நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
முதல் சரணம் முடியும்போது கே ஆர் விஜயா தன் இடது கையை ஏன் அப்படி வைத்துக் கொள்கிறார்?
இரண்டாவது சரணம் தொடங்கும்போது ஜெயலலிதா ஏன் அபப்டி நடக்கிறார்? முழங்கால் வலியோ?
கடைசியில் சிவகுமார் ஏன் அப்படி அசட்டுத்தனமாக சிரிக்கிறார்?
இதைக்கேயல்லாம் மீறி நல்ல, இனிமையையான பாடல். சுத்ததன்யாசி ராகத்தில் அமைந்திருக்கும் இனிய இந்தப் பாடலும், குந்தல்வராளி ராகத்தில் அமைந்திருக்கும் அடுத்த பாடலும் கந்தன் கருணை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள். இன்றைக்கு 58 வருடங்கள் முன் வெளியானது. சிறிய வேடத்தில் சிவாஜி கணேசனும் நடித்திருப்பார். பூவை செங்குட்டுவன் எழுதிய இந்தப் பாடலுக்கு மட்டும் குன்னக்குடி வைத்தியநாதன் இசை. மற்ற பாடல்களுக்கு கே வி மகாதேவன். அடுத்த பாடலை எழுதி இருப்பவர் கண்ணதாசன்.
ஒரு ராகத்தில் சில பாடல்கள் அமையும்போது அதில் ஒன்று இப்படி இனிமையாக முதலிடத்தைப் பெற்றுய் விடும். எத்தனையோ ஆரபி ராக சினிமாப பாடல்கள் இருந்தாலும் 'இன்று நமதுள்ளமே' பாடலின் இனிமை மற்ற ஆரபிகளில் இலையே, ஏன்? அது போலதான் இந்தப் பாடல்.
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர் பெற்றவனே
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது
பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது
முருகா அமைதி கொண்டது - அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது அறிவில்
சிறந்த உன்னைக் காணும் போது பெருமை கொண்டது
கந்தா பெருமை கொண்டது - முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
உலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
யுகங்கள் எல்லாம் மாறி மாறிச் சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது
கந்தா முதுமை வராது - குமரா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருள் அன்றோ
கந்தா உன் அருளன்றோ - முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
ஏனோ எனக்கு விஜயகுமாரியை பிடிக்காது. அவருடைய நடிப்பு ரொம்ப செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால் எல்லோரும் அவர் நடிப்பைப் பாராட்டுவார்கள்.
சாந்தி திரைப்படம் 59 வருடங்கள் பத்து மாதங்கள் முன் வெளியானது. சிவாஜி, எஸ் எஸ் ஆர் தேவிகா, விஜயகுமாரி நடித்த திரைபபடம். ஏனோ இந்தத் திரைப்படம்தான் சிவாஜியும் எம் ஆர் ராதாவும் இனைந்து நடித்த கடைசித் திரைப்படம். ஏனோ இந்தஹத் திரைப்படத்துக்கு A சான்றிதழ் தந்தார்களாம். அப்புறம் அதை மாற்றி U சான்றிதழ் பெற்றார்களாம்.
இந்தப் பாடல் காமவர்த்தினி ராகத்தில் அமைந்த பாடலாமாமே...
பி சுசீலா : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பி சுசீலா : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பி சுசீலா : கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கண்கள் இரண்டை வேலென எடுத்து
கையோடு கொண்டானடி
கன்னியென் மனதில் காதல் கவிதை
சொல்லாமல் சொன்னானடி
பி சுசீலா : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
பி சுசீலா : ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம்
வாராமல் நின்றானடி
வாராமல் வந்தவன் பாவை உடலை
சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி
பி சுசீலா : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
P B ஸ்ரீனிவாஸ் : நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கெனச் சொன்னானடி
வாழ்கெனச் சொன்னானடி
P B ஸ்ரீனிவாஸ் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
JKC Sir கண்கள் என்று கேட்டிருப்பதால் விடையை இங்கு பகிர்கிறேன். உண்மையில் இன்று இங்கு படம் போட்டு விளக்கத்தேவை இல்லாமல் நேற்றே கோமதி அக்கா விடையைச் சொல்லி விட்டார்கள். விடை ஆஷா பரேக். ஹிந்தி நடிகை. அமிதாப் இருப்பதால் ஹிந்தி நடிகையையும் யோசிக்க வாய்ப்பு இருக்கலாம் என்பது ஒரு க்ளூ. அடுத்து கமலா அக்காவுக்கு பதில் சொல்லும்போது ஹிந்தியிலேயே பதில் சொன்னதும் ஒரு க்ளூ!
இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் மூன்று பாடல்களுமே இனிமை. முதல் இரண்டு பாடல்கள் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். மூன்றாவது பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். ஆனால், அந்தப் பாடலில் தெய்வத்தை போற்றும் வரிகள் இல்லாமல், மனிதரை சார்ந்தே இருக்கும்.
நானும் உங்களைப் போல, அப்போதெல்லாம் (சிறுவயதில்) தெய்வீக படங்கள் பார்க்கும் போது, தேவலோக பெண்கள் "ஏன் இப்படி ஒடிந்து விடுவது போல் நடக்கிறார்கள்..! கைகளை இப்படி பக்கவாட்டில் வளைத்து கைகளுக்கும் உடம்பிற்கும் சம்பந்தம் இல்லாதது போல வைத்துக் கொண்டு, இருக்கிறார்கள்.." என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பிறகுதான் அது "நளினம்" எனப்புரிந்தது. :)) இன்று உங்கள் கேள்விகளைப் படித்ததும் எனக்கும் நான் நினைத்தது நினைவுக்கு வந்தது.
இன்றைக்கு தேர்ந்தெடுத்த மூன்று பாடல்களின் ராகங்களை பற்றி தெரிந்து கொண்டேன். இனிமையான பாடல்கள். பிறகு பாடல்களை மற்றொரு முறை கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
கண்கள் இரண்டும் நேற்றே தி(தெரி)றந்து விட்டதே....! நேற்றைய பதிவின் இறுதி கருத்துரையை நீங்கள் பார்க்கவில்லையா? சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு அன்பான பாராட்டுகள். நன்றி சகோதரரே.
கமலா உங்கள் பாராட்டுக்கு நன்றி. முன்பு இந்தி படங்கள், பாடல்கள் கேட்பது அதிகம். (70 , 71,ல் அண்ணன் கூட சேர்ந்து விவித்பாரதி கேட்பேன். 73 ல் கணவருடன் பாடல்கள் கேட்பேன்) என் கணவர் முதன் முதலில் அழைத்து சென்ற படமும் (பாபி) இந்தி படம் தான்.
"இன்று நமதுள்ளமே" பாடலும் மிக அருமையாக இருக்கும். அதை முன்பே பகிர்ந்து விட்டீர்களா?
"கண்கள்" பகுதிக்கு தாங்கள் க்ளு தந்ததை நான் புரிந்து கொள்ளவில்லை. மன்.... வும். ஆனால், பதிவு முழுக்க அமிதாப் வரும் போது, அங்கு ஒரு ஹிந்தி நடிகையை ஊகித்தேன். நான் அவ்வளவாக படங்கள், அதிலும் ஹிந்தி படங்களை தற்சமயம் பார்க்கவில்லையாததால், அவர்களின் பெயர்கள் தெரிந்திருக்கவில்லை.. இப்போது அதன் விடையை மறுபடி இணைத்தமைக்கு நன்றி சகோதரரே.
'இன்று நமதுள்ளமே' சமீபத்தில்தான் பகிர்ந்தேன் கமலா அக்கா. உங்கள் கதை இப்போதுதான் உங்கள் தளத்தில் வெளியாகி இருக்கிறது. எனவே இங்கு இப்போது வேண்டாம் கமலா அக்கா. நீங்கள் நேரடியாக ஒன்று எழுதி அனுப்புங்களேன்.. வேறு ஒரு மகாபாரத அல்லது இராமாயண (ஊர்மிளை?)பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் மனப்போராட்டத்தை எழுதுங்களேன்... எங்கள் செவ்வாய் ஆவலுடன் காத்திருக்கிறது.
