புதன், 26 பிப்ரவரி, 2025

ரவை உப்புமா, ரவை பொங்கல், ரவை கிச்சடி, ரவை கஞ்சி வித்தியாசங்கள்?

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

உப்புமா ரவை எப்படி உண்டாக்கப்படுகிறது ? 

# சின்ன சோளம் என்று கடுகை விட பெரிதாக மிளகை விட சிறிதாக ஒரு தானியம் உண்டு. உப்புமா ரவை அதிலிருந்து தயாராகிறது. 

உப்புமா ரவையும் கோதுமை ரவையும் கோதுமையில் இருந்து உண்டாக்கப்படுவதுதான். ஆனால் நிறத்திலும், சுவையிலும், வித்தியாசமாக இருக்கின்றன ஏன்?

# மேலே கொடுத்துள்ள பதிலைப் பார்க்கவும்.

ரவை உப்புமா, ரவை பொங்கல், ரவை கிச்சடி, ரவை கஞ்சி வித்தியாசங்கள்?

# எல்லாவற்றையும் சாப்பிட்ட அனுபவம் இருக்கும்போது, வித்தியாசங்களைப் பிறர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

& செய்முறையில் சேர்க்கப்படும் பொருட்களைப் பொருத்து சுவையில் வித்தியாசம் இருக்கும். இங்கு பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் எனக்குப் பிடித்த ஒரே தயாரிப்பு, ரவா கஞ்சி. காலையில் நடைப்பயிற்சி முடித்து வந்ததும், தோசை மாவு பதத்தில் ரவா கஞ்சி -  மோர் கலந்து உப்பு போட்டு, கடுகு பெருங்காயம், மோர்மிளகாய் தாளித்து, குடிப்பேன். ரவா கஞ்சிக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்தது ரவா கேசரி மற்றும் ரவா தோசை மட்டுமே!  

இனிப்பு உப்புமா ஏன் கேசரி என்று சொல்லப்படுகிறது?

# உப்புக் கேசரியை உப்புமா என்று சொல்வதால்தான்! 

கே. சக்ரபாணி சென்னை 28: 

இப்போதெல்லாம். பெரும்பாலான  கார்களில்   ஸ்டெப்னி இருப்பதில்லையே  கவனித்திருக்கிறீர்களா?  தங்கள் கருத்து என்ன? 

#  விற்பனை விலை குறைவாகக் காட்டும் உபாயம். மேலும் இப்பொழுது தொலைபேசியில் கூப்பிட்டாலே எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து கொள்ள முடிகிறது.‌ அந்த மாதிரியான சேவை செய்பவர்கள் முன்பு இல்லவே இல்லை. இப்பொழுது ஏராளமாக இருக்கிறார்கள்.

& நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, மோட்டார் வாகன சட்டப்படி, சாலைகளில் இயக்கப்படும் எல்லா வர்த்தக வாகனங்களுக்கும் உபரி சக்கரம் (ஸ்பேர் வீல்) பொருத்தப்படவேண்டும் என்ற சட்டம் அமலில் இருந்தது. 

2020 ஆம் ஆண்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம் ஒரு சட்டத் திருத்தம் வெளியிட்டது.  அதன்படி, ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்கப்படுகின்ற M1 வகை கார்களில் (3.5 டன் எடை & 9 இருக்கைகள் வரை உள்ள கார்கள் ) டயர் காற்று அழுத்த கண்காணிப்புக் கருவி மற்றும் டயர் பழுது பார்க்க ஏதுவாக உள்ள கிட் உள்ள, உள்ளே காற்றுக் குழாய் இல்லாத டயர் (tubeless tyre) பொருத்தப்படும் கார்களுக்கு உபரி சக்கரம் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 

Spare wheel not compulsory for all passenger vehicles - MoRTH

Cars equipped with a tyre pressure monitor, a tyre repair kit and tubeless tyres to be exempted from carrying a spare wheel." 

July 2020 : In a recent notification, the Ministry of Road Transport and Highways (MoRTH) has made an amendment to the Central Motor Vehicles Rules (CMVR), stating that passenger vehicles falling under the M1 category, subject to certain conditions, are not required to be sold with a spare wheel (from April 2021).

தற்காலத்தில் பெரும்பாலான கார்களில் tubeless tyre பொருத்தப்படுவதால் உபரி சக்கரம் பொருத்தப்படுவதில்லை. 

