தோசை எனப்படுவது யாது? யார் அதை முதலில் உண்டாக்கியது?
# தோசை என்பதோர் உணா எல்லாரும்ஆசையாய்த் தின்பர் மகிழ்ந்து.
தோசை முதலில் சைடோஜி எனும் மராட்டியரால் உருவாக்கப்பட்டது. அவர் பெயரில் இருக்கும் சைதோ ஆகிய முதல் எழுத்துக்களை திருப்பிப்போட்டு தோசை என்று பெயர் வைத்தார். திருவல்லிக்கேணியில் இப்போதும் அவர் பெயரில் சைடோஜி சந்து என்று இருப்பதை காணலாம்.
& கூகிளுக்கும்,விக்கிக்கும் நன்றி!
Who is the founder of dosa?
Chalukya King Somesvara III
தோசை எத்தனை வகைப்படும்?
# எவ்வளவு உணவு பதார்த்தங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு வகையிலும் தோசைகள் இருக்கின்றன.
& விக்கிபீடியா படி 37 வகை தோசைகள் உள்ளன.
ஆனால் பெங்களூரு தள்ளுவண்டி கடைகளின் படி, 99 வகை தோசைகள் உள்ளன.
ஒரு தள்ளுவண்டியில் எட்டிப் பார்த்தேன்.
சாதாரண மாவு; சாதாரண தோசைக்கல் இரண்டையும் வைத்துக்கொண்டு, ஒரு சாதாரண ஆள்,
14 தட்டுகள்.
ஒரு தட்டில் காரட் துருவல்,
மற்றொன்றில் குடமிளகாய் துண்டங்கள், இப்படி , வெள்ளரி, மிளகாய்ப்பொடி, பீன்ஸ், பீட்ரூட், என்று பலவகை பொருட்கள்.
எல்லாவற்றையும் Permutations & Combinations வகையில் சேர்த்தால், 99 வகை தோசைகள் வரும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால், ரவா தோசை + above combinations, மைதா தோசை with மற்ற கலவைகள் என்று செய்வார் போலிருக்கு!
பிடித்த தோசை முருகலா, மெதுவா?
# கருகல் தவிர்த்த தோடிதமான சூடாக
முறுகலுக் குண்டோ நிகர் ?
& தோசையில் முருகல்; வடையில் மெது!
தோசை மட்டும் ஏன் சைவம் அசைவம் என்று இரண்டு பக்கமும் சாய்கிறது?
# அசைவ தோசை என்று எதுவும் கிடையாது. அதன் துணைப் பதார்த்தம் அசைவமாவதுண்டு. அத்து மீறல்.
மசால் தோசையை கண்டுபிடித்தவர் யார்?
# மசால் தோசையைக் கண்டு பிடித்தவர் ஒரு கடைநிலை ராணுவத்தவர். எடுபிடி வேலை செய்பவர்களுக்கு அந்தக் காலத்தில் பட்டாளத்தில் "மசாலஜி" என்று பெயர்.
& கூகிள் ஆண்டவர்படி, எல்லா வகை தோசைகளுக்கும் ஆரம்பம் உடுப்பி (கர்நாடகா) மட்டுமே.
ஆன்மிகம் என்ற வார்த்தை இந்து மதத்தினர் மட்டுமே பயன் படுத்தும் ஒரு வார்த்தை. அதன் தெளிவான அர்த்தம் என்ன? பக்தி சம்பந்தப்பட்டது? மதம் சம்பந்தப்பட்டது? வாழ்க்கை சம்பந்தப்பட்டது? எது சரி?
# ,ஆத்மா தொடர்பானது ஆன்மீகம்.
பக்தி, மதம், வாழ்க்கை எல்லாவற்றுடன் சம்பந்தப் பட்டதுதான்.
ஆமாம் வெஜ் எறா என்றால் என்ன? காயா, என்ன காய், அல்லது கொழுக்கட்டையா? ரகசியமா சொல்லுங்க.
* இது சம்பந்தப்பட்ட ஹோட்டல் காரர்களை கேட்க வேண்டிய கேள்வி. சமைத்தது நான் அல்ல. சாப்பிட்டது மட்டும்தான் நான்!
கே சக்ரபாணி ; சென்னை 28:
புல்லாங்குழலுக்கும் தேன் குழலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
# இரண்டுமே வாயோடு தொடர்புள்ளவை .
& புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும்
தேன்குழல் வாயில் நுழைந்தால் புதுப்புது சுவையாகும்!
