கறிவேப்பிலை சாதம்
நமது மரபுகளின்படி வடித்தெடுத்த சோற்றை மீண்டும் அக்னியில் இட்டு பக்குவம் செய்வது (பொரிப்பதோ வறுப்பதோ) கூடாது..
எனவே Fried rice என்பது எல்லாம் ' உடான்ஸ் ',
' உல்ட்டா டான்ஸ் ' மரபுக்கு ஆகாதவை என்று உணர்ந்து கொள்க..
கறிவேப்பிலை பொடி அரைப்பதற்கு தேவையானவை :-
கறிவேப்பிலை 20 இணுக்கு
உளுத்தம் பருப்பு 100 கி
மிளகு ஒரு தேக்
கல் உப்பு சிறிதளவு
கறிவேப்பிலையைக் கழுவி நல்ல வெயிலில் சிறிது நேரம் காய வைத்து பின் நிழலில் உலர்த்திக் கொள்ளவும்...
இரும்பு வாணலி ஒன்றை மிதமான சூட்டில் வைத்து அதில் கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு மிளகு, கல் உப்பு இவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்..
சூடு ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் இட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்..
இது கறிவேப்பிலைப் பொடி தயாரிப்பில் ஒரு முறை...
துவரம் பருப்பு, பச்சைப்பயறு இவற்றைக் கொண்டும் இதே செய்முறையில் பொடி அரைத்துக் கொள்ளலாம்..
ஐந்து பேருக்கு என்ற அளவில்
பொன்னி அரிசியில் பொலபொல என்று வடித்த சாதத்தில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை இவற்றை நெய்யில் தாளித்துப் போடவும்..
இத்துடன் நாம் அரைத்துள்ள
கறிவேப்பிலைப் பொடியை தேவைக்கு ஏற்ப சேர்த்து மேலும் சிறிது நெய் விட்டு
நன்றாகக் கிளறிக் கொண்டால் ஆரோக்கியமான கறிவேப்பிலை சாதம்...
நிலக்கடலை அல்லது
முந்திரிப் பருப்பு உலர் திராட்சையை வறுத்துப் போட்டுக் கொள்வது கூடுதல் சிறப்பு..
நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் நல்வரவு
பதிலளிநீக்குவருக.. வருக...
நீக்கு__/\__
பதிவில் வழங்கிய ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி. நன்றிக்கும் நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குKGG ஸாருக்சான
பதிலளிநீக்குபுதன் கிழமைக் கேள்வி:
ஒருவருடைய ஆண்டு வருமானம்
ரூ. 10 லட்சம் எனில் சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புப்படி அவர் செலுத்த வேண்டிய வருமான வரி என்னவாக இருக்கும்?
பழைய முறை, புதிய முறை இரண்டில் அவர் எதைத் தேர்ந்தெடுத்தால் வரி குறைச்சலாக இருக்கும்?
எனக்குத் தெரியாது. எனக்கு வருமானமும் அவ்வளவு கிடையாது; நான் வருமான வரியும் கட்டுவது இல்லை!
நீக்குஉங்களுக்குத் தெரியாதென்றால் இந்தக் கேள்வியை வருகிற புதன் அன்று நீங்கள் விரும்பினால் வாசகர்கள் பதிலுக்கான கேள்வியாக சமர்பித்து விடலாம்.
நீக்குவேறு யாரேனும் பதில் சொல்லக் கூடும் என்பதினால் தான்.
பார்ப்போம்.
நீக்குஆண்டு வருமானம் 10 லட்சம்னா, Std deduction 75,000. Net salary 9,25,000. Gross Tax 32,500. Rebate 32,500. TAX Zero. அவ்ளோதான். எனக்கு வீட்டுக் குழுவில் வந்த தகவல் இது. மத்தபடி என் வீட்டில் பணம் சம்பந்தமான எதுவுமே எனக்குத் தெரியாது.
நீக்குகருவேப்பிலை சாதம் செய்முறையும், படமும் அருமை.