ஸ்ரீராம், எனக்கு சில நினைவுகளை ஏற்படுத்தி விட்டது உங்கள் முதல் பாடல். என் கணவர் அவர்கள் பிடித்த பாடல்களை எழுதி வைத்து இருந்த நோட்டில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். எங்களுக்கு திருப்பரங்க்குன்றத்தில் உள்ள "குமரகம்" கல்யாணமண்டபத்தில் தான் திருமணம். அதுவும் குறிப்பாக இந்த திருமணநாளில் இந்த பாடலை கேட்டது மகிழ்ச்சி, நன்றி.
மற்ற இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்தான் எங்கள் இருவருக்கும். காலையில் கேட்டு மகிழ்ந்தேன். ஜெயலலிதா எல்லா படத்திலும் அப்படித்தான் நடப்பார். இதில் ஆடை தெளிவாக காட்டி கொடுக்கிறது. சினிமாவுக்கு என்று இல்லை அவர் நடையே அப்படித்தான். கடைசியில் நீங்கள் சொன்னது போல முழங்கால்வலி வேறு வந்து விட்டது அவருக்கு.
ஏ.பி நாகராஜன் அவர்கள் சிவக்குமார் சிரிக்கும் பொது ஒரு பல் (சிங்க பல்லா, தெற்றுப்பல்லா நினவு இல்லை) நன்றாக இல்லை என்று எடுக்க சொன்னாராம். முருகனின் தெய்வீக சிரிப்பை இப்படி அசட்டு சிரிப்பாக சொல்லி விட்டீர்களே! இரண்டு பெண்கள் அருகில் இருந்தால் இப்படித்தான் அசட்டு சிரிப்பு வரும் போலும்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கமும், நன்றியும்.
நீக்கு
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் மூன்று பாடல்களுமே இனிமை. முதல் இரண்டு பாடல்கள் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். மூன்றாவது பாடலும் அடிக்கடி கேட்டுள்ளேன். ஆனால், அந்தப் பாடலில் தெய்வத்தை போற்றும் வரிகள் இல்லாமல், மனிதரை சார்ந்தே இருக்கும்.
நானும் உங்களைப் போல, அப்போதெல்லாம் (சிறுவயதில்) தெய்வீக படங்கள் பார்க்கும் போது, தேவலோக பெண்கள் "ஏன் இப்படி ஒடிந்து விடுவது போல் நடக்கிறார்கள்..! கைகளை இப்படி பக்கவாட்டில் வளைத்து கைகளுக்கும் உடம்பிற்கும் சம்பந்தம் இல்லாதது போல வைத்துக் கொண்டு, இருக்கிறார்கள்.." என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். பிறகுதான் அது "நளினம்" எனப்புரிந்தது. :))
இன்று உங்கள் கேள்விகளைப் படித்ததும் எனக்கும் நான் நினைத்தது நினைவுக்கு வந்தது.
இன்றைக்கு தேர்ந்தெடுத்த மூன்று பாடல்களின் ராகங்களை பற்றி தெரிந்து கொண்டேன். இனிமையான பாடல்கள். பிறகு பாடல்களை மற்றொரு முறை கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமுத்துக்கள் மூன்று..
பதிலளிநீக்குதொகுப்பு அருமை.. மகிழ்ச்சி ஸ்ரீராம்..
நன்றி.
நீக்குஉலகில் ஆடும் தொட்டிலெல்லாம் உன் பெயர் பாடும்
பதிலளிநீக்குஉண்மை பேசும் மொழிகளெல்லாம் உன் புகழ் பேசும்
- கவியரசர்..
முருகா...
நீக்குசொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா..
பதிலளிநீக்குதமிழ்..
தெய்வத் தமிழ்!..
முருகா... முருகா...
நீக்குகண்கள் இரண்டும்????
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
நீக்குகண்கள் இரண்டும் நேற்றே தி(தெரி)றந்து விட்டதே....! நேற்றைய பதிவின் இறுதி கருத்துரையை நீங்கள் பார்க்கவில்லையா? சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு அன்பான பாராட்டுகள். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திற(தெரி)ந்து என திருத்தி படிக்கவும். அதற்குள் அதற்கும் அவசரத்தில் வார்த்தை மாறி விழுந்து விட்டது. நன்றி.