வக்கீல்கள் கருப்பு கோட் அணிவதை விடவில்லை. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள். வெள்ளை கோட். அணிவதை விட்டு விட்டார்கள் ஏன். அந்த டிசிப்ளின் இல்லை?
# டாக்டர்களுக்கு ஸ்டெதாஸ்கோப் அடையாளம் மட்டுமே போதுமானதல்லவா ?
இவர் டாக்டரா வேறு யாராவதா என்ற ஐயப்பாடு தோன்றும் இடங்கள் இருக்குமானால் அங்கு டாக்டர்கள் வெள்ளைச் சீருடை அணிவது தேவையாக இருக்கும்.
பத்திரிகைகளில் தங்களைப்பற்றி வரும் விமர்சனங்களை பார்த்து அரசியல்வாதிகள் யாரேனும் திருந்தியிருப்பார்களா?
# விமர்சனம் ஆலோசனை புத்திமதி இவை எவற்றாலும் யாரும் திருந்தியது கிடையாது. திருந்த வேண்டும் என்கிற எண்ணம் நம் அகத்திலிருந்து எழ வேண்டும். அப்படி எழுவதற்கு சில சமயம் சில சம்பவங்கள் , சில பேச்சுக்கள் போன்றவை காரணமாக அமைவதுண்டு.
& திருந்துவதாவது! விமரிசகரைத் தூக்கி உள்ளே போட்டு மாவுக்கட்டு கட்ட ஏற்பாடு செய்வார்கள்!
பானுமதி வெங்கடேஸ்வரன்:
கோவில்களில் இருக்கும் அகலமான படிகளை பலர் மதிக்காமல் தாண்டிச் செல்வதன் தாத்பர்யம் என்ன?
# இறைவன் சன்னிதானத்தை நெருங்கும் போது ஒரு சிறு மரியாதை காட்டுகிறோம் என்கிற திருப்தி தவிர வேறு ஏதும் விசேஷ தாத்பரியம் இருப்பதாகத் தெரியவில்லை.
ரொம்ப அகலமான படிகளைத் தாண்டும் போது கால் தடுக்கும் அபாயம் இருக்கிறது.
& கோயிலுக்கு செல்லும் போது கோயில் நுழைவாயிலின் முதல் படிகட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வது வழக்கம். அதனை பலரும் அவதானித்திருப்போம் இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
கோயில் நுழைவாயிலின் முதற் படி சற்று அகலமாதனதாகவே எப்போதும் அமைக்கப்படும். இருப்பினும் அதனை தாண்டியே செல்ல வேண்டும்.
கோவிலுக்குள் நுழையும் முன்னர் கால்களை கழுவிவிட்டு தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு பின்னர் கோபுரத்தை வணங்கியே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என இந்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
கோவிலில் நாள் முழுவதும் மந்திரங்கள் ஓதப்பட்டு, மங்களகரமான இசைகள் ஒலிக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட புனிதமான இடத்திற்குள் செல்லும் போது நாம் சுமந்த செல்லும் தேவையற்ற சிந்தனைகளை சுமந்து செல்லக் கூடாது.
கோவில் படிகட்டில் கால் வைத்து உள்ளே செல்லும் போது எதிர்மறை எண்ணங்களை நாம் சுமந்து உள்ளே செல்வதாகவே அர்த்தம். அதன் காரணமாக தான் படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும் இவ்வாறு படிகட்டை தாண்டும் போது நமது எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகின்றது.
நமது உள்ளத்தில் இருக்கும் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் எதிர்மறை ஆற்றல்களை கோவிலுக்கு வெளியிவேயே விட்டு செல்வதை உணர்த்துவதற்காகவே கோயில் செல்லும் போது படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டும்.
(நன்றி : manithan.com website.)
நெல்லை :
வாசகர்களுக்கான கேள்வி:
ஹோட்டல்ல ஒரு பொருளுக்கு விலை, பல செலவுகளை உள்ளடக்கியது என்று நான் நம்பறேன். ஒருவன் சாப்பிட உட்கார்ந்தால், வாழை இலை உள்ள தட்டு, டம்ளர் எல்லாம் வைக்கறாங்க, இவன் வடை மாத்திரம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடலாம். ஒரு வேளை அடுத்த து அவன் ரவா தோசை சாப்பிட்டால் அதுக்குன்னு புதுசா வாழை இலை, தட்டு தருவதில்லை. நியாயமா பார்த்தால் இருக்கும் வாழை இலையிலேயே அடுத்தடுத்த ஐட்டம் சாப்பிடும்போது அவற்றின் விலை குறையவேண்டாமா? உதாரணமா வடை 30 ரூபாய்னா, நான் இட்லி சாப்பிட்டுட்டு அதே இலைல வடை சாப்பிட்டேன்னா எனக்கு 25 ரூ தானே சார்ஜ் பண்ணணும்? அடுத்து ரவா தோசையும் சாப்பிட்டால், 70 ரூக்கு பதில் 65 தானே சார்ஜ் பண்ணணும்?