= = = = = = = =

KGG பக்கம் : 

பிப்ரவரி மாத புகைப்பட போட்டியும், பரிசும். 

கீழ்க்கண்ட விவரங்கள் பல தளங்களில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

 பக்கம் 1 

எங்கள் Blog

வலைப்பக்கத்தில், கடந்த பிப்ரவரி 5 அன்று

மாதம் ஒரு பரிசுப் போட்டி (link)

அறிவித்து,

உழைப்பே உயர்வு என்ற தலைப்பிற்கு,

வாசகர்கள் எடுத்த படங்கள்

கேட்டிருந்தோம்.

எங்களுக்கு வந்த படங்களை, அடுத்துள்ள பக்கங்களில் தொகுத்தளித்துள்ளோம்.

நீங்கள் ஒவ்வொரு படமாகப் பார்த்து,

எது முதல் பரிசுக்கு உரியது என்று தேர்ந்தெடுக்கவும்

இது சம்பந்தமாக ஒரு poll வெளியாகும் அதில், நீங்கள் தேர்வு செய்த படம் வெளியாகியுள்ள பக்கம் எண்ணை குறிப்பிடவும்

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

மேற்கண்ட குறிப்புடன், மின்நிலா புத்தகங்கள் குழு, எங்கள் Blog வாசகர்கள் குழு மற்றும் மின்நிலா facebook பக்கம் எல்லாவற்றிலும் ஒரு வோட்டுப் பெட்டி திறந்து, எல்லோரும் வோட்டுப் போடும் வகையில், பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை, வோட்டுப் போட அவகாசம் அளித்தேன். 

வெளியிடப்பட்ட படங்கள் : 

பக்கம் 2 

 பக்கம் 3 

பக்கம் 4 

பக்கம் 5 

பக்கம் 6 

பக்கம் 7 

பக்கம் 8 

பக்கம் 9 

பக்கம் 10 

பக்கம் 11 

பக்கம் 12 

பக்கம் 13 


 மேற்கண்ட படங்களில், அதிக வோட்டுகளைப் பெற்ற படங்கள் பக்கம் 11 ல் வெளியாகியுள்ள படம் (நெல்லைத்தமிழன் அனுப்பிய படம்) மற்றும் பக்கம் 6 ல் வெளியாகியுள்ள படம் (ஸ்ரீராம் அனுப்பிய படம்) 

இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால், மேற்கண்ட இருவருமே தாங்கள் அனுப்பிய படங்களுக்கு வோட் போடவில்லை! வேறு ஒரு படத்திற்குத்தான் வோட் போட்டிருந்தனர்! 

பரிசு பெற்ற இருவருக்கும் பரிசுப் பணம் நாளை அனுப்பிவைக்கப்படும். 

இந்த இருவரோடு, போட்டிக்கு படங்களை அனுப்பி பங்கேற்ற 

எம் தில்லைநாயகம், 

கே சக்ரபாணி,  

கீதா ரெங்கன் 

பானுமதி வெங்கடேஸ்வரன், 

அனு ப்ரேம், 

பெயரிலா 

எல்லோருக்கும் நன்றி. 

= = = = = = = = = =

ஞாபகம் இருக்கட்டும். 

அடுத்த படப் போட்டியின் தலைப்பு " தெய்வீகம்" 

படங்களை அனுப்ப இறுதி தேதி 18.3.2025 மாலை 6 மணி. 

நீங்கள் அனுப்பும் படம் அதிக வோட்டுகள் பெறவேண்டும் என்றால், உங்கள் ஆதரவாளர்களை 

மின்நிலா புத்தகங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் சேர்க்கவும். 

link :  https://chat.whatsapp.com/FN6K62MKkXwLHfuzHTeCd1

நன்றி. 

அடுத்த வாரம் சந்திப்போம். 

 = = = = = = = = = = = = 

66 கருத்துகள்:

  1. ரவை தயாரிப்பு தகவல் தவறு. ரவை கோதுமையிலிருந்து வருகிறது. கோதுமை மாவில் சத்துக்கள் உள்ளன. ரவையில் இல்லை. அதுக்கும் மைதாவுக்கும் ரொம்ப வேறுபாடு கிடையாது. அதனால் எடை குறைப்பு, மற்ற விஷயங்களில் ரவை உபயோகிக்கக் கூடாது என டயடீஷியன் சொல்வர்.