நீக்குஆமாம் JKC ஸார்.. அதனால்தான் முதலில் இணைக்கவில்லை. இப்போது உங்கள் கேள்வி கண்டதும் இணைத்து விட்டேன்.
நீக்குகமலா உங்கள் பாராட்டுக்கு நன்றி. முன்பு இந்தி படங்கள், பாடல்கள் கேட்பது அதிகம். (70 , 71,ல் அண்ணன் கூட சேர்ந்து விவித்பாரதி கேட்பேன். 73 ல் கணவருடன் பாடல்கள் கேட்பேன்)
நீக்குஎன் கணவர் முதன் முதலில் அழைத்து சென்ற படமும் (பாபி) இந்தி படம் தான்.
நீங்கள் ஆஷா பரேக் என்று சரியான விடை சொல்லி என்னையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினீர்கள் கோமதி அக்கா.
நீக்குநன்றி ஸ்ரீராம். அந்தக்கால இந்தி நடிகைகளை தெரியும், இப்போது உள்ள புதுமுகங்கள் கண்கள் போட்டு இருந்தால் தெரியாது ஸ்ரீராம்.
நீக்குமுதல் பாடல் எத்தனை முறை கேட்டிருப்பேன்! அருமையான பாடல். இதுதான் நான் முருகன் பாடலாக முதலில் கற்றது.
பதிலளிநீக்குஇப்பவும் கேட்டாச்சு! ரசித்தாயிற்று
கீதா
ஆஹா.. முருகா...
நீக்குசொல்ல சொல்ல பாடலும் செம பாட்டு. அருமையான குந்தலவராளி!
பதிலளிநீக்குஇந்தப் பாட்டைக் கேட்டால் உடனே எனக்கு இரு பாடல்கள் நினைவுக்கு வந்துவிடும். மாலே மணிவண்ணா, ஒரு முறை வந்து பார்த்தாயா ....பாடல்கள்
கீதா
சின்ன வயதில் இந்தப் பாடலை நான் ரொம்ப ரசித்து 'சொஜ்ஜ சொஜ்ஜ' என்று பாடுவேனாம். என் அக்கா, அம்மா சொல்லி இருக்கிறார்கள்.
நீக்குசெந்தூர் முருகனின் - வரிகளைப் பார்த்ததும் டக்கென்று ட்யூன் நினைவுக்கு வரவில்லை... கேட்டதும் ஓ இந்தப்பாடலா நிறைய கேட்டிருக்கிறேனே..
பதிலளிநீக்குகீதா
செம பாட்டு கீதா...
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு"இன்று நமதுள்ளமே" பாடலும் மிக அருமையாக இருக்கும். அதை முன்பே பகிர்ந்து விட்டீர்களா?
"கண்கள்" பகுதிக்கு தாங்கள் க்ளு தந்ததை நான் புரிந்து கொள்ளவில்லை. மன்.... வும். ஆனால், பதிவு முழுக்க அமிதாப் வரும் போது, அங்கு ஒரு ஹிந்தி நடிகையை ஊகித்தேன். நான் அவ்வளவாக படங்கள், அதிலும் ஹிந்தி படங்களை தற்சமயம் பார்க்கவில்லையாததால், அவர்களின் பெயர்கள் தெரிந்திருக்கவில்லை.. இப்போது அதன் விடையை மறுபடி இணைத்தமைக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்று என் பதிவைப் பற்றியும் கருத்தில் நான் சொன்னதை யோசித்தீர்களா? முடிந்தால் பகிர்வும். பகிர்ந்தால் நான் பாக்கியசாலி. நன்றி சகோதரரே.
நீக்கு'இன்று நமதுள்ளமே' சமீபத்தில்தான் பகிர்ந்தேன் கமலா அக்கா. உங்கள் கதை இப்போதுதான் உங்கள் தளத்தில் வெளியாகி இருக்கிறது. எனவே இங்கு இப்போது வேண்டாம் கமலா அக்கா. நீங்கள் நேரடியாக ஒன்று எழுதி அனுப்புங்களேன்.. வேறு ஒரு மகாபாரத அல்லது இராமாயண (ஊர்மிளை?)பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதன் மனப்போராட்டத்தை எழுதுங்களேன்... எங்கள் செவ்வாய் ஆவலுடன் காத்திருக்கிறது.