>>>>> வாசகர்கள் பதில் சொல்லவும்.
= = = = = = = = = = =
KGG பக்கம் :
பாண்டிச்சேரி பயணத்தில் எடுத்த படங்கள் - மேலும் சில.
பூவே செம்பூவே !
வானும், நிலமும் !
தோசை பற்றிய கேள்விகளுக்கு குறள் மூலம் பதில் தந்தது சிறப்பு. விடைகள் ரசிக்கும் படி உள்ளன. மகிழ்ச்சி, நன்றி.
பதிலளிநீக்குஅசைவ தோசை உண்டு. முட்டை தோசை, மற்றும் கறி தோசை. முட்டை தோசை என்பது கல்லில் தோசை பரத்தி அதன் மேல் முட்டையும் உடைத்து ஊற்றி தடவி திருப்பி போட்டு ஆம்லெட் தோசை ஆக்குவது. கறி தோசை ஊத்தப்பத்தில் வெங்காயம் போடுவது போல் வெந்த மசாலா கீமாவை போட்டு வேகவைத்து எடுப்பது.
போட்டோக்கள் நன்றாக உள்ளன.
Jayakumar
பாராட்டுக்கு நன்றி.
நீக்குகோயிலின் படிகளைத் தாண்டிச் செல்வது.... குலசேகர ஆழ்வார் திருப்பதி பற்றிய பாசுரங்களில் மீனாய் பிறந்து திருக்குளத்தில் இருக்கணும் என்றெல்லாம் ஒவ்வொரு பாசுரமாகச் சொல்லி வரும்போது, படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார். அதனால் கருவறைக்கு வெளியே உள்ள படிக்கு குலசேகரன் படி என்பது பெயர். ஆழ்வார் இருக்கிறார் என்ற எண்ணம் அர்ச்சகர்களை அந்தப் படியைத் தாண்டிச் செல்ல வைக்கும். பிறகு சில கோயில்களில் திருப்பணி செய்தவர்கள் தங்கள் படிமத்தை வணங்கும் நிலையில் சில படிகளில் அமைத்திருந்தால் அதனைத் தாண்டிச் செல்வது நல்லது. மற்ற எந்தப் படிகளையுமே தாண்டிச் செல்வது அவசியமில்லை. கஷ்டப்பட்டுத் தாண்டுகிறேன் என்று முயன்று ரிப்பேர் ஆக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது
பதிலளிநீக்குநல்ல அறிவுரை! நன்றி.
நீக்குகர்பக்ருஹத்தில் நுழையும்போது இருக்கும் படியைத் தான் மிதிக்கக் கூடாது என்பார்கள். ஆழ்வார் படியாய்க் கிடப்பதால் அவ்வாறு சொல்வார்கள். ஆனால் எல்லாக் கோயில் கர்பக்ருஹப்படியையும் மிதிப்பதில்லை. தாண்டியே வருவோம். என்னால் எல்லாம் இப்போதிருக்கும் நிலைமையில் அதெல்லாம் சாத்தியமே இல்லை. பெரிய ரங்குவைப் பார்த்தே ஐந்து வருடங்கள் ஆகின்றன. நம்பெருமாளைப் பார்த்தும் நான்கு வருடங்கள் ஆகின்றன. வீடியோக்களில் பார்ப்பதோடு சரி.
நீக்குஅரங்கனருள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு.
நீக்குஅவரைக்காயை விதைகளை அரைத்துச் செய்யும் தோசை இங்கு பிரபலம். என்க்குப் பிடித்தது நீர் தோசை, வெந்தய தோசை செட் தோசை ஆனியன் ஊத்தாப்பம் ரவா தோசை, தோசை பாத், சாதா தோசை. இதைத் தவிர ரோஸ்ட், பேப்பர், மசாலா, மைசூர், கோதுமை, எனப் பல்வேறு வெரைட்டிகள் உண்டு. பெரும்பாலும் மசாலா பண்ணும் முறை மாறிவிட்டதால் மசால் தோசை பிடிப்பதில்லை
பதிலளிநீக்குபெங்களூரில் பூரிக்குக்கூட மசாலா கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். வெள்ளை சட்னி மற்றும் பீட்ரூட் காரட் போட்ட கண்றாவி கூட்டு. ரசனையே இல்லாதவர்கள்.