    சின்ன வயதில் பன்சி ரவை என்று ஒன்றில் அம்மா உப்புமா பண்ணுவார். அது மிகவும் ருசியாக இருக்கும். அது சோளத்திலிருந்து செய்யப்படுகிறது எனப் பின்னர் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி. இப்போது பன்ஸி ரவா கஞ்சி சாப்பிட்டவாறு இதை தட்டச்சு செய்துகொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  2. பல நேரங்களில் உணவகத்தில் உப்புமா ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களைக் கண்டு வியந்திருக்கிறேன். இதுகூட வீட்டில் செய்யத் தெரியாதவர்களும் உண்டா என.

    ஆளைக் கண்டவுடன், உடனே சூடாகச் செய்ய முடிந்தவை ரவையில் செய்யும் உப்புமா, கேசரி, பஜ்ஜி போன்றவை. அதனால்தான் இவைகள் பெண்மணிக்குக் கை கொடுக்கும் உணவு.

    பதிலளிநீக்கு
  3. பலர் ஜவ்வரிசி பாயசம், ரவை பாயசம் என ஜல்லியடிப்பர். நான் அவற்றை ரவை கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி என்று சொல்வதுதான் வழக்கம். நாலு முந்திரி திராட்சை போட்டால் பாயசமாகிடுமா?

    பதிலளிநீக்கு
  4. நொறுக்குத் தீனி சாப்பிடும் குணத்தைக் கட்டுப்படுத்த நான் நைலான் ஜவ்வரிசி பெரிய சைஸ் வாங்கிவைத்துக்கொண்டு, பத்து பதினைந்து வாயில் போட்டுக்கொள்வேன். அது ஊறி சாப்பிட ரொம்ப நேரம் ஆகும் என்பதால். பிறகு ஜீனி மிக்க் குறைவாகப் போட்டு பெரிய நைலான் ஜவ்வரிசியில்்பாயசம் போன்று சாப்பிடப் பிடிக்கும். சம்பந்தி, டயட்டுக்கு அது கெடுதல் என்று சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜவ்வரிசியை raw வாக சாபிடமுடியுமா!

      நீக்கு
    2. வாய்ல ரொம்ப நேரம் வச்சிருந்தா ஊறும். அது வரைல நொறுக்குத் தீனி சாப்பிட முடியாதில்லையா?

      நீக்கு
    3. follow செய்து பார்க்கிறேன்.

      நீக்கு
  5. நான் எடுத்த படத்துக்கு நானே வாக்களிக்கும் முறை பிடிக்கலை. மற்ற படங்களை ஒப்பீடு செய்ய நேரம் கிடைக்கலை. கீர படங்கள் மாத்திரம் பார்த்து, கொஞ்சம் விட்டால் ஒரே போட்டோவை இருபது கோணங்களில் படமெடுத்து அனுப்பிவிடுவார் போலிருக்கே எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அதற்கு நான் சாரி என்று கௌ அண்ணாவுக்குத் தகவல் அனுப்பினேன். அது அன்று எடுத்து வெயிலில் கண்ணு சரியா தெரியாமல் செலக்ட் செய்ததில் எல்லாம் செலக்ட் ஆகி போயிருந்திருக்கு அப்புறம் அவருக்கு ஏதேனும் ஒன்றை எடுத்துக்கோங்கன்னு சொல்ல விட்டுப் போச்சு கௌ அண்ணா எடுத்துப்பார் என்று நான் நினைத்தது ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
    2. அண்ணா இனிய காலை வணக்கம். ஒரு சில பரிந்துரைகள் வழங்கலாம் என்ற எண்ணத்தில். 1. எனது மூன்று புகைப்படங்களையும் போட்டியில் போட்டிருக்கீங்க அது சரியா என்று என் மனம் உறுத்துகிறது. அதுவும் ஒரே வகைப் படங்கள் செலக்ட் செய்யும் போது எல்லாம் செலக்ட் ஆகி வந்திருக்கிறது. நீங்கள் ஒன்றுதான் எடுத்துப்பீங்கன்ற எண்ணத்தில் அப்படியே விடுவிட்டேன். அதற்கும் ஸாரி அண்ணா.

