவின் மற்ற விஷயங்களை மறக்கடித்து முன்பே முந்திரிக்கொட்டையாக முன் வந்து நிற்கிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாங்கிய புத்தகங்கள் 2000 ரூ வரும் என்று தோன்றுகிறது //

      இல்லை, அதிகம்.

      // எதை படிக்கும்போதே தூங்கி விடுவீர்கள் என்பதை புரிந்து கொண்டேன். //

      ஹா..  ஹா...  ஹா....   எங்கே சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்!

      நியூஸ் ரூம் அமிதாப் சொல்றதைப் படிசீங்களா...  எளிதாகக் கடக்கக்கூடிய சிறு சிறு செய்திகள்..  வெவ்வேறு வகைகளில் சுவாரசியம் காட்டும் செய்திகள் சில வரிகளில்!


      ஹிஹிஹி...   கவிதை மாதிரிதான்!


      ஆம்.  நிறைய போட்டோக்கள் பொய்யானவையாய் இருக்கலாம்.  போலி காணொளிகள் தயாரிக்கிறார்கள்.  நிஜம் போலவே இருக்கிறது.

      கண்கள்...  விடை நாளை!


      கோழிக்குஞ்சு ஜோக்..  கடைசி வினாடி இணைப்பு!

      நன்றி JKC  ஸார்...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!