நீக்குஅதுக்கு நீங்க பல்லியா(வெஜிடபிள்னு அர்த்தம்) வேணும் சாஹூ வேண்டாம்னு சொல்லணும். கும்பகோணம் கடப்பாவும் சாஹூவும் அண்ணன் தம்பிகள். பல்லியான்றது நம்மவூர் பூரி மசாலாவுக்கு சொந்தக்காரன்
நீக்குபல்லியா ! ஐயே ! அதெல்லாம் வேண்டாம்!
நீக்குஅவரைக்காய் மாதிரி மொச்சைக்காய்களில் செய்யப்படுவது தான் ஃபலாஃபல் எனப்படும் மத்தியக்கிழக்கு நாடுகளில் சிறப்பு உணவாக இருக்கின்றது. ஒரு முறை பண்ணிப் பார்த்தேன். ஏதோ குறை. அதனால் போடவில்லை.
நீக்குto continue
நீக்குதிருப்பதியில் ரயில் நிலையம் அருகே இருக்கும் பீம விலாஸ் ஓட்டலிலும் இப்படித்தான் பூரிக்குக் கிழங்கு கொடுக்கலை. சட்னி, சாம்பார் கொடுத்தாங்க. நான் அப்படியே திருப்பிட்டேன். ஆர்டரைக் கான்சல் பண்ணுங்கனு சொல்லவும். கல்லாப்பெட்டியில் உட்கார்ந்திருப்பவரைக் கேட்டுக் கொண்டு மசாலா தோசைக்குப் பண்ணி இருக்கும் கிழங்கு மசாலாவைக் கிண்ணத்தில் போட்டுக் கொண்டு வைத்தார்கள். சட்னி, சாம்பாரும் இருந்தது. ஆனால் நான் தொடலை. பீமவிலாஸில் தான் மாடியில் தங்கினோம். தங்குமிடமும் நன்றாக இருந்ததோடு அல்லாமல் டிஃபன் வகையறாக்களும் சென்னையை விட மலிவு. ஜிஎஸ்.டி. போட்டும்.
நீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குபத்திரிகை விமர்சனம்... பிரபலமான யாருமே இந்தக் காலத்தில் ஊடகங்களைப் பார்க்க மாட்டார்கள். அவர்கள் அடிப்பொடி பார்த்து கவனத்துகுக்க் கொண்டுவந்தால் மிரட்டல் ஆட்டோ உண்டு. இதைப்பற்றி விவரமா எழுதலாம். திண்டுக்கல்லை இப்போதுதான் அடைந்துவிட்டேன். பிறகு பார்க்கலாம்
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குவெஜ் இறா.... இந்த மாதிரி ஐட்டங்கள் நான் வெஜ் சாப்பிட ஆசை ஆனால் முடியலையே என்று நினைப்பவர்களுக்காக சோயா போன்றவற்றை உபயோகித்து அதே மசாலாச் சுவையில் செய்யப்படுவது. இந்த மாதிரி ஐட்டங்கள் இருந்தா லே அந்த ஹோட்டல் நோக்கம் தெரிந்து அந்தப் பக்கமே செல்வதில்லை
பதிலளிநீக்குவிலையும் வெஜ் ஐட்டம் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நீக்குஆன்மீக எழுப்புதல் கூட்டம் என கிறித்துவர்களிடம் உண்டே
பதிலளிநீக்குஆம்.
நீக்குஆப்னிகம், ஆத்மிகம் வேறே வேறே இல்லையோ? இப்போதெல்லாம் நான் ரொம்பவே லௌகிகமாக மாறிட்டேனோனு நினைச்சுக்கிறேன். ஏனெனில் பக்தி மார்க்கத்துப் பதிவுகளே போட முடியறதில்லை. :( அதையும் ஆன்மிகம் என்பவர்கள் இருக்காங்க. ஆனால் என்னைப் பொறுத்தவரை பக்தியின் முதல் படி.
நீக்குஆன்மிகம் என்பது ஆப்னிகம் என வந்திருக்கு. திருத்தும் முன் பப்ளிஷ் ஆயிடுத்து.
நீக்குபரவாயில்லை. வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.