      யாரேனும் அந்த மூன்று ஒரே வகைப் படங்களுக்கும் நான் நினைப்பதைப் போல சொன்னால், நான் இங்கு சொல்லியிருப்பதை நீங்கள் சொல்லிக்கலாம், நானும் அது பொதுவெளியில் வந்தால் நானும் சொல்லிவிடுகிறேன்.

      இதுதான் நான் அன்று அண்ணாவிற்கு கொடுத்த மெசேஜ்.

      இது தவிர மேலும் ஓரிரு பரிந்துரைகள் கொடுத்திருந்தேன்.

      கீதா

      நீக்கு
    3. போட்டியில் பங்கெடுக்கறவங்க ஓட்டுப் போடலாம் என்பது தெரியாம போச்சே! நான் போடக் கூடாது என்று நினைத்துவிட்டேன். ஏன்னா எனக்கு வெற்றி பெற்ற இருபடங்களும் மனதில் தோன்றியது. அப்ப யார் அனுப்பினாங்கன்னு தெரியாது!!

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன் க்கா... சீரியஸா எடுத்துக்காதீங்க. ஒரு படம் மாத்திரம் அனுப்பியிருந்தீங்கன்னா நான் உங்கள் படத்திற்குத்தான் வாக்களித்திருப்பேன். கிராமத்துல எல்லோருமே உழைப்புக்கு அச்சறதில்லை. நகரத்துலதான், எனக்கு அறுபது ஆயிட்டது, வயசாயிடுச்சு, மனைவி டயத்துக்கு சமைச்சுக் கொண்டுவந்து போட்டுடுவா, எனக்கு அக்கடான்னு இருக்கும், ஓடிடில படங்கள் பார்த்து பொழுது ஓடிடும்னுலாம் சொல்றது.

      நீக்கு
  6. பள்ளி ஹாஸ்டலில், காலேஜ் ஹாஸ்டலில், ஊரிலிருந்து மாணவர்கள் வரும் அன்று காலை உப்புமாதான் போடுவார்கள். அதை ஒரு நாளும் தவறவிட மாட்டேன். மேலே லைட்டா ஜீனி தூவியிருப்பார்கள். அவ்வளவு ருசி.

    மதுரையில் மேல்படிப்பு படித்தபோது, ஹாஸ்டலில் கொடுக்கும் குஸ்கா போன்றவை எனக்குப் பிடிக்காது. நான் எப்போதுமே நேரத்துக்கு உணவுக்கூடம் சென்றுவிடுவேன். ஒரு நாள், அவங்க ஊத்தாப்பம் மாதிரி தோசை போட்டார்கள். எனக்கு அடுத்து இருந்தவர்கள் இருபது பேரும், தோசை இலையில் போடப் போட தரையில் வீசினார்கள். எல்லோரும் ஸ்ட்ரைக் என எழுந்தபின் நான் எப்படிச் சாப்பிடுவது? நான் பிஜி. மற்றவர்கள் யுஜி. இது பற்றி பின்னால் எழுதறேன்.

    இரவு உணவு பற்றி ஸ்ட்ரைக் என்பதால் வார்டன் வந்தார். அப்போவே ஒன்பது மணி ஆகிவிட்டது. எல்லோரும் உணவைக் குறை சொல்லவும், சரி இப்போ என்ன பண்ணலாம் என்று என்னைக் கேட்டார். உப்புமா பண்ணிடுங்க என்றேன். அனைவரும் ஓஓஓ என்று கத்தி கலாட்டா செய்யவும் பிறகு குஸ்கா பண்ணிடலாம் என முடிவு செய்தனர். என் கண்ணோட்டத்தில் அவர்கள் எல்லோரும் முட்டாள் மாணவர்களாகத் தோன்றியது

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துகள்.

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    ரவை பற்றிய பதில்களை ரசித்து படித்தேன்.

    புகைப்பட போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

    நானும் அனுப்ப சில படங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் அனுப்ப நேரம் இல்லாமல், வசதி இல்லாமல் போய் விட்டது.

    பரிசு தொகை எவ்வளவு..? ஆ.. சொக்கா..! என்று தருமி வசனத்தை இன்றைய மஹா சிவராத்திரி தினத்தில் "அவனை" நினைத்துக் கொண்டேன்...! :))))
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா கமலாக்கா.....நானும் தருமி வசனத்தை நினைத்தேன்!!!!!!! ஆ சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு!!!!

