புதன், 12 பிப்ரவரி, 2025

பந்தியில் ஸ்வீட் எப்போது சாப்பிடுவீர்கள்?

 

ஜெயகுமார் சந்திரசேகரன்: 

வாழ்க்கை என்பது என்ன? உயிருடன் இருப்பதா, மற்றவர்கள் மதிக்கும்படி செயல்படுவதா? பணம், மண் இவற்றை சேமித்து சந்ததிகளுக்குத் தருவதா? எது உண்மையான வாழ்க்கை.?

# எல்லாம்தான். வாழ்க்கை வாழ்கிறவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவரால் வேறு யாரும் தம் மகிழ்ச்சியை இழக்கக்கூடாது. " அறன் எனப்படுவது இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று. "

கே. சக்ரபாணி சென்னை 28

1. ஊமையாய் இருப்பவர்களால்  புல்லாங்குழல்  மற்றும்  நாதஸ்வரம்  போன்ற  இசைக்கருவிகளை  வாசிக்கமுடியுமா?

# முடியும் என்றுதான் தோன்றுகிறது.‌

& நிச்சயம் முடியும் என்கிறது மீட்டா. ஊமையாய் இருப்பவர்கள் காற்றுக் கருவிகளில் இசைப்பது இருக்கட்டும்; பீதோவன் என்னும் இசை வல்லுனர், தன்னுடைய இரண்டு காதுகளும் கேட்காமல் போன பிறகும் கூட சில அரிய இசையை வடிவமைத்து, அளித்து சாதனை நிகழ்த்தினார்! 

2.வீட்டில் விசேஷ நாட்களில் அல்லது வெளியில்  விருந்துகளில்  சாப்பிடும் போது  சிலர் முதலில்  ஸ்வீட் சாப்பிடுவார்கள்  சிலர்  ( என்னைப்போன்ற வர்கள்  கடைசியில்  ஸ்வீட் சாப்பிடுவார்கள்). தாங்கள் எப்படி? தங்கள்  கருத்து என்ன?

# நான் 'ரசத்துக்குப் பின் இனிப்பு' கட்சி.

& இந்தத் தடுமாற்றங்கள் எதுவும் எனக்குக் கிடையாது. ஆரம்பத்தில், நடுநடுவே, இறுதியில் - எல்லா வகையிலும் ஸ்வீட் சாப்பிடுவேன். நான் ஸ்வீட் பிரியன். 

= = = = = = = = =

KGG பக்கம் : 

இரண்டு வாரங்களுக்கு முன்பு (ஜனவரி 29 பதிவு) பரிசுக்குறிய கேள்வி ஒன்று கேட்டிருந்தேன். 

சரியான விடை : 74 மி மீ . 

பரிசு பெற்றவர் : எம் மனோகரன்; மின்நிலா வாசகர். 

= == = = = = = = =

உழைப்பே உயர்வு என்ற தலைப்பிற்கேற்ற படம் பலர் அனுப்பி வருகிறார்கள். 

படங்கள் அனுப்ப இறுதி தேதி : 18.2.2025 புதன்கிழமை மாலை ஆறு மணி. 


எப்படி அனுப்பலாம்? 

வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புவதாக இருந்தால், 9902281582 என்ற எண்ணுக்கு அனுப்பவும். (குரல் அழைப்புகளுக்கு பதில் கிடைக்காது) 

மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதாக இருந்தால், engalblog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 

= = = = = = =

பாண்டிச்சேரி பயணத்தில் எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள்: 





மரமா அல்லது செடியா! 


இது என்ன ?


இது என்ன சிற்பம்? 


காக்கா(வைப் படம்) பிடித்தேன்! 

மீதி அடுத்த வாரம் பார்ப்போம். 

= = = = = = = = = = =

27 கருத்துகள்:

  1. வாழ்க்கை என்பது என்ன என்பதற்கு பிறர் தன் செயல்களின் மூலம் விளங்கவைக்க முடியும். 65ஐத் தாண்டும்போது, நமக்கே பிடிபட்டுவிடும், சரியாக வாழ்ந்திருக்கிறோமா, எதை எதைக் கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தவில்லை என்று.