நீக்குநீ ஒரு காதல் சங்கீதம் பாடலை நினைத்துக்கொண்டு அவரவர் காதலி பேசுவதுபோல வாயைத் திறந்திருக்குமஂபுகைப்படத்தை அனுப்பிடப் போறாங்க
பதிலளிநீக்கு:)))))
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்குதோசை எல்லாமே பிடிக்கும். ஆனா இங்க ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தால், கண்டிப்பா சாம்பார் வேண்டாம்னு சொல்லிடுவேன்! அது போல சாகு ம்ம்ம்ம்ம்ம் தான்! ஆனா ஒரு சில ஹோட்டல்களில் சாகு நல்லாருக்கும். ஆனாலும் தோசைக்குத் தொட்டுக் கொள்ள யோசிப்பேன். இங்கு செட் தோசை நல்லாருக்கும். ஆனால் எனக்கு 3 தோசை சாப்பிட முடியாது. ஒன்றுதான். அதனால நாங்க ரெண்டு பேர் போனா ஒரு ப்ளேத் தான் சொல்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
பெங்களூரில் இந்த ஏரியா local ஹோட்டல்களில் முதல் இடம் : MTR 19 th Main Road, இரண்டாவது இடம் IDC kitchen என்று சொல்லலாம்.
நீக்குஆமாம் ஹையோ நம்ம ஏரியால 50 அடிக்கு ஒரு உணவகம் தான்.
நீக்குரெண்டுமே நம்ம வீட்டுக்கு அருகில். அண்ணா இப்ப ப்ரம்மா வந்திருக்கு 17 க்ராஸ்ல 19வது மெயின் ல 17 க்ராஸ்ல பாபா கோயில் தாண்டி திரும்பணும். அந்த செக்மென்ட்ல இருக்கு
கீதா
பார்க்கிறேன்.
நீக்குவெஜ் எறா என்றால்.....ஒன்று மஷ்ரூம் போட்டு செய்திருக்கணும் இல்லேனா பனீர் இல்லைனா இடி சக்கை. எனக்குத் தெரிஞ்சு அந்த மசாலாதான் அன்று சைவ எறா தொக்குன்னு ஸ்ரீராம் சொல்லிருந்தார். அப்ப எறா தொக்கு எப்படிச் செய்வாங்களோ அந்த மசாலா போட்டுச் செய்திருப்பாங்க அதில் மஷ்ரூம் இல்லைனா பனீர் இப்படி...
பதிலளிநீக்குபொதுவா வாழைக்காயை அப்படிச் செய்வாங்க. இல்லைனா சேனைக் கிழங்கை அப்படிச் சொல்வதுண்டு. மீன் பொறிக்கும் வாசனைம்பாங்க...திருவனந்தபுரத்துல இருந்தப்ப நம்ம வீட்டுல சேனை பொரியல் செய்தா சிப்ஸ் செய்தா பக்கத்துவீட்டுல கேப்பாங்க நீங்க மீன் சாப்பிடுவீங்களான்னு.
எனக்குத் தெரிந்தவரை அதனோடு சேர்க்கும் மசாலாவில்தான் விஷயமே இருக்குன்னு தோன்றும்.
துளசி குடும்பம் நம்ம வீட்டுக்கு வந்தப்ப பனீர் மசாலா செய்திருந்தேன். அவங்க பனீர் கிட்டத்தட்ட சிக்கன் போல இருக்குன்னும், சோயா பனீர் செய்தப்ப மட்டன் போல இருக்குன்னும்...அப்ப தெரிந்தது அது மசாலாதான் காரணம் என்று.
அது போல இடிசக்கை புலாவ் ,செய்தா மட்டன் புலாவ் போல இருக்கு அந்த இடிசக்கைன்னு சொல்வதுண்டு நமக்கென்ன தெரியும் மீன், சிக்கன், மட்டன் எல்லாம்?!!!!! அவங்க சொல்றத வைச்சு சொல்கிறேன்.
கீதா
நீங்க ஒன்னு. ஆர்டர் செய்து சாப்பிட்டவருக்கே என்ன சாப்பிட்டோம் என்று தெரியலை. அவர் கொண்டு வந்தவரிடம் கேட்கவும் இல்லை. உண்மையான அசைவ எறா தொக்கு நான் சாப்பிட்டிருக்கிறேன்.
நீக்குஹாஹாஹா ஆமா ஸ்ரீராம் சொல்லலைதான்...ஆனா மஷ்ரூம் இருந்தது என நினைக்கிறேன். அப்ப அதுவா இருக்கலாம்.
நீக்குபாண்டிச்சேரில இருந்தப்ப தெருல எறா கொண்டு வருவாங்க. மீன்காரம்மா எறா கொண்டு வரலைனா அத கொண்டு வ்ரச் சொல்வாங்க.