      கீதா

      நீக்கு
    2. //நானும் அனுப்ப சில படங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால் அனுப்ப நேரம் இல்லாமல்,// இது என்ன... சிலர் சொல்வது போல எனக்குத் தோன்றுகிறது (போட்டிக்கு கதை எழுதி அனுப்பணும்னு பாதி எழுதி டிராஃப்டில் பல கதைகள் இருக்குன்னு சிலர் சொல்வாங்களே)

      நீக்கு
    3. ஹா ஹா ஹா. அதேதான். இது வேற மாதிரி கதை..! போட்டிக்கு புகைப்படங்கள் மட்டுமா..? இல்லை அதற்கு சில வரிகளையும் சேர்த்தா..? எனத் தெரியாமல் , நான் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் உழைப்பு சம்பந்தமாய் சில வரிகளை வேறு சேர்த்து எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் விதமாய் ஒரு பதிவாக்கி அனுப்பலாமா.. .. ! என திண்டாடும் போதே, இதோ போட்டிக்கான புகைப்படங்கள் வந்து விட்டன. :))) இனி அது கண்டிப்பாக டிராப்டில்தான் உறங்கும்.

      நீக்கு
  9. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  10. மகிழ்ச்சியான
    வாழ்த்துகள் நெல்லை அண்ட் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. மிட்டாய்க் கடைக்குள் கிராமத்துப் பையன் நுழைந்த மாதிரி இருக்கின்றது

    பதிலளிநீக்கு
  13. நான் இவரைப் படம் எடுத்து அனுப்பணும் என்று போட்டி வெளியானபோதே நினைத்தேன். மறுநாள் மார்க்கெட் போனபோது இவர் இல்லை. அப்புறம் வேறொரு நாள் பார்த்து புகைப்படம் எடுத்தேன்.

    வயதானவர். பழங்கள் மாத்திரமே விற்பார். சில நேரங்களில் கூடுதல் விலையாயிருக்கும். நான் இவரிடம் எப்போதும் சீசனில் மாம்பழம் வாங்குவேன். தாத்தா ரொம்ப ஜாஸ்தி விலை என்று சொன்னால் பத்து ரூபாய் குறைப்பார். நான்தான் பழம் செலெக்ட் பண்ணுவேன், எவ்வளவு சொன்னாலும் சரி என்பேன். உழைக்கணும், தனக்கு வேண்டியதை சம்பாதிக்கணும் என்ற நினைப்பே இந்த வயதிலும் அவரை மார்க்கெட்டுக்கு வர வைக்கிறது என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  14. கிராமத்தில் கொள்ளு எடுக்க ரோடில் காயப்போடுவது போன்றவை உழைப்பு என்றாலும், அவர்களுக்கு அது ஒரு சீசனல் நடவடிக்கை. கிராமத்து விவசாயிகளைப் போல என்று தோன்றியது. இளவட்டங்கள் அவர்களிடம் தொழில் பழகிக்கொள்ளுமா என்பது சந்தேகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்து அனுப்பியது - அடிப்படையில் எனக்கு விவசாயம் என்றாலே ஈர்ப்புண்டு....ஊர்ல வயல்ல இறங்கி வேலை செய்ததாலோ என்னவோ.....இப்படி வைக்கோல் பிரித்துப் போட்டு நெல் பிரிப்பது என்று. விவசாயம் இப்ப மலிந்து வருது. இவங்க உழைக்கலைனா உலகமே சோர்வாகிடும்...எல்லா காய் நெல் சோளம் எல்லாமே விளைச்சலும் விவசாயத்தின் கீழ்தான். இவங்களுடைய உழைப்பில்தான் உலகமே உயரும் என்ற ஒரு கருத்தில்....எதிர்காலத்தில் காப்ஸ்யூல் வடிவில் வருமாமே சாப்பாடு எல்லாம்!! இது சாம்பார், இது சாதம்னு!!

      கீதா

      நீக்கு
  15. உப்புமாவிற்கான ரவை தோல் நீக்கப்பட்ட கோதுமையிலிருந்து கிட்டத்தட்ட கடைசி ப்ராஸஸ். அதிலும் கடைசி ப்ராஸஸ்தான் சிரோட்டி ரவை. ரொம்ப ஃபைனாக இருக்கும். அதனினும் அடுத்த ப்ராஸஸ் மைதா.