    சமீபத்தில் ஒரு கோயிலிலிருந்து இரயில்வே ஸ்டேஷன் ஒரு வேனில் சென்றுகொண்டிருந்தோம். (நாங்கள் எல்லோரும் ஒரு குழு). பதினைந்தை மைல் பிரயாணம். சீட் இல்லாத ஒருவர் நின்றுகொண்டிருந்தார். என்னைவிடச் சிறியவர் வேனின் படிகள் பக்கத்தில் தரையில் உட்கார்ந்துவந்தார். நான் நின்றுகொண்டிருந்தவரை என் சீட்டில் அட்ஜஸ்ட் பண்ணி உட்காருங்கள் என்றேன். சட் என எனக்கு அடுத்த தனி சீட்டில் உட்கார்ந்திருந்த என்னைவிட வயதில் பெரியவர், தன் சீட்டை அந்தப் பெரியவருக்குக்்கொடுத்துவிட்டு தான் தரையில் உட்கார்ந்தார் (வெறும்ன சொல்லலை. தரையில் உட்கார்ந்துவிட்டு அவரைத் தானிருந்த சீட்டில் உட்காரச் சொன்னார்). இது ஏன் எனக்குத் தெரியாமல் போய்விட்டது என மனதில் வருத்தம் வந்தது. பாசிடிவ் செய்திகள் நம் மனதில் தாக்கம் உண்டாக்கி நம்மை இன்னும் நெறிப்படுத்த வேண்டும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது, ஸ்டேட்மன்ட் அல்ல, அது வாழும் முறை என்று எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து. ஒருவேளை பக்கத்து சீட் பெரியவர், உங்கள் சீட்டில் இருவர் உட்கார்ந்தால் தன் சௌகரியம் பாதிக்கப்படும் என்று நினைத்திருக்கலாம். சென்னை லோக்கல் டிரெய்னில் அந்த வகை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    2. // 65ஐத் தாண்டும்போது, நமக்கே பிடிபட்டுவிடும், //

      அப்பாடி...   ஒருவழியாய் நெல்லையின் வயசு தெரிந்ததப்பா...!

      நீக்கு
    3. தாண்டலைங்கறதுனாலத்தானே தெரியலை. இன்னும் பல வருஷங்கள் காத்திருக்கணும். அதுக்குள்ள கீதா ரங்கன் க்கா சஷ்டியப்தபூர்த்தி நடக்கணும்.. எவ்வளவு இருக்கு

      நீக்கு
    4. ஹாஹாஹா நெல்லை சிரிச்சு முடிலைப்பா.நெஞ்சுக் கூடு வலிக்கி..ஓகே நானும் 60 ஐத் தொடவே இல்லை...இன்னும் பல வருஷங்கள் இருக்குன்னு சொல்லிட்டீங்களே அதுவே போதும்!!!!

      கீதா

      நீக்கு
  2. விருந்தோ அல்லது நல் உணவோ... நான் ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு பிறகு தயிர் சாதம் பக்கம் போகமாட்டேன். என் உணவில் ஸ்வீட் கடைசி. ஆனாலும் முதலிலும் இடையிலும் ஸ்வீட் சாப்பிடத் தடையில்லை, ஆனால் அது உணவின் ருசியை மறக்கடிக்கும், அதிகமாகச் சாப்பிடும் ஆசை வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருந்துகளில் உணவின் கடைசி ஸ்வீட் பாயசம். நான் பாயசத்துடன் உணவை முடித்துக்கொள்வேன்.

      நீக்கு
  3. அழகிய பாறையை அப்படியே வைத்திருக்கிறார்கள். இரண்டாவது நீர் ஓடிக்கொண்டிருந்த பாறையைச் சிறிது சீர்படுத்தியதாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அது புரியவில்லை. ஒருவேளை புத்தர் சம்பந்தப்பட்ட சிற்பமாக இருக்கலாம்.

      நீக்கு
  4. போட்டிக்கு விடை சொல்கிற அனேகர் செய்யும் தவறு, பல வாரங்கள் கழித்து விடை பகரும்போது, அது என்ன போட்டி என்றே படிப்பவர்களுக்கு நினைவிலிருக்காதல்லவா என்பதை மறந்துவிடுவது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்பு கொடுத்துள்ளேன். நீங்கள் 94 மி மீ என்று முதல் கருத்துரை இட்டிருந்தீர்கள். ஆனால் அது தவறான விடை.