அப்ப பக்கது வீட்டுல அதுக்கு மசாலா என்ன அரைபபங்கன்னு கேட்டிருக்கிறேன். அதே மசாலாவுல அதிகம் அந்த வாசனைப் பொருட்கள் சேர்க்காமல் காலிஃப்ளவர், பனீர் ஏதாச்சும் போட்டுச் செய்யலாம்னு தெரிஞ்சுக்குவேன், எல்லாமே பொதுவா நாம வட இந்திய கிரேவிக்குப் போடும் பொருட்கள்தான்.
கீதா
எனக்கு மசாலா அலர்ஜி.
நீக்குஇந்த விஷயங்களில் நல்லவேளையாக நான் யாரையுமே கேட்டுக்க மாட்டேன். ஏதானும் ஒத்துக்காத மசாலாவைச் சேர்க்கும்படி ஆயிடுத்துன்னா? சுயம்பாகம் தான்.
நீக்குஅதுதான் நல்லது!
நீக்குபத்திரிகைகளில் தங்களைப்பற்றி வரும் விமர்சனங்களை பார்த்து அரசியல்வாதிகள் யாரேனும் திருந்தியிருப்பார்களா? //
பதிலளிநீக்குஎ
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎனக்குத் தெரிந்து நோ சான்ஸ். கண்டிப்பா கௌ அண்ணா சொல்லிருப்பதுதான்
நீக்குகீதா
நன்றி! :)))
நீக்குகோயில்களில் ஒரு சில படிகள் தான் மிதிக்காமல் போக வேண்டுமாக இருக்கும். அதுவும் அகலமா இருட்ந்தா ரொம்பக் கஷ்டம்.... வயசானவங்க , சின்னவங்களிலேயே கால் வலி முட்டி வலி உள்ளவங்க எல்லாம் லாங்க் ஜம்ப் பண்ண முடியுமா!!!
பதிலளிநீக்குகீதா
அதானே! கடவுளுக்கு அல்லது விதிமுறை வகுத்தவர்களுக்கு அப்பீல் செய்யவேண்டும்!
நீக்குநெல்லை அது வாழை இலை போட்டுச் சாப்பிட்டா.....
பதிலளிநீக்குஎங்க அப்படி வாழை இலை? நகரங்களில்? ஒரு வேளை சின்ன ஊர்களுக்குப் போனா அப்படி இருக்கும் ஆனா அங்கு அப்படிச் சாப்பிடும் போது தோசையோ இட்லியோ அதுக்கு மட்டும்தானே வாங்குவதுண்டு . இது நான் சொல்வது மெஸ்.
ஆனா பொதுவா ஹோட்டல்ல...ஒரு ஐட்டம் சாப்பிட்டு இன்னொரு ஐட்டம் சாப்பிட ஆர்டர் பண்ணினா வேறு ப்ளே அதுல ஒரு சின்ன கட் வாழை இலை போட்டுத்தானே வைக்கிறாங்க கூடவே தொட்டுக் கொள்ளும் பதார்த்தங்களையும்.... முதல் ப்ளேட்டை எடுத்துக் கொண்டும் போய்டறாங்களே... முதல்ல சாப்பிட்ட அதே ப்ளேட்ல வைக்கறதில்லையே...
அது நார்த் இண்டியன் வகை சாப்பிட்டா ஒரே ப்ளேட்ல ..அடுத்தடுத்து ஆர்டர் செய்வது கொண்டு வைப்பாங்க நாம அதே ப்ளேட்ல சாப்பிட்டு வருவது...
கீதா
புல்லாங்குழல், தேன்குழல் பதிலை இரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் எல்லாம் சூப்பர், கௌ அண்ணா அதுவும் அந்த காகம் ஷாட் செம!!
பதிலளிநீக்குதீவுகள்னு சொல்லிட்டு கீழ இடம் கொடுத்திருக்கலாமே.
எனக்குப் பாண்டிச்சேரி நினைவுகள் பல வந்து சென்றன. எனக்கு ரொம்பப் பிடித்த வருடங்கள். ஊரும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது நான் இருந்த இடமும்.
கீதா
கீதா
நினைவுகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.
நீக்குதோசை குறித்த கேள்விகள் அதற்கான பதில்கள் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதோசை வரலாறு அருமை.
பதிலளிநீக்குபாண்டிச்சேரி பயணப்படங்கள் நன்றாக உள்ளன.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅனுதினமும் அவனருள் வேண்டுவோம்.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு..
பதிலளிநீக்குசிறப்பு.. வாழ்க நலம்..
நன்றி.
நீக்குநெல்லை சார் நீங்கள் அழகர் கோயில் தோசை பிரசாதம் சாப்பிட்டதுண்டா? தோசை என்று சொல்ல முடியாதபடி வித்தியாசமாக இருக்கும்.