    சோளத்திலிருந்து எடுக்கப்படுவது பன்ஸி ரவை.

    கோதுமை ரவை என்பது கோதுமையை தோல் நீக்காமல் உடைத்தெடுத்துச் செய்யப்படுவது கோதுமை ரவா இது ஒவ்வொரு வடிவத்திலும் வருகிறது. கோதுமை சாதத்திற்குக் கொஞ்சம் பெரிசா ரவை. கோதுமை ரவா உப்புமாவிற்கு அதற்கு ஏற்ப சன்ன ரவை....கஞ்சிக்கு அதையும் விட மெலிதாக...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வீட்டிற்கு வரும்போது எண்ணெய் குறைவான ரவா உப்புமா என் சாய்ஸ். இப்போதைக்கு வியாதி இல்லை என்பதால் கோதுமை ரவை உப்புமா வேண்டாம். ஆமாம் தொட்டுக்க நல்ல சாய்ஸ் எது?

      நீக்கு
    2. தொட்டுக்க சர்க்கரை. (அஸ்கா)

      நீக்கு
    3. ஓகே டன்! நெல்லை. ரவை லோ கலோரி.

      சாய்ஸ் சஸ்பென்ஸ் ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    4. ரவா உப்புமாவிற்கு இட்லி பொடி/ந.எண்ணெய், அஸ்கா கூட பரவாயில்லை. தேங்காய் சட்னி-சரி சரி சாப்பிடலாம். கார எலுமி ஊறுகாய்-ஓகே நல்லாருக்குமே. மத்த எதுவும் எனக்குப் பிடிக்காது. பாருங்க எப்படி புதிதா ஒண்ணு முயற்சிப்போமே என்ற எண்ணம் இல்லாமல் இருக்கேன்.

      நீக்கு
    5. எங்க வூட்டுல நோ ஊறுகாய்!!!

      கீதா

      நீக்கு
    6. ரவா உப்புமாவுக்கு சாம்பார் அல்லது பழைய வத்தல் குழம்பு எனக்கு சைடு டிஷ். தேங்காய் சட்னியும் ஓகே

      நீக்கு
  16. உழைப்பவர்களில் unrecognised category சாலை, கழிவுநீர் குழாய் அடைப்பு, டாய்லெட் போன்றவற்றைச் சுத்தம் செய்பவர்கள். அவர்களையும் நம்மவர்களில் ஒருவராக எண்ணும்போதுதான் நாம் மனித்த்தன்மை பெறுகிறோம், நம்மையும் மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி பெறுகிறோம்.

    அதற்கான முதல் படி, வீட்டில் மனைவியை நமக்குச் சம்மாக, ஏன் நம்மைவிட ஒரு படி மேலாக எண்ணுவது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை. நான் திருவனந்தபுரத்தில் இருந்தப்ப காலனில drainage பிரச்சனை வந்தது. அப்ப அந்த சாக்கடைக் குழாய்க்குள் இறங்கி சுத்தம் செய்தார்கள். அவங்க குடிச்சிருந்தாங்கதான் ஆனால் குடிக்கலைனா அதுக்குள்ள இறங்க முடியாது. அவங்க அள்ளிப் போட்டதை பார்த்தீங்கனா.....மக்கள் படிச்ச மக்களே எவ்வளவு அறிவிலிகள்னு ...

      கீதா

      நீக்கு
  17. ரவா உப்புமா, பொங்கல், கிச்சடி , கஞ்சி வித்யாசம்... பதில் சரியில்லை.

    ரவா கஞ்சியில் மோர் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் பாவம் அவங்க கேடகரில வருவாங்க. காய் வேணும்னு கேட்கறான், நமக்கோ சீரியல் பார்க்கணும், உணவு பண்ண நேரமாகும் என்று நினைப்பவர்களின் சாய்ஸ் கிச்சடி. கிடக்கறான் கழுதை.. எதையோ பண்ணிக்கொடுத்து வாயடைப்போம் என நினைப்பவர்கள் செய்வது உப்புமா. வித்தியாசமா செய்வோமே என நினைப்பவர்கள் செய்வது ரொஆ பொங்கல், தொட்டுக்க கார எலுமிச்சை ஊறுகாய்.