      நீக்கு
  5. ​"வாழ்க்கையே அலை போல, நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போல" என்று ஒருவர் வாழ்க்கையை வருணிக்க வேறு ஒருவர் "வாழ்க்கை என்றும் ஓடம், வழங்குகின்ற பாடம்" என்று வாழ்க்கையை ஓடம் ஆக்கி விட்டார். இந்த பாடல்கள் தாம் வாழ்க்கை பற்றி கேள்வி கேட்க தூண்டியது. வாழ்க்கை அலையா அல்லது ஓடமா?
    பாறை சிற்பங்கள் உங்கள் கற்பனைக்கேற்றவாறு எப்படி வேண்டுமானாலும் உருவகப் படுத்தலாம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. பாடல் 'வாழ்க்கையே அலை போலே' இல்லை; 'ஆசையே அலை போலே!'

      நீக்கு
  6. ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

    பருவம் என்னும் காட்டிலே
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வார்...சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
    நாளை உலகின் பாதையை இன்றே......... யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதேன்...
    இளமை மீண்டும் வருமா.... மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
    காலம் போகும் பாதையை இங்கே...........யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
    " தை பிறந்தால் வழி பிறக்கும்"
    திருச்சி லோகநாதன்.
    கவிஞர் கண்ணதாசன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறை சுட்டி காட்டியத்திற்கு நன்றி. வாழ்க்கையும் அலை போல் தான். ஏற்றமும் உண்டு. இறக்கமும் உண்டு.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  9. நான் இனிப்பு உண்பதில் உடன்பாடு குறைவு , இருப்பினும் முதலிலேயே முடித்து விடுவேன்.

    சிறப்பான பதில்கள் ஜி

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    இனிப்பை முதலில் சாப்பிட்டால், வேறு பதார்த்தங்களை சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்து விடும். அதனால்தான் விருந்து, மற்றும் விஷேடங்களில் இலையில் முதலில் பரிமாறப்படும் பாயாசத்தை ஒர் ஸ்பூன் அளவுக்கு விடுகிறார்கள். ரசம் சாதம் முடிந்தவுடன் அதே பாயாசத்தை கேட்டு கேட்டு பரிமாறுவார்கள். (இப்போது அப்படியில்லை..! முதலிலேயே சின்ன கிண்ணங்களில் அளவாக வைத்து விடுகின்றனர். அது வேறு விஷயம்.) ஆனால், இனிப்பு பிரியர்களுக்கு சாப்பாட்டு நடுவிலேயே இனிப்பை தொட்டு கொண்டு சாப்பிட எப்போதுமே பிடிக்கும்.

    கணக்கில், பரிசு பெற்றவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. ஹிந்துக்களின் அறுசுவை விருந்து என்றாலும் பாகற்காய்
    பரிமாறப்படுவதில்லை..

    இனிப்புச் சுவையில் தொடங்கி தயிரின் துவர்ப்பில் நிறைவு செய்வது மரபு..

    அதற்கு மேல் அவரவர் விருப்பம்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இறுதியில் பகிர்ந்த படம் இயற்கை அழகோடு இருக்கிறது. இயற்கையை நல்லபடியாக படத்தில் விழ வேண்டுமென மெனக்கெட்டு "காக்கா" பிடித்ததினால் , காகமும் மகிழ்ந்து நல்ல போஸ் தந்துள்ளது.:)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. கௌ அண்ணா, அந்தப் படம் மரம் துளிர்த்திருக்கிறது எனலாம்.

    அந்தப் படத்தில் அந்தச் சிற்பம் - பார்த்ததும் டக்கென்று என் மனதில் பட்டது, உயிர் உருவாகும் இடம் - கருவறை போன்று. இப்படித்தானே அதுக்குப் படம் போடுவாங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வாழ்க்கை என்பது மற்றவர்கள் மதிக்கும்படி வாழ்வது என்பதற்கும் மேலாக, நம் மனசாட்சிப் படி வாழ்வது. மனசாட்சி என்பது இங்கு நான் சொல்வது, நெறிப்படுத்தும் உள்மனம். அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்களை மனதில் கொண்டு வாழ்வது. உயிர் இருக்கும்வ் அரை மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டே இருப்பது.

    பணம் மண் இவற்றைச் சேமித்து சந்ததிகளுக்குத் தருவதை விட, நாம் நல்ல உதாரணமாக நம் செயல்களின் மூலம் இருக்க முயற்சி செய்தல் நல்ல சொத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  15. பரிசு பெற்றவர் : எம் மனோகரன்; மின்நிலா வாசகர். //

    வாழ்த்துகள்!

    காக்கா(வைப் படம்) பிடித்தேன்! //

    யாரை?

    காக்காவையே காக்கா பிடிச்சீங்களோ. ஃபோட்டோக்குப் போஸ் கொடுக்க!!!?

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!