பதிலளிநீக்குகருவேப்பிலை பொடி பலவிதமாக இருக்கிறது. புளி இல்லாமல், பருப்புகள் , மிளகாய் சேர்க்காமல் மிளகு மட்டும் சேர்த்து செய்வது நல்லது. பேறு கால சமயத்தில் இப்படி புளி, மிளகாய், பருப்புகள் சேர்க்காமல் மிளகு மட்டும் சேர்த்து செய்து கொடுப்பார்கள்.
மிளகை நெய்யில் வறுத்து அதனுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து இட்லிக்கு தொட்டுக் கொள்ள கொடுப்பார்கள், கருவேப்பிலை பொடியும் இது போல செய்து கொடுப்பார்கள்.
கறிவேப்பிலை பொடி பலவித செய்முறை இருக்கிறன..
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
ஆஹா! கறிவேப்பிலை சாதம்! நல்ல ஆரோகிகியமான உணவு. ஒரு காலத்தில் நம்மூர் திருமணங்களில் ரிசப்ஷனில் தவறாமல் இடம் பெற்றது. பிறகு அந்த இடத்தை புதினா ரைஸ் பிடித்துக் கொண்டது.
பதிலளிநீக்குதங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் பிரார்த்தனை களுக்கி மகிழ்ச்சி.. நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான கறிவேப்பிலை சாதம் செய்முறைகள், படத்துடன் அருமையாக உள்ளது. கறிவேப்பிலை உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் பெண்களுக்கு மிகவும் நன்மை தருவது.
பேச்சு வழக்கில் ஒருவர் மற்றவரிடம் தன் அங்கலாய்பாக குறிப்பிடும் போது "நான் எப்போதுமே அவர்களுக்கு வேண்டாதவர்தான். என்னை நல்ல உணவிலிருந்து ஒரு கறிவேப்பிலை கொத்து மாதிரி ஒதுக்கி விடுவார்கள்.." என வருத்தத்துடன் கூறுவதை கேட்டுள்ளோம். ஆனால், கறிவேப்பிலையின் பலன் தெரிந்தவர்கள் அவ்வாறு அதை ஒதுக்க மாட்டார்கள்.
நான் எப்போதும் எந்த உணவு சமைத்தாலும், கறிவேப்பிலையை, தேங்காய் அரைத்து விடும் போது அதனுடன் சேர்த்து அரைத்து
பயன்படுத்தி விடுவேன். குழந்தைகளும் அதனை உணவிலிருந்து நீக்காமல் சாப்பிட வசதியாக இருக்குமென அவ்விதந்தான் செய்வேன்.
தங்கள் செய்முறை அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி
செய்முறைக் குறிப்பு நல்லாருக்கு துரை அண்ணா. பக்குவமா செஞ்சா அவ்வளவு சுவையா இருக்கும்.
பதிலளிநீக்குகறிவேப்பிலை சாதம் ரொம்பப் பிடித்த ஒன்று.
கீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ
இந்தச் சாதம்/ கறிவேப்பிலை பொடி செய்முறைகள் பல உள்ளன. பூண்டும் கூடச் சேர்த்து செய்வதுண்டு. அதுவும் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குகீதா
ஊருக்கு ஊர் பல விதம்...
நீக்குஇதுவும் ஒருவிதம்.
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ
கறிவேப்பிலை சாதம் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஉடல்நலனுக்கும் சிறந்தது.
நீங்கள் கூறியதுபோல ' நமது நலம் நமது கையில்" .
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி
கறிவேப்பிலை சாதம் மிக நன்று
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி நெல்லை..
அருமை ஐயா...
பதிலளிநீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்
இட்லி, தோசை மற்றும் மோர் சாதத்துக்குக் கூடக் கருகப்பிலைப் பொடி நன்றாக இருக்கும். என்னிடம் இதுவும் அங்காயப் பொடியும் எப்போதும் தயாராக இருக்கும். வயிறு பிரச்னை எனில் இவற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டு முதலில் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் வழக்கமான சாப்பாடைத் தொடரலாம்.
பதிலளிநீக்குஅக்கா அவர்களுக்கு நல்வரவு
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா
னுருங்கைக்கீரையைக் கூட இப்படிப் பொடி செய்து வைச்சிருக்கேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமுருங்கைக்கீரை
பதிலளிநீக்குஆகா
நீக்குபயனுள்ள பதிவு ஜி
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி
நீக்கு