பதிலளிநீக்குJayakumar
சாப்பிடாமல் இருந்திருப்பேனா ஜெயகுமார் சார்? ஆசையில் மதுரை கூடலழகர் கோயில் மற்றும் திருமாலிருஞ்சோலை கோவிலிலும் வாங்கியிருக்கேன். கொஞ்சம் சாப்பிடுவேன். மிகுதி வேஸ்ட் ஆயிடும். எண்ணெயில் பொரித்ததை உண்ண டயட் அனுமதிக்காது
நீக்குஅழகர் கோயிலில் சிறிய லட்டு சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது. பத்து வாங்கினேன். மறந்து போவதால் மனைவி கண்ணுல காட்டமாட்டாள். வேஸ்டாயிடும்
நீக்குஅழகர் கோயில் தோசை சாப்பிட்டிருக்கிறேன் நானும். எண்ணையும் நெய்யும் கலந்து பொரித்து ....ஸோ நாங்க நிறையப்பேர் இருந்ததால வாங்கியது முன்ன. ரெண்டு துண்டு சாப்பிட்டதுமே எண்ணை என்னவோ செய்யும்.
நீக்குகீதா
சுவையான கருத்துகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்களில் தோசை புராணம் அருமை. தோசையை திருப்பி போடுவது போல், அந்த பெயரை திருப்பிய வரலாற்றை படித்துள்ளேன்.
இங்கு 100 வகையான தோசைகள் என்ற பிளாட்பார தள்ளு வண்டி கடையில், ஒருநாள் கூட்டத்தோடு கூட்டமாக எங்கள் குழந்தைகள் சாப்பிட்டு விட்டு நன்றாக உள்ளதென கூறினார்கள். எனக்குத்தான் பிடிக்கவில்லை.
பொத்வாக எந்த ஹோட்டலுக்கு சென்றாலும், நான் பெரும்பாலும், இட்லிதான் கேட்பேன். அதுவும், இங்கு வந்த பிறகு தான் ஹோட்டல் பயன்பாடு அதிகமாகி விட்டது. சென்னை, மதுரையில் இருந்த வரை நாங்கள் ஹோட்டல்களுக்கு சென்று உணவருந்தியதை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால், எங்களை எங்கள் உறவுகளே ஆச்சரியமாக பார்ப்பார்கள். இதில் வெஜ் எறாவைப் பற்றி நான் இப்போதுதான் கேள்வியேபடுகிறேன்.
தங்களின் பாண்டிச்சேரி பயணப் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. அதிலும் அந்த ஒற்றை காக்காவின் தீவிர யோசனையை நீங்கள் புரிந்து கொண்டு படமெடுத்தது அற்புதமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுக்கு நன்றி!
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு//புல்லாங்குழலில் காற்று நுழைந்தால் புதுப்புது இசையாகும்
தேன்குழல் வாயில் நுழைந்தால் புதுப்புது சுவையாகும்! //
இந்த பதைலை ரசித்தேன்.
நன்றி.
நீக்குஇங்கு மதுரையில் 100 வகை தோசை ஓட்டல் இருக்கிறது. தம்பி ஒரு தடவை கூட்டிப்போனான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை தோசை
பதிலளிநீக்குஆர்டர் செய்தார்கள், நான் நெய் ரோஸ்ட் போதும் என்றேன். சீஸ் தோசை , பனீர் பட்டாணி போட்டு தோசை அவர்கள் ஆர்டர் செய்ததிலிருந்து கொஞ்சம் கொடுத்தார்கள் நன்றாக இருந்தது.
தோசை அம்மா தோசை என்ற தலைப்பை படித்தவுடன் கெள்தமன் சார் வித விதமாக தோசை டிசைன் செய்த பதிவு போல என்று நினைத்தேன்.(முன்பு போட்டாற்)
பாண்டிச்சேரி படங்கள் நன்றாக இருக்கிறது.
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது .. என்ற படத்தையும் வார்த்தைகளையும் ரசித்தேன்.
கம்ஃபர்டபுளாக கம்பு நுனியில் அமர்ந்து என்ன யோசனையோ! //
ஏகந்தமாய் இருக்கிறேன், யோசனை ஒன்றும் இல்லை என்று சொல்கிறதோ!
பாராட்டுக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குஸ்ரீராம் கூட தோசை பற்றி ஒரு புராணம் எழுதியிருந்தாரே. நான் இணையத்திற்கு வந்த புதிதில் வாசித்த நினைவு.
