திங்கள், 24 பிப்ரவரி, 2025

"திங்கக்கிழமை : புடலங்காய் 25 - JKC ரெஸிப்பி

புடலங்காய் 25

ஸ்ரீராம் நேற்று (13-02-25) வெஜ் எறா தொக்கு படம் போட்டிருந்தார். படத்தில் நிஜ எறா போலவே குடல் நீக்கிய அடையாளம் உட்பட,  காய் இருந்தது. கடல் வாழைக்காய் தெரியும். வெஜ் எறா?? காய் என்னவாக இருக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொண்டது தான் மிச்சம்.. ஒரு பிடியும் கிடைக்கவில்லை.ஆனால் அந்த தொக்கு என்பது சாசுகள் ஊற்றி செய்யப்பட ஒன்றாக தெரிந்தது.

சரி நாமும் புரட்சி செய்யலாம் என்று தீர்மானித்தேன். புடலங்காய் ஒரு சிறிய துண்டு இருந்தது. இன்றைக்கு புடலங்காயை சாசுகளில் பிரட்டி ஒரு fusion கறி செய்தேன். என்ன பெயர் வைக்கலாம் என்று ஆலோசித்தபோது சிக்கன் 65 போன்று உதித்த பெயர் தான் புடலங்காய் 25.

எடுத்துக்கொண்ட பொருட்கள்

புடலங்காய் 4 இன்ச் துண்டு. 4 cm நீளம் 1 cm அகலம் துண்டுகளாக்கப் பட்டது.


Schezwan  சாஸ் அரை டீஸ்பூன்

Sweet and spicy சாஸ் அரை டீஸ்பூன்.

Dark soy சாஸ் அரை டீஸ்பூன்.

உப்பு கொஞ்சம்.

புடலங்காய் துண்டுகளை கழுவி சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். 

அடுப்பை பற்றவைத்து வாணலி ஒன்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.


எண்ணெய் சூடானவுடன் ஸ்செச்சுவான் சாஸ் அரை டீஸ்பூன், ஸ்வீட் அண்ட் ஸ்பைசி அரை டீஸ்பூன், சோயா சாஸ் அரை ஸ்பூன் ஊற்றி, புடலங்காயையும் சேர்க்கவும்.  நன்றாக பிரட்டி புடலங்காய் வெந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு அடுப்பை அனைத்து இறக்கி கொள்ளவும்.

இந்த பதார்த்தத்தில் காரம் ஸ்கெட்சுவன் சாஸ், புளிப்பிற்கு டொமட்டொ சாஸ், சுவை கூட்ட சோயா சாஸ் மற்றும் சாஸில் பூண்டு உள்ளன.

திப்பிசம் என்றாலும் நன்றாக இருந்தது. எங்கும், எதிலும் குறை கண்டுபிடிக்கும் நானே எனக்கு ஒரு ஷொட்டு கொடுத்துக்கொண்டேன்.  

1 கருத்து:

  1. அட... வித்தியாசமான ரெசிப்பி. நல்ல முயற்சி.

    ஆனால் பாருங்க... பஜ்ஜி, பிட்சா போன்றவற்றிர்க்கு கெச்சப் (இந்திய கெச்சப்புகள், இந்திய மருத்துவமனைகளின் நலனிற்காக மிக அதிகமான சர்க்கரை சேர்த்துச் செய்யப்படுபவை. அது செரியலாக இருந்தாலும் சரி மற்ற பொருட்களாக இருந்தாலும் சரி) தொட்டுக்கொள்வேன். ஆனால் பிற சாஸ்களை விரும்புவதில்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!