    பதிலளிநீக்கு
  18. கௌ அண்ணே! தெய்வீகத்துக்கு "ஆஹா என்ன தெய்வீகச் சிரிப்பு" என்று நாகேஷ் சொல்வாரே சிவாஜியின் சிரிப்பைப் பார்த்து....அந்த சிவாஜியின் ஸ்டில்லை ஃபோட்டோ எடுத்து அனுப்பி ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  19. //பக்கம் எண்ணை // இதற்குப் பதில் ஒவ்வொரு படத்திலுமே 1,2, என்று குறித்துவிடுங்கள். காலையில் பார்க்கும்போதும் குழப்பமே ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் எல்லா பகுதியுமே முக்கியம். ஜீவநாடி யான ஓரிடத்தில் ஒரு எண்ணை புகுத்தி விட்டேன் என்றால் அதனால் படைப்பாளி ஏற்படுத்த நினைத்த impact பாதிப்பு அடைந்துவிடுமோ என்ற தயக்கம். அதனால்தான் படைப்புகளை அப்படியே வெளியிட்டேன்.

      நீக்கு
  20. இனிப்பு உப்புமா ஏன் கேசரி என்று சொல்லப்படுகிறது?//

    கேஸர் என்றால் குங்குமப்ப்பூ.....அந்த வண்ணத்தில் செய்வதால் வந்த பெயர்.....முன்னர் எல்லாம் அதில் ஒரிஜினல் கேஸர் அதாவது குங்குமப் பூ போட்டுச் செய்திருப்பாங்க என்பது என் புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  21. உங்கள் அனைவருக்கும் சிவராத்திரி வாழ்த்துகள்.
    ஓம் சிவாய நமக.

    படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.

    உழைக்கும் வர்க்கத்தை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  22. ​ஆன்மிகம், தெய்வீகம் இரண்டும் ஒன்றா? இல்லை என்றால் 6 வித்தியாசங்கள் கூறவும். (உதாரணமாக முகத்தில் அப்படி ஒரு தெய்வீக களை என்று கூறுகிறோம், ஆன்மிக களை என்று கூறுவதில்லை)

    product managerக்கும் production manager க்கும் என்ன வித்தியாசம்.

    காய்கறிகளின் விலை ஏற்றமும் இரக்கமும் மிகவும் அதிகம் ஆக இருப்பதேன். ஏறினால் ஆனை விலை. குறைந்தால் தூக்கிப் குப்பையில் போடும் விலை. இந்த வித்தியாசம் ஏன்?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்மீகம் தெய்வீகம் வேறு வேறு. தெய்வீகத்தை அடைய ஆன்மீகம் வழி (ஆன்மீகம் என்பது நம்மை அறிதல்.)

      கீதா

      நீக்கு
    2. ஆ!!!! இது புதன் கேள்விக்கா......முந்திரிக் கொட்டை....கருத்து சொல்லிவிட்டேனே...எபி ஆசிரியர்கள் கையை தூக்கி இட்ஸ் ஓகேன்னு அருள்புரிந்து என்னை விட்டுருங்க!!!!!!

      கீதா

      நீக்கு
    3. kgg சார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

      Jayakumar​

      நீக்கு
  23. புதன் கேள்வி: சிவராத்திரினா உங்களுக்கு என்ன நினைவு சட்னு தோணுது? எனக்கு ஈஷா யோகா வில் தமன்னா போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுதான் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  24. ​உப்புமாவில் வெங்காயம் பச்சை மிளகாய் உண்டு. எண்ணெய் மிதமாக உண்டு.
    ரவை பொங்கலில் மிளகு சீரகம், பாசிப்பருப்பு, சில சமயம் இஞ்சியும், நெய்யும் உண்டு.
    ​ரவை கஞ்சியில் தண்ணீரில் ரவை சோறு போல் வெந்து இருக்கும். வேறு சேருவகைகள் கிடையாது.
    உப்புமாவில் கொஞ்சம் காரட் போன்ற காய்கள் சேர்த்திருந்தால் கிச்சடி. கேரளத்தில் கிச்சடி என்பது வேறு. பச்சடியின் எதிர் கிச்சடி.
    ரவை பாணி பூரி (கோல்கப்ப) செய்ய பயன்படும்.




    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!