பதிலளிநீக்குகாலைல டக்குனு நினைவுக்கு வரலை அப்புறம் வந்தது. எழுதி வைச்சேன். கரன்ட் போச்சு நெட் போச்சு. அப்புறம் இன்று பல வேலைகள்..மனம் ஒரு நிலையில் இல்லையா....கொடுக்க விட்டுப் போச்சு.
கீதா
கருத்துரைக்கு நன்றி
நீக்கு/நெல்லை :
பதிலளிநீக்குவாசகர்களுக்கான கேள்வி:
ஹோட்டல்ல ஒரு பொருளுக்கு விலை, பல செலவுகளை உள்ளடக்கியது என்று நான் நம்பறேன். ஒருவன் சாப்பிட உட்கார்ந்தால், வாழை இலை உள்ள தட்டு, டம்ளர் எல்லாம் வைக்கறாங்க, இவன் வடை மாத்திரம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிடலாம். ஒரு வேளை அடுத்த து அவன் ரவா தோசை சாப்பிட்டால் அதுக்குன்னு புதுசா வாழை இலை, தட்டு தருவதில்லை. நியாயமா பார்த்தால் இருக்கும் வாழை இலையிலேயே அடுத்தடுத்த ஐட்டம் சாப்பிடும்போது அவற்றின் விலை குறையவேண்டாமா?/
நீங்கள் பதார்த்தங்களின் விலைகளையெல்லாம் marginal cost அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் போலும். யதார்த்தமாகப் பார்த்தால், பிஸினஸ் நடத்தும் முதலாளிகள் average cost அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வதுதான் ப்ராக்டிகலாக இருக்கும் என்று தோன்றுகிறது. உங்கள் உதாரணப்படியே, குப்பன் இட்லி மட்டும் சாப்பிட்டு விட்டுப் போகலம்...சுப்பன் இட்லி, வடை இரண்டும் சாப்பிடலாம். இலை விலை 5 ரூ என்றால், ஒரு ஆவரேஜ் கஸ்டமர் எவ்வளவு டிஷ் ஆர்டர் செய்கிறாரோ என்று பார்த்து, அதற்கேற்றார்ப்போல் அந்த 5ரூபாயை பதார்த்தங்களின் விலையில் அட்ஜஸ்ட் செய்வதுதான் நியாயம்.
பி.கு: பாண்டி பஜார் ரத்னா ஸ்டோரில் ஒரு டபரா 200 ரூ என்றால், அடுத்த டபராவுக்கு 190ரூ விலைதானே என்று வாதாடலாம்! நெல்லையிலிருந்து சென்னைக்கு பஸ் டிக்கெட் 500 ரூ என்றால், ரெண்டு பேராய் பயணிக்கும்போது, அடுத்த டிக்கெட் 480ரூ என்று எதிர்பார்க்கலாம்தானே?
நல்ல கருத்து நன்று. நெல்லை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நீக்குகருவறைக்கு முன் மண்டபத்தின் படிக்கட்டு சற்று அகலமாகத்தான் இருக்கும்.. மிதிக்கக் கூடாது என்பார்கள்..
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் தாண்ட முடிவதில்லை...
எல்லாம் அம்மையப்பன் அறிவான்.
கருத்துரைக்கு நன்றி
நீக்கு@ சூர்யா..
பதிலளிநீக்குசீனி விலையைக் காரணம் காட்டி டீ விலையை ஏற்றுகின்றான்.
(நீரிழிவினால் ) சீனி வேண்டாம் என்றால் டீயின் விலையைக் குறைப்பதில்லை..
வேறு பல காரணங்களால்
சில கடைகளுக்குள் நான் நுழைவதேயில்லை...
கருத்துரைக்கு நன்றி
நீக்குநியாயமான கேள்வி துரைஜீ
நீக்குகை தேர்ந்த நிபுணரால் எடுக்கப்பட்டப் பாண்டிச்சேரி படங்கள் அருமை. காக்கை இப்போத் தான் இங்கே எங்க வீட்டுப்பக்கமெல்லாம் வர ஆரம்பிச்சிருக்கு. அதிகம் புறாக்கள். கிளிகள், மைனாக்கள் (பயங்கரமாய்ச் சண்டை போட்டுக்கும்), விசிலடிச்சான் குருவி, தவிட்டுக்குருவி போன்றவை. சில சமயங்கள் மயில்கள் மொட்டை மாடிக்கு வரும். ஆனால் என்னால் மாடி எல்லாம் ஏற முடியாததால் அகவும் குரல்களைக் கேட்பதோடு சரி.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி. கை தேர்ந்த நிபுணர்! (இந்தக் கிண்டல்கள்தானே வேண்டாம் என்பது! )
நீக்கு