நீக்குஒன்று சொல்லவேண்டும் கமலா அக்கா... இன்றைய உங்கள் பதிவு மிகவும் தரமான பதிவு. நின்று ரசித்து நிதானமாக படித்து ரசிக்க வேண்டிய பதிவு.
நீக்குஸ்ரீராம், எனக்கு சில நினைவுகளை ஏற்படுத்தி விட்டது உங்கள் முதல் பாடல்.
பதிலளிநீக்குஎன் கணவர் அவர்கள் பிடித்த பாடல்களை எழுதி வைத்து இருந்த நோட்டில் இந்த பாடல் இடம்பெற்று இருக்கும். எங்களுக்கு திருப்பரங்க்குன்றத்தில் உள்ள "குமரகம்" கல்யாணமண்டபத்தில் தான் திருமணம். அதுவும் குறிப்பாக இந்த திருமணநாளில் இந்த பாடலை கேட்டது மகிழ்ச்சி, நன்றி.
அடடே... உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது.
நீக்குமுருகனின் இன்னொரு அறுபடை வீட்டில் அதே வருடம் என் அக்காவின் திருமணம் நடந்தது! சுவாமிமலை.
மற்ற இரண்டு பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்தான் எங்கள் இருவருக்கும். காலையில் கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குஜெயலலிதா எல்லா படத்திலும் அப்படித்தான் நடப்பார். இதில் ஆடை தெளிவாக காட்டி கொடுக்கிறது. சினிமாவுக்கு என்று இல்லை அவர் நடையே அப்படித்தான். கடைசியில் நீங்கள் சொன்னது போல முழங்கால்வலி வேறு வந்து விட்டது அவருக்கு.
இன்றைய பாடல்கள் எல்லோருக்குமே பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
நீக்குஏ.பி நாகராஜன் அவர்கள் சிவக்குமார் சிரிக்கும் பொது ஒரு பல் (சிங்க பல்லா, தெற்றுப்பல்லா நினவு இல்லை) நன்றாக இல்லை என்று எடுக்க சொன்னாராம். முருகனின் தெய்வீக சிரிப்பை இப்படி அசட்டு சிரிப்பாக சொல்லி விட்டீர்களே! இரண்டு பெண்கள் அருகில் இருந்தால் இப்படித்தான் அசட்டு சிரிப்பு வரும் போலும்.
பதிலளிநீக்குதெய்வீகச் சிரிப்பா அது! ஹா.. ஹா.. ஹா..
நீக்குபந்துவராளிதானே காமவர்த்தினி ராகம்னு சொல்லப்படும்? அப்படிப் பார்க்கறப்ப இந்தப் பாட்டு அந்த ராகமா? யோசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குஎன் மாமியிடமும், தங்கையிடமும் கேட்க வேண்டும், காமவர்த்தினின்னு தனினா பாடி அனுப்பச் சொல்ல வேண்டும்.
கீதா
ஆமாம், இரண்டும் ஒரே ராகம் தானே? பதில் வந்ததும் எனக்கும் சொல்லுங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்கிறேன்!
நீக்குஎல்லாமே சிறப்பான பாடல்களே ஜி
பதிலளிநீக்குஅப்படியா? நன்றி ஜி.
நீக்குவெள்ளி பாடல்கள் பகிர்வு அருமையான பாடல்கள்.
பதிலளிநீக்குமூன்று பாடல்களும் கேட்ட பாடல்கள் பிடித்தமான பாடல்களும் கூட.
படத்துக்கான விடையை சரியாகக் கூறிய திருமதி கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்துகள்.
நன்றி மாதேவி.
நீக்குஎனக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி மாதேவி
நீக்குமுருகா சரணம்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குபாடல்களைக் கேட்கப் பிடிக்கும் . ஆராயப் பிடிக்காது.
பதிலளிநீக்குமிக நல்ல பாடல்கள் ஸ்ரீராம்.முருகன் என்றும் காப்பான்.
வாங்க வல்லிம்மா... நன்றி.
நீக்கு